புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 March 2020

தூய யோவான் கிளிமாக்கஸ் (மார்ச் 30). Saint John Climacus

இன்றைய புனிதர் : 
(30-03-2020) 

தூய யோவான் கிளிமாக்கஸ் (மார்ச் 30). Saint John Climacus
“உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைகுரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார். (1 கொரி 10 13)

வாழ்க்கை வரலாறு

யோவான் கிளிமாக்கஸ் பாலஸ்தினத்தில் பிறந்தவர். இவருடைய குழந்தைப் பருவம் குறித்த போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை, யோவான் கிளிமாக்கசுக்கு பதினாறு வயது ஆனபோது சீனாய் மலையில் இருந்த துறவற மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் ஜெப, தவ வாழ்வில் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டு இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

மடத்தில் இவர் துறவியாக வாழ்ந்த சமயத்தில் சாத்தான் இவரைப் பலவிதமாக சோதித்தது. அத்தகைய சமயங்களில் எல்லாம் இவர் இறைவனுடைய வல்லமையால் எல்லாவிதமான சோதனைகளையும் வெற்றிகொண்டார். யோவான் கிளிமாக்கஸ் எப்போதும் நாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருந்தார். அதனால் நிறையப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார். இவர் விவிலியத்தை நன்றாகக் கற்றுத்தெரிந்திருந்தார். அதனால் இவருடைய போதனையைக் கேட்பதற்கு துறவிகள், இறைமக்கள் என ஏராளமான மக்கள் அவருடைய இருப்பிடம் தேடி வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆண்டவருடைய நற்செதியை மிகச் சிறப்பான முறையில் எடுத்துரைத்து வந்தார். இவர் எழுதிய ‘Ladder Of Perfection’ என்ற புத்தகம் இன்றைக்கும் மக்களால் விரும்பிப் படிப்படக்கூடிய புத்தகமாக இருந்து வருகின்றது.

யோவான் கிளிமாக்கசுக்கு 74 வயது நடக்கும்போது அவரை ஆதீனத் தலைவராக ஏற்படுத்தினார்கள். இத்தனைக்கும் அவர் அந்தப் பொறுப்பை விரும்பே இல்லை. இருந்தாலும் அதனை இறைத்திருவுளமென ஏற்றுக்கொண்டு தன்னால் இயன்ற மட்டும் அப்பணியைச் சிறப்புடனே செய்து வந்தார். இவர் 649 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 30 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டியா பாடம்

தூய யோவான் கிளிமாக்கசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நாவடக்கம்

தூய யோவான் கிளிமாக்கசிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவருடைய நாவடக்கம்தான். அவர் நாவை அடக்கி ஆண்டார். அதனாலேயே அவர் நிறையப் பிரச்சனைகள் வராதவாறு பார்த்துக்கொண்டார். தூய யோவான் கிளிமாக்கசை நினைவுகூரும் நாம் அவரைப் போன்று நாவை அடக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் ரவீந்திரன் என்ற ஒரு வேலையில்லாப் பட்டதாரி இருந்தான். அவன். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றும், நாவடக்கமின்றி பதில் கூறியதால் எங்குமே வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தான். இது குறித்து அவன் தந்தை அவனுக்கு எத்தனையோ முறை அறிவுரை அளித்தும், தேர்வு நேரத்தில் அவனையும் அறியாமல் ஏதாவது ஏடாகுடமாக பதில் அளித்து அவமானப்பட்டு வெளியே வந்தான்.

இப்படியே நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் ரவீந்திரன் ஒருநாள் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தான். கேள்வி கேட்பவர் தாறுமாறாகக் கேட்டாலும், பொறுமையுடனும் பணிவுடனும் பதில் அளிக்கத் தீர்மானித்தான். சில நாட்களிலேயே அவனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது. அவன் பயந்தபடியே தேர்வாளர் இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்டார். “என்னப்பா! பட்டம் பெற்று ஓராண்டு ஆகியுமா வேலை கிடைக்கவில்லை?” என்றார். “ஆமாம் சார்!” என்று சொன்னான் ரவீந்திரன். “இதற்கு முன் வேலை செய்த அனுபவம் உண்டா?” என்றார் அந்தத் தேர்வாளர். “இல்லை! வேலையே இதுவரை கிடைக்காததால் அனுபவத்திற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்றான் அவன்.
“அனுபவம் இல்லாத உன்னை எப்படி வேலைக்குச் சேர்த்து கொள்ள முடியும்?” என்று தேர்வாளர் இழுத்ததும் அவன், “தயவு செய்து ஒரு வாய்ப்புக் கொடுங்கள்! என் திறமை, உழைப்பு ஆகியவற்றை நிரூபிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்!” என்றான் ரவீந்தரன். “சரிதான்! நீ அனுபவம் பெறவே ஆறு மாசம் ஆகும். அதுவரை நான் தண்டச்சம்பளம் கொடுக்க வேண்டுமா?” என்றார் தேர்வாளர். அதற்கு அவன், “முதல் ஆறு மாதம் சம்பளமின்றியே வேலை செய்யத் தயாராயுள்ளேன்” என்றான்.

ரவீந்திரனின் இந்த அடக்கமான அதே சமயம் தன்னம்பிக்கையுடன் கூடிய பதில்கள் தேர்வாளருக்குத் திருப்தி உண்டாக்கியது. இருந்தாலும் அவன் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பினார். “உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ சொல்வதை நம்பி உனக்கு எவ்வாறு வேலை கொடுக்க முடியும்?” என்று அவனைச் சீண்டினார். அதுவரை பணிவுடன் பதிலளித்த ரவீந்திரன் திடீரென பொறுமை இழந்தான். “உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது, திறமையுள்ள என்னால் வேலை செய்ய முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு அறையை விட்டு ரவீந்திரன் வெளியேறினான்.

அவன் வெளியே வந்தபின்தான் உணர்ந்தான். ஒரு நிமிடம் பொறுமை காக்காமல் நாவடக்கத்தை மறந்து பேசியபேச்சினால் நல்ல வேலை கிடைக்காமல் போய்விட்டதே” என்று. பலரும் இப்படித்தான் நாவை அடக்க முடியாமல் அழிவினைச் சந்திக்கின்றார்கள். ஆனால் தூய யோவான் கிளிமாக்காசோ நாவடக்கத்தோடு வாழ்ந்தார். அதனால் பலருடைய நன்மதிப்பைப் பெற்றார்.

ஆகவே, தூய யோவான் கிளிமாக்கசின் நினைவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணியை சிறப்புடன் செய்வோம். நாவை அடக்கி ஆளக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (30-03-2020)

Saint John Climacus

Well educated and came to adulthood in a intellectual environment. Monk on Mount Sinai at age 16. Hermit in various places in the Arabian Desert. Abbot at Mount Sinai at age 75. Just before his death he resigned his position to return to his solitary life. Ascetical writer whose works have for 15 centuries influenced those seeking the holy life.

Born :
between 505 and 579 in Syria

Died :
between 605 and 649 on Mount Sinai of natural causes

---JDH---Jesus the Divine Healer---

29 March 2020

கலாபிரியன் நகர் துறவி பெர்ட்ஹோல்டு Berthold von Kalabrien march 29

இன்றைய புனிதர்: 
(29-03-2020) 
கலாபிரியன் நகர் துறவி பெர்ட்ஹோல்டு Berthold von Kalabrien

பிறப்பு 1100, லிமோகெஸ் Limoges, பிரான்சு

இறப்பு1195, கார்மேல் மலை

இவர் கார்மேல் சபையைத் தொடங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். இவர் தன்னுடன் பல சகோதரர்களை இணைத்துக் கொண்டு, பல துறவற இல்லங்களை கட்டினார். இவர் பலமுறை திருக்காட்சிகளை பெற்று தீர்க்கதரிசிகளைப் போல வாழ்ந்தார். இவர் மிக அர்த்தமுள்ள வகையில் தனது துறவற வாழ்வை வாழ்ந்தார். எப்போதும் இறைவனுடன் ஒன்றித்து செபித்தார். தனது சபைத் தலைவருக்கு பலவிதங்களிலும் உடனிருந்து உதவினார். இவர் இறந்தபிறகு இவரின் சபை எருசலேமிலும் பரவியது. தனது சபை பல இன்னல்களை சந்தித்து அப்போதெல்லாம் இவர், இறைவனின் அருளால் மிகத் திறமையுடன் செயல்பட்டு தன் சபையை துன்பத்திலிருந்து மீட்டார்.

செபம்:
பரிவன்புமிக்க ஆண்டவரே! உமக்கு ஊழியம் புரிகின்ற எங்கள்மேல் மனமிரங்கி உம் அருள்கொடைகளை பொழிந்தருளும். நாங்கள் துறவி பெரட்ஹோல்டை போல நம்பிக்கை, எதிர்நோக்கு, இறையன்பினால் பற்றியெரிந்து உம் கட்டளைகளை கடைபிடித்து வாழ்வதில் கண்ணும் கருத்துமாய் நிலைத்திருக்க செய்தருளும். கார்மேல் சபை துறவிகளை நீர் ஆசீர்வதித்து அவர்களின் அற்புதமான செப வாழ்வினால் இவ்வுலகை பாவத்திலிருந்து மீட்டருளும். 

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

28 March 2020

தூய மூன்றாம் சிக்ஸ்துஸ் (மார்ச் 28

இன்றைய புனிதர் : 
(28-03-2020) 

தூய மூன்றாம் சிக்ஸ்துஸ் (மார்ச் 28)
“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவார்கள்” (மத் 5: 9)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூருகின்ற சிக்ஸ்துஸ் 300 ஆம் ஆண்டு, உரோமையில் பிறந்தார். இவர் தூய அகுஸ்தினாருக்கு நெருங்கிய நண்பர். இவர் துறவறத்தார், இறைமக்கள் என அனைவருடைய நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அதனால், திருத்தந்தை முதலாம் செலஸ்டினுடைய மறைவுக்குப் பின்னர் அனைவரும் இவரையே திருத்தந்தையாக உயர்த்தினார்கள்.

