புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 April 2020

தூய ஜூலி பில்லியர்ட் (ஏப்ரல் 08)

இன்றைய புனிதர் : 

தூய ஜூலி பில்லியர்ட் (ஏப்ரல் 08)
“நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்; எனவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாய் உள்ளது. (மத் 11: 29)

வாழ்க்கை வரலாறு

ஜூலி பில்லியர்ட், 1751 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 13 ஆம் நாள், பிரான்ஸ் நாட்டில் உள்ள பிக்கார்டி என்னும் இடத்தில் பிறந்தார். ஜூலி, குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளை. சிறு வயது முதலே இவர் மிகவும் பக்தியுள்ள குழந்தையாக வளர்ந்து வந்தார். அதனால் இவர் மிகக் குறைந்த வயதிலே நற்கருணை ஆண்டவரை உட்கொள்ளும் வாய்ப்புப் பேறுபெற்றார்.

ஜூலிக்கு பதினான்கு வயது நடக்கும்போது கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டு இறைவனுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் வாழ்ந்து வந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜூலியின் தந்தை செய்து வந்த வியாபாரம் பெரிய நஷ்டமடைந்தது. இதனால் குடும்பம் மிகவும் நொடிந்துபோனது. இந்தக் கஷ்டத்திலிருந்து மீண்டுவர ஜூலியின் குடும்பத்தாருக்கு வெகு நாட்கள் ஆகிவிட்டது. இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க ஜூலிக்கு 23 வயது நடந்து கொண்டிருக்கும்போது ஜூலியின் தந்தைக்குப் பிடிக்காத ஒருவர் அவர்மீது துப்பாக்கியை வைத்துச் சுட முயன்றார். அதிர்ஷ்டவசமாக ஜூலியின் தந்தை அதிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஆனாலும் அது தந்த அதிர்ச்சி ஜூலியை நடக்க முடியாமல் செய்தது. இதனால் அவர் படுக்கையிலே காலம் தள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலை உருவானாலும்கூட ஜூலி மனந்தளராமல், இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்து வந்தார். ஜூலிக்கு 50 வயது நடக்கும்போது குருவானவர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் திரு இருதய ஆண்டவருக்கு நவநாள் பக்தி முயற்சிகளை மேற்கொண்டார். நவநாளின் ஐந்தாம் நாளின்போது இவர் திரு இருதய ஆண்டவருக்கு முன்பாக ஜெபித்துக் கொண்டிருக்கும்போது இவர் கால் நன்றாக மாறி நடக்கத் தொடங்கினார். இதைக் கண்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இந்தன்பிறகு இவர் 1803 ஆம் ஆண்டு தனக்குக் நெருக்கமாக இருந்த ஒருசில சகோதரிகளின் உதவியுடன் புதிதாக ஒரு சபையை ஏற்படுத்தினார். இந்த சபையின்மூலம் இவர் பல ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்டி வந்தார். அது மட்டுமல்லாமல் பல இடங்களில் துறவு மடங்களைத் துவங்கி மக்களுக்கு மத்தியில் ஆன்மீக எழுச்சி உருவாகக் காரணமாக இருந்தார்.

இந்தக் காலக் கட்டத்தில்தான் பிரஞ்சுப் புரட்சியானது ஏற்பட்டது. இதனால் திருச்சபைக்கு அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையிலும் ஜூலி மனந்தளராமல் ஆண்டவருடைய பணியைத் திறம்படச் செய்து வந்தார் இப்படிப் பல்வேறு பணிகளை ஓய்வின்றிச் செய்துவந்த ஜூலி உடல்நலம் குன்றி 1816 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜூலி பில்லியர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. மனந்தளராது இருத்தல்

தூய ஜூலி பில்லியர்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரே சிந்தனை மனந்தளராது விடாமுயற்சி உழைக்கவேண்டும் என்பதுதான். ஜூலியின் கால்கள் முடமாகி, நடக்க முடியாமல் போனாலும் கூட அவர் மனந்தளராமல் விடாமுயற்சியோடு உழைத்து வந்தார். அவருடைய அந்த உழைப்புக்குப் பலன் கிடந்தது. நாமும் நம்முடைய வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்கள், நெருக்கடிகளைக் கண்டு துவண்டு விடாமல், விடர்முயற்சியோடு உழைத்தோம் என்றால், வாழ்வில் வெற்றியைப் பெறுவது உறுதி.

1952 ஆம் ஆண்டு இமயமலைச் சிகரத்தை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தவர் எட்மன்ட் ஹிலாரி என்பவர். அதற்கு முன்னும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விகளைச் சந்தித்திருந்தார். இதற்கு மத்தியில் அவருடைய முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழா மேடையஈல் இமயமலைச் சிகரத்தைக் கம்பீரமாக வரைந்திருந்தார்கள். அதைப் பார்த்த ஹிலாரி, “ஏய் எவரஸ்ட் சிகரமே! என்னை நீ பலமுறை தோற்கடித்துள்ளாய்! அடுத்தமுறை உன்னை நான் நிச்சயம் தோற்கடிப்பேன். ஏன் தெரியுமா? உன் வளர்ச்சி என்றோ முடிந்து போய்விட்டது. ஆனால், என் விடாமுயற்சியோ நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது” என்று உரக்கச் சொன்னார்.

அவர் சொன்னது போன்றே மனந்தளராது விடாமுயற்சியோடு போராடி 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் சிகரத்தை அடைந்தார். அவருடைய விடாமுயற்சி அவருக்கு வெற்றியைக் கொணர்ந்தது. ஜூலி பில்லியர்ட்டும் மனந்தளராது உழைத்தார். அதனால் வாழ்வில் வெற்றிகளை குவித்தார்.

ஆகவே, தூய ஜூலி பில்லியர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று மனந்தளராது விடாமுயற்சியோடு உழைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (08-04-2020)

St. Julie Billiart

She was born on July 12, 1751 at Cuvilly, Picardy, France to Jean-Francois Billiart and Marie-Louise-Antoinette. She attended a one-room school at Cuvilly. She was very pious and was very interested in studying the religious lessions. The Parish Priest recognized her talent in religious studies and allowed her to take the first communion and to be confirmed at age 9. She was suffering from paralysis of lower limb due to a shock from age 22 years and was almost bedridden. She was held in very high esteem for her piety and virtue. The foundation for the Sisters of the Notre Dame was laid, for the uplift of the poor people. The first superiors of the foundation were Julie and Francois. The first pupils were nine orphans. She was miraculously cured from the paralysis on June 1, 1804 on the feast day of the Sacred Heart after a Novena was made. The Sisters of Notre Dame was approved on June 19, 1806 by an Imperial Decree. She founded fifteen convents in a period of twelve years. She died on April 8, 1816 at Namur, Belgium.

She was beatified by pope Pius-X on May 13, 1906 and canonized by pope Paul-VI on June 22, 1969. She is a patron against poverty, bodily ills and diseases.

---JDH---Jesus the Divine Healer---

07 April 2020

தூய ஜான் பாப்டிஸ்ட் தெலசால் (ஏப்ரல் 07)

இன்றைய புனிதர்

தூய ஜான் பாப்டிஸ்ட் தெலசால் (ஏப்ரல் 07)
நிகழ்வு

ஒரு நகரில் பிரபலமான பள்ளிக்கூடம் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்தில் தானும் படிக்காமல், தனக்கு அடுத்திருப்பவனையும் படிக்கவிடாமல் அழும்பு செய்துகொண்டிருந்த அமைச்சரின் மகனை, அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் அடிப்பதற்காக கையை ஓங்கியபோது அவன் அவரைப் பார்த்துச் சொன்னான், “ஒரு இலட்சம் ரூபாய் டொனேசன் கொடுத்துச் சேர்ந்திருக்கும் என்னை நீங்கள் அடித்தால், நடப்பதே வேறு!. “நீ கொடுத்தது ஒரு இலட்சம் என்றால் நான் கொடுத்ததோ பத்து இலட்சம்” என்று சொல்லியபடியே ஆசிரியர் அவனைப் பின்னியெடுத்து விட்டார்.

கல்விக்கூடங்கள் இன்றைக்கு காசு கொழிக்கும் நிறுவனங்களாக மாறிப்போய்விட்டதை இந்த நிகழ்வானது வேடிக்கையாகவும் வேதனையோடு பதிவு செய்கிறது.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் ‘கல்வித் தந்தை’ என அழைக்கப்படும் ஜான் பாப்டிஸ்ட் தெலசால் என்பவருடைய விழாவைக் கொண்டாடுகின்றோம். இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரிம்ஸ் என்ற நகரில் 1651 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். இருந்தாலும் இவர் சிறுவயதிலிருந்து எளிமையாய் பக்தியாய் விளங்கினார். எந்தளவுக்கு என்றால் ஒருமுறை இவருக்கு பிறந்தநாள் வந்தபோது, இவருடைய வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் விழா ஏற்பாடுகளை ஆடம்பரமாகவும் தடபுடலாகவும் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் இவரோ யாருக்கும் தெரியாமல் தன்னுடைய பாட்டியின் அறைக்குச் சென்று புனிதர்களைப் பற்றி தனக்கு சொல்லித் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அந்தளவுக்கு ஆடம்பரத்தை நாடாமால் ஆன்மீக காரியங்களில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார்.

ஆலயத்திற்கு சென்று குருவானவருக்கு திருப்பலியில் உதவி செய்வதில் இவர் பெரிதும் மகிழ்ந்திருந்தார். இதனால் இவருடைய உள்ளத்தில் தானும் ஒரு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் பதினோறாவது வயதிலே தோன்றியது. இந்த எண்ணம் அவருடைய இருபத்தி ஏழாவது வயதில் நிறைவேறியது. தெலசால் குருவாக மாறிய சமயம் ஜான்சனிசம் என்ற தப்பறைக் கொள்ளை பிரான்சு நாடு முழுவதும் பரவியிருந்தது. (ஆண்டவர் இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் கடவுளில்லை, ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே அவர் கடவுள் என்பதுதான் இக்கொள்கையின் அடிப்படை வாதம்). இது ஒருபுறமிருக்க எப்போது வேண்டுமானாலும் நாட்டில் போர் ஏற்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் அதிகமாக நிலவியது. மக்கள் வறுமையிலும் அடிப்படைக் கல்வியைக் கூட பெறாமல் வாழ்ந்துகொண்டிருந்தார்கள. இதைப் பார்த்த தெலசால் மக்களுக்கு நல்ல கல்வியறிவை புகட்டவேண்டும், ஏனென்றால் நல்ல கல்விதான் நேர்மையான, நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கும் என்பது அவருடைய ஆழமான நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ஏழை எளியவர் கல்வி பெற பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அவர்களுக்கு நல்ல கல்வியைப் புகட்டினார்.

