புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 September 2020

St. Rogellus. September 16

St. Rogellus

Feastday: September 16
Death: 852

Martyr with his disciple, Servus Dei. He was a monk in Spain who was put to death at Cordoba by the Moors for publicly attacking the Muslim faith. His young disciple suffered with him.

The Martyrs of Córdoba were forty-eight Christian martyrs who were executed under the rule of Muslim conquerors in what is now southern Spain. At the time the area was known as Al-Andalus. The hagiography describes in detail the executions of the martyrs for capital violations of Islamic law, including apostasy and blasphemy. The martyrdoms related by Eulogius (the only contemporary source) took place between 851 and 859.

With few exceptions, the Christians knowingly risked execution by making public statements proclaiming their Christianity in the presence of Muslims. Some of the martyrs were executed for blasphemy after they appeared before the Muslim authorities and denounced Muhammad, while others who were Christian children of Muslim–Christian marriages publicly proclaimed their Christianity and thus were executed as apostates. (Coope 1995)[page needed]. Still others who had previously converted to Islam denounced their new faith and returned to Christianity, and thus were also executed as apostates.

The lack of another source after Eulogius's own martyrdom has given way to the misimpression that there were fewer episodes later in the 9th century.[

Bl. Paul Fimonaya. September 16

Bl. Paul Fimonaya


Feastday: September 16
Death: 1628
One of the Japanese martyrs, the son of Blessed Michael Fimonaya. Paul was a Dominican tertiary who was arrested for being a Christian and was beheaded at Nagasaki. He was beatified in 1867.

St. Ninian September 16

St. Ninian

Feastday: September 16
Death: 432



Image of St. Ninian

According to the untrustworthy life of Ninian by St. Aelred, he was the son of a converted chieftain of the Cumbrian Britons, studied at Rome, was ordained, was consecrated a bishop and returned to evangelize his native Britain. He had his own church built by masons from St. Martin's Monastery in Tours, which became known as The Great Monastery and was the center of his missionary activities. From it Ninian and his monks evangelized neighboring Britons and the Picts of Valentia. Ninian was known for his miracles, among them curing a chieftain of blindness, which cure led to many conversions. His feast day is September 16.

Ninian is a Christian saint first mentioned in the 8th century as being an early missionary among the Pictish peoples of what is now Scotland. For this reason he is known as the Apostle to the Southern Picts, and there are numerous dedications to him in those parts of Scotland with a Pictish heritage, throughout the Scottish Lowlands, and in parts of Northern England with a Northumbrian heritage. In Scotland, Ninian is also known as Ringan, and as Trynnian in Northern England.

Ninian's major shrine was at Whithorn in Galloway, where he is associated with the Candida Casa (Latin for 'White House'). Nothing is known about his teachings, and there is no unchallenged authority for information about his life.

The nature of Ninian's identity is uncertain, and historians have identified the name "Ninian" with other historical figures. A popular hypothesis proposed by Thomas Owen Clancy, a researcher and professor of Celtic studies, posits that Ninian can be identified with three other historical figures: Saint Finnian of Moville, Saint Finnian of Clonard, and Saint Finbarr of Cork. Linguistic variations across the territories associated with each saint have provided evidence that the Ninian preserved in literary tradition originated from this individual. [2] This article discusses the particulars and origins of what has come to be known as the "traditional" stories of Saint Ninian.

Bl. Michael Fimonaya. September 16

Bl. Michael Fimonaya

Feastday: September 16
Death: 1628

Martyr of Japan and a Dominican tertiary. A native of Japan and a convert, he was beheaded at Nagasaki for refusing to abjure the faith. Michael was beatified in 1867 by Pope Pius IX.

St. Lucy & Geminian September 16

St. Lucy & Geminian


Feastday: September 16
Death: 300

Martyrs of Rome, Italy. Lucy was an elderly widow and Geminian a young catechist. Their cult was suppressed in 1969.

