புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 September 2020

புனித எல்பே St. Ailbe. September 12

இன்றைய புனிதர்
2020-09-12
புனித எல்பே St. Ailbe
பிறப்பு
5 ஆம் நூற்றாண்டு
இறப்பு
528
பாதுகாவல்: கேஷல் Cashel மற்றும் எமிலி Emly மறைமாவட்டங்களுக்கு பாதுகாவலர்

இவர் அயர்லாந்து நாட்டில் மறைபோதகராக பணியாற்றினார். பின்னர் ஆயராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் புனித பாட்ரிக்(Patrick) சபையை சார்ந்தவர். இவர் அல்பேயுஸ்(Albeus) என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக சில வரலாறுகள் கூறுகின்றது. ஜெர்மனியிலுள்ள முன்ஸ்டர் (Münster) என்ற மறைமாவட்டத்திலிருந்த அரசன் ஒருவரால் அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.

இவரிடம் பல கொடுமையான மிருகங்கள் அன்பை நாடி இவரிடம் வந்து செல்லும் என்று சொல்லப்படுகின்றது. அப்போது ஒரு நாள், ஒரு ஓநாய் வந்து இவரின் மார்பில் படுத்துகொண்டு பல மணிநேரம் கழித்தே, அவரைவிட்டு சென்றாக சொல்படுகின்றது. இவர் அயர்லாந்தில் பலரை திருமுழுக்கு கொடுத்து மனந்திருப்பி உள்ளார். இவர் அயர்லாந்து நாட்டு சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்டு, அந்நாட்டு அரசால் கண்டிக்கப்பட்டுள்ளார். அப்போதும் கூட இவர் தனது போதனைகளில் கிறிஸ்துவை முன் வைத்து மறைப்பணி ஆற்றியுள்ளார். இதனால் அந்நாட்டு அரசாங்கங்கள் இவரைக்கொண்டு சென்று, அடர்ந்த காட்டு பகுதியில், விலங்குகளிடையே விட்டுள்ளனர். அச்சமயத்தில் கூட பொறுமையைக் கடைபிடித்து, எளிமையான வாழ்ந்து, தன்னை நாடி வந்த மக்களுக்கு மறையுரையாற்றி அவர்களின்மேல் கரிசனை காட்டி வந்துள்ளார். இவர் அயர்லாந்து மக்களை தன் இதயத்தில் வழிநடத்தினார்.


செபம்:
அன்புத் தந்தையே! நீர் எல்லா உயிர்களையும் நேசிக்க மனிதர்களைப் படைத்தீர். உயிரினங்கள் மேல் அக்கறைகொண்டு அன்பு செய்து அவைகளின் வழியாக நாங்கள் உம்மை காண எமக்கு உதவி செய்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

• துறவி டேகன்ஹார்டு Dogenhard
பிறப்பு: 1300, பவேரியா, ஜெர்மனி
இறப்பு: 1374, பிஷோஃபஸ்மைஸ் Bischofsmais, பவேரியா


• முன்ஸ்டர் நகர் ஆயர் கேர்பிரிட் Gerfried von Münster
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, நோட்டிக் Nottich, ஜெர்மனி
இறப்பு: 12 செப்டம்பர் 839 முன்ஸ்டர் Münster, ஜெர்மனி


• உபதேசியார் குயிதோ Guido, Küster
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, பார்பாண்ட் Brabant, பெல்ஜியம்
இறப்பு: 12 செப்டம்பர் 1012, அண்டர்லெக்ட் Anderlecht, பெல்ஜியம்
பாதுகாப்பு: அண்டர்லெக்ட் மறைமாவட்டம், விவசாயிகள், உபதேசியார்


• டிரியர் ஆயர் மாக்சிமினஸ் Maximinus von Trier
பிறப்பு: 280, சிலி Silly, பிரான்ஸ்
இறப்பு: 12 செப்டம்பர் 346(?), பாய்டியர்ஸ் Poitiers, பிரான்ஸ்
பாதுகாவல்: கடல்வழி பயணம் செய்வோர்

✠ அதிதூய மரியாளின் புனிதப் பெயர் ✠(Most Holy Name of the Blessed Virgin Mary)

