புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 August 2020

✠ புனிதர் பர்த்தலமேயு ✠(St. Bartholomew) August 24

இன்றைய புனிதர் : 
(24-08-2020) 

திருத்தூதர் பார்த்தலமேயு (நத்தனியேல்) Apostle Bartholomew
மறைசாட்சி
பிறப்பு 
முதல் நூற்றாண்டு, 
கானா Cana, கலிலேயா
    
இறப்பு 
முதல் நூற்றாண்டு, 
சிரியா
பாதுகாவல்: ஃப்ராங்க்பர்ட், கொடிய நோய்களை தீர்க்க

இவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் பெற்றபின் இந்தியாவிற்கு சென்று மறைப்பணி செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. இவர் பிலிப்பு என்ற சீடரின் நண்பர். இவர் ஆர்மேனிய நாட்டிற்கு சென்று, அங்கு விசுவாசத்தை பரப்பினார் என்றும், அதன்பிறகுதான் தலைவெட்டப்பட்டு இறந்தார் என்றும் கூறப்படுகின்றது. 

யோவான் நற்செய்தி 1:45-50 -ல் பின்வரும் இறைவாக்குகள் இவரை பற்றி மேலும் கூறுகிறது. "பிலிப்பு நத்தனியேலை போய்ப்பார்த்து, இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தை சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவின் அவர்" என்றார். அதற்கு நத்தனியேல், நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார். இயேசு, "பிலிப்பு உம்மை கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிட பெரியவற்றை காண்பீர்" என்றார்.

செபம்:
இரக்கமே உருவான தெய்வமே! உமது விசுவாசத்தைப் பரப்பி, அதன் பலனாக தன் உயிரை ஈந்த அப்போஸ்தலர் பார்த்தலோமேயு வழியில் சென்று, உம் விசுவாசம் இவ்வுலகில் நிலைக்க, உழைப்பதற்கு நல்ல மனதை எமக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (24-08-2020) 

St. Bartholomew

St. Bartholomew was one of the twelve apostles of Jesus Christ. He is the same person of Nathaniel mentioned in the Gospel of John. When Philip told Nathaniel about Jesus, We saw the Messiah as told in scriptures, who is the Jesus of Nazareth, Nathaniel then told Can anything good come from Nazareth. Then Philip introduced Nathaniel to Jesus and Jesus told about him Israelite……..incapable of deceit. Bartholomew is mentioned as one of the disciples of Jesus in gospel of Mathew (10: 1 - 4), in the gospel of Mark (3: 13-19) and in the gospel of Luke (6: 12-16). He is mentioned as Nathanael in the gospel of John (1: 45-51). Eusebius of Caesarea and St. Jerome says that Bartholomew went on missionary work to India also. Then along with Apostle Jude, Bartholomew went to Armenia in the first century. By his missionary work, Bartholomew converted Polymius, the king of Armenia to Christianity. But the king’s brother Astyages ordered the execution of Bartholomew. He was martyred in Armenia (Albanopolis) by crucifixion, head downward. St. Bartholomew and St. Jude are considered as the patrons of the Armenian Apostolic Church.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 24)

✠ புனிதர் பர்த்தலமேயு ✠
(St. Bartholomew)

திருத்தூதர், மறைசாட்சி:
(Apostle and martyr)

பிறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டு
கானா, யூதேயா, ரோமப் பேரரசு
(Cana, Judaea, Roman Empire)

இறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டு
அல்பனோபோலிஸ், ஆர்மேனியா
(Albanopolis, Armenia)
ஆர்மேனியாவில் தோல் உரிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்

ஏற்கும் சமயம்:
கிழக்கு அசிரிய திருச்சபை
(Assyrian Church of the East)
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரோனைட் கத்தோலிக்க திருச்சபை
(Maronite Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிகன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
இஸ்லாமியம்
(Islam)

முக்கிய திருத்தலங்கள்: 
புனித பர்த்தலமேயு மடம், ஆர்மேனியா

நினைவுத் திருவிழா: ஆகஸ்டு 24

சித்தரிக்கப்படும் வகை: 
கத்தி, அவரது உரிக்கப்பட்ட தோல்

பாதுகாவல்: 
இறைச்சி வெட்டுநர், புத்தகம் தைப்பவர்கள், மால்ட்டா, ஆர்மேனியா, நரம்பியல் நோய்கள், செருப்பு தைப்பவர்

புனிதர் பர்த்தலமேயு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். யோவான் எழுதிய நற்செய்தியின் முதலாம் அதிகாரத்திலும், 21ம் அதிகாரத்திலும் நத்தனியேல் (Nathanael) என்று அடையாளம் காணப்படும் இவர், பிலிப்புவால் கிறிஸ்து இயேசுவுக்கு அறிமுகம் செய்விக்கப்படுகிறார். இவர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார். இவரின் பெயர் "டாலமியின் (Ptolemy) மகன்" எனவும், "உழுசால் மகன்" எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர்.

இவரது நினைவுத் திருவிழா நாள் ஆகஸ்டு 24.
யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்' என்று இவரைக் குறித்துக் கூறினார்.

மேலும் மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர்.

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி. இந்தியாவில் இவர் மறைப்பணியாற்றினார் என்பதற்கான இரண்டு பண்டைய சாட்சியங்கள் உள்ளன. நான்காம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்த சரித்திர ஆசிரியரும், ஆயரும், இறையியலாளருமான “யூசேபியஸ்” (Eusebius of Caesarea) ஒருவர் ஆவார். அதன்பின்னர், நான்காம் நூற்றாண்டின் இறுதியில், துறவியும், திருச்சபையின் மறை வல்லுனருமான புனிதர் “ஜெரோம்” (Saint Jerome) ஆவார்.

பண்டைய நகரமான கல்யாண் (Kalyan) என்று அறியப்பட்ட கொங்கன் கடலோரப் (Konkan coast) பகுதியில் உள்ள பம்பாய் (Bombay) பகுதியே புனிதர் பர்த்தலோமின் மறைப்பணிக்கான துறை என்று அருட்தந்தை: (பெருமலில்” (Fr.C. Perumalil SJ) மற்றும் “மோராசெஸ்” (Moraes) கூறுகிறார்கள்.

பாரம்பரியபடி, இவர் ஆர்மேனியாவில் (Armenia) உள்ள “அல்பநோபிளிஸ்” (Albanopolis) எனுமிடத்தில் உயிரோடு தோலுரிக்கப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர், ஆர்மேனிய அரசனான “போலிமியஸ்” (Polymius) என்பவனை கிறிஸ்தவ மறைக்கு மனம் மாற்றியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அரசனது சகோதரனான “அஸ்ட்யாஜெஸ்” (Astyages) பர்த்தலமேயுவின் மரண தண்டனைக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், இவர் மறைசாட்சியாக மரித்த இடத்தில், பெரிய ஆர்மேனியாவின் “வஸ்புரகன்” (Vaspurakan Province) பிராந்தியத்தில் புனித பர்த்தலமேயு (Saint Bartholomew Monastery) துறவு மடம் கட்டப்பட்டது. இது தற்போது தென்கிழக்கு துருக்கியில் (Southeastern Turkey) உள்ளது.