புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 July 2020

புனித பிரிஜித்தா (St.Bridget) July 23

இன்றைய புனிதர் :
(23-07-2020)

புனித பிரிஜித்தா (St.Bridget)
இவர் தனது 14 ஆம் வயதி லேயே ஸ்வீடன் நாட்டு அரசர் மாக்னஸ்(Magnes) என்பவரை திருமணம் செய்தார். பின்னர் 8 பிள்ளைகளைப்பெற்று தாயானார். தன் பிள்ளை களை ஆன்மீக காரியங்களில் ஈடுபடுத்தி வளர்த்தார். சிறுவயதிலிருந்தே இறைவன் மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். திருமணத்திற்கு பின்னும் ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டு, பல துறவற சபைகளுக்கு உதவி செய்தார். அப்போது தன் கணவர் இறந்துவிடவே, தன்னை புனித பிரான்ஸ்கன் 3 ஆம் சபையில் இணைத்துக்கொண்டு ஆன்ம வாழ்வில் வளர்ந்து, பிறருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். இளம் வயதிலிருந்தே கடுமையான தவ வாழ்வில் வளர்ந்த இவர் சபையில் சேர்ந்தபின்னும் அதை மிக கடுமையாக கடைபிடித்து வாழ்ந்தார்.


இவர் அரசர் மனைவி என்பதால், கணவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே கொடுக்கப்பட்டது. இவர் அவை அனைத்தையும் வைத்து இவர் பெயரில் ஒரு துறவற மடத்தை நிறுவினார். அதன்பிறகு உரோமைக்கு சென்று, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு ஆன்ம வாழ்வில் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். தான் மேற்கொண்ட கடுந்தவத்தின் காரணமாய், பல நாட்டிற்கு திருப்பயணம் சென்றார். அப்பயணங்களில் பல நூல்களையும் எழுதினார். இளம் வயதிலிருந்தே இறைவனிடமிருந்து தான் பெற்ற காட்சிகள் அனைத்தையும், புத்தகங்களில் வடிவமைத்தார். புனித நாட்டிற்கு பயணம் செய்யும்போது தன்னுடைய மகன்களில் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை கேட்டார். இதனால் மிகவும் மனத்துயர் அடைந்து, புனித நாட்டிற்கு செல்லாமல் மீண்டும் உரோம் நகர் திரும்பினார். தனது மற்ற பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் போகவே, மனத்துயர் அடைந்து நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார். இறக்கும்வரை இறைவனை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டிருந்தார். இவர் தியானம் செய்யும்போது பலமுறை இயேசுவின் திருப்பாடுகளை காட்சியாக கண்டார்

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (23-07-2020)

St. Bridget

St. Bridget was born in the year 1303 in Sweden. Her father was Birger Person, Governor and Law Speaker of the Uppland and a rich land owner and mother Ingeborg. Bridget was related to the King of Sweden of that time through her mother. When she was 14 years old she married Ulf Gudmarsson and they had eight children, four sons and four daughters. One of her daughter was honored later as St. Catherine of Sweden. Her husband died when she was about 41 years. After that incident she hated worldly luxuries and devoted her life to God and in serving the poor and the sick. She became a member of the Third Order of St. Francis. She later founded the Order of the Most Holy Savior which was also called the Brigittines (Bridgetines) for monks and nuns and Pope Urban-V also confirmed the Rule of the Order. The principal house of the Brigittines was in Vadstena, which was later richly endowed by King Magnus Eriksson of Sweden. When she worked against the church abuses in Rome, she was opposed by others. She had visions of Jesus Christ and in one such vision, Infant Jesus as lying on the ground and emitting light himself and the Virgin Mary as blond-haired. She also said that in another vision Jesus appeared to her and said that he received 5480 blows upon his body. She did not return to Sweden and died in Rome on July 23, 1373. Her remains were sent to the monastery at Vadstena in Sweden.

St. Bridget was canonized by pope Boniface-IX on October 7, 1391. Her canonization was confirmed by the Council of Constance in 1415.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூலை 23)

✠ புனிதர் பிரிட்ஜெட் ✠
(St. Bridget of Sweden)

கைம்பெண்/ ப்ரிட்ஜெட்டைன்ஸ் சபை நிறுவனர்:
(Widow/ Foundress of the Bridgettines)

பிறப்பு: கி.பி. 1303
அப்லேன்ட், ஸ்வீடன்
(Uppland, Sweden)

இறப்பு: ஜூலை 23, 1373
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church) 

புனிதர் பட்டம்: அக்டோபர் 7, 1391 
திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபேஸ் 
(Pope Boniface IX)

பாதுகாவல்: ஐரோப்பா (Europe), ஸ்வீடன் (Sweden), விதவையர் (Widows)

