புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

17 February 2020

மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் பெப்ரவரி 17

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 17)

✠ மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் ✠
(Seven Founders of the Servite Order)

வகை:
அர்ப்பண வாழ்க்கை நிறுவனம் (Mendicant Order (Institute of Consecrated Life)
மரியான் பக்தி சமுதாயம் (Marian Devotional Society)

உருவாக்கம்: ஆகஸ்ட் 15, 1233

உலகின் வசதி வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு நகரிலுள்ள ஏழு முக்கிய பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் வீடுகளையும், உத்தியோகங்களையும் விட்டுவிட்டு, நேரடியாக கடவுளுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக தனிமையில் வாழப் போகிறார்கள் என்று நினைக்க இயலுகிறதா? ஆனால், கி.பி. 13ம் நூற்றாண்டின் மத்தியில், இத்தாலி நாட்டின் மேற்கு-மத்திய பிராந்தியமான “டுஸ்கனியின்” (Tuscany) வளர்ந்த, வளமான, பணக்கார தலைநகரான “ஃபுளோரன்ஸ்” (Florence) நகரில் இதுதான் நடந்தது. அரசியல் சச்சரவுகளாலும், "கத்தாரியின்" (Catharism) மதங்களுக்கு எதிரான கொள்கைகளாலும் சின்னாபின்னமாகியிருந்த அக்காலத்தில் அறநெறிகள் குறைவாகவும், சமயங்களும் ஆன்மீக உணர்வுகளும் அர்த்தமற்றதாகவும் தோன்றியது.

கி.பி. 1240ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த எழுவர், பிரார்த்தனைகள் மூலம் கடவுளுக்கு நேரடி சேவை செய்யும் நோக்கில், நகரையும் தமது குடும்பங்களையும் விட்டு விலகி, தனிமை வாழ்வு வாழ பரஸ்பரம் முடிவு செய்தனர். அவர்களது ஆரம்ப பிரச்சினையே, தம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளே. காரணம், அவர்களில் இருவர் ஏற்கனவே திருமணமானவர்கள். இருவர் திருமணமாகி, மனைவியை இழந்தவர்கள். அவர்களின் நோக்கமே, தவம் மற்றும் பிரார்த்தனைகளுடனான ஒரு வாழ்க்கை வாழ்வதேயாம். ஆனால், விரைவிலேயே அவர்கள் ஃபுளோரன்ஸ் நகரிலிருந்து தம்மை அடிக்கடி காண வந்த பார்வையாளர்களால் தொந்தரவை உணர்ந்தனர். பின்னர் அவர்கள், “வக்லியா” (Vaglia) எனுமிடத்திலுள்ள “மான்டே செனரியோ” (Monte Senario) துறவு மடத்தின் வனாந்தரமான சரிவுகளுக்கு திரும்பினர்.

கி.பி. 1244ம் ஆண்டு, தூய பீட்டரின் (Saint Peter of Verona) வழிகாட்டுதலின்படி, இச்சிறிய குழு, டொமினிக்கன் சபையினரின் துறவற சீருடையைப் போன்ற சீருடையை ஏற்றுக்கொண்டனர். தூய அகுஸ்தினாரின் (St. Augustine) சட்ட விதிகளின்படி வாழ முடிவு செய்தனர். “மரியாளின் ஊழியர்கள்” (Servants of Mary) எனும் பெயரை ஏற்றுக்கொண்டார். அதன் குறிக்கோள்கள், அதன் உறுப்பினர்களின் புனிதத்துவமும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதும், கடவுளின் அதிதூய தாயாரான கன்னி மரியாளின் வியாகுலங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவரது பக்தியை பரப்புவதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே இச்சபையின் உறுப்பினர்கள், வியாகுல அன்னை மரியாளுக்கு தம்மை அர்ப்பணித்திருந்தனர். இயேசுவின் அன்னைக்கு தமது பக்தியை அர்ப்பணித்த இவர்கள், அன்னை மரியாளின் விருந்தோம்பல் மற்றும் இரக்கத்தினை தமது முத்திரையாக ஏற்றுக்கொண்டனர்.

“மரியாளின் ஊழியர்கள் சபையின்" (Servite Order) ஏழு நிறுவனர்கள் (Seven Holy Founders):
1. புனிதர் போன்ஃபிளியஸ் (St. Buonfiglio dei Monaldi (Bonfilius)
2. புனிதர் பொனஜுன்க்டா (St. Giovanni di Buonagiunta (Bonajuncta)
3. புனிதர் பார்டொலொமியஸ் (St. Amadeus of the Amidei (Bartolomeus)
4. புனிதர் ஹூக் (St. Ricovero dei Lippi-Ugguccioni (Hugh)
5. புனிதர் மனேட்டஸ் (Benedetto dell' Antella (Manettus)
6. புனிதர் சோஸ்டென் (Gherardino di Sostegno (Sostene)
7. புனிதர் அலெக்ஸியஸ் (St. Alessio de' Falconieri (Alexius)

கி.பி. 1888ம் ஆண்டு, ஜனவரி மாதம், பதினைந்தாம் நாளன்று, திருத்தந்தை “பதின்மூன்றாம் லியோ” (Pope Leo XIII), இவர்களனைவரையும் புனிதர்களாக அருட்பொழிவு செய்வித்தார்.இன்றைய புனிதர் : 
(17-02-2020) 

மரியின் ஊழியர் சபையை நிறுவிய எழுவர் (பிப்ரவரி 17)

இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். (மத் 9:9)

வாழ்க்கை வரலாறு

பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் உள்ள பிளாரென்ஸ் நகரில் மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில், உலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்ட எழுவர் இருந்தனர். அவர்கள் எழுவரும் மரியன்னையின் மீது மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். 1233 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், அதாவது மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா அன்று, மரியா இவர்களுக்குக் காட்சி கொடுத்து இறைப்பணி செய்ய அழைத்தார். இந்த ஏழுபேரும் இறைப்பணி செய்வதற்கு ஆர்வமாய் இருந்தார்கள். ஆனால், இவர்களில் நான்கு பேர் திருமணம் முடித்திருந்தார்கள். மற்ற மூன்று பேர் மணமுடிக்காமல் இருந்தார்கள். எனவே, இந்த நான்கு பேரும் குடும்பத்தை ஓரளவு கரையேற்றி வைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு இவர்கள் எழுவரும் பிளாரென்ஸ் நகருக்கு வெளியே இருந்த லா கார்மார்சியா என்னும் இடத்தில் வந்து தங்கி, அங்கே ஜெபத்திலும் தவத்திலும் நிலைத்திருந்தார்கள். இதற்கிடையில் இவர்கள் இருக்கின்ற இடத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் இவர்களை வந்து சந்திப்பதும் போவதுமாய் இருந்தார்கள். இது இவர்களுடைய ஜெப வாழ்விற்கு பெரிய இடையூறாக இருக்க, இவர்கள் மொந்தே செனாரியோ என்னும் பாலைவனப் பகுதிக்குச் சென்று, அங்கே ஓர் ஆலயம் எழுப்பி, அங்கே ஜெபித்து வந்தார்கள். ஆனால், செய்தி அறிந்து மக்கள் அங்கேயும் சென்று, அவர்களுக்கு இடையூறாக இருந்தார்கள். இதனால் அவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்கள். வந்தவர்களில் ஒருசிலர் தாங்களும் அவர்களோடு இணைந்து துறவு வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றோம் என்று சொன்னபோது, அவர்கள் அதுவெல்லாம் வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். இதற்கிடையில் ஆயர்களான அற்றிங்கோ, கஸ்டிக்லியோன் எழுவரையும் சந்தித்து ஊக்கப்படுத்தினார்கள்.

இது நடந்து ஒருசில நாட்கள் கழித்து, மரியன்னை மீண்டுமாக அவர்களுக்கு காட்சி தந்தார். அவருடைய கையில் கருப்பு நிற ஆடை இருந்தது. அவரோடு ஒரு வானதூதரும் காட்சி தந்தார். அவருடைய கையில் சுருளேடு ஒன்று இருந்தது அதில் ஏழு பேருடைய பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அப்போது மரியன்னை அவர்களிடம், “நான் உங்களை என்னுடைய ஊழியர்களாகத் தேர்ந்துகொண்டேன். இந்த கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய உடையாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தூய அகுஸ்தினாரின் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழுங்கள்” என்று சொல்லி மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர்கள் எழுவரும் மரியின் ஊழியர் என்றே அழைக்கப்பட்டனர்.

நாட்கள் செல்லச் செல்லச் அவர்கள் ஏழுபேரும் ஜெபத்திலும் தவத்திலும் மேலும் மேலும் உறுதியானார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய சபை மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது. அந்த ஏழுபேரும் ஒருவர் பின் ஒருவராக சபைத் தலைவராகிய, சபையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் சென்றார்கள். அந்த எழுவரின் பெயர்கள் முறையே, போன்பிலியுஸ், அலெக்சிஸ், அமதேயுஸ், ஹக், சொஸ்தேனஸ், மநேதுஸ் மற்றும் போனகுந்தா. இவ்வாறு சபை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்துவர, 1304 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த 11 ஆம் ஆசிர்வாதப்பர் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்தார்.

16 February 2020

புனித ஒனேசிம் பெப்ரவரி 16

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)

புனித ஒனேசிம்
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன் (பில1:6)

பிரிகியா பகுதியைச் சேர்ந்தவர் ஒனேசிம் .இவர் கொலோசை நகரில் இருந்த முக்கிய செல்வந்தரான பிலமோன் என்பவரிடம் அடிமைத் தொழில் செய்து வந்தார். பிலமோன் புனித பவுலினால் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவரானவர். ஒருநாள் ஒனேசிம் தமது தலைவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டார் .தப்பி ஓடும் அடிமை பிடிபட்டால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உரோமை  சட்டம் ஆகும்.

ஓடிய ஒனேசிம் நேரே தம் தலைவரின் நண்பரான புனித பவுலிடம் சென்றார். சில காலம் அவருடன் இருந்து மனமாறி கிறிஸ்துவராக , புதிய மனிதராக மீண்டும் தம் தலைவரிடமே செல்ல விரும்பினார் .ஆனால் பயம் அவரை ஆட்கொண்டது.

பயத்தை அறிந்த புனித பவுல் , பிலமோனுக்கு ஒரு கடிதம் எழுதினார் .அதில், ஒனேசிமுமை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறும், அடிமையாக இல்லாமல் ஒரு சகோதரராக, கிறிஸ்துவராகக் கருதுமாறும் கடிதத்தில் குறிப்பிட்டார் . பிலமோனும் அப்படியே செய்தார்.