Saints Lucy and Geminian were venerated on 16 September as saintswho died as martyrs in Rome during the persecution of Diocletian in about 290 or 300 or, more precisely, in 304. Veneration for them was ancient but their story is "only known from fabulous acts."[1] Lucy appears to be in reality the same as the Lucy of Syracuse whose feast is on 13 December, but the Geminian who was venerated on 16 September seems to be a fictitious character, not to be confused with Saint Geminianus, Bishop of Modena.[2]

Legend

According to the legend, Lucy was a 75-year-old widow and Geminian a young catechist. Lucy was accused by her son, Eutropius (or Euprepius), of being a Christian. She was brought before Diocletian, who at first attempted to dissuade her and then placed her in a cauldron of burning pitch; Lucy lived for three days in the cauldron. When Diocletian heard that she was still alive, he ordered her to be carried around the city, with weights loaded on her body.[1]

When Lucy was paraded by Geminian's house, the statues of Roman gods in his home shattered miraculously and a dovemade the sign of the cross over Geminian's head. He followed Lucy, asking for instruction in the Christian religion as well as baptism. A priest named Protasius helped him with his request. 75 people were converted to Christianity by the example of Geminian. The judge presiding at their trial was thrown from his horse on a stone bridge; his body was never found. Lucy and Geminian were ultimately beheaded.[1]They were buried by a woman named Maxima.

General Roman Calendar

A commemoration of "Saints Lucy and Geminimanus" was included in the Tridentine Calendar and remained in the General Roman Calendar until 1969, but was then omitted as a duplication of the 13 December feast of Saint Lucy, while the Geminian mentioned in the legend of Saint Lucy seems to be a merely fictitious personage.[2] Some traditional Catholics continue to observe the pre-1970 calendar.

St. Euphemia September 16

St. Euphemia


Feastday: September 16
Death: 307


Image of St. Euphemia

Martyred virgin of Chalcedon. The traditions surrounding her death state that she was tortured and then slain by a wild lion because she refused to attend a pagan ceremony. A church was erected in her honor in the fifth century. Her cult is now confined to local calendars.

Saint Euphemia (Greek: Εὐφημία Late Koine Greek [efiˈmia]), "well-spoken [of]", known as the All-praised in the Orthodox Church, is a Christian saint, who was martyred for her faith in 303 AD. According to Christian tradition, this occurred at Chalcedon.

According to tradition, Euphemia was arrested for refusing to offer sacrifices to Ares. After suffering various tortures, she died in the arena at Chalcedon from wounds sustained from a lion. Her tomb became a site of pilgrimages. She is commemorated on September 16.

St. Eugenia September 16

St. Eugenia

Feastday: September 16
Death: 735
Benedictine abbess, the daughter of the Duke of Alsace, France. She succeeded her aunt St. Ottilia as abbess of Hohenburg Monastery, France.

St. Dulcissima september 16

St. Dulcissima 

september 16

Patron: Sutri, Italy
Death: unknown
A virgin martyr known only as patron saint of Sutri, Italy, formerly part of the Papal States.

St. Curcodomus September 16

St. Curcodomus

Feastday: September 16
Death: 680

Benedictine abbot, the successor of St. Humbert at Maroilles, in the diocese of Cambrai, in France.

Saint Curcodomus (died ca. 680) was a Benedictine abbot and saint. He succeeded Saint Humbert at Maroilles Abbey.

St. Abundius. September 16

St. Abundius

Feastday: September 16
Death: 304


Image of St. Abundius

martyr and miracle worker in Rome. Abundiuswas a priest who was arrested with his deacon, St. Abundatius

வில்டன் நகர்ப் புனித இதித் (961-984)(செப்டம்பர் 16)

வில்டன் நகர்ப் புனித இதித் (961-984)

(செப்டம்பர் 16)

இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள கென்ட் என்ற நகரில் பிறந்தவர். இவரது தந்தை கென்ட்டை ஆண்டு வந்த எட்கர் என்பவராவார். இவரது தாய் வில்ப்ரைடா என்பவராவார்.
இவர் அரச குடும்பத்தில் பிறந்தாலும் பெரும்பாலும் வில்டன் நகரிலுள்ள ஒரு துறவு மடத்தில்தான் வாழ்ந்து வந்தார். அங்கேதான் இவர் தனது கல்வியையும் கற்றார்.