தெலசால் இப்படிப்பட்ட ஒரு பணியைத் தொடங்கியதும், அவருக்கு நிறைய மனிதர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அவற்றையெல்லாம் துணிவோடு எதிர்கொண்டார். மாணவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு முதலில் ஆசிரியர்கள் நல்லறிவைப் பெறவேண்டும் என்று சொல்லி, ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். அதன்வழியாக அவர்களுக்கு பயிற்சியையும் கொடுத்தார். இப்படி உருவான ஆசிரியர்களைக் கொண்டே ‘கிறிஸ்தவப் பள்ளிகளின் சகோதரர்கள்’ என்றதொரு புதிய சபையைத் தொடங்கினார்.

தெலசால் மேற்கொண்ட முயற்சிகளில் மிகவும் சிறப்பானது மாணவர்கள் தாய்மொழியில் பாடங்களைக் கற்கச் செய்தது ஆகும். இதற்காக அவர் பெரிதும் பாடுபட்டார். இன்றைக்கு தாய்மொழியில் பாடங்களை கற்றால்தான் குழந்தைகள் அறிவிலும் சிந்திக்கும்திறனிலும் சிறப்பாக வளர்வார்கள் என்றதொரு கருத்து வலியுறுத்தப்படுகிறது. இதனை அன்றைக்கே செய்தவர் தெலசால். இப்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தெலசால் தான் செய்த பணிகள் தனக்கு நிறைவைத் தந்திருக்கிறது உணர்ந்த பிறகு, இப்பொறுப்புகளை தலைமைச் சகோதரரான பர்த்திலேமேயு என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய அறுபத்தி எட்டாவது வயதில் இறையடி சேர்ந்தார்.

திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் இவரை 1900 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தினார். 1950 ஆம் ஆண்டில் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் இவரை ‘பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலர்’ என்று அறிவித்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

‘காலத்திற்கு ஏற்ற கல்விமுறைத் தந்தை’ என அழைக்கப்படும் தூய ஜான் பாப்டிஸ்ட் தெலசாலின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அனைவருக்கும் கல்வி

தூய தெலசால் கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பணக்காரர்களும் வசதிபடைத்தவர்களும் மட்டும் கல்வியைப் பெற முடியும் என்ற நிலையை மாற்றி எல்லா மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்களும் நல்ல கல்வியை பெற்றுக்கொள்ள பெரிதும் பாடுபட்டார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், எல்லா மக்களும் நல்லதொரு கல்வியைப் பெற நாம் முயற்சிசெய்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம் ஆண்டவராகிய இயேசு குருவும் ஆசிரியரும் அரசரும் ஆவார். அவர் மக்களுக்கு போதிக்கும் பணியை சிறப்பாக செய்தார். அவருடைய போதனையைக் கேட்டு நிறைய பேர் ஆறுதலையும் மனமாற்றத்தையும் அடைந்தார்கள் என்று நற்செய்தியில் படிக்கின்றோம். அவர் வழியில் நடக்கும் நாம் போதிக்கும் பணியை சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதே நமக்கு முன்பாக உள்ள சவாலாக உள்ளது. இன்றைக்கு உள்ள கல்விமுறை முற்றிலுமாக மாறிப்போனது. அது அறிவைப் பெருக்குவதே நல்ல கல்வி என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. “கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டுமல்ல, வேலை வாய்ப்புக்கான ஒரு சான்றிதழ் மட்டுமல்ல. மாறாக ஒருவரை முழு மனிதனாக மாற்றி தன்னம்பிக்கையையும் சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் அவருள் வளர்ப்பதே உண்மையான கல்வி” என்பார் டாக்டர் ராதா கிருஷ்ணன். எவ்வளவு ஆழமான வார்த்தைகள் இவை. ஆகவே கல்விதான் விடுதலைக்கான ஆயுதம். அத்தகைய கல்வி நம்மில் சமூக அக்கறையையும் மனித நேயத்தையும் வளர்க்கவேண்டும் என்பதை உணர்த்து வாழ்வோம்.

மும்பையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் செயல்பட்டு வந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (NSS) ஒரு வார முகாமாக அருகே இருந்த சேரி மக்களோடு தங்கிப் பணிசெய்தார்கள். அப்போது அவர்கள் அங்கே இருந்த மக்களின் வாழ்வாதாரம், சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்விநிலை எப்படி இருக்கின்றது என்ற ஓர் ஆய்வினை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடியில், அம்மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள், அதனால் அவர்களுடைய வளர்ச்சி ஐம்பது வருடங்களுக்கு பின்னோக்கி இருக்கிறது என்ற உண்மையையைக் கண்டறிந்தார்கள்.

இது நடந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். மீண்டுமாக அந்தக் கல்லூரியிலிருந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் முன்பு சென்ற அதே சேரிப் பகுதிக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கு சென்றபோது முன்னாள் மாணவர்கள் அந்த சேரிப்பகுதினைக் குறித்து தயாரித்து வைத்திருந்த ஆய்வினையும் தங்களோடு எடுத்துக்கொண்டு சென்றார்கள். அவர்கள் நினைத்தார்கள் இம்மக்கள் வளர்ச்சியடைய இன்னும் இருபது முப்பது வருடங்கள் பிடிக்கும் என்று. ஆனால் அங்கு போய் பார்த்தபோது மக்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக அங்கு மாறியிருந்தது. மக்கள் எல்லா நிலைகளிலும் குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கியிருந்தார்கள். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன அந்த கல்லூரி மாணவர்கள், “இத்தகைய மாற்றத்திற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் சொன்ன ஒரே பதில், “இந்த ஊருக்கு புதிதாக வந்த ஆசிரியர்தான் எங்களுடைய இந்த முன்னேற்றத்திற்குக் காரணம். அவர் எங்களுக்கு நல்ல கல்வியறிவு புகட்டி எங்களை எல்லா நிலைகளிலும் வளர்த்தெடுத்தார். ஆனால் அவர் இன்றைக்கு உயிரோடு இல்லை”. இதைக் கேட்ட அந்த மாணவர்கள் மலைத்துப் பொய் நின்றார்கள்.

ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு சமூகத்தை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே கல்வியால் – ஆசிரியரால் – உண்டாகும் மாற்றம் எத்தகையது என உணர்வோம். இன்று நாம் கொண்டாடும் தூய தெலசாலைப் போன்று ஏழை எளியவர் மீது இரங்குவோம், அவர்களுக்கு நல்ல போதனையை சொல்லித் தருவோம். அதன்வழியாக நிறைவாய் பெறுவோம்.
Saint of the Day : (07-04-2020)

St. John Baptist de la Salle

He was born in Reims, France on April 30, 1651. From his early life he wanted to lead a religious life. He received the tonsure at Saint Salpice on March 11, 1662 at the age of 11 years. He was named the Canon of the Rheims Cathedral at the age of 15 years. But he left Saint Salpice on April 19, 1672 to educate his brothers and to lead the family, due to the death of his parents. He met one Nyel of Raven and as per his request he became interested in giving education to poor children. Then he dedicated much of his life for creating schools for imparting good education to poor children in France. He was then ordained as a priest on April 9, 1678 to dedicate his life fully for the service of poor. He started a new religious institute, the Institute of the Brothers of the Christian Schools, commonly known as Christian Brothers. No priests were involved in the institutes. He and his Brothers succeeded in creating a network of quality schools in France. He was the pioneer in the program for training the teachers. He was the father of modern pedagogy. He was a model of piety. He became more involved in the working with poor youth. He became a poor man by giving all his inheritance in the cause of poor people. He died on April 7, 1719 (Good Friday).

He was beatified on February 19, 1888 and canonized on May 24, 1900 by pope Leo-XIII. He was declared as the patron saint of Teachers by pope Pius-XII on May, 15, 1950.

---JDH---Jesus the Divine Healer---

06 April 2020

முத்திபேறுபெற்ற. மிக்காயேல் ரூவா April 6

இன்றைய புனிதர் : 
(06-04-2020) 

முத்திபேறுபெற்ற. மிக்காயேல் ரூவா (Michael Rua SDB)
பிறப்பு 9 ஜூன் 1837 தூரின், இத்தாலி

இறப்பு 6 ஏப்ரல் 1910 தூரின், இத்தாலி

முத்திபேறு பட்டம்: 29 அக்டோபர் 1972 திருத்தந்தை ஆறாம் பவுல்

இவர் 1837 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள தூரின் (Turin) என்ற இடத்தில் ஜூன் 9 ஆம் நாள் பிறந்தார். இவர் தனது 15-ம் வயதில் தனது படிப்புகளை முடித்துவிட்டு, புனித தொன் போஸ்கோ அவர்கள் குருவாக இருந்தபோது, அவரால் தொடங் கப்பட்ட இளைஞரணியில் சேர்ந்தார். அப்போது மிக்காயேல் ரூவாவும், தொன்போஸ்கோவும் நண்பர்கள் ஆனார்கள். 1861 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ தொடங்கிய சலேசிய சபையில் இளைஞர்களுக்குப் பணியாற்றும் பணியில் ஈடுபட்டார். புனித சலேசிய சபை உருவாவதற்கு தொன்போஸ்கோவிற்கு பெரும ளவில் உதவிசெய்தார். அப்போது இளைஞர்களுக்கு எல்லாவி தங்களிலும் தாயாக இருந்து உதவிசெய்த தொன்போஸ்கோ வின் அம்மா இறந்ததால், இளைஞர்களுக்கு தாய் இல்லை என்ற எண்ணத்தைப் போக்க ரூவா தன் தாயை, இளைஞர்களு க்கு தாயாக இருந்து பணிபுரிய அர்ப்பணித்தார்.

இந்த இளைஞரணியானது திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை உண ர்ந்து, தொன்போஸ்கோவிற்கு துணையாக, தனது 22-ம் வயதில் 1860 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாளன்று குருப்பட்டம் பெற்று இளைஞர்களுக்கு ஞானமேய்ப்பராக பணியாற்றினார். அதன் பிறகு தொன்போஸ்கோவிடமிருந்து விலகி சென்று 1885-ல் பார்சிலோனாவில் இளைஞர்களுக்கான சீடத்துவத்தை தொட ங்கினார். தமது 26 ஆம் வயதில் அழகு துணை வால்டோக்கோ (Mirabello) என்ற குழுவை தொடங்கி, அதற்கு முதல்வராக பொறுப்பேற்றார். பின்பு கத்தோலிக்க அவைகளின் மேலாள ராக பணியாற்றினார். 1865 -ல் போஸ்கோ அவர்களால் சலேசிய சபைகளுக்கு துணைமுதல்வராக அறிவிக்கப்பட்டார். பிறகு 1872 ஆம் ஆண்டு கிறித்தவர்களின் சகாயமாதா சபையை தொட ங்கினார். (Daughter of Mary Help of Christians)
                                                          1888 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ இறந்தவுடன் இச்சபையை வழிநடத்தும் பொறுப்பை மிக்கா யேல் ரூவா ஏற்றுக்கொண்டார். பின்பு திருத்தந்தை பதிமூன் றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் இச்சபை சலேசிய சபை யாக அறிவிக்கப்பட்டது. பின்பு உலகம் முழுவதிலும் சென்று இச்சபை தொடங்கப்பட்டது. பிறகு தனது 73ஆம் வயதில் 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் இத்தாலியிலுள்ள தூரின் என்ற நகரில் இறந்தார். தொன்போஸ்கோ இறந்தபோது 57 ஆக இருந்த சபைக்குழுமங்களை (communities) ரூவா 345 சபை க்குழுமங்களாக பெருக்கினார். 773 ஆக இருந்த சலேசியர்களை 4000-மாக பெருக்கினார். 6 ஆக இருந்த சபை மாநிலங்களை 34 மாநிலங்களாக (Provincialate) 33 உலக நாடுகளில் தொடங்கி வைத்தார். இவர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் முத்திபேறு பட்டம்(Blessed) கொடுக்கப்பட்டது. இன்று வரை "Don" என்ற பெய ரிலேயேதான் சலேசிய குழுமங்கள் அழைக்கப்படுகின்றது.