சிறையில் இருந்து விடுதலையான புனித பவுலுக்கு சில காலம் ஒனேசிம் உதவி செய்தார். புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தை திக்கி மற்றும் நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரராகிய ஒனேசிம் இருவரும்தான் கொண்டு சென்றார்கள் (கொலோ 4:7-9)

திருத்தூதர்களுக்கும் உதவியாக இருந்த ஒனேசிம் புனித திமொத்தேயுவுக்குப் பிறகு எபேசு ஆயராக இருந்தார்.
ஒனேசிம் சிறந்த மறையுரையாளராக விளங்கியதாக புனித ஜெரோம் மற்றும் பலர்  குறிப்பிட்டுள்ளார்கள் . நற்செய்திக்காக, உரோமையில் 18 நாட்கள் ஒனேசிம் கொடூரமாக வதைக்கப்பட்டார். இவருடைய கால்களையும், தொடைகளையும் உடைத்தார்கள் .95 ஆம் ஆண்டு கற்களை எறிந்து கொலை செய்தார்கள்.

தங்களுக்காக மட்டுமல்லாது மற்றவர்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படு கிறவர்களே நல்ல நண்பர்கள்.

புனிதர் ஜூலியானா பெப்ரவரி 16

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)

✠ புனிதர் ஜூலியானா ✠
(St. Juliana of Nicomedia)

மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: கி.பி. 286
“கம்பேனியா”விலுள்ள “குமாயே”
(Cumae in Campania)

இறப்பு: கி.பி. 304
நிக்கொமீடியா அல்லது நேப்பிள்ஸ்
(Nicomedia or Naples)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

பாதுகாவல்: நோய்கள்

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 16

புனிதர் ஜூலியானா, ரோம பேரரசன் "டையோக்லெஷியன்" (Roman Emperor Diocletian) என்பவரது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். மத்திய காலங்களில் நெதர்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.

லத்தீன் மற்றும் கிரேக்க திருச்சபைகள் இவரது பெயரை தமது புனிதர்களின் பட்டியலில் தூய மறைசாட்சியாக வைத்துள்ளன.

ஜூலியானா, ஓர் மதிப்புமிக்க "பேகன்" (Pagan) குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை அரசு அதிகார சபை அங்கத்தினர் (Senator) ஆவார். அவரது பெயர், "அஃப்ரிகனஸ்" (Africanus) ஆகும். இவர் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளர் ஆவார்.

ஜூலியானா தமது பெற்றோருக்கு தெரியாமலேயே திருமுழுக்கு பெற்றார். ஜூலியானாவுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பேரரசனின் ஆலோசகர்களில் ஒருவரும் அதிகார சபை உறுப்பினருமான "எலாசியஸ்" (Eleusius) என்பவருடன் திருமண நிச்சயம் நடந்தது.

ஆனால், ஜூலியானாவோ, தமது கன்னித் தன்மையை இழக்க விரும்பவில்லை. இவர் இறைவனுக்காகவே வாழ விரும்பினார். தமது விருப்பத்தை தமது பெற்றோரிடமும் தெரிவித்தார்.

மிகவும் கீழ்படிதலுள்ள தம் பெண், இங்ஙனம் தம்மை மறுத்து பேசியது, அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை இருந்தது. அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜூலியானா கேட்கவில்லை. அவர்கள் ஜூலியானாவை எலாசியஸிடம் ஒப்படைத்தனர்.

உயர் பதவியில் இருப்பதால் அகங்காரம் கொண்டிருந்த எலாசியஸ் ஜூலியானாவை பலி வாங்கும் நாளுக்காக காத்திருந்தான். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜூலியானா கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதையும் விசாரித்து அறிந்து கொண்டான்.

ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் சொல்லாமலேயே தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார்.

காலப்போக்கில், பண பலம் கொண்ட எலாசியஸ், தமது பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன் படுத்தி, "பிதினியா" (Bithynia) நாட்டின் 'ரோம ஆளுனராக' பதவி பெற்றான்.

பெற்றோரின் வற்புறுத்தலுக்குப் பின்னரும், ஜூலியானா தமது முடிவில் ஸ்திரமாக இருந்தார். திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டார். இதன் காரணமாகவும் கோபமுற்ற 'ரோம ஆளுனர்' எலாசியஸ், ஜூலியானாவை கைது செய்ய உத்தரவிட்டான். கைது செய்யப்பட்ட ஜூலியானா, 'ரோம ஆளுனரின்' முன்பு நிறுத்தப்பட்டார். ஜூலியானாவின் கணவனாக நிச்சயம் செய்யப்பட்டவனே ஜூலியானாவை தீர்ப்பிடும் நீதிபதியாக இருந்தான்.

கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதனைப் பின்பற்றிய காரணத்துக்காக ஜூலியானா கொடூரமாக துன்புறுத்தப் பட்டார். இரக்கமேயில்லாமல் சாட்டையால் அடிக்கப்பட்டார். அவர், அவரது தலை முடியாலேயே கட்டித் தொங்க விடப்பட்டார். பின்னர், அவரது தலை முடி, அவரது தலையிலிருந்து பிடுங்கப்பட்டது.

சிறைச்சாலையில், ஒரு சம்மனசின் வேடமிட்டு அவரை அணுகிய பசாசு, சிலை வழிபாட்டுக்கு சம்மதித்து தியாகம் செய்யும்படி அவரை வற்புறுத்தியது. அதன் சூழ்ச்சியை அறிந்துகொண்ட ஜூலியானா, அதனை அடித்து, அதன் முகத்தில் காரி உமிழ்ந்து விரட்டினார். அதன் பிறகு, அவருக்கு தமது நிலைப்பாட்டில் உறுதியுடன் போராட புதிய சக்தி கிடைத்தது.

அவர், மீண்டும் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, விசாரிக்கப்பட்டார். அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டால், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக எலாசியஸ் அறிவித்தான். மற்றும், ஜூலியானா தமது விருப்பப்படி கிறிஸ்துவையே பூஜிக்கலாம் என்றும் சம்மதித்தான். ஆனால், ஜூலியானா யாதொரு சஞ்சலத்துக்கும் ஆளாகாதிருந்தார்.

இறுதியில், ஜூலியானா ஒரு உருக்கப்பட்ட செம்பு கொப்பரையின் முன்பு கொண்டு வரப்பட்டார். அவர் அந்த கொப்பரையைத் தொட, அது விழுந்து, அதன் உருக்கப்பட்ட செம்பு அவரை சுட்டு காயப் படுத்தியது. அங்கே, நூற்றுக்கணக்கான (ஆண்கள் 500 பேரும், பெண்கள் 130 பேரும்) பழமைவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக தயாராக காத்திருந்தனர். அவர்களனைவரும், ரோம ஆளுனர் எலாசியஸின் கட்டளைப்படி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

எலாசியஸ், அவரது முகத்தில் ஒரு பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போட்டான். பிறகு, "இப்போது போய் கண்ணாடியில் உன் அழகிய முகத்தைப் பார்த்து ரசி" என்றான். ஆனால், மென்மையாக புன்னகைத்த ஜூலியானாவோ, "இறுதித் தீர்ப்பின்போது, உயிர்த்தெழும் என் உடலிலுள்ள காயங்கள் யாவும் ஆறிவிடும்; என் ஆன்மாவை உன்னால் காயப்படுத்த முடியாது" என்றார்.

இறுதியில், ஜூலியானா தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவருடன் சேர்த்து, பார்பரா (Barbara) என்ற ஒரு புனிதரும் துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

15 February 2020

புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

✠ புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் ✠
(St. Claude de la Colombiere)

அருட்பணியாளர், குரு, ஒப்புரவாளர்:
(Religious, Priest and Confessor)

பிறப்பு: ஃபெப்ரவரி 2, 1641
புனித சிம்போரியன்-டி'ஓஸோன், டௌஃபின், ஃபிரான்ஸ் அரசு
(Saint-Symphorien-d'Ozon, Dauphiné, Kingdom of France)

இறப்பு: ஃபெப்ரவரி 15, 1682 (வயது 41)
பாரே-லி-மோனியல், பர்கண்டி, ஃபிரான்ஸ் அரசு
(Paray-le-Monial, Duchy of Burgundy, Kingdom of France)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை (இயேசு சபை)
(Catholic Church (Society of Jesus)

முக்திபேறு பட்டம்: ஜூன் 16, 1929
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: மே 31, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
இயேசுசபை தேவாலயம், பாரே-லெ-மோனியல், சவோனே-ஏட்-லோய்ர், ஃபிரான்ஸ்
(Jesuit Church, Paray-le-Monial, Saône-et-Loire, France)
பாதுகாவல்:
இயேசுவின் திருஇருதய பக்தி
(Devotion to the Sacred Heart of Jesus)

நினைவுத் திருநாள்: ஃபிப்ரவரி 15

இன்றைய புனிதராக நினைவுகூறப்படும் புனிதர் "கிளாடி டி லா கொலொம்பியெர்" இயேசு சபையைச் சார்ந்தவர் என்பதால், இயேசு சபையைச் சேர்ந்த துறவியர் மற்றும் குருக்களுக்கு இன்றைய தினம் ஒரு விஷேச தினமாகும். கிளாடி தமது சிநேகிதியும் ஆன்மீக துணையுமான "புனிதர் மார்கரெட் மேரி அலகோக்யூ'வுடன்" (Saint Margaret Mary Alacoque) இணைந்து இயேசுவின் திருஇருதய பக்தியை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆகவே, இயேசுவின் திருஇருதயத்தின்பால் தீவிர பக்தி கொண்டுள்ளோர்க்கும் இன்றைய தினம் ஒரு விஷேட தினமாகும்.

இவர் ஒரு இயேசு சபை குருவும், அருட்பணியாளரும், ஒப்புரவாளரும், துறவறம் சார்ந்த எழுத்தாளருமாவார்.

1641ம் ஆண்டு, ஃபிரான்ஸ் அரசின் (Kingdom of France) பண்டைய "டௌஃபின்" (Province of Dauphiné) பிராந்தியத்தில் பிறந்த கிளாடியின் தந்தை "பெர்ட்ரான்ட்" (Bertrand de la Colombière) ஒரு பத்திர சான்றளிக்கும் அலுவலர் ஆவார். தாயாரின் பெயர், "மார்கரெட்" (Margaret Coindat) ஆகும். இவர்களது குடும்பம் விரைவிலேயே அருகாமையிலுள்ள நகரான "வியன்னா"வுக்கு (Vienne) புலம்பெயர்ந்து சென்றது. அங்கே கிளாடி தமது ஆரம்ப கல்வியை தொடங்கினார்.