திருத்தந்தை சிக்ஸ்துஸ் இயல்பாகவே அமைதியான சுபாவம் உடையவர். ஆனால் திடகாத்திரமான மனதுடையவர். இவருடைய காலத்தில் இரண்டு தப்பறைக் கொள்கைகள் திருச்சபைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தன. ஒன்று நொஸ்தோரியனிசம், இன்னொரு பெலேஜியனிசம். நொஸ்தோரியனிசம் இயேசு இரண்டு ஆட்கள் என்று சொல்லிவந்தது. அதனால் அது மரியா இறைவனின் தாய் கிடையாது என்று சொல்லி வந்தது. பெலேஜியனிசமோ ஆதிப் பெற்றோர் செய்த பாவத்தின் வழியாக அவருடைய வழிமரபினராகிய நமக்கு ஜென்மப் பாவம் வருவதில்லை என்று சொல்லி வந்தது. இந்த இரண்டு தப்பறைக் கொள்கைகளையும் திருத்தந்தை அவர்கள் மிகவும் பொறுமையாகத்தான் எதிர்த்தார். அதனால் பலர் கேலி செய்தார்கள்; அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத ஆசாமி என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். அத்தகைய தருணங்களில் கூட இவர் பொறுமையாகவும் அமைதியாகவும்தான் பிரச்னையை எதிர்கொண்டார்.

இவருடைய பொறுமையான, அமைதியான நடைமுறைக்கு பலன் கிடைத்தது. 433 ஆம் ஆண்டு உரோமையில் கூட்டப்பட்ட சங்கத்தில் நொஸ்தோரியனிச தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்த, அலெக்ஸ்சாந்திரிய நகர சிரில் அதற்கு மன்னிப்புக் கேட்டு, திருச்சபையோடு இணைந்தார். அது மட்டுமல்லாமல் அலெக்ஸ்சாந்திரிய நகர் சிரிலுக்கும் அந்தியோக்கு நகர ஜானுக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. இதனையும் திருத்தந்தை அவர்கள் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டுவந்தார். இதனால் அனைவரும் திருத்தந்தை சிக்ஸ்துஸ் அவர்களை வெகுவாகப் பாராட்டினார்கள். தப்பறைக் கொள்கைகளுக்கு முடிவு கட்டிய பின், திருத்தந்தை லிபோரியஸ் ஆலயத்தையும் லாத்தரன் பேராலயத்தை புதுபிக்கத் தொடங்கினார். இதற்கு ஏராளமான பொருளுதவிகளை மன்னர் மூன்றாம் வாலண்டைன் செய்தார். இப்படி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இறைப்பணியை மிகச் செவ்வனே செய்த திருத்தந்தை சிக்ஸ்துஸ் 440 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் நாள், இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மூன்றாம் சிக்ஸ்துசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அமைதியை ஏற்படுத்துபவர்களாவோம்

தூய சிக்ஸ்துசின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கும்போது அவரிடமிருந்த அமைதியை, சமரசத்தை ஏற்படுத்துகின்ற பண்புதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. பலரால் அது முடியவே முடியாத காரியமாகும். ஏனென்றால், ஆமை புகுத்த வீடு உருப்படாததுபோல், சிலர் புகுந்து வீடும், நட்பும் உருப்படாமலே போய்விடும். இத்தகைய சூழ்நிலையில்தான் சிக்ஸ்துஸ் நம்முடைய கவனத்துக்கு உள்ளாகின்றார். தூய சிக்ஸ்துசைப் போன்று நாம் குழப்பமான, அமைதியற்ற சூழ்நிலையில் அமைதியை ஏற்படுத்த முயல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் என ஒரு நடுத்தரக் குடும்பம் வாழ்ந்து வந்தது. கணவனும், மனைவியும் அமைதியானவர்கள். ஆனால் அவர்களின் இரு குழந்தைகளும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். நாட்கள் செல்லச் செல்ல, அவர்கள் முரட்டு குணம் உள்ளவர்களாக மாறி வந்தார்கள். பெற்றோர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர்களது குணத்தை மாற்ற முடியவில்லை.

அந்தச் சமயத்தில் அவர்கள் ஊருக்கு ஒரு மகான் வந்தார். ஒருநாள் இந்தத் தந்தை அந்த மகானைப் போய்ப் பார்த்தார். தன் குழந்தைகளைப் பற்றி சொன்னார். பொறுமையாகக் கேட்ட மகான், “கடுகு கம்பு” என்ற ஒரு மந்திரத்தை அவருக்குக் கற்றுத் தந்தார். அவரும் நல்லது நடக்கும் என்ற ஒரு சிந்தனையோடு வீடு திரும்பினார். குழந்தைகள் சண்டைபோட ஆரம்பித்தவுடன் அவர் அந்த மந்திரத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். எப்படி என்றால், பிள்ளைகளுக்குள் சண்டை தொடங்கியவுடன், அவர் சிறிதளவு கடுகையும், சிறிதளவு கம்புதானியத்தையும் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தன் பிள்ளைகளைக் கூப்பிட்டார். அவர்கள் இருவரிடமும் கடுகு கம்பு இரண்டையும் கலவையைக் கொடுத்து, “குழந்தைகளே!, இதில் உள்ள கடுகையும் கம்பையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு வாருங்கள்! உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்” என்று அன்பாக சொன்னார்.

அவ்வளவுதான், பிள்ளைகள், சண்டை போடுவதை மறந்து அப்பா சொன்ன வேலையைச் செய்ய ஆரம்பித்தனர். அடிக்கடி இப்படிச் செய்ததில் அவர்களுக்கு அதுவே பிடித்தமான விளையாட்டானது. பின்னர் சண்டைபோடும் குணமே மாறி ஒருவர் ஒருவர் மீது அன்புகாட்டத் தொடங்கி விட்டார்கள். சண்டை போட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் அமைதியை ஏற்படுத்த அவர்களுடைய தந்தை மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. நாமும் நாம் வாழக்கூடிய சூழ்நிலையில் அமைதியை ஏற்படுத்த முயல்வதே சிறப்பான ஒரு காரியமாகும்.

ஆகவே, தூய சிக்ஸ்துசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று அமைதியை ஏற்படுத்தும் மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

துறவி இங்பெர்ட் நாப் Ingbert Naab march 28

இன்றைய புனிதர்
2020-03-28
துறவி இங்பெர்ட் நாப் Ingbert Naab
பிறப்பு
5 நவம்பர் 1885,
டான் Dahn, ஜெர்மனி
இறப்பு
28 மார்ச் 1935,
ஸ்ட்ராஸ்பூர்க் Straßburg, பிரான்சு

கார்ல் என்பது இவரின் திருமுழுக்கு பெயர். இவர் நேஷனல் சோசலிசத்தை (Nationalsozialismus) எதிர்த்து போரிட்டார். 1932 ஆம் ஆண்டு ஆடோல்ஃப் ஹிட்லரை எதிர்த்து கடிதம் எழுதினார். இந்நிகழ்ச்சி ஜெர்மனி முழுவதும் பரவியது. மேலும் ஹிட்லருக்கு எதிராக செயல்பட பல கடிதங்களை எழுதி கிறிஸ்துவ மக்களை ஒன்று சேர்த்து போராடினார். ஹிட்லரையும் அவரின் ஆட்சியில் நடந்த அநியாயங்களையும் எதிர்த்து போரிட்டார். இதனால் 1 ஜூலை 1934 ஆம் ஆண்டு ஹிட்லரின் கூட்டாளிகளால் அடிமையாக பிடித்துக் கொண்டு செல்லப்பட்டார். இவர் இறந்த பிறகு இவரின் உடல் கப்புசின் சபை குருக்களால் எடுத்துச் செல்லப்பட்டு கப்புச்சின் சபைக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து பவேரியாவிற்கு கொண்டு வரப்பட்டு ஐஷ்டேட் என்ற ஊரில் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.


செபம்:
எங்கள் பொருட்டு உம் தந்தையிடம் உம்மையே கையளித்த எம் இறைவா! சீரழிந்த இவ்வுலகத்தை உம் மகனின் பாடுகளினாலும் இறப்பினாலும் சீர்ப்படுத்தினீர். அவர் எங்களுக்காகப் பெற்றுத்தந்த பாவ விடுதலையில் மகிழ்ந்திருக்க அருளைத் தந்தருளும். எம்மைச் சுற்றியிலும் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டும் தைரியத்தை தாரும். தீமைகளை அகற்றி நன்மை புரிந்திடச் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

அரசர் குண்ட்ரம்
பிறப்பு : 525 பிரான்சு
இறப்பு : 28 மார்ச் 592, சலோன் சுர் சவோன்னே Chalon-Sur-Saone,, பிரான்சு


துறவி வில்ஹெல்ம் ஐசலின் Wilhelm Eiselin
பிறப்பு: 1564, மிண்டல்ஹைம் Mindelheim, பவேரியா
இறப்பு: 28 மார்ச் 1588 ரோட் Rot, பாடன்-வூர்டம்பூர்க் Baden Würtemberg,

27 March 2020

2020-03-27சபைநிறுவுநர் மேரி யூஜின் கிரியாலோ Marie Eugene Grialou

இன்றைய புனிதர்
2020-03-27
சபைநிறுவுநர் மேரி யூஜின் கிரியாலோ Marie Eugene Grialou
பிறப்பு
2 டிசம்பர் 1894,
லாகுவா La Gua, பிரான்சு
இறப்பு
27 மார்ச் 1967,
பிரான்சு

இவருக்கு ஹென்றி Henry என்று இவரின் பெற்றோர் பெயரிட்டனர். இவர் முதலில் நோட்டர்டாமே டீவீ Notre Dame de vie என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தனர். நாளடைவில் அந்நிறுவனத்தை துறவறச் சபையாக மாற்றினார். 1962 ஆம் ஆண்டு துறவற சபை என்ற திருத்தந்தையின் அங்கீகாரத்தையும் அச்சபை பெற்றது. இச்சபையான கார்மேல் சபை போலவே செயல்பட்டது, இச்சபையினர் குறிப்பிட்ட துறவற உடையணியாமல் சாதாரணமான உடையையே அணிந்தனர். இவர்கள் துறவிகளைப் போலவே தங்களின் வாழ்வை வாழ்ந்தனர். ஆனால் சமுதாயத்தோடு இணைந்து பணியாற்றினார். 1973 ஆம் ஆண்டிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் இச்சபைப் பரவியது.


