புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

17 July 2020

*ST. ALEXIUS OF ROME* July 17

🇻🇦
July 1⃣7⃣

_Feast_ 🌟
*ST. ALEXIUS OF ROME*


Alexius was born in the year 350 A.D. at Rome and was the only son of wealthy noble parents.

On his wedding-night, by God's special inspiration, he secretly escaped from his home in Rome, and journeyed to Edessa, in Syria, gave away to the poor all that he had brought with him, content thenceforth to live on alms at the gate of Our Lady's church and caring for the sick in that city.

The father of Alexius, dispatched his slaves to every city in the empire to search for him, & it came to pass that the slaves sent in search of him, arrived at Edessa, and at the gate of Our Lady's church, gave him an alms, without recognizing him.

Whereupon Alexius rejoicing, said, *"I thank thee, O Lord, Who hast called me and granted that I should receive for Thy name's sake an alms from my own slaves. Deign to fulfil in me the work Thou hast begun."*

After living for seventeen years at Edessa, his sanctity was miraculously manifested by a vision of the Blessed Virgin Mary. which singled him out as a "Man of God".

As the fame of his sanctity grew in Edessa, Alexius fled to Tarsus, to be unknown again, but on his way to Tarsus, a storm carried  his ship to Rome.

At Rome no one recognized him, not even his sorrowing parents or his wife, who had vainly sent their slaves throughout the empire in search of him.

Alexius dressed as a beggar, went to his own father and begged a small corner under the stairs of his mansion as a shelter, and the leftover on the table as food.

He spent the remaining of his life beneath the stairs, praying and teaching catechism. Thus bearing patiently the mockery and ill-usage of his own slaves who did not recognized him, and witnessing daily the inconsolable grief of his spouse and parents.

At last, in the year 417 A.D., when Alexius died, his parents & the entire household learned too late, from a written document in his hand, that the person they had unknowingly sheltered was indeed Alexius, and how he had lived his life of penance from the day of his wedding, for the love of God.

God bore testimony to His servant's sanctity by many miracles. The Pope read aloud what was written on the parchment of Alexius, and everywhere in Rome there was a single cry of admiration, impossible to describe. The house of Alexius's father Euphemian was later transformed into a church dedicated to Saint Alexius.


    🍁🍁🍁🍁🍁🍁🍁

*The stairs under which St. Alexius had lived, is still preserved in the Church of Santi Bonifacio e Alessio, on the Aventine in Rome.*
_The Alexians, or  Alexian Brothers is a religious congregation which was established under the patronage of St. Alexius, to take care of the sick during the plagues._
_In 1472, Pope Sixtus V approved and confirmed the Alexian Brothers as a religious community under the rule of St. Augustine._