1658ம் ஆண்டு, தமது பதினேழாம் வயதில் கிளாடி "அவிக்னான்" (Avignon) என்ற இடத்திலுள்ள இயேசு சபையின் துறவறப் புகுநிலையில் (Novitiate) இணைந்தார். துறவறப் புகுநிலை கல்வியை இரண்டு வருடங்களில் முடித்த கிளாடி, உயர் கல்வியையும் அதே நகரிலேயே தொடங்கினார். அதன் பின்னர், தமது பிரதிநிதித்துவத்தை அதே கல்லூரியில் இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியனவற்றை கற்பிப்பதில் ஈடுபடுத்தினார்.

"கிளேர்மான்ட்" (College de Clermont) கல்லூரியில் இறையியல் கற்பதற்காக 1666ம் ஆண்டு, கிளாடி பாரிஸ் நகர் அனுப்பப்பட்டார். அங்கே இறையியல் படிப்பை பூர்த்தி செய்ததும் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் முதன்முதலாக "லியான்" (Lyon) நகரிலுள்ள இவரது முன்னாள் பள்ளியில் கற்பிக்க பணி நியமனம் பெற்றார். அதன்பின்னர், அவர் இயேசு சபையின் மறை பரப்பும் குழுவினருடன் இணைய அறிவுறுத்தப்பட்டார். அங்கேதான் அவரது பிரசங்கிக்கும் திறனும் வலிமையையும் வெளிப்பட்டது.

1676ம் ஆண்டு கிளாடி, அப்போதைய இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் அரசியான (Queen consort of England, Scotland and Ireland) “மேரி” (Mary of Modena) என்பவரின் போதகராக இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார். ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தது போலவே இங்கேயும் திறமையான மறை போதகராகவும், ஒப்புரவாளராகவும் செயல்பட்டார். பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், “மார்கரெட் மேரி அலாக்கோவை” (St. Margaret Mary Alacoque) கடிதங்கள் மூலம் வழிகாட்டினார். கிளாடியின் வைராக்கியமான பணிபுரியும் திறனும், இங்கிலாந்தின் பருவநிலையும் சேர்ந்து கிளாடியின் உடல்நிலையை மோசமாக்கின. அவர் மிகவும் பலவீனமடைந்ததுடன் சுவாசக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டார். இதன்காரணமாக, அவரது பணிகள் இங்கிலாந்து நாட்டில் முடிவுக்கு வந்தன.

1678ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஃபிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்ல அழைக்கும் உத்தரவுக்காக காத்திருந்த வேளையில், சட்டென அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக திருத்தந்தை சார்பாக சதி புரிவதாக குற்றம் சாட்டப்பட்டார். கத்தோலிக்க எதிர்ப்பு வெறியார்களால் பிடிக்கப்பட்டு கடுமையான நிலைமைகளில் சிறைப்படுத்தப்பட்டார். இதன்காரணமாக இவரது ஆரோக்கியம் மேலும் சீர்கெட்டது.

ஃபிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயிஸின் (King of France, Louis XIV) தலையீட்டால் மரண தண்டனையின்றி தப்பிய கிளாடி, உடனடியாக 1679ம் ஆண்டு, ஃபிரான்ஸுக்கு நாடு கடத்தப்பட்டார். சிறை வாழ்க்கையின் கோர பிடியினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கிளாடி ஃபிரான்ஸ் திரும்பினார்.

தமது வாழ்க்கையின் கடைசி இரண்டு வருடங்களை "லியோன்" (Lyon) நகரில் செலவிட்ட கிளாடி, இரத்த ஒழுக்கு (Hemorrage) காரணமாக 1682ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 15ம் நாளன்று மரணமடைந்தார்.

திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அன்புக்கும் இரக்கத்துக்கும் மிக அழகாக முக்கியத்துவம் தருபவர் என்பதாலும், கிளாடி ஒரு சக இயேசு சபையினராகவும், இயேசுவின் திருஇருதய பக்தியை தீவிரமாக பரப்பியவர் என்பதாலும் கிளாடி அவருக்கு மிகவும் விசேடமானவர் எனலாம். மற்றும், கடவுளின் அன்புக்கும், இரக்கத்துக்கும் முக்கியத்துவம் தருவது இவ்விருவரின் சிறப்புப் பண்பாகும்.

புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

✠ புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி ✠
(St. Theodosius Florentini)

கபுச்சின் துறவி/ சபை நிறுவனர்:
(Capuchin monk and a founder)

பிறப்பு: மே 23, 1808
முன்ஸ்டர், கிரிசன்ஸ், ஸ்விட்சர்லாந்து
(Münster, in the Grisons, Switzerland)

இறப்பு: ஃபெப்ரவரி 15, 1865
ஹைடன், அப்பென்செல்,  ஸ்விட்சர்லாந்து
(Heiden, in Appenzell, Switzerland)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 15

புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கப்புசின் சபை துறவியாவார். இவர், கத்தோலிக்க சபைகளையும் கல்வி நிறுவனங்களையும் நிறுவியவராவார்.

1825ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 22ம் நாள், தனது 17 வயதிலேயே கப்புச்சின் சபையில் சேர்ந்த இவர், 1830ம் ஆண்டு, குருத்துவம் பெற்று, குருவானார். உடனடியாக புதுமுக துறவியரின் தலைமைப் பொறுப்பேற்ற (Novice Master) இவர், தத்துவம் மற்றும் இறையியல் கற்பிக்க தொடங்கினார். “படேன்” (Baden) எனும் வரலாற்று ஜெர்மன் பகுதியின் பாதுகாவலராக பொறுப்பேற்றார். 1845ம் ஆண்டு, “ச்சூர்” (Chur) எனும் பங்கின் பங்குத் தந்தையும், சிரேஷ்டருமானார். 1857ம் ஆண்டு, (Definitor) என்ற பதவியை வகித்த இவர், 1860ம் ஆண்டு, “ச்சூர்” மறைமாவட்டத்தின் (Diocese of Chur) தலைமைக் குருவாகவும் (Vicar-General) பதவி வகித்தார்.

1847ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்தில் நடந்த “சொண்டேர்பன்ட்” (The Sonderbund War) சிவில் யுத்தத்தின் பின்னர், தீவிர அரசியல் (Radical party) கட்சி, கத்தோலிக்க உணர்வுகளை எதிர்த்தது. திருச்சபையின் பாதுகாப்பின் விளைவாக, தந்தை தியடோசியஸ் 1841ம் ஆண்டு, “அல்சேஸி”ற்கு (Alsace) ஓடிப்போனார். அதே வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் திரும்ப வந்தார். அவர், ஹோலி கிராஸ்/ தூய திருச்சிலுவை ஃபிரான்சிஸ்கன் சகோதரியரின் கல்வி நிறுவனத்தை நிறுவினார். 1844ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாள், “அல்டார்ஃப்” (Altorf) எனுமிடத்திலுள்ள கபுச்சின் தேவாலயத்தில், முதல் மூன்று அருட்சகோதரியர் மூன்றாம் நிலை தூய ஃபிரான்சிஸ் சபையின் (Third Order of St. Francis) சீருடைகளைப் பெற்றுக்கொண்டனர். கிறிஸ்துவில் ஆத்துமாக்களை ஜெயிப்பதற்காக, தங்கள் வாழ்க்கை முறையிலிருந்து எதையும் தடுக்கக்கூடிய எந்த ஒன்றையும் செய்யாமலிருக்க அவர்களது அமைப்பு சட்டங்கள், அனைவரையும் தங்களைக் கட்டிக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தன. இந்த அடித்தளத்திலிருந்து, கற்பிக்கும் சகோதரிகளின் சபை, “மென்ஸிங்கன்” (Menzingen) எனுமிடத்திலுள்ள அவர்களுடைய தலைமை இல்லத்தில் வளர்ந்தது.

பின்னர், தந்தை தியடோசியஸ், “இன்ஜென்பால்” (Ingenbohl) எனுமிடத்தில், “கருணையின் சகோதரியர்” (Sisters of Mercy) சபையை நிறுவினார். இரு சபையினரும் கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். கருணையின் சகோதரிகள், ஏழைகளுக்கும் நோய்வாய்பட்டவர்களுக்கும் இல்லங்களை உருவாக்கினர். தனியார் மருத்துவ சேவைகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் தந்தை தியடோசியஸ், ஒரு பள்ளி ஆசிரியராக தன்னையும் பரபரப்பாக வைத்திருந்தார். அவர் “வோல்க்ஸ்குலேன்” (Volksschulen) பள்ளிகளில் மேற்பார்வையிடும் பணிகளையும் செய்தார். இது ஏழைகளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களும் கலந்துகொண்டனர். அவர் தொடர்ச்சியான பள்ளிகளை ஊக்குவித்தார். மற்றும், பயிற்சியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப அறிவுரைகளுக்கு ஆதரவாக இருந்தார். அவர் புதிதாக (Maria-Hilf zu Schwyz) எனப்படும் இயேசுசபை கல்லூரி ஒன்றை நிறுவினார். புதிய கத்தோலிக்க வாழ்க்கையைத் தூண்டுவதற்காக அவர் மத குருக்களுக்காக பிரபலமான பணிகளையும் தியானங்களையும் தொடங்கினார்.

சுவிஸ் ஆயர்களின் வருடாந்த மாநாட்டின் நிறுவனம் உருவாவதற்கு, இவரது முயற்சிகளே காரணமாக இருந்தது. சுவிஸ் கத்தோலிக்கர்களின் கத்தோலிக்க உணர்வுகளை வலுப்படுத்தவும், சமூக வேலைகளை ஒழுங்கமைக்கவும், “பக்தி சபையை” (Pius Society) நிறுவினார்.

சிறுவர்கள், பயிற்சி பெற்றவர்கள், புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள், மற்றும் வெளியேற்றப்பட்ட கைதிகள் போன்ற உதவியற்ற மற்றும் சார்ந்து இருக்கும் கவனிப்பு மற்றும் ஆய்வுகளின் மீது அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். தொழில் சம்பந்தமான கேள்விகளுக்கு, 1863ம் ஆண்டு, பிராங்க்ஃபோர்ட்டில் தமது உரையில் அவர் தம்மை வெளிப்படுத்தினார். தொழிற்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கடன் தரும் வங்கிகள் ஆகியவற்றை கிறிஸ்தவ மயமாக்க கோருகையில், அவர் பின்வருமாறு கூறினார்:
"முன்பு, மடாலயங்கள் தொழிற்சாலைகளாக மாறியது; இப்போது தொழிற்சாலைகள் மடாலயங்களாக மாறும்; இலாபங்கள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்".

