புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 August 2020

மோனிக்கா Monikaபுனித அகுஸ்தினாரின் தாயார் August 27

இன்றைய புனிதர்
2020-08-27
மோனிக்கா Monika
புனித அகுஸ்தினாரின் தாயார்

பிறப்பு
332,
டாகஸ்டே Tagaste, நுமிடியன் Numidien (இன்றைய அல்ஜீரியா)
இறப்பு
அக்டோபர் 387,
ஓஸ்டியா Ostia, இத்தாலி
பாதுகாவல்: கிறித்தவ பெண்கள், தாய்மார்கள்

புனித மோனிக்கா சிறு வயதிலேயே பத்திரிசியுஸ் (Patricius) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் பல குழந்தைகளுக்கு தாயானார். அவர்களில் ஒருவர்தான் புனித அகுஸ்தீன். தன் மகன் மனம் போன போக்கில் வாழ்ந்ததால், அவரை மனந்திருப்ப, எப்போதும் கண்ணீருடன் இறைவேண்டல் செய்தார். தன் கணவரின் இறப்பிற்கு பின் தன் குழந்தைகளுக்காகவும், பல வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார். அகுஸ்தீனின் நல்வாழ்விற்காக ஆயர்களை சந்தித்து, தன் மகனுக்கு, ஆன்மீக காரியங்களில் வளர்ந்து, நல்ல கிறிஸ்துவனாக வாழ உதவும்படி மன்றாடினார்.

தன் கணவரையும், தன் மாமியார், மகன் அனைவரையும், தன் இடைவிடா செபத்தினாலேயே, மனமாற்றி, திருமுழுக்கு பெறவைத்து, கிறிஸ்துவர்களாக மாற்றினார். இறுதிமூச்சுவரை திருச்சபையின் மக்களாக வாழ வேண்டுமென்று தன் மகன்களுக்கு அறிவுறுத்தினார். இவர் கார்த்தேஜ்(Carthej) என்ற நகரிலிருக்கும் புனித சிப்ரியன் ஆலயத்தில் அமர்ந்து செபிக்கும்போது, தன் மகன் அகுஸ்தீன் உரோம் நகர் சென்றார். இதையறிந்த அத்தாய், மகனைக் காண ஓடோடி கப்பலேறி வந்துகொண்டிருக்கும்போது, சுகமில்லாம் இறந்துவிட்டார்.


செபம்:
துயரப்படுவோர்க்கு ஆறுதல் அளிப்பவரே எம் தந்தையே! தன் மகன் அகுஸ்தீனின் மனமாற்றத்திற்காக பரிவன்புடன் கண்ணீர் சிந்திய புனித மோனிக்காவைப்போல, நாங்களும் எங்கள் பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி, உமதருளால் மனமாற்றம் பெற்றிட உதவி செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

அன்னை மரியின் முத்திபேறுபெற்ற டோமினிக் Dominikus a Matre Dei CP
சபைத்தலைவர்
பிறப்பு: 22 ஜூன் 1792 விதர்போ Palanzano bei Viterbo, இத்தாலி
இறப்பு: 27 ஆகஸ்டு 1849 இங்கிலாந்து
முத்திபேறுபட்டம்: 27 அக்டோபர் 1963, உரோம், திருத்தந்தை ஆறாம் பவுல்

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 27)

✠ புனிதர் மோனிக்கா ✠
(St. Monica)

தாய், கைம்பெண், உறுதிமொழி ஏற்காத மறைப்பணியாளர்:
(Mother, Widow, Religious Lay Woman)

பிறப்பு: கி.பி. 332
தகாஸ்தே, நுமிடியா, ரோமப் பேரரசு
(Thagaste, Numidia, Roman Empire)

இறப்பு: கி.பி. 387
ஓஸ்தியா, இத்தாலி, ரோமப் பேரரசு
(Ostia, Italy, Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

முக்கிய திருத்தலம்:
தூய அகுஸ்தினார் திருத்தலம், ரோம், இத்தாலி
(Basilica of Sant'Agostino, Rome, Italy)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 27

பாதுகாவல்:
திருமண பிரச்சினைகள், ஏமாற்றமடையும் குழந்தைகள், பாலியல் வன்கொடுமை அல்லது துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், (வாய்மொழி) துஷ்பிரயோகம் மற்றும் உறவினர்களின் மனமாற்றம், பொய்க் குற்றச்சாட்டினாலும் வதந்திகளாலும் பாதிக்கப்பட்டவர்கள், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்

புனிதர் மோனிக்கா, “ஹிப்போவின் மோனிக்கா” (Monica of Hippo) என்று அறியப்படுகிறவரும், ஆதி கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவர், புனிதரும், மறைவல்லுநருமான புனிதர் அகுஸ்தீனுடைய (St. Augustine of Hippo) தாயாருமாவார். புனிதர் அகுஸ்தீன் எழுதிய சுயசரித நூலில் (Confessions), தம் மனமாற்றம் பற்றி எழுதுவதோடு அந்த மனமாற்றத்துக்குத் துணைபுரிந்த தன் அன்னையாகிய மோனிக்காவின் புனிதத்தையும் வெகுவாகவே போற்றியுள்ளார்.