செபம்:
உமது சிறகுகளின் நிழலில் வைத்து எம்மை பாதுகாத்து வழிநடத்திவரும் எம் அன்பு இறைவா! எங்களால் இயன்றவரை ஓர் நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்க, எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்து வழிநடத்தியருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (06-04-2020)

Blessed Michele Rua

Son of a weapons manufacturer. Attended a Don Bosco Oratory as a boy, and met Saint John. He impressed Don Bosco so much that the future saint sent Michele to college, and made him his assistant in youth work. Priest. Member of the Salesians of Don Bosco. First successor to Saint John Bosco as Superior General of the Salesians; under his leadership the community grew from 700 to 4000 members, from 64 to 341 houses. People who knew him said that he had the gifts of reading hearts, healing and prophecy.

Born :
9 June 1837 in Turin, Italy

Died :
6 April 1910 in Turin, Italy of natural causes

Beatified :
29 October 1972 by Pope Paul VI

---JDH---Jesus the Divine Healer---

05 April 2020

இன்றைய புனிதர் : (05-04-2020)

இன்றைய புனிதர் : 
(05-04-2020) 
தூய வின்சென்ட் பெரெர் (ஏப்ரல் 05)

யோவான் கைது செய்யப்பட்ட பின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாட்சிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்.

வாழ்க்கை வரலாறு

1350 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள வாலன்சியாவில் வின்சென்ட் பெரர் பிறந்தார். இவருடைய பெற்றோர் கன்ஸ்டான்சியா, மிக்வெல் ஆவர். வின்சென்ட் பெரர் தன்னுடைய தொடக்கக் கல்வியை தனது சொந்த ஊரிலேயே கற்றார். அப்போதே அவர் இறையழைத்தலை உணர்ந்தார். எனவே அவர் அனைத்தையும் துறந்துவிட்டு 1367 ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் சேர்ந்து மெய்யியலையும் இறையியலையும் கற்றுத் தேர்ந்து, குருவானவராகி, பின்னாளில் தான் கல்வி கற்ற அதே இடத்திலே பேராசிரியர் ஆனார்.

இதற்கிடையில் வின்சென்ட் பெரர் இருந்த பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்களெல்லாம் உணவுக்குப் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் இவர் மக்களுக்கு மத்தியில் இறங்கி, சிறப்பான முறையில் களப்பணி ஆற்றினார். மட்டுமல்லாமல், வின்சென்ட் பெரருக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளக்கூடிய வல்லமையை இறைவன் கொடுத்திருந்தார். அதனால் அவர் பஞ்சத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி, “இன்னும் ஒருசில நாட்களில் இங்கே ஒரு கப்பல் கோதுமையை ஏற்றுக்கொண்டு வரும்” என்றார். அவர் சொன்னதுபோன்றே கப்பலொன்று கோதுமையை ஏற்றுக்கொண்டு வந்தது. அதைப் பார்த்து மக்களெல்லாம் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதே நேரத்தில் அந்தக் கப்பலிலிருந்த கோதுமையை அள்ளி, மக்களுக்கு அவரவர் தேவைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுத்தார்.

இப்படி வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் வின்சென்ட் பெரரை தானுஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவர் இறையியலைக் கற்பித்து வந்தார். வின்சென்ட் பெரர் தன்னிடம் பாடம் கற்று வந்த மாணவர்களிடம் அடிக்கடி சொல்லக்கூடிய வசனம், “உனது படிப்பில் வெற்றி வேண்டுமா? அப்படியானால் ஜெபத்திற்குப் பிறகு படி” என்பதுதான். இவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, மாணவர்கள் அப்படியே அதைப் பின்பற்றி வந்தார்கள். இவரிடமிருந்த திறமையைக் கண்டு யோலண்டா நாட்டு அரசி இவரை தன்னுடைய தன்னுடைய ஆலோசகராக்கிக் கொண்டார்.

இந்த சமயம் பார்த்து பீட்டர் தே லூனா என்பவர் அவிங்னோனில் இருந்துகொண்டு தன்னை 13 வது திருத்தந்தையாக அறிவித்து வின்சென்ட் பெரரும் அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். வின்சென்ட் பெரரோ அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் திருச்சபைக்கு என்றும் உண்மையாக இருந்து வந்தார். இவர் எப்போதும் இயேசுவிடமும் சாமிநாதரிடமும் பிரான்சிஸ் அசிசியாரிடமும் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். ஒரு சமயம் இவர் செபித்துக் கொண்டிருந்தபோது மேலே சொன்ன மூவரும் அவருக்கு முன்பாகத் தோன்றி, “அன்பு மகனே வின்சென்ட் பெரர்! நீ கடினமான ஒறுத்தல் முயற்சிகள் இருந்து, மக்களையும் அவ்வாறு இருக்கச் சொல்லி, மனம்திரும்பி வாழச் சொல்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்கள். இவரும் அவ்வாறே செய்து மக்களை மனந்திருப்பினார். இப்படி ஆண்டவரின் வார்த்தையை எடுத்துச் சொல்லி, மக்களை மனம்திரும்பச் செய்த வின்சென்ட் பெரர் 1419 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1455 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வின்சென்ட் பெரரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மக்களை மனந்திருந்தி வாழ அழைத்தல்

தூய வின்சென்ட் பெரரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது, அவர் மக்களை மனந்திருந்தி வாழ அழைத்ததுதான் நம் கண்முன்னால் வந்து போகின்றது. இவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இன்றைக்கு மக்கள் குற்ற உணர்வே இல்லாமல் தவறு செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டச் சூழலில் நாம் அவர்களது குற்றத்தை உணரச் செய்து, அவர்களைப் புது வாழ்விற்கு அழைத்துச் சொல்வது நம்முடைய கடமையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசத்தில் திருமுழுக்கு யோவான் தொடாங்கி, ஆண்டவர் இயேசு திருத்தூதர்கள் என அனைவருமே மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்கள். நாமும் அத்தகைய பணியைச் செய்கின்றபோது, இயேசுவின் உண்மையான சீடர்கள் என நம்மை உறுதியாகச் சொல்லலாம்.

ஆகவே, தூய வின்சென்ட் பெரரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று, மக்களை மனமாறச் செய்து, அவர்களை ஆண்டவரிடம் கொண்டு வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

2020-04-05புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)

இன்றைய புனிதர்

2020-04-05புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)

பிறப்பு
23 ஜனவரி 1350
வாலன்சியா(Valencia), ஸ்பெயின்

இறப்பு
05 ஏப்ரல் 1418
ஸ்பெயின்

இவர் ஓர் பக்தியான, உன்னதமான குடும்பத்தில், ஆங்கிலேயர் வில்லியம் பெரர் (William Ferrer) மற்றும் ஸ்பானிஸ் பெண் கான்ஸ்டான்ஷியா(Canstantia) என்பவருக்கும் மகனாக பிறந்தார். பிறந்த நாளிலிருந்தே இவரது வாழ்வு ஆரம்பமானது. இவர் பிறந்த அதே நாளில் வாலென்சியாவில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் தம் ஐந்தாம் வயதில் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந்தார். இவரது பெற்றோர் இவரை, அன்னைமரியிடமும். ஏழைகளிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவராக வளர்த்தனர். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, தான் பெறும் இறைச்சி மற்றும் உயர்தர உணவுகளை தான் உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர்கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார். இதைப் பார்த்த இவர் பெற்றோர் தன் குழந்தையின் தர்ம செயல்களால் ஈர்க்கப்பட்டு, தங்களுக்கென்று இருந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கென்று ஒதுக்கி தன் குழந்தையுடன் சேர்ந்து தாங்களும் தர்மம் செய்தார்கள். வின்சென்ட் எட்டாம் வயதில் படிப்பைத் தொடங்கினார். பன்னிரண்டு வயதில் தத்துவயியலையும் (philosophy), பதினான்காம் வயதில் இறையியலையும்(theology) யாரும் எதிர்பார்க்காத விதமாக திறமையாக படித்து முடித்தார்.

பின்னர் 1367 ஆம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் நாள் வாலன்சியாவிலுள்ள தொமினிக்கன் ப்ரையரில் (Dominican priory) சேர்ந்து, தன்னை கடவுளுக்கு அர்ப்பணமாக்கினார். ஆனால் அவர் சாத்தானின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் வேதனை அடைந்து சபையைவிட்டு வெளியேறி தனியாக செயல்பட நினைத்தார். ஆனால் பெற்றோர் இவரை செபத்தின் வழியாக மீண்டும் மீண்டும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி துறவறமடத்திலேயே, அன்னை மரியாவின் துணையால் தனது துன்பங்களை தாங்கிக்கொண்டு நவதுறவு வரை (Novitiate) பயிற்சிகளை பெறவைத்தனர்.

அதன்பிறகு அவர் பார்சிலோனாவிற்கு(Barcelona) பிரபலமான தத்துவயியல் ஆசிரியராக பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகு 1373 ல் பார்சிலோனாவில் மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் மிகவும் பஞ்சத்தில் அடிப்பட்டு, மக்களால் ஒதுக்கப்பட்டார். ஆனாலும் அவர் இரவு பகலென்று பாராமல் கப்பலில் பயணித்து போதித்தார். இதை கவனித்த கப்பலில் பயணம் செய்த சிலர், இவரை வதைத்து, கேலி செய்வதற்காக உயிருடனிருந்த ஒருவரை இறந்ததுபோல நடிக்கச்செய்தனர். இவர் இறந்த பிணத்தின் முன் செபித்தார். இதை கண்டு அவரைச்சுற்றியிருந்தவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். ஆனால் இவரின் வல்லமையை வெளிப்படுத்த இறைவன் உண்மையிலேயே அவரை இறக்கச் செய்தார். இதையறிந்த பரிகாசம் செய்தோர் பயம் கொண்டு, தவற்றை உணர்ந்து, தாங்கள் கூறிய பொய்யை மன்னிக்கும்படி வேண்டி, மனம்மாறி கிறிஸ்துவை பின் தொடர்ந்தார்கள்.