இந்த யோசனையை நிறைவேற்றுவதற்காகம், தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. ஆனால் அவை நிறுவியவர்களிடையே வணிக திறமையின்மை காரணமாக அவை தோல்வியடைந்தன. தந்தை தியடோசியஸ், (Ingenbohl) எனுமிடத்தில், புத்தகங்கள் அச்சிடும் மற்றும் புத்தக-கட்டு அமைப்பு ஒன்றையும், புத்தகங்கள் விநியோகத்திற்கான ஒரு சமுதாயத்தையும் நிறுவினார்.

தந்தை தியடோசியஸ், பலரின் வாழ்வில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். அத்துடன் பல குடும்பங்களில் அப்போஸ்தல வாழ்வை அறிமுகப்படுத்தினார். அத்துடன் பள்ளிகளிலும் மருத்துவ மனைகளிலும் பல தொழிற்சாலைகளிலும் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றினார்.
இவர் கைவிடப்பட்டவர்களுக்கென்று பல இல்லங்களை நிறுவினார். அதன்பிறகு ஆண்களுக்கென சில மருத்துவப் பயிற்சி பெறும் இல்லங்களை நிறுவினார். இடைவிடாமல் பணியாற்றி பல அச்சிடும் நிறுவனங்களையும், நூலகங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினார். இவர் பல பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பணியை சிறப்பாக ஆற்றினார். இவர் "மக்களின் மறைப்பரப்பு பணியாளர்" என்றழைக்கப்பட்டார்.

Sts. Saint Faustinus and Saint Jovita 15-2-20

Saint of the Day : (15-02-2020)

Sts. Saint Faustinus and Saint Jovita

Saint Faustinus

Born to the nobility in 2nd century Italy, the older brother of Saint Jovinus. Priest. Zealous preacher in Brescia, Milan, Rome, and Naples. Tortured and martyred in the persecution of Emperor Hadrian.
While their cultus is ancient and widespread, recent scholarship indicates that the story of Jovinus and Faustinus was a pious fiction mistaken for a biography.

Born : 
at Brescia, Lombardy, Italy

Died : 
with his brother, he was thrown to the lions, but the animals refused to touch the men
• beheaded in 120 at Brescia, Italy
• relics reported in Brescia, Rome, Verona, and Bologna. 

Patronage : 
Brescia, Italy
• Credera Rubbiano, Italy


Saint Jovita

Born to the nobility in 2nd century Italy, the younger brother of Saint Faustinus. Deacon. Zealous preacher in Brescia, Milan, Rome, and Naples. Tortured and martyred in the persecution of Emperor Hadrian.

While their cultus is ancient and widespread, recent scholarship indicates that the story of Jovinus and Faustinus was a pious fiction mistaken for a biography.

Born : 
at Brescia, Lombardy, Italy
• Credera Rubbiano, Italy

Died : 
with his brother, he was thrown to the lions, but the animals refused to touch the men
• beheaded in 120 at Brescia, Italy
• relics reported in Brescia, Rome, Verona, and Bologna

Patronage : 
Brescia, Italy

புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)
புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா
படைப்பு முழுவதற்கும் அவர் தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார் (சீஞா 16:16)
ஃபாஸ்டினுஸ்  மற்றும் ஜோவிட்டார் இருவரும் இத்தாலியில் , லம்பார்தேயில் உள்ள ப்ரசியா என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் .உடன் பிறந்த சகோதரர்கள் . முதலாமவர் குருவாக இருந்தார் .இரண்டாமரோ திருத்தொண்டராக இருந்தார் .பாரம்பரியத் தகவல்களின்படி இருவருமே தீவிரமாக நற்செய்தியைப் போதித்து கிறிஸ்துவை மற்றவர்கள் அறியச் செய்வதில் முனைப்புக் காட்டினார்கள் என்பது தெரிகிறது.
கிறிஸ்தவர்களைக் கொன்றழித்து ஆனந்தம் அடைந்த அரசர்களை மகிழ்விக்க ஆளுநர்களும் கங்கனம் கட்டிச் செயல்பட்டார்கள் . அப்படியான  ஆளுநர்களுள் ஒருவரான ஜூலியன் இச்சகோதரர்கள் இருவரையும் கைது செய்தான் .துன்புறுத்தி குதூகலித்தான் .ப்ரசியாவிலிருந்து பிலான் நகருக்கும் அங்கிருந்து உரோமைக்கும் ,பிறகு நேப்பிள்ஸ் பகுதிக்கும் மீண்டும் ப்ரசியாவுக்கும் இருவரையும் கட்டி இழுத்துச் சென்றான்.

அப்போது யதார்த்தமாக அந்தப்பக்கமா வந்து பேரரசர் அட்ரியன் இருவரைப் பற்றியும் விசாரித்தான் .இதைக் குறித்து ,அப்போது பேரரசன் அட்ரியனுடன் ப்ரசியாவுக்கு வந்திருந்த புனித கலாசெருஸ் எழுதியுள்ளார் .இவர் ப்ரசியாவைத் தாய் மண்ணாகவும் ,பேரரசர் அட்ரியன் அரசவையில் அதிகாரியாகவும் இருந்தவர்.
விசாரணையின்போது சூரியனை வணங்கும்படி கட்டளை பிறப்பித்தான் பேரரசன் . அதை மறுத்து, "உலகிற்கு ஒளிதர சூரியனைப் படைத்த இறைவனைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டேன் " என்று ஃபாஸ்டினுஸ் துணிச்சலுடன் பதிலுரைத்தார்.

தாங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு முன்பாக இருந்த சிலை ஒளிரும் படி வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கவனித்த ஜோவிட்டா "விண்ணகத்திலிருந்து ஆட்சி செய்யும் இறைவனையே நாங்கள் வணங்குகிறோம் . அவரை சூரியனைப் படைத்தார். நீங்களும் இந்த சிலையும் கருகிப்போவீர்கள் .இதை வணங்கும் அனைவருக்கும் அவமானமே வந்து சேரும்" என்று ஒளிபடைத்த கண்ணினனாக முழங்கினார்.
உடனேயே அச்சிலை கறுத்துப்போனது. அங்கு நின்றிருந்த பூசாரிகளை அனுப்பி சிலையைச் சுத்தம் செய்யும்படி அரசன் கட்டளையிட்டான் . பயந்து நடுங்கி தயங்கியபடியே அவர்கள் சென்றார்கள் . சென்று அச்சிலையைத் தொட்டதும் அது சாம்பல் போல உதிர்ந்து விழுந்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போன பேரரசன் பசியோடும் பட்டினியோடும் வளர்க்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு  இரையாக்கு வதற்காக அதன் குகைகளுக்கு இருவரையும் இழுத்துச் செல்ல கட்டளையிட்டான் . அதன்படியே வீரர்கள் செய்தார்கள் . குகையின் கதவுகள் திறக்கப்பட்டன. சிங்கங்கள் பாய்ந்து வந்தன . பாய்ந்து வந்த சிங்கங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு பணிந்து நின்றன .இதை நேரில் பார்த்த புனித கலாசெருஸ் உண்மைக் கடவுளை நம்பித் தன்னோடு 12 ஆயிரம் மக்களைச் சேர்த்துத் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவரானார்.
பிறகு இருவரையும் சிறையில் அடைத்து உணவும், நீரும் கொடுக்காது பட்டினி போட்டு கொல்லத் தயாரானார்கள் . சிறையில் இருந்தபோது வானதூதர்கள் வந்து இருவரையும் திடப்படுத்தினார்கள் . பயம் போக்கி மகிழ்ச்சி அளித்தார்கள் .அந்த அறை முழுவதும் நிறைந்திருந்த ஒளியைப் பார்த்த எண்ணற்றோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள் . நிறைவில் இருவரும் தலை வெட்டப்பட்டு மறைசாட்சி ஆனார்கள் .இது 120 ஆம் ஆண்டில் நடந்தது.
தங்கள் நாட்டின் முதன்மைப் பாதுகாவலராக வைத்த இவர்களிடம் மன்றாடுவதுடன் , இவர்களின் புனிதப் பொருள்களையும் ப்ரசியா மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்
.

ஒளிரும் இறைவனின் திரு முக தரிசனத்தை படைப்பு அனைத்திலும் தேடுவோர் அவை சொல்லும் வாழ்விற்கான இறை நற்செய்தியைக் கண்டுகொள்ள முடியும்.

14 February 2020

தூய சூசையப்பரின் புனிதர் இகிடியோ மரியா பெப்ரவரி 13

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 13)

✠ தூய சூசையப்பரின் புனிதர் இகிடியோ மரியா ✠
(St. Egidio Maria of Saint Joseph)

இத்தாலிய ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளர்:
(Italian professed religious)

பிறப்பு: நவம்பர் 16, 1729
டரன்ட்டோ, அபுலியா, நேப்பிள்ஸ் அரசு
(Taranto, Apulia, Kingdom of Naples)

இறப்பு: ஃபெப்ரவரி 7, 1812 (வயது 82)
நேப்பிள்ஸ், இரண்டு சிசிலிக்களின் அரசு
(Naples, Kingdom of the Two Sicilies)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஃபெப்ரவரி 5, 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: ஜூன் 2, 1996
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 13

பாதுகாவல்:
டரன்ட்டோ
(Taranto)
பாதிக்கப்பட்ட மக்கள்
(Ill people)
சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்
(Outcast people)
சிறுவர்கள்
(Children)
வேலை தேடும் மக்கள்
(People looking for work)

"ஃபிரான்ஸிஸ்கோ போஸ்டில்லோ" (Francesco Postillo) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் (சூசையப்பரின்) இகிடியோ மரியா, “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர்” (Order of Friars Minor/ Order of Franciscans) சபையைச் சேர்ந்த ஒரு இத்தாலிய ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளர் (Italian professed religious) ஆவார்.

