இன்றைய புனிதர் :
(03-09-2020)
திருத்தந்தை பெரிய கிரகோரியார் St.Gregory the Great, Pope and Doctor of the Church
மறைவல்லுநர்
பிறப்பு : 540, உரோம்
இறப்பு : 12 மார்ச் 604
பாதுகாவல்: ஆசிரியர்கள், மாணவர்கள், தொற்று நோயிலிருந்து
இவர் தனது 30 ஆம் வயதில் உரோம் நகரின் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடவுள் இவரை தம் பணிக்கு அழைப்பதை உணர்ந்த கிரகோரியார், அப்பதவியிலிருந்து விலகி புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். மிகுந்த பக்தியோடு பயிற்சிகளை பெற்று குருவானார். பின்னர் கான்ஸ்டாண்டினோபிளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றினார். 590 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பேதுருவின் அரியணைக்கு உயர்த்தப்பெற்றார். அப்பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து இடைவிடாமல் திருச்சபைக்காக உழைத்தார். எச்சூழலிலும் நேர்மையை கடைபிடித்து ஆட்சி செய்தார். தன்னால் இயன்றவரை ஏழை எளியவர்களுக்கு உதவினார். சிசிலி என்ற தீவில் பல துறவற மடங்களை தொடங்கி இறைப்பணியை வளர்த்தெடுத்தார். தன் ஆட்சியிலிருந்த சிறைப்பட்ட மக்களை மீட்டார். திருச்சபையில் நேர்மையின்றி, நெறிகெட்ட பதவியிலிருந்த பணியாளர்களையும், குருக்களையும் பணியிலிருந்து நீக்கினார். அப்போது "லம்பர்ட்" என்ற இனத்தை சேர்ந்த அரக்கர்கள் கிறிஸ்துவ மக்களையும், திருச்சபையையும் கடுமையாக தாக்கினார். அவர்களை மிக தைரியத்துடன் கிரகோரியார் அடக்கினார். தன் பதவி காலத்தில் யூத மக்களுக்கு முன்னிடம் கொடுத்தார். அக்காலத்தில் பிளேக் நோய் நாடெங்கும் பரவி வந்ததால், பெருமளவில் அம்மக்களுக்கு உதவினார். அம்மக்களிடையே திருமறையை பரவ செய்து அதை நிலைநாட்டினார். இவர் பல நூல்களை எழுதி அதன் வழியாகவும் திருமறையை வளர்த்தார்.
செபம்:
அன்பான இறைவா! அறிவு, திறமை, பேர், புகழ் என்று அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாதவர்போல் வாழ்ந்து உமக்காக மட்டுமே வாழ்ந்த புனித பெரிய கிரகோரியாரை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நீதியோடும், நேர்மையோடும் ஆட்சி செய்து, உமக்குரியவராக வாழ்ந்த அவரின் முன்மாதிரியை பின்பற்றி நாங்களும் வாழ உமதருள் தாரும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 3)
✠ புனிதர் முதலாம் கிரகோரி ✠
(St. Gregory I)
64வது திருத்தந்தை/ மறைவல்லுனர்:
(64th Pope/ Doctor of the Church)
பிறப்பு: கி.பி. 540
ரோம் நகரம், பைசன்டைன் பேரரசு
(Rome, Byzantine Empire)
இறப்பு: மார்ச் 12, 604 (அகவை 64)
ரோம் நகரம், பைசன்டைன் பேரரசு
(Rome, Byzantine Empire)
ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
நினைவுத் திருவிழா: செப்டம்பர் 3
பாதுகாவல்:
இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்
திருத்தந்தை முதலாம் கிரகோரி, பொதுவாக புனிதர் பெரிய கிரகோரி (Saint Gregory the Great) என்று அழைக்கப்படுகிறார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக கி.பி. 590ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 3ம் தேதி முதல் தமது மரணம் வரை ஆட்சியில் இருந்தவர் ஆவார். இவர், தமக்கு முன்பிருந்த திருத்தந்தையர்களைக் காட்டிலும் தமது இலக்கிய படைப்புகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார். ரோம் நகரில், பேகன் இன மக்களை பெரிய அளவில் கிறிஸ்தவ மதத்திற்கு மனமாற்றம் செய்ய தூண்டும் பணியில் புகழ் பெற்றவர் ஆவார்.
இவர் கிறிஸ்தவ வழிபாட்டினை சீரமைத்து ஒழுங்கு படுத்தியதால் நடுக்காலம் முழுவதும் இவர் கிறிஸ்தவ வழிபாட்டின் தந்தை என அழைக்கப்பட்டார்.
இவரே துறவற மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை ஆவார். இவர் மறைவல்லுநராகவும் (Doctor of the Church), இலத்தீன் தந்தையர்களுல் (Latin Fathers) ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார்.
எதிர் சீர்திருத்தத் திருச்சபையினைச் (Protestant reformer) சேர்ந்த “ஜான் கேல்வின்” (John Calvin) இவரைப் பற்றிக் கூறும்போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார்.