செபம்:
பொறுமையுள்ளவரும், ஊக்கமளிப்பவருமான எம் தந்தையே! உலகோடு இணைந்து பணிபுரியும் போது எங்கள் மனதை உலக நாட்டங்களில் ஈடுபடாமல் செய்தருளும். எச்சூழலிலும் நெறி தவறாமல் வாழ வழிகாட்டியருளும். உமக்குகந்தவற்றையே நாட நல்மனதை தாரும். கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றி நாங்கள் ஒருவரோடு ஒருவர் ஒருமனப்பட்டு வாழ வழிகாட்டியருளும். மற்றவர்களின் நலனின் அக்கறைக் கொண்டு வாழ தாராள மனம் தந்தருளுமாறு தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மறைசாட்சி டிரியண்ட் நகர் ஆயர் அடால்பிரெட் Adalpret von Trient
பிறப்பு : 12 ஆம் நூற்றாண்டு, இத்தாலி
இறப்பு : 1180 ரோவெரேடோ Rovereto, இத்தாலி


கொன்ஸ்டாண்டின்நோபிள் துறவி ஈசாக் Isaak von Konstantinopel
பிறப்பு : 4 ஆம் நூற்றாண்டு, சிரியா
இறப்பு : 396, கொன்ஸ்டாண்டின்நோபிள், இன்றைய இஸ்தான்புல், துருக்கி

எகிப்து நாட்டின் யோவான் (மார்ச் 27)

இன்றைய புனிதர் : 
(27-03-2020) 

எகிப்து நாட்டின் யோவான் (மார்ச் 27)
“உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா?” (1 கொரி 6: 7)

வாழ்க்கை வரலாறு

யோவான், எகிப்து நாட்டில் 300 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவர் தன்னுடைய வாழ்வின் முதல் இருபத்து ஆண்டுகளை தனது தந்தையோடு இருந்து, அவருக்கு தச்சு வேலையில் ஒத்தாசை புரிவதில் செலவழித்தார். இந்தக் காலக்கட்டத்தில் இவர் இறைவனுடைய அழைப்பை உணர்ந்தார். எனவே எல்லாவற்றையும் துறந்து, ஒரு காட்டிற்குச் சென்று, அங்கிருந்த ஒரு துறவியிடத்தில் சீடராகச் சேர்ந்து பயிற்சிகள் பெற்று வந்தார்.

அந்தத் துறவியோ யோவானிடம் பெரிய பெரிய பாறைகளை ஓரிடத்திலிருந்து உருட்டி, இன்னொரு இடத்திற்குக் கொண்டு சேர்த்தல், காய்ந்த சருகுகளை பொருக்கி ஓரிடத்தில் குவித்தல் போன்ற பல கஷ்டமான வேலைகளைக் கொடுத்து அவரை அவஸ்தைக்கு உள்ளாக்கினார். அந்த வேலைகளை எல்லாம் யோவான் மிகப் பொறுமையாகச் செய்து வந்தார். ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் அவரோடு இருந்து பல்வேறு விதமான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் யோவான் அவரிடமிருந்து விடைபெற்று, ஓர் மலை உச்சிக்குச் சென்று, அங்கு கடுந்தவம் செய்துவந்தார்.

யோவான் மலை உச்சிக்குச் சென்ற பின்னர், யாரையும் பார்க்காமல் கடுந்தவம் செய்து வந்தார். அவர் மலை உச்சியில் இருந்து தவம் செய்துகொண்டிருக்கின்றார் என்று அறிந்து, அவரைப் பார்ப்பதற்கு நிறையப் பேர் போனார்கள். ஆனால், அவர் யாரையும் நேராகப் பார்க்காமல், தனது அறையின் ஜன்னல் வழியாகப் பேசி அனுப்பி வைத்தார். ஒரு சமயம் பார்வையற்ற பெண்மணி ஒருத்தி, தனக்குப் பார்வை கிடைக்கவேண்டும் என்று யோவானிடத்தில் வேண்டினார். யோவானோ அவருக்கு அற்புதமான முறையில் பார்வை கொடுத்து அவரைக் குணப்படுத்தினார். இப்படி பல்வேறு மனிதர்கள் அவரால் நலம் பெற்றார்கள்.

யோவானுக்கு பின்னர் நடப்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளக் கூடிய வல்லமையை இறைவன் கொடுத்திருந்தார். அதனைக் கொண்டு, அவர் எதிர்காலத்தில் நடக்க இருந்த பல ஆபத்துகளை எடுத்துச் சொல்லி, மக்களை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சொல்லி வந்தார். அதைப் போன்று மன்னர் முதலாம் தியோடசியஸ் போரில் வெற்றி பெறுவார் என்று சொன்னார். அவர் சொன்னது போன்றே மன்னர் போரில் வெற்றி பெற்றார்.

நாட்கள் ஆக, ஆக, யோவானுக்கு உடல் நலம் குன்றியது. அதனால் அவர் யாரையும் பார்க்கவிரும்பாமல், அறையில் தன்னை அடைத்துக்கொண்டு இறைவனிடத்தில் எப்போதும் ஜெபித்து வந்தார். 390 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய சாவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்த யோவான் முழந்தாள் படியிட்டு இறைவனிடத்தில் ஜெபிக்கத் தொடங்கினார். அவர் ஜெபித்துக்கொண்டிருந்த நிலையிலே அவருடைய உயிர் அவருடைய உடலை விட்டுப் பிரிந்தது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து, மக்கள் அவரை நல்லடக்கம் செய்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. பொறுமையோடு இருத்தல்

தூய யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவரிடமிருந்த பொறுமைதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவருக்குத் தலைவராக இருந்த துறவி அவருக்குக் கடினமான வேலைகளைக் கொடுத்த போதும் அதனைப் பொறுமையோடு செய்து வந்தார். யோவானை நினைவு கூரும் நாம், அவரைப் போன்று பொறுமையோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் இருந்த துறவியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவன் அவரிடம் தனக்கு ஞான உபதேசம் செய்யும்படி வேண்டினான். அந்தத் துறவியோ அவனை வேறொரு துறவியிடம் அனுப்பி வைத்தார். இளைஞனும் அவர் சொன்ன துறவியிடத்தில் சென்றான். அவரோ அவனை இன்னொரு துறவிடத்தில் அனுப்பி வைத்தார். இளைஞனுக்கு ஒருமாதிரிப் போய்விட்டது. இருந்தாலும் அவர் சொன்னபடி இன்னொரு துறவியிடத்தில் சென்றான். அவரோ அவனை மற்றொரு துறவியிடத்தில் அனுப்பி வைத்தார். இப்படியே அவன் 15 துறவிகளைப் பார்த்துவிட்டு கடைசியில் பொறுமை இழந்து போனான்.

எனவே அவன் முதலில் சந்தித்த துறவியிடத்தில் சென்று, தனக்கு யார்தான் ஞான உபதேசம் செய்வார் என்று முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டான். அதற்கு அந்தத் துறவி, “ஒருவனுக்கு ஞானம் கிடைக்கவேண்டும் என்றால், முதலில் பொறுமை தேவை. பலர் பலவிதமாகப் பேசுவை பொறுமையாகக் கேள். இறுதியில் உனக்கு எது சரியானது என்பது தெரிந்து விடும். அதுவே ஞானம். நானும் அப்படித்தான் ஞானத்தை அடைந்தேன்” என்றார்.

ஆமாம், நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பொறுமையானது தேவையான ஒன்றாக இருக்கின்றது. யோவானும் அப்படித்தான் பொறுமையாக இருந்து இறைஞானத்தை அடைந்தார்.

ஆகவே, தூய யோவானை நினைவுகூரும் நாம் அவரைப் போன்று பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்
Saint of the Day : (27-03-2020)

Saint John of Egypt 

Carpenter. Hermit on a mountain near Lycopolis from ages 25 to 65, living most of his life in a small, walled-up cell. Devoted himself to prayer and meditation five days a week, spiritual direction of male students the other two days; there were so many, he had to build a hospice for them. His reputation for wisdom and holiness caused him to be chosen as advisor to Emperor Theodosius. Had the gifts of prophecy, healing, and knowledge of the hidden sins of his visitors. Known and admired by Saint Jerome, Saint Augustine of Hippo, Saint Cassia, and Saint Palladius.

Born :
c.305 at Assiut, Egypt

Died :
394 of natural causes

---JDH---Jesus the Divine Healer---

26 March 2020

தூய லட்ஜர் (மார்ச் 26)

இன்றைய புனிதர் : 
(26-03-2020) 
தூய லட்ஜர் (மார்ச் 26)

“குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பில் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்” (லூக் 1: 76-77)

வாழ்க்கை வரலாறு

லட்ஜர், 743 ஆம் ஆண்டு, ஹாலந்தில் இருந்த ஓர் உயர்குடியில் பிறந்தார். இவருடைய தந்தை எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்டவர். லட்ஜருக்கு சிறுவயதிலே தூய போனிபசோடும் தூய கிரோகோரியாரோடும் நல்ல நட்பு இருந்தது. இதனால் அவர் பின்னவரிடம் சேர்ந்து கல்வி கற்றார். கிரிகோரியார் கற்றுக்கொடுத்த பாடங்களை மிக எளிதாகக் கற்றுக்கொண்ட லட்ஜர், அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர் ஆனார். ஒருசமயம் கிரகோரியார் லட்ஜரிடம், “பின்லாந்து நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கப் போகிறாயா? என்று கேட்டதும், அவர் மறுப்பேதும் சொல்லாமல் நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டார்.

