புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

26 June 2020

புனித.விஜிலியஸ்ஆயர், மறைசாட்சி June 26

இன்றைய புனிதர் :
(26-06-2020)

புனித.விஜிலியஸ்
ஆயர், மறைசாட்சி
பிறப்பு
385
    
இறப்பு
405

இவர் தனது இளம் வயது கல்வியை உரோம் நகரில் பயின்றார். பின்பு தனது 20 ஆம் வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து ஏதென்ஸ்(Athen) நகருக்கு சென்றார். அங்கு மிக கடுமையான, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். இவரின் வாழ்வு, பார்த்தவர்களை பரவசமடைய செய்தது. இவர் ஏழ்மையின் இளைஞர் என்று பெயர் பெற்றார். பிறகு குருமடத்தில் சேர்ந்து குருவானார். அப்போது 384 ஆம் ஆண்டு டிரிண்டைன்(Trient) ஆயர் இறந்து போகவே விஜிலியஸ் டிரிண்டைன் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் ஆயர் பொறுப்பில் இருக்கும்போது, தன் மறைமாவட்டத்தில் எண்ணிலடங்கா ஆலயங்களை எழுப்பினார். பின்னர் அவ்வாலயங்களில் விசுவாசிகளை நிரப்ப, மறைமாவட்டம் முழுவதும் கால்நடையாகவே சென்று நற்செய்தியை பறைசாற்றினார். அவ்வாறு மலைப்பகுதியில் சென்று நற்செய்தி போதிக்க சென்றபோது, மலையிலிருந்து ஒரு பெரிய கல் அவரின் மீது விழவே, அதே இடத்திலேயே உயிர் துறந்தார்.

செபம்:

நற்செய்திக்கு சான்று பகரவே வந்தேன் என்று மொழிந்த இறைவா! நற்செய்தியின் மீது கொண்ட தாகத்தாலும், உம்மீது கொண்ட அன்பாலும் புனித விஜிலியஸ் தன் உயிரை நீத்தார். நாங்களும் நற்செய்தியின் மீது ஆர்வம் கொண்டு, வார்த்தைகளை வாழ்வாக்கி வாழ்ந்திட இறைவா உம் வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (26-06-2020)

Saint Vigilius of Trent

Roman patrician, son of Theodosius and Maxentia. Brother of Saint Claudian and Saint Magorian. Studied at Athens, Greece where he developed a reputation for learning and sanctity. Friend of Saint John Chrysostom. Settled in the region of Trent, Italy in 380. Chosen bishop of Trent by the faithful of the area. Worked to help the poor, and opposed usury. Friend of Saint Ambrose of Milan. Nearly ended paganism in his diocese, and worked to bring Arians back to orthodox Christianity. Missionary to the areas surrounding his diocese, founding 30 parishes. Worked with Saint Sisinnius, Saint Martyrius and Saint Alexander about whom he wrote De Martyrio SS. Sisinnii, Martyrii et Alexandri. Killed when he overturned a statue of Saturn in the one the few remaining enclaves of such pagan worship. Pope Benedict XIV called Vigilius the first martyr canonized by a pope.

Born :
c.353

Died :
stoned to death on 26 June 405 near Lake Garda in the Val di Rendena
• buried in Trent, Italy

Patronage :
diocese of Bolzano-Bressanone, Italy
• Trent, Italy
• Tyrol, Italy

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment