புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 June 2020

புனித.பெனோ(St.Benno) June 16

இன்றைய புனிதர் :
(16-06-2020)

புனித.பெனோ(St.Benno)
ஆயர்(Bishop)
பிறப்பு 
1010
ஹில்டஸ்ஹைம் Hildesheim, Germany)
    
இறப்பு 
16 ஜூன் 1106
பாதுகாவல்: பவேரியா(Bayern) & டிரேஸ்டன்(Dresden) மறைமாநிலத்தின் பாதுகாவலர்

இவர் ஷேக்கிசிஸ்(Sächsische) நாட்டு தம்பதிகளின் மகனாக பிறந்தார். 1040 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் ஹில்டஸ்ஹைம் என்ற ஊருக்கு பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கிருந்து மீண்டும் கோஸ்லர்(Goslar) என்ற ஊருக்கு பணிக்கு மறைபரப்பு பணிக்காக சென்று, 17 ஆண்டுகள் அப்பணியை செய்தார். அங்கு பணிபுரியும்போது, ஜெர்மனியிலுள்ள டிரேஸ்டன் மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயரானபிறகு அம்மறைமாவட்டத்தில் பல ஆலயங்களையும், துறவறமடங்களையும் தொடங்கினார். ஏராளமான மக்களை இறைவன்பால் மனமாற்றி ஈர்த்தார். அப்போது சாக்சன் (Sachsen) நாட்டு அரசர் நான்காம் ஹென்றி ஆயருக்கு எதிராக போர்தொடுத்தான். இப்போரில் 1075-76 ஆம் ஆண்டு வரை ஆயரை அரசன் சிறைபிடித்து சென்று, தன் விருப்பப்படி அம்மறைமாநிலத்திற்கு வேறு ஒரு புதிய ஆயரை தேர்ந்தெடுத்தான். ஆனால் புதிய ஆயர் நீண்ட நாள் அப்பதவியில் நீடிக்கவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் பெனோ அவர்களே மீண்டும் தனது ஆயர் பொறுப்பை ஏற்றார். அப்போது அவர் பேராலயத்திற்கென்று ஓர் திறவுகோலை தயாரித்து, அத்திறவுகோலை எல்பே (Elbe) என்ற மாவட்டத்திலுள்ள ஓர் பேராலயத்தில் வைத்துவிட்டு, தன் ஆயர் பதவியிலிருந்து விலகினார். அத்திறவுகோலில் ஓர் மீனின் வயிற்றில் நதி ஓடுவதை போல செய்யப்பட்டிருந்தது. இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து புனிதர்பட்டம் பெற்றபிறகு அரசர் ஐந்தாம் ஆல்பிரட்(Albrecht V) அவர்கள் இப்புனிதரின் கல்லறையை பவேரியா மறைமாவட்டத்திற்கு மாற்றினார். இன்றும் பவேரியாவில் இவர் பெயரால் புதுமைகள் நடந்துக்கொண்டிருக்கின்றது.


செபம்:
தியாகத்தின் மறு உருவே எம் இறைவா! கிறிஸ்துவத்தை ஜெர்மனி மண்ணில் பரப்பி, உமக்காக பல சிலுவைகளை சுமந்த புனித பெனோவிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம், அவர் காட்டிய வழியில் சென்ற எம் முன்னோர்களை பின்பற்றி நாங்கள் என்றென்றும், உம்மை எம் வாழ்வில் பிரதிபலிக்க உம் அருள் தந்து எம்மை காத்தருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


Saint of the Day : (16-06-2020)

Saint Benno of Meissen

Born to the Saxon nobility, the son of Blessed Bezela of Goda; as an adult he was heavily involved in the power politics of his day. Educated in the abbey of Saint Michael, Hildesheim, Germany. Priest. Canon at the imperial chapel at Gozlar, Hanover. Chaplain to Emperor Henry III. Bishop of Meissen in 1066. Participated in the synod of Forcheim, Germany in 1078.

He spent a year in prison for backing the nobility and Pope Saint Gregory VII against Emperor Henry IV over lay investiture and the control of the Church by the State. At one point he was summoned to Rome, Italy; he ordered the canons to lock the cathedral while he was gone in case emperor Henry tried to occupy it. Henry did, and threw the keys of the cathedral into the river as a symbol to show no one could lock the church against him. When Benno returned, he went to the river and found the key; legend says it was protected by a fish.

Following the death of Pope Gregory VII, Benno pledged his allegiance to the anti-pope Guibert, but in 1097 he returned to support of the lawful Pope Urban II.

Even with all the polical involvement and turmoil, Benno never lost sight of his calling as a diocesan bishop. He visited parishes, preached and conducted Mass, enforced discipline among his clergy, and fought simony any place he found it. He was an accomplished musician, supported music and chant in the churches and monasteries, and wrote on the Gospels. In his later years he served a missionary to the Wends.

Benno continued to be an involved and controversial figure in politics even after his death. His biographer, Jerome Emser, worked a lot of Church versus State material into the book. Martin Luther wrote a furious diatriabe against Benno's canonization.

Born :
1010 at Hildesheim, Germany

Died :
16 June 1106 of natural causes
• buried in the cathedral of Meissen, Germany
• when the cathedral was rebuilt in 1285, his relics were translated to the new structure, with many miraculous cures accompanying the move
• relics translated to the bishop's castle at Stolp when Saxony became Protestant
• relics translated to Munich, Germany in 1580

Canonized :
1523 by Pope Adrian VI

Patronage :
anglers, fishermen
• weavers
• diocese of Dresden-Meissen, Germany
• Munich, Germany

---JDH---Jesus the Divine Healer---




† இன்றைய புனிதர் †
(ஜூன் 16)

✠ மெய்ஸ்ஸன் நகர் புனிதர் பென்னோ ✠
(St. Benno of Meissen) 

ஒப்புரவாளர் மற்றும் மெய்ஸ்ஸன் மறைமாவட்ட ஆயர்:
(Confessor and Bishop of Meissen)

பிறப்பு: கி.பி. 1010
ஹில்ட்ஷெய்ம், ஸாக்சனி 
(Hildesheim, Duchy of Saxony)

இறப்பு: ஜூன் 16, 1106
மெய்ஸ்ஸன்
(Meissen)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: மே 31, 1523 
திருத்தந்தை ஆறாவது அட்ரியான்
(Pope Adrian VI)

பாதுகாவல்: மீனவர்/ நெசவாளர்

நினைவுத் திருநாள்: ஜூன் 16

“ஹில்ட்ஷெய்ம்” (Hildesheim) நகரின் வசதி வாய்ப்புள்ள பிரபுக்கள் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்த புனிதர் பென்னோ’வின் வாழ்க்கை வரலாறு பற்றின தகவல்கள் சிறிதளவே உள்ளன. உள்ளூரிலுள்ள புனிதர் மைக்கேல் துறவு மடத்தில் (St. Michael's monastery) கல்வி கற்ற இவர், கோஸ்லர் அத்தியாய (Canon of the Goslar chapter) நியாயஸ்தராக இருந்தார். இவர், கி.பி. 1066ம் ஆண்டு, அரசன் நான்காம் ஹென்றியால் (King Henry IV) “மெய்ஸ்ஸன்” நகரின் ஆயரவை அதிகாரமுள்ளவராக (Episcopal see of Meissen) நியமிக்கப்பட்டார்.

கி.பி. 1073ம் ஆண்டு, பென்னோ சாக்ஸன் நகர கலகத்தின் (Saxon Rebellion) ஆதரவாளராக தோன்றினார். இருப்பினும், “லம்பெர்ட்” (Lambert of Hersfeld) எனும் வரலாற்றாசிரியரும் சமகால அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு அவர்மீது மேலும் சிறிதளவு சாட்டினார்கள். அரசன் நான்காம் ஹென்றி கி.பி. 1075ம் ஆண்டு, பென்னோவை நாடு கடத்தினான். ஆனால் மறு வருடமே அவரை திரும்பி வர அனுமதித்தான்.

பட்டம் மற்றும் பதவியளிக்கும் கடுமையான சர்ச்சைகளில் பென்னோ திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஆதரவளித்தார். மேலும், கி.பி. 1077ம் ஆண்டு, அரசனுக்கு எதிரான “ரூடோல்ஃப்” (Election of Antiking Rudolf of Rheinfelden) என்பவரது தேர்தலில் பங்கெடுத்ததாக கூறப்பட்டது.

எதிர் திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட்’டுக்கு (Antipope Clement III) எதிரானவர் என்ற காரணத்தால் “ரவென்னா” உயர்மறை மாவட்ட பேராயர் “கில்பர்ட்” (Archbishop Guibert of Ravenna) அவர்களுக்கு ஆதரவளித்தார். இதற்கு அரசன் நான்காம் ஹென்றியும் ஆதரவளித்தான்.

தமது செல்வாக்கினை “சாக்ஸன்” (Saxons) மக்களின் அமைதிக்காக உபயோகிப்பதாக பென்னோ வெளிப்படியாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அதை அவரால் நிறைவேற்ற இயலாமல் போனது. 1097ல் திருத்தந்தையர் விருந்திற்கு வந்து திரும்புகையில் “இரண்டாம் அர்பன்” (Urban II) அவர்களை சரியான திருத்தந்தையாக அடையாளம் கண்டார். இத்துடன் அவர் நம்பத்தகுந்த வரலாற்றிலிருந்து மறைந்து போனார். ஆயினும் தமது மறை மாவட்டத்திற்கு அதிக சேவையாற்றியிருந்தார்.
அதன்பின்னர் அவரது மறைப்பணிகளைப்பற்றியோ திருச்சபையை கட்டி எழுப்புவதற்கான ஆர்வம் பற்றியோ யாதொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை. கி.பி. 1106ம் ஆண்டு, ஜூன் மாதம், 16ம் நாளன்று, பென்னோ இயற்கையாக மரணம் எய்தினார்.



† Saint of the Day †
(June 16)

✠ St. Benno of Meissen ✠

Confessor and Bishop of Meissen:

Born: 1010 AD
Hildesheim, Duchy of Saxony

Died: June 16, 1106
Meissen, Margraviate of Meissen

Venerated in: Roman Catholic Church

Canonized: May 31, 1523
Pope Adrian VI

Major shrine: Munich, formerly Meissen

Feast: June 16

Patronage: Fishermen, Weavers, Dresden-Meissen, Munich

Saint Benno was named Bishop of Meissen in 1066. Venerated since the 13th century, he was canonized in 1523.

Today, June 16, we celebrate the feast of Saint Benno, Confessor, Bishop of Meissen, Germany, and patron saint of fishermen. Saint Benno worked throughout his long life to reform the Church, supported the legitimacy of the Pope at a time when the papacy was being politically attacked, suffered persecution and exile, and worked numerous miracles. Saint Benno remains one of the most venerated saints throughout Germany.

