† இன்றைய திருவிழா †
(ஜூலை 16)
✠ தூய கார்மேல் அன்னை ✠
(Our Lady of Mount Carmel)
திருநாள்: ஜூலை 16
பாதுகாவல்:
கார்மேல் சபையினர் (Carmelites), சிலி (Chile), பொலிவியா (Bolivia), குயியபோ (Quiapo), மணிலா (Manila), புதிய மணிலா (New Manila), குயிஸான் நகர் (Quezon City), மலோலாஸ் நகர் (Malolos City), புலாகன் (Bulacan), கெடமேகோ (Catemaco), ஐலேஸ்ஃபோர்ட் (Aylesford), ரோரைமா (Roraima), பிகிர்கரா (Birkirkara), ஜபோடிகபல் (Jaboticabal), வல்லெட்டா (Valletta), பெர்னம்புக்கோ (Pernambuco), ஹிகுவேரோட் (Higuerote), தீங்கிலிருந்து பாதுகாப்பு (Protection from harm, ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாப்பு (Protection from dangerous situations), உத்தரியத்திலிருந்து விடுவிப்பு (Deliverance from Purgatory)
"தூய கார்மேல் அன்னை" அல்லது "தூய கார்மேல் மலை அன்னை" அல்லது "புனித உத்தரிய மாதா" என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களாகும்.
கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் கி.பி. 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை அன்னை மரியாளின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே அன்னை மரியாளுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.
கி.பி. 15ம் நூற்றாண்டில், அன்னை மரியாளின் உத்தரியம் (Brown Scapular) என்னும் அருளிக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. அன்னை மரியாளே உத்தரியத்தை புனிதர் “சைமன் ஸ்டாக்” (Saint Simon Stock) என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக விசுவசிக்கப்படுகின்றது. ஜூலை மாதம் 16ம் நாள், கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் மற்றும் கார்மேல் உத்தரிய திருவிழாவாகும்.
தூய கார்மேல் அன்னை, சிலி நாட்டின் பாதுகாவலி ஆவார். இவ்விழாவானது, கார்மேல் சபையினரின் அதிமுக்கியமான விழாவாகும். கார்மேல் சபையினர் இந்த பெயரைத் தெரிந்து கொள்ள முக்கியமான ஒரு காரணம் உண்டு. கார்மேல் மலையிலே அன்னை புனித கன்னி மரியாளுக்கு ஸ்தோத்திரமாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கபட்டது. அன்னை பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே அந்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.
எபிரேய மொழியில் "கார்மேல்" என்ற சொல்லுக்கு "தோட்டம்" என்பது பொருள். பாலஸ்தீன நாட்டில் ஹைபா வளைகுடாவில், 1800 அடி உயரத்திலிருக்கும் தோட்டத்தில்தான் பழைய ஆகமத்தில் இறைவாக்கினர் எலியா தங்கி தன் செபத்தில் நாட்களை கழித்தார். கி.பி. 12ம் நூற்றாண்டில் வனத்துறவியர் சிலர் இதே மலைக்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தனர். பின்பு இவர்கள் ஒரு சபையை நிறுவினர்.
கி.பி. 1251ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் நாளன்று, கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித “சைமன் ஸ்டாக்” (Saint Simon Stock) என்பவருக்கு இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் தேவதாய் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இவருக்கு, அன்னை மரியாள் உத்தரியம் அணிந்து கொண்டு வந்து காட்சி கொடுத்து, உத்தரிய பக்தியை இவ்வுலகில் பரப்பும்படியாக கேட்டுக் கொண்டதன் பேரில், இன்றும் அப்பக்தி பரப்பப்பட்டு பலன் அடையப்படுகின்றது.
நம் பரலோக அன்னை உத்தரியத்தைக் கண்பித்தார்.
அந்த உத்தரியத்தைத் தரித்திருக்கும் அனைவருக்கும் பரலோக கொடைகளையும் தனது பாதுகாவலையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினார். வெறுமனே உத்தரியத்தைத் தரித்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க அதிகாரம் பெற்ற ஒரு குரு, உத்தரியத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
கார்மேல் அன்னையை நோக்கி செபம்:
ஓ கார்மேல் மலையின் மிக அழகிய மலரே, கனிவான திராட்சையே, பரலோகத்தின் மகிமையே, கடவுளுடைய குமாரனின் ஆசிர்வதிக்கப்பட்ட தாயே, பரிசுத்த கன்னியே, என் தேவைகளில் எனக்கு உதவுமம்மா. ஓ ஆழ்கடலின் வழிகாட்டும் நட்சத்திரமே, எனக்கு உதவி செய்யும். நீர் எமது தாய் என்று காட்டுமம்மா. ஓ தூய மரியாயே, கடவுளின் கன்னித் தாயே, பரலோகம் மற்றும் பூவுலக அரசியே, என் தேவையில் (தேவையை கூறவும்) உதவுமாறு என் இருதயத்தின் அடியிலிருந்து உம்மை மன்றாடுகிறேன் அம்மா. உமது சக்தியை எதிர்த்து நிற்க எவராலும் இயலாது தாயே. ஜென்மப்பாவமின்றி கருத்தரித்த மரியாயே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக உமது திருவயிற்றின் கனியும், எமது மீட்பருமாகிய இறை இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுமம்மா. எங்கள் இனிய அம்மா, நான் எனது தேவைகளை உமது திருக்கரங்களில் வைக்கிறேன் தாயே, ஆமென் †
† Feast of the Day †
(July 16)
✠ Our Lady of Mount Carmel ✠
Feast Day: July 16
Patronage:
Carmelites, Chile, Bolivia, Quiapo, Manila, New Manila, Quezon City, Malolos City, Bulacan, Catemaco, Aylesford, Roraima, Birkirkara, Jaboticabal, Valletta, Pernambuco, Villalba, Hatillo, Higuerote, Protection from harm, Protection from dangerous situations, Deliverance from Purgatory
Our Lady of Mount Carmel is the title given to the Blessed Virgin Mary in her role as patroness of the Carmelite Order. The first Carmelites were Christian hermits living on Mount Carmel in the Holy Land during the late 12th and early to the mid-13th century. They built in the midst of their hermitages a chapel which they dedicated to the Blessed Virgin, whom they conceived of in chivalric terms as the "Lady of the place." Our Lady of Mount Carmel was adopted in the 19th century as the patron saint of Chile, in South America.