*ஜூலை மாதம் 17-ம் தேதி* 

*St. Alexis, C.*               
*அர்ச். அலெக்சிஸ்*
*துதியர் - (5-ம் யுகம்).*    

தனவந்தரும் உயர்குலத்தோருமான பெற்றோருக்கு ஒரே குமாரனான அலெக்சிஸ், உத்தம கிறீஸ்தவர்களான தம் பெற்றோருடைய நன்மாதிரிகையையும் ஞானப் படிப்பினையையும் பின்பற்றி, இவ்வுலக நன்மைகள் எல்லாம் வீண் என்றெண்ணி, புண்ணிய வழியில் நடந்து, உலகத்தைத் துறந்து, தூர தேசத்திற்குச் சென்று, ஆண்டவருக்கு ஊழியம் செய்ய நினைத்திருந்தார். ஆனால் தன் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கி, புண்ணியவதியான ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடித்தார். அன்றிரவே, தேவ ஏவுதலால் தன் ஊரை விட்டு கீழ்த்திசையிலுள்ள எடேசா என்னும் நகருக்குச் சென்று பரதேசியாய் ஜீவித்து வந்தார். அவரைத் தேடிப் பார்க்கும்படி அவருடைய தந்தையால் அனுப்பப்பட்ட சிலர் அவர் இருந்த ஊருக்குப் போய் அவரைப் பார்த்தபோதிலும் அவர் இன்னாரென்று கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி விட்டார்கள். அலெக்ஸிஸ் அவ்வூரில் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து, பிச்சை எடுத்து உண்டு, தேவதாயார் பீடத்திற்கு முன் இடைவிடாமல் ஜெபித்து வந்தார். ஆனால் அவர் மூலமாய் நடந்த புதுமையால் அவ்வூரார் அவரைப் பெரிதாக மதித்ததினால், அவர் தாழ்ச்சியின் நிமித்தம் கப்பலேறி வேறு ஊருக்குப் புறப்பட்டார். கப்பல் புயல் காற்றில் அகப்பட்டு உரோமையில் கரைசேர்ந்தது. அலெக்சிஸ் அவ்வூரிலுள்ள தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்று பரதேசியான தனக்கு தங்க இடம் கொடுக்கும்படி மன்றாடியதினால், அவர் தந்தை அவரை தன் மகன் என்று அறியாமல் அவருக்கு இடம் கொடுத்தார். அவ்விடத்தில் அவர் வேலைக்காரர்களால் தொந்தரவு செய்யப்பட்ட போதிலும் அதைச் சட்டை செய்யாமல் அர்ச்சியசிஷ்டவராய் வாழ்ந்தார். அவர் மரிப்பதற்குமுன் தன் சரித்திரத்தை ஒரு சீட்டில் எழுதி வைத்துவிட்டு மரணமானார். அவருடைய பெற்றோர் அந்த சீட்டை வாசித்தபின், அந்தப் பரதேசி தங்கள் குமாரனென்று அறிந்து, சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தார்கள்.      

*யோசனை*
செல்வம், பெயர், பெருமை முதலிய உலக நன்மைகள் முற்றிலும் நிலையற்றவை என்றெண்ணி, அவைகளில் பற்றுதல் வைக்காமலிருப்போமாக.

🔵

புனித மார்செலினா (327-397. July 17

ஜூலை 17

புனித மார்செலினா (327-397)
இவர் இத்தாலி நாட்டில் உள்ள கால் என்ற இடத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஓர் அரசு அதிகாரி. இவருடைய சகோதரர்தான் புனித அம்புரோஸ்.

354 ஆம் ஆண்டு இவரது குடும்பம் உரோமைக்குக் குடிபெயர்ந்தது. அங்கு சென்ற ஒரு சில ஆண்டுகளிலேயே இவருடைய பெற்றோர் இறந்து போனார்கள். இதனால் இவரே தன் சகோதரன் அம்புரோசையும், சகோதரி ஒருவரையும் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இறைவேண்டலுக்கும் நோன்புக்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்த இவர், தனது எடுத்துக்காட்டான வாழ்வால் தன் சகோதரர், சகோதரிக்கு முன்மாதிரியாக விளங்கினார்.

இவரது முன்மாதிரியான வாழ்வால் தொடப்பட்ட இவரது சகோதரர் அம்புரோஸ் பின்நாளில் அருள்பணியாளராகவும், தொடர்ந்து மிலன் நகரின் ஆயராகவும் உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 398 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

புனிதர் ஃபிரான்சிஸ் சொலனஸ் ✠(St. Francis Solanus) July 17

† இன்றைய புனிதர் †
(ஜூலை 17)

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சொலனஸ் ✠
(St. Francis Solanus)

புதிய உலகின் அற்புதங்கள் நிகழ்த்துபவர்:
(Wonder Worker of the New World)
பிறப்பு: மார்ச் 10, 1549
மோன்டிலா, கோர்டோபா, ஸ்பெயின்
(Montilla, Córdoba, Spain)

