புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

06 September 2020

ஆண்டென் நகர் புனிதர் பெக்கா ✠(St. Begga of Andenne)செப்டம்பர் 6

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 6)

✠ ஆண்டென் நகர் புனிதர் பெக்கா ✠
(St. Begga of Andenne)
கைம்பெண், நிறுவனர், மடாலய தலைவர்:
(Widow, Founder, and Abbes)

பிறப்பு: ஜூன் 2, 613
லீஜ், வாலூன் பிராந்தியம், பெல்ஜியம்
(Liege, Walloon Region, Belgium)

இறப்பு:  டிசம்பர் 17, 693
ஆண்டென், நாமூர் மாகாணம், வாலூன் பிராந்தியம், பெல்ஜியம்
(Andenne, Province of Namur, Walloon Region, Belgium)

அடக்கம் செய்யப்பட்ட இடம்:
தூய பெக்காவின் கல்லூரி தேவாலயம், ஆண்டென், நாமூர் மாகாணம், வாலூர் பிராந்தியம், பெல்ஜியம்
(Saint Begga's Collegiate Church in Andenne, Province of Namur, Walloon Region, Belgium)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 6

பாதுகாவல்: பேகின்ஸ் (Beguines)

புனிதர் பெக்கா, பெல்ஜியம் (Belgium) நாட்டிலுள்ள "ஆண்டென்" (Andenne) நகரில், ஏழு ஆலயங்களையும், ஒரு பள்ளியையும் கட்டி நிறுவியவர் ஆவார்.

இவர், "ஆஸ்ட்ரேஸியா அரண்மனையின்" (Palace of Austrasia) மேயரான "பெப்பின்" (Pepin of Landen) என்பவரது மூத்த மகளாவார். இவரது தாயாரின் பெயர், "இட்டா" (Itta of Metz) ஆகும்.

புனிதர் கெட்ரூட் (Gertrude of Nivelles) என்பவரின் மூத்த சகோதரியான இவர், "மெட்ஸ்" ஆயரான (Bishop of Metz) "அர்னால்ஃப்" (Arnulf) என்பவரின் மகனான "அன்ஸேகிஸேல்" (Ansegisel) என்பவரை மணமுடித்தார்.

இவரது கணவர் "அன்செஜிசலின்" (Ansegisel) மரணத்தின் பின்னர், அப்போதைய யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய பாரம்பரியங்களின்படி, முக்காடுள்ள ஆடையை (Veil) தேர்வுசெய்துகொண்ட இவர், ரோம் நகருக்கு புனித யாத்திரை மேற்கொண்டார்.

புனித யாத்திரையிலிருந்து திரும்பியதும், ஏழு தேவாலயங்களை நிறுவினார். மற்றும் மியூஸ் நதிக்கரையிலுள்ள (Meuse River) (ஆண்டென் சுர் மியூஸ்) (Andenne sur Meuse) ஆண்டென் (Andenne) நகரில், ஒரு கான்வென்ட் பள்ளியையும் கட்டினார். அங்கு தனது எஞ்சிய நாட்களை மடாலய தலைவராக கழித்த இவர், அங்கேயே கி.பி. 693ம் ஆண்டு, டிசம்பர் மாதம், பதினேழாம் தேதி, மரித்தார்.

இவர், பெல்ஜியம் நாட்டின், நாமூர் மாகாணத்திலுள்ள, ஆண்டென் நகரத்தின் தூய பெக்காவின் கல்லூரி தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவரை கத்தோலிக்க திருச்சபையும், கிழக்கு மரபுவழி திருச்சபையும் புனிதராக ஏற்கின்றன.

† Saint of the Day †
(September 6)

✠ St. Begga of Andenne ✠

Widow, Founder, and Abbes:

Born: June 2, 613
Liege, Walloon Region, Belgium

Died: December 17, 693
Andenne, Province of Namur, Walloon Region, Belgium

Place of Burial:
Saint Begga's Collegiate Church in Andenne, Andenne, Province of Namur, Walloon Region, Belgium

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Feast: September 6

Patronage: Beguines

Saint Begga was the daughter of Pepin of Landen, Mayor of the palace of Austrasia, and his wife Itta of Metz.

On the death of her husband, Ansegisel, she took the veil, founded seven churches, and built a convent at Andenne on the Meuse River (Andenne Sur Meuse) where she spent the rest of her days as abbess.

She was buried in Saint Begga's Collegiate Church in Andenne.

Life:
The daughter of Pepin of Landen and his wife, Itta, Begga was the older sister of St Gertrude of Nivelles. She married Ansegisel, son of Arnulf, Bishop of Metz, and had three children: Pepin of Heristal, Martin of Laon, and Clotilda of Heristal, who married Theuderic III of the Franks. Ansegisel was killed sometime before 679, slain in a feud by his enemy Gundewin. Begga made a pilgrimage to Rome, and upon her return built seven churches at Andenne on the Meuse.

