† இன்றைய திருவிழா †
(நவம்பர் 9)
✠ தூய இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் நேர்ந்தளிப்பு ✠
(Dedication of Archbasilica of St. John Lateran)
திருவிழா நாள்: நவம்பர் 9
புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்பது ரோம மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும். ரோம மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் “Archbasilica of St. John Lateran” என்று வழங்கப்படுகிறது.
இப்பேராலயம் நேர்ந்தளிக்கப்பட்ட விழா, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது.
பழமையான கோவில்:
புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், கத்தோலிக்க திருச்சபையின் பேராலயங்களிலெல்லாம் மிகப் பழமையானதும் முதன்மையானதும் ஆகும். ரோம் நகரில் சேலியோ குன்றின் அருகில் அமைந்துள்ள இக்கோவில், உலகமனைத்திற்கும் "தாய்க் கோவிலாகவும்" "தலைமைக் கோவிலாகவும்" கருதப்படுகிறது. இக்கோவிலுக்குத் தலைமைக் குருவாக உள்ள கர்தினால், திருத்தந்தையின் பதில் குருவாக இங்கு பணிபுரிகிறார்.
கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான கோவில்”
இப்பெருங்கோவிலின் முகப்பில் "Christo Salvatori" என்னும் சொற்கள் பதிக்கப்பட்டு்ள்ளன. இதற்கு "மீட்பர் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது" என்பது பொருள். இக்கோவில் ரோம் நகரில் அமைந்திருந்தாலும், வத்திக்கான் நகர்-நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது ஆகும்.
இலாத்தரன் அரண்மனை:
கோவில் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் "இலாத்தரானி" என்னும் குடும்பத்திற்கு உரிய அரண்மனையாக இருந்தது. எனவே "இலாத்தரன்" என்னும் சொல் இக்கோவில் பெயரோடு இணைக்கப்பட்டது. “டாசிட்டஸ்” (Tacitus) என்னும் பண்டைய ரோம வரலாற்றாசிரியரின் "வரலாற்றுக் குறிப்புகள்" (ஆண்டு: கி.பி. 65) கூற்றுப்படி, இலாத்தரானி குடும்பத்தினரான “ப்ளாவுசியஸ்” (Plautius Lateranus) என்பவர் ஆட்சியாளராகப் பொறுப்பேற்று, “நீரோ” (Nero) மன்னனுக்கு எதிராக நிகழ்ந்த சதியில் பங்கேற்றார் என்றும், அதனால் அவருடைய நிலத்தையும், சொத்தையும், மன்னன் அரசுடைமை ஆக்கினார் என்றும் தெரிகிறது. ப்ளாவுசியசுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் “செக்ஸ்டியஸ் இலாத்தரனஸ்” (Sextius Lateranus) என்பவர் அவ்விடத்தில் சீரும் சிறப்பும் மிக்க ஒரு அரண்மனை கட்டினார். அதன் புகழ் எவ்வளவு ஓங்கியது என்றால் அக்கட்டடம் இருந்த இடம் ரோம் நகரின் ஒரு முக்கிய அடையாளத்தளமாக மாறியது. நடுக்காலத்திலும் நவீன காலத்திலும் இன்றும் "இலாத்தரன்" என்னும் அடைமொழி நிலைத்துவிட்டது.
முதல் கோவில் கட்டப்படுதல்:
“ஃப்ளாவியஸ் வலேரியஸ் காண்ஸ்டண்டைன்” என்னும் பெயர் கொண்ட “முதலாம் காண்ஸ்டண்டைன்” (Emperor Constantine I) பேரரசர், கி.பி. 313ம் ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கு மதச் சுதந்திரம் அளித்தார். அவரே இலாத்தரன் குடும்ப நிலத்தில் ஒரு பெருங்கோவில் எழுப்ப வழிசெய்தார். “திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர்” (Pope Sylvester I), அக்கோவிலை கி.பி. 324ம் ஆண்டில், (அல்லது 318ம் ஆண்டில்) "தூய்மைமிகு மீட்பராம் கிறிஸ்துவுக்கு" நேர்ந்தளித்தார். ஒன்பதாம் நூற்றாண்டில் திருத்தந்தை “மூன்றாம் செர்ஜியுஸ்” (Pope Sergius III), இக்கோவிலைத் திருமுழுக்கு யோவானுக்கும் அர்ப்பணித்தார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் “திருத்தந்தை இரண்டாம் லூசியஸ்” (Pope Lucius II), அதே கோவிலை “நற்செய்தியாளர் தூய யோவானுக்கும்” (St. John the Evangelist) அர்ப்பணித்தார்.
திருத்தந்தையின் ஆட்சி மையம்:
கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை திருத்தந்தையர்களின் ஆட்சி மையம் இலாத்தரானில்தான் இருந்தது. இலாத்தரன் கோவில்தான் ரோம ஆயரும் திருச்சபைத் தலைவருமான திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் இருந்த கோவிலாகவும் விளங்கியது. இலாத்தரானில்தான் திருச்சபையின் ஐந்து பொதுச்சங்கங்கள் நிகழ்ந்தன.
இலாத்தரானில் அமைந்த பழைய கோவிலின் வடிவமைப்பு இன்றைய கோவிலின் வடிவமைப்பைப் பெரிதும் ஒத்திருந்தது. கோவில் ஐந்து நீள்வாக்குப் பிரிவுகளையும் பிரிவுச் சுவர்களையும் கொண்டிருந்தது.
சதுர வடிவில் அமைந்த பெருங்கோவில் ஐந்து நீள்வாக்குப் பிரிவுகளாக அமைக்கப்பட்டது. கொரிந்து கலைப்பாணியில் அமைந்த பளிங்குத் தூண்கள் அப்பிரிவுகளைப் பகுத்தன. நடு நீள்வாக்குப் பகுதியின் இரு பக்கங்களிலும் பக்கத்துக்கு 15 தூண்கள், வலது மற்றும் இடது நீள்வாக்குப் பக்கங்களில் வளைவுகளைத் தாங்குவதற்கு 21 தூண்கள் என்று அமைக்கப்பட்டன. நடு நீள்வாக்குப் பகுதியின் இறுதியில் ஒரு பெரும் உள்கூரை அமைக்கப்பட்டது. நடுக்காலத்தில் இக்கோவில் கலையழகு மிக்க ஒரு வழிபாட்டிடமாக விளங்கியது.
நான்காம் நூற்றாண்டிலிருந்து இக்கோவில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் கண்டது. கி.பி. 410ம் ஆண்டு “அலாரிக்” என்பவரின் தலைமையில் “விசிகோத்து” இனத்தவர் கோவிலின் உயர்மேடையை எடுத்துச் சென்றுவிட்டனர். “ஜென்செரிக்” என்பவரின் தலைமையில் “வாண்டல்” இனத்தவர் கோவிலின் செல்வங்களை கி.பி. 455ம் ஆண்டில் கொள்ளையடித்தனர்.
கோவில் கைநெகிழப்பட்ட காலம்:
பதினான்காம் நூற்றாண்டில் திருத்தந்தை ரோமில் இலாத்தரன் தலைமையிடத்தை விட்டுவிட்டு, ஃபிரான்ஸ் நாட்டில் "அவிஞ்ஞோன்" என்னும் நகருக்கு மாற்றினார். கோவிலும் கைநெகிழப்பட்டது.
கி.பி. 1378ம் ஆண்டில், “திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி”, பொறுப்பேற்றதும் "அவிஞ்ஞோன்" நகரை விட்டு ரோம் வந்தார். ஆனால், இலாத்தரன் கோவிலும் தலைமையிடமும் சீரழிந்த நிலையில் இருந்ததால் திருத்தந்தை வத்திக்கானுக்குச் சென்றார். அதன் பிறகு கோவிலும், அதனுள் அமைந்த திருமுழுக்கு அளிப்பிடமும், சீர்ப்படுத்தப்பட்டன. திருத்தந்தையின் தலைமை இடமாக விளங்கிய இலாத்தரன் அரண்மனையில் சீரமைப்பு வேலைகள் நடைபெறவில்லை.