இறப்பு: ஜூலை 14, 1610
லிமா, பெரு, ஸ்பேனிஷ் பேரரசு
(Lima, Viceroyalty of Peru, Spanish Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 20, 1675 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

புனிதர் பட்டம்: டிசம்பர் 27, 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

முக்கிய திருத்தலங்கள்:
சான் ஃபிரான்சிஸ்கோ’வின் மடாலயம், லிமா, பெரு 
(Monastery of San Francisco, Lima, Peru)

நினைவுத் திருநாள்: ஜூலை 14

பாதுகாவல்:
அர்ஜென்டீனா; பொலிவியா; சிலி; பராகுவே; பெரு; பூகம்பங்களுக்கு எதிராக
(Argentina; Bolivia; Chile; Paraguay; Peru; also against earthquakes)

புனிதர் ஃபிரான்சிஸ் சொலனஸ், ஃபிரான்சிஸ்கன் (Franciscans) சபையைச் சேர்ந்த ஸ்பெனிஷ் துறவியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த (South America) மறைப்பணியாளருமாவார். இவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக கௌரவிக்கப்படுகிறார்.

தென் ஸ்பெயின் (Southern Spain) நாட்டின் “கொர்டோபா” (Córdoba) பிராந்தியத்தின் “மோன்டிலா” (Montilla) நகரில் கி.பி. 1549 ஆண்டு, தமது பெற்றோரின் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை பெயர் “மடியோ, சன்செஸ் சொலனோ” (Mateo Sánchez Solano) ஆகும். இவரது தாயாரின் பெயர், “அனா ஜிமேனேஸ்” (Ana Jiménez) ஆகும். இவர், இயேசு சபையினரிடம் (Jesuits) கல்வி கற்றார். ஆனால், ஃபிரான்சிஸ்கன் துறவியரின் எளிமை மற்றும் தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும் வாழ்க்கை முறை, இவரை அவர்கள்பால் ஈர்த்ததாக உணர்ந்தார். தமது இருபது வயதில் “மோன்டிலா’விலுள்ள” (Montilla) ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையில் (Order of Friars Minor) இணைந்தார். புனித லாரன்ஸ் (St. Lawrence Friary) துறவு மடத்தில் புகுநிலை துறவியாக (Novitiate) இணைந்தார். அங்கே தினசரி கடின செபம், நோன்பு, அமைதி ஆகியவை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. சொலனோவும் இந்த நடைமுறையை கடுமையாக பின்பற்றினார். செல்லுமிடமெல்லாம் காலனிகளில்லாமல் வெறும் கால்களுடனேயே சென்றார். மயிரிழைகளாலான மேல்சட்டைகளையே அணிந்தார். இறைச்சி வகைகளை உண்ணுவதை தவிர்த்தார். இதன்காரணமாக, அவரது உடல் நலம் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது.

கி.பி. 1570ம் ஆண்டு, தமது புகுநிலை பயிற்சிகளின் இறுதியில் தமது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார். தென் ஸ்பெயின் நாட்டின் “குவாடல்குய்விர்” (Guadalquivir) ஆற்றுப்படுகையிலுள்ள அண்டலூசியா (Andalusia) மாநிலத்தின் தலைநகரான “செவில்” (Seville) என்ற நகரிலுள்ள “லோரெட்டோ” அன்னை (Friary of Our Lady of Loreto) துறவு மடத்துக்கு குருத்துவ கல்விக்காக அனுப்பப்பட்டார். அங்கே அவர் இறையியல் மற்றும் தத்துவயியல் மட்டுமல்லாது, சங்கீத திறமையையும் வளர்த்துக்கொண்டார். கி.பி. 1576ம் ஆண்டு, ஃபிரான்சிஸ் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

வடக்கு ஆபிரிக்க நாடுகளில் (North Africa) ஆண்டவரின் நற்செய்தியையும் கத்தோலிக்க விசுவாசத்தையும் பிரசங்கித்து, அதன்காரணமாகவே மறைசாட்சியாக மரிக்க விரும்பிய ஃபிரான்சிஸ் சொலனோ, அங்கு செல்வதற்கான அனுமதி வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் அது அவருக்கு மறுக்கப்பட்டது.