Benno was born to a noble family in Saxony (modern-day Germany) and was educated from a young age by the monks of the abbey of Saint Michael. He was ordained a priest, and eventually, at the age of 56 became Bishop of Meissen. Soon thereafter, he was appointed Canon to the imperial chapel of Emperor Henry III, a pious ruler who looked to the Church for guidance in political matters. Upon his death, Henry IV ascended to the throne, at the young age of sixteen. Unlike his predecessor, he sought to subjugate the Church to the state, and restrict the legitimacy of the papacy throughout Germany.

However, at that time, one of the greatest of the Church’s popes, Pope Gregory VII, sat on the Chair of Peter and wished for nothing more than to preserve the role of the Pope in investing bishops—that is, providing bishops with the symbols of their holy office, signifying their marriage to the Church. This “Investiture Contest” spread throughout Europe, and many bishops sided with the political leaders of their regions, rather than the Pope. However, Saint Benno stood alongside Pope Gregory VII, against the Emperor, instituting the reforms of the Church and maintaining the divine duties of the Pope. For his trouble, he was imprisoned and exiled for many years.

One of the most famous legends told of Saint Benno involves his barring the emperor from receiving the Holy Eucharist following his ex-communication (the Pope had excommunicated Henry IV, due to his decisions to challenge the Church’s legitimate authority to invest bishops). Henry, however, hoped that the German bishops would take no notice of this `ex-communication' and rode to Meissen—to the cathedral served by Saint Benno—to receive the Eucharist. Saint Benno realized that there was nothing he could do to keep the emperor out, save barring the cathedral to everyone. So that is what he did. He locked the cathedral doors and threw the keys into the river Elbe. Henry knew that if he attempted to break down the doors to the cathedral, he would anger the crowds gathered, so simply rode away vowing vengeance on the holy bishop.

After he had gone, Saint Benno ordered the local fisherman to cast their nets into the Elbe, and after praying over the water, they hauled in their nets. In the net was a fish that had the keys to the cathedral hanging upon its fins. Benno retrieved the key and reopened the cathedral. It was not soon thereafter that he was both imprisoned and exiled, although he would not stray from the teachings of the Church, even under threat of punishment.

Saint Benno lived to be a very old man and spent the last years of his life preaching the faith to those who had not yet converted. He never lost sight of his calling as a diocesan bishop, visiting and preaching at all the parishes in his diocese, celebrating the Mass, enforcing discipline and enacting reform amongst the clergy, and building many grand cathedrals for the glory of the Lord. An accomplished musician, Saint Benno encouraged music and chanting during Masses throughout the diocese, penned many hymns, and wrote extensively on the Gospels. 

Following his death, at the age of nearly one hundred, Saint Benno was buried in the cathedral at Meissen. When the cathedral was rebuilt in 1285, his relics were translated to the new cathedral, and many miraculous cures were reported at that time. His relics were later translated to Munich in 1580, and Saint Benno remains the patron saint of that city today.

Saint Benno lived during a difficult political time and managed—despite threat, imprisonment, and punishment—to remain true to the teachings of the Church, and his role as priest and bishop. At a time when the Church is criticized and attacked from both the inside and outside, we look to saints like Saint Benno as inspiration. His witness provides an example to each of us, inspiring fidelity and truth, even when these are the “hard decisions” to make.

15 June 2020

புனித ஆலிஸ் (1220-1250) June 15

ஜூன் 15 

புனித ஆலிஸ் (1220-1250)
இவர் பெல்ஜியத்தில் உள்ள ஷேர்பெக் என்ற இடத்தில் பிறந்தார்.

தன்னுடைய ஏழாவது வயதிலேயே சிஸ்டர்சியன் துறவிகள் மடத்தில் சேர்ந்த இவர், அங்கேயே தன்னுடைய கல்வியைக் கற்கத் தொடங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், தாழ்ச்சியோடும் இருந்தார.

இவருக்கு 20 ஆவது வயது நடக்கும்பொழுது தொழுநோயால் பாதிக்கப்பட்டார்‌. அதனால் இவர் தனிமைப்படுத்தப்பட்டார். தொழுநோயால் இவர் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த அதே வேளையில், கண்பார்வையையும் இழந்தார். இதனால் இவர் அடைந்த துயருக்கு அளவே இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் நற்கருணை ஆண்டவர்மீது மிகுந்த பற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்தப் பற்று இவருக்கு ஆறுதலையும் அரவணைப்பையும் நம்பிக்கையையும் தந்தது. சில நேரங்களில் நற்கருணை ஆண்டவர் இவருக்குக் காட்சி தந்து இவரைத் திடப்படுத்தினார்.

நாள்கள் செல்ல செல்ல இவருடைய உடலில் வேதனை மிகுதியானது. இதனால் இவர் தன்னுடைய முப்பதாவது வயதில் உடல்நலம் குன்றி இறையடி சேர்ந்தார்.

இவருக்கு 1907 ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவர் பார்வையற்றவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குப் பாதுகாவலராக இருக்கிறார்

சிரகுஸ் நகர்ப் புனித மார்சியன்(முதல் நூற்றாண்டு) June 14

ஜூன் 14

சிரகுஸ் நகர்ப் புனித மார்சியன்
(முதல் நூற்றாண்டு)
இவர் திரு அவையின் முதல் திருத்தந்தையான புனித பேதுருவால் இத்தாலியிலுள்ள சிரகுஸ் என்ற நகருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார். இவர் புனித பேதுருவின் வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்து அந்த நகருக்கு சென்றார்.

அந்நகரில் இவர் நற்செய்தி அறிவிக்கும்போது, யூதர்கள் இவரைப் பிடித்து, ஒரு பெரிய கோபுரத்திலிருந்து தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

இவ்வாறு புனித மார்சியன் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி தன் இன்னுயிரை ஈந்தார்.

புனிதர் வைட்டஸ் ✠(St. Vitus) June 15

† இன்றைய புனிதர் †
(ஜூன் 15)

✠ புனிதர் வைட்டஸ் ✠
(St. Vitus)
மறைசாட்சி, தூய உதவியாளர்:
(Martyr, Holy Helper)

பிறப்பு: கி.பி. 290
சிசிலி
(Sicily)

இறப்பு: கி.பி. 303 (வயது 12–13)
லூக்கானியா, தற்போதைய பசிலிகட்டா, இத்தாலி
(Lucania, modern-day Basilica, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூன் 15

பாதுகாவல்:
நடிகர்கள்; நகைச்சுவையாளர்கள்; ரிஜெக்கா (Rijeka), குரோஷியா (Crotia); செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia); நடனக் கலைஞர்கள்; நாய்கள்; வலிப்பு நோய் (Epilepsy); மஸரா டெல் வல்லோ (Mazzara del Vallo), சிசிலி (Sicily); அதிக தூக்கம் (Over Sleeping); ப்ராக் (Prague), செக் குடியரசு (Czech Republic); நரம்பு சம்பந்தமான ஒருவித தசை வலிப்பு நோய் (Rheumatic Chorea); தூய வைட்டஸ் நடனம் (Saint Vitus Dance); செர்பியா (Serbia); பாம்பு கடி (Snake Bites); புயல்கள் (Storms); வாச்சா (Vacha), ஜெர்மனி (Germany); செவன் (Zeven), லோயர் சாக்சனி (Lower Saxony); ஹெட் கூயி (Het Gooi), நெதர்லாந்து (Netherlands); இ க்ளாம்பஸ் வைட்டஸ் (E Clampus Vitus).

புனிதர் வைட்டஸ், கிறிஸ்தவ பாரம்பரியங்களின்படி, சிசிலி நாட்டின் கிறிஸ்தவ புனிதரும் மறைசாட்சியுமாவார்.

இவர், கி.பி. 303ம் ஆண்டு, தூய ரோம பேரரசை ஒன்றாக ஆண்ட இரண்டு பேரரசர்களான (Roman Emperors) “டயாக்லேஷியன்” மற்றும் “மேக்ஸ்மியன்” (Diocletian and Maximian) ஆகியோரின் ஆட்சியில் நடந்த கிறிஸ்தவ துன்புறுத்தல்களின்போது மரித்தவர் ஆவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மத்திய காலத்திற்குரிய பதினான்கு தூய உதவியாளர்களில் (One of the Fourteen Holy Helpers) ஒருவராக கொள்ளப்படுகிறார்.

கிறிஸ்தவ பாரம்பரயங்களின்படி, புனிதர்கள் “வைட்டஸ்” (Vitus), “மொடஸ்டஸ்” (Modestus) மற்றும் “கிரெசென்ஷியா” (Crescentia) ஆகிய மூவரும் பேரரசன் “டயாக்லேஷியனால்” (Diocletian) துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

புனிதர் ஜெர்மைன் கஸின் ✠(St. Germaine Cousin) June 15

† இன்றைய புனிதர் †
(ஜூன் 15)

✠ புனிதர் ஜெர்மைன் கஸின் ✠
(St. Germaine Cousin)

ஃபிரெஞ்ச் புனிதர்:
(French Saint)
பிறப்பு: கி.பி. 1579
பைப்ரேக், டௌலோஸ், ஃபிரான்ஸ்
(Pibrac, Toulouse, France)

இறப்பு: கி.பி. 1601
பைப்ரேக், டௌலோஸ், ஃபிரான்ஸ்
(Pibrac, Toulouse, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 7, 1864
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

முக்கிய திருத்தலம்:
பைப்ரேக்
(Pibrac)

நினைவுத் திருநாள்: ஜூன் 15

பாதுகாவல்:
கைவிடப்பட்ட மக்கள் (Abandoned People), துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் (Abuse Victims), வறுமைக்கு எதிரானக (Against Poverty), ஊனமுற்றோர் (Disabled People), கிராமப்புற பெண்கள், (Girls from Rural Areas), நோய் (Illness), வறிய நிலை (Impoverishment), பெற்றோரை இழந்தோர் (Loss of Parents), உடல் பயிற்சி சிகிச்சையாளர்கள் (Physical Therapists)

புனிதர் ஜெர்மைன் கஸின், ஒரு ஃபிரெஞ்ச் புனிதர் ஆவார். ஃபிரான்ஸ் நாட்டின் “டௌலோஸ்” (Toulouse) நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள “பைப்ரேக்” (Pibrac) எனும் கிராமத்தில் மிகவும் தாழ்ச்சியுள்ள பெற்றோருக்குப் பிறந்தவர்.

கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (Catholic Encyclopedia) இவரைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறது:

“தமது பிறப்பு முதலே எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தவராக இவர் குறிப்பிடப்படுகிறார். இவர் பிறக்கும்போதே ஒரு கை சிதைந்த நிலையிலும், “ஸ்க்ரோஃபுலா” (Scrofula) எனப்படும் காசநோய் சம்பந்தமான ஒரு நோயுடனும் பிறந்தார். இவர் கைக்குழந்தையாக இருக்கும்போதே தமது தாயை இழந்தார். இவரது தந்தை விரைவிலேயே மறுமணம் செய்துகொண்டார். புதிதாக வந்த மாற்றான்தாய் இவரை கொடுமைப்படுத்தினார். ஜெர்மைனுடைய நோயிலிருந்து பிற குழந்தைகளை பாதுகாப்பதாக பாசாங்கு செய்த மாற்றான்தாய், ஜெர்மைனை வீட்டிலிருந்து விலக்கி வைக்க தந்தையின் சம்மதம் பெற்றார். ஆகவே, ஜெர்மைன் குழந்தை பருவத்திலிருந்தே கால்நடை மேய்க்கும் பணியைச் செய்தார். இரவில் களைத்துப்போய் வீடு திரும்பினால் அவரது படுக்கை குப்பைகளாக இருக்கும் அல்லது ஈரமாக இருக்கும். இதுபோன்ற நடைமுறைகளால் குழந்தைப் பருவத்திலிருந்தே தாழ்ச்சியையும், பொறுமையையும் கற்றுக்கொண்டார். கடவுளின் பிரசன்னத்தின் அதிசய உணர்வுகளும் ஆன்மீக ஈடுபாடுகளும் பிறப்பு முதலே அவருக்கு இறை பரிசாக அளிக்கப்பட்டிருந்தன. இவையனைத்துமே இப்புனிதரது தனிமையான வாழ்க்கையின் ஒளி மற்றும் ஆசீர்வாதங்களின் ஆதாரமாக விளங்கின. வறுமை, நலிந்த மற்றும் தளர்ந்த உடல் நிலை, காலத்தின் கடுமையான பருவ மாற்றங்கள், பாசமும் அனுசரணையும் இல்லாத சொந்த குடும்பத்தினர், ஆகியவற்றுடன் தாமாகவே தேடி பெற்றுக்கொண்ட துன்பங்களும் தாழ்ச்சியுடனும் இன்னும் அதிக வேதனைகளைத் தந்தன. தினசரி உணவாக சாதாரண ரொட்டி மற்றும் தண்ணீர் ஆகியவற்றையே வழக்கமான உணவாக ஏற்றுக்கொண்டார். ஆசீர்வதிக்கப்பட்ட தூய நற்கருணையிலுள்ள இயேசு மீதும் அவரது கன்னித்தாய் மீதும் அவர் கொண்டிருந்த மாறாத அன்பு இவரது புனிதத் தன்மையை இன்னும் அதிகரித்தது. திருப்பலியில் தினமும் ஆர்வமுடன் கலந்துகொள்வார். ஆலய மணியோசை கேட்டதுமே தமது மந்தையை அப்படியே மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு திருப்பலியில் கலந்துகொள்ள ஓடுவார். கிட்டத்தட்ட ஓநாய் போன்ற காட்டு மிருகங்கள் உலவும் வனாந்தரங்களின் அருகில் மேய்ச்சல் நிலம் இருந்தும் என்றுமே அவரது மந்தைக்கு யாதொரு ஆபத்தும் ஏற்பட்டதில்லை.”

பாவச் செயல்களை சரி செய்யும் முயற்சியாக அவர் முன்னெடுத்த தவ முயற்சிகளும் அடிக்கடி நற்கருணை ஆராதனைகளில் அவர் பங்கெடுத்தமையும் குறிக்கத்தக்கது. மரியன்னையின் மீதுள்ள அவரது பக்தியும் அதிகரித்துக்கொண்டு போனதும் குறிப்பிடத்தக்கது. ஜெபமாலை மட்டுமே அவரது ஒரே புத்தகமாயிருந்தது. இயேசு மீதும் அவரது அதி தூய கன்னித் தாயின் மீதும் அவர் கொண்ட பக்தியும், அன்பும் அளவிட இயலாததும், குறிப்பிடத்தக்கதுமாகும். திருப்பலிக்கான முதல் ஆலய மணியோசை கேட்டதுமே எங்கிருந்தாலும் முழங்கால்படியிட்டு சிலுவை அடையாளமிடுவது அவரது குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ உயர் பண்பாகும்.

ஆழமற்ற நதியோரங்களிலும், அடை மழையின் பின்னும் அல்லது உறைபனி உருகும் காலங்களிலுமாக அல்லது சீரற்ற அனைத்து காலங்களிலும் அவரது பக்திமயமான தவ வாழ்க்கை சீராக இருந்தது. எழைகளின்பால் அவர் கொண்ட அன்பும் அக்கறையும் இன்னும் அதிகரித்தது. தமக்கு கிடைத்த உலர்ந்த ரொட்டியையும் பிறருடன் பகிர்ந்து உண்ணும் அவரது தாராள, உதார குணம் மிகவும் உயர்வானது.

கி.பி. 1601ம் ஆண்டின் கோடை காலத்தின் ஆரம்பத்தில் ஒருநாள் அதிகாலை, திராட்சைக் கொடிகளால் வேயப்பட்ட தட்டி (Pallet of Vine-Twigs) படுக்கையிலிருந்து எழுந்திருக்காததை கவனித்த இவரது தந்தை, இந்த இருபத்திரண்டு வயது புனிதர் விழிக்காமலேயே நித்திய வாழ்வை நோக்கிச் சென்றிருந்ததைக் கண்டார்.

புனித.பெர்னார்டு (Bernhard of Aosta June 15

இன்றைய புனிதர் :
(15-06-2020)

புனித.பெர்னார்டு (Bernhard of Aosta)
பாதுகாவல்: மலை ஏறுபவர்களுக்கும், ஆல்ப்ஸ் மலைவாழ் மக்களுக்கும்
பிறப்பு 
923
அவோஸ்டா(Aostatal)
    
இறப்பு 
15 ஜூன் 1008
நோவரா(Novara)
புனிதர்பட்டம்: 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் ஓர் சாதாரண குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் இறையியலையும், மெய்யியலையும், திருச்சபை சட்டங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரது பெற்றோர் இவரின் கல்லூரி படிப்பை முடித்தபின், பணக்கார பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் பெர்னார்டு இதை வெறுத்தார். இவரின் மனம் எப்போதும் ஆன்மீக வாழ்வையே நோக்கி சென்றது. இதனால் தன்னுடைய மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சேர்ந்து பணியாளராக செயல்பட்டார். இவரின் பணியால் அம்மறைமாவட்ட மக்கள் ஏராளமான பயனை பெற்றனர். இவர் இறக்கும் வரை மறைமாவட்ட குருக்களின் கல்லூரியில் பணியாற்றினார். இவர் 1008 ல் அல்லது 1009 ல் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவர் நோவரா என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, அவர் கல்லறையின் மேல் பேராலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பின்னர் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் இவர் நோயாளிகளை பராமரிப்பதற்கென ஓர் இல்லம் தொடங்கினார். நாளடைவில் இவ்வில்லத்தை புனித அகுஸ்தினார் சபையை சார்ந்தவர்கள் கைப்பற்றினர். இப்போது அந்நாடுகளுக்கு சுற்றுலாவிற்கு வரும் மக்கள் அவ்வில்லத்தில் இலவசமாக தங்கி, தங்களின் சுற்றுலாவை மேற்கொள்கின்றனர்.


செபம்:
அன்பான இறைவா! புனித பெர்னார்டு இறைவன் மேல் தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். நாங்களும் எங்களின் சொல், செயல், சிந்தனைகளில் உம்மை பற்றிக்கொண்டு, என்றும் உமக்குரியவர்களாக வாழ வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (15-06-2020)
Saint Bernard of Menthon

St. Bernard of Menthon was Born in 923, probably in the castle Menthon near Annecy, in Savoy; died at Novara, 1008. He was descended from a rich, noble family and received a thorough education. He refused to enter an honorable marriage proposed by his father and decided to devote himself to the service of the Church. Placing himself under the direction of Peter, Archdeacon of Aosta, under whose guidance he rapidly progressed, Bernard was ordained priest and on account of his learning and virtue was made Archdeacon of Aosta (966), having charge of the government of the diocese under the bishop. Seeing the ignorance and idolatry still prevailing among the people of the Alps, he resolved to devote himself to their conversion. For forty two years he continued to preach the Gospel to these people and carried the light of faith even into many cantons of Lombardy, effecting numerous conversions and working many miracles.

For another reason, however, Bernard's name will forever be famous in history. Since the most ancient times there was a path across the Pennine Alps leading from the valley of Aosta to the Swiss canton of Valais, over what is now the pass of the Great St. Bernard. This pass is covered with perpetual snow from seven to eight feet deep, and drifts sometimes accumulate to the height of forty feet. Though the pass was extremely dangerous, especially in the springtime on account of avalanches, yet it was often used by French and German pilgrims on their way to Rome. For the convenience and protection of travelers St. Bernard founded a monastery and hospice at the highest point of the pass, 8,000 feet above sea-level, in the year 962. A few years later he established another hospice on the Little St. Bernard, a mountain of the Graian Alps, 7,076 feet above sea-level. Both were placed in charge of Augustinian monks after pontifical approval had been obtained by him during a visit to Rome.

These hospices are renowned for the generous hospitality extended to all travelers over the Great and Little St. Bernard, so called in honor of the founder of these charitable institutions. At all seasons of the year, but especially during heavy snow-storms, the heroic monks accompanied by their well-trained dogs, go out in search of victims who may have succumbed to the severity of the weather. They offer food, clothing, and shelter to the unfortunate travelers and take care of the dead. They depend on gifts and collections for sustenance. At present, the order consists of about forty members, the majority of whom live at the hospice while some have charge of neighboring parishes.

The last act of St. Bernard's life was the reconciliation of two noblemen whose strife threatened a fatal issue. He was interred in the cloister of St. Lawrence. Venerated as a saint from the twelfth century in many places of Piedmont (Aosta, Novara, Brescia), he was not canonized until 1681, by Innocent XI. His feast is celebrated on the 15th of June.

---JDH---Jesus the Divine Healer---

புனிதர் முதலாம் மெத்தோடியஸ் June 14

† இன்றைய புனிதர் †
( ஜூன் 14 )

✠ புனிதர் முதலாம் மெத்தோடியஸ் ✠
(St. Methodios I of Constantinople)
பிறப்பு: கி.பி. 788
சிராக்கஸ்
(Syracuse)

இறப்பு: ஜூன் 14, 847
கான்ஸ்டன்டினோபிள்
(Constantinople)

நினைவுத் திருநாள்: ஜூன் 14

புனிதர் முதலாம் மெத்தோடியஸ், கி.பி. 843ம் ஆண்டு, மார்ச் மாதம், 4ம் நாள் முதல், கி.பி. 847ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் நாள் வரை “கான்ஸ்டன்டினோபிள் நகரின் கிறிஸ்தவ தலைவராக” (Ecumenical Patriarch of Constantinople) பொறுப்பேற்றிருந்தவர் ஆவார்.

