† இன்றைய புனிதர் †
(ஜூன் 7)
✠ புனிதர் அன்டோனியோ மரிய கியனேல்லி ✠
(St. Antonio Maria Gianelli)
ஆயர்/ நிறுவனர்:
(Bishop/ Founder)
பிறப்பு: ஏப்ரல் 12, 1789
செரெட்டா, மான்ட்டுவா, மிலன்
(Cereta, Mantua, Duchy of Milan)
இறப்பு: ஜூன் 7, 1846 (வயது 57)
பியசென்ஸா, எமிலியா-ரோமாக்னா, பார்மா
(Piacenza, Emilia-Romagna, Duchy of Parma)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 19, 1925
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
புனிதர் பட்டம்: அக்டோபர் 21, 1951
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)
நினைவுத் திருநாள்: ஜுன் 07
பாதுகாவல்:
போப்பியோ மறைமாவட்டம் (Diocese of Bobbio), வல் டி வர (Val di Vara)
புனிதர் அன்டோனியோ மரிய கியனேல்லி, இத்தாலியின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆயரும், “தோட்ட அன்னையின் மகள்கள்” (Daughters of Our Lady of the Garden) மற்றும் “புனித அல்போன்சஸ் மறைப்பணியாளர்கள்” (The Missionaries of Saint Alphonsus) ஆகிய சபைகளை நிறுவியவரும் ஆவார்.
கி.பி. 1789ம் ஆண்டு, விவசாயிகளின் கிராமமொன்றில் பிறந்த அன்டோனியோ மரிய கியனேல்லி’யின் தந்தை பெயர் “கியாகொமோ” (Giacomo) ஆகும். இவரது தாயார் பெயர் “மரிய கியனேல்லி” (Maria Gianelli) ஆகும். ஐந்து சகோதரர்களுடன் பிறந்த இவர் ஒரு விதிவிலக்கான மாணவர் ஆவார். இவரது குடும்பத்தினர் தங்கியிருந்து பணியாற்றிய பண்ணையின் உரிமையாளரே இவரது குருத்துவ படிப்புக்காக செலவு செய்தார்.
1807ம் ஆண்டு, நவம்பர் மாதம், தமது 18 வயதில் “இறையியல் சித்தாந்தம்” மற்றும் “புனித வழிபாட்டு முறை” ஆகியவற்றை கற்க ஆரம்பித்து முனைவர் பட்டம் வென்றார். 1812ம் ஆண்டு, மார்ச் மாதம், “ஜெனோவாவின் கர்தினால் பேராயர்” (Cardinal Archbishop of Genoa) “கியுசெப் மரிய ஸ்பினா” (Giuseppe Maria Spina) அவர்களால் திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், அதே 1812ம் வருடத்திலேயே அதே கர்தினால் பேராயராலேயே குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். முறையான வயதாகாத காரணத்தால் இவருக்கு சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. குருத்துவம் பெற்ற இவர், “மான்ட்டுவா” (Mantua) என்ற பங்கில் பங்குத்தந்தையாக நியமனம் பெற்று பணியாற்றினார்.
1826ம் ஆண்டு, “சியாவாரி’யின்” (Chiavari) தலைமை குருவாக நியமிக்கப்பட்டார். 1837ம் ஆண்டு வரை பதினோரு வருடங்கள் அதே பதவியிலிருந்தார். ஆண்களுக்கான “புனித அல்போன்சஸ் மறைப்பணியாளர்கள்” (The Missionaries of Saint Alphonsus) என்ற சபையை 1827ம் ஆண்டு நிறுவினார். அந்த சபை 1848ம் ஆண்டு வரை நீடித்தது. 1829ம் ஆண்டு, ஜனவரி மாதம், 12ம் நாளன்று, “தோட்ட அன்னையின் மகள்கள்” (Daughters of Our Lady of the Garden) என்ற பெண்களுக்கான சபையை நிறுவினார். ஏழைப் பெண்களுக்கு கல்வி கற்பிக்கவும் நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவும் இந்த சபை பணியாற்றுகிறது. இதன் சேவைகள், இன்றும் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் (Europe, Asia and the United States of America) ஆகிய உலக நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இவர் மரித்து பல வருடங்களின் பின்னர் 1882ம் ஆண்டு, ஜூன் மாதம், 7ம் நாளன்று, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இச்சபைக்கு முறையாக அங்கீகாரமளித்தார்.
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (Pope Gregory XVI) அவர்கள் இவரை “போப்பியோ” மறைமாவட்ட ஆயராக (Bishop of Bobbio) 1837ம் ஆண்டு, நியமித்தார்.