Veneration:
She is commemorated as a saint on her feast days, 6 September and 17 December.

Some hold that the Beguine movement which came to light in the 12th century was actually founded by St Begga; and the church in the beguinage of Lier, Belgium, has a statue of St Begga standing above the inscription: St. Begga, our foundress.

The Lier beguinage dates from the 13th century. Another popular theory, however, claims that the Beguines derived their name from that of the priest Lambert le Bègue, under whose protection the witness and ministry of the Beguines flourished.

புனித எல்யூடேரியஸ் St. Eleutheriusநினைவுத்திருநாள் : செப்டம்பர் 6

இன்றைய புனிதர் :
(06-09-2020)

புனித எல்யூடேரியஸ் 
St. Eleutherius
நினைவுத்திருநாள் : செப்டம்பர் 6
பிறப்பு : (தெரியவில்லை)

இறப்பு : 585, உரோம், செயிண்ட் ஆண்ரூ ஆலயம் (St. Andrew’s Church, Rome)

எல்யூடேரியஸ் அற்புதமான எளிமையான வாழ்வை வாழ்ந்தார். மனசாட்சியின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தூய ஆவியானவர் காட்டிய வழியில் சென்றார். ஸ்பொலேட்டோ (Spoleto) என்ற நகரிலிருந்த புனித மார்க்கின் துறவற மடத்தில் சேர்ந்து குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான சில ஆண்டுகளில் துறவற மடத்திற்கு மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். கடவுளின் அருளால் பல அற்புதங்களை செய்தார்.

இவர் தன் மடத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியை ஆற்றினார். அப்போது ஒருநாள் சாத்தான் இவரை சோதிக்க வந்தது. ஆனால் இவரின் இறைபக்தியை கண்டு சாத்தான் பயந்து ஓடிவிட்டது. ஆனால் மீண்டும் சாத்தான் குழந்தையின் வடிவில் வந்து சோதித்தது. பின்னர் ஒரு குழந்தைக்குள் புகுந்தது. அக்குழந்தை சாத்தான் கடுமையாக தாக்கி, நோயை உண்டாக்கியது. இதனைக் கண்ட எல்யூடேரியஸ் மற்றும் அவரது குழும உறுப்பினர்களும் இணைந்து தவமிருந்தும் கடினமான நோன்பிருந்தும் செபித்தனர். இறைவேண்டலால் சாத்தானின் பிடியிலிருந்து குழந்தை விடுபட்டது. ஆனால் குழந்தை மிகவும் சோர்ந்து பலவீனத்துடன் காணப்பட்டது. சாகும்தறுவாயில் குழந்தை இருந்தது இதனால் அக்குழந்தையை எல்யூடேரியஸ் செயிண்ட் ஆன்ரூஸ் பேராலயத்திற்கு எடுத்து சென்றார்.

இவர் அப்பேராலயத்தில் கடின நோயிலிருந்து இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டு குழந்தையை பழைய நிலைக்கு கொண்டு வந்தார். அக்குழந்தை மீண்டும் புந்து உயிர்பெற்றது. அதிலிருந்து இவர் தொடர்ந்து கண்ணீர் வடித்து திருச்சபைக்காகவும், மக்களுக்காகவும் மன்றாடினார். வாழ்நாள் முழுவதும் நோன்பிலிருந்து பல அருள் கொடைகலை பெற்றார். அதிகமாக நோன்பிருந்ததால் உடல் முழுவதும் சக்தி இழந்து காணப்பட்டார். இதனால் தன் தலைவர் பதவியை விட்டு விலகி செபிப்பதில் மட்டுமே இறக்கும்வரை தன் வாழ்வை கழித்தார்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (06-09-2020)

St. Eleutherius

wonderful simplicity and spirit of compunction were the distinguishing virtues of this holy man. He was chosen abbot of St. Mark's near Spoleto, and favored by God with the gift of miracles. A child who was possessed by the devil, being delivered by being educated in his monastery, the Abbot said one day: "Since the child is among the servants of God, the devil dares not approach him." These words seemed to savor of vanity, and thereupon the devil again entered and tormented the child.

The Abbot humbly confessed his fault, and fasted and prayed with his whole community till the child was again freed from the tyranny of the fiend. St. Gregory, the Great, not being able to fast on Easter-eve on account of extreme weakness, engaged this Saint to go with him to the church of St. Andrew's and offer up his prayers to God for his health, that he might join the faithful in that solemn practice of penance.

Eleutherius prayed with many tears, and the Pope, coming out of the church, found that he was enabled to perform the fast as he desired. It is also said that St. Eleutherius raised a dead man to life. Resigning his abbacy, he died in St. Andrew's monastery in Rome about the year 585.

---JDH---Jesus the Divine Healer---