பின்னர் 1376 ல் மீண்டும் வின்சென்ட் தூலூஸ் (Toulouse) என்ற இடத்திற்கு ஓர் ஆண்டு கல்வியை தொடர அனுப்பப்பட்டார். அங்கு எபிரேய மொழியில் விவிலியத்தை ஆய்வுசெய்தார். அதன்பின்னர் 1379 ல் பார்சிலோனாவில் குருவானார். பிறகு மீண்டும் 1385 - 1390 களில் வாலென்சியாவிற்கு வரவழைக்கப்பட்டு பேராலயத்தில் போதித்தார். அப்போது ஏறக்குறைய 30,000 யூதர்களை மனமாற்றினார். அங்கு இவரது போதனையை கண்ட சில கர்தினால்கள் இவரை பழிவாங்கும் நோக்குடன் இவர்மேல் சில பொய்குற்றங்களைச் சுமத்தி நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அங்கு அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை பீட்டர் டி லூனா(Peter De Luna) என்ற திருத்தந்தை விசாரித்தார். ஆனால் வின்சென்ட் கூறிய உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர் குருவாக இருக்கக்கூடாது என்றும், துறவறத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும் பேசப்பட்ட போது, வின்சென்ட் இடைவிடாது இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன்வழியாக உண்மைகள் வெளிக்கொணரப்பட்டது. இதன்பிறகு இவர் தனது குருத்துவ வாழ்வில் பலவிதமான நோய்களை குணமாக்கி, இறைசக்தியை இவ்வுலகில் வெளிப்படுத்தினார்.

21 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாவிகள் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்து, செய்யும் செயல்களில் "உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனை நினைத்துக்கொள்" என்ற இப்புனிதரின் வார்த்தை மற்றவர்களை ஆழமாக சிந்தித்து செயல்பட தூண்டியது. தனது இறுதிமூச்சுவரை ஓர் சிறந்த குருவாகவே வாழ்ந்து, ஏப்ரல் 5 ஆம் நாள் 1418 ஆம் ஆண்டு இறந்தார்.

இவரது வாழ்க்கை திருமறையை போதிக்கும் குருக்களுக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. மறையுரைகளில் எளிய நடைமுறையைப் பின்பற்றி, இயன்ற அளவிற்கு சான்றுகளை கொடுத்து, பாவம் செய்தவர்களை மனந்திருப்பி, பயனளிக்கும் வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வின் வழியாக நமக்கு விட்டுச்சென்றார்.


செபம்:

அன்பின் பரம்பொருளே எம் இறைவா! நீர் ஒவ்வொரு கிறித்தவர்களையும் நல்ல நற்செய்தியாளராகவே படைத்துள்ளீர் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தூய ஆவியின் வல்லமையால் நீர் எங்களோடும், எங்களை வழிநடத்தும் குருக்களோடும் நாவிலிருந்து பேசி, நாங்களும் புனித வின்சென்ட் பெரரைப் போல நற்செய்தி பரப்புபவர்களாக வாழ்ந்து, ஒரு சிலரையேனும் பாவ வாழ்விலிருந்து மீட்டு, எல்லார்க்கும் எல்லாமுமாக வாழ வரம் தாரும்.

இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி, திருக்காட்சியாளர் கத்தரீனா தோமாஸ் Katharina Thomas CSA

பிறப்பு :1 மே 1531, மலோர்கா தீவு Mallorca, ஸ்பெயின்
இறப்பு :5 ஏப்ரல் 1574, மலோர்கா தீவு

04 April 2020

தூய இசிதோர் (ஏப்ரல் 04)

இன்றைய புனிதர் : 
(04-04-2020) 

தூய இசிதோர் (ஏப்ரல் 04)
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2: 52)

வாழ்க்கை வரலாறு

இசிதோர், 560 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்தில் இவரோடு பிறந்த சகோதரர்கள் லியாண்டர், புல்ஜென்சியஸ் மற்றும் சகோதரி ப்ளோரென்டினா என யாவருமே பிற்காலத்தில் புனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.

இசிதோர் தன்னுடைய மூத்த சகோதரர் லியாண்டர் தந்த உற்சாகத்தினால் கல்வியில் சிறந்து விளங்கி, பிற்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராக உருவெடுத்தார். இவருடைய எழுத்தாற்றலால் உருவான புத்தகங்கள் அதிகம். “History of the Goths, A history of the world, A Dictionary, Encyclopaedia” போன்றவை எல்லாம் இவருடைய எழுத்தாற்றலுக்கு மிகப்பெரிய சான்றுகள். இப்புத்தகங்கள் எல்லாம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

600 ஆம் ஆண்டு, செவில்லேவில் ஆயராக இருந்த இசிதோரின் மூத்த சகோதர் இறந்துவிடவே, அந்தப் பொறுப்பு இசிதோருக்குக் கொடுக்கப்பட்டது. இசிதோர் ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார். இசிதோர் ஏழை எளிய மக்களிடம் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன்னுடைய ஆயர் இல்லத்தை ஏழைகள் அதிகமாக வாழும் பகுதியில் கட்டி எழுப்பினார். மட்டுமல்லாமல் ஏழைகள் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்த்து, தங்களுடைய குறைகளை தன்னிடத்தில் எடுத்துச் சொல்லலாம் என்று கூறி, அதன்படியே செய்தார்.

இசிதோர், மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்று அரும்பாடு பட்டார். அதோடு கூட ஒவ்வொரு பங்காலயத்திற்குப் பக்கத்திலும் குருமடம் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குருமடத்தில் சேர்ந்து இளைஞர் ஆன்மீகக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வந்தார். மக்களும் அவர் சொன்னதைக் கேட்டு, தங்களுடைய குழந்தைகளை குருமடங்களுக்கு அனுப்பி வைத்து ஆன்மீகக் கல்வியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்தார்கள்.

இப்படி இடையறாது மக்களுக்கும் இறைவனுக்கும் பணி செய்து வந்ததால், இசிதோரின் உடல் நலம் குன்றியது. அதனால் அவர் 636 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறப்பதற்கு சிறு நேரத்திற்கு முன்பாக இறைமக்களிடம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை எல்லாம் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொண்டு, அதன்பிறகே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார். இவருக்கு 1598 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் 1722 ஆம் ஆண்டு இறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்த நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழைகளுக்கு உதவி செய்தல்

தூய இசிதோரின் வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அதன்மூலம் அவர் அவர்களுக்குச் செய்த உதவியும் தான் நமது நினைவுக்கு வருகின்றது. இவருடைய நினைவு நாளைக் கொண்டாடுகின்ற நாம் ஏழைகளிடத்தில் அன்பும் அவர்களுக்கு உதவியும் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மிகச் சிறியோராகிய ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று (மத் 25: 40). ஆம், ஏழைகளுக்குச் செய்கின்ற உதவி இறைவனுக்கே சென்று சேருகின்றது. அது நமது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகின்றது என்பது உண்மை.

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ரீவ். அவருடைய வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் திடிரென்று ஒருநாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட அவர் வீல்சேரில் முடங்கிப் போனார். அப்போது பத்திரிக்கையாளர் சிலர் அவருடைய மனைவி டானாலியிடம், “உங்கள் கணவருடைய புனர்வாழ்வு முறை எப்படிப் போகிறது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், “எல்லாருக்கும் நிறைய உதவி செய்கின்றோம்” என்றார். சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு கிறிஸ்டோபர் ரீவ் அவர்களிடம், “எப்போதெல்லாம் எதையோ இழந்த தோல்வி வருகிறதோ அப்போதெல்லாம் இல்லாதவர்களுக்கு உதவுவோம். நமக்கு நாமே உதவிக் கொள்ள நல்ல வழி மற்றவருக்கு உதவுவதும் அதனால் வரும் மகிழ்ச்சியும் தான்” என்று கூறினார்.இதைக் கேட்டு பத்திரிக்கையாளர்கள் மிகவும் வியந்துபோனார்.

ஆம், நமது வாழ்வில் மகிழ்ச்சி பிறக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏழைகளுக்கு உதவி செய்வது. தூய இசிதோரும் ஏழைகளுக்கு அப்படித்தான் உதவி செய்தார்.

ஆகவே, தூய இசிதோரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று ஏழைகளுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

சிசெஸ்ட்டர் நகர தூய ரிச்சர்ட் (ஏப்ரல் 03)

இன்றைய புனிதர் : 
(03-04-2020) 

சிசெஸ்ட்டர் நகர தூய ரிச்சர்ட் (ஏப்ரல் 03)
“இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும், தகர்க்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாய் ஏற்படுத்தியுள்ளேன்” (ஏரே 9: 10)

வாழ்க்கை வரலாறு

ரிச்சர்ட், 1197 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ட்ரூய்ட்விச் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்துபோனார். அதனால் தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரிச்சர்டின் தாயார் இவரை பக்தி நெறியில் வளர்த்ததால், சிறுவயதிலே இவர் இறைப்பற்றிலும் அறிவிலும் சிறந்து விளங்கினார்.

தொடக்கக் கல்வியை தான் பிறந்த ஊரிலே பெற்ற ரிச்சர்ட், மேற்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பாரிசிலும் அதைத் தொடர்ந்து போலோங்கோவிலும் கற்றார். இவரிடமிருந்த அறிவையும் ஞானத்தையும் கண்டு இவரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார்கள். தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினை ரிச்சர்ட் சிறப்புடனே செய்து வந்தார். இதற்கடையில் இவருக்கு குருவாக மாறி, இறைவாக்குப் பணியைச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. எனவே அவர் தான் வகித்து வந்த துணைவேந்தர் பதவி மற்றும் பெரிய இடத்திலிருந்து வந்த திருமணத்திற்கான அழைப்பு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு குருத்துவ வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்தார்.

குருத்துவப் படிப்பை நல்ல முறையில் படித்து முடித்த ரிச்சர்ட் குருவாகி, தன் சொந்த ஊருக்கு அருகிலே நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். அடுத்த ஒருசில ஆண்டுகளில் இவர் சிசெஸ்டர் நகர ஆயராக உயர்த்தப்பட்டார். இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. எப்படியென்றால் அக்காலத்தில் இங்கிலாந்து நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் ஹென்றி என்ற மன்னன் தனக்கு நெருக்கமான ராபர்ட் என்பவரை ஆயராக நியமித்தான். ஏற்கனவே திருச்சபை சிசெஸ்டரில் ரிச்சர்டை ஆயராக நியமித்திருக்க, அரசன் தன் பங்குக்கு ராபர்ட் என்பவரை நியமித்ததால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மூன்றாம் ஹென்றி என்ற அந்த அரசன் ரிச்சர்டை சிசெஸ்டருக்குள் வரவிடாமல் தடுத்தான். இதனால் ரிச்சர்ட் நாடோடியாகவே அங்கும் இங்கும் அலைந்து நற்செய்திப் பணி செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் மனந்தளராது இறைவாக்குப் பணியைச் செய்து வந்தார்.