வாழ்க்கை குறிப்பு:
மோனிக்காவின் பெயரிலிருந்து அவர் “பேர்பர்” (Berber) இனத்தவர் என நம்பப்படுகின்றது. இவர் இளவயதிலேயே “பேட்ரீசியஸ்” (Patricius) என்னும் “ரோம-பேகனியருக்கு” திருமணம் செய்துவைக்கப்பட்டார். “பேட்ரீசியஸ்”, அல்ஜீரியாவில் அரசு சார்ந்த பதவி வகித்து வந்தார். “பேட்ரீசியஸ்” வன்முறை, கோபம் போன்ற குணங்களைக் கொண்டிருந்ததோடு ஒழுங்கீன பழக்கவழக்கங்கள் கொண்டவராக இருந்தார். இதனால் கிறிஸ்தவரான மோனிக்காவின் மணவாழ்வு அமைதியின்றி இருந்தது. மோனிகாவின் உதாரகுணம், செயல்பாடுகள் மற்றும் பிரார்த்தனை பழக்கங்கள் பேட்ரிசியஸைக் கோபமூட்டின. ஆனாலும், அவர் மோனிக்காவை மரியாதையுடனேயே நடத்தினார் என்று கூறப்படுகிறது.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூத்தவர் “அகுஸ்தீன்” (Augustine); இரண்டாமவர் “நவீஜியஸ்” (Navigius); மூன்றாவது பெண்குழந்தை “பெர்பெச்சுவா” (Perpetua). தன் கணவரின் அனுமதி கிடைக்காததால் இவர்களுக்கு மோனிக்காவால் திருமுழுக்கு கொடுக்க இயலவில்லை. இளவயதினில் அகுஸ்தீன் நோய்வாய்ப்பட்டபோது, திருமுழுக்கு கொடுக்க இணங்கினாலும், உடல் நலம் தேறியதும், பேட்ரிசியஸ் தன் மனதை மாற்றிக் கொண்டார்.

அகுஸ்தீன் “மடௌரஸ்” (Madauros) நகருக்கு கல்விகற்க அனுப்பப்பட்டார். இவ்வேளையில் பேட்ரீசியஸ் மனமாறி கிறிஸ்தவரானார். பேட்ரீசியஸ் மனமாறிய சில நாட்களிலேயே இறந்தார். தமது பதினேழு வயதில், “கார்தேஜ்” (Carthage) நகருக்கு அணியிலக்கணம் (Rhetoric) கற்க சென்ற அகுஸ்தீன், அங்கே ஒழுக்கமற்ற வாழ்வை வாழத் தொடங்கினார்.

அங்கே அகுஸ்தீன் “மனிச்செஸ்ம்” (Manichaeism) எனும் புதிய மதத்தைத் தழுவி தம் தாயாரை மனம் நோகச் செய்தார். மகனுடைய போக்கினால் வேதனையுற்ற மோனிக்கா கிறிஸ்தவ சமயத் தலைவராகிய ஒரு புனித ஆயரிடம் சென்று ஆலோசனை கேட்டார். அவர் மோனிக்காவிடம், "இவ்வளவு கண்ணீர் வழிந்தோடக் காரணமாக இருந்த மகன் ஒருநாள் மனம் திரும்புவார்" என்று கூறிய சொற்கள் வரலாற்றில் சிறப்புப் பெற்றவை.