"போஸ்டில்லோ" முறையான கல்வி பெறாத காரணத்தால், அவரால் குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற இயலவில்லை. ஆயினும் இவர் ஃபிரான்ஸிஸ்கன் சபையின் சகோதரர் ஆவார். இத்தாலியின் தெற்கு பிராந்தியத்திலுள்ள நகரங்களான “டரன்ட்டோ” மற்றும் “நேப்பிள்ஸ்” (Taranto and Naples) ஆகிய இடங்களிலுள்ள ஏழைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாத்து, கவனித்து, சேவை செய்வதிலும், இவர் தம்மை அர்ப்பணித்துக்கொண்டதால் மக்களிடையே நன்கு அறியப்பட்டவராக இருந்தார். அதனாலேயே மக்கள் இவருக்கு "நேப்பிள்சின் ஆறுதலளிப்பவர்" (Consoler of Naples) என்ற புனைப்பெயர் இட்டு அழைத்தனர்.

வாழ்க்கை:
"ஃபிரான்ஸிஸ்கோ போஸ்டில்லோ" (Francesco Postillo) கி.பி. 1729ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16ம் நாளன்று, “டரன்ட்டோ” (Taranto) நகரில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர், "கட்டால்டோ போஸ்டில்லோ" (Cataldo Postillo) ஆகும். தாயாரின் பெயர், "கிரேஸியா" (Grazia Procaccio) ஆகும். இவரது பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இவர் மூத்தவர் ஆவார். இவரது திருமுழுக்குப் பெயர், "ஃபிரான்ஸிஸ்கோ டொமெனிக்கோ அன்டோனியோ பாஸ்குயேல் போஸ்டில்லோ" (Francesco Domenico Antonio Pasquale Postillo) ஆகும்.

கி.பி. 1747ம் ஆண்டும், போஸ்டில்லோவின் தந்தையார் மரித்ததால், தமது விதவைத் தாயாரையும், தமது இளைய சகோதரர்களையும் பராமரிப்பதற்காக பணியொன்றை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். வெகு காலம் வரை இவர் ஒரு கயிறு திரிக்கும் (Rope maker) பணி செய்தார். முறையான கல்வி இல்லாத காரணத்தால் குருத்துவம் பெற இயலாததால் “நேப்பிள்ஸ்” (Naples) நகரிலுள்ள “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையின்” "ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளராக" (Professed Religious) பணியாற்றினார். சபையில் சேர்வதற்காக கி.பி. 1754ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று விண்ணப்பித்த இவர், சரியாக ஒரு வருடம் கழித்து, கி.பி. 1755ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் தேதியன்று, "கலடோன்" (Galatone) என்னுமிடத்திலுள்ள "புனித மரியாளின்" (Convent of Santa Maria delle Grazie) பள்ளியில் பணியின் தூய்மையைக் காக்கும் பிரமாணத்தை எடுத்தார். இவர், "கடவுளின் அன்னையின் இகிடியோ" ("Egidio of the Mother of God") எனும் பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். ஆனால், பின்னர் அதனை "புனிதர் சூசையப்பரின் இகிடியோ மரியா" (Egidio Maria of Saint Joseph) என்று மாற்றிக்கொண்டார்.

தமது பள்ளியின் சுமை தூக்குபவராகவும், வாயில் காப்பவராகவும், பணியாற்றிய போஸ்டில்லோ, தொழு நோயாளிகளுக்காக சமையல் பணியும் செய்தார். அடிக்கடி தமது பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் வழக்கமுள்ள இவர், ஒதுக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக இரந்து தானமாக பொருள் பெற்று வந்தார்.

இடுப்பு கீல் வாயு, நீர்க்கோப்பு மற்றும் சுவாசகாசம் அல்லது ஆஸ்துமா நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த போஸ்டில்லோ கி.பி. 1812ம் ஆண்டு, நேப்பிள்ஸ் நகரில் மரணமடைந்தார்.

புனித கேத்தரின் தே ரிச்சி பிப்ரவரி - 13

பிப்ரவரி - 13

புனித கேத்தரின் தே ரிச்சி
இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம். "அம்மா, இவரே உம் மகன் "என்றார் (யோவா 19:26)
1522, ஏப்ரல் 23 அன்று இத்தாலி நாட்டில், பிளாரன்ஸ் நகர் அருகில் ரொமோலா என்னும் இடத்தில் பிறந்தவர் கேத்தரின் தே ரிச்சி . இவருடைய பெற்றோர்கள் பியர் பிரான்செஸ்கொ தே ரிச்சி மற்றும் கேத்தரின் ஆவர். இவருக்கு இவரின் பெற்றோர் அலெக்ஸான்ட்ரா லக்ரசியா  என்று பெயர் வைத்தார்கள் .நடக்க ஆரம்பிக்கும் முன்பே தாய் இறந்தார் .எனவே ஃபியமெத்தா தே டைய செட்டோ என்ற வளர்ப்புத்தாய் இவரை வளர்த்தெடுத்தார்.
சிறுவயது முதலே செபம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டிருந்த அலெக்ஸான்ட்ரா தெய்வக் குழந்தை போலவே வாழ்ந்தார் . இதை அறிந்த வளர்ப்புத்தாய் இன்னும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அலெக்ஸான்ட்ராவை வளர்த்தார்.
அலெக்ஸான்ட்ராவிற்கு 13 வயது நடந்த போது, வீட்டிற்கு அருகில் இருந்த மடத்தில் இவருடைய தந்தை இவரைக் கொண்டு போய் விட்டார் .அந்த மடத்தில் அலெக்ஸான்ட்ராவின் அத்தை அருள் சகோதரியாக இருந்தார். மடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது, இறைவன் தன்னை மேலான பணிக்கு முன் குறித்துள்ளார் என்பதை அறிந்து 14ஆம் வயதில் புனித வின்சென்டின் சாமிநாதர் மடத்தில் சேர்ந்தார்.
1536 இல் வார்த்தைப்பாடு கொடுத்தபோது கேத்தரின் என்ற தம்முடைய தாயின் பெயரைத் தமது பெயராக எடுத்துக் கொண்டார் . 
இதன் பிறகு நான்கைந்து ஆண்டுகள் கேலிப் பேச்சுக் களாலும் ,துன்புறுத்துதல்களாலும் அதிகம் அவதிப்பட்டார். ஏனென்றால் காட்சி வழியாக இருப்பிரசன்னம் உணர்ந்து இவர் ,யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வரங்களுடன் விளங்கினார் .இவரின் வழிகாட்டுதல்கள் தேடி அரசர்கள் ,ஆயர்கள் , கர்தினால்கள் , பொதுநிலையினர் பலர் வர ஆரம்பித்தார்கள் . அவர்களை ,"தமது ஆன்மீகக் குழந்தைகள் " என்று அன்பொழுக அழைத்து மகிழ்ந்தார். கடிதங்கள் வாயிலாகவும் அவர்களின் ஆன்ம வழிகாட்டியாக விளங்கினார்.
கேத்தரின் 1542 ,பிப்ரவரி மாதம் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தன்னிலை மறந்த ஆனந்த வெளியில் கண்டு களித்தார். இந்திகழ்வு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிற்பகல் நான்கு மணி முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் அதே நேரம் வரை இருந்தது .இயேசுவின்  பாடுகள் வழியாக அவரின் பாடுகளைத் தாமும் அனுபவித்து இயேசுவிற்கு ஆறுதல் சொன்னார் கேத்தரின்.

இந்நிகழ்வைப் பார்க்க ஒவ்வொரு வாரமும் கூட்டம் அலை மோதியதால் உடனிருந்து மற்ற அருள்சகோதரிகளால் மீண்டும் வேதனைக்குள்ளானார். கடைசியில் இந்நிகழ்வை நிறுத்திடுமாறு இறைவனிடம் கேத்தரின் வேண்டினார் .அதன்படி தொடர்ந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆனந்து வெள்ளி அனுபவம் நின்றது.

இந்தக்கால இடைவெளியில், நவ துறவிகளுக்குப் பயிற்றுனராக ,சபையின் துணைத்தலைவராக இருந்து பிறகு 25 வயதிலேயே சபையின் தலைவியாகவும் நியமிக்கப்பட்டார் .தமது சிறப்பான ஆளுமைத் திறத்தால் சபையைப் பாநங்குற வழிநடத்தினார். இவர் வாழ்ந்த காலத்தில் பல முக்கியப் புனிதர்கள் வாழ்ந்தனர் .அவர்களுள் பிலிப்பு நேரி மற்றும் மக்தலன் இவரிடமும் நேரில் இல்லாமலேயே காட்சி வழியாக முகமுகமாய் பேசி ஆன்மீக அருளைப் பகிர்ந்தார்.

உத்தத்தரிக்கிற நிலையில் இருக்கிற ஆன்மாக்கள்  ஈடேற்றம் பெறவும், இறைவனை அடையவும், தொடர்ந்து ஒறுத்தல் முயற்சிகள் செய்ததுடன் கழுத்தில் இரும்புச் சங்கிலியும் அணிந்து செபித்தார்.

கேத்தரின் நோயுற்று 1590, பிப்ரவரி முதல் தேதி இறந்தார் . திருத்தந்தை 12ஆம் கிளமண்ட் 1732 இல் அருளாளராக அறிவித்தார் .திருத்தந்தை 14 ஆம் ஆசிர்வாதப்பர் 1746 ஆம் ஆண்டு இவரை புனித நிலைக்கு உயர்த்தினார்

குழந்தைகளின் உண்மையான எதிர்நோக்குகளை உணர்ந்து அதனை மெருகூட்ட வளர்ப்புப் பெற்றோர் உழைக்கும்போது இறைவன் வரைந்த ஓவியமாக குழந்தைகள் மிளிர்வார்கள்.

புனித வாலன்டைன்மகிழ்ச்சியான திருமணங்களின் பாதுகாவலர் ஃபெப்ரவரி 14

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 14)
புனித வாலன்டைன்
மகிழ்ச்சியான திருமணங்களின் பாதுகாவலர்
காதலைத் தட்டி எழுப்பாதீர் ; தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர் (இபா 3:5)
தொடக்கக்கால மறைசாட்சியாளர்கள் பற்றிய குறிப்பில் புனித வாலன்டைன் என்ற பெயரில் மூன்று நபர்கள் பிப்ரவரி 14 ஆம் தேதியில் குறிப்பிடப்படிருக்கிறார்கள் . ஒருவர் ஆப்பிரிக்கா நாட்டில் மறைப்பணியாற்றி பல்வேறு துன்பங்களை அனுபவித்து இறந்தவர். இவரைப்பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை .

மற்ற இருவரில் ஒருவர், இன்டெரம்னா  என்ற இடத்தின் ஆயராக இருந்தவர் .மற்றவர் உரோமையில் குருவாகப் பணியாற்றியவர் .இவர்கள் இருவருமே மறைக்கலகத்தின் போது கொடூர துயரங்களையும் தாங்கிக்கொண்டு நற்செய்தி போதித்தவர்கள் . மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொலையுண்டு மறைசாட்சியானவர்கள் .

உரோமையில் குருவாக இருந்த வாலன்டைன் ஒரு மருத்துவரும் கூட .இவர் பேரரசர் இரண்டாம் கிளாடியுசின் காலத்தில் நடந்த மறைக்கலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றினார். எண்ணற்றோர் அத்துன்பக் கிண்ணத்தைப் பருகாமல் தப்பித்துச் செல்ல வழிவகுத்தார். சிறைச்சாலைகளுக்குள் சென்று ஆறுதல் மொழி கூறி ஆற்றுப் படுத்தினார்.

இதே காலத்தில் பெர்சியாவில் இருந்து புனித மாரியுஸ் குடும்பத்தினர் உரோமைக்குத் திருப்பயணமாக வந்தார்கள் .வந்தவர்கள் வாலன்டைன் செய்த அரும்பணிகளைப் பார்த்தார்கள் .சவால் நிறைந்த இந்தப் பணிக்கு  புனித மாரியுஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர்  அனைவருமே வாலன்டைனுக்கு உதவியாக இருந்தார்கள் .

திருமணமான படை வீரர்களை விட திருமணம் ஆகாத வீரர்களே வீரமான முழு திறனுடன் போராடுவார்கள் என்று நினைத்த பேரரசன் வீரர்கள் திருமணம் செய்வதை தடுத்து வந்தார். இத்தடையை மீறி பல வீரர்களுக்கு வாலன்டைன் மணமுடித்து வைத்தார்.

வாலன்டைன் செய்வது யெல்லாம் கேட்டறிந்த பேரரசன் அவரைக் கைது செய்து , உரோமை அளுநனிடம் அனுப்பினார். பொறுமையாக இருந்த அளுநன் கத்தோலிக்க கிறிஸ்தவ மழையை மறுத்த உரோமை தெய்வத்தை,  பேரரசரை வணங்க கட்டளையிட்டான் . வாலன்டைன் மறுத்தார். துன்புறுத்தினான் .வாலன்டைன் உறுதியுடன் இருந்தார் . வெகுண்டெழுந்த அளுநன் கொலை செய்ய ஆணை பிறப்பித்தான் . 

வாலன்டைன்  ஏறக்குறைய 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் . நகர வாயிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருந்த சுரங்கக் கல்லறையில் அவரது உடலை அடக்கம் செய்தார்கள். நான்காம் நூற்றாண்டில் அந்த இடத்தை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் பூமிக்கு அடியில் பேராலயம் ஒன்றை  எழுப்பினார் .அது திருத்தந்தை முதலாம் ஹனோரியஸ் என்பவரால் ஏழாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. காலப்போக்கில் காதலர்கள் தங்கள் பாதுகாவலராகவே வாலன்டைனை நினைத்துப் போற்றினார்கள் .இன்று வரை அது தொடர்கிறது .

காதல் என்பது புனிதமான உணர்வு அதனை இச்சை க்குரியதாய் மாற்றாமல் உணர்வுப் பரிமாற்றமாக்கிக் கொண்டால் ஆனந்தம் ஆனந்தமே.

St. ValentineFeastday: February 14

St. Valentine
Feastday: February 14
Patron: of Love, Young People, Happy Marriages
Death: 269

Saint Valentine, officially known as Saint Valentine of Rome, is a third-century Roman saint widely celebrated on February 14 and commonly associated with "courtly love."

Although not much of St. Valentine's life is reliably known, and whether or not the stories involve two different saints by the same name is also not officially decided, it is highly agreed that St. Valentine was martyred and then buried on the Via Flaminia to the north of Rome.

In 1969, the Roman Catholic Church removed St. Valentine from the General Roman Calendar, because so little is known about him. However, the church still recognizes him as a saint, listing him in the February 14 spot of Roman Martyrolgy.

The legends attributed to the mysterious saint are as inconsistent as the actual identification of the man.

One common story about St. Valentine is that in one point of his life, as the former Bishop of Terni, Narnia and Amelia, he was on house arrest with Judge Asterius. While discussing religion and faith with the Judge, Valentine pledged the validity of Jesus. The judge immediately put Valentine and his faith to the test.

St. Valentine was presented with the judge's blind daughter and told to restore her sight. If he succeeded, the judge vowed to do anything for Valentine. Placing his hands onto her eyes, Valentine restored the child's vision.

Judge Asterius was humbled and obeyed Valentine's requests. Asterius broke all the idols around his house, fasted for three days and became baptized, along with his family and entire 44 member household. The now faithful judge then freed all of his Christian inmates.

St. Valentine was later arrested again for continuing to try to convert people to Christianity. He was sent to Rome under the emperor Claudius Gothicus (Claudius II). According to the popular hagiographical identity, and what is believed to be the first representation of St. Valentine, the Nuremberg Chronicle, St. Valentine was a Roman priest martyred during Claudius' reign. The story tells that St. Valentine was imprisoned for marrying Christian couples and aiding Christians being persecuted by Claudius in Rome. Both acts were considered serious crimes. A relationship between the saint and emperor began to grow, until Valentine attempted to convince Claudius of Christianity. Claudius became raged and sentenced Valentine to death, commanding him to renounce his faith or be beaten with clubs and beheaded.

St. Valentine refused to renounce his faith and Christianity and was executed outside the Flaminian Gate on February 14, 269. However, other tales of St. Valentine's life claim he was executed either in the year 269, 270, 273 or 280. Other depictions of St. Valentine's arrests tell that he secretly married couples so husbands wouldn't have to go to war. Another variation of the legend of St. Valentine says he refused to sacrifice to pagan gods, was imprisoned and while imprisoned he healed the jailer's blind daughter. On the day of his execution, he left the girl a note signed, "Your Valentine."

Pope Julius I is said to have built a church near Ponte Mole in his memory, which for a long time gave name to the gate now called Porta del Popolo, formerly, Porta Valetini.

The romantic nature of Valentine's Day may have derived during the Middle Ages, when it was believed that birds paired couples in mid-February. According to English 18th-century antiquarians Alban Butler and Francis Douce, Valentine's Day was most likely created to overpower the pagan holiday, Lupercalia.

Although the exact origin of the holiday is not widely agreed upon, it is widely recognized as a day for love, devotion and romance.

Whoever he was, Valentine did really exist, because archaeologists have unearthed a Roman catacomb and an ancient church dedicated to St. Valentine. In 496 AD Pope Gelasius marked February 14th as a celebration in honor of his martyrdom.

Relics of St. Valentine can be found all over the world. A flower-crowned skull of St. Valentine can be found in the Basilica of Santa Maria in Cosmedin, Rome. In 1836, other relics were exhumed from the catacombs of Saint Hippolytus on the Via Tiburtina and were identified as Valentine's. These were transported for a special Mass dedicated to those young and in love.

Fr. John Spratt received a gift from Pope Gregory XVI in 1836 contianing a "small vessel tinged" with St. Valentine's blood. This gift now stands placed in Whitefriar Street Church in Dublin, Ireland.

Other alleged relics were found in Prague in the Church of St Peter and Paul at Vysehrad; in the parish church of St. Mary's Assumption in Chelmno Poland; at the reliquary of Roquemaure in France; in the Stephansdom in Vienna; in Balzan in Malta and also in Blessed John Duns Scotus' church in the Gorbals area of Glasgow, Scotland.

St. Valentine is the Patron Saint of affianced couples, bee keepers, engaged couples, epilepsy, fainting, greetings, happy marriages, love, lovers, plague, travellers, and young people. He is represented in pictures with birds and roses and his feast day is celebrated on February 14.

தூய சிரில், தூய மெதோடிசியுஸ் (பிப்ரவரி 14)

இன்றைய புனிதர்
(14-02-2020) 

தூய சிரில், தூய மெதோடிசியுஸ் (பிப்ரவரி 14)

வாழ்க்கை வரலாறு

1998 ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 ஆம் நாள் திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் ஸ்லாவிக்கிற்குச் சென்றபோது ஸ்லாவிக்கின் திருதூதர்கள் என்று அழைக்கப்படுகின்ற தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுசைக் குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்: தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுஸ் ஆகிய இருவரும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் கிறிஸ்தவ மறையைத் தாயகமாக்குவதற்கும் மிகச் சிறந்த முன்னோடிகள்.

திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் முற்றிலும் உண்மை. நற்செய்தி அறிவிப்பிற்கும் கிறிஸ்தவ மறையைத் தாயகமாக்குவதற்கும் தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுஸ் மேற்கொண்ட தியாகங்கள் அதிகம். அவர்கள் எத்தகைய தியாகங்களையும் இடர்பாடுகளையும் மேற்கொண்டு நற்செய்திப் பணியைச் செய்தார்கள், அவர்களுடைய வாழ்வு நமக்கு எந்தளவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

வாழ்க்கை வரலாறு

சிரிலும் மெதோடிசியுசியுசும் உடன் பிறந்த சகோதரர்கள். முதலாமவர் 827 ஆம் ஆண்டும் இரண்டாமவர் 815 ஆம் ஆண்டும் பிறந்தார்கள். இரண்டு பேரும் தெசலோனிக்காவில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்கள். சிரில் அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார், அதனால் கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்த பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றி வந்தார். மெதோடிசியுசோ மிகச் சிறந்த ஓவியரை விளங்கி வந்தார் அதோடு கூட, ஆளுநராகப் பணியாற்றி வந்தார். 860 ஆம் ஆண்டு இரண்டு பேரும் தாங்கள் ஆற்றி வந்த பணிகளைத் துறந்துவிட்டு துறவிகளாக மாறி இறைப்பணி செய்யத் தொடங்கினார்கள்.

இச்சமயம் மொராவியா இளவரசன், சகோதரர்கள் இருவரையும் குறித்துக் கேள்விப்பட்டு ஸ்லாவிக் மொழி பேசும் மக்களுக்கு மத்தியில் நற்செய்திப் பணியாற்ற அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் அங்கு சென்று நற்செய்திப் பணியாற்றத் தொடங்கினார்கள். ஏற்கனவே ஸ்லாவிக் மொழி அவர்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்ததால், அவர்கள் மக்களுக்கு மத்தியில் மிக எளிதாகப் பணி செய்ய முடிந்தது. இதற்கிடையில் சகோதரர் இருவரும் ஆற்றி வந்த பணிகளை பிடிக்காது ஸ்லாவிக் பகுதியில் இருந்த ஏனைய குருக்கள் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். இதனால் அவர்கள் அப்போது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஹட்ரின்ஸ் என்பவரைச் சந்தித்து, தங்களுடைய நிலையை எடுத்துச் சொன்னார்கள். அவர் அவர்கள் சொன்னதைக் கேட்டபின்பு, அவர்கள் தங்களுடைய நற்செய்திப் பணியை செய்ய முழு ஆதரவும் அளித்தார், மட்டுமல்லாமல் அவர்களை இரு நகர்களுக்கு ஆயராக நியமித்தார்.

