புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 August 2020

புனிதர் மேரி மெக்கில்லொப் ✠(St. Mary MacKillop August 8

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 8)

✠ புனிதர் மேரி மெக்கில்லொப் ✠
(St. Mary MacKillop)

அருட்சகோதரி, நிறுவனர்:
(Nun and Foundress)

பிறப்பு: ஜனவரி 15, 1842
நியு டௌன், நியு சவுத் வேல்ஸ் (தற்போதைய ஃபிட்ஸ்ரோய், விக்டோரியா, ஆஸ்திரேலியா)
(New Town, New South Wales (Now Fitzroy, Victoria, Australia)

இறப்பு: ஆகஸ்ட் 8, 1909 (வயது 67)
நார்த் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
(North Sydney, New South Wales, Australia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜனவரி 12, 1995
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 17, 2010
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

முக்கிய திருத்தலங்கள்: 
மேரி மக்கில்லொப் இடம், வடக்கு சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
(Mary MacKillop Place, North Sydney, New South Wales, Australia)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 8

பாதுகாவல்: 
ஆஸ்திரேலியா (Australia), பிரிஸ்பேன் (Brisbane), சௌத் கிராஸ் நைட்ஸ் (Knights of the Southern Cross)

புனிதர் சிலுவையின் மேரி (Saint Mary of the Cross) என்றும், புனிதர் மேரி மெக்கில்லொப் (St. Mary MacKillop), என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு ஆஸ்திரேலிய அருட்சகோதரியும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டவருமாவார். ஆஸ்திரேலியாவில் புனிதர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரேயாவார்.

“மேரி ஹெலன் மெக்கில்லொப்” (Mary Helen MacKillop) என்ற இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1842ம் ஆண்டு, தற்போதைய “மெல்போர்ன்” (Melbourne) நகரில் பிறந்தார். இவரது பெற்றோர், “ஸ்காட்லாந்து” (Scottish descent) நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் ஆவர். இவருடைய தந்தை பெயர், “அலெக்சாண்டர் மெக்கில்லொப்” (Alexander MacKillop) ஆகும். தாயாரின் பெயர், “ஃப்ளோரா மெக்டோனால்ட்” (Flora MacDonald) ஆகும். நிலையான நிதிப்பிரச்சினையுள்ள ஒரு குடும்பத்தில் வளர்ந்த மெக்கில்லொப், தமது பெற்றோரின் எட்டு குழந்தைகளில் மூத்த குழந்தை ஆவார்.
தனியார் பள்ளிகளில் கல்வி கற்க தொடங்கிய மெக்கில்லொப், கி.பி. 1850ம் ஆண்டு, தமது ஒன்பது வயதில் புதுநன்மை (First Holy Communion) அருட்சாதனம் பெற்றார். கி.பி. 1851ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், தமது வாழ்வாதாரமான பண்ணையை அடகு வைத்துவிட்டு, 17 மாதங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி ஸ்காட்லாந்து சென்றார். அவரது வாழ்நாள் முழுவதிலும் அவர் அன்பான தகப்பனாகவும் கணவராகவும் இருந்தார். ஆனால் அவரால், தமது பண்ணையை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. பெரும்பாலான காலங்கள், குழந்தைகள் உழைத்து கொண்டுவந்த சிறு தொகையிலேயே குடும்பம் நடந்தது.

மெக்கில்லொப், தமது 14 வயதில் மெல்போர்ன் நகரிலுள்ள ஒரு ஸ்டேஷனரி ஸ்டோரில் எழுத்தராக பணிபுரிந்தார். கி.பி. 1860ம் ஆண்டு, தமது குடும்ப தேவையை பூர்த்தி செய்வதற்காக, தென் ஆஸ்திரேலியாவிலுள்ள (South Australia) “பெனோலா” (Penola) நகரிலுள்ள தமது மாமா, அத்தையின் தோட்டத்தில் அவர்களது பிள்ளைகளை கவனித்துக்கொண்டு, அவர்களுக்கு கற்பிக்கும் பணியை ஏற்றார். ஏற்கெனவே ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வமுள்ள இவர், தோட்டத்தில் உள்ள மற்ற பண்ணை குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டார். இது அவரை அருட்தந்தை “ஜூலியன் டெனிசன் வூட்ஸ்” (Fr. Julian Tenison Woods) உடன் தொடர்புபடுத்தியது. கி.பி. 1857ம் ஆண்டு, குருத்துவம் பெற்ற அருட்தந்தை வுட்ஸ், அங்குள்ள தென்கிழக்கு பகுதியின் பங்குத் தந்தையாக பணியாற்றினார்.