நினைவுத் திருநாள்: ஜூலை 23

புனிதர் பிரிட்ஜெட், ஒரு ஆன்ம பலம் கொண்ட கைம்பெண்ணும், புனிதரும் ஆவார். இருபதே வயதான தமது கணவரின் மரணத்தின் பின்னர், “ப்ரிட்ஜெட்டைன்ஸ் அருட்சகோதரியர் மற்றும் துறவியர்” (Bridgettines nuns and monks) எனும் பெயர்கொண்ட துறவற சபையை தோற்றுவித்தார். ஸ்வீடனுக்கு வெளியே, “நெரீஷியாவின் இளவரசி” (Princess of Nericia) என்று அறியப்பட்ட இவர், “புனிதர் கேதரினின்” (St. Catherine of Sweden) தாயாருமாவார். இவற்றின் காரணமாகவே இவர் “ஸ்வீடனின் பிரிட்ஜெட்” (Bridget of Sweden) என்றும் அழைக்கப்படுகின்றார். ஐரோப்பாவின் பாதுகாவலர்களான ஆறு புனிதர்களான "நர்சியாவின் பெனடிக்ட்" (Benedict of Nursia), "சிரில் மற்றும் மெத்தோடியஸ்" (Saints Cyril and Methodius), "சியன்னாவின் கேதரின்" (Catherine of Siena), "எடித் ஸ்டீன்" (Edith Stein) ஆகியோருள் இவரும் ஒருவர் ஆவார்.

“பிர்ஜிட்டா பிர்கேர்ஸ்டாட்டர்” (Birgitta Birgersdotter) எனும் இயற்பெயர் கொண்ட பிரிட்ஜெட், கி.பி. 1303ம் ஆண்டு, ஜூன் மாதம், பிறந்தவர் ஆவார். தமது 14ம் வயதிலே “நார்கே” பிராந்திய பிரபுவான (Lord of Närke) “உல்ஃகுட்மார்ஸ்ஸோன்” (Ulf Gudmarsson) என்பவரை திருமணம் செய்தார். நான்கு ஆண் குழந்தைகளும், நான்கு பெண் குழந்தைகளுமாக 8 குழந்தைகளுக்கு தாயானார். ஸ்வீடனின் புனிதர் கேதரின் (St. Catherine of Sweden) இக்குழந்தைகளில் ஒருவராவார். தன் பிள்ளைகளை ஆன்மீக காரியங்களில் ஈடுபடுத்தி வளர்த்தார். சிறுவயதிலிருந்தே இறைவன் மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். திருமணத்திற்கு பின்னும் ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல துறவற சபைகளுக்கு உதவி செய்தார். இவர் தமது தொண்டுப்பணிகளுக்காக நன்கு அறியப்படுபவர் ஆவார்.

கி.பி. 1341ம் ஆண்டு, பிரிட்ஜெட் தமது கணவருடன் ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பிராந்தியமான “கலீசியாவின்” (Galicia) தலைநகரான “சாண்டியாகோ டி கம்போஸ்டெல்லாவிற்கு” (Santiago de Compostela) புனித பயணம் சென்றார். கி.பி. 1344ம் ஆண்டு, புனித பயணத்திலிருந்து திரும்பி வந்த சிறிது காலத்திலேயே இவரது கணவர் மரித்துப்போனார். கணவரின் மரணத்தின் பின்னர், தம்மை ஃபிரான்ஸிஸ்கன் 3ம் நிலை சபையில் (Third Order of St. Francis) இணைத்துக்கொண்டு ஆன்மீக வாழ்வில் தம்மை அர்ப்பணித்தார். இளம் வயதிலிருந்தே கடுமையான செபம் மற்றும் தவ வாழ்வில் வளர்ந்த இவர், சபையில் சேர்ந்தபின்னும் அதை மிக கடுமையாக கடைபிடித்து வாழ்ந்தார். ஏழை மற்றும் நோயுற்றோருக்கு சேவை புரிவதில் தம்மை முழுதும் அர்ப்பணித்தார்.
பிரிட்ஜெட்டுக்கு 7 வயது முதலே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளின் தரிசனம் கிட்டியது. அவருக்கு கிட்டிய இறைவனின் தரிசனங்களே அவரது நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தன. எப்பொழுதும் ஆன்மீக அன்பைக் காட்டிலும் தொண்டுப் பணிகள் மீது கவனம் செலுத்தினார்.

இவர் அரசர் மனைவி என்பதால், கணவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே கொடுக்கப்பட்டன. இவர் அவை அனைத்தையும் வைத்து தமது பெயரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒரு துறவற மடத்தை நிறுவினார். இதுவே பின்னர் ஒரு சபையாக விரிவடைந்தது.

கி.பி. 1350 – ஒரு ஜூபிலி ஆண்டில் (Jubilee Year), ஐரோப்பா முழுதுமே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில், தைரியமாக ரோம் பயணித்தார். இருப்பினும் அவர் தமது நாடான ஸ்வீடனுக்கு திரும்பவேயில்லை. கடன்களாலும், திருச்சபை முறைகேடுகளுக்கு எதிரான அவரது பணிகளுக்கு எதிர்ப்பினாலும், மகிழ்ச்சி என்பது அவருக்கு இல்லாமலேயே போனது.

இறுதி பயணமாக புனித பூமிக்கு (Jerusalem) பயணம் சென்றிருந்தபோது, தாம் பயணித்த கப்பல் விபத்துக்குள்ளானது, மற்றும் தமது மகன்களில் ஒருவரான “சார்ள்ஸ்” (Charles) இறந்துவிட்ட செய்தி ஆகியன அவரை மரணம் வரை இட்டுச்சென்றன. இதனால் மிகவும் துயரடைந்த பிரிட்ஜெட், புனித நாட்டிற்கு செல்லாமல் மீண்டும் ரோம் திரும்பினார். இறக்கும்வரை இறைவனை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டிருந்த இவர், நோயுற்று மரணமடைந்தார்.