புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 June 2020

புனித கொன்சாகா கொன்சா (1862-1886) June 3

ஜூன் 3 

புனித கொன்சாகா கொன்சா (1862-1886)
இவர் உகாண்டாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர்.

தெகுசாகா என்பவரிடத்தில் வேலை பார்த்துவந்த இவர், கீழ்ப்படிதலோடும் நம்பிக்கைக்குரியவராகவும் அறிவில் சிறந்தவராகவும் கடின உழைப்பாளியாகவும் இருந்ததால், அவர் இவரைத் தன்னுடைய மகனைப் போன்று பார்த்துக்கொண்டார்.

ஒருமுறை உகாண்டா மன்னருடைய அரண்மனையில் பணியாற்றுவதற்கு நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் தேவைப்பட்டதால், தெகுசாகா இவரை மன்னரிடத்தில் அனுப்பிவைத்தார். அங்கு இவர் மிகுந்த பொறுப்போடும் பணியாளர்களிடத்தில் இரக்கத்தோடும் நடந்துகொண்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இவர் அருள்பணியாளர் லூர்தல் என்பவரிடத்தில் திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவரானார். கிறிஸ்தவரான பின்பு இவர் கிறிஸ்துவின்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டு ஓர் உண்மைக் கிறிஸ்தவராக வாழ்ந்து வந்தார்.

1886 ஆம் ஆண்டு உகாண்டாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அக்கலவரத்தில் இவரும் இவரோடு சேர்த்து ஒருசிலரும் கொல்லப்பட்டார்கள். இவருக்கு 1964 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ஆம் நாள், திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இவர் சிறைக் கைதிகளுக்குப் பாதுகாவலர்.

புனிதர் கெவின் June 3

† இன்றைய புனிதர் †
(ஜூன் 3)

✠ புனிதர் கெவின் ✠
(St. Kevin of Glendalough)
நிறுவனர், மடாதிபதி:
(Founder and Abbot)

குரு மற்றும் மடாதிபதி:
(Priest and Abbot)

பிறப்பு: கி.பி 498
அயர்லாந்து
(Ireland)

இறப்பு: ஜூன் 3, 618

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: டிசம்பர் 9, 1903
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X)

நினைவுத் திருநாள்: ஜூன் 3

பாதுகாவல்:
பிளாக்பேர்ட்ஸ் (Blackbirds), டப்ளின் பேராயம் (Archdiocese of Dublin), க்ளென்டலோ (Glendalough), கில்மநாக் (Kilnamanagh)

அயர்லாந்து (Ireland) நாட்டின் "விக்லோ" (County Wicklow) மாகாணத்திலுள்ள "க்ளென்டலோ" (Glendalough) துறவு மடத்தின் நிறுவனரும், அதன் முதல் மடாதிபதியுமான கெவின், ஒரு ஐரிஷ் புனிதர் ஆவார்.

அயர்லாந்து (Ireland) நாட்டின் தலைநகரான டப்ளின் (Dublin) நகரில், ஒரு உள்ள ஒரு ஃபிரான்சிஸ்கன் கான்வென்ட்டின் (Franciscan Convent) பதிவுகளில், பாதுகாக்கப்பட்ட ஒரு இடைக்கால இலத்தீன் சுய வரலாற்றுக் குறிப்பு (Latin Vita) உள்ளது. இவ்வரலாற்றுக் குறிப்புகளின்படி கெவின், கோய்ம்லாக் (Coemlog) மற்றும் கோமல் (Coemell of Leinster) ஆகிய பிரபுத்துவ பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார்.

ஆயர் லூகிடஸ் (Bishop Lugidus) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட கெவின், உடனடியாக க்ளென்டலோ (Glendalough - a glacial valley) எனும் ஒரு பனிப்பாறை பள்ளத்தாக்குக்குச் சென்றார். இலத்தீன் சுய வரலாற்றுக் (Latin Vita) குறிப்புகளின்படி, தற்போது "புனிதர் கெவின் படுக்கை" (St. Kevin's Bed) என்று அழைக்கப்படும் வெண்கல வயது கல்லறை (Bronze Age tomb) ஒரு குகையில் ஒரு துறவியாக வாழ்ந்தார். அங்கே அவர் ஒரு தேவதூதரால் அவர் வழிநடத்தப்பட்டார். புனித கெவின் படுக்கை, மலையின் விளிம்பிற்கு மிக அருகில் உள்ள பாறை முகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட குகை என்று சிறப்பாக விவரிக்க முடியும். சுமார் 30 அடி உயரமான இதன் மேலிருந்து, ஏரியை காணலாம். 3 அடி உயரமும் 2½ அடி அகலமும் கொண்ட ஒரு குறுகிய பாதை வழியாக அதை அணுகலாம். குகையை அணுகுவது மிகவும் கடினமாகும்.

மடாலயம்:
கெவின் இயற்கையுடன் ஒரு அசாதாரண நெருக்கத்துடன் அங்கு ஒரு துறவியின் வாழ்க்கையை வாழ்ந்தார். அவரைச் சுற்றியுள்ள விலங்குகளும் பறவைகளுமே அவரது தோழர்கள் ஆவர். அவர் ஏழு ஆண்டுகளாக விலங்குகளின் தோல்களை மட்டுமே அணிந்துகொண்டு, கற்களில் தூங்கி, மிகக் குறைவாக சாப்பிட்டு வாழ்ந்தார்.

அவர் வெறுங்காலுடனேயே பயணித்த அவர், ஜெபத்தில் தனது நேரத்தை செலவிட்டார். பல சீடர்கள் விரைவில் இவரிடம் ஈர்க்கப்பட்டனர். மேலும் கெவின் செல் (Kevin's Cell) என்று அழைக்கப்படும் ஒரு சுவரால் சூழப்பட்ட குடியேற்றம், ஏரி கரைக்கு அருகில் நிறுவப்பட்டது. கி.பி. 540ம் ஆண்டு வாக்கில் ஒரு ஆசிரியராகவும், தூய மனிதராகவும் இவரது புகழ் வெகுதூரம் பரவியது. அவரது உதவியையும் வழிகாட்டலையும் நாட பலர் வந்தார்கள். காலப்போக்கில் க்ளென்டலோ (Glendalough), புனிதர்கள் மற்றும் அறிஞர்களின் புகழ்பெற்ற செமினரியாகவும், பல மடங்களின் நிறுவனராகவும் வளர்ந்தார்.

கி.பி. 544ம் ஆண்டு, கெவின் வெஸ்ட்மீத் (County Westmeath) மாகாணத்தில் உள்ள யுஸ்னீச் மலைக்குச் (Hill of Uisneach) சென்று புனித மடாதிபதிகளான கொலம்பா (Columba), காம்கால் (Comgall) மற்றும் கன்னிச் (Cannich) ஆகியோரை பார்வையிட்டார். பின்னர் அவர் க்ளோன்மேக்னோயிஸ் (Clonmacnoise) சென்றார். அங்கு புனித சியரன் (St. Cieran) மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டிருந்தார். தனது சமூகத்தை உறுதியாக நிலைநாட்டிய அவர், நான்கு ஆண்டுகளாக தனிமையில் ஓய்வு கொண்டார். மேலும் தனது துறவிகளின் உற்சாகமான வேண்டுகோளின் பேரில் மட்டுமே க்ளென்டலோவுக்குத் திரும்பினார். கி.பி. 618ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை, கெவின் க்ளென்டலோவில் உள்ள தனது மடத்திற்கு தலைமை தாங்கினார். உண்ணாவிரதம், பிரார்த்தனை, மற்றும் கற்பித்தல் மூலம் தனது வாழ்க்கையை வாழ்ந்தார். புனிதர் கெவின் டப்ளின் மறைமாவட்டத்தின் (Diocese of Dublin) பாதுகாவல் புனிதர்களில் ஒருவர் ஆவார்.

அவர் ஐரிஷ் புனிதர்களின் இரண்டாவது சபையைச் (Second order of Irish Saints) சேர்ந்தவர் ஆவார். இறுதியில், க்ளென்டலோ, அதன் ஏழு தேவாலயங்களுடன், அயர்லாந்தின் பிரதான யாத்திரை தலங்களில் ஒன்றாக மாறியது.

புனிதர் சார்ளஸ் லுவாங்கா June 3

† இன்றைய புனிதர் †
(ஜூன் 3)

✠ புனிதர் சார்ளஸ் லுவாங்கா ✠
(St. Charles Lwanga)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: ஜனவரி 1, 1860
புகாண்டா அரசு, ஆபிரிக்கா
(Kingdom of Buganda)

இறப்பு: ஜூன் 3, 1886 (வயது 26)
நமுகோங்கோ, புகாண்டா அரசு, ஆபிரிக்கா
(Namugongo, Kingdom of Buganda)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheranism)

முக்திபேறு பட்டம்: 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)

புனிதர் பட்டம்: அக்டோபர் 18, 1964
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலங்கள்:
உகாண்டா மறைசாட்சியர் பேராலயம், முன்யோன்யோ மறைசாட்சியர் திருத்தலம்
(Basilica of the Uganda Martyrs, Munyonyo Martyrs Shrine)

நினைவுத் திருநாள்: ஜுன் 3

பாதுகாவல்:
ஆப்பிரிக்க கத்தோலிக்க இளைஞர் செயல்பாடுகள் (African Catholic Youth Action), மனம் மாறியவர்கள் (Converts), துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Torture victims)

புனிதர் சார்ளஸ் லுவாங்கா கத்தோலிக்க திருச்சபைக்கு மதம் மாறி வந்த உகாண்டா நாட்டு ஆதிவாசி ஆவார். இவர் கிறிஸ்துவின் மீதுள்ள தமது விசுவாசத்திற்காக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். 13 முதல் 30 வயதுக்குள்ளான 22 இளைஞர்களில் ஒருவராக சார்ளஸ் லுவாங்காவும் உயிருடன் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.

"பகாண்டா ஆதிவாசி" (Baganda tribe) இனத்தைச் சேர்ந்த சார்ளஸ் லுவாங்கா, தற்போதைய உகாண்டா நாட்டின் மத்திய தென் பிராந்தியத்தில் பிறந்தவர் ஆவார். அன்றைய புகாண்டா அரசின் மன்னனான "இரண்டாம் முவாங்காவின்" (Court of King Mwanga II of Buganda) அரசவையில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர் ஆவார். இவர் "பியர் கிரௌட்" (Pere Giraud) என்ற கத்தோலிக்க குருவால் 1885ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாளன்று, திருமுழுக்கு செய்விக்கப்பட்டார்.

வெளிநாட்டு காலனித்துவத்தை எதிர்க்கும் அரசனின் முயற்சியாக, புதிதாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தமது விசுவாசத்தை கைவிட வலியுறுத்தினான். கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிட மறுத்த கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை 1885 மற்றும் 1887 ஆகிய வருடங்களுக்கிடையான காலகட்டத்தில் தூக்கிலிட்டு கொன்றான். தமது அரசவையிலிருந்த சார்ளஸ் லுவாங்கா உள்ளிட்ட தமக்கு நெருக்கமான அலுவலர்களையும் கொன்றான்.

மதத்திற்கான வீரமரணம்:
(Martyrdom)
பண்டைய புகாண்டா நாட்டில் கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் 1885ம் ஆண்டு தொடங்கின. கத்தோலிக்க சமூகத்தினரின் தலைவரான ஆயர் "ஜேம்ஸ் ஹன்னிங்டன்" (Bishop James Hannington) உள்ளிட்ட ஆங்கிலிக்கன் சமூகத்தினர் புகாண்டாவின் அரசன் "இரண்டாம் முவாங்காவால்" (King Mwanga II of Buganda) கொன்று குவிக்கப்பட்டனர். அதன் பின்னர், அரசவையில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவரும் கிறிஸ்தவ கொள்கைகளை கற்பிக்கும் ஆசிரியருமான (Lay Catechist) "ஜோசஃப் முகாஸா பலிகுட்டெம்ப்" (Joseph Mukasa Balikuddembe) என்பவர் அரசனின் இத்தகைய கொலை செயல்களுக்காக அவனை கண்டித்தார். அரசனுக்கு நல்ல ஆலோசனைகள் கொடுத்தார். ஆனால் அரசனோ, "ஜோசஃப் முகாஸா'வை" பிடித்து தலையை வெட்டி கொலை செய்தான். அத்துடன், 1885ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாளன்று, ஜோசஃபின் ஆதரவாளர்களையும் அவரை பின்பற்றுபவர்களையும் கைது செய்தான். கொலை செய்யப்பட்ட "ஜோசஃப் முகாஸா'வின்" பணிகளை சார்ளஸ் லுவாங்காவிடம் அரசன் ஒப்படைத்தான். அன்றைய தினம்தான் லுவாங்கா திருமுழுக்கு பெற்றார்.

அரசன் "இரண்டாம் முவாங்கா'வின்" (King Mwanga II of Buganda) முறைகேடான, ஒழுக்கக்கேடான பாலியல் விருப்பங்களுக்கு ஒப்புக்கொள்ளாத சார்ளஸ் லுவாங்கா உள்ளிட்ட இளைஞர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களனைவரும் கொல்லப்படுவதன் முதல் நாளன்று, சார்ளஸ் லுவாங்கா அங்கிருந்த மற்ற இளைஞர்களுக்கு திருமுழுக்கு அளித்து கிறிஸ்தவர்களாக மனம் மாற்றினார்.