இளம் பெண்ணான மெக்கில்லொப், ஆன்மீக வாழ்விற்கு ஈர்க்கப்பட்டார். ஆனால், அப்போதிருந்த பெண்களுக்கான சபைகள் எதுவும் இவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கவில்லை. அருட்தந்தை “ஜூலியன் டெனிசன் வூட்ஸ்” (Fr. Julian Tenison Woods) இவரது ஆன்மீக வழிகாட்டியாகவும் ஆனார். இவர்களிருவரும் இணைந்து “புனித சூசையப்பரின் திருஇருதய அருட்சகோதரிகள்” (Sisters of St Joseph of the Sacred Heart (the Josephite Sisters) என்ற பெண்களுக்கான துறவற சபையினை நிறுவினார்கள். இச்சபையின் மூலம் ஏழை எளிய கிராமப்புற மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஆஸ்திரேலியா எங்கும் பல பள்ளிகள் மற்றும் சேமநல அமைப்புகளை தோற்றுவித்தார்.
நாளாக நாளாக சபை வளர வளர, இவரது பிரச்சினைகளும் வளர்ந்தன. இவரது நண்பரும் அருட்தந்தையுமான ஜூலியன் டெனிசன் வூட்ஸ், பல வழிகளில் நம்பமுடியாதவர் என நிரூபணமானார். அருட்சகோதரிகளின் வழிநடத்துதலுக்கான அவருடைய பொறுப்புகளையும் அவரிடமிருந்து அகற்றினார். இதற்கிடையில், மெக்கில்லொப் சில உள்ளூர் ஆயர்களின் ஆதரவைக் கொண்டிருந்தார், அவரும் அவருடைய அருட்சகோதரிகளும் தங்கள் பணிகளுக்காகச் சென்றனர். ஆனால் தென் ஆஸ்திரேலியாவில் ஆயர், முதுமை காரணமாக, ஆலோசனைகளுக்காக மற்றவர்களை நம்பியிருந்தார். சுருக்கமாக மெக்கில்லொபை மறுதலித்தார். அவர் கீழ்ப்படியாமை குணம் கொண்டவர் என்றார். மெக்கில்லொபின் அருட்சகோதரிகள் 50 பேரை அவரது சம்மதமில்லாமல் வெளியேற்றினார். உண்மையைச் சொன்னால், ஆயரின் சண்டைகள் அதிகாரத்தைப் பற்றியது. சபை மற்றும் அதன் நிறுவனங்களில் யாருக்கு அதிகாரம் என்ற அதிகாரச் சண்டையே மிகுதியானது. இறுதியில் அவர் சபை ஒழுங்குகளை மீறிவிட்டார்.

தமது சபை, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையின் (Mother General) ஆளுமைக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும், அத்ததகைய தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ரோம் நகருக்கு பதில் சொல்ல பொறுப்புள்ளவராக இருக்க வேண்டுமென்றும், இங்குள்ள உள்ளூர் ஆயர்களுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு கிடையாது என்றும் மக்கில்லொப் வலியுறுத்தினார். இதற்கிடையில், சபை சொந்த சொத்தாக இருக்க முடியுமா இல்லையா என்பது பற்றிய சர்ச்சைகளும் இருந்தன. இறுதியில், ரோம் மக்கில்லொபுக்கு சிறந்த ஆதரவாக விளங்கியது. நீண்ட காலம் காத்திருந்த பிறகு, சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரமும், அது எப்படி ஆட்சி செய்யப்படவேண்டும் எனும் உத்தரவுகளும் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) அவர்களிடமிருந்து வந்தது.

திருச்சபையின் அதிகார வர்க்கத்தினருடன் போராட்டங்கள் இருந்தபோதிலும், அவரும் அவரது இணை அருட்சகோதரிகளும் தங்களது சேவையை மட்டும் விட்டுவிடவில்லை. பள்ளிகள் மற்றும் அநாதை இல்லங்களில் கற்பித்தனர். மணமாகாத தாய்மாருக்கும் சேவையாற்றினார். பழங்குடியினரிடையே சேவைகள் புரிந்தனர்.

பணம், உண்மையில் அது பற்றாக்குறையாகவும், ஒரு நிலையான கவலையாகவுமே இருந்தது. ஆனால், வீடு வீடாக தானம் வாங்கிய அருட்சகோதரியரின் கத்தோலிக்க விசுவாசம் வலுவடைந்தது. குற்றவாளி என நிர்ணயிக்கப்படுவதால் அவர்களுடைய போராட்டங்கள் கடவுளிடம் நெருங்கி வளருவதற்கான வாய்ப்புகளாக இருந்தன என்பதில் நம்பிக்கையோடு இருந்தார்கள்.

