புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 July 2020

புனித ட்ரிஃபினா (ஆறாம் நூற்றாண்டு) July 4

ஜூலை 5 

புனித ட்ரிஃபினா  (ஆறாம் நூற்றாண்டு)
இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரிட்டினியைச் சார்ந்தவர். இறைவன்மீது மிகுந்த பற்று கொண்ட  ஒரு குடும்பத்தைச் சார்ந்த இவர், ஓர் ஆண்மகனை மணந்தார்.

இவர்களுடைய இல்லற வாழ்வு நன்றாகச் சென்றது.  இறைவன் இவர்களுக்கு ட்ரிமோருஸ் என்ற குழந்தையைத் தந்தார். இப்படி இருக்கையில், இவருடைய கணவர் திடீரென இறந்தார். இதனால் இவர் தனித்து விடப்பட்டார்.

இதற்குப் பிறகு இவர் தன்னுடைய மகன் ட்ரிமோருஸை இறை நம்பிக்கையிலும் பிறரன்பிலும்  நல்ல விதமாய் வளர்த்து வந்தார். இச்செய்தி பிரிட்டினியில் இருந்த ஓர் அரச அதிகாரிக்குத் தெரியவந்தது. அவன் கிறிஸ்தவர்களை அறவே வெறுத்தவன்.

அவன் ட்ரிஃபினாவின் மகன் ட்ரிமோருஸைப் பிடித்துத் தலையை வெட்டிக் கொன்றுபோட்டான். பின்னாளில் இந்த ட்ரிமோருஸ் புனிதராக உயர்த்தப்பட்டார்.

தன் மகனுடைய இறப்புக்குப் பிறகு ட்ரிஃபினா, ஒரு துறவுமடத்தில் தஞ்சமடைந்து, அங்கு தன்னுடைய வாழ்வின் கடைசிக்காலம் மட்டும் இருந்து, இறையடி சேர்ந்தார்.

புனித அந்தோனி மரிய சக்கரியாகுரு July 5

இன்றைய புனிதர் :
(05-07-2020)

புனித அந்தோனி மரிய சக்கரியா
குரு

பிறப்பு 
1503
இறப்பு 
1539
மார்ட்டின் லூத்தர் ஓர் கத்தோலிக்க, துறவற சபை குருவாக இருக்கும்போது திருச்சபையில் நிலவிய பலவித தீமைகளை சுட்டிக்காட்டி திருச்சபையை விட்டு வெளியேறினார். புனித அந்தோனி மரிய சக்கரியா, திருச்சபைக்குள் இருந்துகொண்டே தம் ஈகை இரக்க செயல்களாலும், தமது புனித வாழ்க்கையாலும் பலரை மனந்திருப்பினார். அத்தோடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் துறவற சபைகளை நிறுவினார். அப்போது அச்சபையின் அவலங்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு மாபெரும் வெற்றியும் கண்டார். 

இவரின் தாய் இவருக்கு 18 வயது நடக்கும்போது விதவையானார். அதிலிருந்து அவர், மகனின் ஆன்மீக வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். நோயினால் தாக்கப்பட்ட ஏழை எளியோரை குணப்படுத்தும் நோக்குடன் சக்கரியா, பதுவை பல்கலைகழகத்தில் மருத்துவக்கலை பயின்று பட்டம்பெற்றார். மக்களின் உடல்நிலையை மட்டுமல்லாது, உள்ளத்து நோய்களையும் குணமாக்க வேண்டுமென எண்ணி, வேத கலையையும் கற்றார். இவர் 1530 ஆம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். பிறகு "பர்ணபைட்ஸ்" (Barnabites) என்ற பெயர் கொண்ட ஒரு துறவற சபையை நிறுவினார். மிலான் நகரில் புனித பர்னபாஸ் ஆலயத்தில் இவர் தமது அலுவலகத்தை அமைத்துக் கொண்டதால் அப்பெயரை தமது சபைக்கு கொடுத்தார். இவரது தூண்டுதலின் பேரில், லூயிசா டொரெல்லா என்ற ஒரு செல்வந்தர் "ஏஞ்சலிக்கல்ஸ்"(Engelicals) என்ற பெயர் கொண்ட பெண்களுக்கான துறவற சபையை நிறுவினார். இச்சபையின் சிறப்பு நோக்கம், தவறிச் சென்று, பள்ளத்தில் விழுந்து கிடக்கும் பெண்களை மீட்பதும், அவர்களுக்கு புதிய சிந்தனைகளையும் உயரிய கண்ணோட்டங்களை கொடுப்பதுமாக இருந்தது. இத்தகைய அரும்பணி மக்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றபின், சக்கரியா தமது 36 ஆம் வயதில் விண்ணக வாழ்வை அடைந்தார். அடிக்கடி திவ்விய நன்மை வாங்குவது, 40 மணி நேரம் திவ்விய நற்கருணை திருமணி ஆராதனை போன்ற ஆன்மீக முயற்சிகளையும் முதலில் இவரே தோற்றுவித்தார். 