நாட்டை அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றுவதற்காக கிறிஸ்தவ துன்புறுத்தல்களை தொடங்கிய அரசன் முவாங்காவின் கோபம், தன்னுடைய சுய பாலியல் விருப்பங்களுக்கு இளைஞர்கள் ஒத்துப்போகாததால் அதிகமாக எரிந்தது. அரசன் அவ்விளைஞர்களை கொல்ல தீர்மானித்தான். இருப்பினும் அவர்களை கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிட வற்புறுத்தினான். ஆனால், அனைத்து இளைஞர்களுமே கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள்.

இளைஞர்கள் 22 பேரும் கொல்லப்பட வேண்டிய நாளான  1886ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதியும் வந்தது. சார்ளஸ் லுவாங்கா தனியாக கொல்லப்படுவதற்காக பிறரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவர் எரிக்கப்படுமுன்னர், எரிப்பவனைப் பார்த்து, "இந்த தீ எனக்கு குளிரும் தண்ணீர் போன்றது; நீயும் மனம் மாறு; என்னைப்போல கிறிஸ்தவனாகு" என்றார். பின்னர் அவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.

கத்தோலிக்க இளைஞர்கள் 12 பேரும், ஆங்கிலிக்கன் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 9 பேரும், தனித்தனியாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர், "முபாகா டுஸின்டே" (Mbaga Tuzinde) என்ற கத்தோலிக்க இளைஞரும் கிறிஸ்தவ விசுவாசத்தை விட மறுத்த காரணத்துக்காக மரணத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, தீயில் எரியப்பட்டார்.

“உகாண்டா மறைசாட்சியரின் பேராலயம்” (Basilica of the Uganda Martyrs) அவர்கள் கொல்லப்பட்ட "நமுகோங்கோ" (Namugongo) என்ற இடத்தில் கட்டப்பட்டது.

சார்ளஸ் லுவாங்காவுடன் மரணத்தில் உடன் பயணித்த பிற கத்தோலிக்கர்க இளைஞர்களும் 1964ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அவர்களால் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.


இன்றைய புனிதர் :
(03-06-2020)
புனித சார்லஸ் லுவாங்கா 
( St. Charles Lwanga )
மறைசாட்சி/ ஆப்ரிக்க இளைஞர்களின் பாதுகாவலர் :

பிறப்பு :1860 அல்லது 1865
உகாண்டா, ஆப்ரிக்கா

இறப்பு : ஜூன் 3, 1886
ஆப்ரிக்கா

முத்திபேறு பட்டம்: 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்

புனிதர் பட்டம்: 18 அக்டோபர் 1964
திருத்தந்தை ஆறாம் பவுல்

நினைவுத் திருநாள் : ஜுன் 3

"வெள்ளைக் குருக்கள்" என்றழைக்கப்படும் துறவற சபையினர் ஆப்ரிக்காவில் நைல் நதி மேற்குப்பகுதியில் வாழ்ந்து வந்து மக்களிடையே 1878ல் மறைபரப்புப்பணியில் இறங்கினர். 1879ம் ஆண்டு பெரிய சனிக்கிழமையன்று முதன்முதலாக சிலர் திருமுழுக்கு பெற்றனர். இவர்களில் சிலர் இஸ்லாம் மறையிலிருந்து புரோட்டஸ்டாண்டு சபைக்கு மாறி, அதிலிருந்து கத்தோலிக்கரானவர்கள்.
கத்தோலிக்க மெய்மறை மிக விரைவாக பரவுகிறதென்பதை உணர்ந்த இஸ்லாமியரின் தூண்டுதலால் 1886ல் முவாஷ்கா (Muwashka) என்ற அரசன் கத்தோலிக்கர்களைத் துன்புறுத்த ஏவிவிட்டான்.
சார்லஸ் லுவாங்காவும் அவரின் தோழர்களும் அரச அவையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் 13-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். முவாஷ்கா ஓரின சேர்க்கைக்கு அடிமைப்பட்டவனாக இருந்தான். அவன் அரச அலுவல் புரிந்தவர்களைக் கெடுக்க சூழ்ச்சி செய்தபோது, சார்லஸ் தம் தோழர்களிடம், "இது தீமையானது, கொடுமையானது" என்று அறிவுரை கூறி ஓரின சேர்க்கையில் ஈடுபடாமல் காப்பாற்றி வந்தார். சார்லஸ் தான் புதிதாக பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக நமுகொஸ்கோ (Namukosco) என்ற இடத்தில் நெருப்பிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.
சார்லஸின் அறிவுரைப்படி மற்ற இளைஞர்கள் தங்கள் புனிதத்தில் நிலைத்து நின்றனர். 13 வயதான சிறு பெண் தனது கற்புக்காக மற்றவர்களைப்போல உயிரைத் தியாகம் செய்தார். இந்த வேதகலாபனை முடிந்த மறு ஆண்டிலேயே ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் மறைபரப்பு பணி மிக விரைவாக பரவியது. ஆப்பிரிக்காவில் இந்த மறைசாட்சிகளின் இரத்தம் சிந்தப்பட்டதன் பயனாக ஒரு புதுயுகம் தோன்றிவிட்டது. முழுமையான சுதந்திரம் பெற்று மகிழும் ஆப்பிரிக்காவாக பொலிவுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களின் வேதனையில் புதிய யுகத்தை சார்ந்த ஆப்பிரிக்கா மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கான பாடங்கள் பல மிளிர்கின்றன.
மறைசாட்சிகள் தூண்களில் கட்டப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். சாட்டையடி பட்டனர். ஈட்டிகளால் குத்தப்பட்டனர், சுட்டெரிக்கப்பட்டனர். தலை வெட்டப்பட்டனர். இப்படி இருந்தும் ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவர்கள் பலுகிப் பெருகினர்.

செபம் :
இரக்கமே உருவான இறைவா! 
இரத்தம் சிந்தி மறைசாட்சிகளாக மரித்து, பல கிறிஸ்தவர்களை உருவாக்கிய புனித லுவாங்கா சார்லசை நினைத்து, அவரின் மகத்துவமிக்க, மேன்மையான பணிக்காக உம்மை நாங்கள் போற்றுகிறோம், புகழ்கின்றோம். ஆப்பிரிக்காவில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களையும், நீர் நிறைவாக ஆசீர்வதியும். உமது மறைபரப்பு பணியை ஆற்றிக் கொண்டிருக்கின்ற உமது ஊழியர்களை, கண்ணின் இமைபோல நீர் காத்து வழிநடத்தியருள வேண்டுமாய், இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம். ஆமென்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


Saint of the Day : (03-06-2020)

St. Charles Lwanga and Companions

St. Charles and many other martyrs for the faith died between November 15, 1885 – January 27, 1887 in Namugongo, Uganda. St. Charles and his companions were beatified in 1920 and canonized by Pope Paul VI in 1964.

In 1879 Catholicism began spreading in Uganda when the White Fathers, a congregation of priests founded by Cardinal Lavigerie were peacefully received by King Mutesa of Uganda.

The priests soon began preparing catechumens for baptism and before long a number of the young pages in the king’s court had become Catholics.

However, on the death of Mutesa, his son Mwanga, a corrupt man who ritually engaged in pedophilic practices with the younger pages, took the throne.

When King Mwanga had a visiting Anglican Bishop murdered, his chief page, Joseph Mukasa, a Catholic who went to great length to protect the younger boys from the king’s lust, denounced the king’s actions and was beheaded on November 15, 1885.

The 25 year old Charles Lwanga, a man wholly dedicated to the Christian instruction of the younger boys, became the chief page, and just as forcibly protected them from the kings advances.

On the night of the martyrdom of Joseph Mukasa, realizing that their own lives were in danger, Lwanga and some of the other pages went to the White Fathers to receive baptism. Another 100 catechumens were baptized in the week following Joseph Mukasa’s death.

The following May, King Mwanga learned that one of the boys was learning catechism. He was furious and ordered all the pages to be questioned to separate the Christians from the others.  The Christians, 15 in all, between the ages of 13 and 25, stepped forward. The King asked them if they were willing to keep their faith. They answered in unison, “Until death!”

They were bound together and taken on a two day walk to Namugongo where they were to be burned at the stake.  On the way, Matthias Kalemba, one of the eldest boys, exclaimed, “God will rescue me. But you will not see how he does it, because he will take my soul and leave you only my body.”  They executioners cut him to pieces and left him to die alone on the road.

When they reached the site where they were to be burned, they were kept tied together for seven days while the executioners prepared the wood for the fire.

On June 3, 1886, the Feast of the Ascension, Charles Lwanga was separated from the others and burned at the stake. The executioners slowly burnt his feet until only the charred remained. Still alive, they promised him that they would let him go if he renounced his faith. He refused saying, “You are burning me, but it is as if you are pouring water over my body.”  He then continued to pray silently as they set him on fire. Just before the flames reached his heart, he looked up and said in a loud voice, “Katonda! – My God!,” and died.

His companions were all burned together the same day all the while praying and singing hymns until they died.

There were 22 protomartyrs in all. The last of the protomartyrs, a young man named John Mary, was beheaded by King Mwanga on January 27, 1887.

The persecutions spread during the reign of Mwanga, with 100 Christians, both Catholics and Protestants, being tortured and killed.

St. Charles Lwanga is the patron saint of African Catholic Youth Action.

---JDH---Jesus the Divine Healer---

02 June 2020

புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ஜூன் 2

இன்றைய புனிதர் :
(02-06-2020)

தூய மார்செலினஸ் மற்றும் பீட்டர் (ஜூன் 02)
“பிலிப்பு நத்தனியேலைப் போய் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிபிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சார்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார் (யோவான் 1:45)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூருகின்ற மார்செலினஸ் மற்றும் பீட்டர் இவரும் சமகாலத்தவர். மார்செலினசோ குருவானவர். பீட்டரோ தீய ஆவியை விரட்டக்கூடிய வல்லமை படைத்தவர்.

ஒரு சமயம் தீய பிடித்திருந்த அர்தேமிஸ் என்ற சிறை அதிகாரியின் மகளிடமிருந்து பீட்டர் தீய ஆவியை விரட்டி அடித்ததால் அர்தேமிஸ் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அவருடைய குடும்பம் முழுவதும் கிறிஸ்தவ மறையைப் பின்பற்றத் செய்தார்.. இப்படி கிறிஸ்தவ மறையைத் தழுவிய அர்தேமிஸ் குடும்பத்தாருக்கு மார்செலினஸ்தான் திருமுழுக்குக் கொடுத்தார்.

இச்செய்தி அப்போது உரோமை அரசனாக இருந்த டயோக்ளசியனின் காதுகளை எட்டியது. உடனே அவன் வெகுண்டெழுந்து மார்செலினசையும் பீட்டரையும் கைது செய்து சிறையில் அடைத்தான். சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் கூட இருவரும் சும்மா இருக்கவில்லை. அவர்கள் இருவரும் அங்கிருந்த சிறைக் கைதிகளுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை துணிச்சலோடு அறிவிக்கத் தொடங்கினார்கள். இதனால் பலரும் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இது மன்னனுக்கு கடுமையான சினத்தை உண்டு பண்ணியது. இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காக இவர்களைச் சிறையில் அடைத்தால் இவர்களோ அங்கேயும் சென்று நற்செய்தி அறிவிக்கின்றார்களா என்று அவர்கள் இருவரையும் இரவோடு இரவாகப் பிடித்து ஓர் அடர்ந்த காட்டிற்கு இழுத்துச் சென்றான்.
அங்கே அவர்கள் இருவரையும் அவர்களுக்கான கல்லறையை தோண்டச் செய்தான். கொடுங்கோலன் டயோக்ளசியன். அவர்கள் இருவரும் தங்களுக்கான கல்லறைக் குழியைத் தோண்டியபிறகு, மன்னன் அவர்கள் இவருடைய தலையையும் வெட்டி, அந்த கல்லறைக் குழிகளில் அவர்களைக் கிடத்தினான். இவ்வாறு அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து தங்களுடைய இன்னுயிரை அவருக்காகத் துறந்தார்கள்.
மார்செலினஸ், பீட்டர் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி திருத்தந்தை டாமாசுசுக்குத் தெரியவந்தது. அவர் அவர்களுடைய கல்லறைக்குச் சென்று உரிய மரியாதை செலுத்தினார். இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கொன்ஸ்டாண்டிநோபில் என்ற உரோமை மன்னன் அவர்களுடைய கல்லறையில் ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினான்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்செலினஸ் மற்றும் பீட்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்!