மேரி மெக்கில்லொப் தமது இறுதி காலத்தை நெருங்கிய வேளை, அவர் நிறுவிய அவரது சபை வெற்றியடைந்திருந்தது. கி.பி. 1909ம் ஆண்டு, தமது 67ம் வயதில் அவர் மரித்தார்.

2008ம் ஆண்டு, உலக இளையோர் தினமான ஜூலை மாதம், 17ம் தேதியன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) சிட்னிக்குப் பயணம் மேற்கொண்டபோது மேரி மெக்கிலொப்பின் கல்லறைக்கு சென்று செபித்தார். மேரி மெக்கிலொப்பின் பரிந்துரையால் நடந்தது என நம்பப்படும் இரண்டாம் அதிசயத்தினை 2009ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 19ம் நாளன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அங்கீகரித்தார். இதனையடுத்து 2010ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் நாள் வத்திக்கான் நகரில் திருத்தந்தையினால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

† Saint of the Day †
(August 8)

✠ St. Mary MacKillop ✠
 
Nun and Foundress:

Born: January 15, 1842
Newtown, New South Wales, (now Fitzroy, Victoria, Australia)

Died: August 8, 1909 (Aged 67)
North Sydney, New South Wales, Australia

Venerated in: Catholic Church

Beatified: January 19, 1995
Pope John Paul II

Canonized: October 17, 2010
Pope Benedict XVI

Major shrine: Mary MacKillop Place, North Sydney, New South Wales, Australia

Feast: August 8

Patronage: Australia, Brisbane, Knights of the Southern Cross

Mary Helen MacKillop, known in life as Mother Mary of the Cross, was born on 15 January 1842 in Fitzroy, Melbourne, the eldest of eight children of Alexander McKillop and his wife Flora, née McDonald. Her parents had migrated from the Lochaber area in Inverness-shire and married soon after they reached Melbourne. After a prosperous start, the family became impoverished.

Mary was educated at private schools but chiefly by her father who had studied for the priesthood at Rome. To help her family Mary became, in turn, a shopgirl, a governess, and at Portland a teacher in the Catholic Denominational School and proprietress of a small boarding school for girls. As she grew to womanhood Mary was probably influenced by an early friend of the family, Father Patrick Geoghegan, and began to yearn for a strictly penitential form of religious life. Concluding she would have to go to Europe to execute her plan, she placed herself under the direction of Father Julian Tenison-Woods who, as parish priest of Penola in South Australia sometimes visiting Melbourne and Portland, wanted to found a religious society, 'The Sisters of St Joseph of the Sacred Heart'; they were to live in poverty and dedicate themselves to educating poor children. With Mary its first member and Superior, the society was founded at Penola on 19 March 1866 with the approval of Bishop Laurence Sheil. By then she was spelling her surname MacKillop. The Sisterhood spread to Adelaide and other parts of South Australia, and increased rapidly in membership but ran into difficulties. Tenison-Woods had become director of Catholic schools and conflicted with some of the clergies over educational matters. One priest with influence over the bishop declared publicly he would ruin the director through the Sisterhood. The result was that Mary was excommunicated by Bishop Sheil on 22 September 1871 for alleged insubordination; most of the schools were closed and the Sisterhood almost disbanded. The ex-communication was removed on 21 February 1872 by order of the bishop nine days before he died.

In 1873 at Rome Mary obtained papal approval of the Sisterhood but the Rule of Life laid down by Tenison-Woods and sanctioned by the bishop on 17 December 1868 was discarded and another drawn up. Tenison-Woods blamed her for not doing enough to have his Rule accepted and this caused a permanent breach between them. She traveled widely in Europe visiting schools and observing methods of teaching and returned to Adelaide on 4 January 1875. In March she was elected Superior-General of the Sisterhood. In journeys throughout Australasia, she established schools, convents, and charitable institutions but came into conflict with those bishops who preferred diocesan control of the Sisterhood rather than central control from Adelaide. In 1883 Bishop Christopher Reynolds, misunderstanding the extent of his jurisdiction over the Sisterhood, told her to leave his diocese. She then transferred the headquarters of the Sisterhood to Sydney. On 11 May 1901, she suffered a stroke at Rotorua, New Zealand. Although retaining her mental faculties, she was an invalid until she died in Sydney on 8 August 1909.

Mary's finest feature was her large blue eyes. Affectionate but determined, her virtues were multitudinous with charity towards her neighbor outshining all. Always regarded as holy, she was put forward in 1972 as a candidate for the honor of beatification and canonization and on 1 February 1973, the Cause was formally introduced. Mary was beatified on 19 January 1995 at Randwick Racecourse, Sydney, in a Mass celebrated by Pope John Paul II. She was canonized as Saint Mary of the Cross at a Mass celebrated by Pope Benedict XVI in St Peter's Square in the Vatican on 17 October 2010.

No comments:

Post a Comment