திருத்தந்தையிடமிருது அனுமதி பெற்றுக்கொண்டு சிரிலும் மெதோடிசியசும் உரோமையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். இடையிலேயே சிரில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனார். இதனால் மெதோடிசியஸ் மட்டும் முன்பிருந்த இடத்திற்குச் சென்று நற்செய்திப் பணி செய்யத் தொடங்கினார். தன் சகோதரரின் இறப்புக்குப் பிறகு, மெதோடிசியுஸ் இன்னும் உத்வேகத்தோடு பணிசெய்யத் தொடங்கினார். விவிலியத்தை வெறும் எட்டு மாதங்களுக்கு உள்ளாகவே ஸ்லாவிக் மொழியில் மொழிபெயர்த்துத் தந்து, மக்கள் தங்களுடைய சொந்த மொழியில் இறைவார்த்தையை வாசிக்கவும் சிந்தித்தவும் செய்தார். இதனால் நிறையப் பேர் கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள்; ஒருசிலர் மெதோடிசியுசை தங்களுடைய ஆர்மார்த்தமான குருவாக ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடந்தார்கள். இப்படிப்பட்டவர் உடல் நலம் குன்றி 885 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

 † இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 14)

✠ புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ் ✠
(Saints Cyril and Methodius)

ஆயர்கள்/ ஒப்புரவாளர்கள்
(Bishops/ Confessors)
அப்போஸ்தலர்களுக்கு நிகரானவர்கள்
(Equals to the Apostles)
ஐரோப்பா மற்றும் அடிமைகளின் பாதுகாவலர்கள்
(Apostles to the Slaves and Europe)

பிறப்பு:
சிரில்: கி.பி. 826 அல்லது 827

மெதோடியஸ்: கி.பி. 815
தெசலோனிக்கா, பைஸான்தீனிய பேரரசு (தற்போதைய கிரேக்க நாடு)
(Thessalonica, Byzantine Empire (Present-day Greece)

இறப்பு:
சிரில்: ஃபெப்ரவரி 14, 869
ரோம் (Rome)

மெதோடியஸ்: ஏப்ரல் 6, 885
வெலெராட், மொராவியா
(Velehrad, Moravia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரபுவழி திருச்சபை
(Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 14

பாதுகாவல்:
ரோமன் கத்தோலிக்க மற்றும் மரபுவழி திருச்சபைகளுக்கிடையேயான ஒற்றுமை
(Unity between Orthodox and Roman Catholics),
ஐரோப்பா (Europe),
பல்கேரியா (Bulgaria),
“மசெடோனியா” குடியரசு (Republic of Macedonia),
"செக்" குடியரசு (Czech Republic),
"ஸ்லோவேகியா" (Slovakia),
"ல்ஜூப்ல்ஜனா" உயர்மறை மாவட்டம்
(Archdiocese of Ljubljana)

புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ் ஆகிய இரு சகோதரர்களும் "பைஸன்டைன்" (Byzantine) நாட்டின் கிறிஸ்தவ இறையியலாளர்களும், மறை பரப்பாளர்களுமாவர். அவர்களின் நற்பணிகள் மூலம், அனைத்து அடிமைகளின் கலாச்சார வளர்ச்சியிலும் மேம்பாடு பெற்றனர். இதன் காரணமாகவே, இவர்களிருவரும், "அடிமைகளின்அப்போஸ்தலர்" என்று போற்றப்பட்டனர்.

தற்போதைய கிரேக்க நாடான "பைஸன்டைன்" (Byzantine) நாட்டில் பிறந்த இவர்களிருவரினதும் தந்தை பெயர் "லியோ" (Leo) ஆகும். "மரியா" (Maria) இவர்களது தாயார் ஆவார். லியோ மற்றும் மரியாவுக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் சிரில் கடைக்குட்டி ஆவார். சிரிலின் இயற்பெயர் "காண்ஸ்டன்டைன்" (Constantine) ஆகும். இவர் தமது மரணத்தின் சிறிது காலத்தின் முன்னே ரோம் நகரில் துறவறம் பெற்றபோது, சிரில் என்னும் மதப் பெயரை ஏற்றுக்கொண்டார்.

"மைக்கேல்" (Michael) எனும் இயற்பெயர் கொண்ட மெதோடியஸ், துருக்கி நாட்டின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள "மைசியன் ஒலிம்பஸ்" (Mysian Olympus) என்னுமிடத்தில் துறவறம் பெற்றபோது, தமது மதப் பெயராக "மெதோடியஸ்" எனும் பெயரை ஏற்றுக்கொண்டார்.

சிரிலுக்கு பதினான்கு வயது நடக்கையில் அவர்களது தந்தையார் மரணமடைந்தார். அந்நிலையில், பேரரசின் முதலமைச்சர்களுள் ஒருவராயிருந்த "தியோக்டிஸ்டோஸ்" (Theoktistos) என்பவர் அவர்களின் பாதுகாவலரானார். அவரே அவர்களது கல்விக்கும் உதவி புரிந்தார். இவர்கள் இருவரும் சிறப்பான முறையில் கல்வியைப் பூர்த்தி செய்தனர். சிரில், தமக்கு கிடைத்த ஆளுநர் பதவியை புறக்கணித்தார். ஆனால் அதே வேளையில் அவரது சகோதரரான மெதோடியஸ் "ஸ்லாவிக்" (Slavic) மொழி பேசும் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

சிரில், ஒரு துறவு மடத்தில் இணைந்தார். அவரது சகோதரர் மெதோடியஸ், சிறிது காலம் அரசு பதவியில் பணியாற்றிய பிறகு துறவு மடத்தில் இணைந்தார்.

"மொராவியா" (Duke of Moravia) பிராந்திய பிரபு, கிழக்குப் பிராந்திய பேரரசன் மைக்கேலிடம் (Eastern Emperor Michael) ஜெர்மன் ஆட்சியாளர்களிடமிருந்து அரசியல் சுதந்திரமும் திருச்சபை சுயாட்சியும் (Ecclesiastical Autonomy) கேட்டபொழுது, சிரில் மற்றும் மெதோடியஸ் ஆகிய இருவரின் வாழ்வில் திட்டவட்டமான மாற்றம் உண்டாகியது. அவர்கள் மறைப் பணியை ஏற்றுக்கொண்டனர்.

சிரிலுடைய முதல் பணி, கிழக்கு விதிமுறைகள் அமலிலிருந்த அப்பிராந்தியத்தில் ஒரு புதிய எழுத்துக்களை கண்டுபிடித்தலாயிருந்தது. பின்னர், அவருடைய சீடர்கள் சிரில்லிக் எழுத்துக்களை (Cyrillic alphabet) உருவாக்கினர். அவர்கள் சுவிசேஷங்கள், துதிப்பாடல், பவுல் எழுதிய கடிதங்கள் மற்றும் வழிபாட்டு புத்தகங்கள் ஆகியனவற்றை இணைந்து "ஸ்லாவோனிக்" (Slavonic) மொழியில் மொழிமாற்றம் செய்தனர். ஸ்லாவோனிக் வழிபாட்டு முறையையும் உருவாக்கினர். மிகவும் சரளமாக அவர்கள் பிரசங்கித்த முறையானது, ஜெர்மன் மதத்தவரிடையே எதிர்ப்பை உருவாக்கித் தந்தது. அப்போதைய ஜெர்மன் ஆயர், ஸ்லாவிக் ஆயர்களையும் குருக்களையும் (Slavic bishops and priests) அருட்பொழிவு செய்ய மறுத்தார்.

இதன் காரணமாக சிரில் ரோமுக்கு மேல்முறையீடு செய்தார். ரோம் நகருக்கு பயணித்த சிரிலும், மெதோடியஸும் 'திருத்தந்தை இரண்டாம் அட்ரியான்' (Pope Adrian II) தமது புதிய கண்டுபிடிப்பான "சிரில்லிக் எழுத்துக்களை" (Cyrillic alphabet) அங்கீகரித்தது கண்டு அகமகிழ்ந்தனர். ரோம் நகரில் துறவறம் பூண்ட சிரில், நீண்ட காலம் வாழ இயலாமல் ஐம்பதே நாட்களில் மரணமடைந்தார்.

மெதோடியஸ் தமது மறை பணிகளை மேலும் பதினாறு வருடங்களுக்கு தொடர்ந்தார். அவர் ஸ்லாவிக் மக்களுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக செயல்பட்டார். புதிய ஆயர் ஒருவரை அருட்பொழிவு செய்தார்.

"பவேரியன் ஆயர்கள்" (Bavarian bishops) பலரது முன்னாள் அதிகார வரம்பிலிருந்த பகுதிகள் நீக்கப்பட்டதால், அவர்கள் மெதோடியஸுக்கு எதிராக பல குற்றச்சாட்டுப் புயலைக் கிளப்பினர். இதன் பயனாக, ஜெர்மன் பேரரசன் லூயிஸ் (Emperor Louis the German) மெதோடியசை மூன்று ஆண்டுகளுக்கு நாடு கடத்தினான். திருத்தந்தை எட்டாம் ஜான் (Pope John VIII) அவரை விடுவித்தார்.

ஃபிராங்கிஷ் (Frankish) மொழி பேசும் குருக்களின் தொடர்ந்த தொந்தரவு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்று இருந்தது. அவர்கள் தொடர்ந்து மெதோடியஸின் மேலே மதங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். தம்மைக் காத்துக்கொள்ளவும், தமது கண்டுபிடிப்பான ஸ்லாவோனிக் வழிபாட்டு முறையின் பயன்பாட்டினை நிலைநிறுத்தவும், மெதோடியஸ் ரோம் நகர் பயணித்தார். மீண்டும் தம்மை அவர் நிரூபித்தார்.