தூய மார்செலினஸ் மற்றும் பீட்டர் ஆகிய இருவரது வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர்கள் நற்செய்தி அறிவிப்பின்மீது கொண்டிருந்த ஆர்வம்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. இவர்கள் இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்ற ஆர்வத்தை நாம் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகத் தன் சீடர்களைப் பார்த்துச் சொல்வார், “நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று. (மாற் 16: 15). ஆம், நற்செய்தி அறிவிப்பது அதுவும் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிப்பது என்பது ஆண்டவர் இயேசு நம்முன்னே வைக்கின்ற வேண்டுகோளாக இருக்கின்றது. இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றுவதுதான் சீடத்துவ வாழ்விற்கு அர்த்தம் சேர்ப்பதாக இருக்கின்றது. நாம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவித்து, சீடத்துவ வாழ்விற்கு அர்த்தம் சேக்ர்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பவுலடியார் ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே உள்வாங்கியவராய், “நான் நற்செய்தி அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” (1 கொரி 9:16) என்கின்றார். ஆகவே, பவுலடியாரின் வார்த்தைகளை வைத்துப் பார்க்கின்றபோது நற்செய்தி அறிவிப்பானது எவ்வளவு முக்கியம், அது ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

ஆகவே, தூய மார்செலினஸ் மற்றும் பீட்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் அவர்களைப் போன்று நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம் கொண்டு வாழ்வோம். தேவைப்பட்டால் நம்முடைய உயிரையும் தர முன்வருவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


புனித மார்சலினஸ்,புனித பீட்டர் (St.Marcelinas, St.Peter)
மறைசாட்சிகள்

பிறப்பு
--
இறப்பு
--

மார்சலினஸ் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, குருத்துவ நிலையை அடைந்தார். பீட்டர் திருச்சபை வழங்கும் "பேய்களை ஓட்டும்" அதிகாரம் பெற்றவராக தொண்டு புரிந்து வந்தார். இருவரும் தங்களின் வேத விசுவாசத்திற்காக சிறையில் தள்ளப்பட்டனர். அங்கு ஏற்கெனவே விசுவாசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் கிறிஸ்தவர்களை விசுவாசத்தின்பேரில் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களை இவர்கள் இருவரும் மனந்திருப்பினர். அவர்களை கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாற்றினர். சிலரை புதிதாகவும் மனந்திருப்பினர். சிறைக் காவலன் ஆர்த்தியுஸ், அவர் மனைவி, மகள் ஆகியோர் கூட கிறிஸ்துவின் ஒளியை இவர்கள் மூலம் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் வீரச்சாவு நாளன்று, நாயக்ரா என்றழைக்கப்படும் ஒரு காட்டிற்குள் கொண்டு போகப்பட்டனர். அங்கே இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. இவர்கள் வெட்டப்படும்முன் இவர்களை புதைக்க ஒரு குழித்தோண்டப்பட்டிருந்தது. உடனே இவர்கள் புதைக்கப்பட்டனர். இந்த இரகசியத்தை கொலைஞனே வெளிக்கொணர்ந்துவிட்டார். இவரும் இறுதியில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டார். லூசில்லா, ஃபிர்மினா என்ற பக்தியுள்ள பெண்கள் இவர்களின் புனித உடல்களை எடுத்து "திபூர்சியஸ் புதைக்குழி"யில் அடக்கம் செய்தனர். மன்னன் கான்ஸ்டாண்டின் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டவர். இவர் கல்லறைமேல் பேராலயம் எழுப்பியதுடன், புனித எலேனா என்ற பெயர் கொண்ட தம் தாயையும் இங்கேயே அடக்கம் செய்தார். இவர்களின் வீரச்சாவு தொடக்கத் திருச்சபையில் எவ்வளவு போற்றப்பட்டதெனில் ரோமன் கேனன்(Roman Canon) என்று சொல்லப்படும். திருப்பலி வேளையில் பயன்படுத்தப்படும் "மாறாத ஜெபங்கள்" என்ற பகுதியில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு காலங்காலமாக நினைவு கூரப்பட்டனர்.

"நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. வான் வெளியில் திரியும் தீய ஆவிகளோடு போராடுகிறோம், எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீது வெற்றி அடைந்து, நிலை நிற்க வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்" (எபே 6:12) என்ற இறைவாக்கை வாழ்வாக வாழ்ந்தனர்.


செபம்:
விசுவாசத்தின் நாயகனே எம் இறைவா! உமது இறை விசுவாசத்தை இவ்வுலகில் நிலைநாட்ட புனித மார்சலினஸ்சும், புனித பீட்டரும் தங்கள் உயிரையே இழந்தனர். இவர்களைப் போல இறக்கின்ற ஒவ்வொருவரையும், உமது வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி யோஹானஸ் பெலிங்கோட்டோ Johannes Pelingotto
பிறப்பு: 1240 உர்பினோ Urbino, இத்தாலி
இறப்பு: 1304, உர்பினோ, இத்தாலி


மறைசாட்சி மார்செலினூஸ் மற்றும் பேதுரு Marcellinus, Petrus
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, உரோம்
இறப்பு: 299, உரோம்


காண்டர்பரி பேராயர் ஓடோ Odo
பிறப்பு: 880 டென்மார்க்
இறப்பு: 2 ஜூன் 959, காண்டர்பரி, இங்கிலாந்து

† இன்றைய புனிதர் †
(ஜூன் 2)

✠ புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ✠
(Saints Marcellinus and Peter)

மறைசாட்சியர்:
(Martyrs)

பிறப்பு: தெரியவில்லை

இறப்பு: கி.பி. 304
ரோம் (Rome)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூன் 2

புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் இருவரும் நான்காம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் வாழ்ந்து, மறைசாட்சிகளாக மரித்த கிறிஸ்தவ புனிதர்கள் ஆவர்.

இவர்களைப்பற்றிய தகவல்கள் சிறிதளவே கிடைக்கப்பெற்றுள்ளன. மர்செல்லினஸ் ஒரு மத குரு (Priest) ஆவார். பீட்டர் ஒரு பேய் ஓட்டுபவர் (Exorcist) ஆவார். இருவரும் "டயோக்லேஷியன்" (Diocletian) எனும் ரோம பேரரசனின் ஆட்சி காலத்தில் நேர்ந்த கிறிஸ்தவ துன்புறுத்தல்களில் மரித்தவர்கள் ஆவர்.

திருத்தந்தை "முதலாம் டமாஸ்கஸ்" (Pope Damasus I) அவர்களால் வெளிப்படையாக எழுதப்பட்ட மரண சாசனம் ஒன்றில் புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ஆகியோர் துன்புறுத்தப்பட்ட விதம் மற்றும் அவர்களது மரணம் பற்றின விபரங்கள் காணக்கிடைக்கின்றன.

இவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி "செவெரஸ் அல்லது செரேனஸ்" (Severus or Serenus) என்பவர், இப்புனிதர்கள் கொல்லப்படவேண்டிய இடத்தை தேர்வு செய்ய அவர்களையே சொன்னதாகவும், ரோம் நகரின் வெளியே மூன்று மைல் தொலைவில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அங்கேயே இவர்களிருவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இவர்களை கொலை செய்த இருவர் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இவற்றை திருத்தந்தை "முதலாம் டமாஸ்கஸ்" (Pope Damasus I) எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், தெய்வீக வெளிப்பாடுகளால் தூண்டப்பட்ட "லூஸில்லா” (Lucilla) மற்றும் “ஃபிர்மினா" (Firmina) ஆகிய இரண்டு கிறிஸ்தவ பெண்கள் இப்புனிதர்களின் உடலை கண்டெடுத்து முறையாக அடக்கம் செய்ததாக குறிப்புள்ளது.

இப்புனிதர்களின் நினைவுத் திருநாள் ஜூன் மாதம் இரண்டாம் நாள் நினைவு கூறப்படுகின்றது.

ஃபோர்மியா நகர் புனிதர் எராஸ்மஸ் ✠ ஜூன் 2

† இன்றைய புனிதர் †
(ஜூன் 2)

✠ ஃபோர்மியா நகர் புனிதர் எராஸ்மஸ் ✠
(St. Erasmus of Formia)
மறைசாட்சி, ஃபோர்மியா ஆயர்:
(Martyr, Bishop of Formiae)

பிறப்பு: 3ம் நூற்றாண்டு

இறப்பு: கி.பி 303
இல்லரிகம் (நவீனகால குரோஷியா)
(Illyricum (modern-day Croatia))

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூன் 2

பாதுகாவல்:
குடல் அழற்சிக்கு எதிராக, பிறப்பு வலிக்கு எதிராக, வயிற்று வலி மற்றும் நோய்களுக்கு எதிராக, குடல் வாயு அல்லது குடலில் அடைப்பு ஏற்படுவதால் அடிவயிற்றில் கடுமையான, பெரும்பாலும் ஏற்ற இறக்கமான வலிக்கு எதிராக, கடலில் ஏற்படும் ஆபத்துக்கு எதிராக, கடல் நோய்களுக்கு எதிராக, புயல்களுக்கு எதிராக, வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கித் தொழிலாளர்கள், படகோட்டிகள், கடற்படையினர், மாலுமிகள், பிரசவம் மற்றும் பிரசவத்தில் உள்ள பெண்கள், வழிகாட்டிகள், கேட்டா (Gaeta), இத்தாலி (Italy), ஃபார்மியா (Formia), கால்நடை பூச்சி (Cattle pest), செயின்ட் எல்மோ கோட்டை (Fort St. Elmo), மால்டா (Malta).

புனிதர் "எல்மோ" (Saint Elmo) என்றும் அழைக்கப்படும் ஃபார்மியா நகர் புனிதர் எராஸ்மஸ் (Erasmus of Formia), கி.பி. 303ம் ஆண்டு மரித்த, ஒரு கிறிஸ்தவ துறவியும், மற்றும் மறைசாட்சியும் ஆவார். எராஸ்மஸ் அல்லது எல்மோ, பதினான்கு தூய உதவியாளர்கள் (Fourteen Holy Helpers) என்றழைக்கப்படும் புனிதர்களுள் ஒருவர் ஆவார். கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி, இப்புனிதர்கள், பிறரின் செப பரிந்துரையாளர்களாக வணங்கப்படுகிறார்கள்.

வாழ்க்கையின் ஆவணம்:
புனிதர் எராஸ்மஸின் நடவடிக்கைகள், ஓரளவு புராணக்கதைகளிலிருந்து தொகுக்கப்பட்டவை ஆகும். அவை அந்தியோக்கியாவின் சிரிய ஆயர் (Syrian bishop), அந்தியோக்கியாவின் எராஸ்மஸுடன் (Erasmus of Antioch) குழப்பமடைகின்றன. பொற்கால புராணங்களின்படி, ஜேக்கபஸ் டி வோராகின் (Jacobus de Voragine) அவரை அனைத்து இத்தாலிய காம்பானியா (Italian Campania) மீதும், ஃபார்மியாவின் ஆயராககவும் (Bishop at Formia), லெபனான் மலையில் (Mount Lebanon) ஒரு துறவியாகவும் (Hermit), கிழக்கு ரோமானிய பேரரசர் (Eastern Roman Emperor) டயோக்லேஷியனின் (Diocletian) ஆட்சியின்கீழ் நடந்த கிறிஸ்தவ துன்புறுத்தல்களின் ஒரு மறைசாட்சியாகவும் புகழ்ந்தார். அவரது ஆர்வத்திற்கு வரலாற்று அடிப்படை எதுவும் இல்லை என்று தெரிகிறது.

வாழ்க்கை மற்றும் மறைசாட்சியம்:
எராஸ்மஸ், இத்தாலி (Italy) நாட்டின் ஃபோர்மியா நகர் (Bishop of Formia) ஆயராக இருந்தார். பேரரசர்களான டயோக்லேஷியன் (Diocletian) (கி.பி. 284-305) மற்றும் மாக்சிமியன் ஹெர்குலஸ் (Maximian Hercules) (கி.பி. 284-305) ஆகியோரின் ஆட்சி காலத்தில் நடந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தலின்போது, அவர் தனது மறைமாவட்டத்தை விட்டு வெளியேறி லெபனான் மலைக்குச் (Mount Lebanon) சென்றார். அங்கு அவர் ஏழு ஆண்டுகள் ஒளிந்து வாழ்ந்தார். இருப்பினும், ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றி, அவரை அவரது நகரத்திற்குத் திரும்பும்படி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

தமது ஊர் திரும்பும் வழியில் குறுக்கிட்ட சில வீரர்கள், அவரிடம் கேள்விகள் எழுப்பி அவரை விசாரித்தனர். எராஸ்மஸ், தாம் ஒரு கிறிஸ்தவர் என்று ஒப்புக் கொண்டார். மேலும் அவர்கள் அவரை அந்தியோகியாவில் (Antioch) பேரரசர் டயோக்லேஷியன் (Diocletian) முன் விசாரணைக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவரை பயங்கரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய அவர்கள், பிறகு அவரை சங்கிலிகளால் பிணைத்து, சிறையில் தள்ளினார்கள். ஆனால் ஒரு தேவதை தோன்றி அவர் அங்கிருந்து தப்பிக்க உதவியது.

கரியா (Caria) மற்றும் பம்பிலியா (Pamphylia) இடையே தென்மேற்கு ஆசியா மைனரின் (Southwestern Asia Minor) கடற்கரையில் ஒரு பண்டைய பகுதியான லைசியா (Lycia) வழியாக எராஸ்மஸ் பயணித்தார். அங்கு அவர், சிறப்புமிக்க குடிமகன் ஒருவரின் மகனை வளர்த்தார். இதன் விளைவாக, அநேக குடிமக்களுக்கு அவர் திருமுழுக்கு அளித்தார். இது மேற்கு ரோமானிய பேரரசர் (Western Roman Emperor) மாக்சிமியன் (Maximian) கவனத்தை ஈர்த்தது. வரலாற்றாசிரியர் வோராகின் (Voragine) என்பவரது கூற்றுப்படி, "பேரரசர் மாக்சிமியன், பேரரசர் டயோக்லேஷியனை விட மோசமானவர்" ஆவார். மாக்சிமியன் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். எராஸ்மஸ் தனது கிறிஸ்தவ விசுவாசத்தை தொடர்ந்து அறிக்கையிடார். அவர்கள் அவரை விக்கிரகங்களின் கோவிலுக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர். ஆனால் எராஸ்மஸ் சென்ற பாதையில் அனைத்து சிலைகளும் விழுந்து அழிந்துபோயின. கோயிலில் இருந்த பல பாகன்கள் மீது தீ பற்றிக்கொண்டது.