தாழ்ச்சிக்கும் பிறரன்புப் பணிகளுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய இவர், தன்னை நாடி வந்தவர்களுக்குத் தாராளமாக உதவி செய்தார்.

இவருக்குத் தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு நாட்டை ஆளும் வாய்ப்பும், 
ஒரு சில துறவு மடங்களில் துறவு மடத்தின் தலைவியாகவும் இருக்கக்கூடிய வாய்ப்புகளும் வந்தன. அவற்றையெல்லாம் இவர் வேண்டாம் என்று மறுத்து விட்டு, மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இவருக்கு 23 வயது நடக்கும் போது, தன் சாவை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இவர்  984 ஆம் ஆண்டு, தனது 23 வது வயதில் இறையடி சேர்ந்தார்.

St. Edith of Wilton

Feastday: September 16
Patron: of Wilton Abbey
Birth: 961
Death: 984


Edith of Wilton was the daughter of King Edgar of England and Wulfrida. She was born at Kensing, England, and was brought as a very young child to Wilton Abbey by her mother, who later became a nun there and Abbess. Edith became a nun when fifteen, declined her father's offer of three abbacies, and refused to leave the convent to become queen when her half-brother, King Edward the Martyr was murdered, as many of the nobles requested. She built St. Denis Church at Wilton. Her feast day is September 16.

Saint Edith of Wilton (c. 963[1] - 16 September 984-987[2] ) (also known as Eadgyth, her name in Old English, or as Editha or Ediva, the Latinised forms of her name) was an English nun, a daughter of Edgar the Peaceful, king of England (r. 959–975). She was born between 961 and 964 and died on 16 September in a year between 984 and 987.[3] Following her death in 984, she became the patron saint of her community at Wilton Abbey in Wiltshire and churches were dedicated to her in Wiltshire and in other parts of Anglo-Saxon England. Her biography was written by Goscelin and her feast day is on 16 September.

✠ புனிதர் சிப்ரியன் ✠செப்டம்பர் 16

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 16)

✠ புனிதர் சிப்ரியன் ✠
(St. Cyprian)
கார்த்தேஜ் ஆயர், மறைசாட்சி:
(Bishop of Carthage, Martyr)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

பிறப்பு: கி.பி. 210
கார்த்தேஜ் (Carthage)
தற்போதைய துனிஷியா (Present day Tunisia)

இறப்பு: செப்டம்பர் 14, 258
கார்த்தேஜ் (Carthage)
தற்போதைய துனிஷியா (Present day Tunisia)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 16

பாதுகாவல்: காலரா நோயிலிருந்து

புனிதர் சிப்ரியன், “கார்த்தேஜ்” (Carthage) நகர ஆயரும் முக்கியமான ஒரு ஆதி கிறிஸ்தவ எழுத்தாளரும் ஆவார். இவரது லத்தீன் படைப்புகள் பல இன்னும் நடைமுறையில் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வட ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவர் அல்லாத குடும்பத்தில் பிறந்த இவர், பண்டைய கல்விமுறையில் கற்றார். இவரது இயற்பெயர் “தாசியஸ்” (Thascius) ஆகும்.

இளம் வயதிலிருந்தே கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமென்று ஆசை கொண்ட இவர், தமது முப்பத்தைந்தாம் வயதில், 245ம் ஆண்டில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறினார். திருவருட்சாதனங்களை பெற்று, திருமறையைப் பற்றி நன்கு அறிந்தார். பின்னர், தான் பிறந்த ஊரிலே இருந்த குருமடத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்று முதலில் திருத்தொண்டராகவும், பின்னர் விரைவிலேயே குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். சிறந்த மறைபரப்புப் பணியாளராக பணியாற்றினார். தன் குடும்பத்திலிருந்து இவருக்கு ஏராளமான சொத்துக்களை வழங்கினர். அவற்றையெல்லாம் விற்று, வேறுபாடு பார்க்காமல் பணியாற்றினார்.