"நமக்கு கிடைத்த தேவ அழைத்தலின் வழியாக இறைவன் எவ்வளவு நம்மிடம் எதிர்பார்க்கின்றார் பாருங்கள்; திருத்தூதர்களையும், மறைசாட்சிகளையும் பின்பற்ற நாம் முன்வந்துள்ளோம்; ஆனால் அவர்களுக்கும், நமக்கும் உள்ள இடைவெளியை பாருங்கள்; அவர்களடைந்த வேதனைகளை நாம் ஒதுக்கிவிட கூடாது" என்பதை இப்புனிதர் தம் சபையினருக்கு அறிவுரையாக தந்தார். 

செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! இன்று மருத்துவ துறையில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். உடல் அளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் பங்குபெற்று, நோயாளிக்கு பணிபுரிய உம் ஆசீர் தாரும். நோய்களை குணமாக்கக்கூடிய வல்லமையை நீர் தந்து, எம் பணிகளின் வழியாக உம்மை பறைசாற்றிட வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
† இன்றைய புனிதர் †
(ஜூலை 5)
✠ புனிதர் அந்தோனி மரிய சக்கரியா ✠
(St. Anthony Maria Zaccaria)

எதிர் சீர்திருத்தவாத தலைவர்/ நிறுவனர்/ குரு:
(Leader of the Counter Reformation/ Founder/ Priest)

பிறப்பு: கி.பி. 1502
கிரேமோனா, மிலன் (தற்போதைய இத்தாலி)
(Cremona, Duchy of Milan, (Now Italy)

இறப்பு: ஜூலை 5, 1539
கிரேமோனா, மிலன்
(Cremona, Duchy of Milan)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: ஜனவரி 3, 1890
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: மே 15, 1897
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலம்:
புனித பவோலா பள்ளி, மிலன், இத்தாலி
(San Paolo convent, Milan, Italy)

நினைவுத் திருநாள்: ஜூலை 5

திருச்சபையில் நடந்த துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகளுக்கெதிராக “மார்ட்டின் லூதர்” போர்க்கொடி தூக்கியிருந்த அதே நேரம், திருச்சபைக்குள் ஏற்கனவே ஒரு சீர்திருத்தம் முயற்சிக்கப்பட்டிருந்தது.

புனிதர் அந்தோனி மரிய சக்கரியா, ஆதி எதிர் சீர்திருத்தவாத தலைவர்களில் ஒருவரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் குருவும் ஆவார்.

கி.பி. 1502ம் வருடம், இத்தாலியிலுள்ள “கிரேமோனா” (Cremona) என்னுமிடத்தில் பிறந்த இவரது தந்தை, “அன்டோனியா பெஸ்கரோலி சக்கரியா” (Antonia Pescaroli Zaccaria) ஆவார். தாயாரின் பெயர், “லஸ்ஸரோ” (Lazzaro) ஆகும். பிறந்த அன்றைய தினமே “கிரேமோனா” தேவாலயத்தில் (Cathedral of Cremona) திருமுழுக்கு பெற்றார். இவரது இரண்டு வயதிலேயே இவரது தந்தை மரித்தார். இவரது குடும்பம் பிரபுத்துவ குடும்பமாகையால், ஏழைகளின்பால் இரக்கம் காட்டுவதிலும், ஆன்மீக கல்வி கற்பிப்பதிலும் இவரது தாயார் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். தேவாலயத்துக்கு அருகிலிருந்த “குருபரிபாலன” (Episcopal School) பள்ளியில் கற்றபின்னர், “பவியா” பல்கலையில் (University of Pavia) தத்துவம் பயின்றார். அதன் பின்னர், கி.பி. 1520 முதல் 1524ம் ஆண்டு வரையான கால கட்டத்தில் பதுவை பல்கலையில் (University of Padua) மருத்துவம் பயின்றார். மூன்று வருடம் “கிரேமோனா” (Cremona) நகரில் மருத்துவ சேவை செய்தார். 1527ம் ஆண்டு குருத்துவம் கற்க தொடங்கினார். பின்னர் கி.பி. 1529ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இரண்டு ஆண்டுகளாக தனது அழைப்பை ஆராய்ந்து, முக்கியமாக ஏழைகளுக்கான மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றினார்.

சக்கரியா “மிலன்” (Milan) நகரில் இருக்கும்போது, மூன்று நிறுவனங்களை நிறுவி தொடங்கினார். அவையாவன:
1. “பர்னபைட்ஸ்” (Barnabites) என்றழைக்கப்படும் ஆண்களுக்கான சபை. (இதற்கு திருத்தந்தை “ஏழாம் கிளமென்ட்” (Pope Clement VII), கி.பி. 1533ம் ஆண்டு அங்கீகாரம் அளித்தார்).
2. “புனிதர் பவுலின் திருத்தூது சகோதரியர்” (Angelic Sisters of St. Paul) என்றழைக்கப்படும் பெண்களுக்கான சபை. (இதற்கு திருத்தந்தை “மூன்றாம் பவுல்” (Pope Paul III), கி.பி. 1535ம் ஆண்டு, ஜனவரி மாதம், 15ம் தேதியன்று, ஒப்புதல் அளித்தார்.
3. “புனிதர் பவுலின் பொதுநிலையினர்” (Laity of St. Paul) என்றழைக்கப்படும் திருமணமான பொதுநிலையினருக்கான சபை.