இது சக்கரவர்த்திக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் எராஸ்மஸை கூர்மையான ஈட்டிகள் நீட்டிக்கொண்டிருந்த ஒரு பீப்பாயில் அடைத்து வைத்தார். பீப்பாய் ஒரு மலையிலிருந்து உருட்டப்பட்டது. ஆனால் ஒரு தேவதை அவரை மீட்டு, குணமாக்கியது. மேலும் சித்திரவதைகள் தொடர்ந்தன. 

அவர் மீண்டும் பிடிபட்டபோது, அவரை சக்கரவர்த்தியின் முன் அழைத்து வந்து நிறுத்தினார்கள். கசையால் அடித்து துன்புறுத்தினார்கள். ஆனால், அவர் இன்னும் உயிர் பிழைத்திருந்தார். அவரை பட்டினியால் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரை சிறையில் தள்ளி, பட்டினி போட்டார்கள். இருப்பினும் எராஸ்மஸ் அதிலிருந்து தப்பிக்க முடிந்தது.

இறுதியாக, இல்லரிகம் (Illyricum) எனும் ரோமானிய மாகாணத்தில் (Roman province) அவர் மீண்டும் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். ஆனால், அவர் மீண்டு மீண்டும் தைரியமாக பிரசங்கித்தார். பல பாகன்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய பின்னர். இறுதியாக, அவரது மரணத்தின் இந்த பதிப்பின் படி, அவரது வயிறு கிழிக்கப்பட்டு, அவரது குடல்கள் வெளியே எடுக்கப்பட்டு, அவர் கொல்லப்பட்டார்.

வணக்கம் மற்றும் பாதுகாவல்:
அவருக்கு அருகில் ஒரு இடி தாக்கிய பிறகும், அவர் தொடர்ந்து பிரசங்கித்ததாகக் கூறப்படுகிறது. இது, திடீர் புயல் மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஆபத்தில் இருந்த மாலுமிகளை அவரது பிரார்த்தனைகளை கோர தூண்டியது. இதன் காரணமாகவே, எராஸ்மாஸ் மாலுமிகளின் பாதுகாவலர் ஆனார். கப்பல்களின் முகப்பில் உள்ள மின் வெளியேற்றங்கள் அவரது பாதுகாப்பின் அடையாளமாக வாசிக்கப்பட்டு "செயிண்ட் எல்மோ'ஸ் ஃபயர்" (Saint Elmo's Fire") என்று அழைக்கப்பட்டன.

01 June 2020

புனிதர் ஜஸ்டின் June 1

† இன்றைய புனிதர் †
(ஜூன் 1)

✠ புனிதர் ஜஸ்டின் ✠
(St. Justin)

மறைசாட்சி:
(Martyr)
பிறப்பு: கி.பி. 100
ஃபிளேவியா நேபோலிஸ், ஸமரியா (தற்போதைய நப்லஸ்)
(Flavia Neapolis, Samaria (modern-day Nablus)

இறப்பு: கி.பி. 165 (வயது 65)
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

நினைவுத் திருநாள்: ஜூன் 1

புனிதர் ஜஸ்டின், ஆதிகால கிறிஸ்துவுக்காக வாதிடுபவரும், இரண்டாம் நூற்றாண்டின் இறை வார்த்தைக் கோட்பாடுகளின் தலைசிறந்த மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமது சில மாணவர்களுடன் சேர்ந்து மறைசாட்சியாக உயிர்த் தியாகம் செய்தார். இவர் ரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கன் சமூகம், கிழக்கு மரபுவழி, லூதரனியம் மற்றும் ஓரியண்டல் மரபுவழி ஆகிய திருச்சபைகளால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இவர் கி.பி. 100ம் ஆண்டில் சமாரியா நாட்டிலுள்ள "ஃபிளேவியா நேபோலிஸ்" (Flavia Neapolis) என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ரோம் நாட்டைச் சேர்ந்தவர்கள். பாகனிய விசுவாசத்தை (Pagan family) சேர்ந்தவர்கள். இவர் தம்மைத் தாமே யூதரல்லாத புர இனத்தவரென வரையறுத்துக்கொண்டார். இவர் நல்ல கல்விப் பயிற்சி பெற்றார். இவரது காலத்தில் கல்வி ஸ்தாபனங்கள் ஒன்றுக்கொன்று மாறான போதனைகளைப் போதித்தன. இந்தப் போதனைகள் எதுவும் இவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இவரது சந்தேகங்களை அகற்றவில்லை.

பல்வேறு பாகன் தத்துவங்களை கற்றறிந்த இவர், கிறிஸ்தவராக மனம் மாறிய பிறகும் இவரது கற்றலும் தேடலும் முடிவுக்கு வரவில்லை. தமது இளமையில் முக்கியமாக “பிளேட்டோ பள்ளியால்” (School of Plato) ஈர்க்கப்பட்டார். கிறிஸ்தவம் வாழ்க்கையின் ஒவ்வொரு பெரிய கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்ததையும், தத்துவவாதிகளை விட நன்றாகவே உள்ளதையும் கண்டறிந்தார்.

பாகனிய விசுவாசத்தை விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறிய பிறகும் தமது பழைய தத்துவஞானியின் கையற்ற மேலாடையையே அணிந்து வந்தார். கிரேக்க மெய்யியலின் சிறந்த கூறுபாடுகளை அவர் கிறிஸ்தவ மதத்துடன் இணைத்தார்.

அவரைப் பொறுத்தவரை, தத்துவயியல் என்பது, கிறிஸ்தவ போதகர் என்றும், ஒருவனை கிறிஸ்துவை நோக்கி அழைத்துச் செல்லும் கல்வி என்றும் உணர்ந்திருந்தார்.

ஜஸ்டின், பாகன்களின் தவறான புரிந்துணர்வு மற்றும் கிறிஸ்தவத்திற்கெதிரான தாக்குதல்களை எதிர்த்து வக்காலத்து வாங்குபவராக அல்லது எதிர்த்து வாதிடுபவராக (Apologist) இருந்தார்.

கிறிஸ்தவ மதத்தின்பால் இவருக்குள்ள உறுதியான ஈடுபாடு காரணமாக, கி.பி. 165ம் ஆண்டு, ரோம் நகரில் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இன்றைய புனிதர்
2020-06-01
புனித ஜஸ்டின் (St.Justin)
மறைசாட்சி(Martyr), தத்துவமேதை

பிறப்பு
100 ஆம் ஆண்டு
சிரியா
இறப்பு
165
புனிதர்பட்டம்: 1035, திருத்தந்தை 9ஆம் பெனடிக்ட்

இவர் கிரேக்கமொழி பேசும் பெற்றோருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே தத்துவ கலையை ஆழமாகக் கற்றுத்தேர்ந்தார். இவரது காலத்தில் இருந்த ப்ளேட்டோ(Plato) போன்ற தத்துவமேதைகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். எல்லாம் வல்ல இறைவனைப்பற்றி இந்த தத்துவ ஞானம் தனக்கு முழுமையான விளக்கம் அளிக்க இயலவில்லை என்றுணர்ந்தார். ஒருநாள் அலெக்சாண்டிரியா நகருக்கு அருகில் கடற்கரையில் நடந்து போய்கொண்டிருந்தார். தற்செயலாக ஒரு வயது முதிர்ந்த கிறிஸ்தவரை சந்தித்தார்.. அவருடன் நெடுநேரம் உரையாடினார். அதன்பயனாக விவிலியத்தில், இறைவாக்கினர்கள் எழுதிய இறைவாக்குகளைப்படித்தார். நாளடைவில் மீட்பரின் முன்னறிவிப்பு இறைவாக்கை சரியாக புரிந்துகொண்டார்.

கிறிஸ்தவர்கள் எத்தனை மனவலிமையுடன் கிறிஸ்துவிற்காக வேதனைகளை தாங்கிக்கொண்டார்கள். என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார். இறைவாக்கினர்களை நினைத்து வியப்படைந்தார். சாவைத் தழுவினாலும், இந்த மறைசாட்சிகளிடம் காணப்பட்ட முகமலர்ச்சியும், ஆர்வமும் அவரை மிக ஆழமாகத் தொட்டது. இவர்களின் வீரச்சாவும் இவர் திருநூலைப் படித்ததன் பயனுமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவுக்காக வாழ முடிவெடுத்தார். பின்னர் தமது தத்துவமேதைக்குரிய உடையிலேயே பல பயணங்களை மேற்கொண்டு, இறுதியாக உரோம் நகரை அடைந்தார். 4 நற்செய்தியாளர்களும் எழுதிய இறைவாக்குகளைப் பற்றி தெளிவாகப்படித்தார். முடிவில் அவர்கள் எழுதியவைகள் அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டார். இதன் பயனாக, இவரது நாட்களில் ஞாயிறு திருவழிபாடு எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைப்பற்றி விரிவாக எழுதிவைத்தார். அனைத்திற்கும் மேலாக, திவ்விய நற்கருணையில் இறைப்பிரசன்னத்தை பற்றியும் அதில் நாம் கொண்டிருக்கவேண்டிய விசுவாசப் பற்றுறுதி பற்றியும் மிகவும் ஆழமாக விவரித்து எழுதியுள்ளார்.

147 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது போல, இனியும் துன்புறுத்தப்படக்கூடாது. என்று மன்னன் ஆன்றோனினுஸ் பயஸ்(Androninus Pius) ஆணை பிறப்பித்தான். ஜஸ்டின் எழுதிய பல நூல்களில் ஒன்றில் "உலகில் எப்பகுதியிலும், எக்காலத்திலும் உண்மையை சுட்டிக்காட்டிய ஞானிகள் அனைவரும் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று மிக அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். 166 ல் ஜஸ்டின் எழுதிய மற்றொரு நூலில், நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பேருண்மைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் இந்நூல் அப்போதைய அரசன் மார்க்ஸ் அவுரேலியுசுக்கு(Marks Aureliyas) எரிச்சல் மூட்டியது. இதனால் கோபம்கொண்ட அரசன், கிறிஸ்துவ விசுவாசத்தையும், ஜஸ்டினையும் அழிக்க எண்ணி, அவரை சிறைப்பிடித்து சென்றான். அங்கு பல கொடுமைகளை அனுபவித்த ஜஸ்டின் தனது 67 ஆம் வயதில் தலைவெட்டப்பட்டு இறந்தான். அவர்தான் இறக்கும்வரை, எந்த ஒரு தத்துவக்கலையும், இறுதியில் கிறிஸ்துவிடம் மட்டுமே கொண்டு சேர்க்கமுடியும் என்பதை இடையூறாது போதித்தார்.


செபம்:
எங்கள் தந்தையாகிய இறைவா! இன்றைய உலகில் உள்ள தத்துவமேதைகளை நீர் கண்ணோக்கியருளும். ஒவ்வொருவரும் உம்மை மையமாக வைத்து செயல்படவும், தங்கள் பணிகளின் வழியாக உம்மை பறைசாற்றவும் புனித ஜஸ்டின் வழியாக உம் அருளைத்தந்து காத்து வழிநடத்தும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

சபைத்தலைவி ஆக்னெஸ் எல்லன்பெர்கர் Agnes Ellenberger
பிறப்பு: 16 மார்ச் 1838, வெட்ஸ்லர் Wetzlar, ஹெஸ்ஸன் Hessen, ஜெர்மனி
இறப்பு: 1 ஜூன் 1906, கோப்லன்ஸ் Koblenz, ஜெர்மனி


ஓனா நகர் துறவி என்னேக்கோ Enneco von Ona
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, ஸ்பெயின்
இறப்பு: 1 ஜூன் 1057, ஓனா Ona, ஸ்பெயின்


மறைசாட்சி, பேராயர் முதலாம் கொன்ராட் Konrad I von Trier
பிறப்பு: 1016, ப்ஃபுல்லிங்கன் Pfullingen, ஜெர்மனி
இறப்பு: 1 ஜூன் 1066, உர்சிக் Ürzig, ஜெர்மனி

Saint of the Day : (01-06-2020)

St. Justin

St. Justin was born in Flavia Neopolis in the modern day West Bank, Palestine in the year about 110 A.D. in a pagan family. His father was Priscos. St. Justin was influenced by the fearless conduct of the Christians facing execution for the cause of Christian faith. He was converted to Christianity in Ephesus in about the year 130 A.D. He adopted the dress of a philosopher and travelled to various places for preaching. He started a school in Rome to teach poor people, when Emperor Antonius Pius was reigning. When there was a dispute with another philosopher, the other philosopher informed the authorities about the conversion of Justin to Christianity and his preaching of Christian faith. Then St. Justin along with other six of his companions were arrested and tried by the urban Roman prefect Junius Rusticus during the reign of Emperor Marcus Aurelius. During the trial the Roman Prefect ordered St. Justin and others to worship the Roman Gods. But Justin and his companions boldly told the Perfect 'No one who is right thinking stoops from true worship to false worship'. When the Roman Prefect told St. Justin that he would be tortured to death mercilessly, if you refuse to sacrifice to the idols of the Roman Gods, he told 'We hope to suffer torment for the sake of our Lord Jesus Christ and so be saved' . All others also told that they would not offer sacrifices to the idols. St. Justin and the others were beheaded in the year 165 A.D. His relics are in the church of St. John the Baptist in Sacro


31 May 2020

தூய ஆவியார் பெருவிழா

† இது எப்படி? †

† தூய ஆவியார் பெருவிழா †
(மே 31, 2020)

† திருத்தூதர் பணிகள் 2:1-11 †
† 1 கொரிந்தியர் 12:3-7, 12-13 †
† யோவான் 20:19-23 †
வெளியில் வர வகையறியாத சீடர்களை வெளியில் கொண்டு வந்து நிறுத்தியதும், அவர்களின் நாவுகளின் கட்டுக்களை அவிழ்த்து அவர்களைப் பேச வைத்ததும் தூய ஆவியாரே.