இவர், 249ம் ஆண்டு இவரின் சொந்த மறை மாவட்டத்திற்கே ஆயராக நியமிக்கப்பட்டார். பல்வேறு பிரச்சனைகள் நிறைந்திருந்த போதும், திறம்பட தம் பணியை ஆற்றினார். பல அரசர் இவருக்கு எதிராக செயல்பட்டனர். அவர்களிடமும் இறைநம்பிக்கையை வளர்த்து கிறிஸ்தவர்களாக மாற்றினார். இச்செயல்களை கண்ட பல கிறிஸ்தவரல்லாதவர்கள் சிப்ரியானின் செயல்களை எதிர்த்தனர். 

கிறிஸ்தவர்களை பலவிதங்களில் வதைத்துக் கொன்றனர். சில மக்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து பிரிந்து புறவின சபைகளில் சேர்ந்தனர். அவர்களின் பயத்தைப் பார்த்து, சிப்ரியான் கிறிஸ்தவர்களாக வாழ தைரியமூட்டி கிறிஸ்துவை பற்றிக்கொள்ள இன்னும் சிறப்பாக குரல் கொடுத்து பணியாற்றினார். கி.பி. 250ம் ஆண்டின் தொடக்கத்திலேயே “டிராஜன் டேசியஸ்” (Trajan Decius) என்ற ரோம பேரரசனின் கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் தொடங்கின. அதனை அறிந்த சிப்ரியான் அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பித்து சென்றார்.

அப்போது அம்மறைமாநிலத்தில் ஆயர் இல்லாமல் போனது. இதனை அறிந்த “நோவெற்றஸ்” (Nowetras) என்பவன் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்துவை மறுதலித்தவர்களை, தன்னுடன் சேர்த்துக்கொண்டு, திருச்சபையில் இருந்துக்கொண்டே, திருச்சபைக்கு எதிராக செயல்பட்டான். ரோம் நகர் சென்று, அங்கும் தவறான வதந்திகளை பரப்பினான். இதையறிந்த சிப்ரியான் மனம் கலங்கினார். மீண்டும் கார்த்தேஜ் வந்தடைந்தார். அப்போது சில கூட்டங்களை கூட்டி திருச்சபையில் சில நிலையான தீர்மானங்களை கொண்டுவந்தார். 

256ம் ஆண்டின் இறுதியில் பேரரசர் “முதலாம் வலேரியனால்” (Emperor Valerian I) கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் தொடங்கின. இதன் காரணமாக, திருத்தந்தையர் “முதலாம் ஸ்டீபனும்” (Pope Stephen I), அவரைத் தொடர்ந்து வந்த திருத்தந்தை “இரண்டாம் சிக்ஸ்டஸும்” (Pope Sixtus II) மறை சாட்சியாக மரித்தனர். 

ஆப்பிரிக்காவில், சிப்ரியான் கிறிஸ்தவ துன்புறுத்தல்களை தீரமுடன் எதிர்கொண்டார். இதனால் “அஸ்பசியஸ் பட்டேர்னஸ்” (Aspasius Paternus) என்ற ஆளுநர் ஒருவரால் நாடு கடத்தப்பட்டார். அப்போதும் இவர் கிறிஸ்தவ மக்களுக்காக பரிந்து பேசினார். அதனால் மீண்டும் நாடு கடத்தப்பட்டு, கடுமையான தண்டனையை அனுபவித்தார். பல துன்பங்களை அனுபவித்தார் ஆயர். அப்போதும் கூட ஆப்ரிக்கா மண்ணில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக பரிந்து பேசிக் கொண்டே இருந்தார். 

கி.பி. 258ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 13ம் நாள், புதிய ஆளுநரான “கலேரியஸ் மேக்சிமஸ்” (Galerius Maximus) என்பவனுடைய உத்தரவின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிப்ரியானுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. நகரின் மத்தியில் கொண்டு நிறுத்தப்பட்ட இவர், தமது ஆடைகளை தாமாகவே களைந்து கொண்டார். முழங்காலிட்டு நிறுத்தப்பட்ட இவர், "இறைவனுக்கு நன்றி உரித்தாகட்டும்" என முழங்கினார். தனது இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் பெயரை உச்சரித்த வண்ணமாய் இருந்த சிப்ரியன், கூரிய வாளால் தலை வெட்டப்பட்டு இறந்தார்.
St. Cyprian, Bishop of Carthage