† இன்றைய திருவிழா †
(செப்டம்பர் 12)

✠ அதிதூய மரியாளின் புனிதப் பெயர் ✠
(Most Holy Name of the Blessed Virgin Mary)

திருவிழா நாள்: செப்டம்பர் 12
துருக்கி நாட்டுப் படையானது கிறிஸ்தவ நாடுகளின் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வந்து போர்தொடுக்கலாம் என்றதொரு அபாயச் சூழல் நிலவியது. இதை அறிந்த போலந்து நாட்டு மன்னன் ஜான் சொபீஸ்கி (John Sobikeski) என்பவர் தன்னுடைய படைகளைத் போருக்குத் தயார்படுத்தினார். பின்னர் தன்னுடைய படையை மரியாவின் புனித பெயருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்து, போருக்குச் சென்றார். கி.பி. 1683ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் நாள், வியன்னாவில் இரு நாட்டுப் படைவீரர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஜான் சொபீஸ்கியின் தலைமையிலான கிறிஸ்தவப் படையானது, துருக்கி நாட்டுப் படையை வெற்றிகொண்டது. அன்றிலிருந்தே மரியாளின் புனித பெயருக்கு வணக்கம் செலுத்தும் முறையானது வழக்கில் வந்தது.

வரலாற்றுப் பின்னணி:
மரியாளின் புனித பெயருக்கு வணக்கம் செலுத்தும் முறை, கி.பி. 15ம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்பட்ட நிகழ்விற்குப் பின்னர் இவ்வழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகத் தொடங்கியது. ஜான் சொபீஸ்கி தலைமையிலான கிறிஸ்தவப் படை துருக்கி நாட்டுப் படையை வெற்றிகொண்ட பிறகு, அப்போது திருத்தந்தையாக இருந்த பதினோறாம் இன்னொசென்ட் என்பவர் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ம் நாள், மரியாளின் புனித பெயருக்கு விழா எடுத்துக் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே கொண்டாடப்பட்டு வருகின்றது.

மரியாளின் புனித பெயருக்கு இருபதுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருப்பதாக அறிஞர்கள் பெருமக்கள் சொல்வார்கள். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் நம்முடைய கவனத்தில் எடுத்துக்கொண்டு சிந்தித்துப் பார்ப்போம். விவிலிய அறிஞரான எரோனிமுஸ் என்பவர் மரியாள் என்றால் கடலின் ஒரு துளி (Drop of the Sea) என்று சொல்வார். அது எப்படியென்றால் கடல் என்பது கடவுளோடு உருவகப்படுத்தப்படுகின்றது. கடல் கடவுளாக உருவகப்படுத்தப்படும் பட்சத்தில் அதில் ஒரு துளி மரியாள் என்று சுட்டிக்காட்டுவார். மேலும் அவர் மரியாள் என்பதற்கு இறைவி என்றும் சுட்டிக்காட்டுவார். இன்னும் ஒருசிலர் மரியாள் என்பதற்கு அழகு நிறைந்தவள், அன்பு வடிவானவள், உயர்த்தப்பட்டவள் என்றும் பொருள் கூறுவர்.

விவிலியத்தில் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயருக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதை பல இடங்களில் வாசிக்கின்றோம். “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்” (யோவா 16:23) என்று இயேசு கிறிஸ்து தன் பெயரால் நடக்கும் வல்ல செயல்களைக் குறித்துப் பேசுகின்றார். “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும்” (திப 3:6) என்று தலைமைத் திருத்தூதரான தூய பேதுரு கால் ஊனமுற்றவரிடம் சொல்ல, அவர் எழுந்து நடப்பதைப் படிக்கின்றோம். தூய பவுல் இயேசுவின் திருப்பெயர் எத்துணை மகிமை வாய்ந்தது என்பதைக் குறித்துப் பேசுகின்றார். “எனவே கடவுளும் அவரை (இயேசுவை) மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்” என்று கூறுகின்றார் (பிலி 2: 9-10) இவ்வாறு இயேசுவின் திருப்பெயரால் ஆகும் வல்ல செயல்களை, அதனுடைய மகிமையை நாம் அறிந்துகொள்கிறோம்.