அவரின் திருநாளை, பெந்தெகோஸ்தே பெருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

சீடர்கள் வெளியில் வந்ததையும், அவர்கள் பேசுவதையும் தத்தம் மொழிகளில் கேட்கின்ற அனைவரும், 'இது எப்படி?' எனக் கேட்கின்றனர், வியக்கின்றனர்.

தூய ஆவியாரைப் பற்றி சிந்திக்கும்போதெல்லாம் எனக்கு மூன்று விவிலியப் பகுதிகள் நினைவிற்கு வருவதுண்டு:

ஒன்று, திப 19:2. பவுல் தன்னுடைய தூதுரைப் பயணத்தில் எபேசு வருகின்றார். அங்கிருந்த நம்பிக்கையாளர்களிடம், 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்கின்றார். அங்கிருந்தவர்கள், 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' எனப் பதில் தருகிறார்கள்.
இன்று, தூய ஆவியைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்று நம்மையே கேட்டால், அல்லது நம் வாழ்வை சற்றே கூர்ந்து கவனித்தால், தூய ஆவி என்னும் ஒன்று நம்மில் இல்லாததுபோல நாம் இருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உறுதிப்பூசுதலின் போது கிறிஸ்தவர்களாகிய நம் அனைவர்மேலும், குருத்துவ அருள்பொழிவின் போது நம் அருள்பணியாளர்கள்மேலும் இறங்கி வந்த ஆவியார் என்ன ஆனார்?

இரண்டு, திபா 51:11. பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் தாவீது பாடியதாகச் சொல்லப்படுகின்ற திருப்பாடல் 51இல், தாவீது ஆண்டவரிடம், 'உம் முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்! உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்!' என மன்றாடுகின்றார். தாவீது ஏன் இப்படி மன்றாட வேண்டும்? ஏனெனில், சவுல் கீழ்ப்படியாமையால் பாவம் செய்தபோது, 'ஆண்டவரின் ஆவி சவுலைவிட்டு நீங்கியது' (காண். 1 சாமு 16:14) அவருக்குத் தெரியும். ஆண்டவரின் ஆவி நீங்கியதால் சவுல் பொறாமையாலும், தீய எண்ணங்களாலும், வன்மத்தாலும், பிளவுண்ட மனத்தாலும் அலைக்கழிக்கப்படுகிறார்.

இன்று, ஆண்டவரின் ஆவி நம்மிடம் இருக்கிறதா? அல்லது நீங்கிவிட்டதா? ஒருவேளை நம்மிடமிருந்து அவர் நீங்கிவிட, சிம்சோன் போல நாம் அதை அறியாமல் இருக்கிறோமோ? (காண். நீத 16:20)
மூன்று, திபா 23:5. சில நாள்களுக்கு முன் இத்திருப்பாடல் பற்றி வாசித்துக்கொண்டிருந்தபோது, இத்திருப்பாடலில் நம் கத்தோலிக்க திருஅவையில் உள்ள ஏழு அருளடையாளங்களும் இருப்பதைக் காண முடிந்தது. அந்த வகையில், ஆவியாரைப் பற்றிய ஒரு வாக்கியமாக நான் கருதுவது: 'என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' இதன் சூழல் என்னவென்றால், எதிரிகளின்முன் விருந்து. இந்த 'விருந்தை' நாம் நற்கருணை என எடுத்துக்கொள்ளலாம். நம் எதிரிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் பசியும், வறுமையும், வீடின்மையும், ஆடையின்மையும், அல்லது சில நேரங்களில் நம் அழிவை. இப்படி எதிர்பார்க்கும் எதிரியின் முன் ஆண்டவர் நமக்கு விருந்தை ஏற்பாடு செய்கிறார் என்றால், அந்த எதிரியின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் தவிடுபொடியாக்குகின்றார் என்றே பொருள். கடவுள் அத்தோடு நிறுத்தவில்லை. நம் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார். 'தலையில் நறுமணத் தைலம் பூசுதல்' என்பது திருப்பொழிவின் அடையாளம். அந்த நிகழ்வில் ஆண்டவர் தன் ஆவியை திருப்பொழிவு செய்யப்படுபவருக்கு அருள்கிறார். இதன் விளைவு, 'பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' அதாவது, 'குறையொன்றும் இல்லை' என்ற நிலை உருவாகிறது.

இன்று, நம்மிடம் குறைவு மனம் இருந்தால் ஆண்டவரின் ஆவி நம்மிடம் இல்லை என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

இந்த மூன்று இறைவார்த்தைப் பகுதிகளின் பின்புலத்தில், இன்றைய வாசகங்களைப் பார்க்கும்போது, தூய ஆவியாரின் வருகை, முன்பிருந்த நிலையை மாற்றி, 'இது எப்படி!' என்று காண்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:1-11) பெந்தெகோஸ்தே நிகழ்வு பற்றிச் சொல்கிறது. நிகழ்வில் இரண்டு முக்கியமான வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று, காற்று. இரண்டு, நாக்கு. இவ்விரண்டு வார்த்தைகளுமே இரட்டைப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, காற்று. இந்த நிகழ்வில் பெருங்காற்று வீசுகிறது. அதே வேளையில், ஆவியார் என்னும் காற்று சீடர்களுக்குள் நுழைகிறது. இரண்டு, நாக்கு. பிளவுண்ட நெருப்பு நாக்குகள் இறங்கி வருகின்றன. சீடர்கள் வௌ;வேறு நாவுகளில் (மொழிகளில்) பேசுகின்றனர். ஆக, முன்பில்லாத ஒரு நிலை இப்போது வருகிறது. அடைத்து வைக்கப்பட்ட கதவுகள் காற்றினால் திறக்கப்படுகின்றன. கட்டப்பட்ட நாவுகள் பேச ஆரம்பிக்கின்றன.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13), புனித பவுல், கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற திருமடலில், ஆவியாரையும் அவர் அருளும் வரங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையாளர்கள் தாங்கள் நம்பிக்கை நிலைக்குள் வந்தவுடன் ஆவியாரின் அருள்பொழிவையும், வரங்களையும் பெறுகின்றனர். ஆக, அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கையை, பிரிவினை வாழ்க்கையை விட்டுவிட வேண்டும்.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-23) நம்மில் சில ஐயங்களை எழுப்புகின்றது.

ஒன்று, இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாளன்று நடக்கிறது. அதாவது, 'வாரத்தின் முதல் நாள். மாலை வேளை.' ஆனால், வாரத்தின் முதல் நாள், மாலை வேளையில், லூக்காவின் பதிவின்படி (காண். லூக் 24), இயேசு எம்மாவு நகரில் இருக்கிறார். இயேசு எங்கேதான் இருந்தார்? யோவான் சொல்வது போல எருசலேமிலா? அல்லது லூக்கா சொல்வது போல எம்மாவு நகரிலா? அல்லது இரு இடங்களிலுமா?

இரண்டு, இந்த நிகழ்வில் தூய ஆவியார் இயேசுவின் உயிர்ப்பு நாளில் சீடர்களுக்கு வழங்கப்படுகிறார். ஆனால், லூக்காவின் பதிவின்படி பெந்தெகோஸ்தே நாளில்தான் ஆவியார் இறங்கி வருகின்றார்.

மூன்று, இந்த நிகழ்வில் தோமா இல்லை. அப்படி என்றால், தோமாவின் மேல் தூய ஆவி அருளப்படவில்லையா? அல்லது மன்னிப்பு வழங்கும், நிறுத்தும் அதிகாரம் தோமாவுக்கு வழங்கப்படவில்லையா?

நான்கு, இந்த நிகழ்வில் இயேசு தன் சீடர்களின்மேல் ஆவியை ஊதினார் என்றால், அவர்கள் மீண்டும் எட்டு நாள்களுக்குப் பின்பும் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளைப் பூட்டிக்கொண்டிருந்தது ஏன்? இயேசு ஊதிய ஆவி அவர்களுக்கு ஊட்டமும் ஊக்கமும் தரவில்லையா?

இந்த ஐயங்கள் ஒரு பக்கம் எழ, மற்றொரு பக்கம், இயேசு இங்கே பாவத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் பதிவுகளில் பாவம் பற்றிய குறிப்பு இல்லை, மாறாக, பணி பற்றிய குறிப்பு இருக்கின்றது: 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா.' யோவான் நற்செய்தியின் பின்புலத்தை இங்கே புரிந்துகொள்வோம். யோவான் நற்செய்தியில், 'பாவம்' என்பது 'நம்பிக்கையின்மை.' ஆக, பாவம் நீக்குதல் என்பது நம்பிக்கையின்மை நீக்குதல் என எடுத்துக்கொள்ளலாம். இங்கே, சீடர்கள் தாங்களே நம்பிக்கையின்மையில்தான் இருக்கிறார்கள். ஆக, படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதல் மனிதன் மேல் தன் ஆவியை ஊதியதுபோல, இன்று இயேசு தன் சீடர்கள்மேல் ஆவியை ஊதுகின்றார். அவர்கள் இனி இன்றுமுதல் தங்கள் இயல்பு விடுத்து இயேசுவின் இயல்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், சீடர்களின் பயம் மறைந்து, துணிவு பிறக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், பிரிவினை மறைந்து, ஒருமைப்பாடு பிறக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கையின்மை மறைந்து, நம்பிக்கை பிறக்கிறது.

முந்தைய நிலை இப்போது இல்லை.

'இது எப்படி?' - தூய ஆவியாரால்!

இன்று நான் என் வாழ்வைப் பார்த்து, 'இது எப்படி?' என்று என்னால் கேட்க முடியுமா? அல்லது 'ஐயோ! மறுபடியும் இப்படியா?' என்று புலம்பும், பரிதவிக்கும் நிலையில் நான் இருக்கின்றேனா?

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 104), பாடலாசிரியர், 'ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்!' எனப் பாடுகின்றார்.

என் முகம் ஆண்டவரின் ஆவியாரால் புதுப்பிக்கப்படுகிறதா?

சீடர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களிடம் இருந்ததுபோல, என்னுள் இருக்கும் பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, வெட்கம், குற்றவுணர்வு, பலிகடா மனநிலை, சோர்வு, பின்வாங்குதல், இறுமாப்பு, பிரிவினை எண்ணம் ஆகியவை மறைகின்றனவா?

என் வாழ்க்கை இறைவனை நோக்கித் திரும்பியுள்ளதா?

என்னால் எல்லாரையும் மன்னிக்கவும் அன்பு செய்யவும் முடிகிறதா?

என் வாழ்வின் பொறுப்பாளரும், கண்காணிப்பாளரும், தலைவரும் நான் என்ற எண்ணம் என்னில் வருகிறதா?

என் அருள்பொழிவு நிலையை நான் அன்றாடம் உணர்கிறேனா?

என் வாழ்வின் கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றிகூறுகிறேனா?

கண்ணியத்தோடு என் கடப்பாடு இருக்கிறதா?

இப்படியாக,

முன்பிருந்த நிலை என்னில் மாறினால், என்னைச் சுற்றியிருக்கும் நிலையும் மாறும்.

இந்த நேரத்தில் நான், 'இது எப்படி?' என்று எருசலேம் நகரத்தார் போலக் கேட்க முடியும்.

இப்படிக் கேட்டலில்தான் நான் எந்த வியூகத்தையும் உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும்.

தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்களும் செபங்களும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

மரியா எலிசபெத்தை சந்தித்தல் (மே 31)

மரியா எலிசபெத்தை சந்தித்தால் : (31-05-2020) 


மரியா எலிசபெத்தை சந்தித்தல் (மே 31)
நிகழ்வு

தாவீது இஸ்ரயேலின் அரசனாக உயர்ந்த பிறகு, பெலிஸ்தியர்கள் கைப்பற்றிச் சென்ற ஆண்டவரின் பேழையை தன்னுடைய படைவீரர்களோடு சென்று மீட்டுக்கொண்டு வந்தான். அவன் ஆண்டவரின் பேழையை மீட்டுகொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வரும்போது அதற்கு முன்பாக அவன் இசைக் கருவிகளை மீட்டிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் வந்தான். ஆண்டவரின் பேழை நாக்கோனின் இடைத்திற்கு வந்தபோது உசா என்பவன் ஆண்டவரின் பேழையைத் தாங்கிப் பிடித்தான். அப்போது ஆண்டவரின் சினம் அவனுக்கு எதிராக எழுந்தது. ஏனென்றால் அவன் ஆண்டவரின் பேழையை தகுதியில்லாமல் தாங்கிப் பிடித்தான். இதனால் அவன் ஆண்டவரின் பேழையருகே மடிந்து இறந்தான்.