லட்ஜர் பின்லாந்து நாட்டில் நற்செய்தி அறிவிக்கச் சென்ற சமயத்தில் அவருக்கு அங்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர் அந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி, துணிவுடன் நற்செய்தி அறிவித்து வந்தார். இந்த நேரத்தில்தான் பின்லாந்தின் மீது சாக்சனி என்ற பிரிவினர் படையெடுத்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களையெல்லாம் நாடுகடத்தினார். லட்ஜரை அவர்கள் பார்த்துபோது அவரிடம், “ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு, இல்லையென்றால் உன்னைக் கொன்றுபோட்டுவிடுவோம்” என்று மிரட்டினார்கள். இதனால் அவர் பின்லாந்திலிருந்து உரோமைக்குச் சென்று, அங்கிருத்த திருத்தந்தையிடம் தன்னுடைய நிலையை அவரிடத்தில் எடுத்துசொல்ல, திருத்தந்தை அவரிடம், “கொஞ்ச காலத்திற்கு காசினோ மலைக்குச் சென்று, அங்கு தங்கியிரு” என்றார். லட்ஜரும் திருத்தந்தை சொன்னதற்கிணங்க காசினோ மலைக்குச் சென்று அங்கு ஜெப தவத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில் பின்லாந்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சாக்சனியர்மீது சால்மோன் அரசர் படையெடுத்து வந்தார். அவர் சாக்சனியர்களைத் துவம்சம் செய்து பின்லாந்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். விஷயம் அறிந்த லட்ஜர் மீண்டுமாக பின்லாந்திற்கு வந்து தன்னுடைய நற்செய்திப் பணியைத் தொடங்கினார். லட்ஜர் செய்து வந்த பணிகளைப் பார்த்து வியந்த சால்மோன் அரசர் அவரிடத்தில் ஆலயம் கட்டுகின்ற பணிகளையும் இன்ன பிற பணிகளையும் செய்யக் கொடுத்தார். அவரும் அப்பணிகளைச் செவ்வனே செய்து வந்தார்.

லட்ஜர் பின்னர் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய வல்லமை பெற்றிருந்தார். இதனால் நாட்டு மக்களை பல்வேறு அழிவிலிருந்து காப்பாற்றினார். இப்படி இறைப்பணியை மிகத் துணிச்சலோடும் வல்லமையோடு செய்து வந்த லட்ஜர், 809 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 26ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லட்ஜரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குப் பணிசெய்தல்

தூய லட்ஜரின் வாழ்க்கை வரலாற்றை நாம் படித்துப் பார்க்கும்போது, அவர் அஞ்சா நெஞ்சத்தோடும் நேர்மையான உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணி செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. எதிர்ப்பு வருகின்றதே, உயிருக்கு ஆபத்து வருகின்றதே என்று நினைத்து லட்ஜர் தான் செய்துவந்த பணியை விட்டுவிடவில்லை, மாறாக, துணிவோடும் அதே நேரத்தில் நேர்மையோடும் ஆண்டவருக்குப் பணிசெய்து வந்தார்.

லட்ஜரின் நேர்மைக்கும் அஞ்சா நெஞ்சத்திற்கும் சான்றாக அவருடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.

லட்ஜர் ஆற்றி வந்த பணிகளைப் பார்த்துவிட்டு, ஆலயம் கட்டுகின்ற பொறுப்பை சால்மோன் அரசன் அவரிடம் ஒப்படைத்தார். லட்ஜரும் அந்தப் பணியினைச் செவ்வனே செய்துவந்தார். இதற்கிடையில் அவருடைய வளர்ச்சி பிடிக்காத ஒருசிலர் அரசரிடத்தில் சென்று, “லட்ஜர் பணத்தை வீணடிக்கின்றார், தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றார்” என்று போட்டுக் கொடுத்தார்கள். உடனே அரசன் தன்னுடைய பணியாளர்களைக் கூப்பிட்டு, லட்ஜரை அழைத்து வரச் சொன்னான். பணியாளர்கள் வந்த நேரம் லட்ஜர் தியானத்தில் இருந்தார். அதனால் அவர் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. மூன்று முறை அரசன் தன்னுடைய பணியாளர்களை அனுப்பி, லட்ஜரைக் கூப்பிட்டு வரச் சொன்னபோதும் இதே நிகழ்ந்தது.

இதனால் சினம்கொண்ட அரசன், லட்ஜர் தன்னை அவமதித்துவிட்டார் என்று அவரைக் கொல்வதற்காக லட்ஜர் இருக்கும் இடத்திற்குச் சென்றார். “லட்ஜரே என்னை அவமத்தித்துவிட்டாய், அதனால் உன்னைக் கொல்லப் போகிறேன்” என்று அரசன் தன்னுடைய வாளை ஓங்கினார். அப்போது லட்ஜர் அவரைப் பார்த்து, “அரசே! உம்மை விட இந்த உலகைப் படைத்த இறைவன் பெரியவர் அல்லவா... உம்முடைய பணியாளர்கள் என்னைக் கூப்பிட வந்த சமயத்தில் நான் இறைவனிடத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் என்னால் உடனே வர முடியவில்லை” என்றார். லட்ஜர் இவ்வளவு அறிவுத் தெளிவோடு பேசியதைப் பார்த்த மன்னர், அவர் பணத்தைக் கையாடல் செய்திருக்கமாட்டார். அவர்மீது இருக்கும் பொறாமையால்தான் ஒருசிலர் இப்படி குற்றம் சுமத்துகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு அந்தக் கயவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்தார்.

லட்ஜர் எப்போதும் நேர்மையோடும் அதே நேரத்தில் ஆண்டவரைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாது வாழ்ந்தனால்தான் ஒருதீங்கும் அவரை அணுகவில்லை.

ஆகவே, தூய லட்ஜரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடும் நேர்மையோடும் ஆண்டவருக்கு ஊழியம் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.Saint of the Day : (26-03-2020)

Saint Ludger of Utrecht

Son of Thiadgrim and Liafburg, wealthy Frisian nobles. Brother of Saint Gerburgis and Saint Hildegrin. Saw Saint Boniface preach in 753, and was greatly moved. Studied at Utrecht, Netherlands under Saint Gregory of Utrecht. Studied three and a half years in England under Blessed Alcuin. Deacon.

Returned to the Netherlands in 773 as a missionary. Sent to Deventer in 775 to restore a chapel destroyed by pagan Saxons, and to recover the relics of Saint Lebwin, who had built the chapel. Taught school at Utrecht. Destroyed pagan idols and places of worship in the areas west of Lauwers Zee after they were Christianized. Ordained in 777 at Cologne, Germany. Missionary to Friesland, mainly around Ostergau and Dokkum, from 777 to 784, returning each fall to Utrecht to teach in the cathedral school. Left the area in 784 when pagan Saxons invaded and expelled all priests.

Pilgrim to Rome, Italy in 785. Met with Pope Adrian I, and the two exchanged counsel. Lived as a Benedictine monk at Monte Cassino, Italy from 785 to 787, but did not take vows. At the request of Charlemagne, he returned to Friesland as a missionary. It was a successful expedition, and he built a monastery in Werden, Germany to serve as a base. Reported to have cured the blindness of, and thus caused the conversion of the blind pagan bard Berulef.

Refused the bishopric of Trier, Germany in 793. Missionary to the Saxons. Built a monastery at Mimigernaford as the center of this missionary work, and served as its abbot. The word monasterium led to the current name of the city that grew up around the house - Münster. Built several small chapels throughout the region. First bishop of Münster in 804, being ordained at Westphalia.

Ludger's health failed in later years, but he never reduced his work load. No matter how busy or dangerous his outside life, he never neglected his time of prayer and meditation, it being a source of the strength to do everything else. The man's life can be summed up in two facts -

. he was reprimanded and denounced only once during his bishopric - for spending more on charity than on church decoration
• on the day of his death, he celebrated Mass - twice.

Born :
c.743 at Zuilen, Friesland (modern Netherlands)

Died :
• in the evening of Passion Sunday, 26 March 809 of natural causes
• buried at Werden, Germany
• relics also at Münster and Billerbeck, Germany

Patronage :
• 2 dioceses
• 13 cities

---JDH---Jesus the Divine Healer---

25 March 2020

வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன விழா (மார்ச் 25)


வரலாற்றுப் பின்புலம்
இன்று நாம் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். தொடக்கத்தில் இவ்விழா ‘இயேசுவின் மனித அவதாரப் பெருவிழா’ என்று கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர்தான் இன்று நாம் வழங்கும் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வு கிடையாது. அது மனித வரலாற்றையே மாற்றிப்போட்ட நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மரியாள் சொன்ன ஆம் என்ற ஒற்றைச் சொல்லால்தான் ‘வார்த்தை வடிவான கடவுளால் நம்மிடையே குடிகொள்ள முடிந்தது’ (யோவா 1:14); மீட்பு இந்த உலகிற்கு வந்தது. ஆகையால் இந்த நிகழ்வின் முக்கியத்துவதை முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கபிரியேல் அதிதூதர் மரியாளிடம், “அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!” என்று சொன்னவுடன், இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் மரியாள் கலங்குகிறார். இதைக் குறித்து தூய பெர்னார்டின் இவ்வாறு கூறுவார், “மரியாளிடம் வானதூதர் ‘உலகத்திலேயே நீதான் மிகப்பெரிய பாவி’ என்று சொல்லியிருந்தால்கூட அவள் ஏற்றிருப்பாள். ஆனால் அவரோ அருள்மிகப்பெற்றவரே என்று சொன்னதால்தான் மரியாள் கலங்குகிறார். காரணம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டு கலங்கத்தான் செய்யும்”.