இவரது சரியான பிறந்த தேதி தெரியவில்லையெனினும், இவர் பிறந்த வருடம், கி.பி. 540 என அறியப்படுகிறது. இவரது பெற்றோர் இவருக்கு “கிரகோரியஸ்” (Gregorius) என பெயரிட்டனர். திருச்சபைக்கு நெருங்கிய தொடர்புகலுள்ள “பேட்ரிஷியன்” (Patrician) குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை “கோர்டியானஸ்” (Gordianus) “அதிகார சபை அங்கத்தினராகவும்” (Senator) பின்னர், ரோம் நகரின் நிர்வாக அலுவலராகவும் (Prefect) இருந்துள்ளார். கிரகோரியின் தாயார் “சில்வியா” (Silvia) ஆவார்.
கல்வியில் சிறந்த கிரகோரி, இலக்கணம், அணியிலக்கணம், அறிவியல், சட்டம், சரித்திரம், கணிதம், சங்கீதம் ஆகியவற்றில் சிறப்பான தேர்வு கண்டிருந்தார்.
கிரகோரியின் தந்தையின் மரணத்தின் பின்னர், இவர் தமது குடும்ப இல்லத்தை துறவற மடமாக மாற்றி, அதனை அப்போஸ்தலர் புனிதர் ஆண்ட்ரூசுக்கு (Apostle Saint Andrew ) அர்ப்பணித்தார். (கிரகோரியின் மரணத்தின் பின்னர், அது “புனித கிரகோரி மேக்னோ அல் செலியோ” (San Gregorio Magno al Celio) என்று மறு அர்ப்பணம் செய்யப்பட்டது.)
கிரகோரி கோப குணம் கொண்டவர் என்றும் குற்றங்களையும் பாவங்களையும் எப்போதுமே மன்னிக்கும் குணமற்றவர் என்றும் அறியப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒருமுறை மரணப் படுக்கையிலிருந்த துறவி ஒருவர், தாம் முன்னர் ஒருமுறை, மூன்று தங்கத் துண்டுகளை திருடிய குற்றத்துக்காக பாவமன்னிப்பு வேண்டினார். கிரகோரியோ, அந்த துறவியை நண்பர்களற்று தன்னந்தனியாக மரிக்கும் நிலைக்கு தள்ளினார். அவரது உடலையும், தங்கக் காசுகளையும் ஒரு உரக்குவியலில் எரியச் சொன்னார். உன் தங்கக் காசுகளை நீயே உன் நரகத்துக்கு கொண்டுபோ என்றார். பாவத்துக்கான தண்டனைகள், ஒரு மனிதனின் மரணப்படுக்கையிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என கிரகோரி நம்பினார். இவ்வளவு செய்த கிரகோரி, அந்த துறவியின் மரணத்தின் பின்னர், இறுதித் தீர்ப்பில் உதவுவதற்காக, அவருக்காக 30 திருப்பலிகளை நிறைவேற்றினார்.
கிரகோரி, துறவு வாழ்க்கையில் ஆழ்ந்த மதிப்பு வைத்திருந்தார். ஒரு துறவி, இறைவனின் பார்வையை தீவிரமாக தேடிச் செல்பவராக இருக்கவேண்டும் என நினைத்தார்.
கி.பி. 604ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் தேதி மரித்த திருத்தந்தை முதலாம் கிரகோரி, தூய பேதுருவின் பேராலயத்தில் (St. Peter's Basilica) அடக்கம் செய்யப்பட்டார்.
Saint of the Day : (03-09-2020)
St. Gregory the Great
St. Gregory was born in Rome about the year 540 A.D. and his birth name was Gregorius. His father was one Gordianus, a wealthy senator and mother Silvia. His father later renounced the world and became one of the seven deacons of Rome. Emperor Justin appointed Gregory as the Chief Magistrate of Rome in the year 574 A.D. He built six monasteries in Sicily and founded a seventh one in his own home at Rome. He worked as ambassador of the Pope Pelagius-II in the Imperial Court in Constantinople. After the death of Pope Pelagius-II St. Gregory was elected Pope unanimously by the clergy and other people on September 9, 590. The major policy of his pontificate was preaching catholic faith and elimination of all deviations from catholic faith. He sent missions, often called Gregorian Missions to evangelize the pagan Anglo-Saxons of England. He was very simple and always used the words servant of the servants of God as the papal title in official documents. England people regarded St. Gregory as the source of their conversion. He wrote about 850 letters during his pontificate and also wrote a book called Pastoral Care explaining the duties and qualities of Bishops. His papacy ended by his death on March 12, 604.
In the Middle Ages St. Gregory was respected and revered as the father of Christian worship. He was respected as a saint immediately after his death by the general populace. He is the patron of teachers, students, musicians and singers.
---JDH---Jesus the Divine Healer---