இதற்கிடையே அவரது தந்தையார் மரித்துப்போகவே, வயதான நோயுற்ற தமது தாயாரை பராமரிப்பதற்காக இவர் தமது சொந்த ஊரான “மோன்டிலா” (Montilla) சென்றார். அங்கே, தமது தலையீடு மற்றும் செபம் காரணமாக எண்ணற்ற மக்களின் நோய்களை குணமாக்கும் அற்புதம் செய்தார். இதனால், இவருக்கு “அற்புதங்கள் நிகழ்த்துபவர்” (Wonderworker) என்ற பெயர் கிட்டியது. கி.பி. 1583ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கொள்ளை நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் மரண தருவாயிலிருந்தவர்களின் சேவையில், தமது உடல்நிலை பற்றி கவலைப்படாது பணியாற்றினார்.

ஸ்பேனிஷ் பேரரசரான இரண்டாம் ஃபிலிப் (Spanish Emperor Philip II), அமெரிக்க நாடுகளில் நற்செய்தி அறிவிக்க மறைப்பணியாளர்களை அனுப்புமாறு ஃபிரான்சிஸ்கன் சபையினரைக் கேட்டுக்கொண்டார். கி.பி. 1589ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டிலிருந்து “புதிய உலகிற்கு” (New World) கடல் வழியாக பயணம் மேற்கொண்ட ஃபிரான்சிஸ் சொலனோ “பனாமா’வில்” (Panama) இறங்கினார். அங்கிருந்து வேறொரு கப்பலில் பயணப்பட்டு “பெரு” (Peru) சென்றடைந்தார். இப்பயணத்தின்போது, பெரு’வின் சற்று தொலைவில், கடலில் ஒரு புயல் தாக்கியது. அது கப்பலை ஒரு பெரும் பாறையின் மேல் மோதியது. கப்பலின் பணியாளர் குழுவினரும் பயணிகளும் உயிர் தப்புவதற்காக கப்பலிலிருந்து குதித்தனர். ஆனால் ஃபிரான்சிஸ் கப்பலிலிருந்த அடிமைகளுடன் கப்பலிலேயே இருந்தார். மூன்று நாட்களின் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.

அன்றைய “டுக்குமன்” (Tucuman) (தற்போதைய “வடமேற்கு அர்ஜென்ட்டினா” (Northwestern Argentina) மற்றும் “பராகுவே குடியரசு” (Paraguay) ஆகிய அமெரிக்க நாடுகளில் இருபது வருடங்களுக்கும் மேலாக ஃபிரான்சிஸ் மறைப்பணியாற்றினார். வெகு குறுகிய காலத்திலேயே உள்ளூர் மொழிகளை கற்றுக்கொண்டதால் அவர் உள்நாட்டு மக்களால் வரவேற்கப்பட்டார். நோயுற்றோரையும் அடிக்கடி சந்தித்து வந்தார். தமது வயலினில் சங்கீதங்கள் இசைத்தபடியே மறைப்பணியாற்றினார்.

கி.பி. 1601ம் ஆண்டு, பெரு (Peru) நாட்டின் தலைநகரான லிமா’வுக்கு (Lima) அவர் அழைக்கப்பட்டார். அங்கே அவர் ஸ்பேனிஷ் குடியேற்றவாசிகளுக்கு ஞானஸ்நானத்தின் உத்தமத்தைக் காட்ட முயன்றார். உள்நாட்டு மக்கள் ஒடுக்கப்படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் அவர் கடுமையாக உழைத்தார். பெரு’வின் வடமேற்கு கடலோர பகுதியான “ட்ருஜில்லோ” (Trujillo) என்னுமிடத்தில் கி.பி. 1619ம் ஆண்டு ஏற்படவிருந்த பூகம்பத்தை (Earthquake) முன்னறிவித்ததாக கூறப்படுகிறது. கி.பி. 1610ம் ஆண்டு, ஃபிரான்சிஸ் சொலனஸ் லிமாவில் (Lima) மரித்தார்.