அகுஸ்தீன் அன்றைய உலகின் கலாச்சார மையமாக இருந்த ரோம் நகருக்கு யாரிடமும் சொல்லாமல் பயணமாகிச் சென்றார். இதை அறிந்த மோனிக்கா மகனைத் தேடி ரோமுக்குச் சென்றார். அதற்குள் அகுஸ்தீன் மிலன் (Milan) சென்றுவிட்டார். அங்கேயும் மோனிக்கா மகனைப் பின்தொடர்ந்தார். மிலன் நகர பேராயரான அம்புரோசால் (Ambrose) மனமாற்றம் அடைந்த அகுஸ்தீன், 17 வருட எதிர்ப்புக்குப் பின் திருமுழுக்கு பெற்றார். அகுஸ்தீன் எழுதிய சுயசரித நூலாகிய " ஒப்புதல்கள்” (Confessions) என்னும் புத்தகத்தில் தம் இளமைக்கால அனுபவங்களையும் தாம் தவறான வழியில் சென்றதையும் பின் தன் தாயின் இறை வேண்டுதலால் மனம் மாறியதையும் விரிவாக விளக்கியுள்ளார்.
இறப்பு:
இத்தாலி நாட்டை விட்டு ஆப்பிரிக்காவுக்குப் பயணமாகச் செல்லுவதற்கு அகுஸ்தீனும் மோனிக்காவும் ரோம் நகரின் துறைமுகமாகிய “ஓஸ்டியா” (Ostia) நகரில் காத்திருந்தபோது மோனிக்கா நோய்வாய்ப்பட்டு மரித்தார். ஓஸ்டியா நகரிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை சிறிதுகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், 6ம் நூற்றாண்டில் மோனிக்காவின் மீப்பொருள்கள் ஓஸ்டியாவில் புனித அவுரா என்பவர் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு புனித அவுரா கல்லறை அருகே மோனிக்கா அடக்கம் செய்யப்பட்டார்.
† Saint of the Day †
(August 27)

✠ St. Monica ✠

Mother, Widow, Religious Laywoman:

Born: 332 AD
Thagaste, Numidia, Roman Empire

Died: 387
Ostia, Italy, Roman Empire

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Anglican Communion
Oriental Orthodox Church
Lutheranism

Major Shrines: Basilica of Sant'Agostino, Rome, Italy

Feast: August 27

Patronage:
Difficult marriages, Disappointing children, Victims of adultery or unfaithfulness, victims of (verbal) Abuse, and Conversion of relatives, Manaoag, Pangasinan, Philippines, Don Galo, Parañaque City, Santa Monica, California, United States, Saint Monica University, Buea, Cameroon, Pinamungajan, Cebu, Philippines, St. Monique Valais, Binangonan, Rizal, Santa Monica Parish Church (Angat), Bulacan, Mexico, Pampanga, Sta. Monica Parish Church, Pavia, Iloilo, Sta. Monica Parish Church, Hamitic, Antique, Sta. Monica Parish Church, Pan-ay, Capiz

Saint Monica also is known as Monica of Hippo, was an early Christian saint and the mother of St. Augustine of Hippo. She is remembered and honored in most Christian denominations, albeit on different feast days, for her outstanding Christian virtues, particularly the suffering caused by her husband's adultery, and her prayerful life dedicated to the reformation of her son, who wrote extensively of her pious acts and life with her in his Confessions. Popular Christian legends recall Saint Monica weeping every night for her son Augustine.

Because of her name and place of birth, Monica is assumed to have been born in Thagaste (present-day Souk Ahras, Algeria). She is believed to have been a Berber on the basis of her name. She was married early in life to Patricius, a Roman pagan, who held an official position in Tagaste. Patricius had a violent temper and appears to have been of dissolute habits; apparently, his mother was the same way. Monica's alms, deeds, and prayer habits annoyed Patricius, but it is said that he always held her in respect.

Monica had three children who survived infancy: sons Augustine and Navigius and daughter Perpetua. Unable to secure baptism for them, she grieved heavily when Augustine fell ill. In her distress she asked Patricius to allow Augustine to be baptized; he agreed, then withdrew this consent when the boy recovered.

But Monica's joy and relief at Augustine's recovery turned to anxiety as he misspent his renewed life being wayward and, as he himself tells us, lazy. He was finally sent to school at Madauros. He was 17 and studying rhetoric in Carthage when Patricius died.

Augustine had become a Manichaean at Carthage; when upon his return home he shared his views regarding Manichaeism, Monica drove him away from her table. However, she is said to have experienced a vision that convinced her to reconcile with him.

At this time she visited a certain (unnamed) holy bishop who consoled her with the now-famous words, "the child of those tears shall never perish." Monica followed her wayward son to Rome, where he had gone secretly; when she arrived he had already gone to Milan, but she followed him. Here she found Ambrose and through him, she ultimately had the joy of seeing Augustine convert to Christianity after 17 years of resistance.

In his book Confessions, Augustine wrote of a peculiar practice of his mother in which she "brought to certain oratories, erected in the memory of the saints, offerings of porridge, bread, water, and wine." When she moved to Milan, the bishop Ambrose forbade her to use the offering of wine, since "it might be an occasion of gluttony for those who were already given to drink". So, Augustine wrote of her:

In place of a basket filled with fruits of the earth, she had learned to bring to the oratories of the martyrs a heart full of purer petitions, and to give all that she could to the poor--so that the communion of the Lord's body might be rightly celebrated in those places where, after the example of his passion, the martyrs had been sacrificed and crowned.
~ Confessions 6.2.2

Mother and son spent 6 months of true peace at Rus Cassiciacum (present-day Cassago Brianza) after which Augustine was baptized in the church of St. John the Baptist in Milan. Africa claimed them, however, and they set out on their journey, stopping at Civitavecchia and at Ostia. Here death overtook Monica, and Augustine's grief inspired the finest pages of his Confessions.