பதினாறாம் நூற்றாண்டில், ரோம் நகர் சூறையாடப்பட்ட பிறகு, “திருத்தந்தை மூன்றாம் பவுல்” திருத்தந்தை அரண்மனைக் கட்டடத்தின் பொருள்களைக் கொண்டு கோவிலின் சீரமைப்பைத் தொடர்ந்தார். “திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ்”, அரண்மனைக் கட்டடத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு புதியதொரு கட்டடத்தை எழுப்பினார். அதுவே இன்று ரோம் மறைமாவட்டத்தின் அலுவலக மையமாக உள்ளது.
கோவிலின் மறுமலர்ச்சிக் காலம்:
கி.பி. 1600ம் ஆண்டில், “திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்”, ஜூபிலி ஆண்டு கொண்டாடப் பணித்தார்.
கி.பி. 1650ம் ஆண்டு, புனித இலாத்தரன் யோவான் கோவில் அழகுற சீரமைக்கப்பட்ட ஆண்டு ஆகும். “ஃபிரான்செஸ்கோ பொர்ரோமீனி” என்னும் கட்டடக் கலைஞரின் மேற்பார்வையில், “திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட்” ஆட்சியில் கோவிலின் நடு நீள்வாக்குப் பகுதியும் இரு பக்க நீள்வாக்குப் பகுதிகளும் சீரமைக்கப்பட்டன.
திருத்தந்தை ஹிலாரியுஸ் (கி.பி. 461-468) என்பவர் கோவிலின் உள் அமைந்த திருமுழுக்கு அளிப்பிடத்தின் அருகே மூன்று சிறு வழிபாட்டிடங்களை வடிவமைத்தார். அவை: புனித திருமுழுக்கு யோவான், புனித நற்செய்தி யோவான், திருச்சிலுவை என்பனவாகும். கோவிலுக்கு பரோக்கு கலைப் பாணி அளிப்பதற்காக திருச்சிலுவை வழிபாட்டிடம் ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்னும் திருத்தந்தையால் அகற்றப்பட்டது.
ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருத்தந்தை மூன்றாம் லியோ என்பவர் கோவிலின் உள்கூரையைச் செம்மைப்படுத்தி, பீட உள்கூரையின் சாளரங்களைப் பன்னிறக் கண்ணாடிகளால் அணிசெய்தார். பத்தாம் நூற்றாண்டில் கோவிலின் முன் மண்டபத்தின் ஒரு பகுதியில் புனித தோமா வழிபாட்டிடம் கட்டப்பட்டது. அங்குதான் முற்காலங்களில் திருத்தந்தையர் வழிபாட்டு ஆடைகளை அணிவது வழக்கம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருமுழுக்கு அளிப்பிடத்தின் முன் மண்டபத்தில் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அதற்கேற்றவாறு கோவிலின் கூரை சீரமைக்கப்பட்டது. கோவில் முகப்பில் கற்பதிகை ஓவியங்கள் சேர்க்கப்பட்டன.
கி.பி. 1300ம் ஆண்டு "ஜூபிலி ஆண்டு" என்று கொண்டாடப்பட்டது. புனித இலாத்தரன் பெருங்கோவிலில் அந்த ஜூபிலி அறிவிப்பைத் “திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்” வெளியிட்டார். இதையொட்டி கோவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.\
† Feast of the Day †
(November 9)
✠ Dedication of the Lateran Basilica ✠
Feast Day: November 9
Major Papal, Patriarchal and Roman Archbasilica Cathedral of the Most Holy Savior and Saints John the Baptist and the Evangelist in Lateran, Mother, and Head of All Churches in Rome and in the World:
The Cathedral of the Most Holy Savior and of Saints John the Baptist and the Evangelist in the Lateran, also known as the Papal Archbasilica of St. John is the cathedral church of the Diocese of Rome in the city of Rome, Italy and therefore houses the cathedra, or ecclesiastical seat, of the Bishop of Rome, the Pope.
November 9 commemorates the day of the dedication of the Basilica of the Most Holy Savior, called the mother and seat of all the churches, the Lateran Church. It is the only church in the Catholic world with the title of Archbasilica.
Comments:
I have before me a historic note that reads: On November 9, 324, Pope Sylvester I presided over the official dedication of the Basilica of Lateran. In 315 Emperor Constantine had ordered the construction of the Basilica.