இந்த நேரத்தில் ரிச்சர்டுக்கு சைமன் என்ற குருவானவரின் நட்பு கிடைத்தது. அவருடைய இடத்தில் தங்கி ரிச்சர்ட் சிலகாலம் நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். இப்படி நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்த தருணத்தில் திருத்தந்தை அவர்கள் மூன்றாம் ஹென்றியிடம், அவர் நியமித்த ஆயரை திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை என்றால், திருச்சபையிலிருந்தே வெளியேற்றப்படுவாய் என்று சொன்னதும் பயந்துபோய், தான் நியமித்த ஆயரை திரும்பப் பெற்றுக்கொண்டான். இதனால் ரிச்சர்ட் சிசெஸ்டர் நகர ஆயராகப் பதவி ஏற்றார். ஆயராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, ரிச்சர்ட் அற்புதமான பணிகளைச் செய்தார். ஏழை எளியவரின் நலனில் அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களுடைய மேம்பாட்டிற்காக இரவும் பகலும் உழைத்தார். அது மட்டுமல்லாமல், திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் ஒருசில விசமிகளிடமிருந்தும் காப்பாற்றக் கடுமையாக உழைத்தார். இப்படி இறைவாக்குப் பணியையும் மக்கள் பணியையும் செய்து வந்த ஆயர் ரிச்சர்ட் 1253 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரிச்சர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவரின் பணியைச் செய்தல்

தூய ரிச்சர்ட்டிடமிருந்து நாம் கற்றுக்க்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வதாகும். ஆயராக இருக்கும்போது மன்னன் மூன்றாம் ஹென்றியிடமிருந்து ரிச்சர்ட்டுக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் கண்டு அவர் பயப்படாமல், அஞ்சா நெஞ்சத்தினராய் ஆண்டவரின் பணியைச் செய்தார். அவரை நினைவுகூருகின்ற நாம் அஞ்சா நெஞ்சத்தோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவர் மீது கொண்ட விசுவாசத்திற்காக உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர் நற்செயாளர் யோவானின் சீடரும் ஸ்மிர்னா நகர ஆயருமான போலிகார்ப். அவரிடம் எதிரிகள், “கிறிஸ்துவை மறுதலி இல்லையென்றால் உன்னை உயிரோடு எரித்துவிடுவோம்” என்றார்கள். அதற்கு அவர், “எனக்கு 86 வயது ஆகின்றது. இத்தனை ஆண்டுகளும் இயேசு எனக்கு எந்தவொரு கெடுதலும் செய்யவில்லை. மாறாக நன்மை மட்டுமே செய்திருக்கின்றார். அப்படிப்பட்டவரை நான் எப்படி மறுதலிப்பேன்” என்றார். இதைக் கேட்டு சினம் கொண்ட எதிரிகள் அவரை உயிரோடு எரித்து கொன்றுபோட்டார்கள். போலிகார்ப், எதிரிகள் தன்னை மிரட்டியபோதும் அஞ்சாமல் தன்னுடைய விசுவாசக்தில் மிக உறுதியாக இருந்தார். அது போன்றுதான் தூய ரிச்சர்டும் தன்னுடைய விசுவாசத்தில் தளராமல் இருந்தார். அதனாலேயே இன்றைக்கு ஒரு புனிதராக உயர்ந்திருக்கின்றார்.

ஆகவே, தூய ரிச்சர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)வனத்துறவி April 2

இன்றைய புனிதர் : 
(02-04-2020) 

புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)
வனத்துறவி
பிறப்பு 1416 கலாப்பிரியா (Calabria

இறப்பு 02 ஏப்ரல் 1507 தூர்ஸ் (Tours)
                                         புனிதர் பட்டம் : 1529
                      திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)
இத்தாலியில் கலாப்பிரியா என்னும் பகுதியில் பவோலா என் னுமிடத்தில் 1416 ஆம் ஆண்டில் பிறந்தார். மிகவும் பக்தியுள்ள இவரது பெற்றோர், ராபர்ட் என்ற பெயரை இச்சிறுவனுக்குச் சூட்டினர். புனித அசிசியாரின் மன்றாட்டினால் பிறந்த இவரை அவருடைய மடத்தில் ஓர் ஆண்டு ஒப்படைத்திருந்தபோது, இச்சிறுவனுக்கு அசிசியார் துறவு உடைஉடுத்தியிருந்தார்கள். அப்போது இச்சிறுவனுக்கு வயது 13. செபத்தில் ஆழ்ந்த பற்றும், மிகவும் தாழ்ச்சியும், ஒறுத்தலும் கொண்டு விளங்கினார். உரோமை நகர், அசிசி திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய பின் தன்பெயரை "பிரான்சிஸ்" என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு 6 ஆண்டுகள் வரை தனிமையை நாடி குகைக்குச் சென்று அங்கு தவவாழ்வில் தன் நாட்களைச் செலவழித்தார். இவரின் தவவாழ்வினால் தூண்டப்பட்டு மேலும் இரு தோழ ர்கள் 1435-ல் இவரை வந்தடைந்தனர். 1454-ல் பலரும் இவரைப் பின்பற்றியதால் ஒரு துறவு மடமும், ஆலயமும் கட்டப்பட்டன. இப்பணியை சிறப்பான முறையில் நிறைவேற்ற, சாதாரண மக் களும், அதிகம் பணம் கொண்டவர்களும், தாராளமான முறை யில் உதவினர். பிரான்சிஸ், மக்களின் இதயச் சிந்தனைகளை அறியும் வரத்தையும், இறைவாக்குரைக்கும் வரத்தையும் பெற் றிருந்தார். பாறை போன்ற இதயம் படைத்த பல ஆன்மாக்களை மனந்திருப்பி இறைவனை நாடச் செய்தார். பிளேக் நோய் அதி கம் இருந்த அக்காலத்தில், இந்நோய்க்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு இடைவிடாமல் செபித்ததில் இப்புனிதரின் புனிதம் காணப்பட்டது.

இப்புனிதரால் தொடங்கப்பட்ட புதிய துறவற சபைக்கு " இறை வனின் இல்லத்தில் மிகச்சிறியோர்" என்று பொருள் தரும் "மினிம்ஸ்" (Minims) என்ற பெயரைச் சூட்டினார். இது “மிகத் தாழ்நிலையினரின் சபை” என்று பிற்காலத்தில் பெயர் பெற் றது. இச்சபையைத் திருத்தந்தை பீடம் 1506 ஆம் ஆண்டில் உறுதி ப்படுத்தியது. பிறரன்பு, தாழ்ச்சி, கடுமையான ஏழ்மை இவை களே இச்சபைக்கு ஆணிவேராக அமைந்தது. இப்புனிதர் பெண் களுக்கென்றும் 3 ஆம் சபையை நிறுவினார்.

இவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தனிமையில் இருந்து செபித்தார். இறுதியில் தனது 91 ஆம் வயதில் 1507 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் புனித வெள்ளிக்கிழமையன்று பிரான்சிலுள்ள தூர்ஸ் (Tours)நகரில் இறைவனடி சேர்ந்தார். இறந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்க ப்பட்டது. இவரது இறப்பிற்குப்பின், மிக விரைவில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் 400 துறவற மடங் கள் பலுகிப் பெருகின. 1562-ல் இவரது உடல் அழியாதிருந்த நிலையில் காட்டுமிராண்டிகளான யூகனாட்ஸ் (Youganats) என்றழைக்கப்பட்டவர்கள், இவரது கல்லறையைத் தோண்டி புனிதரின் உடலை வெளிக்கொணர்ந்து அதைச் சுட்டெரித்தனர்.


செபம்:
எங்கள் தாயும், தந்தையுமான மூவொரு இறைவா! புனித பவோலா பிரான்சிஸைப் போல நாங்களும் செப, தவ வாழ்வினால் தூண்டப்பட்டு, அவரின் உன்னதமான முன்மாதிரியைப் பின்பற்றி, பல ஆன்மாக்களை மனந்திருப்பி, உமக்கு சான்று பகர்ந்து வாழ வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

கிரநோபல் நகர தூய கியூ (ஏப்ரல் 01)

இன்றைய புனிதர் : 
(01-04-2020) 

கிரநோபல் நகர தூய கியூ (ஏப்ரல் 01)
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார் (லூக் 1:38).

வாழ்க்கை வரலாறு

கியூ, 1052 ஆம் ஆண்டு, பிரான்ஸில் உள்ள வலன்ஸ் என்னும் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒடிலோ நாட்டிற்காகப் போராடிய இராணுவ வீரர். தாயார் குடும்பத்தை அன்பாய் வழிநடத்திய ஓர் இல்லத்தரசி.

அன்பான பெற்றார், அழகான குடும்பச் சூழல் என்று வளர்ந்த கியூ, சிறுவயது முதலே இறைவனிடத்தில் ஆழமான பக்தி கொண்டு வளர்ந்தார். தனது தொடக்கக் கல்வியை வலன்ஸ் நகரில் பெறும்போது இறைவனின் அழைப்பை உணர்ந்தார். படிப்பை முடித்ததும் குருமடத்தில் சேர்ந்து குருவானார். சில ஆண்டுகளிலே அவர் கிரநோபல் நகரின் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டு கிரநோபல் நகருக்குச் சென்றபிறகு சந்தித்த முதல் பிரச்சனை கிறிஸ்தவர்களுடைய பலதார மனம்தான். ஆயர் கியூ தன்னுடைய வல்லமையான போதனையால் கிறிஸ்தவர்களிடமிருந்த அந்த தீய பழக்கத்தை அப்புறப்படுத்தினார். இப்பிரச்சனையோடு ஆயர் இன்னொரு பிரச்சனையையும் சந்தித்தார். அதுதான் பாவ மன்னிப்புக்காக பெருந்தொகை வாங்குவது. இதனையும் அவர் அறவே ஒழித்தார்.