தொடர்ந்து வானதூதர் மரியாவிடம், “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராய் இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்று சொன்னபோது, மரியாள், “இது எப்படி நிகழும்?”, நான் கன்னி ஆயிற்றே!” என்கிறார். மரியாள் இப்படிக் கேட்பதில் அர்த்தமில்லாமல் இல்லை. ஏனென்றால் விவிலியத்தில் வயது முதிர்ந்தோர் கருவுற்று குழந்தையைப் பெற்ற நிகழ்வு இருக்கிறது. ஆனால் கன்னி ஒருத்தி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வு இல்லை. அதனால் மரியாள் அப்படிக் கேட்கிறார். மரியாளுடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட வானதூதர், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” என்று சொன்னபிறகு மரியாள், “நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படி எனக்கு நிகழட்டும்” என்கிறார். உடனே தூய ஆவியார் அவர்மீது இறங்கி வர இயேசுவை கருத்தரிக்கிறார்.

ஆகவே, மரியாள் ‘ஆம்’ என்று சொன்ன அந்த ஒரு சொல்லில் மீட்பு இந்த மண்ணுலகிற்கு வந்துவிட்டது என நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆதிபெற்றோரான ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மறுத்ததால் பாவம் இந்த மண்ணுலகில் நுழைந்தது. அந்தப் பாவத்தை மரியாள் தான் சொன்ன ஆம் என்ற சொல்லினால் விரட்டியடிக்கிறார். வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு கி.பி. 431 ஆம் ஆண்டிற்குப் பிறகு இன்றுவரை விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Feast : (25-03-2020)
Annunciation of the Lord

This feast is the celebration of the announcement to Mary by the arch-angel Gabriel that she would bear the son of God and holy. This is found only in the gospel of Luke (1:28-38). Arch-angel serves as the messenger of God. Gabriel appears in Old Testament (Daniel 8:15-26 and 9:21-27) and in New Testament (Luke 1:11-20 and 1-26-38). As per his own declaration to Zachariah, father of John the Baptist, He is standing before the God always. At that time Mary was betrothed to Joseph and as per Jewish law this betrothal was binding as a marriage and valid for one year. For every child birth three partners are involved, the father, mother and the God's grace or spirit of God. But in the birth of Jesus there was no involvement of human father. Jesus was created by God through Holy Spirit in Virgin Mary. This same message is also seen in the Holy Quran also (Part 16-Chapter 19). When the arch-angel delivered the message of the virgin divine conception of Jesus in Virgin Mary, she asked How can this be, since I do not know a man as per the Gospel of Luke. Virgin Mary raised the same doubt as per the verses of Holy Quran also (Part -16- Chapter-19-Verse-20).

---JDH---Jesus the Divine Healer---

சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini march 25

இன்றைய புனிதர்
2020-03-25
சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini
பிறப்பு
ஜனவரி 1672,
உரோம்
இறப்பு
25 மார்ச் 1732,
மோண்டேபியாஸ்கோனே Montefiascone, இத்தாலி
புனிதர்பட்டம்: 22 ஜூன் 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் தனது 20 ஆம் வயதில் கர்தினால் மார்க் ஆண்டோனியோ பார்பாரிகோ Marc Antonio Barbarigo என்பவரின் உதவியுடன் இவரின் பெயரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். இச்சபையினர் கைவிடப்பட்ட குழந்தைகளையும் விதவைகளையும் ஒன்று சேர்த்து, அவர்களை கண்காணித்து பராமரித்து வருவதை தங்களின் நோக்கமாக கொண்டனர். இவர் 1704 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் உரோமையிலும் தன் சபையை நிறுவினார். மேலும் இச்சபையினர் இளம் தம்பதியினர் எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டுமென்றும் என்பதைப் பற்றியும் எடுத்துக்கூறி நல்ல உறவுடன் வாழ வழிகாட்டினர். இவர் தொடங்கிய சபையானது 1910 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தையின் ஒப்புதல் பெற்ற சபையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டது.


செபம்:
தாழ்நிலையில் இருப்போரை பரிவன்புடன் நோக்கும் எம் இறைவா! நீர் ஒருவரே அருஞ்செயல்களை செய்கின்றீர். உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றீர். தேவையிலிருப்போருக்கு பல துறவற சபைகளின் மூலம் உதவுகின்றீர். புனித லூசியா பிலிப்பீனியின் வழியாக நீர் ஏற்படுத்திய சபையை, அதன் நோக்கத்துடன் என்றும் செயல்பட உதவி செய்தருளும். இச்சபையினரின் வழியாக துயர் நிறைந்தோர்க்கு ஆறுதலாகவும், உள்ளம் உடைந்தோர்க்கு உறுதுணையாகவும், அழுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவராகவும் இருந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

சபைநிறுவுநர் மர்கரீத்தா ரோசா பிளெஸ் Margareta Rosa Flesch
பிறப்பு : 24 பிப்ரவரி 1826 ஷோய்ன்ஸ்டட் Schönstatt, ஜெர்மனி
இறப்பு : 25 மார்ச் 1906 வால்ட்பிரைட்பாக் Waldbreitbach, ஜெர்மனி


பியோமன் துறவி புரோகோபியஸ் Prokopius von Böhmen
பிறப்பு : 990 கோடவுன் Chotaun, செக் குடியரசு
இறப்பு : 25 மார்ச் 1053, சாவாச்சா Savaza, செக் குடியரசு

24 March 2020

ஸ்வீடன் நாட்டுத் துறவி கத்தரீனா march 24

இன்றைய புனிதர்
2020-03-24
ஸ்வீடன் நாட்டுத் துறவி கத்தரீனா Katharina von Schweden
பிறப்பு
1331
ஸ்வீடன்
இறப்பு
மார்ச் 1381,
வாட்ஸ்டேனா Vadstena, ஸ்வீடன்
பாதுகாவல் : குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள்

இவர் பிரிகிட்டா Brigitta, உல்ஃப் Ulf என்பவரின் மகளாகப் பிறந்தார். தனது 14 வயதிலேயே எக்கார்ட் Eggart என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் திருமணம் ஆனபிறகும் தாம்பத்திய உறவு இல்லாமல் வாழ வேண்டுமென்று தங்களுக்குள் முடிவெடுத்தனர். இருவரும் சேர்ந்து கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக் கொண்டனர். அப்போது மிரிகிட்டாவின் தாய் 1349 ஆம் ஆண்டு உரோம் சென்று அங்கு ஓர் சபையை நிறுவினார். கத்தரீனா 20 வயதிலிருக்கும் தன் கணவர் இறந்துவிட்டார். இதனால் கத்தரீனாவும் உரோம் சென்று தன் தாய்க்கு உதவினார். இவர் தான் வாழும் வரை தன் தாயுடன் வாழ்வதாக உறுதி செய்தார். கத்தரீனாவும், தாயும் சேர்ந்து 1372 மற்றும் 1373 ம் ஆண்டுகளில் புனித நாட்டிற்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது 1373 ஜூலை 23 ல் தாய் இறந்துவிட்டார். கத்தரீனா தன் தாயின் உடலை ஸ்வீடனில் உள்ள வாட்ஸ்டேனாவிற்கு Vadstena கொண்டு சென்று அடக்கம் செய்தார். அதன்பிறகு கத்தரீனா தனது 30 ஆம் வயதில் துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அத்துறவற மடத்தையே தன் வீடாகக் கொண்டார். நாளடைவில் இவரே அம்மடத்தின் தலைவியாகவும் பொறுப்பேற்றார்.


செபம்:
வார்த்தை மனுவுருவானவரே! எம்மை உமது இறைவார்த்தைகளால் நிரப்பியருளும். இறைவார்த்தைகளை எம் உள்ளத்தில் உள்வாங்கி அவற்றின் படி நடக்கச் செய்தருளும். நாங்கள் கொடுத்துள்ள கற்பு என்னும் வார்த்தைப்பாட்டில் இறுதிவரை பிரமாணிக்கமாய் வாழச் செய்தருளும், இதன் வழியாக உமது மேலான வியத்தகு மறைப்பொருளை மனிதர்களுக்கு எடுத்துரைக்க உதவி புரியும். எம்வாழ்வில் தொடர்ந்து உம்மை வழிபடவும், உம்மீது பற்றுக்கொண்டு, இன்றைய புனிதரைப் போல, இறுதிவரை உமக்காகவும் வாழ செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

டிரியன்ட் நகர் குழந்தை சீமோன் Simon von Trient
பிறப்பு : 1472 டிரியண்ட் Trient, இத்தாலி
இறப்பு : 1475 இத்தாலி

தூய தூரியியுஸ் (மார்ச் 23)

இன்றைய புனிதர் : 
(23-03-2020) 

தூய தூரியியுஸ் (மார்ச் 23)
ஆண்டவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4: 18-19)

வாழ்க்கை வரலாறு

தூரியியுஸ், 1538 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 16 ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் உள்ள மயோர்க்கா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். அப்படியிருந்தாலும் இவர் சிறுவயதிலே மிகவும் பக்தியாக வளர்ந்து வந்தார். குறிப்பாக மரியன்னையின் மீது எப்போதும் ஆழமான பக்தி கொண்டு வாழ்ந்துவந்தார். அது மட்டுமல்லாமல், பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தன்னுடைய மதிய உணவை ஏழை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து தான் பசியோடு இருந்தார்.