You remember that Constantine was the Emperor who freed the Church and took her out of the Catacombs. So, consistent with that gesture, he ordered the construction of the Basilica.
That site had been the Palace of the Lateran family in Rome for a long time; then, because of its location on top of a hill, it became a fort for the Roman imperial cavalry bodyguards. Through his wife Fausta, the property fell into the hands of Constantine, who transformed it, first, into a palace for his family; then, after donating it to the Church, he made it a Basilica. Pope Sylvester consecrated the Basilica to the Holy Savior in 324 and it became the Cathedral of the Pope.
You can imagine the emotion of Catholics, who, after centuries of persecution and the life of the catacombs, finally saw a grandiose basilica raised up that affirmed the splendour of the Catholic cult in the most important city of the world. You can envision their joy seeing the public attestation that Our Lord Jesus Christ was the true Savior of mankind.
In Rome itself, the adoration for Our Lord became manifest before the eyes of all and was received with admiration, while the pagan cult was proscribed and outlawed. It was something similar to what the first moments of the Reign of Mary will be. Few things can give more an idea of what the true Catholic joy is than that episode.
The historical note continues: For a long time, the Popes made their residence in a Palace that was an extension of the Basilica. The Basilica became their cathedral, and for this reason, was called the mother and the head of all churches of the world. Two fires ravaged the Archbasilica in the 14th century and it fell into deterioration when the Popes moved to Avignon. Pilgrims who visited Rome would find the churches there filled with grass and cattle grazing inside them. Chickens, doves and other animals were living inside the churches and using the altars as shelters…
You see the rotations of History. The Catholic Church leaves the catacombs radiant. She raises an immense building; afterwards, inside that building cows come to graze because the Shepherds are in Avignon. You see the turns of History.
The note continues: Later the Basilica was re-consecrated, this time in honour to St. John the Baptist and St. John the Evangelist.
Thus, the Basilica of the Holy Savior has these two secondary patron saints.
Whoever visits Rome notices a remarkable difference between the Lateran Basilica and the Vatican Basilica. St. Peters' Basilica has a new and showy air, with all the splendour of the Renaissance. Looking at it we have the idea of a wedding feast.
The Lateran Basilica is much less sensational. Much more discrete, it has a tone of the old nobility, with its grandeur and peace. It is, as it were, conscious of its own dignity. This is an ambience that St. Peter Basilica's does not have.
St. Peter's Basilica is anxious to make a grand show to win the admiration of those who visit it. Not so with the Lateran Basilica. It is conscious of its own dignity, it stands stately and solemn as if it were saying: “I am like this naturally. I do not embellish myself, I have no need for artifices; I am what I am. But being what I am, I am worthy of respect and admiration.” This is the impression we have of this Basilica. An impression that is totally different from that we receive looking at St. Peter's Basilica.
These edifices show two different faces of the Church. In one period of History, we see her organic spontaneity, dignity, and composure; then, the winds of the Renaissance enter bringing a different spirit and another way of presenting herself.
Today, unfortunately, in front of the Lateran Basilica we find a crossroads of streets with very intense traffic, which breaks the normal recollection of that edifice. So, we find the Basilica with her distinction as Queen, a very genuine, maternal Queen. Then, right in front of it is a frenetic movement of buses, cars, and scooters, a multitude of people and rabbles of tourists from Europe and the entire world. Very few of them really look at the Basilica. People pass by in a hurry thinking of other things.
Today, almost no one understands that Queen because people have lost the capacity to understand it. They do not have eyes to see and the intelligence to understand. Most curiously, even the European tourists who go there specifically to visit it, look at it, but what they really admire is the “paradise” of technology of the external world.
Here we have two Europes in conflict: old Europe represented by the Lateran Basilica, and the new Europe of the adorers of modern life.
This lack of admiration portends the eventual demolition of the monument. First, the decision will be made to transform the monument into an institution of charity or a museum. Then, for practical reasons, someone will propose: “Why don’t we demolish this building and replace it with a 50-story-building? It will be much more profitable for everyone, including the Church… It can still house all the museum objects with plenty of room left for many other good purposes.” The building disappears and is replaced by something without any history.
Is this not what is being prepared for the Lateran Basilica, and even for the Vatican Basilica? Qui lo sà? Who knows?