இப்படி அவருடைய ஆயர் பணி நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், அவர் மீண்டுமாக துறவற மடத்தில் சேர்ந்து அங்கேயே ஒரு சாதாரண துறவியைப் போல் வாழத் தீர்மானித்தார். அதன்பேரில் அவர் அவெர்ணாவில் இருந்த துறவற மடத்திற்குச் சென்று அங்கு சிலகாலம் துறவற வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் திருத்தந்தை இரண்டாம் கிரகோரியார் கியூவின் சேவை கிரநோபல் மக்களுக்குத் தேவை என்பதை உணர்ந்து, அவரை மீண்டுமாக அந்நகரின் ஆயராக நியமித்தார். இரண்டாம் முறையாக கிரநோபல் நகரின் ஆயராக பதவியேற்றுக் கொண்டபிறகு ஆயர் கியூ இன்னும் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக துறவற சபைகளை அதிகமாக ஊக்கப்படுத்தி, அவர்களைத் தன்னுடைய மறைமாவட்டத்தில் நற்செய்திப் பணி செய்யப் பணித்தார். இப்படியாக ஆயர் கியூவுக்கும் தூய ப்ருனோ மற்றும் அவர்களுடைய ஆறு தோழர்களுக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

ஆயர் கியூ ஏழைகள் மட்டில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். சமயங்களில் அவர்கள் உணவின்றிப் பட்டினியாய் கிடந்தபோது திருச்சபைச் சொத்துகளையும் ஏன் ஆயருடைய மோதிரத்தையும்கூட விற்று அவர்களுடைய பசியைப் போக்கினார். அந்தளவுக்கு அவர் ஏழைகள் பால் அன்பு கொண்டிருந்தார். இப்படி அவர் இடையறாது பணி செய்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. எனவே அவர் திருத்தந்தையிடம், மீண்டுமாகத் துறவற மடத்திற்குச் சென்று, அங்கே துறவியாக வாழலாமா என்று அனுமதி கேட்டார். அதற்கு திருத்தந்தை மறுப்புச் சொல்லவே, கியூ கடைவரைக்கும் ஆயராக இருந்து 1132 ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்த அடுத்த இரண்டாவது ஆண்டில் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கியூவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்ம்.

1. கீழ்படிந்து வாழ்தல்

ஆயர் தூய கியூவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த கீழ்படிதல்தான். ஆயர் பதவியை ராஜினமா செய்து அவ்வெர்ணாவில் இருந்த துறவற மடத்தில் அவர் துறவியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது திருத்தந்தை ஏழாம் கிரகோரியார் மீண்டுமாக அவரை கிரநோபிலின் ஆயராகப் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டபோது, எந்தவித மறுப்பும் சொல்லாமல், இறைவனின் திருவுளம் நிறைவேறட்டும் என்று கீழ்படிதலோடு ஆயர் பதவியை ஏற்றுக்கொண்டார். தூய கியூவிடமிருந்த கீழ்படிதல் என்ற பண்பு நம்மிடம் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிலிப்பிலியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2: 6-11 ல், இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்படிந்து வாழ்ந்தனால், தந்தைக் கடவுள் அவரை மேலும் மேலும் உயர்த்தினார் என்று பவுலடியார் கூறுவார். நாமும் இறைவனின் திருவுளத்திற்கு கீழ்படிந்து நடக்கும்போது இறைவன் நம்மை மேலும் மேலும் உயர்த்துவார் என்று உண்மை.

சிறுமி ஒருத்தி தன்னுடைய தோழியிடம் சென்று, “நாங்கள் எங்களுடைய வீட்டிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா போகிறோம். நீயும் வருகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்தக் சிறுமி, “நான் என்னுடைய பெற்றோரிடத்தில் கேட்டுவிட்டு அவர்கள் சரியென்று சொன்னால் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய பெற்றோரிடத்தில் அனுமதி கேட்கப் போனாள். போனவள் திரும்பி வந்து தன் தோழியிடம், “என் பெற்றோர் என்னை போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் வரவில்லை” என்றாள். அதற்கு முதல் சிறுமி, “நீ உன்னுடைய பெற்றோரிடத்தில் கொஞ்சம் அழுத்திக் கேட்டிருந்தால், அவர்கள் விட்டிருப்பார்கள். நீ அவர்களிடத்தில் அழுத்திக் கேட்கவில்லை போலும், அதனால்தான் அவர்கள் உன்னை விடவில்லை” என்றாள். “அப்படியில்லை, என்னுடைய பெற்றோருக்கு எது நல்லதெனத் தெரியும். அவர்கள் சொன்னதற்குக் கீழ்படிந்து நடப்பதே எனக்கும் நல்லது” என்றாள் இரண்டாம் சிறுமி.

ஆம் நாம் நமது பெற்றோரின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து நடப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து நடப்பது. இன்று நினைவுகூறும் தூய கியூவும் இறைவனுக்கு கீழ்படிந்து நடந்தார், அதனால் இறைவன் அவரைப் பன்மடங்கு உயர்த்தினார்.

ஆகவே, தூய கியூவை போன்று நாமும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

31 March 2020

முரானோ நகர தூய டேனியேல் Saint Daniel of Venice மார்ச் 31)

இன்றைய புனிதர் : 
(31-03-2020) 

முரானோ நகர தூய டேனியேல் (மார்ச் 31)
இயேசு அவனிடம், “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார். (மத் 19 :22)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுக்கூரும் தூய டேனியல் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக வியாபாரம் செய்து வந்தார். வியாபாரம் என்றால் இன்றைக்கு ஒருசிலர் செய்துவருபோல் பொய்யை மூலதனமாகப் போட்டு, கள்ளத்தராசியால் யாருடைய பணத்தையும் கபளீகரம் செய்யாமல், நேர்மையான முறையில் வியாபாரம் செய்து வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து கிடைத்த கொஞ்ச இலாபத்தையும்கூட அவர் ஏழை எளியவருக்குக் கொடுத்து உதவி வந்தார்.

வியாபார நிமித்தமாக டேனியேல் அடிக்கடி இத்தாலியில் உள்ள வெனிஸ் நகருக்குச் செல்வதுண்டு. அப்படிச் செல்லும்போது அவர் கமல்தனிஸ் துறவிகளுடைய வாழ்க்கை முறையைப் பார்த்தார். அவர்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டு இறைவன் ஒருவரை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். மட்டுமல்லாமல் அவர்கள் எல்லாரிடத்திலும் அன்போடும் பாசத்தோடும் பழகி வந்தார்கள். இதனால் அவர்கள் எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார்கள். இவற்றையெல்லாம் பார்த்த டேனியலுக்கு தானும் அந்தத் துறவிகளைப் போன்று ஆகவேண்டும் என்ற எண்ணம் உருவானது. ஏற்கனவே தான் சம்பாதித்ததை எல்லாம் ஏழை எளியவருக்குக் கொடுத்துவந்த டேனியலுக்கு துறவியாக மாறவேண்டும் என்ற ஆசை வந்ததும், தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் விற்று எழைகளுகுக் கொடுத்துவிட்டு துறவறம் பூண்டார்.

துறவறம் புகுந்த பிறகு, மற்ற எல்லாத் துறவிகளுக்கும் மிகவும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். குறிப்பாக துறவற மடத்தில் யாருமே செய்ய முன்வராத வேலைகளையும்கூட செய்ய முன்வந்தார். அது மட்டுமல்லாமல், அவர் எல்லாரோடும் அன்போடும் பாசத்தோடும் இருந்தார். அதனால் அவரை எல்லாருக்கும் பிடித்துப் போனது. இப்படிப்பட்டவர் ஒருநாள் இரவுநேரத்தில் பாதையோரமாய் சென்றுகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத சில கொள்ளையர்கள் டேனியலிடம் ஏராளமாகப் பணமிருக்கின்றது என்று எண்ணி, அவரை கத்தியால் குத்திக் கொன்று போட்டுச் சென்றுவிட்டனர். அவரோ அந்த இடத்திலே துடிதுடிக்க இறந்து போனார். டேனியேல் இறந்த ஆண்டு 1411 ஆகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய டேனியலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஏழைகளுக்குக் கொடுத்து வாழவேண்டும்

தூய டேனியலிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரைப் போன்று நம்மிடத்தில் இருப்பதை, தேவையில் உள்ள ஏழை எளியவருக்குக் கொடுத்து வாழவேண்டும் என்பதுதான். டேனியல் தன்னிடமிருந்த செல்வத்தில் கொஞ்சத்தை மட்டும் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை. தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். அவரிடத்தில் இருந்த தாராள மனம் நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில், பெரிய கிரகோரியரின் வாழ்வில் நடந்த ஒருசில நிகழ்வுகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் மிகவும் பொருளுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. அவர் உரோமை நகரில் மிகப் பெரிய செல்வந்தராய் இருந்தார். ஒரு கட்டத்தில் இறைவன் தன்னை அழைக்கின்றார் என்பதை உணர்ந்ததும் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு இறைப்பணியைச் செய்யத் தொடங்கினார். பின்னர் அவர் திருத்தந்தையாக உயர்ந்த பின்பும்கூட ஏழை எளியவரிடத்தில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அவர் தனக்கு சாவு நெருங்கி வருகின்றது என்பதை உணர்ந்ததும் தன்னுடைய மேலாடையைக் கழற்றி, நகரில் இருந்த ஏழையிடம் கொடுத்து, அதனை அவர் குளிருக்குப் போர்த்திக் கொள்ளச் சொன்னார். அந்தளவுக்கு அவர் ஏழைகள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அந்த அன்பிற்கு ஈடாக தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தார்.

தூய டேனியலைப் போன்று, பெரிய கிரகோரியாரைப் போன்று நாமும் ஏழைகளிடத்தில் உண்மையான அன்போடு இருக்கின்றோமா? அவர்களுக்கு நம்மால் இயன்றதைத் தருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்களில் ஏழைகள் அப்படியிருக்கக் காரணம் அவர்கள் உழைப்பதில்லை, சோம்பேறிகளாகவே இருக்கின்றார்கள் என்று உண்மையை அறியாமல், அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றோம். உண்மையில் இந்த சமூகம் அவர்களை உயரவிடாமல் அப்படியே வைத்திருக்கின்றது. அதுதான் காரணம். ஆகவே, இப்படிப் பட்டவர்களுக்கு நாம் உதவி செய்கின்றபோது அது இறைவனுக்குச் செய்யக்கூடிய உதவி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

எனவே, தூய டேனியலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழைகள்மீது உண்மையான அன்பு கொண்டு வாழ்வோம், அவர்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (31-03-2020)

Saint Daniel of Venice

St Daniel of Venice was born in 15th century AD. He was the 15th-century Camaldolese monk at Venice, Italy. St Daniel was also Known for giving away everything he had to care for the poor, and for living in continuous prayer.