இயேசுவின் திருப்பெயரைப் போன்றே, மரியாளின் புனிதப் பெயருக்கும் வல்லமை இருக்கின்றது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்கூருகின்றது. தூய பிரிஜித்துக்கு மரியாள் கொடுத்த காட்சியில், அலகையின் கூட்டம் மரியாளின் பெயரை யாராவது உச்சரிக்கக் கேட்டவுடன் மிரண்டு ஓடுவதையும், வானதூதர்கள் விரைந்து வந்து உதவுவதையும் படித்தறிக்கின்றோம். தூய அம்ரோசியார், “மரியாளின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இருக்கின்றது” என்று சுட்டிக்காட்டுவார். இன்னும் இது போன்று தூயவர்களின் வார்த்தைகளைக் கொண்டு பார்க்கும்போது மரியாளின் பெயருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

‘இனிய உன் நாமம் ஒதிடல் தினமே’ என்று மரியாளுக்குப் பாடல் பாடும் நாம், அவருடைய புனித பெயரை நம்பிக்கையோடு சொல்லுகின்றபோது அதனால் வாழ்வு பெறுவோம் என்பது உறுதியான செய்தி.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்:
மரியாளின் திருப்பெயருக்கு விழா எடுக்கும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மரியாளின் பெயரைச் சொல்வோருக்கு, மரியாள் மகிழ்ச்சியைத் தருவார்:
தூய அல்போன்ஸ் லிகோரி தான் எழுதிய ‘மரியாளின் மாண்பு’ என்ற புத்தகத்தில் சொல்லக்கூடிய நிகழ்வு:

                 வயதான குருவானவர் ஒருவர் கிளி ஒன்று வளர்த்தார். அந்தக் கிளிக்கு அவர் ஒவ்வொரு நாளும் ‘மரியே வாழ்க’ என்ற திருநாமத்தை சொல்லி வளர்த்தார். அந்த கிளியும் அதனை எளிதாகக் கற்றுக்கொண்டது. ஒருநாள் அவர் அந்த கிளியை கூண்டிலிருந்து திறந்துவிட்டு, தன்னுடைய பங்களாவிற்கு முன்பாக அது நடந்து செல்லும் அழகை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடிரென்று மேலே பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்று, அதன்மேல் பாய்ந்து, கிளியைத் தூக்கிச் செல்லப் பார்த்தது. அப்போது அந்தக் கிளி தனக்குத் தெரிந்த ‘மரியே வாழ்க’ என்பதைச் சொன்னது. உடனே, கிளியைத் தூக்க வந்த பருந்து தரையில் விழுந்து செத்து மடிந்தது.

மரியாளின் திரு நாமத்தினால் நமக்கு வரும் தீவினைகளும் விட்டு ஓடிவிடும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நாமும் மரியாளின் பெயரை நம்பிக்கையோடு உச்சரிக்கும் போது தீவினைகள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓடும் என்பது உறுதி. ஆகவே, மரியாளின் புனித பெயருக்கு விழா எடுக்கும் இந்த நாளில் நாமும் அவருடைய பெயரை நம்பிக்கையோடு சொல்வோம். அதனால் எல்லாம் நலன்களையும் பெறுவோம்.

September 12
 
Saint of the day:
The Most Holy name of Mary
 
Prayer:
 
The Story of the Most Holy Name of the Blessed Virgin Mary
This feast is a counterpart to the Feast of the Holy Name of Jesus; both have the possibility of uniting people easily divided on other matters.
The feast of the Most Holy Name of Mary began in Spain in 1513 and in 1671 was extended to all of Spain and the Kingdom of Naples. In 1683, John Sobieski, king of Poland, brought an army to the outskirts of Vienna to stop the advance of Muslim armies loyal to Mohammed IV of Constantinople. After Sobieski entrusted himself to the Blessed Virgin Mary, he and his soldiers thoroughly defeated the Muslims. Pope Innocent XI extended this feast to the entire Church.
In Hebrew, the name Mary is "Miryam". In Aramaic the language spoken in her own time, the form of the name was "Mariam". Based on the root "merur", the name signifies "bitterness". This is reflected in the words of Naomi, who, after losing a husband and two sons lamented, " “Do not call me Naomi (‘Sweet’). Call me Mara (‘Bitter’), for the Almighty has made my life very bitter."
Meanings ascribed to Mary's name by the early Christian writers and perpetuated by the Greek Fathers include: "Bitter Sea," "Myrrh of the Sea", "The Enlightened One," "The Light Giver," and especially "Star of the Sea." Stella Maris was by far the favored interpretation. Jerome suggested the name meant "Lady", based on the Aramaic "mar" meaning "Lord". In the book, The Wondrous Childhood of the Most Holy Mother of God, St. John Eudes offers meditations on seventeen interpretations of the name "Mary," taken from the writings of "the Holy Fathers and by some celebrated Doctors". The name of Mary is venerated because it belongs to the Mother of God