† Saint of the Day †
(July 17)

✠ St. Francis Solanus ✠

Wonder Worker of the New World:

Born: March 10, 1549
Montilla, Córdoba, Spain

Died: July 14, 1610
Lima, Viceroyalty of Peru, Spanish Empire

Venerated in: Roman Catholic Church

Beatified: June 20, 1675
Pope Clement X

Canonized: December 27, 1726
Pope Benedict XIII

Major shrine: Monastery of San Francisco, Lima, Peru

Feast: July 17

Patronage:
Argentina; Bolivia; Chile; Paraguay; Peru; Also against earthquakes

Francisco Solano y Jiménez, O.F.M., (also known as Francis Solanus) was a Spanish friar and missionary in South America, belonging to the Order of Friars Minor (the Franciscans), and is honored as a saint in the Roman Catholic Church.

Saint Francis Solano was born in 1549 at Montilla in the province of Andalusia, Spain, of very devout parents,  Matthew Sanchez Solanus and Anna Ximenes.   At the request of his mother, he received the name of Francis in baptism.   She ascribed the fortunate delivery of the child to the intercession of the Seraphic Founder.

The boy grew to be a joy to his parents. While he was pursuing his studies with the Fathers of the Society of Jesus, his modesty, gentleness, and piety merited the esteem of his teachers as well as the friendship of his fellow students.  Francis completed his studies and was ordained to the priesthood, proving his zeal for the salvation of souls during an epidemic of the plague that broke out in the region.  The heroic sacrifices he made during an epidemic were especially admirable. He cared for the corporal and spiritual needs of the sick without any fear of infection. He became afflicted with the malady but was miraculously restored to health.

After his ordination, he was sent by his superiors to the convent of Arifazza as master of novices.

Eventually, Francis was sent to South America in 1589 with several members of the Order, assigned to the provinces of Tucuman (Argentina), Gran Chaco (Bolivia), and Paraguay. Obediently, Francis accepted his assignment, never complaining about the countless hardships the missionaries encountered. Concentrating on the indigenous peoples of the regions, Francis approached the Indians so courteously and kindly that they rejoiced at his very appearance. He learned the difficult native languages in a very short time, and he was miraculously understood wherever he went.

God also gave Saint Francis marvelous power over hearts. Once when he was in the city of La Rioja, a horde of thousands of armed Indians approached in order to slay all Europeans and Christianized Indians. Saint Francis went out to meet them. His words at once disarmed them. All understood what he said although they spoke different languages. They begged him for instructions, and 9,000 were baptized.

After Father Francis had labored 12 years among the Indians, he was re-assigned to the Monastery at Lima, Peru, where he led the Christians of Lima away from wanton laxity, back to the tenets of the faith. Saint Francis processed through the city, calling aloud for the repentance of the inhabitants.  They were—one by one—moved to repent, receive Reconciliation, enact penances, and pray for mercy. Through his efforts, the city was restored.

Saint Francis Solano had labored untiringly for the salvation of souls in South America for twenty years, when God called him to Himself on the feast of his special patron, St. Bonaventure, July 14, 1610. The viceroy and the most distinguished persons of Lima bore the body of the poor Friar Minor to the grave.

Almighty God glorified Saint Francis after death by many miracles, especially in favor of sick children; yes, even dead children were restored to life at his grave. Pope Benedict XIII canonized Saint Francis Solano amid great solemnity in the year 1726.