Feastday: September 16
Death: 258.  My given name is Thasius Cyprianus. I was born in Africa about 200 A.D., the son of a rich pagan senator. I was the Bishop of Carthage. 
All my life and work occurred there. Known as the Priest Martyr. I matriculated quickly in an excellent secular education, attending the school of Carthage. I became an orator, rhetoric, and philosophy instructor. I appeared often at court defending townsfolk. 
I taught rhetoric oratory before I converted to the Christian one holy Catholic and Apostolic faith. I assiduously studied Scripture, and my mentor Tertullian's writings. I spent my parents' wealth, as well as the proceeds from banquets work. I continually questioned what truth was. 
Christianity gained my curiosity. I studied the writings of the African, Tertullian, and the Presbyter, (born around 160 A.D.). 
Later, I wrote my habits made it appear impossible for me to reach the revival promised by Yeshua, Jesus, and my Savior. Cecilius the Presbyter, (my spiritual mentor), freed me from confusion. At age 46, I became a Christian catechumen. 
Prior to my baptism, I gave my property to the poor. I moved to Cecilius' house. Thus graced by God, I wrote my friend Donatus, "When the surge of regeneration cleansed my former life impurity, a light steady and bright, shone from Heaven in my heart. " 
I was born again, invigorated by the Holy Spirit. God revealed to me mysteries. He made darkness, light. I learned that my former living in the flesh for sin belonged to the earthly. Now I began divine living by the Holy Spirit. In God and from God is all our strength. From Him is our might. Through Him, we who live on earth receive the hint of a condition of future bliss. 
The year following my baptism, I was ordained a priest. When Bishop Donatus of Carthage died, the faithful unanimously chose me as bishop in about the year 248 A.D. I said, "Unconditionally, yes," complying with my mentor's request. I was ordained bishop of Carthage. Around the year in 248 A.D., church authorities elevated to the rank of bishop of Carthage. It was the time of the 
reign of terror in the persecutions of Roman Emperor Decius. 
The Church's welfare proved my first concern, along with the concomitant ridding of vices in the clergy and flock. Hopefully, my life caused the observing faithful a desire to imitate my God-given piety, humility, and wisdom with which God graced me. 
I became known beyond my diocese. Bishops from other areas sought my counsel. 
But persecution by the Emperor Decius, 249 
A.D. to 251 A.D., revealed to me in a dream, forced me to hide. My life was necessary to my flock. I conducted my life to the strengthening faith and courage among my persecuted. 
Prior to my leaving, I distributed the church treasury among all the clergy to help to the poor. I later sent additional funds. Through my letters (called epistles) to Presbyters, confessors and martyrs, I kept constant touch with Carthaginian Christians. 
Some in my flock offered the Roman required sacrifices to the false Roman gods. Some congregants said they did, when they did not. I was called to mediate he controversy of allowing such apostates back into the Mystical Body of Christ. 
Church hierarchy required they do penance before re-admittance to the Church. Because I refused to sacrifice to the false gods. 
Weakened by torture, some faithful souls offered sacrifice to pagan gods. Later, these lapsed Christians appealed to confessors for a letter of reconciliation. 
This intercession certificate accepted the lapsed back to the Church. I wrote Carthaginian Christians regarding this. 
I said that those lapsed during a time of persecution might be re- admitted to the Church only after penance and with the local bishop's permission. 
But I cautioned that Bishops must investigate the situation under which the lapse happened. Examination of the lapsed proved necessary to learn their sincere contrition. For some of the fallen wanted immediate Church re-admittance. This stirred community turmoil. I asked counsel and opinions of other diocese bishops. All approved my rules. 
During my absence, I delegated authority to four priest examiners of persons preparing for ordination to the priesthood and the deaconate. But there was mischief. 
Two influential persons resisted Felicissimus, and the Presbyter, Novatus. I excommunicated Felicissimus with his six accomplices. 
My letter to the African Church of Carthage, cautioned all not to split themselves from Church unity. I told them to wait my return. I counseled them to obey the lawful commands of the administering bishop in my absence. 
Most Carthaginian Christians remained faithful. A Local Council ended Felicissimus' defiance when I returned in 251 A.D. 
That enclave judged the reception of the lapsed back into the Church after a church penance. It further upheld Felicissimus' excommunication. 
A new schism (break in the Church unity) arose through the auspices of the Roman Presbyter, Novatian. Novatus, a former Felicissimus associate, and Carthaginian Presbyter, joined the movement. 
Novatian taught that if Christians repented of their sin, the lapsed Christians during time of persecution could not be re-admitted. Both Novatian and Novatus convinced three Italian bishops during the tenure of the lawful Roman bishop Celerinus to place another bishop on the Roman cathedra. 
I first wrote a series of circular letters to the African bishops condemning these wrongs. Later, I composed an entire tome, "On the Unity of the Church." 
A plague erupted, just as the attenuation of discord in the Carthage church began. Hundreds died in Carthage. Folks abandoned the sick. The dead were left unburied. God graced me by my example and fortitude to personally tend the sick and bury not only Christian, but also pagan dead as well. 
Drought and famine followed, and attacks by the barbarian Numidians. They enslaved many of residents. 
We petitioned wealthy Carthaginians to develop support methods to feed the starving and to ransom captives. On top of that, Emperor Valerian (253 A.D. to 259 A.D.) ordered new Christian persecutions. 
Paternus, the Carthaginian proconsul, ordered all the faithful to sacrifice to idols. I refused, remaining silent as to the names and residences 
of the Presbyters/ (Elder)s of the Carthage Church. 
I was sent to Corubisum. Deacon Pontus voluntarily followed me into exile. After arriving, I dreamed a quick martyr's end. I wrote letters and books. But my coming martyrdom at Carthage caused me to return. 
However, the court freed me until the next year. During that time, Carthaginian Christians bade me farewell and asked me to bless them. In a later trial, I again refused to sacrifice to idols. The court sentenced me to beheading. "Thanks be to God!" I said. All the Christians present said in unified voice, "We want to die with him!" 
At the execution, I blessed all present. I gave 25 gold coins to the executioner, then covered my eyes, then lowered my head. I was martyred 58 A.D. 
Christians crying placed their shawls and veils by me to gather my blood. Nightfall, the faithful took by body and buried me in the private crypt of Procurator Macrovius Candidianus. 
Five Hundred years later, Charlemagne, King Charles the Great officials transferred my relics to France, Hieromartyr.