✠ அன்டர்லேச்ட் நகர் புனிதர் கய் ✠(St. Guy of Anderlecht)(செப்டம்பர் 12)

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 12)

✠ அன்டர்லேச்ட் நகர் புனிதர் கய் ✠
(St. Guy of Anderlecht)
அன்டர்லேச்ட் நகரின் எளிய மனிதன்:
(The Poor Man of Anderlecht)

பிறப்பு: கி.பி. 950

இறப்பு: கி.பி. 1012
அன்டர்லேச்ட், பெல்ஜியம்
(Anderlecht, Belgium)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

பாதுகாவல்:
அன்டர்லேச்ட் நகர் (Anderlecht), பெல்ஜியம் (Belgium), வெறி நாய்களுக்கு எதிராக, நாய்க்கடிக்கு எதிராக, மணமாகாத ஆடவர், வலிப்பு நோயாளிகள், கொம்புகள் கொண்ட மிருகங்கள், கூலி வேலையாட்கள், வெளிப்புற கட்டிடங்களின் பாதுகாவல், தொழுவம், கொட்டகை, உழைக்கும் குதிரைகள், தேவாலயங்களின் புனிதப் பாத்திரங்கள் மற்றும் அங்கிகள் முதலானவைகளின் பொறுப்பாளர்.

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 12

“கைடோ” (Guido) என்றும், “கைடோன்” (Guidon) என்றும், “லகேன் நகர வை” (Wye of Láken) என்றும் அழைக்கப்படும் புனிதர் “கய்”, ஒரு கிறிஸ்தவ புனிதர் ஆவார். இவர், பொதுவாக, “அன்டர்லேச்ட் நகரின் எளிய மனிதன்” (Poor Man of Anderlecht) என்றும் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
 
ஏழைப் பெற்றோருக்குப் பிறந்த புனிதர் “கய்”, “லகேன்” (Laken) நகரிலுள்ள அன்னை மரியாளின் தெய்வ இல்லத்தின் புனிதப் பாத்திரங்கள், அங்கிகள் முதலானவைகளின் பொறுப்பாளர் பணியை ஏற்கும்வரை விவசாய வாழ்க்கையே வாழ்ந்தார். ஆலயத்தை பெருக்கிச் சுத்தப்படுத்துதல், திருப்பலி பீடத்தை அலங்கரித்தல், திருப்பலி பீடத்துக்கான துணிமணிகள் மற்றும் மத குருமார்களின் உடைகளைப் பராமரித்தல், திருப்பலி பூஜை மற்றும் மாலை நேர செபங்களுக்காக ஆலய மணியையடித்தல், ஆலயத்தில் செய்யப்படும் அலங்காரம் மற்றும் பூக்கள் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை செய்துவந்தார்.

மேற்கண்ட ஆலய பணிகளை, ஒரு வணிக முயற்சியில் முதலீடு செய்ய தூண்டப்படும்வரை செய்துவந்தார். ஒருமுறை, அவர் முதலீடு செய்த சரக்குக் கப்பல் துறைமுகத்தில் மூழ்கியபோது, தமது பேராசைக்காகவே தாம் தண்டிக்கப்பட்டதாக என்று “கய்” நம்பினார். நோன்பு மற்றும் பரிகார முயற்சியாக முதலில் ரோம் நகருக்கு திருயாத்திரை சென்றார். பின்னர், “எருசலேம்” (Jerusalem) நகரில் பிற திருயாத்திரிகர்களுக்கு வழிகாட்டியாக பணியாற்ற சென்றார். அங்கிருந்து தமது சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் கய் மரித்தார்.

