புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 September 2020

✠ புனிதர் சியோல்ஃப்ரித் ✠(St. Ceolfrith). September 25

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 25)

✠ புனிதர் சியோல்ஃப்ரித் ✠
(St. Ceolfrith)
ஆங்கிலோ-சாக்சன் கிறிஸ்தவ மடாதிபதி:
(Anglo-Saxon Christian Abbot)

பிறப்பு: கி.பி. 642

இறப்பு: கி.பி. 716
பர்கண்டி நகரிலுள்ள லாங்ரேஸ் மடாலயம்
(Monastery of Langres in Burgundy)

ஏற்கும் சபை:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரபுவழி திருச்சபை
(Orthodox Church)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 25

புனிதர் சியோல்ஃப்ரித், ஒரு ஆங்கிலோ-சாக்சன் கிறிஸ்தவ மடாதிபதியும், துறவியும் ஆவார். ஏழு வயதிலிருந்து, கி.பி. 716ம் ஆண்டு, இறக்கும்வரை அவர், "வணக்கத்திற்குரிய புனிதர் பீட்" (Saint Bede the Venerable) அவர்களுடைய பாதுகாவலர் என்று நன்கு அறியப்பட்டவர். அவர் "மாங்க்வேர்மவுத்-ஜாரோ" (Monkwearmouth-Jarrow Abbey) துறவு மடத்தின் மடாதிபதியாகவும், "கோடெக்ஸ் அமியாட்டினஸ்" (Codex Amiatinus Bible) விவிலியத்தை தயாரிக்கும் திட்டத்தில் முக்கிய பங்களிப்பாளராகவும் இருந்தார். கோடெக்ஸின் நகல் ஒன்றினை திருத்தந்தை இரண்டாம் கிரகோரி (Pope Gregory I) அவர்களிடம் வழங்குவதற்காக ரோம் (Rome) நகர் செல்லும் வழியில், அவர் பர்கண்டி (Burgundy) நகரில் இறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை:
சியோல்ஃப்ரித்தின் வாழ்க்கையின் முந்தைய காலத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. கிறிஸ்தவ துறவற மரபுகள் மீது அவரது சொந்த சகோதரர் சினெஃப்ரிட் (Cynefrid) கொண்டிருந்த பக்தியின் காரணமாக துறவற சமூகத்தில் சேர அவருக்கு விருப்பம் இருந்திருக்கலாம். கி.பி. சுமார் 660ம் ஆண்டு, சினெஃப்ரிட் இறந்த தேதியின் காலத்திலேயே சியோல்ஃப்ரித் துறவற மரபில் நுழைந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சியோல்ஃப்ரித், துறவற மரபுடன் ஒரு வலுவான குடும்ப தொடர்பைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அவரது சகோதரர் மட்டுமல்லாது, கூடுதலாக, "டன்பர்ட்" (Tunbert) எனும் அவரது உறவினர் ஒருவர் "ஹெக்சாம் மடாலயத்தின்" (Monastery of Hexham) முதல் மடாதிபதி (Abbot) ஆவார்.

கன்னி மட பயிற்சிக்கான அவரது முதல் நான்கு ஆண்டுகள், "கில்லிங்" (Gilling Abbey) துறவுமடத்தில் நடந்தது. இது, இப்போது வடக்கு யார்க்ஷயர் (North Yorkshire) என அறியப்படுகிறது. அயர்லாந்திற்கு (Ireland) புறப்படுவதற்கு முன்னர், சினெஃப்ரிட் (Cynefrid) இதில் கலந்து கொண்டார். சியோல்ஃப்ரித், வாசிப்பு, உழைப்பு மற்றும் துறவற ஒழுக்கம் ஆகியவற்றிற்கு தொடர்ந்து தனது மனதைக் கொடுத்தபடியால், அதிக பக்தியுடன் நடந்து கொண்டார் என்று விவரிக்கப்படுகிறார். இந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை கொண்ட ஒரு மடத்தை நாடி, சியோல்பிரித் கில்லிங் (Gilling Abbey) துறவுமடத்தை விட்டு வெளியேறினார். பிற்காலத்தில் புனிதர் வில்ஃப்ரிட் (Saint Wilfrid) என்று நியமனம் செய்யப்பட்ட வில்ப்ரிட் தலைமையிலான ஒரு குழுவினருடன் அவர் விரைவில் இணைந்தார். இந்த துறவிகள் அதே பெயரில் ரிப்பன் நகர மடத்தின் (Ripon monastery) பெனடிக்டைன் துறவியர் (Benedictines) என்று போட்ஃப்ளவர் (Boutflower) அடையாளம் காண்கிறார். இந்த நேரத்தில், அவர் சரியான துறவறக் கொள்கைகளைப் பற்றிய தனது சொந்த புரிதலைச் செம்மைப்படுத்த வந்தார். தனது 27 வயதில், குருத்துவம் பெற்ற சியோல்ஃப்ரிட், மேலும் துறவற வாழ்க்கையின் நடைமுறைகளுடன் தன்னை நன்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார்.

ரிப்பன் துறவு மடத்தில் (Ripon) அவரது நாட்கள் முடிவடைவதற்கும், பெனடிக்ட் பிஸ்காப்பின் (Benedict Biscop) கீழ் அவர் நியமிக்கப்பட்டதற்கும் இடையிலான காலம் பற்றி மிகக் குறைவாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தவிர அவர் போடோல்ப் மடாதிபதியின் (Abbot Botolph)  நிறுவனங்களில் சிறிது காலம் செலவிட்ட அவர் "பரிசுத்த ஆவியின் கிருபையால்" ("The Grace of Spirit") நிரப்பப்பட்டதாக விவரிக்கப்படுகிறார்.