முதலாம் மெத்தோடியஸ் சிசிலி (Sicily) நாட்டின் சிராக்கஸ் ((Syracuse)) நகரில் செல்வந்தர்களான பெற்றோருக்கு பிறந்தார். இளம் வயதிலேயே கல்வி கற்பதற்காக கான்ஸ்டன்டினோபிள் ஆனுப்பப்பட்டார். நன்கு கற்று அரசவையிலே நல்லதொரு பணி நியமனம் பெறுவார் என இவரது பெற்றோர் கனவு கண்டனர். ஆனால், அவர்களது கனவை பொய்யாக்கிய இவர், “பித்தினியா” (Bithynia) நகரிலுள்ள துறவு மடத்தில் சேர்ந்தார். இறுதியில் மடாதிபதியுமானார்.

கி.பி. 813ம் ஆண்டு முதல் கி.பி. 820ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், “ஆர்மேனிய பேரரசன் ஐந்தாம் லியோ” (Emperor Leo V the Armenian) என்பவரது காலத்தில் சமய திருச்சொரூபங்கள் அல்லது படங்களை வணங்கும் அல்லது ஆராதிக்கும் மக்களை (Iconoclast persecution) துன்புறுத்தி கொல்லும்படி இரண்டாம் முறையாக உத்தரவிட்டிருந்தான்.

கி.பி. 815ம் ஆண்டு, பதவியிறக்கப்பட்ட தூதராக மெத்தோடியஸ் ரோம் பயணமானார். கி.பி. 821ம் ஆண்டு, நாடு திரும்பிய இவரை, சிலை வழிபாட்டின் எதிர்ப்பாளரான பேரரசன் இரண்டாம் மைக்கேலால் (Emperor Michael II) சிலை அல்லது சொரூபங்களை ஆராதிப்பவராக அடையாளம் காணப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். கி.பி. 829ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர், முரண்பாடாக, சிலை வழிபாட்டை இன்னும் தீவிரமாக எதிர்க்கும் பேரரசன் “தியோபிலசி’ன்” (Emperor Theophilos) அரசவையில் முக்கிய பதவி நியமனம் பெற்றார்.

கி.பி. 843ம் ஆண்டில் பேரரசன் மரணமடைந்ததன் பின்னர், செல்வாக்குள்ள மந்திரி “தியோக்டிஸ்டோஸ்” (Theoktistos) ராஜ மாதா “தியோடரா’விடம்” (Theodara), அவரது இரண்டு வயது மகன் “மூன்றாம் மைக்கேலி’ன்” (Michael III) அரச பிரதிநிதியாக செயலாற்றுமாறு சம்மதிக்க வைத்தார். தேவாலயங்களிலிலிருந்து நீக்கப்பட்ட சிலைகளும் சொரூபங்களும் படங்களும் மீண்டும் வைக்கப்பட அனுமதி வழங்கினார். இப்படி செய்வதினால் இறந்துபோன பேரரசனான அவரது கணவருக்கு வந்த அவப்பெயர் நீங்கும் என்றார். கிறிஸ்தவ தலைவராக (Patriarch) பதவியிலிருந்த “ஏழாம் ஜான்” (John VII Grammatikos) என்பவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். மெத்தோடியஸ் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இதன்மூலம் சிலை வழிபாடு அல்லது சொரூப ஆராதனை சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வந்தன. கி.பி. 843ம் ஆண்டு, மார்ச் மாதம், 11ம் நாள் முதல், தேவாலயங்களில் சொரூபங்கள் வைக்கப்பட அனுமதிக்கப்பட்டன.

பாடலாசிரியர் புனிதர் ஜோசஃப் June 14

† இன்றைய புனிதர் †
(ஜூன் 14)

✠ பாடலாசிரியர் புனிதர் ஜோசஃப் ✠
(St. Joseph the Hymnographer)
துறவி/ பாடலாசிரியர்:
(Monk/ Hymnographer)

பிறப்பு: கி.பி. 816
சிசிலி
(Sicily)

இறப்பு: ஏப்ரல் 3, 886
தெஸ்ஸலோனிக்கா
(Thessalonica)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)

நினைவுத் திருநாள்: ஜூன் 14

பாடலாசிரியரான புனிதர் ஜோசஃப், ஒன்பதாம் நூற்றாண்டின் துறவியும், ஆன்மீக கவிஞரும், பாடலாசிரியருமாவார். “இனிமையான குரல் கொண்ட திருச்சபையின் பாடும் பறவை” (The Sweet-Voiced Nightingale of the Church) என்று இவரை அறிந்தோர் கூறுவர்.

கி.பி. ஏறக்குறைய 816ம் ஆண்டு, சிசிலியிலுள்ள (Sicily) பக்தியுள்ள பெற்றோரான “புலோடினஸ்” மற்றும் “அகதா’வுக்கு” (Plotinus and Agatha) மகனாகப் பிறந்தார். சிசிலியின் மீதான அரேபிய படையெடுப்பின் காரணமாக, அவருடைய குடும்பம் சிசிலியை விட்டு புலம்பெயர முடிவெடுத்தனர். 

கி.பி. சுமார் 840ம் ஆண்டில், “தெஸ்ஸலோனிக்கா’வின்” ஆயர் (Bishop of Thessalonica) இவரை ஒரு “குரு-துறவியாக” (Hieromonk) அருட்பொழிவு செய்வித்தார். ஒருமுறை “தெஸ்ஸலோனிக்கா” வந்த புனிதர் கிரகோரி (St. Gregory of Dekapolis), இவரது குணநலன்களால் ஈர்க்கப்பட்டு, இவரை “கான்ஸ்டன்டினோபில்” (Constantinople) நகரிலுள்ள தமது “ஸ்டௌடியோஸ்” எனும் (Stoudios Monastery) துறவியர் மடத்தில் சேர அழைத்தார். கி.பி. 841ம் ஆண்டு, திருத்தந்தை மூன்றாம் லியோ (Pope Leo II) அவர்களின் அழைப்பைத் தொடர்ந்து ஜோசஃப், கிரகோரி அவர்களால் ரோம் அனுப்பப்பட்டார். ஆனால், அரேபிய கடல் கொள்ளைக்காரர்களால் வழியிலேயே மறித்து சிறை பிடிக்கப்பட்ட ஜோசஃப், “கிரேட்” (Crete) எனும் கிரேக்க தீவில் அடிமையாக விற்கப்பட்டார்.

இவர் கிரேட் தீவில் அடிமைத்தளையில் இருக்கையில், புனிதர் நிக்கோலஸ் (St. Nicholas) இவருக்கு காட்சியளித்தார். அவர், ஜோசஃபை பார்த்து, கடவுளின் பெயரில் பாடல் பாடு என்றார். ஜோசஃப் பாடியதும், “எழுந்து என்னைப் பின்தொடர்” என்று கூறிவிட்டு சென்றார். இதன்பின்னர், ஜோசஃபுக்கு விரைவில் விடுதலை கிடைத்தது. அவர் “கான்ஸ்டன்டினோபிள்” திரும்ப ஒரு வருட காலம் ஆனது.

கி.பி. 855ம் ஆண்டு, ஒரு துறவு மடத்தினை நிறுவி, மரித்துப்போன தமது வழிகாட்டியான புனிதர் கிரகோரியின் (Gregory of Dekapolis) பெயரில் அர்ப்பணித்தார். இறைவன் புகழ்பாடும் பண்பாடித் திரிந்த ஜோசஃப், தமது எழுபது வயதில் மரித்தார்.

புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி June 14

† இன்றைய புனிதர் †
(ஜூன் 14)

✠ புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி ✠
(St. Albert Chmielowski)
மறைப்பணியாளர், நிறுவனர்:
(Religious and Founder)

பிறப்பு: ஆகஸ்ட் 20, 1845
இகொலோமியா, மலோபோல்ஸ்கி, போலந்து
(Igołomia, Małopolskie, Congress Poland)

இறப்பு: டிசம்பர் 25, 1916 (வயது 71)
க்ரகோவ், போலந்து அரசு
(Kraków, Kingdom of Poland)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 22, 1983, 
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: நவம்பர் 12, 1989
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜூன் 17

பாதுகாவல்:
ஏழைகளின் ஊழியர்கள் (Servants of the Poor)
ஏழைகளின் ஊழிய சகோதரிகள் (Sisters Servants of the Poor)
பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை சபை (Franciscan tertiaries)
வீரர்கள், தொண்டர்கள், சாகுபடி, பயணிகள், புலாவி (Puławy),
சோஸ்னோவிக் மறைமாவட்டம் (Diocese of Sosnowiec), ஓவியர்கள்

புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி, ஒரு “ஒப்புக்கொள்ளப்பட்ட போலிஷ் மறைப்பணியாளர்” (Polish Professed Religious) ஆவார். இவர், “ஏழைகளின் ஊழியர்கள்” (Servants of the Poor) மற்றும் “ஏழைகளின் ஊழிய சகோதரிகள்” (Sisters Servants of the Poor) ஆகிய சபைகளை நிறுவியவருமாவார். ஜனவரி கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த இவருக்கு காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, இவர் தமது கால் ஒன்றினை இழக்க நேர்ந்தது. இதன் காரணமாக, தமது வாழ்நாள் முழுதும் ஒரு மரத்தினாலான ஒரு பொய்க் காலை பொருத்தியவாறே வாழ்ந்தார்.

பிரபலமான ஓவியராக மாறிய அவர், தமது ஓவியங்களை ஏழைகளின் நிலை வாழ்க்கைக்கு ஆதரவாக அர்ப்பணிப்பதற்காக அனைத்தையும் கொடுக்க முடிவு செய்வதற்கு முன்னர், தமது ஓவியங்களின் பெரும்பகுதியை கருப்பொருள்களாக ஆன்மீகத்தைப் பயன்படுத்தினார். தொடக்கத்தில் “இயேசுசபையில்” (Jesuits) இணைந்த அவர், பின்னர் அதனின்றும் வெளியேறி, “தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில்” (Third Order of Saint Francis) இணைந்தார்.

“ஆதாம் ஹிலரி பெர்னார்ட் சிமியேலோவ்ஸ்கி” (Adam Hilary Bernard Chmielowski) எனும் இயற்பெயர் கொண்ட இவர், “க்ரகோவ்” (Outskirts of Krakow) நகரின் புறநகரான “இகொலோமியா” (Iglomia) எனும் கிராமத்தில், கி.பி. 1845ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 20ம் நாளன்று, வசதிவைப்புள்ள உயர்குல தம்பதியரான “அடெல்பர்ட்” (Adelbert Chmielowski) மற்றும் “ஜோசஃபின்” (Josephine Borzyslawska) ஆகியோருக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்த மகனாகப் பிறந்தார். ஆகஸ்ட் மாதம் 26ம் நாளன்று, இவருக்கு திருமுழுக்கு அளிக்கப்படவிருந்தது. ஆனால், அன்றைய காலக்கட்டத்தின் குழப்பமான கொந்தளிப்பு நிலை காரணமாக, திருமுழுக்கு சடங்கிற்காக எந்தவொரு குருவும் கிடைக்கவில்லை. ஆகவே, அவருக்கு முறையான திருமுழுக்கு, 1847ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் நாளன்று நடைபெற்றது.

தனது குழந்தை பருவத்தில் அவரும் அவரது உடன்பிறப்புகளும் பெற்றோரை இழந்தனர். இதன் காரணமாக, இவர்களது அத்தையான “பெட்ரோநெலா” (Petronela) இவர்களை கவனித்து வளர்த்தார். பிற்காலத்தில், தனது பெற்றோரின் தோட்டத்தை நிர்வகிப்பதற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் காரணத்திற்காக, “புலாவி” (Puławy) நகரிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விவசாயம் கற்றார். போலிஷ் தேசியவாத கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டபின், அவர் ஒரு காலை இழந்த போதிலும், அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். கி.பி. 1863ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதல் தேதியன்று, ஒரு ரஷ்ய கையெறிகுண்டு வெடித்ததில், அவரது குதிரைக் கொல்லப்பட்டதுடன், அவரது கால் துண்டாடப்படுமளவிற்கு சேதமடைந்தது. அவருக்கு ஒரு மரக்கால் பொருத்தப்பட்டது. தமது வாழ்க்கையை கடவுளுக்கும், போலிஷ் விடுதலைப் போருக்கும் அர்ப்பணித்தார். காயமடைந்த ஆதாம், ஒரு காட்டுப்பாதாளியின் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மயக்க மருந்து இல்லாமலேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது. அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட தாங்கொண்ணா வலி வேதனைகளை அவர் கடவுளுக்கே ஒப்படைத்தார்.

கிளர்ச்சியாளர்களின் மீதான ஜார்ஜிய அதிகாரிகளின் (Czarist authorities) கடுமையான பதிலடி, ஆதாமை போலந்து (Poland) நாட்டை விட்டு வெளியேற வைத்தது. பெல்ஜியம் (Belgium) நாட்டிலுள்ள “கெண்ட்” (Ghent) என்ற நகரில் குடியேறிய அவர், அங்கே பொறியியல் கற்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில், தம்மில் ஓவியத்திலும் திறமை இருந்தது என்பதை அவர் கண்டுபிடித்தார். அதிலும் வளர்ச்சியடைய தொடங்கினார். ஓவியப் பயிற்சி மற்றும் பணிகளுக்காக “பாரிஸ்” (Paris) மற்றும் “மூனிச்” (Munich) நகரங்களுக்கு பயணித்த அவர், நிறைய நண்பர்களை சம்பாதித்தார்.

கி.பி. 1874ம் ஆண்டு, அவரால் தனது தாயகத்திற்குத் திரும்ப முடிந்தது. அங்கே அவர் புகழ்பெற்ற கலைஞராக “க்ராகோவில்” பணியாற்றினார். மற்றும், கி.பி. 1870ம் ஆண்டு முதல் 1885ம் ஆண்டு வரை ஒரு ஓவியராக பணியாற்றினார். அவர் 61 ஓவியங்களை மொத்தமாக தயாரித்தார். ஆனால் அவரது படைப்புகள் அவருக்கு வாங்கித் தந்த புகழ் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், மனச்சோர்வுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வலுவான அரசியல் நம்பிக்கைகள் மனிதனின் நிலைப்பாட்டிற்கும், மென்மையான, கருணையுள்ள ஆவியுடனான அவரது ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தியது. மேலும், இது ஏழைகளின் துன்பங்களை அவருக்கு உணர்த்தியது. தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்த அவர், க்ரகோவ் (Kraków) நகரிலுள்ள வீடற்றோருக்கான முகாம்களில் பணியாற்றினார்.

கி.பி. 1880ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 24ம் தேதி, அவர் “ஸ்டாரா வைஸ்” (Stara Wies) கிராமத்திலுள்ள இயேசுசபையின் (Jesits) புகுமுக (Novitate) பயிற்சியில் இணைந்தார். பின்னர், ஒரு தியானத்தின்போது, ஒரு பயங்கரமான சோதனையை எதிர்கொண்டார். தமது முடிவுக்காக ஏக்கம் கொண்ட அவர், விரைவிலேயே நோய்வாய்ப்பட்டார். அவரது சகோதரர் ஸ்டானிஸ்லாவ் அவரை மீட்டெடுக்க வந்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் இயேசுசபைக்கு திரும்புவதில்லை என முடிவு செய்தார். விரைவிலேயே அவர் அசிசியின் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையின் சட்டதிட்டங்களை கேள்வியுற்றார். அதன்பால் கவரப்பட்ட அவர், அந்த சபையில் சேர ஆர்வமானார்.

கி.பி. 1887ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 25ம் தேதியன்று, அசிசியின் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் இணைந்தார். துறவு ஆடைகளைப் பெற்றுக்கொண்ட அவர், “ஆல்பர்ட்” (Albert) எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராக ஏற்றுக்கொண்டார். கி.பி. 1888ம் ஆண்டு, தமது சத்தியப் பிரமாணங்களை ஏற்றுக்கொண்ட இவர், ஆகஸ்ட் மாதம், 25ம் நாளன்று, “ஏழைகளின் ஊழியர்கள்” (Servants of the Poor) எனும் சபையை நிறுவினார். பின்னர், கி.பி. 1891ம் ஆண்டு, ஜனவரி மாதம், 15ம் நாளன்று, “அருளாளர் மரியா ஜப்லோன்ஸ்கா” (Blessed Maria Jabłońska) என்பவருடன் இணைந்து, ஏற்கனவே உள்ள சபைக்கு இணையான, பெண்களுக்கான “அல்பர்ட்டைன் சகோதரியர்” (Albertine Sisters) எனும் சபையை நிறுவினார். இச்சபையினர், வீடற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து தந்தனர்.

அவர் கார்மேல் கான்வென்ட்டில் (Carmelite Convent) சிறிது காலம் செலவிட்டார். விரைவிலேயே தமக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான “புனிதர் சிலுவையின் ஜானின்” (Saint John of the Cross) பிரசுரங்களை நன்கு அறிந்திருந்தார். விரைவிலேயே அவர் கார்மேல் காண்வென்ட்டின் தலைவரான “புனிதர் ரபேல் காலினோஸ்கி” (Saint Raphael Kalinowski) அறிமுகமானார். அவர், ஆல்பர்ட்டை கார்மேல் சபையில் சேருமாறு வலியுறுத்தினார். ஆயினும், இவர் ஃபிரான்சிஸ்கன் சபையிலேயே நிலைத்து இருந்தார்.

வயிற்று புற்று நோயால் (Stomach Cancer) பாதிக்கப்பட்டிருந்த ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி, கி.பி. 1916ம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு தினத்தன்று மரித்தார். அவரது நிலை மோசமடைந்த காரணத்தால், அவர் டிசம்பர் 23ம் தேதியன்றே, “நோயில் பூசுதல்” (Anointing of the Sick) அருட்சாதனத்தைப் பெற்றார்.

Holy Body and Blood of Christ June 14

Feast : (14-06-2020)

Holy Body and Blood of Christ
This feast is celebrating the religious belief in the Body and Blood of Christ and real presence of Jesus in the Eucharist. This feast is celebrated on the next Sunday after Trinity Sunday to commemorate the institution of the Eucharist. An Augustinian nun Juliana of Liege had a great veneration for the Blessed Sacrament and she wished very much for the institution of a special feast for honoring the Blessed Sacrament. Once she saw a vision of the Church under full moon having a black spot. She thought that the black dark spot signifies the lack of a feast of the Eucharist. Bishop Robert de Thorete, Bishop of Liege was convinced about the vision of Juliana and ordered a feast to be celebrated in his diocese from the year 1247 and celebrated by the Cannons of St. Martins at Liege. Pope Urban-IV published a Papal Bull 'Transiturus' on September 8, 1264 directing to celebrate this feast on the Thursday, next after Trinity Sunday. But in countries where this feast is not a Holy Day of obligation including United States, it is celebrated on the next Sunday after Trinity Sunday. The new Liturgy for this feast was composed by St. Aquinas and he also written a hymn to sing on Corpus Christi Day-Pange Lingua Gloriosi Corporis Mysterium and this hymn is being sung on the Holy (Maundy) Thursday during the procession of the Blessed Sacrament.

This is to express the doctrine of Transubstantiation, in which it is believed that the bread and wine are changed into the Body and Blood of Jesus Christ. This feast is to show the Church's gratitude to the Christ, who instituted the Holy Eucharist and gave it to the Church, which is the greatest treasure of the Church. Maundy Thursday in which the Holy Eucharist was instituted is not a joyous day due to the Lord's Passion. To celebrate the joyous aspect of Maundy Thursday when the Holy Eucharist was instituted, this feast is celebrated. Eucharist is the sacrament of Life, sacrament of Love, sacrament of Unity and sacrament of Faith. Christ said when instituting the Holy Eucharist 'This is My Body given up for you, this is My Blood shed for you'. These are the words of sacrifice for others and love for others.

---JDH---Jesus the Divine Healer---

புனித.ஹாட்விக்ஆயர் June 14

இன்றைய புனிதர் :
(14-06-2020)

புனித.ஹாட்விக்
ஆயர்

பிறப்பு 
955
     
14 ஜூன் 1023

இவர் ஜெர்மனி நாட்டிலுள்ள சால்ஸ்பூர்க் என்ற மறைமாநிலத்திற்கு ஆர்ச் பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசர் 3ஆம் ஓட்டோ (Otto III) அவர்களுடன் நெருங்கிய நண்பராக இருந்தார். இதனால் தனது மறைமாநிலத்திற்கு தேவையான அனைத்து பொருளுதவிகளையும் அரசரிடமிருந்து பெற்று, தன் மறைமாநில மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார். 993 ஆம் ஆண்டில் சால்ஸ்பூர்க்கில், மறைமாநில பேராலயத்தை எழுப்பினார். பல பள்ளிகளையும், மறைமாநிலத்திற்கென்று சில நிறுவனங்களையும் கட்டினார். புனித பெனடிக்ட் சபைக்கென்று துறவற இல்லத்தையும் கட்டினார். இவர் காலரா போன்ற தொற்று நோய் உள்ள மக்களிடத்தில் பணியாற்றினார். அம்மக்களின் ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் எளிமையான பணியாலும், வாழ்வாலும் பல நோயாளிகளின் மனிதர் என்னும் ஒளியேற்றி வாழ்வளித்தார். தொற்றுநோய் உள்ள மக்களிடையே பணியாற்றும் போது, அந்நோயால் தாக்கப்பட்டு இருந்தார். அவரால் கட்டப்பட்ட சால்ஸ்பூர்க் பேராலயத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1598இப்பேராலயமானது தீப்பிடித்து எரிந்ததால் அவரின் உடலை கண்டெடுக்க முடியாமல் போனது.