ஆண்டவரின் பேழையைத் தொட்ட உசா இப்படி இறந்துபோனதை அறிந்த தாவீது பெரிதும் வருந்தினார். எனவே அவர் ஆண்டவரின் பேழையை கித்தியனாகிய ஓபேது ஏதோமின் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தார். அவர் ஒரு லேவியர். இறைப்பற்றுக்கொண்ட மனிதர். ஆண்டவரின் பேழை ஓபேது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதம் தங்கி இருந்ததால் ஆண்டவர் அவரை நிறைவாக ஆசிர்வதித்தார். அதன்பொருட்டு ஓபேது ஏதோம் பெரிதும் மகிழ்ந்தார்.
ஆண்டவரின் பேழை கித்தியனாகிய ஓபேது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் இருந்ததனால் ஆண்டவரால் அவர் ஆசிர்வதிக்கப்பட்டார். அதைப் போன்றுதான் ஆண்டவரைத் தன்னுடைய மடி தாங்கிய அன்னை மரியாள் எலிசபெத்தின் இல்லத்தில் தங்கியிருந்ததால் எலிசபெத்து ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டார்.

வரலாற்றுப் பின்னணி

மரியாள் எலிசபெத்தை சந்தித்த இந்த விழா பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பொனவெந்தூர் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால் இவ்விழா இவ்வளவு சிறப்பாக வளர்வதற்கு முக்கியக்காரணமாக இருந்தவர் பராக் (Prague) என்ற நகரில் ஆயராக இருந்த ஜான் ஜென்ஸ்டீன் என்பவர்தான். இவர்தான் மரியா எலிசபெத்தை சந்தித்ததன் முக்கியத்துவத்தை விவிலியப் பின்னணியோடு மறையுரை ஆற்றி மக்களுக்கு விளங்கச் செய்தார். மேலும் இவருடைய காலத்தில் திருச்சபையில் இரண்டு திருத்தந்தையர்கள் இருந்தார்கள். ஒருவர் (ஐந்தாம் அர்பன்) உரோமை நகரைத் தலைமைபீடமாகக்கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். இன்னொருவர் (ஏழாம் கிளமென்ட்) அவிஞ்ஞோனை தலைமைபீடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். ஜான் ஜென்ஸ்டீன் இவ்விழாக் கொண்டாடுவதன் வழியாக இரண்டு திருத்தந்தையர்களுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நினைத்தார். இதற்கு இரண்டு திருத்தந்தையர்களும் ஒத்து வந்தார்கள். இறுதியில் திருச்சபையில் ஏற்பட்ட இப்படிப்பட்ட குழப்பம் தீர்ந்தபோது அதன்பிறகு திருத்தந்தையாக வந்த திருத்தந்தை ஒன்பதாம் போனிபஸ் என்பவர் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1969 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஆறாம் பவுல் இவ்விழாவை மே மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப் பணித்தார். அப்படி வந்ததுதான் இவ்விழா.

ஆண்டவரின் தூதர் மரியாவுக்கு மக்கள வார்த்தை சொன்ன அதே நாளில், மரியாளிடம் அவர் எலிசபெத்து தன்னுடைய முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியையும் எடுத்துச்சொல்கிறார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட மரியா எலிசபெத்தின் வீட்டிற்கு விரைந்து செல்கிறார் (லூக் 1: 39). அங்கே அவரோடு தங்கியிருந்து அவருக்கு பல விதங்களில் உதவிசெய்கிறார். மரியா இருந்த ஊரான நாசரேத்திற்கும் எலிசபெத்தின் ஊரான ஹெப்ரோனுக்கும் இடையே 76 கிலோமீட்டர். இருந்தாலும், தான் ஒரு கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் பேறுகால வேதனையில் இருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கிறார்.
இந்த நிகழ்வில் பழைய ஏற்பாட்டின் நிறைவாக திருமுழுக்கு யோவானும், புதிய ஏற்பாட்டின் காரணகர்த்தாவாகிய ஆண்டவர் இயேசுவும் கருவிலேயே சந்தித்துக்கொள்கிறார்கள். ஆகையில், மரியா எலிசபெத்து சந்திக்கின்ற அதே வேளையில் திருமுழுக்கு யோவானும் ஆண்டவர் இயேசுவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வாக முடிந்துவிடாமல் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும், அருளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக மாறுவது இதன் தனிச்சிறப்பாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியா எலிசபெத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. உதவும் நல்ல மனம்

பேறுகால வேதனையில் இருக்கும் எலிசபெத்துக்கு மரியா உதவவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. மேலும் அவள் உதவும் நிலையிலும் இல்லை. ஏனென்றால் அவள் கர்ப்பிணியாக இருக்கிருக்கிறாள். அப்படி இருந்தாலும்கூட மரியா எங்கோ இருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கிறார். இது அவளிடம் இருக்கும் உதவும் நல்ல பண்பைக் காட்டுகின்றது. கானாவூர் திருமணத்திலும் மரியாள் கேளாமலே உதவிசெய்தாள் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். மரியாவை நம்முடைய அன்னையாகக் கொண்டிருக்கும் நாம், அவரைப் போன்று தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவும் நல்ல பண்பை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

† இன்றைய திருவிழா †
(மே 31)

✠ அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா ✠
(Visitation of the Blessed Virgin Mary)

திருவிழா நாள்: மே 31

மரியாள், எலிசபெத்தை (Elizabeth) சந்தித்தல் அல்லது மாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது லூக்கா நற்செய்தி 1:39–56ல் விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின்போது, தனது உறவினராகிய எலிசபெத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் மரியாள் அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து, தம் முதிர்ந்த வயதில் ஒரு மகவைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாளுக்கு அறிவித்திருந்தார்.

இதனால் மரியாள் புறப்பட்டு யூதேய (Judah) மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபெத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். மரியாள் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என மரியாவை வாழ்த்தினார் என விவிலியம் விவரிக்கின்றது.

எலிசபெத்தின் வாழ்த்துதலைக் கேட்ட மரியாள் கடவுளை போற்றி ஒரு பாடல் பாடினார். அப்பாடல் மரியாளின் பாடல் என அழைக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு மேற்கு கிறிஸ்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மே 31 அன்றும், கிழக்கு கிறிஸ்தவத்தில் 30 மார்ச் அன்றும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வு நடந்த இடத்தில் இப்போது சந்தித்தல் ஆலயம் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையில், மரியாள் எலிசபெத்தை சந்தித்த நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் இரண்டாம் மறைபொருள் ஆகும்.

இவ்விழாவில் நான்கு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகிறோம்:

1. கபிரியேல் அதிதூதர் கிறிஸ்துவின் மனித அவதாரத்தை அறிவித்த பின் கன்னி மரியாள் தன் உறவினரான எலிசபெத்தம்மாளைச் சந்திக்க சென்றது.
2. அவரது உதரத்திலிருந்த ஸ்நாபக அருளப்பர் (John the Baptist) கன்னி மரியாளின் வாழ்த்து மொழிகளைக் கேட்டதும் ஜென்மப் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
3. பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட எலிசபெத்தம்மாள், "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே" என கன்னி மரியாளைப் பாராட்டியது.
4. "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்னும் உயரிய பாடலை மரியாள் இசைத்தது.

எலிசபெத்தம்மாள் எருசலேமிலிருந்து மேல் திசையில் ஆறு மைல் தொலைவில் மலை நாட்டில் வசித்து வந்தார். அவருக்கு உதவி செய்யும்படி கன்னி மரியாள் சென்றார். தன்னைவிட தாழ்ந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிறார். அவரை கூப்பிடாமலே தானாகக் செல்கிறார். ஒன்று இரண்டு நாட்களல்ல, மூன்று மாதங்களாக அங்கு தங்கி எல்லா வேலைகளையும் செய்கிறார்.

எலிசபெத்தம்மாள் அவரை வாழ்த்தியதும், தன்னைப்பற்றி பெருமை கொள்ளாமல் கடவுளை வாழ்த்துகிறார் மரியாள். ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தம்மாளோடு தங்கியிருந்தபின் வீடு திரும்பினார்.

இன்றைய புனிதர்

2020-05-31

புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல் (The visitation of the blessed virgin Mary)


பிறப்பு
--

இறப்பு
--


இத்திருநாள், தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டுதலால் பிரான்சிஸ்கன் சபையில் 1263 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்களவார்த்தை சொன்னபிறகு, சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தம்மாளை சந்தித்த நேரத்தில்தான், கன்னிமரி "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்ற தமது ஒப்பற்ற புகழ்ப்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரையிலும், 3 வாரங்கள் தங்கி எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்து வந்தார். அன்னை மரியாள் அன்று பாடிய பாடல் ஓர் நன்றியின் பாடல். இறைவன் தன்னைத் தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்துகிறார் மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும், நன்றி மனப்பான்மையுடன் பாடுகின்றார்.

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத், மரியாவை பார்த்துக் கேட்டார். "என் ஆண்டவரின் தாய்" என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே, மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத்திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருள் அடையாளத்தைஸ் செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக்குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகு மரியன்னையைப் பாராட்டுகின்றார். "ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று கூறுவதன் வழியாக, மரியாவின் ஆன்மீகம் அடித்தளமாக அமைவது, அவரது ஆழமான விசுவாசம் என்பதை எலிசபெத் சுட்டிக்காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் "வாக்குறுதியின் பெட்டகமே" என்று மரியாவை திருச்சபை அழைக்கின்றது, வாழ்த்துகின்றது.

"வாக்குறுதியின் பெட்டகம்" யூதர்களிடம் இருந்த நாள் வரை, யூதர்கள் இறைப்பிரசன்னத்தையும் யாவேவின் வழி நடத்துதலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான், மரியன்னை உலக முடிவுவரை, இறை இயேசுவின் பிரசன்னத்தை மக்களிடையே கொண்டுவந்தார். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க, யூத மக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழையின் முன் ஆடி மகிழ்ந்தார். அதேபோன்றுதான் எலிசபெத்தின் வயிற்றினுள் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார். இறுதியாக திருப்பேழை 12 யூத கோத்திரத்தாரையும், யெருசலேம் நகரில் தாவீதின் அரியணை முன் ஒன்றாகக் கூட்டி சேர்த்தது. அதேபோன்று எல்லோருக்கும் முதல்வராக, நற்செய்தி மறைபரப்பாளராக, எலிசபெத்திடம் தமக்கு தேவதூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை அறிவிக்க சென்றதன் வழியாக, உலக முடிவு வரை, வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதை அறியப்படுகின்றது.

மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறுபெற்றிருந்தார். கடவுளின் திட்டத்தை அறிந்தார். தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும், இறைவனின் தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் தன்னை முழுவதும் அர்ப்பணித்தார்.


செபம்:

எங்கள் தாயும் தந்தையுமான அன்பான இறைவா! இதோ உமது அடிமை என்று கூறி, தன்னை முழுவதும் உம்மிடம் அர்ப்பணித்தார். அன்னை மரியாள் நாங்களும் அன்னையின் பக்தர்களாக வாழ்ந்து, அன்னையைப்போல பிறருக்கு உதவி செய்து, நாங்கள் என்றும் உம் திட்டத்திற்கு ஆம் என்று கூறி, உமது அடிமைகளாக வாழ வரம் தாரும்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


நிக்கோசியா நகர் துறவி, திருக்காட்சியாளர் பெலிக்ஸ் Felix von Nicosia OFM cap

பிறப்பு:5 நவம்பர் 1715 நிக்கோசியா Nicosia, இத்தாலி
இறப்பு:31 நவம்பர் 1787, நிக்கோசியா, இத்தாலி
முத்திபேறுபட்டம்:12 பிப்ரவரி 1888


துறவி ஹில்ரூட் Hiltrud

பிறப்பு:900, நொயன் ஹெர்சே Neuenhersee, ஜெர்மனி
இறப்பு:950, நொயன்ஹெர்சே


பாசாவ் நகர் ஆயர் பில்லேக்ரினுஸ் Pilegrinus von Passau

பிறப்பு:920 ஆஸ்திரியா
இறப்பு:991 பாசாவ், ஜெர்மனி


கொலோன் நகர் பேராயர் சீகேவின் Siegewin

பிறப்பு:11 ஆம் நூற்றாண்டு
இறப்பு:31 மே 1089, கொலோன், ஜெர்மனி

புனிதர் ஹெர்மியாஸ் May 31

† இன்றைய புனிதர் †
(மே 31)

✠ புனிதர் ஹெர்மியாஸ் ✠
(St. Hermias of Comana)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: தெரியவில்லை

இறப்பு: கி.பி. 160
கொமானா, கப்படோசியா
(Comana, Cappadocia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: மே 31

புனிதர் ஹெர்மியாஸ், ஒரு ஆதிகால கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சியும், ரோமன் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதரும் ஆவார். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புனிதர், ரோம இராணுவத்தில் (Roman army) சிப்பாயாக நெடுங்காலம் பணியாற்றியவர் ஆவார். கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

ஹெர்மியாஸ், "போன்டஸ்" எனுமிடத்திலுள்ள (Comana in Pontus) "கொமானா" எனுமிடத்தில் ரோம இராணுவத்தின் சிப்பாயாக நீண்ட கால சேவையாற்றினார். "அன்டோனியஸ் பயஸின்" (Antoninus Pius) ஆட்சியின் கீழ் (கி.பி. 138-161) இராணுவ சேவையை நிறைவு செய்த இவர், தமது சேவைக்காக சம்பளமாகவோ ஏனைய படியாகவோ ஏதும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தமது விசுவாசத்தை கிறிஸ்துவில் அர்ப்பணித்தார்.