Date of Birth : 15th Century

Country of Birth : Germany in Europe

Matrimony/Holy Orders : Saints who were Monks
Profession Monk

Place of Work : Italy

Date of Death : 31 March 1411 AD

Place of Death : San Mattia di Murano, Venice, Italy

Feast Day : March 31, March 20

Beautification : Beatified by N/A

Canonization : Canonized by N/A

---JDH---Jesus the Divine Healer---

30 March 2020

சபை நிறுவுநர் கசோரியா நகர் லூட்விக் Ludwig von Casoria OFM march 30

இன்றைய புனிதர்
2020-03-30
சபை நிறுவுநர் கசோரியா நகர் லூட்விக் Ludwig von Casoria OFM
பிறப்பு
11 மார்ச் 1814,
நேயாப்பள் Neapel, இத்தாலி
இறப்பு
30 மார்ச் 1885,
நேயாப்பல், இத்தாலி

இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து குருவானார். இவர் ஏழைகளையும் வயது முதிர்ந்தோரையும் நோயாளிகளையும் தன் இதயத்தில் தாங்கி பராமரித்தார். எண்ணிலடங்கா மருத்துவமனைகளையும் வயோதிகர் இல்லங்களையும் சாகும் தருவாயில் உள்ளவர்களுக்கென இல்லங்களையும் பள்ளிக்கூடங்களையும் கட்டினார். காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்க்கும் பள்ளிகளை நிறுவினார். அவர்கலை பராமரிப்பதற்கென இல்லங்களையும் கட்டினார்.

இவர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஒழுங்குகளைக் கடைப்பிடித்தார். அச்சபையை உயிரோட்டமுள்ளதாக் வளர்த்தெடுத்தார். இவர் ஆப்ரிக்காவில் மறைபரப்பு பணியை பரவச் செய்ய ஊக்கமூட்டினார். ஆப்ரிக்கா குழந்தைகளுக்கென இரண்டு இல்லங்களை கட்டினார். அக்குழந்தைகளை அடிமைத்தனங்களிலிருந்து மீட்டு, சுதந்திரமான வாழ்வை வாழ வழிகாட்டினார். பிறகு கிரவ்வன் சகோதரர்கள், கிரவ்வன் சகோதரிகள் Grauen Brüder, Grauen Schwester என்ற இரு சபைகளை ஆப்ரிக்காவில் தொடங்கினார்.


செபம்:
நம்பினோர்க்கு மனத்திடன் அளிக்கும் ஆண்டவரே! துறவி லூட்விக்கின் வேண்டுதல்களுக்கு நீர் கனிவாய் செவிசாய்த்தீர். அவரின் வழியாக பல ஏழைகளை பயனடைய செய்தீர். விடுதலையற்றவர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்தீர். அவர் செய்த செயல்கள் அனைத்திலும் நலன்களின் பிறப்பிடத்தை மற்றவர்கள் பெறச் செய்தீர். அவர் ஏற்படுத்திய அனைத்து நிறுவனங்கள், சபைகள் அனைத்தையும் நீர் பராமரித்து வழிநடத்தும். அச்சபையில் வாழும் ஒவ்வொருவரும், அவர்களின் பணிவிடைகளைப் பெறும் அனைவரும் சொல்லாலும் செயலாலும் உமக்குகந்தவர்களாக வாழ செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

வேசோபுரூன் நகர் துறவி டீமூட் Diemut von Wessobrunn OSB
பிறப்பு : 1060 , பவேரியா
இறப்பு : 30 மார்ச் 1130, வேசோபுரூன், பவேரியா

தூய யோவான் கிளிமாக்கஸ் (மார்ச் 30). Saint John Climacus

இன்றைய புனிதர் : 
(30-03-2020) 

தூய யோவான் கிளிமாக்கஸ் (மார்ச் 30). Saint John Climacus
“உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைகுரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார். (1 கொரி 10 13)

வாழ்க்கை வரலாறு

யோவான் கிளிமாக்கஸ் பாலஸ்தினத்தில் பிறந்தவர். இவருடைய குழந்தைப் பருவம் குறித்த போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை, யோவான் கிளிமாக்கசுக்கு பதினாறு வயது ஆனபோது சீனாய் மலையில் இருந்த துறவற மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் ஜெப, தவ வாழ்வில் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டு இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

மடத்தில் இவர் துறவியாக வாழ்ந்த சமயத்தில் சாத்தான் இவரைப் பலவிதமாக சோதித்தது. அத்தகைய சமயங்களில் எல்லாம் இவர் இறைவனுடைய வல்லமையால் எல்லாவிதமான சோதனைகளையும் வெற்றிகொண்டார். யோவான் கிளிமாக்கஸ் எப்போதும் நாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருந்தார். அதனால் நிறையப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார். இவர் விவிலியத்தை நன்றாகக் கற்றுத்தெரிந்திருந்தார். அதனால் இவருடைய போதனையைக் கேட்பதற்கு துறவிகள், இறைமக்கள் என ஏராளமான மக்கள் அவருடைய இருப்பிடம் தேடி வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆண்டவருடைய நற்செதியை மிகச் சிறப்பான முறையில் எடுத்துரைத்து வந்தார். இவர் எழுதிய ‘Ladder Of Perfection’ என்ற புத்தகம் இன்றைக்கும் மக்களால் விரும்பிப் படிப்படக்கூடிய புத்தகமாக இருந்து வருகின்றது.

யோவான் கிளிமாக்கசுக்கு 74 வயது நடக்கும்போது அவரை ஆதீனத் தலைவராக ஏற்படுத்தினார்கள். இத்தனைக்கும் அவர் அந்தப் பொறுப்பை விரும்பே இல்லை. இருந்தாலும் அதனை இறைத்திருவுளமென ஏற்றுக்கொண்டு தன்னால் இயன்ற மட்டும் அப்பணியைச் சிறப்புடனே செய்து வந்தார். இவர் 649 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 30 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டியா பாடம்

தூய யோவான் கிளிமாக்கசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நாவடக்கம்

தூய யோவான் கிளிமாக்கசிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவருடைய நாவடக்கம்தான். அவர் நாவை அடக்கி ஆண்டார். அதனாலேயே அவர் நிறையப் பிரச்சனைகள் வராதவாறு பார்த்துக்கொண்டார். தூய யோவான் கிளிமாக்கசை நினைவுகூரும் நாம் அவரைப் போன்று நாவை அடக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் ரவீந்திரன் என்ற ஒரு வேலையில்லாப் பட்டதாரி இருந்தான். அவன். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றும், நாவடக்கமின்றி பதில் கூறியதால் எங்குமே வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தான். இது குறித்து அவன் தந்தை அவனுக்கு எத்தனையோ முறை அறிவுரை அளித்தும், தேர்வு நேரத்தில் அவனையும் அறியாமல் ஏதாவது ஏடாகுடமாக பதில் அளித்து அவமானப்பட்டு வெளியே வந்தான்.

இப்படியே நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் ரவீந்திரன் ஒருநாள் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தான். கேள்வி கேட்பவர் தாறுமாறாகக் கேட்டாலும், பொறுமையுடனும் பணிவுடனும் பதில் அளிக்கத் தீர்மானித்தான். சில நாட்களிலேயே அவனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது. அவன் பயந்தபடியே தேர்வாளர் இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்டார். “என்னப்பா! பட்டம் பெற்று ஓராண்டு ஆகியுமா வேலை கிடைக்கவில்லை?” என்றார். “ஆமாம் சார்!” என்று சொன்னான் ரவீந்திரன். “இதற்கு முன் வேலை செய்த அனுபவம் உண்டா?” என்றார் அந்தத் தேர்வாளர். “இல்லை! வேலையே இதுவரை கிடைக்காததால் அனுபவத்திற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்றான் அவன்.
“அனுபவம் இல்லாத உன்னை எப்படி வேலைக்குச் சேர்த்து கொள்ள முடியும்?” என்று தேர்வாளர் இழுத்ததும் அவன், “தயவு செய்து ஒரு வாய்ப்புக் கொடுங்கள்! என் திறமை, உழைப்பு ஆகியவற்றை நிரூபிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்!” என்றான் ரவீந்தரன். “சரிதான்! நீ அனுபவம் பெறவே ஆறு மாசம் ஆகும். அதுவரை நான் தண்டச்சம்பளம் கொடுக்க வேண்டுமா?” என்றார் தேர்வாளர். அதற்கு அவன், “முதல் ஆறு மாதம் சம்பளமின்றியே வேலை செய்யத் தயாராயுள்ளேன்” என்றான்.

ரவீந்திரனின் இந்த அடக்கமான அதே சமயம் தன்னம்பிக்கையுடன் கூடிய பதில்கள் தேர்வாளருக்குத் திருப்தி உண்டாக்கியது. இருந்தாலும் அவன் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பினார். “உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ சொல்வதை நம்பி உனக்கு எவ்வாறு வேலை கொடுக்க முடியும்?” என்று அவனைச் சீண்டினார். அதுவரை பணிவுடன் பதிலளித்த ரவீந்திரன் திடீரென பொறுமை இழந்தான். “உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது, திறமையுள்ள என்னால் வேலை செய்ய முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு அறையை விட்டு ரவீந்திரன் வெளியேறினான்.

அவன் வெளியே வந்தபின்தான் உணர்ந்தான். ஒரு நிமிடம் பொறுமை காக்காமல் நாவடக்கத்தை மறந்து பேசியபேச்சினால் நல்ல வேலை கிடைக்காமல் போய்விட்டதே” என்று. பலரும் இப்படித்தான் நாவை அடக்க முடியாமல் அழிவினைச் சந்திக்கின்றார்கள். ஆனால் தூய யோவான் கிளிமாக்காசோ நாவடக்கத்தோடு வாழ்ந்தார். அதனால் பலருடைய நன்மதிப்பைப் பெற்றார்.

ஆகவே, தூய யோவான் கிளிமாக்கசின் நினைவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணியை சிறப்புடன் செய்வோம். நாவை அடக்கி ஆளக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (30-03-2020)

Saint John Climacus

Well educated and came to adulthood in a intellectual environment. Monk on Mount Sinai at age 16. Hermit in various places in the Arabian Desert. Abbot at Mount Sinai at age 75. Just before his death he resigned his position to return to his solitary life. Ascetical writer whose works have for 15 centuries influenced those seeking the holy life.

Born :
between 505 and 579 in Syria

Died :
between 605 and 649 on Mount Sinai of natural causes

---JDH---Jesus the Divine Healer---

29 March 2020

கலாபிரியன் நகர் துறவி பெர்ட்ஹோல்டு Berthold von Kalabrien march 29

இன்றைய புனிதர்: 
(29-03-2020) 
கலாபிரியன் நகர் துறவி பெர்ட்ஹோல்டு Berthold von Kalabrien

பிறப்பு 1100, லிமோகெஸ் Limoges, பிரான்சு

இறப்பு1195, கார்மேல் மலை

இவர் கார்மேல் சபையைத் தொடங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். இவர் தன்னுடன் பல சகோதரர்களை இணைத்துக் கொண்டு, பல துறவற இல்லங்களை கட்டினார். இவர் பலமுறை திருக்காட்சிகளை பெற்று தீர்க்கதரிசிகளைப் போல வாழ்ந்தார். இவர் மிக அர்த்தமுள்ள வகையில் தனது துறவற வாழ்வை வாழ்ந்தார். எப்போதும் இறைவனுடன் ஒன்றித்து செபித்தார். தனது சபைத் தலைவருக்கு பலவிதங்களிலும் உடனிருந்து உதவினார். இவர் இறந்தபிறகு இவரின் சபை எருசலேமிலும் பரவியது. தனது சபை பல இன்னல்களை சந்தித்து அப்போதெல்லாம் இவர், இறைவனின் அருளால் மிகத் திறமையுடன் செயல்பட்டு தன் சபையை துன்பத்திலிருந்து மீட்டார்.