சுமார் ஒரு வருட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், ஜூன் 1846ம் ஆண்டு, ஜூன் மாதம், 7ம் நான்று, மரித்தார்.
† Saint of the Day †
(June 7)
✠ St. Antonio Maria Gianelli ✠
Bishop/ Founder:
Birth name: Antonio Maria Gianelli
Born: April 12, 1789
Cereta, Mantua, Duchy of Milan
Died: June 7, 1846 (Aged 57)
Piacenza, Emilia-Romagna, Duchy of Parma
Venerated in: Roman Catholic Church
Beatified: April 19, 1925
Pope Pius XI
Canonized: October 21, 1951
Pope Pius XII
Feast: June 7
Patronage: Bobbio, Val di Vara, Figlie di Nostra Signora del Giardino
Saint Antonio Maria Gianelli was an Italian Roman Catholic prelate who served as the Bishop of Bobbio from 1837 until his death. He was also the founder of the Figlie di Nostra Signora del Giardino and the Missionaries of Saint Alphonsus. Gianelli was dedicated to the educational needs of his people and catered to their spiritual and material needs as well; he was on hand to aid the ill and the poor and made evangelization a focus to his episcopal mission. He likewise preached missions and became known for his charisma and his eloquence.
Gianelli's beatification was celebrated in 1925 and he was later canonized as a saint in late 1951. Since 4 June 2000, he has been the patron saint for both Bobbio and Val di Vara.
Life:
Antonio Maria Gianelli was born on 12 April 1789 - on Easter Sunday - to Giacomo and Maria Gianelli; he had five brothers. His mother often taught people catechism and his father was known for his efforts in peace-making in their town. He grew up in a small village of farmers and he was an exceptional student - so much so that the owner of the farm he lived on - Nicoletta Rebizzo - paid for his studies for the priesthood.
He commenced those studies in November 1807 in Genoa where he began his studies in dogmatics and liturgical practice and earned his doctorate. He had been made a subdeacon in September 1811 and was granted the rather unusual privilege of being allowed to preach while still a subdeacon due to his exceptional eloquence being a well-noted fact. The Cardinal Archbishop of Genoa Giuseppe Maria Spina ordained him to the diaconate in mid-1812. He was ordained to the priesthood in 1812 (in Genoa at the church of Nostra Signora del Carmine) and had to receive special dispensation since he was not at the canonical age required for ordination. Gianelli celebrated his first Mass in Cerreta. He served as a parish priest in Mantua after he was ordained. Spina sent Gianelli in 1812 to teach at Carcare in Savona. In February 1813 he was made the vice-parish priest of the San Matteo church in Genoa and on 23 May 1814 joined the Congregation of the Suburban Missionaries of Genoa. From September 1815 until 1817 he served as a professor at the college of the Padri Scolopi in Carcare before becoming a professor of rhetoric in November 1816 in Genoa. He remained there until 1822 when he was granted another position that he would hold for a decade. His future students included the future Archbishop of Genoa Salvatore Magnasco and Venerable Giuseppe Frassinetti.
Gianelli was made the archpriest of the church of Saint John the Baptist in Chiavari on 21 June 1826 after Luigi Lambruschini appointed him to that position; he held that position until 1837. From November 1826 he taught in Chiavari teaching his studies theological subjects as well as Latin and Greek. He was the founder of the Missionaries of Saint Alphonsus in 1827 for men and that order lasted from that point to 1856 while the Oblates of Saint Alphonsus lasted from its founding in 1828 until 1848 when it had to be dissolved. He also founded the Figlie di Nostra Signora del Giardino on 12 January 1829. It was a teaching order for females that worked with the sick. The order received formal papal approval from Pope Leo XIII on 7 June 1882 which came a few decades after Gianelli's death.
Pope Gregory XVI appointed him as the Bishop of Bobbio in 1837 and he received his episcopal consecration after his appointment. He had been preaching a mission in February 1838 when he learned that the appointment had been made. He restored devotion to Saint Columbanus in his diocese and conducted two diocesan synods. He visited each parish in his diocese on a regular basis. Gianelli spent long periods in the confessional in order to accommodate the endless stream of people seeking absolution.
In April 1845 he started to show signs of tuberculosis that had not been diagnosed from the onset; he spent the next month in recuperation where he seemed to regain his strength for a time. He seemed to recover during this period but his illness returned in the spring of 1846 and his condition started to deteriorate at a rapid pace. He died on 7 June 1846 due to a serious fever combined with tuberculosis; he had been recuperating in Piacenza at the time. His order still continues its work in Europe and Asia and has also expanded to the United States of America. On 21 October 2001, a statue made out of white Carrara marble was dedicated to him.