செபம்:
ஏழைகளின் தோழனே இறைவா! புனித ஹாட்விக் ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு வழிகாட்டினார். ஏழைகளின் தோழனாய் இருந்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்தார். தான் செய்த பணியின் வழியாக, தன் வாழ்வையே தியாகம் செய்து உயிர்நீத்தார். நாங்கள் எங்களால் இயன்றவரை, ஏழைகளோடு இருக்க, அவர்களுக்கு உதவிசெய்த எமக்கு வழிகாட்டி, உதவிசெய்தருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

13 June 2020

பதுவைப் புனிதர் தூய அந்தோனியார் (ஜூன் 13)

இன்றைய புனிதர் :
(13-06-2020)

பதுவைப் புனிதர் தூய அந்தோனியார் (ஜூன் 13)

அந்தோனியார் (பெர்னாடின் என்பதுதான் அந்தோனியாரின் திருமுழுக்குப் பெயர். அந்தோனியார் என்பது தூய வனத்து அந்தோனியார் மீது அவர் கொண்ட பற்றினால் வைத்துக்கொண்டது) 1195 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்டின் இவருடைய தாய் தெரசா பயஸ் தவேரா ஆவார். இவருடைய குடும்பம் லிஸ்பனில் அரசராக இருந்த இரண்டாம் அல்போன்சாவுக்கு மிக நெருக்கமான குடும்பம். அந்தோனியார் தன்னுடைய பள்ளிக்கல்வியை லிஸ்பனில் உள்ள கதீட்ரல் பள்ளியில் படித்தார். தன்னுடைய பதினைந்தாவது வயதில் தூய அகுஸ்தினார் சபையில் சேர்ந்து கொயிம்ரா என்ற இடத்தில் குருவாக படிக்கத் தொடங்கினார். 1219 ஆம் ஆண்டு இவர் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

ஒருசமயம்  மொரோக்கோ நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற தூய பிரான்சிஸ்கன் சபைத் துறவிகள் சிலர் கொல்லப்பட்டு, அவர்களுடைய உடலானது அந்தோனியார் இருந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதைப் பார்த்த அந்தோனியார் தானும் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து மொரோக்கோ நாட்டிற்குச் சென்று, அங்கே மறைசாட்சியாக உயிர்துறக்கத் துணிந்தார். அதன்படி இவர் கப்பலில் மொரோக்கோ நாட்டிற்குப் பயணமானார். ஆனால் போகும் வழியில் நோய்வாய்ப்பட்டு, நலிவுற்ற நிலைக்குத் தள்ளப்படவே, தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் கப்பலில் திரும்பிக்கொண்டிருந்த போது கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக கப்பல் சிசிலியில் தஞ்சம் அடைந்தது. எனவே, அவர் சிசிலியில் தரை இறங்கினார். சிசிலியில்தான் அந்தோனியார் தூய பிரான்சிஸ் அசிசியாரைச் சந்தித்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர் அருகே இருந்த ஒரு பங்கில் மறைபோதகப் பணியை ஆற்றி வந்தார்.

இந்த நேரத்தில் போர்லி என்ற இடத்தில் குருப்பட்டம் நடைபெற்றது. குருப்பட்டத்திற்கு அந்தோனியாரும் சென்றிருந்தார். அந்த குருப்பட்டத்தில் மறையுரை ஆற்றவேண்டிய குருவானவர் வராமல் போகவே, சபைத் தலைவர் அந்தோனியாரைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் மறையுரை ஆற்றத் தொடங்கினார். அவர் மறையுரை ஆற்றுவதைப் பார்த்த மக்கள் கூட்டம் வியப்பில் ஆழ்ந்தது, இறைவார்த்தையை அவர் விளக்கிய விதம், மடைதிரண்ட வெள்ளம் போல அவரிடமிருந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பார்த்தவர்கள் மெய்மறந்து நின்றார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தோனியாருடைய புகழ் எங்கும் பரவியது. அவர் லாம்பர்டி என்ற பகுதி முழுவதும் நற்செய்தி அறிவிக்கப் பணிக்கப்பட்டார்.

அந்தோனியார் இறைவார்த்தையை விளக்கிய விதத்தைக் கண்டு மக்கள் பல இடங்களிலிருந்தும் அவருடைய போதனையைக் கேட்க வந்தார்கள். அப்போது அவர் ஆற்றிய புதுமைகள் ஏராளம். ஓரிடத்தில் அந்தோனியாரின் போதனையைக் கேட்பதற்காக பெண்ணொருத்தி தன்னுடைய குழந்தையைத் தொட்டிலில் தூங்கவைத்துவிட்டு வந்துவிட்டார். அவர் அந்தோனியாரின் போதனையைக் கேட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றபோது குழந்தை அருகே கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் விழுந்து இறந்துபோனது. அப்போது அந்தப் பெண்மணி அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. எனவே அவர் அந்தோனியாரை அணுகி வந்து, தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும்படி கெஞ்சிக் கேட்டார். அந்தோணியாரும் அவர்மீது இரக்கம்கொண்டு அந்தக் குழந்தையை உயிர்பித்துத் தந்தார்.

அந்தோனியார் வாழ்ந்த காலத்தில் நற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னம் இல்லை என்று ஒருவன் மறுத்து வந்தான். அந்தோனியார் அவரிடத்தில், “நீ உன்னிடத்தில் இருக்கும் கழுதையை மூன்று நாட்கள் பட்டினி போடு. மூன்று நாட்களுக்குப் பிறகு அதை இங்கே அழைத்துக்கொண்டு வா. அப்போது அதன்முன்பாக உணவையும் நற்கருணை ஆண்டவரையும் வைப்போம். ஒருவேளை அது நற்கருணை ஆண்டவருக்கு அடிபணிந்தால் அப்போது நீ நற்கருணையில் ஆண்டவர் இருப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று அவரிடத்தில் சொன்னார். அந்த மனிதரும் அதற்குச் சரியென்று சொன்னார். அந்த மனிதர் மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னுடைய கழுதைக்கு உணவேதும் தராமல் அந்தோனியாரிடத்தில் கொண்டுவந்தார். அந்த கழுதைக்கு முன்பாக உணவும், இன்னொரு பக்கம் அந்தோனியார் நற்கருணை ஆண்டவரைக் கையில் ஏந்தியும் இருந்தார். மூன்று நாட்கள் கழுதை ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததால் உணவையே உட்கொள்ளும் என்று அந்த மனிதர் நினைத்தார். ஆனால் அக்கழுதையை நற்கருணை ஆண்டவர் முன்பாக முழந்தாள்படியிட்டு வணங்கியது. இதைக் கண்ட அந்த மனிதர் அந்தோனியாருடைய காலில் விழுந்து, தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டார்.

ஒருசமயம் ரூமினி நாட்டில் இருந்த யூதர்கள் சிலர் அந்தோனியார் மீது பொறாமை கொண்டு, அவருடைய உணவில் விஷம் கலந்து கொடுத்து, கொல்லப் பார்த்தார்கள். ஆனால் அந்தோனியாரோ விஷம் கலந்த அந்த உணவின்மேல் சிலுவை அடையாளம் வரைந்து உண்டு, அவர்களுடைய  சூழ்ச்சியை வெற்றிகொண்டார். அந்தோனியார் இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று மறைபோதகப் பணியைச் செய்ததால் அவருடைய உடல் தளர்வுற்றது. அவர் தான் விரைவிலே இறக்க இருக்கிறோம் என்பதை உணர்ந்தவராய் தன்னுடைய உடலை பதுவா நகருக்கு எடுத்துகொண்டு போகும்படியாக தன்னுடைய சகோதரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் அர்செல்லா நகரை அடைந்தபோதே அவருடைய ஆவி இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தது. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 36. பின்னர் சகோதரர்கள் அவரை பதுவா நகரில் அடக்கம் செய்தார்கள். அந்தோனியார் இறந்த அடுத்த ஆண்டிலேயே அவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

அவர் இறந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1263 ஆண்டு, அவருடைய உடலை இடமாற்றம் செய்யும் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருடைய கல்லறையைத் திறந்துபார்த்தபோது அவருடைய நாவு மட்டும் அழியாமல் இருந்தது. இதைப் பார்த்த பொனவெந்தூர், “ஓ பரிசுத்த நாவே, நீ எப்போதும் இறைவனைப் போற்றி புகழ்ந்ததால், அழியாமல் காக்கப்பட்டாய்” என்றார். அந்தோனியார் இறந்து எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருடைய நாவு இன்றைக்கும் அழியாமல் இருப்பதைப் பார்க்கும்போது அந்தோனியார் தன்னுடைய நாவினால் இறைவனுக்கு எந்தளவுவுக்கு மகிமை சேர்த்திருப்பார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. 1946 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் பத்திநாதர் அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுனராக உயர்த்தினார்.

Saint of the Day : (13-06-2020)

St. Anthony of Padua

St. Anthony was born on August 15, 1195 at Lisbon in an aristocratic and wealthy family and his birth name was Fernando Martins de Bulhoes. His father was Vincente Martins de Bulhoes and mother Teresa Pais Taveira. Anthony’s father was the descendant of the famous Godfrey de Bouillin, the commander of the First Crusade (1095\-1101) and his mother was the descendant of Froila\-I, the fourth king of Asturia. He first entered into the community of Canons Regular at the Abbey of St. Vincent in Lisbon. At that time some five friars of the Franciscan Order were martyred in Morocco on January 16, 1220. On hearing the news of the martyrdom of the Franciscan Friars, Anthony wanted to join the Franciscan Order to become a martyr for Christ. Anthony joined the small hermitage in Olives and adopted the name Anthony, in the name of the church there dedicated to St. Anthony the Great. He set out for Morocco for missionary work but could not go there due to sickness but instead went to Italy. On one ordination occasion, the head of the hermitage where St. Anthony was staying called Anthony to give the sermon, as the Dominican friars were unprepared for it and the head of the hermitage could not find any suitable person from the Franciscan order to give sermon on that day. Anthony’s rich voice and the entire theme and substance of his sermon and his eloquence attracted everyone present there. After this incident Anthony was commissioned to preach Gospel throughout Lombardy in Northern Italy.

Many miracles happened at the hands of Anthony when he was alive.

One day a horse which was fasting for three days, even refused to take oats placed before it, till it had knelt down and adored the Blessed Sacrament held by St. Anthony in his hands. This miracle happened in a place called Rimini.

In another occasion some Italian heretics gave poisoned food to St. Anthony. But St. Anthony made the poisoned food eatable by the sign of the cross.

He once preached to the fishes by standing on the bank of river Brenta near Padua.