✠ புனிதர் கொர்னேலியஸ் ✠செப்டம்பர் 16

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 16)

✠ புனிதர் கொர்னேலியஸ் ✠
(St. Cornelius)
21ம் திருத்தந்தை:
(21st Pope)

பிறப்பு: கி.பி. 180
ரோம் (Rome)

இறப்பு: ஜூன் 253
சிவிடவெச்சிய, ரோமப் பேரரசு
(Civitavecchia, Roman Empire)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 16

திருத்தந்தை கொர்னேலியஸ் (Pope Cornelius), ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச்சு 6 (அல்லது) 13ம் நாளிலிருந்து, அவர் மரித்த ஜூன் 253 வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை “ஃபேபியன்” (Fabian) ஆவார். திருத்தந்தை கொர்னேலியஸ் கத்தோலிக்க திருச்சபையின் 21ஆம் திருத்தந்தை ஆவார்.

கிறிஸ்தவம் துன்புறுத்தப்படல் :
ரோமப் பேரரசனாக 249-251ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி செய்த “டேசியஸ்” (Decius) என்பவர் கிறிஸ்தவர்களை அவ்வப்போது சில இடங்களில் கொடுமைப்படுத்தினார். ஆனால், 250ம் ஆண்டு, ஜனவரி மாதத்திலிருந்து கிறிஸ்தவத்தை மிகக் கடுமையாகத் துன்புறுத்தலானார்.

அரசு நியமித்த அதிகாரிகளின் முன்னிலையில் கிறிஸ்தவர்கள் ரோமத் தெய்வங்களுக்குப் பலி செலுத்தவேண்டும் என்றும், அவ்வாறு செய்ய மறுத்தால் சாவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் ஆணை பிறப்பித்தார்.