தொடக்கக் கல்வியை வல்லாடோலிட் பள்ளிக்கூடத்தில் கற்ற தூரியியுஸ், உயர்கல்வியை சல்மான்கா பல்கலைக்கழகத்தில் கற்றார் அங்கு கற்ற கல்வியின் பயனாக அவர் வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞராக உயர்ந்த பின்பு தூரியியுஸ் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்துவந்தார். தூரியியுசிடம் இருந்த திறமையைப் பார்த்துவிட்டு மன்னர் இரண்டாம் பிலிப் அவரை க்ரானடா பகுதியில் நீதிபதியாக நியமித்தார். நீதிபதியாக உயர்ந்த பின்பும் தூரியியுஸ் தன்னுடைய பணியினைச் செவ்வனே செய்து வந்தார்.

இதற்கிடையில் தூரியியுசுக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே அதற்கான கல்வியைக் கற்று 1578 ஆம் ஆண்டு குருவாக மாறினார். குருவாக மாறிய பின்பு, இவர் ஆற்றி வந்த பணிகளைப் பார்த்துவிட்டு இவரை இரண்டு ஆண்டுகள் கழித்து பெருவின் ஆயராக உயர்த்தினார்கள். எனவே, இவர் தன்னுடைய சொந்த மண்ணைவிட்டு பெருவிற்கு வந்தார். பெருவிற்கு வந்த சமயத்தில் மக்கள் கிறிஸ்துவை அறியாதவர்களாக இருந்தார்கள். எனவே இவர் முழு மூச்சுடன் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய 50 ஆயிரம் மைல்களுக்கு கால்நடையாகவே பயணம் செய்து ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து வந்தார். இவர் ஆற்றிய நற்செய்திப் பணியின் வழியாக நிறையப் பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். தூய லீமா ரோஸ், தூய மார்டின் தி போரஸ் போன்றோர் எல்லாம் இவர் ஆற்றிய நற்செய்திப் பணியினால் கிறிஸ்துவ மறையைத் தழுவி புனிதர்கள் ஆனார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தூரியியுசின் பணிகள் இதோடு நின்றுவிடவில்லை, நிறையப் பள்ளிக்கூடங்களையும் மருத்துவ மனைகளையும் ஏன் குருமடத்தையும் கட்டி எழுப்பினார். இதனால் ஏரளாமான மக்கள் பயன் அடைந்தார்கள்.

தூரியியுஸ் இடையராது பணிகள் செய்து வந்ததால், அவருடைய உடல் நலம் குன்றியது. எனவே, அவர் 1606 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 23 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு, திருத்தந்தை 13 ஆம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தூரியியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. பகிர்ந்துண்டு வாழ்தல்

தூய தூரியியுசிடமிருந்து நாம் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இருந்தாலும் இவர் பகிர்ந்து வாழ்தலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். தன்னுடைய மாணவப் பருவத்தில் தன்னுடைய உணவினை ஏழை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து, பகிர்ந்து வாழவேண்டும் என்னும் நெறியை நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகின்றார். நாம் நம்மிடமிருகின்ற உணவை, உடைமைகளை இன்ன பிறதை பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று. (மத் 14: 16). ஆம், தேவையில், பசியோடு இருக்கின்ற மக்களுக்கு உணவு கொடுப்பது நம்முடைய கடமையாகும்.

ஒரு சமயம் கையில் காசில்லாமல் ஓரிரு நாட்களாக உணவு உட்கொள்ளாமல் அலைந்து திரிந்த ஒரு பெரியவருக்கு ஐம்பது ருபாய் கிடைத்தது (சாலையில் கீழே கிடந்தது). அதை எடுத்துக்கொண்டு, கடையில் கொடுத்து, உணவு வாங்கி, அதனை ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார். அந்நேரம் பார்த்து மூன்று சிறுவர்கள் அவரிடத்தில், “ஐயா! நாங்கள் சாப்பிட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, எங்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார்கள். அவர் வேறொன்றும் பேசாமல், தன்னிடம் இருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்து அவர்களிடத்தில் கொடுத்தார். அவர்களும் மிகவும் நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்டு உண்டார்கள். பின்னர் அவர்கள் போகின்றபோது ஒரு பழங்காலத்து நாணயத்தைப் அன்பளிப்பாக அவரிடம் கொடுத்துச் சென்றார்கள். பெரியவர் அந்த பழங்காலத்து நாணயத்தை அகழ்வாராய்ச்சி துறையினரிடம் கொடுக்க ,அவர்கள் அவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை சன்மானமாகக் கொடுத்தார்கள். பெரியவர் அதைப் பெற்றுக்கொண்டு மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.

பெரியவர் தன்னிடம் இருந்த உணவை சிறுவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். அதனால் அவர் வேறொரு விதத்தில் ஆசிர்வதிக்கப்பட்டார். நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழும்போது நாமும் இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, தூய தூரியியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

தூய மரிய ஜோசப்பா (மார்ச் 22)

இன்றைய புனிதர்

தூய மரிய ஜோசப்பா (மார்ச் 22)
“நான் நோயுற்றிருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்” - இயேசு.

வாழ்க்கை வரலாறு

ஸ்பெயின் நாட்டில் உள்ள விக்டோரியா என்னும் ஊரில், 1843 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் நாள் மரியா ஜோசப்பா பிறந்தார். இவர் சிறு வயதிலே மிகுந்த பக்தியும் எளியவர் பால் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

தன்னுடைய தொடக்கக் கல்வியை மாட்ரிட் என்னும் இடத்தில் முடித்த மரிய ஜோசப்பா, தனது பெற்றோரிடத்தில் வந்து துறவியாகப் போகப்போகிறேன் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். பெற்றோரும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், அவருடைய விருப்பத்தின்படி போக அனுமதித்தார்கள். எனவே மரிய ஜோசப்பா, கன்செப்சனலிஸ்ட் என்னும் சபையில் சேர்ந்தார். அங்கு அவர் சேர்ந்த சில நாட்களிலே கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கவே, அவர் அந்த சபையிலிருந்து வெளியேறினார். சிறுது நாட்களில் உடல்நலம் தேறிய மரிய ஜோசப்பா, ‘சர்வெண்ட்ஸ் ஆப் மேரி’ என்னும் சபையில் சேர்ந்தார். அந்த சபையிலும் அவரால் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. இதனால் அவர் அச்சபையிலிருந்து வெளியேறினார்.

சர்வெண்ட்ஸ் ஆப் மேரி என்ற சபையிலிருந்து வெளியேறிய மரிய ஜோசப்பா, 1871 ஆம் ஆண்டு ‘சர்வெண்ட்ஸ் ஆப் ஜீசஸ்’ என்ற சபையைத் தொடங்கினார். இந்தச் சபையினுடைய பிரதான நோக்கமே நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதுதான். மரிய ஜோசப்பா, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகம் சுழிக்காமல் பணிவிடை செய்தார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல் நோயாளிகளுக்கு மத்தியில் பணி செய்த மரிய ஜோசப்பா, 1912 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி இறந்து போனார். அவர் இறந்தபோது ஸ்பெயின் நாட்டில் அழாதவர் யாருமே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவர் எல்லாருடைய அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

மரிய ஜோசப்பா இறந்த பிறகு, அவருடைய பெயரில் நிறைய அற்புதங்கள் நடைபெற்றன. இவற்றையெல்லாம் பார்த்து 2000 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

ஏழைகள் வாழ்வு உயர வேண்டும், நோயாளிகள் நலம்பெற வேண்டும் என்று அவர்களுக்காகத் தன்னுடைய வாழ்வினை அர்ப்பணித்த தூய மரிய ஜோசப்பாவிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நோயாளிகளிடத்தில் அன்பு

தூய மரிய ஜோசப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றப்போது அவர் நோயாளிடத்தில் கொண்டிருந்த அன்பும் இரக்கமும்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. நோயாளிகளிடத்தில் மரிய ஜோசப்பாவிற்கு இருந்த அன்பைப் போன்று நமக்கு இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியின் பல இடங்களில் ஆண்டவர் இயேசு நோயாளிகள் மீது பரிவுகொண்டு அவர்களுடைய நோய்களைக் குணப்படுத்தினார் என்றது பார்க்கின்றோம். இயேசுவைப் போன்று நோயாளிகளைக் குணப்படுத்துகின்ற வல்லமை நமக்கு இல்லாவிட்டாலும், நோயாளிகளை நம்மால் அன்புடன் கவனித்துக்கொள்ள முடியும்; அவர்களுக்குச் சேவை செய்வதன் வழியாக ஆண்டவருக்குச் சேவை செய்ய முடியும் (மத் 25: 40).

இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

1980-ஆம் ஆண்டு! ஹவுராவின் ஒரு சாலை! மூன்று வயது போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை பரிதாபமாக அழுது நின்று கொண்டிருந்தது. அதைக் கண்ட அன்னை தெரசா அந்தக் குழந்தையை தனது காப்பகத்திற்கு கொண்டு வந்து ஆதரவு அளித்தார். இன்று அந்தக் குழந்தை 39- வயது வாலிபனாக வளர்ந்துள்ளார். கவுதம் லெவிஸ் எனும் பெயருடைய அவர் இன்று விமான ஓட்டி, புகைப்படக் கலைஞர், இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மையுள்ள மனிதனாக உருவாகியுள்ளார். அவர் இசை அமைத்து வடிவமைத்த அன்னை தெரசா பற்றிய பாடல் 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ஆம் தேதி 200 நாடுகளில் வெளியிடப்பட்டது. “அன்னை தெரசா இல்லை எனில் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மட்டேன்” என்கிறார் கவுதம்! கவுதமைப் போல பல ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளையும் நோயாளிகளையும் பெண்களையும் தமது கருணை இல்லத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு மறுவாழ்வும் ஆதரவும் அளித்தவர் அன்னை தெரசா! என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தொடங்கி வைத்த இந்தப் புனிதப் பணியை நாமும் தொடர்ந்து செய்வதுதான் இறைவனுக்கு ஏற்ற செயலாகும்.