இவற்றை அறிந்த செபாஸ்டியன் (Sebastian) எனும் "கொமானா" எனுமிடத்தின் ஆளுநர் (Proconsul in Comana), கிறிஸ்துவில் விசுவாசத்தை மறுதலிக்கவும், ரோம பேரரசின்மேல் விசுவாசத்தை அறிக்கையிடவும் ஹெர்மியாசை அழைத்தான். அக்காலத்தில், ஆளுநர் என்பவர், பண்டைய ரோம் நாட்டில் ஏகாதிபத்திய அதிகாரம் கொண்ட பதவியாகும்.

ரோம ஆளுநர் செபாஸ்டியனின் (Sebastian) அழைப்பினை கடுமையாக நிராகரித்த ஹெர்மியாஸ், துன்புறுத்துவதற்காக அனுப்பப்பட்டார். சித்திரவதையாளர்களால் அவரது தாடை எலும்புகள் உடைக்கப்பட்டன. அவருடைய முகத்தின் தோல் உரிக்கப்பட்டது. பின்னர், எரியும் உலையில் எறியப்பட்ட இவர் மூன்று நாட்களின் பின்னர் எவ்வித காயங்களோ பாதிப்புகளோ இன்றி வெளிவந்தார். 

இவற்றையெல்லாம் கண்டு ஆத்திரம் கொண்ட செபாஸ்டியன், கொடிய விஷம் தயாரிக்கும் மந்திரவாதியான "மாரஸ்" (Marus) என்பவனின் உதவியை நாடினான். விஷம் தயாரிக்கப்பட்டு ஹெர்மியாஸ் அருந்த கொடுக்கப்பட்டது. ஆனால், அவ்விஷம் புனிதரை தீங்கு ஏதும் செய்யவில்லை. மீண்டும் கொடிய விஷம் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. பின்னரும் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றானதும், கிறிஸ்துவின் தெய்வீக சக்தியை உணர்ந்த "மாரஸ்" (Marus) கிறிஸ்துவில் தமது விசுவாசத்தை அறிக்கையிட்டு வெளிப்படுத்தினான். இதுகண்ட செபாஸ்டியன், உடனடியாக "மாரஸின்" (Marus) தலையை வெட்டிக் கொன்றான். புனிதர் "மாரஸ்" (Marus) தமது சொந்த இரத்தத்தாலேயே திருமுழுக்கு அளிக்கப்பட்டார். உடனேயே மறைசாட்சி எனவும் அறிவிக்கப்பட்டார்.

புனிதர் ஹெர்மியாஸ் புதிய துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார். கொதிக்கும் எண்ணெயில் இடப்பட்டார். அவரது கண்கள் பிடுங்கப்பட்டன. தலைகீழாக மூன்று நாட்கள் தொங்கவிடப்பட்டார். ஆனாலும் அவர் கிறிஸ்துவில் தமது நன்றியை அறிவித்துக்கொண்டேயிருந்தார். இறுதியில், வெறி பிடித்த செபாஸ்டியன் இப்புனிதரின் தலையை தமது வாளால் வெட்டிக் கொன்றான்.

புனிதர் பெட்ரோனிலா May 31

† இன்றைய புனிதர் †
(மே 31)

✠ புனிதர் பெட்ரோனிலா ✠
(St. Petronilla)
கன்னியர் மறைசாட்சி:
(Virgin Martyr)

கன்னியர், மறைசாட்சி:
(Virgin, Martyr)

பிறப்பு: தெரியவில்லை

இறந்தது: 1 ஆம் நூற்றாண்டு; 3 ஆம் நூற்றாண்டு

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: மே 31

பாதுகாவல்:
ஃபிரான்சின் டாபின்கள் (The dauphins of France) (ஃபிரான்சின் சிம்மாசனத்தின் வெளிப்படையான வாரிசுக்கு வழங்கப்பட்ட தலைப்பு), மலை பயணிகள்; திருத்தந்தையர் மற்றும் ஃபிராங்கிஷ் பேரரசர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள்; காய்ச்சலுக்கு எதிராக

புனிதர் பெட்ரோனிலா ஒரு ஆதிகால கிறிஸ்தவ துறவி ஆவார். கத்தோலிக்க திருச்சபையால் அவர் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியர் மறைசாட்சியாக வணங்கப்படுகிறார். பெட்ரோனிலா "டொமிடிலா" (Domitilla family) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உன்னதப் பெண்ணாக இருந்தார். அவர் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரோம் நகரில், கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றவர் ஆவார்.  அவர் மரித்தார்.

பெட்ரோனிலா பாரம்பரியமாக புனிதர் பேதுருவின் மகள் என்று அடையாளம் காணப்படுகிறது. இருப்பினும் இது பெயர்களின் ஒற்றுமையிலிருந்து வெறுமனே தோன்றக்கூடும். அவர் துறவியின் மதமாற்றக்காரராக இருந்திருக்கலாம் (இதனால் ஒரு "ஆன்மீக மகள்"), அல்லது பின்பற்றுபவர் அல்லது வேலைக்காரர் என்றுகூட பொருள்படும். புனிதர் பேதுரு அவரை வாத நோயிலிருந்து குணப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

ரோமானிய கல்வெட்டுகள் அவளை ஒரு மறைசாட்சியாக அடையாளம் காட்டுகின்றன. அவர் புனிதர் "ஃபிளேவியா டொமிடிலா"வுடன் (Saint Flavia Domitilla) தொடர்புடையவராக இருக்கலாம்.

பெட்ரோனிலா ஒரு அழகான பெண் என்றும், பாகன் மன்னனான "ஃப்ளாக்கஸ்" (Flaccus) என்பவன் இவரை மணக்க விரும்பினான். ஃப்ளாக்கஸுடன் (Flaccus) திருமணத்தை மறுத்துவிட்ட பெட்ரோனிலா, அதற்கு பதிலாக தன்னை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க விரும்பினார். இவரைப்போன்றவர்களிடமிருந்து பெட்ரோனிலா வை காப்பதற்காக, தூய பேதுரு இவரை ஒரு ஒரு கோபுரத்தில் பூட்டி வைத்திருந்தார் என்றும், "ஃப்ளாக்கஸ்" (Flaccus) போன்றோரிடமிருந்து தப்புவதற்காக பெட்ரோனிலா உண்ணா நோன்பிருந்து தன்னை வருத்திக்கொண்டதாகவும், அதன் விளைவாக இவர் மரித்துப்போனதாகவும், இவர் சம்பந்தப்பட்ட புராணங்கள் கூறுகின்றன.

இவர் சம்பந்தப்பட்ட மற்றுமொரு புராண கதையில், தமது கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிட மறுத்த காரணத்தால், இவர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

30 May 2020

புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் May 30

† இன்றைய புனிதர் †
(மே 30)

✠ புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ✠
(St. Joan of Arc)
தூய கன்னியர்; மறைசாட்சி:
(Holy Virgin and Martyr) 

பிறப்பு: ஜனவரி 6, 1412
டோம்ரேமி, ஃபிரான்ஸ் அரசு
(Domrémy, Kingdom of France) 

இறப்பு: மே 30, 1431 (வயது 19)
ரோவன், நோர்மண்டி
(அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது)
(Rouen, Normandy - Then under English rule) 

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 18, 1909
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X) 

புனிதர் பட்டம்: மே 16, 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV) 

நினைவுத் திருவிழா: மே 30 

பாதுகாவல்:
ஃபிரான்ஸ்; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; “ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெண் இராணுப் படையினர்” (Women's Army Corps); “ஐக்கிய அமெரிக்க கடற்படை ரிசர்வ் (மகளிர் ரிசர்வ்) அல்லது, “இரண்டாம் உலகப் போரின்போது தானாகவே முன்வந்து சேவையாற்றிய பெண்கள் படை” (Women Accepted for Volunteer Emergency Service in the World War II)

புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் (St. Joan of Arc), கி.பி. 1412ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள “டாம்ரேமி” (Domrémy) என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் ஃபிரான்ஸ் நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

“ஓர்லியன்ஸ் பணிப்பெண்” (The Maid of Orléans) எனும் செல்லப்பெயர் அல்லது புனைப் பெயர் (Nickname) கொண்ட இவரது தந்தை “ஜாக்குஸ் டி ஆர்க்” (Jacques d'Arc) ஆவார். இவரது தாயார் “இஸபெல்லா ரோமி” (Isabelle Romée) ஆவார். இவர்களுக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில், ஜோன் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி. எனவே ஜோன் தனது குழந்தை பருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் ஜோன் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே ஜோன் ஆழ்ந்த இறை சிந்தனையுடையவராகவே இருந்தார்.

"இறைதூதர் மிக்கேல்" (Archangel Michael), "புனிதர் மார்கரெட்" (Saint Margaret) மற்றும் "புனிதர் கேதரின்" (Saint Catherine of Alexandria) ஆகியோர் தமக்குக் காட்சி தந்ததாகவும், ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிலிருக்கும் ஃபிரான்ஸ் நாட்டினை மீட்க நூறு வருட கால போரிடும் முடியிழந்த ஃபிரெஞ்ச் மன்னன் ஏழாம் சார்ளசுக்கு (The uncrowned King Charles VII) உதவுமாறு தமக்கு உத்தரவிட்டதாகவும் ஜோன் கூறினார். 

அந்நியரை “ஓர்லியன்ஸ்” (Orléans) பிராந்தியத்தை விட்டு விரட்டுவதற்காகவே கடவுள் தம்மைப் படைத்திருப்பதாக இவர் நம்பினார். மீட்புப் போரின் முதல் கட்டமாக ஓர்லியன்ஸ் (Orléans) முற்றுகைக்கு செல்லுமாறு ஏழாம் சார்ள்ஸ் உத்தரவிட்டார். ஜோன் ஃபிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற ஃபிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் ஃபிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார். இவையே ஃபிரான்சின் ஏழாம் சார்ளஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது. 

ஆயினும் பர்கண்டியர்களால் (Burgundian) கி.பி. 1430ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாளன்று, போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட இவர், ஃபிரான்சின் எதிரிகளான ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் "பேயுவைஸ்" ஆங்கில சார்பு ஆயரான "பியேர் கெளசொன்" (pro-English Bishop of Beauvais Pierre Cauchon) துணையோடு இவரை சூனியக்காரி எனவும், தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19ம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை மூன்றாம் கலிக்ஸ்டஸால் (Pope Callixtus III) இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் கத்தோலிக்க மறைசாட்சி என அறிவிக்கப்பட்டார்.

பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, கி.பி. 1909ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X) அவர்களால், “நோட்ரே டேம் டி பாரிஸ்” (Notre Dame de Paris) ஆலயத்தில் அருளாளர் பட்டமும், 1920ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) அவர்களால் ரோம் நகரின் “தூய பேதுரு பேராலயத்தில்” (St. Peter's Basilica) புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் நினைவுத் திருநாள் மே மாதம் 30ம் நாள் ஆகும்.

இன்றைய புனிதர்

2020-05-30

புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans )

பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலி (Patron of France)


பிறப்பு
6 ஜனவரி 1412
டோம்ரேமி(Domremy), பிரான்சு

இறப்பு
1431
ரூவன்(Rouen), பிரான்சு

புனிதர்பட்டம்: 16 மே 1920 திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட்


இவர் புத்தகங்களையும், பாடல்களையும் நாடகங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர். பல வரலாற்று அறிஞர்களும், இறையியலாளர்களும், மருத்துவர்களும் இவரின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் பல ஆராய்ச்சிகளை செய்ய குவிந்தனர். பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக உள்ள இப்புனிதரை பார்க்கும் அனைவரும் வியக்கின்றனர். இப்பெண்ணின் வீரம் அந்நாட்டை அதிர வைக்கக்கூடியதாக இருந்தது. இவர் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பார்க்கும்போதே, இவர் எவ்வளவு பெரிய போர் வீரர் என்பதை அறியலாம்.

இவர் டோம்ரேமி என்ற ஊரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவரின் மகளாக பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று டோம்ரேமிலா புசேலா(Domremy la Pucelie) என்றழைக்கப்படுகின்றது. இவர் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் ஞானஸ்நானம் பெற்ற அந்தத் தொட்டியும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சிறிய சிறிய பொருட்களும், அவர் பயன்படுத்திய பெரிய துப்பாக்கியும், இன்றும் அவர் பிறந்த வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அவ்வீடு இன்று ஓர் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது.

இவர் மிகுந்த பக்தியுள்ளவராக தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். ஆனால் இவர் படிக்கவோ, எழுதவோ ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவரின் வீட்டில் இருந்த தோட்டத்தில் எப்போதும் வேலை செய்வார். தனது 13 ஆம் வயதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒருவித சத்தத்தைக் கேட்டார். இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரான்சு நாட்டிற்கு போர் வீரர்கள் போர்புரிய வந்ததை அப்போது அவர் பார்த்தார். நூற்றுக்கணக்கான இங்கிலாந்து போர் வீரர்கள் பிரான்சை கைப்பற்ற வந்ததை அறிந்தார். இதனால் தன் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். இதற்காக நாள்தோறும் தன்னையே தயாரித்தார். 1429 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்களில் ஆண்கள் உடுத்தும் ஆடையை, அணிந்துகொண்டு, குதிரையின் மேல் ஏறி, Vaucoulerus மற்றும் Chinon நகரங்களை நோக்கி சென்று, போரிட்டு இளவரசர் 7 ஆம் சார்லஸ் அவர்களை வென்றார். அதோடு அங்கு மறைபரப்புப்பணியையும் செய்தார். இவர் உரைத்த வாக்கைப்போல, அதுவரை யாரும் உரைக்கவில்லை. அவரின் மறையுரைகள் அனைத்தும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையறிந்த 7ஆம் சார்லஸ், இறையியலாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வரவழைத்து, ஜோன் ஆப் ஆர்க்கின் உரையைப் போல ஒன்றை தயார் செய்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர்களால் அதை செய்ய இயலவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அனைத்தையும், இறைஞானத்தால் தூண்டப்பட்டதாக இருந்தது.