Once when St. Anthony was on his way to Italy, he stayed in the castle of Chateauneuf\-la\-Foret in the province of Limousine. In that palace Infant Jesus appeared to St. Anthony and came down and stood on the Bible held by St. Anthony. On the basis of this apparition only, St. Anthony of Padua is depicted in art holding a bible on which the Infant Jesus stands.

In yet another occasion St. Anthony and his companions stayed in the house of a poor woman during a journey and she gave bread and wine to St. Anthony and others. But she forgot to close the tap of the wine\-barrel and the wine was wasted. In that time one of Anthony’s companions broke the glass tumbler by inadvertence. St. Anthony started to pray and suddenly the broken glass tumbler was made whole and the wine\-barrel filled anew with wine.

St. Anthony died on June 13, 1231 when he was just 36 years old. St. Anthony was canonized by pope Gregory\-IX on May 30, 1232 within one year of his death. He was also proclaimed Doctor of the Church by pope Pius\-XII on January 16, 1946. His body was exhumed many years after his death and it was found that his tongue was found incorrupt.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூன் 13)

✠ பதுவை புனிதர் அந்தோனியார் ✠
(St. Anthony of Padua)

மறைப்பணிகளின் மறைவல்லுநர், அவிசுவாசிகளின் சம்மட்டி, கோடி அற்புதர்:
(Evangelical Doctor, Hammer of Heretics, Professor of Miracles)

பிறப்பு: ஆகஸ்ட் 15, 1195
லிஸ்பன், போர்ச்சுக்கல்
(Lisbon, Portugal)

இறப்பு: ஜூன் 13, 1231 (வயது 35)
பதுவை நகர், இத்தாலி
(Padua, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு மற்றும் புனிதர் பட்டம்: மே 30, 1232 
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
(Pope Gregory IX)

முக்கிய திருத்தலங்கள்:
புனிதர் அந்தோனியார் திருத்தலம், பதுவை, இத்தாலி
(Basilica of Saint Anthony of Padua, Italy)

நினைவுத் திருவிழா: ஜூன் 13

பாதுகாவல்:
அமெரிக்க பழங்குடியினர் (American Indians); பிரேசில் (Brazil); முதியோர்; நற்கருணை பக்தி (Faith in the Blessed Sacrament); மீனவர்; அறுவடை; குதிரைகள்; தொலைந்துபோன பொருட்கள்; தொலைந்துபோன மக்கள்; தொலைந்துபோன ஆன்மாக்கள்; தபால்; மாலுமிகள்; ஒடுக்கப்பட்டோர்; வறியவர்; போர்ச்சுகல் (Portugal); கர்ப்பிணிகள்; பசியுறுவோர்; பயணம் செய்வோர்; பரிசல்காரர்; லிஸ்பன் (Lisbon); ஃபிரான்சிஸ்கன் சபையினர் கையகப்படுத்தியுள்ள புனித பூமி (Franciscan Custody of the Holy Land); கப்பல் பணியாளர்கள் (Mariners); டிகுவா இந்தியர்கள் (Tigua Indians); சுற்றுலா பணிப்பெண்கள் (Travel hostesses); பயணிகள் (Travellers); டுபுரன் (Tuburan); செபு (Cebu); எதிர்-புரட்சியாளர்கள் ( Counter-Revolutionaries); சேன் அன்டோனியோ டி பதுவா பங்கு (San Antonio De Padua Parish); டைடை (Taytay) (Rizal).
 

“ஃபெர்னாண்டோ மார்ட்டின்ஸ் டி புல்ஹோஸ்” (Fernando Martins de Bulhões) எனும் இயற்பெயர் கொண்ட, பதுவை புனிதர் அந்தோனியார், போர்ச்சுகீசிய கத்தோலிக்க குருவும், “ஃபிரான்சிஸ்கன்” (Franciscan Order) சபை துறவியும் ஆவார். இவர் “லிஸ்பன்” (Lisbon) நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம், இத்தாலி நாட்டிலுள்ள “பதுவை” (Padua) நகரில்தான் இவர் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும், அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் “பதுவைப் பதியர்” என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் மரித்த மறு வருடமே இவருக்கு புனிதர் பட்டம் பெற்றுத் தந்தது.

வாழ்க்கைக் குறிப்பு:
இளமை: 
ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் (Portugal) நாட்டின் தலைநகரான லிஸ்பன் (Lisbon) மாநகரிலே கி.பி. 1195ம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள், 15ம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் “வின்சென்ட் மார்டின்ஸ்” (Vicente Martins), மற்றும் “தெரெசா பைஸ் டவேய்ரா” (Teresa Pais Taveira) ஆவர். இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவர் கூரிய நுண்ணறிவு படைத்தவர் ஆவார்.

புனித அகுஸ்தீன் சபையில்:
(Augustinian Abbey of Saint Vincent)
ஆன்மீக குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த ஃபெர்னாண்டோ தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின்படி, அப்போதைய போர்ச்சுகலின் தலைநகரான “கொயிம்ப்ரா” (Coimbra) என்னும் நகருக்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24ம் வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

மொராக்கோவில் (Morocco) வேத சாட்சிகளாக மரித்த ஐந்து ஃபிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், 1220ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதத்தில் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த ஃபெர்னாண்டோ, தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே கி.பி. 1221ம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி, ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

ஃபிரான்சிஸ்கன் சபையில்:
ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் ஃபெர்னாண்டோ என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதிய பெயர் பெற்றுக்கொண்டார். சிறிது காலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் மறையுரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்தும் ஆணித்தரமாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்திலும், இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் "கோடி அற்புதர்" என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை, இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது, மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தனவாம். இன்னொரு முறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை, அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.

மற்றுமொறு புதுமை: 
இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகளுக்கு அதிகமாக புதுமைகள் செய்ய தடை விதித்து கட்டளையிட்டார். ஒருநாள், இவர் அன்றைய தினம் செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின்னர், மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த வேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப, இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்க வைத்ததாகவும், அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும், புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.

புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் எண்ணற்ற புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது. 

இறப்பு:
கி.பி. 1231ம் ஆண்டு, பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும், நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13ம் நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 35. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப் பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டபோது, அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.

1946ம் ஆண்டு, வணக்கத்துக்குரிய திருத்தந்தை 12ம் பயஸ் (Venerable Pope Pius XII), புனிதர் அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.

12 June 2020

போலந்து நாட்டைச் சார்ந்த 108 மறைச்சாட்சிகள். June 12

ஜூன் 12

போலந்து நாட்டைச் சார்ந்த 108 மறைச்சாட்சிகள்
இந்த 108 பேரும் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாசிப் படையினரால் கொல்லப்பட்டவர்கள்.

இவர்களில் 3 ஆயர்கள்
79 அருள்பணியாளர்கள் 
7 துறவிகள்
8 அருள் சகோதரிகள் 
11 பொதுநிலையினர் அடங்குவர்.

இந்த 108 மறைச்சாட்சிகளும்
ஆண்டவர் இயேசுவுக்காக
இரத்தம் சிந்தித்
தங்களுடைய இன்னுயிரை இழந்தவர்கள்.

இவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு 
ஜூன் திங்கள் 13 ஆம் நாள் 
புனித திருத்தந்தை 
இரண்டாம் யோவான் பவுலால்
அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.

சிந்தனை: 

"மறைச்சாட்சிகளின் இரத்தம் திருஅவையின் வித்து" - புனித தெர்த்துலியன்

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" - இயேசு

"கிறிஸ்துவின்மீது உண்மையான பற்றுக் கொண்டவர்களை யாரும் கொல்ல முடியாது. அவர்களது முகவரியை மண்ணகத்திலிருந்து விண்ணகத்திற்கு மாற்றலாம், அவ்வளவுதான்" - டுயூக் டான்ஸ்.

அருளாளர் யோலந்தா. ஜூன் 12

† இன்றைய புனிதர் †
(ஜூன் 12)

✠ அருளாளர் யோலந்தா ✠
(Blessed Yolanda)
நிறுவனர் மற்றும் மடாதிபதி:
(Founder and Abbes)

பிறப்பு: கி.பி. 1235
எஸ்டர்காம்
(Esztergom)

இறப்பு: கி.பி. 1298
க்நீஸ்னோ
(Gniezno)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1827
திருத்தந்தை 12ம் லியோ
(Pope Leo XII)

நினைவுத் திருநாள்: ஜூன் 12

அருளாளர் யோலந்தா, ஹங்கேரியின் அரசர் “நான்காம் பேலா” மற்றும் “மரிய லஸ்கரினா” (King Béla IV of Hungary and Maria Laskarina) ஆகியோரின் மகளாவார். இவர், “புனிதர் ஹங்கேரியின் மார்கரெட்” (Saint Margaret of Hungary) மற்றும் “புனிதர் “கிங்கா” (Saint Kinga (Cunegunda) ஆகியோரின் சகோதரியுமாவார். புகழ்பெற்ற ஃபிரான்சிஸ்கன் “புனிதர் ஹங்கேரியின் எலிசபெத்” (Elizabeth of Hungary) இவரது தந்தை வழி அத்தை ஆவார்.

போலந்து நாட்டின் பிரபுவைத் திருமணம் செய்திருந்த யோலந்தாவின் தமக்கை கிங்காவின் மேற்பார்வையில் கல்வி கற்பதற்காக யோலந்தா போலந்து அனுப்பப்பட்டார். அங்கே, அவர் 'போலஸ்லா' (Boleslaw the Pious) என்பவரைத் திருமணம் செய்ய அறிவுறுத்தப்பட்டார். கி.பி. 1257ம் ஆண்டு, அவர்களது திருமணம் நடந்தது. அவர்களுக்கு பின்வரும் மூன்று பெண்குழந்தைகள் பிறந்தன:

1. கி.பி. 1263ம் ஆண்டு, பிறந்த எலிசபெத் (Elizabeth of Kalisz) – (இவர் பின்னாளில் “லெக்னிகா’வின்” பிரபு “ஹென்றி” (Henry V, Duke of Legnica) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.)
2. கி.பி. 1266ம் ஆண்டு, பிறந்த “ஹெட்விக்” (Hedwig of Kalisz) – (இவர் பின்னாளில் போலந்தின் மன்னன் “முதலாம் விளாடிஸ்லாவ்” (Władysław I the Elbow-high, King of Poland) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.)
3. கி.பி. 1278ம் ஆண்டு, பிறந்த “அன்னா” (Anna of Kalisz) – (இவர் பின்னாளில் “க்நீஸ்னோ” நகரில் அருட்சகோதரியாக (Nun in Gniezno) துறவறம் பெற்றார்.)

யோலந்தா, தமது திருமணத்தின்போதே எதிர்காலத்தில் ஏழைகளுக்கும் வீடற்றவர்களுக்கும் உதவும் எண்ணம் கொண்டார். இதற்கு அவரது கணவரான 'போல்ஸ்லா'வும் துணை நின்றார். அதன் காரணமாகவே அவருக்கு "நல்லோர்" (The Pious) எனும் பட்டப்பெயரும் கிடைத்தது.