புனித எட்விக் (St.Hedwig)போலந்து நாட்டு அரசி (Queen of Poland) July 17

இன்றைய புனிதர் : 
(17-07-2020) 

புனித எட்விக் (St.Hedwig)
போலந்து நாட்டு அரசி (Queen of Poland)
இவரின் தந்தை ஹங்கேரி நாட்டு அரசர் அன்ஜோய்(Anjou) என்பவரின் மகள் லூட்விக்(Ludwig). எட்விக் 10 வயது இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். இதனால் தன் தந்தைக்குப் பிறகு எட்விக் ஹங்கேரி நாட்டு அரசியாக முடிசூட்டப்பட்டார். தனது 11 ஆம் வயதில் யாகிலோ(Jagiello) என்பவருக்கு திரு மணம் செய்து வைக்கப்பட்டார். அரசி எட்விக் மிகவும் பக்தியு ள்ளவர். திருமணம் செய்யும் முன் ஞானஸ்நானம் பெறவேண் டுமென்று கூறி, தன் கணவரையும் அதற்கு இணங்கவைத்தார்.
எட்விக்கின் கணவர், எட்விக்கின் பக்தியை பார்த்து பரவசம டைந்தார். இதனால் எட்விக் செபிப்பதற்காக போலந்து நாட் டில் , தன் மறைமாநிலத்தில் ஆலயங்களை கட்டினார். 1388 ஆம் ஆண்டு எட்விக்கும், யாக்கிலியோவும் சேர்ந்து வில்னா (Wilna) என்ற மறைமாநிலத்தை உருவாக்கினர். இவர்கள் ஏழைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் எல்லா உதவிகளையும் செய்து வாழ்வை வழங்கினர். அவர்களுக்காக ஆலயங்களையும் பல கல்வி நிறுவனங்களையும் எழுப்பினார். 1297 ஆம் ஆண்டு தனது 23 ஆம் வயதில், தன் பெயரில் கிராகோவ் மறைமாநிலத்தில் இறையியல் கல்லூரி ஒன்றையும் கட்டினார். பின்னர் எட்விக் என்ற பெயரில் ஒரு துறவற மடத்தையும் தொடங்கினார். திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் திருத்தந்தையாக தேர்ந்தெடுத் தப்பின் 1979 ஆம் ஆண்டு போலந்து நாட்டை முதன்முறையாக பார்வையிடச் சென்றார். அப்போதுதான் எட்விக் என்ற பெயர் கொண்ட புதிய துறவற இல்லத்தைத் திறந்துவைத்தார். இவர் கிராகோவ் நாடு முழுவதும் பல நன்மைகளை செய்து, மக் களை வாழவைத்தார். எட்விக் இறந்தபிறகு கிராக்கோவ் மாநிலத்திற்கு சொந்தமான பேராலயத்தில் அடக்கம் செய்யப் பட்டார்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (17-07-2020)

Saint Hedwig, Queen of Poland

Youngest daughter of King Louis I of Hungary. Because she was great-niece to King Casimir III of Poland, she became Queen of Poland in 1382 upon her father's death. She was engaged to William, Duke of Austria, whom she loved, but broke off the relationship in order to marry Jagiello, non-Christian Prince of Lithuania, at age 13 for political reasons. She offered her misery in this marriage to Christ, and she eventually converted her husband; Jagiello was later known as King Landislaus II of Poland after the unification of the kingdoms, a union that lasted over 400 years. Noted for her charity to all, but especially the sick and poor, and for a revision of the laws to help the poor.

Born :
18 February 1374 in Buda (in modern Budapest, Hungary

Died :
17 July 1399 during in Kraków, Malopolskie, Poland in child birth
• miracles reported at her tomb

Beatified :
31 May 1979 by Pope John Paul II (cultus confirmation)
• 17 December 1996 by Pope John Paul II (decree of heroic virtues)

Canonized :
8 June 1997 by Pope St. John Paul II

---JDH---Jesus the Divine Healer---