இவர் 1429 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் முறைப்படி, பிரான்சு நாட்டு படைவீரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்று முதல் முழு நேர போர் பணியாளராக இருந்தார். மிகக் குறைந்த நாட்களிலேயே போர் வீரர்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சக்தி பெற்ற ஆண்களால் செய்ய முடியாத வேலைகளைகூட இவ்விளம்பெண் சாதாரணமாக செய்து முடித்தார். செய்த வேலைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றார். 1429ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் 7ஆம் சார்லஸை மனம்மாற்றி, அவருடைய உதவியுடன், ரைம்ஸ் (Reims) என்ற ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பேராலயத்தில் அவருக்கு மூடி சூட்டினார். இதனால் மன்னர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கின் காலடியில் விழுந்து வணங்கி நன்றி கூறினார். இச்செயலைப் பார்த்த மன்னருடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அச்சமுற்று, மன்னரின் மேல் கோபம் கொண்டார்கள். பிறகு மன்னருக்கும் ஜோன் ஆப் ஆர்க்குக்கும் எதிராக போர்புரிய ஆரம்பித்தார்கள். 1440 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டினர், பிரான்சு நாட்டை முற்றுகையிட்டபோது, மன்னனை பழிவாங்கும் விதமாக போரில் ஆர்வம் காட்டாமல், கடமைக்காக போர்புரிந்தனர். அப்போது இதனை கண்ட ஜோன் ஆப் ஆர்க் பெரும் வேதனை அடைந்தார். எதிரிகளால் இவர் தாக்கப்பட்டு, பிடித்துக்கொண்டுப் போகப்பட்டார். எதிரிகள் அவரின் மேல் பல குற்றங்களை சுமத்தி பழிவாங்கினர். எதிரிகளின் கொடுமையை தாங்கமுடியாமல், சொல்லொண்ணா துயரம் அடைந்தார். பிரான்சு நாட்டிற்காக ஏராளமான நன்மைகளை செய்த ஜோன் ஆப் ஆர்க், தன் 19 ஆம் வயதில் ரூவென் என்ற இடத்தில் சுட்டெரித்துக் கொல்லப்பட்டார். பிரான்சு நாட்டு இளம்பெண்கள் பலர், இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை இன்றும் நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றனர். எதிரிகளை எதிர்த்து போரிடுபவர்களுக்கு இவரின் வாழ்வு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாய் உள்ளது.


செபம்:

வழிநடத்துபவரே எம் இறைவா! எதிரிகளால் எம் நாட்டு மக்கள் தாக்கப்படும்போது, வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்கின் துணைகொண்டு, எம் மக்களை நாங்கள் காத்தருள, நீர் துணைபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


குரு, சபைநிறுவுநர் லெயோனார்ட் முரியால்டோ Leonhard Murialdo

பிறப்பு:26 அக்டோபர் 1828, தூரின் Turin, இத்தாலி
இறப்பு:30 மே 1900, தூரின், இத்தாலி
புனிதர்பட்டம்:1970, திருத்தந்தை 6 ஆம் பவுல்


இன்றைய புனிதர் :
(30-05-2020)

ஜோன் ஆப் ஆர்க் (மே 30)

ஜோன் ஆஃப் ஆர்க் சாதாரண மனித தரத்திலிருந்து மிகவும் உயர்ந்த ஒரு மானிடப் பிறவி. அவளுக்கு இணையான மனிதப் பிறவி ஓராயிரம் ஆண்டுகளிலும் உதிக்கப்போவதில்லை – வின்ஸ்டென்ட் சர்ச்சில்

வாழ்க்கை வரலாறு

15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இங்கிலாந்து& பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. இங்கிலாந்து, பிரான்ஸின் பல பகுதிகளைக் கைப்பற்றியது. பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ், அதிகாரங்கள் எதுவுமற்ற பொம்மையாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.


இத்தகைய சூழலில் பிரான்ஸ் தேசத்தில், ‘தோம்ரிமி’ என்ற சிறிய கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள்தான் நம் புனிதை ஜோன். இவள், தனது தாய்நாடான பிரான்ஸ், இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பற்றி, தன் தந்தையின் மூலம் அறிந்திருந்தாள். எப்பாடுபட்டாவது தாய் நாட்டை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்குள் தோன்றியது. நாளடைவில் இந்த விருப்பம், தீவிரமானது. ‘தாய் நாட்டை காக்கவே நீ பிறவி எடுத்திருக்கிறாய். அதற்கான முயற்சியில் உடனே ஈடுபடு!’ என்ற பொருளில் காட்சிகளும், குரல்களும் அடிக்கடி தனக்குள் தோன்றுவதாக சொல்லத் தொடங்கினாள். அது மட்டுமில்லை, இந்த உயரிய குறிக்கோளுக்காகவே இறைவன் தன்னைப் படைத்திருப்பதாகவும் அவள் நம்பத் தொடங்கினாள்.


இதை, தன் தாய் தந்தையரிடமும், கிராமத்துப் பெரியவர்களிடமும் அவள் சொன்னபோது, அவர்கள் நம்ப மறுத்தனர். ‘இது, வெறும் கற்பனை!’ என்றவர்கள், திரு மணம் செய்து, பிள்ளைகள் பெற்றுக் கொண்டு வாழும் வழியைப் பார்க்குமாறு அவளுக்கு அறிவுரை கூறினர். ‘இது கற்பனை அல்ல; கடவுளின் ஆணை!’ என்று உறுதியாக நின்ற அவளை மெதுவாக நம்பத் தொடங்கினர் சிலர். அவர்களது உதவியுடன் பிரான்ஸ் அரசன் ஏழாவது சார்லஸை சந்தித்தாள் ஜோன். தான், இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து பிரான்ஸை மீட்க வந்திருப்பதாக அரசனிடம் பணிவுடன் தெரிவித்தாள். மேலும், தென் பிரான்ஸில் இருந்த ‘ஆர்லேன்ஸ்’ என்ற முக்கிய நகரை மீட்க, பிரெஞ்சுப் படையைத் தன் தலைமையில் அனுப்புமாறு வேண்டினாள். பெரும் தயக்கத்துக்குப் பின் அவளது கோரிக்கையை ஏற்றான் அரசன்.


போர்க் கவசம் அணிந்து, ஒரு கையில் உருவிய கத்தி, மறு கையில் ‘இயேசு மரி’ என்று பொறிக்கப்பட்ட வெண் கொடியுடன் குதிரையின் மீது அமர்ந்து, ஐந்தாயிரம் பிரெஞ்சுப் போர்வீரர்களுடன் புறப்பட்டாள் ஜோன். இது நடந்தது 1429 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம். அப்போது அவளது வயது 18. இளம் பெண் ஒருவளது தலைமையில் ஆர்லேன்ஸ் நகரை நெருங்கிய பிரெஞ்சுப் படையைப் பார்த்து முதலில் சிரித்தனர் ஆங்கிலேயப் படையினர். ஆனால், சுதந்திர வேட்கை மிகுந்த ஜோனின் உணர்ச்சியூட்டும் தலைமையின் கீழ் வீரப் போர் புரிந்த பிரெஞ்சுப் படையினரின் தாக்குதலில், நகரின் கோட்டைகள் ஒவ்வொன்றாக வீழத் தொடங்கின. மிக முக்கியமான கடைசி கோட்டையைக் கைப்பற்றும் போரில் காயம் அடைந்து, மருத்துவ சிகிச்சைக்காக ஜோன் போரிலிருந்து விலக நேர்ந்தது. இதைக் கண்டு மனம் தளர்ந்த பிரெஞ்சு வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

பிரெஞ்சு வீரர்கள் மனம் தளர்வதை விரும்பாத ஜோன், மீண்டும் போரில் குதித்தாள். கடும் போருக்குப் பின் கடைசி கோட்டையையும் வென்று, ஆர்லேன்ஸ் நகரைக் கைப்பற்றினாள். அவளின் இந்த வீரச் செயலைப் பார்த்து, ‘இவள் சாதாரண மானிடப் பெண் இல்லை. தெய்வீக சக்தி மிக்கவள்’ என்று பிரான்ஸ் மட்டுமல்லாமல், எதிரி நாடான இங்கிலாந்தும் நம்பத் தொடங்கியது. ‘ஆர்லேன்ஸை மீட்ட நங்கை’ என்று சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றாள் ஜோன்.


ஜோனின் வாழ்க்கை இத்துடன் முடியவில்லை. மேலும் பல போர்களில் கலந்து கொண்டு, பிரான்ஸ் தேசத்துக்கு வெற்றி மேல் வெற்றியைத் தேடிக் கொடுத்தாள். அவளது வீரம், ஆங்கிலேயர்களை பிரான்ஸின் வடக்கு மூலைக்கே விரட்டி அடித்தது. பிரான்ஸின் அரசனாக ஏழாவது சார்லஸ் முடி சூட்டிக் கொண்டதுடன், அதன் மாட்சிமை நிலை நாட்டப்பட்டது. ஆனால், விரைவிலேயே வஞ்சகத்தால் பிடிபட்டு, ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டாள் ஜோன். அவர்கள் அவளுக்கு மரண தண்டனை விதித்தனர். 30.05.1431 அன்று ஊரின் நடுவே கழுமரத்தில் கட்டப்பட்டு, சுற்றிலும் மரக் கட்டைகளை அடுக்கி, தீ வைத்து எரிக்கப்பட்டு ஜோன் கொல்லப்பட்டாள். இவ்வாறு அசாதாரண வீரத்துடன் வாழ்ந்து, இறுதியில் பெரும் துணிச்சலுடன் மரணத்தைத் தழுவிய அவள், இந்த பூமியில் வாழ்ந்தது மொத்தம் 19 ஆண்டுகளே.

இவருக்கு 1920 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜோன் ஆஃப் ஆர்க்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஆபத்தில் – அனைத்து வேளையிலும் - ஆண்டவர் இயேசுவின் பெயரை உச்சரிப்போம்

ஜோன் ஆஃப் ஆர்க் ஒரு வீர நங்கையாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பக்தியான ஒரு பெண்மணியாகவும் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக அவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்தி கொண்டு இருந்தார்.

இங்கிலாந்து நாட்டுக்கு எதிரான போரில் பிரான்ஸ் நாட்டுப் படைக்குத் தலைமைதாங்கிய ஜோன் தன்னுடைய கையில் இயேசு, மரியின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கொடியைத் தாங்கிச் சென்றார். அதுவே ஜோனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான போரில் வெற்றியைத் தேடித் தந்தது. தூய ஜோனைப் போன்று இயேசுவின் பெயருக்கு – மரியாவின் பெயருக்கு – இருக்கும் வல்லமையை நம்முடைய வாழ்க்கையில் உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்கு தருவார்” என்று (யோவா 16:23). இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலும் உண்மை. தூய ஜோன் இயேசுவின் பெயரை நம்பி உச்சரித்தார். அதனால் வெற்றிகள் பல கண்டார். நாமும் ஆண்டவர் இயேசுவின் பெயரை நம்பிக்கையுடன் உச்சரிக்கும் போது ஆசிரைப் பெறுவோம் என்பது உறுதி.
ஆகவே ஜோன் ஆஃப் ஆர்க்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று வீரத்தோடு செயல்படுவோம், ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் உண்மையான நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (30-05-2020)

Saint Joan of Arc

One of five children born to Jacques d'Arc and Isabelle Romee. Shepherdess. Mystic. From age 13 she received visions from Saint Margaret of Antioch, Saint Catherine of Alexandria, and Michael the Archangel.

In the early 15th century, England, in alliance with Burgundy, controlled most of what is modern France. In May 1428 Joan's visions told her to find the true king of France and help him reclaim his throne. She resisted for more than three years, but finally went to Charles VII in Chinon and told him of her visions. Carrying a banner that read "Jesus, Mary", she led troops from one battle to another. She was severely wounded, but her victories from 23 February 1429 to 23 May 1430 brought Charles VII to the throne. Captured by the Burgundians during the defence of Compiegne, she was sold to the English for 10 thousand francs. She was put on trial by an ecclesiastical court conducted by Cauchon, Bishop of Beauvais, a supporter of England, and was excuted as a heretic. In 1456 her case was re-tried, and Joan was acquitted (23 years too late).

"About Jesus Christ and the Church, I simply know they're just one thing, and we shouldn't complicate the matter." - Saint Joan of Arc, as recorded at her trial. 

Born :
6 January 1412 at Greux-Domremy, Lorraine, France.

Died :
burned alive on 30 May 1431 at Rouen, France.

Canonized :
16 May 1920 by Pope Benedict XV.

Patronage :
captives, prisoners
• martyrs
• opposition of Church authorities
• people ridiculed for their piety
• rape victims
• soldiers
• France
• WACs (Women's Army Corps)
• WAVES (Women Appointed for Voluntary Emergency Service)

---JDH---Jesus the Divine Healer---