புனிதர் கய், “அன்டர்லேச்ட்” நகர் (Anderlecht), பெல்ஜியம் (Belgium), வெறி நாய்களுக்கு எதிராக, நாய்க்கடிக்கு எதிராக, மணமாகாத ஆடவர், வலிப்பு நோயாளிகள், கொம்புகள் கொண்ட மிருகங்கள், கூலி வேலையாட்கள், வெளிப்புற கட்டிடங்களின் பாதுகாவல், தொழுவம், கொட்டகை, உழைக்கும் குதிரைகள், தேவாலயங்களின் புனிதப் பாத்திரங்கள், அங்கிகள் முதலானவைகளின் பொறுப்பாளர் ஆகியவற்றின் பாதுகாவலர் ஆவார்.

இவரது கல்லறை, ஒரு குதிரை அதனை உதைத்தபோது காணப்பட்டது என்று கூறப்படுகின்றது. 1914ம் ஆண்டு, முதல் உலகப் போர் துவங்கும்வரை, “பிரபான்ட்” (Brabant) நகரின் குதிரை வண்டி ஓட்டுனர்கள், “அன்டர்லேச்ட்” (Anderlecht) நகருக்கு வருடாவருடம் திருயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.


† Saint of the Day †
(September 12)

✠ St. Guy of Anderlecht ✠

The Poor Man of Anderlecht:

Born: 950 AD

Died: 1012 AD
Anderlecht, Belgium

Venerated in: Roman Catholic Church

Feast: September 12

Patronage:
Anderlecht, Belgium; Against Mad Dogs; Against Rabies; Bachelors; People with Epilepsy; Horned Animals; Laborers; Protection of Outbuildings, Stables, and Sheds; Sacristans; Work Horses

Saint Guy of Anderlecht was a Catholic saint. He was known as the "Poor Man of Anderlecht."

Born to poor parents, he lived a simple agricultural life until starting as a sacristan at the Sanctuary of Our Lady at Laken, where his duties included sweeping the church, dressing the altars, taking care of the vestments and altar linens, ringing the bell for mass and vespers, and providing flowers and other decorations which were used in that church.

Saint Guy was born at Anderlecht, a village near Brussels, in the tenth century. As a child, he had two loves, the Church and the poor, and he wished to be himself among that special group of Christ, the poor. While still very young he visited and cared for the sick, and he was regarded by the villagers as a young Saint. As he grew older, love of prayer increased in him, and St. Guy was often seen spending his days in the church. One day when he was praying in the church of Our Lady at Laeken, a short distance from Brussels, he showed such devotion before Our Lady's shrine that the priest, drawing him into the conversation, prayed him to stay and serve the Church. from that point on his great joy was to be constantly in the church, sweeping the floor, polishing the altars, and cleansing the sacred vessels. He spent entire nights in the church in prayer. By day he still found time and means to befriend the poor, so that his generous donations became famous throughout the entire region.

A merchant of Brussels heard of his generosity and was prompted by a demon to go to Laeken and offer him a share of his business, telling him he would have the means thereby to give more to the poor. Guy had no desire to leave the church, but the offer seemed reasonable and he accepted it. The first ship caring expensive cargo was lost, and St Guy realized he had made a mistake. When he returned to Laeken, he found his place at the church filled. The rest of his life was one long repentance for his inconsistency at church. For seven years he made pilgrimages of repentance, visiting Rome and the Holy Land and other famous shrines. About the year 1012, he returned to Anderlecht in his native land. When he died in that same year, a light shone around him, and a voice was heard proclaiming his eternal reward. He was buried in the cemetery of the canons of Anderlecht. Afterwards, St guy was deemed the patron saint of Anderlecht, animals with horns, bachelors, convulsive children, epileptics, labourers, protection of outbuildings, protection of sheds, protection of stables, sacristans, sextons, workhorses; and is invoked against epilepsy, against rabies, against infantile convulsions, and against mad dogs.