ஆகவே, தூய ஜோசப்பாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகள்மீது அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

தூய நிக்கோலாஸ் தே ஃப்ளூ (மார்ச் 21)

இன்றைய புனிதர்

தூய நிக்கோலாஸ் தே ஃப்ளூ (மார்ச் 21)
நிகழ்வு

ஒரு சமயம் நிக்கோலாஸ் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் வெள்ளை நிறத்தில் இருந்த லில்லி மலரை குதிரை ஒன்று சாப்பிட்டு விழுங்குவதைக் கண்டார். இதனுடைய அர்த்தம் என்னவென்று அவர் நீண்ட நேரமாக யோசித்துப் பார்த்தார். கடைசியில்தான் அவருக்குப் புரிந்தது. தூய்மையான ஆன்மாவை இந்த உலக வாழ்க்கை தின்றுகொண்டிருக்கின்றது என்று. உடனே அவர் வேறெதையும் பற்றி யோசிக்காமல், எல்லாவற்றையும் துறந்து. துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

உலக செல்வங்களில் அல்ல, உண்மையான செல்வமும் ஒப்பற்ற செல்வமாகிய இறைவனில் பற்று கொண்டு வாழவேண்டும் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

நிக்கோலாஸ், 1417 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் இரண்டாம் நாள், சுவிட்சர்லாந்தில் இருந்த ஓர் உயர் குடியில் பிறந்தார். அக்காலத்தில் இளைஞர்கள் யாவரும் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால், நிக்கோலாஸ் சில காலத்திற்கு இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். அது மட்டுமல்லாமல் இராணுவத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்தார்.

குறிப்பிட்ட காலம் இராணுவத்தில் பணியாற்றிய பின்பு தன் சொந்த ஊருக்குத் திரும்பி டாரத்தி என்ற பெண்ணை மணந்துகொண்டார். இறைவன் நிக்கோலாஸ் – டாரத்தி தம்பதியருக்கு பத்துக் குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்தார். இல்வாழ்க்கை இப்படி மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், ஒருநாள் நிக்கோலாஸ் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். உடனே தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அனுமதி பெற்று துறவற வாழ்க்கையை மேற்கொண்டார்; ரான்பிட் சினே என்ற இடத்தில் ஒரு குடிசை அமைத்து அங்கேயே ஜெப தவ வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். நிக்கோலாஸ் அங்கு இருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு நிறையப் பேர் அவரிடத்தில் ஆலோசனை கேட்பதற்காகச் சென்றார்கள். அவரும் அவர்களுக்கு நல்லவிதமாய் ஆலோசனை வழங்கி வந்தார். நிக்கோலாசிடம் ஆலோசனை கேட்பதற்காக கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது, பிற சபையைச் சார்ந்தவர்களும் அவரிடத்தில் வந்தார்கள். எல்லாருக்கும் அவர் நல்ல விதமாய் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

ஒருசமயம் நாட்டில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு நாடே இரண்டாக உடைந்துபோகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நிக்கோலாஸ் கொடுத்த அறிவுரையின் படி மக்கள் நடந்ததால், அப்படிப்பட்ட ஓர் அபாயம் நடைபெறாமல் நின்றுபோனது. நிக்கோலாஸ், துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் நற்கருணையைத் தவிர வேறு எதையும் உண்ணாமல் இருந்தது எல்லாருக்கும் ஆச்சரியத்தையும் வியப்பினையும் தந்தது. இப்படி ஒரு நல்ல ஆலோசகராக, இறைவன்மீது ஆழமான விசுவாசம் கொண்டவராக வாழ்ந்த வந்த நிக்கோலாஸ் 1487 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1947 ஆம் ஆண்டு திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய நிக்கோலாசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஆன்மாவைக் காத்துக்கொள்ள முயற்சிப்போம்

தூய நிக்கோலாசின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஆன்மாவைக் காத்துக்கொள்வதாகும். இன்றைக்கு மனிதர்கள் உலக வாழ்க்கையில் சிக்குண்டு தூய ஆன்மாவைத் தொலைக்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் தன்னுடைய ஆன்மாவை பாவத்திலிருந்து காப்பாற்றிய நிக்கோலாஸ் நமக்கு ஒரு முன்னுதாரணம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார், “மனிதர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன?” என்று. ஆம், ஆன்மாவை இழப்பதனால், உலக செல்வங்கள் அத்தனையும் நமக்கிருந்தாலும் அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. ஆகவே, தூய நிக்கோலாசைப் போன்று ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டிய முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும்.

ஆன்மாவை எப்படிக் காத்துக்கொள்வது என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது, ஆண்டவருக்கு உகந்த வழியில் நடப்பதுதான் நாம் ஆன்மாவைக் காத்துக்கொள்வதற்கான முதன்மையான வழி என்பது நமக்குப் புரியும். இயேசு கூறுவார், “ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக்கொடுக்கப்படும்” என்று (மத் 6: 33). ஆண்டவருக்கு உகந்த வழியில் நடக்கின்றபோது நம்முடைய ஆன்மா காப்பாற்றப்படும், அதே நேரத்தில் நாம் கடவுளிடமிருந்து எல்லா ஆசிரியும் பெறமுடியும்.

ஆகவே, நிக்கோலாசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, ஆன்மாவைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

20 March 2020

தூய கத்பர்ட் (மார்ச் 20)

இன்றைய புனிதர் :
(20-03-2020) 

தூய கத்பர்ட் (மார்ச் 20)
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16: 24)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கத்பர்ட், இங்கிலாந்து நாட்டில் உள்ள நார்த்தம்பிரியா என்னும் இடத்தில் 635 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சிறுவயதிலே தன்னுடைய பெற்றோரை இழந்ததால், கென்ஸ்வித் என்பவருடைய பாதுகாப்பில்தான் வளர்ந்து வந்தார்.

கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை, மாறாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு மெல்ரோஸ் என்ற மலைச்சரிவில் மேய்க்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ஆசிர்வாதப்பர் துறவற மடத்தைக் கண்டு, ஒருநாள் தானும் ஒரு துறவியாகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இதற்கிடையில் வயது வந்த இளைஞர்கள் யாவரும் நாட்டிற்காக இராணுவத்தில் சேர்ந்து போராடவேண்டும் என்றொரு நிலை உருவானது. எனவே, கத்பர்ட் இராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாக தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, ஏற்கனவே செய்து வந்த வேலையைச் செய்து வந்தார்.

இச்சமயத்தில் ஒருநாள் தூய ஆர்டன் என்பவருடைய ஆன்மாவை வானதூதர்கள் தூக்கிக்கொண்டு போகும் காட்சியைக் கண்டார். இதனைக் கண்ட கத்பர்ட், தன்னுடைய ஆன்மாவையும் இவ்வுலக மாசுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும், அதற்கு நாம் துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே சரியானது என்று முடிவுசெய்து மெல்ரோஸ் மலைச்சரிவில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார். கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் துறவற மடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்களை மிக எளிதாகக் கற்று, கல்வியில் சிறந்து விளங்கினார்.

இப்படி கத்பர்ட்டின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் போய்கொண்டிருந்த தருணத்தில், அவர் இருந்த துறவற மடத்தில் நிறையப் பேர் குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருந்த தூய பாசில் உட்பட தொற்றுநோய் தாக்கி இறந்துபோனார்கள். அதனால் கத்பர்ட் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்காலத்தில் வழிபாடுகள் ஒழுகில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதனைக் கவனித்த ஆயர் பேரவை உரோமை வழிபாட்டு முறையை எங்கும் அமுல்படுத்தக் கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் கத்பர்ட் தான் இருந்த பகுதியில் உரோமை வழிபாட்டு முறையை அமுல்படுத்தினார். இது பிடிக்காத ஒருசிலர் அவருக்கு எதிராகக் கிளர்தெழுந்தார்கள். கத்பர்ட் அதற்கெல்லாம் அஞ்சாமல் மிகவும் துணிச்சலாக இருந்து இறைப்பணியைச் செய்து வந்தார்.

இதற்குப் பின்பு, அவர் பார்னா என்ற தீவிற்குச் சென்று, அங்கு தனிமையில் இறைவனிடம் ஜெபித்து வந்தார். அப்போது அவருக்கு லின்டிஸ்பர்னே என்னும் இடத்திற்கு ஆயராகப் பொறுபேற்க வேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. கத்பர்ட் அதனைக் கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் இறைப்பணியைச் செய்து வந்தார். இப்படி அவர் ஓயாது பணிசெய்து வந்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. இதனால் அவர் 686 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கத்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனின் அழைப்பை உணர்ந்து, அவர் பணி செய்ய விரைதல்

தூய கத்பர்ட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மையான பாடமே இறைவனின் அழைப்பை உணர்ந்து அவருடைய வழியினில் நடப்பதுதான். அவர் இளைஞனாக இருந்த சமயத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது வானத்தூதர்கள் தூய ஆர்டனின் ஆன்மாவை எடுத்துக்கொண்டு போவதைக் கண்டு அதை இறைவன் கொடுக்கின்ற அழைப்பாக உணர்ந்து, அவர் பணி செய்ய விரைந்தார் என்றும் தொடக்கத்தில் பார்த்தோம். இறைவன் அவரை அந்த நிகழ்வின் வழியாக அழைத்ததுபோல், நம்மையும் அவர் பல்வேறு நிகழ்வுகளின் வழியாக அழைக்கின்றார். நாம் அவரது குரலுக்கு செவிகொடுத்து, அவர் பணி செய்ய விரைகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் பகுதியில் நற்செய்திப் பணியைச் செய்து வந்த சாது சுந்தர் சிங் சொல்லக்கூடிய கதை. ஒரு ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அந்தப் பணக்காரருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவர் தன்னுடைய மகனிடம், “மகனே! நம்முடைய வயல் அறுவடைக்காக நெருங்கி இருக்கின்றது. அதனால் அதனைப் போய் பார்த்துக்கொள்” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லி, வயலுக்குச் சென்றான். அவன் சென்ற நேரத்தில் வயலில் பறவை இனங்கள் எல்லாம் கதிர்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாது, தந்தை நம்மை வயலைப் பார்த்துக்கொள்ளத்தானே சொன்னார், பறவையினங்களை விரட்டச் சொல்லவில்லையே என்று பேசாதிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ஆடு மாடுகள் எல்லாம் அந்த வயலில் நுழைந்து அதனை நாசம் செய்தன. அப்போதும் அவன் ஒன்றும் செய்யாதிருந்தான்.

இதற்கிடையில் பணக்காரர் வயலுக்கு வந்தார். வந்தவர் வயலில் ஆடுமாடுகள் மேய்வதையும் பறவையினங்கள் கதிர்களைக் கொத்தித் தின்பதையும் பார்த்துவிட்டு, தன்னுடைய மகனைப் பார்த்து, “உன்னை வயலைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால், இப்படி ஒன்றும் செய்யாமல் இருகின்றாயே” என்றார். அதற்கு அவன், “அப்பா, நீங்கள் என்னை வயலைப் பார்த்துக்கொள்ளத்தான் சொன்னீர்களே ஒழிய, அதில் வந்து மேயும் ஆடுமாடுகளை விரட்டச் சொல்லவில்லை” என்றான். இதைக் கேட்ட அவனுடைய தந்தை, “வயலைப் பார்த்துக்கொள் என்று சொன்னால், வயலில் ஆடுமாடுகள் மேயாமல் பார்த்துக்கொள் என்பதுதானே அர்த்தம், இதுகூடத் தெரியாத மரமண்டையாக இருக்கின்றாயே” என்று அவனை அடியடி என அடித்தார்.

கதையில் வரும் முட்டாளைப் போன்றுதான் நாமும் கடவுள் தம்மை எவ்வளவோ வகையில் வெளிப்படுத்தினாலும் நாம் அதனைப் புரிந்துகொள்ளாமலே இருக்கின்றோம்.

ஆகவே, தூய கத்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று இறைவனின் அழைப்பினை உணர்ந்து, அவருடைய பணியைச் செய்ய விரைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (20-03-2020)

Saint Cuthbert of Lindisfarne

Orphaned at an early age. Shepherd. Received a vision of Saint Aidan of Lindesfarne entering heaven; the sight led Cuthbert to become a Benedictine monk at age 17 at the monastery of Melrose, which had been founded by Saint Aidan. Guest-master at Melrose where he was know for his charity to poor travellers; legend says that he once entertained an angel disguised as a beggar. Spiritual student of Saint Boswell. Prior of Melrose in 664.

Due to a dispute over liturgical practice, Cuthbert and other monks abandoned Melrose for Lindisfarne. There he worked with Saint Eata. Prior and then abbot of Lindesfarne until 676. Hermit on the Farnes Islands. Bishop of Hexham, England. Bishop of Lindesfarne in 685. Friend of Saint Ebbe the Elder. Worked with plague victims in 685. Noted (miraculous) healer. Had the gift of prophecy.

Evangelist in his diocese, often to the discomfort of local authorities both secular and ecclesiastical. Presided over his abbey and his diocese during the time when Roman rites were supplanting the Celtic, and all the churches in the British Isles were brought under a single authority.

Born :
634 somewhere in the British Isles

Died :
20 March 687 at Lindesfarne, England of natural causes
• interred with the head of Saint Oswald, which was buried with him for safe keeping
• body removed to Durham Cathedral at Lindesfarne in 1104
• his body, and the head of Saint Oswald, were incorrupt

Patronage :
against plague and epidemics
• boatmen, mariners, sailors, watermen
• shepherds
• England
• Hexham and Newcastle, England, diocese of
• Lancaster, England, diocese of
• Durham, England
• Northumbria, England

---JDH---Jesus the Divine Healer---

மார்ச் 19 - புனித சூசையப்பர் திருவிழா

மார்ச் 19 -  புனித சூசையப்பர் திருவிழா. மார்ச் மாதம் முழுவதும் இவருக்கு அர்பணிக்கப்பட்ட மாதம். இவரது பரிந்துரை பெற இவரை மன்றாடுவோம்.
புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

பிறப்புகி.மு.39/38
இறப்புகி.பி.21/22
அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான நம் அன்னை மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், அன்னை மரியாள் தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். அன்னை மரியாள் திடீரென கருவுற்றதால் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். அன்னை மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை சம்மனசு வழியாக அறிந்த இவர் அன்னை மரியாளை ஏற்றுக் கொண்டார்.

இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் அன்னை மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். அன்னை மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.
அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். அன்னை மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட அர்ச்சியசிஷ்ட சூசையப்பர், திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் அன்னை மரியாளும் அருகில் இருக்க அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தூய யோசேப்பு.

யோசேப்பை குறித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாளுக்கு மூன்று வயதானபோது அவருடைய பெற்றோர்கள் அவரை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு மரியாள் பதினான்கு வயது வரை அங்குதான் இருந்தார். அவருக்கு பதினான்கு வயது வந்தபோது ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு, “பதினான்கு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்தமான கணவரை மணந்துகொள்ளுமாறு” சொன்னார். தலைமைக் குருவின் வார்தைகளுக்குக் கீழ்படிந்து மரியாவோடு இருந்த பதினான்கு வயது நிரம்பிய மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள். மரியாள் மட்டும், “நான் ஆண்டவருக்கு அடிமை” என்று சொல்லி அங்கேயே இருந்தாள்.

இதற்கிடையில் ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு காட்சி ஒன்று கண்டார். அந்தக் காட்சியில், தாவீதின் குலத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்து, அதனை தலைமைக் குருவிடம் கொடுப்பார்கள். யார் கொண்டுவந்த தளிர் மலர்ந்து பூப்பூக்கிறதோ அவரை மரியாள் கணவராக மணந்துகொள்ள வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டார். இச்செய்தியை தலைமைக் குரு மரியாளிடம் எடுத்துச்சொல்லி, குறிப்பிட்ட அந்த நாளுக்காக அவரும் மரியாவும் காத்திருந்தார்கள்.

காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று, ஒரு நாளில் தாவீதின் குலத்தைச் சேர்ந்த திருமண வயதில் இருந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் யோசேப்பும் வந்திருந்தார். எல்லாரும் தாங்கள் கொண்டுவந்த தளிர்களை தலைமைக் குருவிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். யோசேப்பைத் தவிர. யோசேப்பு தான் வயது மிகுந்தவர் என்பதனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக அவர் தான் கொண்டு வந்த தளிரை பீடத்தில் போய் வைத்தார். நீண்ட நேரமாகியும் யாருடைய தளிரும் பூப்பூக்கவில்லை. இதனால் குழம்பிப் போன தலைமைக் குரு இறைவனிடத்தில் மன்றாடியபோது, “யார் தன்னுடைய தளிரை பீடத்தில் வைத்திருக்கிறாரோ அவரே மரியாளுக்கு கணவராக ஆக வேண்டியர். நீ சிறிது நேரம் பொறுத்திருந்து பார், அவருடைய தளிர் பூப்பூக்கும். அப்போது தூய ஆவியானவர் அதன்மேல் இறங்கி வருவார்” என்றார்.

இதனால் தலைமைக் குரு சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தார். காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று யோசேப்பு பீடத்தில் வைத்த தளிர் திடிரென்று பூப்பூத்தது. பின்னர் அதன்மேல் தூய ஆவியானவர் புறாவடிவில் இறங்கி வந்தார். இதைப் பார்த்த தலைமைக் குரு யோசேப்பை மரியாளுக்கு கணவராக மண ஒப்பந்தம் செய்தார். மண ஒப்பந்தத்திற்குப் பிறகு, யோசேப்பு தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமிற்குச் சென்றார். மரியாள் நாசரேத்திற்குச் சென்றார். நாசரேத்தில் தான் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னார்.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் மரியாளின் கணவர் தூய யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தாவீதின் வழிமரபில் தோன்றிய யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவிற்கு ஒரு சிறந்த கணவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் திருமணத்திற்கு முன்பாகவே மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்கு தெரிய வந்ததும் அவளை கல்லால் எறிந்துகொல்ல முற்படவில்லை மாறாக பெருந்தன்மையோடு அவரைத் யாருக்கும் தெரியாமல் விளக்கி விட நினைக்கின்றார். பின்னர் கடவுளின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் கனவில் வெளிப்படுத்திய பிறகு மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.

மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்ட பிறகு யோசேப்பு அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொல்ல நினைத்தபோது, குழந்தையையும் தாய் மரியாவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பின்னர் கொடுங்கோலன் இறந்த பிறகு அவர்களைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். இவ்வாறு மரியாளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவரை எல்லாவிதங்களிலும் சிறப்பாகப் பராமரிக்கின்ற ஒரு நல்ல கணவராக யோசேப்பு விளங்கினார் என்று சொன்னால் அது மிகையில்லை. யோசேப்பு, இயேசுவுக்கு ஒரு நல்ல வளர்ப்புத் தந்தையாக இருந்தும் செயல்பட்டார். இயேசுவை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர்த்தெடுத்ததில் யோசேப்பின் பங்கை நாம் மறந்து விட முடியாது.

இவ்வாறாக யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவுக்கு ஒரு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு ஒரு நல்ல, சிறந்த முன்மாதிரியான வளர்ப்புத் தந்தையாவும் இருந்து செயல்பட்டு, ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும், ஒரு தந்தை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.