Saint Monica was buried at Ostia, and at first seems to have been almost forgotten, though her body was removed during the 6th century to a hidden crypt in the church of Santa Aurea in Ostia. Monica was buried near the tomb of St. Aurea of Ostia. It was later transferred to the Basilica of Sant'Agostino, Rome.
*_🌿புனித மோனிகாவுக்கு செபம்_*

புனித மோனிகாவே !  மிகச்சிறந்த கத்தோலிக்க அன்னைக்கு  உதாரணமே !  'நமது இறைப்பணியை நாம் நமது குடும்பத்தில் இருந்து ஆரம்பித்தல் வேண்டும்' என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவரே ! உமது  ஆழமான நம்பிக்கை மிகுந்த ஜெபங்களின்  மூலம்   இறைவனுக்கும், உமது  குடும்ப உறவுகளுக்கும் பாலமாக இருந்து ஆன்மாக்களை மீட்ட புனிதரே !  மகனின் ஒழுங்கற்ற வாழ்வின் மூலம் வேதனையுற்ற உமது மனம் "இவ்வளவு கண்ணீர் வழிந்தோட காரணமாக இருந்த மகன் ஒரு நாள் மனம் திரும்புவார் " என்ற ஆயரின் ஆறுதல் மிகுந்த வார்த்தைகள் உம்மை திடப்படுத்தியதே ! மகன் மனம் மாற முப்பது ஆண்டுகள் கண்ணீர் சிந்தி மன்றாடிய உமது ஆழமான விசுவாசத்திற்கு பரிசாக உமது மகன் அகுஸ்தீனாரை இறைவன் புனிதர் நிலைக்கு உயர்த்தினாரே!  அசைக்க முடியாத அந்த ஆழமான விசுவாசத்தை எங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தந்தருள வேண்டி எங்களுக்காக மன்றாடும். தனது மகனுக்காக, மகளுக்காக கண்ணீர் சிந்தும் எண்ணற்ற தாய்மார்களின் வேதனையுற்ற உள்ளங்களுக்கு ஆண்டவர் ஆறுதலும்,  நம்பிக்கையும் அளித்திட  வேண்டி அவர்களுக்காக மன்றாடும். எங்கள் பிள்ளைகள் ஞானத்தில் சிறந்து விளங்கிடவும், எந்நாளும் ஆண்டவர் வழியில் நடந்திடவும் விண்ணகத்தில் இருந்து எங்களுக்காக தொடர்ந்து மன்றாடும்  அம்மா.! 

ஆமென் .

புனித யூத்தலியா (ஆகஸ்ட் 27)

புனித யூத்தலியா 

(ஆகஸ்ட் 27)

இவர் சிசிலியைச் சார்ந்தவர். இவருக்கு ஒரு சகோதரர் இருந்தார்.
இவருடைய தாயார் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் மூன்று புனிதர்கள் தோன்றி அவரிடம், "நீ கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெற்றால், உன்னிடமுள்ள இரத்தப்போக்கு நின்றுவிடும்" என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்கள்.

கனவில் தோன்றிய மூன்று புனிதர்கள் தன்னிடம் சொன்னதுபோன்று யூத்தலியாவின் தாயார் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் பெற்றார். இதனால் அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.

தன்னுடைய தாயிடமிருந்து இரத்தப்போக்கு நின்றதையும், அவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதையும் நேரடியாகப் பார்த்த யூத்தலியாவும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டார்.

இச்செய்தி யூத்தலியாவின் சகோதரனுக்குத் தெரியவந்தது. அவன் தன் தாயிடம் "நீங்கள் கிறிஸ்துவை மறுதலியுங்கள்" என்று சொல்ல, அவர் அதற்கு முடியாது என்று சொல்ல, அவன் அவரைத் தாக்கத் தொடங்கினான்; ஆனால் அவர் அவனிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த யூத்தலியா, "நீ ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய்?" என்று கேட்ட பொழுது, பதிலுக்கு அவன் "அப்படியானால் நீயும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறாயா?" என்றான். இவர் "ஆமாம், நான் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்" என்று சொன்னதும், அவன் இவரைக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தான்.

இவ்வாறு யூத்தலியா ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கைக்காகத் தன்னுயிர் துறந்தார்