அதன்பின்னர், மெதோடியஸ் ஜுர வேகத்தில், எட்டே மாத காலத்தில் மொத்த திருவிவிலியத்தையும் "ஸ்லாவோனிக்" (Slavonic) மொழியில் மொழிபெயர்த்தார். கி.பி. 885ம் ஆண்டின் தவக்காலமான ஏப்ரல் மாதம், புனித செவ்வாய்க்கிழமையன்று (6ம் தேதி), தமது தேவாலயத்திலேயே மெதோடியஸ் மரணமடைந்தார். அவர் மரிக்கும்போது அவரது சீடர்கள் அவரைச் சுற்றியிருந்தனர்.

மெதோடியஸின் மரணத்தின் பின்னரும் அவரது எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து எதிர்த்தே வந்தனர். சிரில் மற்றும் மெதோடியஸ் சகோதரர்களின் பணி "மொராவியா" (Moravia) நாட்டில் முடிவுக்கு வந்தது. அவர்களது சீடர்கள் சிதறிப்போயினர். ஆனால் இந்த வெளியேற்றங்கள் சிரில் - மெதோடியஸ் சகோதரர்களின் ஆன்மீக, வழிப்பாட்டு, மற்றும் கலாச்சார பணிகளை "பல்கேரியா", "போஹெமியா" மற்றும் "தென் போலந்து" (Bulgaria, Bohemia and Southern Poland) ஆகிய நாடுகளில் பரப்புவதில் சாதகமான விளைவைத் தந்தன. "மொராவியா" (Moravia) நாட்டின் பாதுகாவலர்களான இவர்கள் விசேடமாக, "செக்" மற்றும் ஸ்லோவாக்" கத்தொலிக்கராலும் (Catholic Czechs, Slovaks), "குரோஷியர்களாலும்" (Croatians), "செர்பிய" மற்றும் "பல்கேரிய" (Orthodox Serbians and Bulgarians) மரபுவழி திருச்சபையினராலும் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். சிரில் - மெதோடியஸ் சகோதரர்கள் நீண்ட கால விருப்பமான "கிழக்கு மற்றும் மேற்கு" திருச்சபைகளின் ஒன்றிப்பிற்காக சிறப்பாக பணியாற்றியிருந்தனர்.

கி.பி. 1980ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) இச்சகோதரர்களை ஐரோப்பிய நாடுகளின் (புனிதர் பெனடிக்டுடன்) இணை பாதுகாவலர்களாக நியமித்தார்.

Sts. Cyril and Methodius 14-02-2020

Saint of the Day : (14-02-2020)

Sts. Cyril and Methodius
They were Greek brothers born in Thessaloniki. Cyril was born in the year 827 and Methodius was born in 815. Their father was Leo and mother was Maria. Cyril was the youngest of seven brothers. His birth name was Constantine but took the name Cyril when he became a monk. Cyril was a master of theology and got very good knowledge in Arabic and Hebrew. Cyril also took an active role in his relations with the other two monotheist religions Islam and Judaism. Byzantine Emperor Michael-III sent Cyril and Methodius to Moravia to the Eastern Church to give assistance in ecclesiastical matters there, since the Prince Ratislav of Great Moravia expelled all Roman Church Missionaries from Moravia. Cyril and Methodius devised the Glagolitic Alphabet, the first alphabet to be used for Slavonic manuscripts. Glagolitic alphabet was suited to match the specific features of Slavic language. The Glagolitic and Cyrillic alphabets based primarily on the Greek writings of the century are the oldest known Slavic alphabets and were created by the two brothers and their students. They also wrote the first Slavic Civil Code, which was used in Great Moravia. Anasthasius later called Cyril the teacher of the Apostolic See and the brothers are known as the Apostle of Slavs. Cyril died on February 14, 869 and Methodius died on April 6, 885.

---JDH---Jesus the Divine Healer---

13 February 2020

13-02-2020. சாக்சன் நகர் ஜோர்டன்

இன்றைய புனிதர் : 
(13-02-2020) 

சபைத்தலைவர் சாக்சன் நகர் ஜோர்டன் Jordan von Sachsen

பிறப்பு 1200, போர்க்பெர்கே Borgberge, ஜெர்மனி

இறப்பு 13 பிப்ரவரி 1237, சிரியா

இவர் தான் பிறந்த ஊரின் அருகிலிருந்த பாடர்போன் (Paderborn) என்ற நகரில் கல்வி பயின்றார். இவர் தன் கல்வி படிப்பை முடித்தப்பின், புனித தொமினிக்கன் துறவற சபையில் சேர்ந்து குருவானார். 1221 ஆம் ஆண்டு அச்சபைத்தலைவர் இறந்துவிடவே, அச்சபையின் இரண்டாவது சபைத்தலைவர் பொறுப்பை புனித ஜோர்டன் ஏற்றார். இவர் தன் சபையை உலகெங்கும் பரவ அயராது உழைத்து நற்செய்தியை போதித்தார். தன் சபை குருக்கள் பலரை பாரிஸ் நகரில் இருந்த கல்லூரிகளில் படிக்கவைத்தார். இவர் பல வித்தியாசமான முறைகளில் தன் சபையை வளர்த்தெடுத்தார்.

இவர் தன் உள்மனதிலிருந்து மற்றவர்களை அன்புச் செய்தார். அனைவரும் இவரை எளிதில் நெருக்கக்கூடிய அளவிற்கு சாதாரண மனிதராகத் திகழ்ந்தார். இவர் தனது அழகிய மறையுரையினால் பல இளைஞர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரின் வாழ்வால் பலர் ஈர்க்கப்பட்டு இவரின் சபைக்கு வந்து சேர்ந்தனர். இவர் அச்சபையில் மிகச் சிறந்த பேராசிரியராக திகழ்ந்தார். இவர் ஏராளமான பயணங்களை மேற்கொண்டு தன் சபையைப் பரப்பினார். அவர் சிரியாவிற்கு பயணம் செய்யும்போதுதான் இறந்தார். இறந்தபிறகு இவரின் உடல் இஸ்ரயேல் நாட்டில் தொமினிக்கன் ஆலயம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது

செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உமது நற்செய்தியை இம்மண்ணில் பரப்பிட தன்னை முழுவதுமாக காணிக்கையாக்கி, அயராது உழைத்து தன் சபையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட புனித ஜோர்டன் எங்களுக்காக உம்மிடம் பரிந்து மன்றாட செபிக்கின்றோம். அவரின் ஆசீரால் அச்சபை குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் சிறப்பாக செயல்பட அருள்தாரும். அமைதியின்றி இருக்கும் சிரியா நாட்டில், புனித ஜோர்டனின் அருளால் அமைதி நிலவ வழிகாட்டியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

12 February 2020

புனிதர் அபொல்லோனியா (St. Apollonia)பெப்ரவரி 12

புனிதர் அபொல்லோனியா 
(St. Apollonia)
பெப்ரவரி 12
கன்னியர்/ மறை சாட்சி:
(Virgin & Martyr)

பிறப்பு: இரண்டாம் நூற்றாண்டு

இறப்பு: கி.பி. 249
அலெக்சாண்ட்ரியா, எகிப்து
(Alexandria, Egypt)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
காப்டிக் மரபுவழி திருச்சபை
(Coptic Orthodox Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Churches)

பாதுகாவல்:
பல் மருத்துவர்கள் (Dentists)
பல் சம்பந்தமான பிரச்சினைகள் (Tooth problems)
அச்டேர்போஸ், பெல்ஜியம் (Achterbos, Belgium)
அரிக்கியா, இத்தாலி (Ariccia, Italy)
குக்காரோ மோன்ஃபெர்ரடோ, இத்தாலி (Cuccaro Monferrato, Italy)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 12

புனிதர் அபொல்லோனியா, அலெக்சாண்ட்ரியா (Alexandria) நாட்டில், “ரோமானிய பேரரசின் பேரரசர்” (Emperor of the Roman Empire) “டேசியஸ்” (Gaius Messius Quintus Trajanus Decius) என்பவருடைய ஆட்சிகாலத்தில், கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகத்தின்போது, உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவ கன்னியர்களில் ஒருவர் ஆவார். புராணங்களின்படி, துன்புறுத்தலின்போது அவருடைய பற்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன. இதன்காரணமாக பல் மருத்துவம், பல் நோய்களால் துன்புறுவோர் மற்றும் இன்னபிற பல் பிரச்சினைகளால் துன்புறுவோருக்கு இவர் பாதுகாவலராவார்.

கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, “பேரரசன் பிலிப்” (Emperor Philip the Arab) ஆட்சியின் கடைசி ஆண்டில், ஒரு அலெக்சாண்ட்ரிய கவிஞர், அலெக்சாண்ட்ரியாவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகங்கள் உச்சத்தை எட்டும் என்றும் நாடே இரத்தக்களரியாகும் என்றும் தீர்க்கதரிசனம் சொன்னார். அதன்படியே கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தன. அதனை ஆட்சியாளர்களாலேயே அடக்க இயலாமல் போனது.

அலெக்சாண்ட்ரியாவின் ஆயர் "டயோனிஸிஸ்" (Dionysius, Bishop of Alexandria) அந்தியோக்கியாவின் ஆயர் "பாபியசுக்கு" (Fabius, Bishop of Antioch) எழுதிய கடிதமொன்றில் தமது மக்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் சூறையாடப்பட்டன என்பவற்றை விளக்கி எழுதியிருந்தார். பெண் திருத்தொண்டரான அபொல்லோனியாவை பிடித்து பெண்ணென்றும் பாராமல் அடித்து துன்புறுத்தினர். மீண்டும் மீண்டும் அடித்து அவரது பற்கள் முழுவதையும் உடைத்துப் பிடுங்கினர். அவரையும் இன்னும் பல கன்னியரையும் நகருக்கு வெளியே அமைத்திருந்த விறகுக் குவியலினருகே இழுத்துச் சென்றனர். விறகுக் குவியலுக்கு தீ மூட்டினர். அவர்கள் சொல்லும் தூஷண வார்த்தைகளை சொல்லச் சொல்லி வற்புறுத்தினர். கிறிஸ்துவுக்கு எதிராக வசை பேசவோ அல்லது அவர்களது தெய்வங்களை போற்றி பிரார்த்தனை செய்யவோ வற்புறுத்தினர். அல்லது உயிருடன் தீக்கிரையாக்குவதாக பயமுறுத்தினர். அபொல்லோனியாவின் வேண்டுதலுக்கிணங்க தமது பிடியிலிருந்து அவரை சிறிதே விடுவித்தனர். அபொல்லோனியா கண்ணிமைக்கும் நேரத்தில் கொளுந்து விட்டெரியும் தீக்குள் குதித்து உயிருடன் எரிந்து உயிர்விட்டார்.