“சேண்டஸ்” (Sandez) என்னுமிடத்தில் யோலந்தாவின் தமக்கை கிங்கா, ஏழைகளுக்கான (Poor Clare monastery) துறவு மடம் ஒன்றினை நிறுவினார்.

கி.பி. 1279ம் ஆண்டு, யோலந்தாவின் கணவர் “போல்ஸ்லா” மரணமடைந்தார். விதவையான யோலந்தா, தமது பெண்களில் ஒருவரான அன்னாவுடன் (Anna) இணைந்து தமக்கையின் “ஏழை கிளாரா” (Poor Clare monastery) என்ற துறவு மடத்தினை நிர்வகிக்க ஆரம்பித்தார். ஆனால், அங்கே நடந்த ஆயுதப் போரின் காரணமாக துறவு மடத்தை அங்கிருந்து அகற்ற வற்புறுத்தப்பட்டார்கள்.

யோலந்தா “க்நீஸ்னோ” (Gniezno) என்னுமிடத்தில் புதிய துறவு மடம் ஒன்றினை நிறுவினார். 63 வயதான யோலந்தா, கி.பி. 1298ம் ஆண்டு, மரணமடைந்தார்.

புனித கஸ்பார் பெர்டோனி (St.Kaspar Bertoni)சீன நாட்டின் விசுவாசத்தின் பாதுகாவலர் June 12

இன்றைய புனிதர் :
(12-06-2020)

புனித கஸ்பார் பெர்டோனி (St.Kaspar Bertoni)
சீன நாட்டின் விசுவாசத்தின் பாதுகாவலர்
பிறப்பு 
1777
வெரோனா, இத்தாலி
    
இறப்பு 
12 ஜூன் 1853
வெரோனா
முத்திபேறுபட்டம்: 1975, ஆறாம் பவுல்

கஸ்பார் ஏழைகளின் ஆன்ம வழிகாட்டியாகவும், கத்தோலிக்க பணியகம் ஒன்றில் திருச்சபையின் வரலாற்றை பற்றி எடுத்துரைப்பவராகவும் இருந்தார். பின்னர் கனானிய துறவற சபையில் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். அச்சபைக்கு தேவையான எல்லாவித உதவிகளையும் செய்தார். பின்னர் "கிறிஸ்துவின் திருக்காயம்" என்றழைக்கப்படும் சபையை தோற்றுவித்தார். பல ஆயர்களின் உதவி கொண்டு அச்சபையை வளர்த்தெடுத்தார். இவர் தன் மறைமாவட்டத்தில் மிஷினரியாக வேலை செய்து, பல மாவட்டங்களில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்து, பலரை தன் சபையில் சேர்த்து பணியாற்றினார். 

1855 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால் இவரின் சபை பாப்பரசரின் அங்கீகாரம் பெற்ற சபையாக அறிவிக்கப்பட்ட பரிந்துரை செய்யப்பட்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால்,1925 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் பாப்புவின் அங்கீகாரம் பெற்ற சபையாக அறிவிக்கப்பட்டது. இவர் இறக்கும் வரை பல ஆன்மாக்களுக்கு ஆன்ம வழிகாட்டியாகவே திகழ்ந்தார். இவர் சீன நாட்டில் மறைபரப்பு பணியை வளர்க்க பெரும்பாடுபட்டார். 

செபம்:
இரக்கத்தின் இறைவா! உம்மீது கொண்ட நம்பிக்கையால், பலரின் மனக்காயங்களை போக்கி, வழிகாட்டியாக திகழ்ந்தார் புனித கஸ்பார். எம்மையும் உமது கருவியாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக நாங்கள் வாழ வரம் வாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


Saint of the Day : (12-06-2020)

Saint Gaspare Bertoni

Son of Francis, a wealthy lawyer and notary, and Brunora Ravelli Bertoni, he was raised in a pious family. His beloved sister died when Gaspare was quite young. He was educated at home, then by Jesuits and the Marian Congregation at Saint Sebastian's School in Verona, Italy.

At his first Communion Gaspare received a vision and message that he was to become a priest, and he entered the seminary in 1796. On 1 June 1796, troops from Revolutionary France began a 20 year occupation of northern Italy. Gaspar joined the Gospel Fraternity for Hospitals, and worked to help those wounded, ill, displaced, or otherwise harmed by the occupation. Ordained on 20 September 1800.

Chaplain to the sisters of Saint Magdalen Canossa convent. Spiritual director to many including Blessed Leopoldina Naudet, Venerable Teodora Campestrini, and an entire seminary. Well known preacher. One of the leaders in a Europe-wide movement to offer prayers and support for Pope Pius VII when he was imprisoned by Napolean Bonaparte. Established the Marian Oratories. Organized free schools for the poor. Spread devotion to the Five Wounds of Christ.

Founded the Congregation of the Sacred Stigmata of Our Lord Jesus Christ (Stigmatines) on 4 November 1816. Their mission was to serve as "Apostolic Missionaries for the assistance of bishops", and they were under the patronage of Mary and Joseph.

Beset by fevers and a continuing infection in his right leg during the last two decades of his life. Over 300 operations were performed on his leg in an effort to stem the infection. Continued to serve as counselor and spiritual director from his hospital bed.

Born :
9 October 1777 in Verona, Italy

Died :
Sunday 12 June 1853 in Verona, Italy of natural causes

Canonized :
1 November 1989 by Pope St. John Paul II

---JDH---Jesus the Divine Healer---


† இன்றைய புனிதர் †
(ஜூன் 12)

✠ புனிதர் கேஸ்பர் பெர்டோனி ✠
(St. Gaspare Bertoni)

குரு/ சபை நிறுவனர்:
(Priest/ Founder)

பிறப்பு: அக்டோபர் 9, 1777
வெரோனா, வெனிஸ் குடியரசு
(Verona, Republic of Venice)

இறப்பு: ஜூன் 12, 1853 (வயது 75)
வெரோனா, லொம்பார்டி-வெனிஷியா அரசு 
(Verona, Kingdom of Lombardy-Venetia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: நவம்பர் 1, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம்: நவம்பர் 1, 1989
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜூன் 12

பாதுகாவல்:
“ஸ்டிக்மேடைன்ஸ்” (Stigmatines)

புனிதர் கேஸ்பர் பெர்டோனி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும், “தூய ஸ்டிக்மாட்டா" (Congregation of the Sacred Stigmata) சபையின் நிறுவனரும் ஆவார்.

கி.பி. 1777ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, வெனிஸ் குடியரசின் “வெரோனா” (Verona) நகரில் பிறந்த இப்புனிதரின் தந்தை ஒரு சட்ட வல்லுநர் ஆவார். அவரது பெயர், “ஃபிரான்சிஸ்கோ பெர்டோனி“ (Francesco Bertoni) ஆகும். இவரது தாயாரின் பெயர் “ப்ரூநோரா ரவெல்லி” (Brunora Ravelli) ஆகும். இவரது குழந்தைப் பருவத்திலேயே இவரது ஒரே சகோதரி மரித்துப்போனார்.

ஆரம்பக் கல்வியை தமது பெற்றோரிடமே கற்ற பெர்டோனி, அதன் பின்னர், தமது சொந்த ஊரான வெரோனாவிலுள்ள “புனித செபாஸ்டியன்” பள்ளியின் (Saint Sebastian's School) “இயேசு சபை” மற்றும் “மரியான் சபை” (Jesuits and the Marian Congregation) துறவியரிடம் கற்றார்.

இவர் “புது நன்மை” (First Communion) பெறும்போது ஒரு திருக்காட்சி காணக் கிடைத்தது. அதன் அறிவுறுத்தலின்படி, கி.பி. 1796ம் ஆண்டு, குருத்துவ கல்வி கற்க ஆரம்பித்தார். கி.பி. 1796ம் ஆண்டு, ஜூன் மாதம், முதல் தேதியன்று, ஃபிரான்ஸ் நாட்டின் “ஃபிரெஞ்ச் புரட்சிப் படைகள்” (French Revolution – troops) இத்தாலி நாட்டின் வடக்குப் பிராந்திய நகரங்களை இருபதாண்டு கால ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியிருந்தன.

பெர்டோனி, மருத்துவமனைகளுக்கான “நற்செய்தி சகோதரத்துவ குழுவில்” (Gospel Fraternity) இணைந்து, புரட்சிப்படைகளின் நடவடிக்கைகளால் காயமுற்ற, நோயுற்ற மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியாற்ற தொடங்கினார். அவர் 1800ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 20ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

பெர்டோனி, “புனிதர் மகதலின் கனோஸ்ஸா பள்ளியின் அருட்சகோதரியரின் (Sisters of Saint Magdalen Canossa Convent) ஆலய குருவாக பணியாற்றிய அதே வேளையில், அருட்சகோதரியினரதும் குருத்துவ கல்லூரியினதும் ஆன்மீக இயக்குனராகவும் (Spiritual Director) பணியாற்றினார். ஃபிரெஞ்ச் பேரரசர் நெப்போலியனால் (Napolean Bonaparte) சிறை பிடிக்கப்பட்டிருந்த திருத்தந்தை ஏழாம் பயசு’க்காக (Pope Pius VII) ஆதரவளிப்போர் மற்றும் செபிக்கும் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

மரியான் செபக்கூடங்களை நிறுவுதல், இயேசுவின் ஐந்து காய பக்தியைப் பரப்புதல் மற்றும் எழைகளுக்கான பள்ளிகளை நிறுவுதல் ஆகியன புனிதர் கேஸ்பர் பெர்டோனி அவர்களின் முக்கிய மறைபணிகளாக இருந்தன. 1816ம் ஆண்டு, நவம்பர் மாதம், 4ம் தேதி, “இயேசு கிறிஸ்துவின் தூய ஐந்து காய தழும்புகளின் சபை” (Congregation of the Sacred Stigmata of Our Lord Jesus Christ) எனும் சபையை தோற்றுவித்தார். 2012ம் வருட அறிக்கையின்படி, இச்சபையில் 94 இல்லங்களும் 331 குருக்கள் உள்ளிட்ட 422 உறுப்பினர்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.

புனிதர் கேஸ்பர் பெர்டோனி தமது இறுதி நாட்களில் காய்ச்சல் போன்ற நோய்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டார். தமது வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளை தமது வலது காலில் ஏற்பட்ட நோய்த் தொற்றுடனேயே கழித்தார். அவருடைய காலின் நோய்த்தொற்றை நீக்கும் முயற்சியாக, கடந்த இருபது ஆண்டுகளில், அவரது வலது காலில் முன்னூறுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்படியும், மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் 1853ம் ஆண்டு தாம் மரிக்கும்வரை தமது சேவையைத் தொடர்ந்தார்.