இறை இயேசு சிலுவையில் அரையுண்டதை ஞாபகப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் மூன்று மணியளவில் தேவாலய மணி அடிக்கும் வழக்கத்தினை கொண்டு வந்தார்.

ஒருமுறை சமாதான பணிகளின்போது, தீவிரமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சக்காரியா, தமது அன்னையை காண்பதற்காக உடனே இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டார். 36 வயதான புனிதர் அந்தோனி மரிய சக்கரியா இறைபதம் இணைந்தார்.
† Saint of the Day †
(July 5)

✠ St. Anthony Maria Zaccaria ✠

Leader of the Counter Reformation/ Founder/ Priest:

Born: 1502 AD
Cremona, Duchy of Milan, (Now Italy)

Died: July 5, 1539
Cremona, Duchy of Milan

Venerated in: Roman Catholic Church

Beatified: January 3, 1890
Pope Leo XIII

Canonized: May 15, 1897
Pope Leo XIII

Major shrine: San Paolo convent, Milan, Italy

Feast: July 5

Patronage: The Barnabite order, Angelic Sisters of St. Paul, Laity of St. Paul, Physicians

Saint Anthony Maria Zaccaria was an early leader of the Counter-Reformation, the founder of religious orders (Barnabites), and a promoter of the devotion to the Passion of Christ, the Eucharist, and the renewal of the religious life among the laypeople. His feast day is celebrated on 5 July.

On July 5, the Catholic Church remembers Saint Anthony Mary Zaccaria. A renowned preacher and promoter of Eucharistic adoration, he founded the order of priests now known as the Barnabites.
In 2001, the future Pope Benedict XVI, Cardinal Joseph Ratzinger, wrote the preface for a book on St. Anthony Mary Zaccaria, praising the saint as “one of the great figures of Catholic reform in the 1500s,” who was involved “in the renewal of Christian life in an era of profound crisis.”

The Italian saint, Cardinal Ratzinger wrote, “deserves to be rediscovered” as “an authentic man of God and of the Church, a man burning with zeal, a demanding forger of consciences, a true leader able to convert and lead others to good.”

Anthony Mary Zaccaria was born into an Italian family of nobility in Cremona during 1502. His father Lazzaro died shortly after Anthony's birth, and his mother Antonietta – though only 18 years old – chose not to marry again, preferring to devote herself to charitable works and her son's education.

Antonietta's son took after her in devotion to God and generosity toward the poor. He studied Latin and Greek with tutors in his youth and was afterward sent to Pavia to study philosophy. He went on to study medicine at the University of Padua, earning his degree at age 22 and returning to Cremona.

Despite his noble background and secular profession, the young doctor had no intention of either marrying or accumulating wealth. While caring for the physical conditions of his patients, he also encouraged them to find spiritual healing through repentance and the sacraments.

Anthony also taught catechism to children and went on to participate in the religious formation of young adults. He eventually decided to withdraw from the practice of medicine, and with the encouragement of his spiritual director, he began to study for the priesthood.

Ordained a priest at age 26, Anthony is said to have experienced a miraculous occurrence during his first Mass, being surrounded by a supernatural light and a multitude of angels during the consecration of the Eucharist. Contemporary witnesses marveled at the event and testified to it after his death.

Church life in Cremona had suffered a decline in the late 15th and early 16th centuries. The new priest encountered widespread ignorance and religious indifference among laypersons, while many of the clergies were either weak or corrupt.

In these dire circumstances, Anthony Mary Zaccaria devoted his life to proclaiming the truths of the Gospel both clearly and charitably. Within two years, his eloquent preaching and tireless pastoral care are said to have changed the moral character of the city dramatically.

In 1530, Anthony moved to Milan, where a similar spirit of corruption and religious neglect prevailed. There, he decided to form a priestly society, the Clerics Regular of St. Paul.

Inspired by the apostle's life and writings, the order was founded on a vision of humility, asceticism, poverty, and preaching. After the founder's death, they were entrusted with a prominent church named for St. Barnabas, and became commonly known as the “Barnabites.”

The priest also founded a women's religious order, the Angelic Sisters of St. Paul; and an organization, the Laity of St. Paul, geared toward the sanctification of those outside the priesthood and religious life. He pioneered the “40 Hours” devotion, involving continuous prayer before the Blessed Sacrament.

In 1539, Anthony became seriously ill and returned to his mother's house in Cremona. The founder of the Clerics Regular of St. Paul died on July 5, during the liturgical octave of the Feast of Sts. Peter and Paul, at the age of only 36.

Nearly three decades after his death, St. Anthony Mary Zaccaria's body was found to be incorrupt. He was beatified by Blessed Pope Pius IX in 1849 and declared a saint by Pope Leo XIII in 1897.