இறுதி நாட்கள்:
சியோல்ஃப்ரித், தனது வாழ்க்கையின் இறுதிகாலம் சமீபிப்பதனை அறிந்திருந்தார். எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் ஹ்வெட்பெர்ட் (Hwaetberht) மடாதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர், கோடெக்ஸ் திருவிவிலிய (Codex Amiatinus Bible) நகலை திருத்தந்தை இரண்டாம் கிரிகோரிக்கு (Pope Gregory II) வழங்குவதற்கான நோக்கத்துடன் அவர் ரோம் நகர் பயணம் செய்தார். பர்கண்டி (Burgundy) பிராந்தியத்தில் உள்ள லாங்ரேஸ் (Langres) நகர் வரை பயணித்த இவர், அங்கு கி.பி. 716ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 29ம் நாளன்று, மரித்தார். அவர், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
† Saint of the Day †
(September 25)

✠ St. Ceolfrith ✠

Abbot and Confessor:

Born: 642 AD

Died 716
Monastery of Langres in Burgundy

Venerated in:
Roman Catholic Church
Orthodox Church

Feast: September 25

Saint Ceolfrith, or Geoffrey, the friend and spiritual son of Saint Benedict Biscop (January 12), was born about the year 642 and was probably a native of the kingdom of Northumbria.

He is first mentioned in 674 as aiding Benedict in the foundation of the abbey of Wearmouth, and about the year 678, he accompanied him to Rome. A little later - about the year 681 - Ceolfrith was an active, learned and zealous man, and worthy to be the successor of Benedict. He doubled the large library which had been formed by his predecessor and increased the number of monks to six hundred. He also enriched the monastery, by obtaining from King Aldfrith a grant of lands on the river "Fresca," which were afterwards exchanged for an estate nearer the monastery, at a place then called "Sambuca." By some monks whom he sent to Rome, Ceolfrith obtained from Pope Sergios a new charter of privileges for the monastery, or rather a renewal of those which had been given to Benedict by Pope Agatho.

Saint Ceolfrith continued to preside over the two monasteries of Wearmouth and Jarrow during twenty-six years, and he appears to have occupied himself exclusively with his monks in study and teaching. The celebrity of his school, in which Bede imbibed his great learning, was very extensive; and in 701, the Pope sent a messenger to invite one of his monks to advise him in deciding certain ecclesiastical questions of great difficulty.

A few years afterwards (about 710), Ceolfrith's advice was sought by Naitan, King of the Picts, who had become a convert to the Orthodox Pascha and the Roman form of tonsure; and, at the earnest solicitation of that prince, he sent him a letter setting forth the arguments on which this was founded, and along with it architects to build a stone church after the West Roman style. This letter has been preserved by Bede.

When age and sickness announced to Ceolfrith the near approach of death, he was suddenly seized with the desire of ending his days in the Apostolic city of Rome. Bede, who was probably one of the actors in it, describes very particularly the emotional scene of parting. The monks urged Ceolfrith to stay, for they saw that he lacked the strength for so long a journey, and they feared that he would die on the way; but their efforts were in vain. On Thursday, the 4th day of June, 716, immediately after the first liturgical service of the day had been celebrated, Ceolfrith prepared for his departure, amid the lamentations of those with whom he had passed so many tranquil years.

The monks, about six hundred in number, were assembled in the church at Wearmouth, and Ceolfrith, after having prayed, stood by the altar, holding in his hand the censer with burning incense, and gave them his peace. Then they left the church and moved towards the shore, their chants being frequently interrupted by loud sobs. When they came to the dormitory, Ceolfrith entered the oratory of Saint Lawrence, which stood there, and delivered his last admonition, urging the monks to persevere in brotherly love, to keep strict discipline, and to be constant in their duties to God, and he ended by requesting their prayers for himself.

On the bank of the River Tyne, he gave them severally the kiss of peace, and they then fell on their knees and received his blessing. He was accompanied across the river by the deacons of the church, bearing lighted tapers and the cross of gold. When he reached the opposite shore, he venerated the cross and then mounted the horse which was to carry him to the place of embarkation.

On their return to Wearmouth, the first care of the monks was the election of a successor, and their new abbot, named Hwaetbert, was immediately dispatched, with a few of the brethren, to see Ceolfrith for the last time. They found him on the coast waiting for a ship; since his departure from amongst them, he approved their choice and confirmed their election, and then received from the new abbot a commendatory letter to Pope Gregory.

The apprehensions of the monks were soon verified; for after journeying slowly through Gaul, as he was approaching the city of Langres (Lingonas), in the diocese of Lyon, on the 25th of September of the same year, Ceolfrith became suddenly so feeble that his attendants were obliged to halt in the midst of the fields, where he died almost immediately.

His body was deposited in the monastery of the Twin Martyrs, in the southern suburb of the city, and his companions returned to England to bear the tidings to his friends. Bede, who gives the date of Ceolfrith's death, tells us that he was then seventy-four years of age and that he had been forty-seven years a presbyter and thirty-five years an abbot, including, of course, the period during which he presided only over the monastery of Jarrow.

His holy relics were afterwards removed from Langres, and carried to Wearmouth; and at a subsequent period, on the approach of the Danes, who reduced that monastery to ruins, they were again taken up by the monks, and, with those of the Abbess Hilda, finally deposited at Glastonbury.

Saint Ceolfrith is commemorated on the date of his repose, September 25. The translation of his relics is celebrated on October 8.

No comments:

Post a Comment