செபம்:
பரிவன்புமிக்க ஆண்டவரே! உமக்கு ஊழியம் புரிகின்ற எங்கள்மேல் மனமிரங்கி உம் அருள்கொடைகளை பொழிந்தருளும். நாங்கள் துறவி பெரட்ஹோல்டை போல நம்பிக்கை, எதிர்நோக்கு, இறையன்பினால் பற்றியெரிந்து உம் கட்டளைகளை கடைபிடித்து வாழ்வதில் கண்ணும் கருத்துமாய் நிலைத்திருக்க செய்தருளும். கார்மேல் சபை துறவிகளை நீர் ஆசீர்வதித்து அவர்களின் அற்புதமான செப வாழ்வினால் இவ்வுலகை பாவத்திலிருந்து மீட்டருளும். 

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

28 March 2020

தூய மூன்றாம் சிக்ஸ்துஸ் (மார்ச் 28

இன்றைய புனிதர் : 
(28-03-2020) 

தூய மூன்றாம் சிக்ஸ்துஸ் (மார்ச் 28)
“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவார்கள்” (மத் 5: 9)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூருகின்ற சிக்ஸ்துஸ் 300 ஆம் ஆண்டு, உரோமையில் பிறந்தார். இவர் தூய அகுஸ்தினாருக்கு நெருங்கிய நண்பர். இவர் துறவறத்தார், இறைமக்கள் என அனைவருடைய நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அதனால், திருத்தந்தை முதலாம் செலஸ்டினுடைய மறைவுக்குப் பின்னர் அனைவரும் இவரையே திருத்தந்தையாக உயர்த்தினார்கள்.

திருத்தந்தை சிக்ஸ்துஸ் இயல்பாகவே அமைதியான சுபாவம் உடையவர். ஆனால் திடகாத்திரமான மனதுடையவர். இவருடைய காலத்தில் இரண்டு தப்பறைக் கொள்கைகள் திருச்சபைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தன. ஒன்று நொஸ்தோரியனிசம், இன்னொரு பெலேஜியனிசம். நொஸ்தோரியனிசம் இயேசு இரண்டு ஆட்கள் என்று சொல்லிவந்தது. அதனால் அது மரியா இறைவனின் தாய் கிடையாது என்று சொல்லி வந்தது. பெலேஜியனிசமோ ஆதிப் பெற்றோர் செய்த பாவத்தின் வழியாக அவருடைய வழிமரபினராகிய நமக்கு ஜென்மப் பாவம் வருவதில்லை என்று சொல்லி வந்தது. இந்த இரண்டு தப்பறைக் கொள்கைகளையும் திருத்தந்தை அவர்கள் மிகவும் பொறுமையாகத்தான் எதிர்த்தார். அதனால் பலர் கேலி செய்தார்கள்; அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத ஆசாமி என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். அத்தகைய தருணங்களில் கூட இவர் பொறுமையாகவும் அமைதியாகவும்தான் பிரச்னையை எதிர்கொண்டார்.

இவருடைய பொறுமையான, அமைதியான நடைமுறைக்கு பலன் கிடைத்தது. 433 ஆம் ஆண்டு உரோமையில் கூட்டப்பட்ட சங்கத்தில் நொஸ்தோரியனிச தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்த, அலெக்ஸ்சாந்திரிய நகர சிரில் அதற்கு மன்னிப்புக் கேட்டு, திருச்சபையோடு இணைந்தார். அது மட்டுமல்லாமல் அலெக்ஸ்சாந்திரிய நகர் சிரிலுக்கும் அந்தியோக்கு நகர ஜானுக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. இதனையும் திருத்தந்தை அவர்கள் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டுவந்தார். இதனால் அனைவரும் திருத்தந்தை சிக்ஸ்துஸ் அவர்களை வெகுவாகப் பாராட்டினார்கள். தப்பறைக் கொள்கைகளுக்கு முடிவு கட்டிய பின், திருத்தந்தை லிபோரியஸ் ஆலயத்தையும் லாத்தரன் பேராலயத்தை புதுபிக்கத் தொடங்கினார். இதற்கு ஏராளமான பொருளுதவிகளை மன்னர் மூன்றாம் வாலண்டைன் செய்தார். இப்படி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இறைப்பணியை மிகச் செவ்வனே செய்த திருத்தந்தை சிக்ஸ்துஸ் 440 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் நாள், இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மூன்றாம் சிக்ஸ்துசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அமைதியை ஏற்படுத்துபவர்களாவோம்

தூய சிக்ஸ்துசின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கும்போது அவரிடமிருந்த அமைதியை, சமரசத்தை ஏற்படுத்துகின்ற பண்புதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. பலரால் அது முடியவே முடியாத காரியமாகும். ஏனென்றால், ஆமை புகுத்த வீடு உருப்படாததுபோல், சிலர் புகுந்து வீடும், நட்பும் உருப்படாமலே போய்விடும். இத்தகைய சூழ்நிலையில்தான் சிக்ஸ்துஸ் நம்முடைய கவனத்துக்கு உள்ளாகின்றார். தூய சிக்ஸ்துசைப் போன்று நாம் குழப்பமான, அமைதியற்ற சூழ்நிலையில் அமைதியை ஏற்படுத்த முயல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் என ஒரு நடுத்தரக் குடும்பம் வாழ்ந்து வந்தது. கணவனும், மனைவியும் அமைதியானவர்கள். ஆனால் அவர்களின் இரு குழந்தைகளும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். நாட்கள் செல்லச் செல்ல, அவர்கள் முரட்டு குணம் உள்ளவர்களாக மாறி வந்தார்கள். பெற்றோர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர்களது குணத்தை மாற்ற முடியவில்லை.

அந்தச் சமயத்தில் அவர்கள் ஊருக்கு ஒரு மகான் வந்தார். ஒருநாள் இந்தத் தந்தை அந்த மகானைப் போய்ப் பார்த்தார். தன் குழந்தைகளைப் பற்றி சொன்னார். பொறுமையாகக் கேட்ட மகான், “கடுகு கம்பு” என்ற ஒரு மந்திரத்தை அவருக்குக் கற்றுத் தந்தார். அவரும் நல்லது நடக்கும் என்ற ஒரு சிந்தனையோடு வீடு திரும்பினார். குழந்தைகள் சண்டைபோட ஆரம்பித்தவுடன் அவர் அந்த மந்திரத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். எப்படி என்றால், பிள்ளைகளுக்குள் சண்டை தொடங்கியவுடன், அவர் சிறிதளவு கடுகையும், சிறிதளவு கம்புதானியத்தையும் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தன் பிள்ளைகளைக் கூப்பிட்டார். அவர்கள் இருவரிடமும் கடுகு கம்பு இரண்டையும் கலவையைக் கொடுத்து, “குழந்தைகளே!, இதில் உள்ள கடுகையும் கம்பையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு வாருங்கள்! உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்” என்று அன்பாக சொன்னார்.

அவ்வளவுதான், பிள்ளைகள், சண்டை போடுவதை மறந்து அப்பா சொன்ன வேலையைச் செய்ய ஆரம்பித்தனர். அடிக்கடி இப்படிச் செய்ததில் அவர்களுக்கு அதுவே பிடித்தமான விளையாட்டானது. பின்னர் சண்டைபோடும் குணமே மாறி ஒருவர் ஒருவர் மீது அன்புகாட்டத் தொடங்கி விட்டார்கள். சண்டை போட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் அமைதியை ஏற்படுத்த அவர்களுடைய தந்தை மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. நாமும் நாம் வாழக்கூடிய சூழ்நிலையில் அமைதியை ஏற்படுத்த முயல்வதே சிறப்பான ஒரு காரியமாகும்.

ஆகவே, தூய சிக்ஸ்துசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று அமைதியை ஏற்படுத்தும் மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

துறவி இங்பெர்ட் நாப் Ingbert Naab march 28

இன்றைய புனிதர்
2020-03-28
துறவி இங்பெர்ட் நாப் Ingbert Naab
பிறப்பு
5 நவம்பர் 1885,
டான் Dahn, ஜெர்மனி
இறப்பு
28 மார்ச் 1935,
ஸ்ட்ராஸ்பூர்க் Straßburg, பிரான்சு

கார்ல் என்பது இவரின் திருமுழுக்கு பெயர். இவர் நேஷனல் சோசலிசத்தை (Nationalsozialismus) எதிர்த்து போரிட்டார். 1932 ஆம் ஆண்டு ஆடோல்ஃப் ஹிட்லரை எதிர்த்து கடிதம் எழுதினார். இந்நிகழ்ச்சி ஜெர்மனி முழுவதும் பரவியது. மேலும் ஹிட்லருக்கு எதிராக செயல்பட பல கடிதங்களை எழுதி கிறிஸ்துவ மக்களை ஒன்று சேர்த்து போராடினார். ஹிட்லரையும் அவரின் ஆட்சியில் நடந்த அநியாயங்களையும் எதிர்த்து போரிட்டார். இதனால் 1 ஜூலை 1934 ஆம் ஆண்டு ஹிட்லரின் கூட்டாளிகளால் அடிமையாக பிடித்துக் கொண்டு செல்லப்பட்டார். இவர் இறந்த பிறகு இவரின் உடல் கப்புசின் சபை குருக்களால் எடுத்துச் செல்லப்பட்டு கப்புச்சின் சபைக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து பவேரியாவிற்கு கொண்டு வரப்பட்டு ஐஷ்டேட் என்ற ஊரில் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.


செபம்:
எங்கள் பொருட்டு உம் தந்தையிடம் உம்மையே கையளித்த எம் இறைவா! சீரழிந்த இவ்வுலகத்தை உம் மகனின் பாடுகளினாலும் இறப்பினாலும் சீர்ப்படுத்தினீர். அவர் எங்களுக்காகப் பெற்றுத்தந்த பாவ விடுதலையில் மகிழ்ந்திருக்க அருளைத் தந்தருளும். எம்மைச் சுற்றியிலும் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டும் தைரியத்தை தாரும். தீமைகளை அகற்றி நன்மை புரிந்திடச் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

அரசர் குண்ட்ரம்
பிறப்பு : 525 பிரான்சு
இறப்பு : 28 மார்ச் 592, சலோன் சுர் சவோன்னே Chalon-Sur-Saone,, பிரான்சு


துறவி வில்ஹெல்ம் ஐசலின் Wilhelm Eiselin
பிறப்பு: 1564, மிண்டல்ஹைம் Mindelheim, பவேரியா
இறப்பு: 28 மார்ச் 1588 ரோட் Rot, பாடன்-வூர்டம்பூர்க் Baden Würtemberg,