What is the link between Our Lady of Fatima and Our Lady of the Mount Carmel, since she appeared wearing the Carmelite habit in one of the apparitions? You know that at the Fatima apparitions Our Lady normally wore a white habit with gold trim and a gold belt at her waist. But during an apparition to the children when the miracle of the sun occurred, she appeared wearing the Carmelite habit representing the glorious mysteries of the Rosary.
Our Lady does not do anything by chance, so the first question leads to another: What is the relation among Our Lady of the Carmel, the glorious mysteries, and Our Lady of Fatima?
The invocation of Our Lady of the Carmel originates from Mount Carmel in the Holy Land, where hermits used to live at the time of the Old Covenant praying and waiting for a Virgin-Mother who would come and bring salvation for the whole human race. They were following the example of Elias, the Prophet, who was at Mount Carmel praying for the salvation of Israel, which was passing through a terrible drought when he saw a little cloud in the distant horizon. He hoped that it would bring the much-needed rain to Israel. The small cloud grew in size and covered the whole sky, and finally, the hoped-for rain came to save the people.
Elias understood that this cloud was a symbol of the Virgin to come, related to the prophecies of Isaiah that spoke of Our Lady. Those who followed his example also prayed for the coming of the Virgin who would be the Mother of the Messiah. In Old Covenant times, therefore, the hermits of Mount Carmel had the spiritual mission of foreseeing the coming of Our Lady and praying for it. They were persecuted by evil people, and also by members of the decadent Synagogue; notwithstanding, the hermits of Mount Carmel remained faithful.
Finally, Our Lady came, and she received the greatest glorification of any living creature: in her, the Divine Word, the Second Person of the Holy Trinity, was made flesh. She became the spouse of the Holy Ghost. Since she was without original sin, she was not subject to death. But she chose to die, to imitate Our Lord. So, she had a very easy death, which the Church with her skillful language called the dormition, the sleep of Our Lady. It was an actual death that entailed the separation of body and soul, but as smooth as possible. Afterward, she was resurrected by Our Lord and carried to Heaven by the Angels. This ensemble of privileges constitutes the greatest glorification a creature had ever had. It is because of this that Our Lady of the Assumption is also called Our Lady of the Glory.
Therefore, the history of the Order of Carmel in the Old Testament closes with an extraordinary glorification and the fulfillment of its expectations. Through centuries of silence, isolation, and persecution, the followers of Elias advanced step by step to the victory and glory.
The history of the Order of Carmel begins again in the New Covenant. St. John the Baptist was also a follower of Elias, as were many of his disciples, St. John, St. James, and others. They had the joy to see and know Our Lady while she was alive. They venerated the same Virgin-Mother who had been anticipated by all their ancestors. One can easily imagine that at times she would speak to them as Carmelites and confirm their vocation and reward them for being her first devotees in History.
One also can imagine the pious and mysterious relations between Our Lady and Elias, who is still alive, as you know. It seems reasonable to think that the devotion of Holy Servitude (Holy Slavery) to Our Lady, developed by St. Louis Grignon de Montfort, was somehow known and practiced by those first sons of Our Lady, the Carmelites.
The Carmelite Order continued to exist in the Holy Land, but the Christendom of that time did not take the advantage it should have taken from its presence. That Christendom entered into decadence, and as punishment received the invasion of the Saracens, which destroyed it. At the time of the Crusades, the Carmelites came to the West as an almost unknown religious order, waning and without supporters.
On this shriveling trunk, Our Lady made a vibrant flower bloom – St. Simon Stock. After he was elected General of the Order in 1247, he asked her protection for the Order. She appeared to him and gave him the scapular, that is, the promise of eternal life to those who would enter the Order and die in it. The Order bloomed again, and a new period of glory came to it. Among the glories of the Carmelites, its greatest is to always have had a devotion to Our Lady.
It also had the glory of having a St. Teresa de Avila, and more recently the glory of having St. Therese of the Infant Jesus, who could be our contemporary if she would not have died young.
Today Christendom is again in decadence. Our Lady came to Fatima to announce this fall, the chastisement, and the victory with the famous phrase: “In the end, my Immaculate Heart will triumph.” In that same set of apparitions in which she announced her victory, she desired to appear in the habit of the Carmelite Order, as a way to confirm her age-old predilection for it and to indicate that this Order will be a part of her glorious Reign. With the habit, she symbolically made a synthesis of the past and the future, at the very moment that she announced the end of an era and the beginning of another.
The feast day of Our Lady of Mount Carmel is a very dear feast to us, followers of Elias the Prophet, the first devotee of Our Lady in History.
Let us glorify her and ask her to prepare us, who are Carmelites in spirit, to pass by the chastisement and to be living stones in the Reign of Mary.
Ave Maria