அரசனின் ஆணைக்குப் பணிந்து பலிசெலுத்த மறுத்த கிறிஸ்தவர் பலர் கொல்லப்பட்டு, மறைசாட்சிகளாக உயிர்துறந்தனர். அப்போது திருத்தந்தையாக இருந்த ஃபேபியன் என்பவரும் 250ம் ஆண்டு, ஜனவரி மாதம், 20ம் நாள் கொல்லப்பட்டார்.

அரசனுக்கு அஞ்சித் தங்கள் உயிரைக் காக்கும் வண்ணம் பல கிறிஸ்தவர்கள் பலி ஒப்புக்கொடுத்தனர்.

கிறிஸ்தவம் துன்புறுத்தப்பட்ட காலத்திற்குப்பின் எழுந்த பிரச்சினைகள்:
கிறிஸ்தவம் துன்புறுத்தப்பட்ட காலத்தில் தங்கள் உயிரைக் காக்கும் எண்ணத்துடன் அரச ஆணைக்குப் பணிந்து ரோம தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி, கிறிஸ்தவத்தை மறுதலித்த கிறிஸ்தவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து மனம் மாறி மீண்டும் கிறிஸ்தவ சபையோடு இணைய விரும்பினர். அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்பது குறித்து இருவித கருத்துகள் எழலாயின.

1) கிறிஸ்தவத்தை மறுதலித்தவர்கள் மனம் திரும்பி மீண்டும் திருச்சபையில் சேர விரும்பினால் அவர்கள் மீண்டும் ஒருமுறை திருமுழுக்குப் பெற வேண்டும் என்று நோவாசியன் என்பவரும், அவருடைய குழுவும் கூறினார்கள்.

2) தங்கள் தவற்றிற்கு வருந்தி மீண்டும் சபையில் புக விரும்புவோருக்கு இரண்டாம் முறையாகத் திருமுழுக்குக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் உண்மையாகவே மன வருத்தம் தெரிவித்தால் போதும் என்று திருத்தந்தை கொர்னேலியஸ் கூறினார். அவருக்கு ஆதரவாக புனித சிப்ரியன் என்னும் தலைசிறந்த இறையியல் அறிஞரும் கருத்துத் தெரிவித்தார்.

திருத்தந்தைத் தேர்தல் தடைபட்டது:
ரோம மன்னன் “டேசியஸ்” (Emperor Decius) கிறிஸ்தவத்தைக் கடுமையாகத் துன்புறுத்தினால் அது தானாகவே அழிந்துபோகும் என்று நினைத்திருக்க வேண்டும். அந்த எண்ணத்தில் அவர் திருத்தந்தை ஃபேபியனை (St Fabian) சிறையிலடைத்து கொன்றபின் (ஜனவரி 20, 250), அவருக்குப் பின் இன்னொரு திருத்தந்தை பதவி ஏற்காமல் தடைசெய்தார்.

ஆனால், அச்சமயத்தில் “கோத்” இனத்தவர்கள் (Goths) பால்கன் பகுதியில் தாக்குதல் நிகழ்த்தினார்கள். அவர்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு டேசியஸ் தமது படைகளோடு புறப்பட்டார். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் புதிய திருத்தந்தையைத் தெரிந்தெடுத்தார்கள்.

பதினான்கு மாதகாலமாகத் திருத்தந்தையின் பணியிடம் வெறுமையாக இருந்தது. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட மிகத் தகுதிவாய்ந்தவராகக் கருதப்பட்ட “மோசே” (Moses) என்பவர் திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய சாவைத் தொடர்ந்து, “நோவாஷியன்” (Novatian) தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால், கிறிஸ்தவர்கள் கொர்னேலியசைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். அவரும் தயக்கத்தோடு அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

திருத்தந்தை கொர்னேலியசுக்கு எதிராக “நோவாஷியன்” (Novatian) என்னும் எதிர்-திருத்தந்தை:
கொர்னேலியஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த நோவாஷியன் மிகுந்த சினம் கொண்டார். தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற குறை ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவத்தை மறுதலித்தவர்களை மறு திருமுழுக்குக் கொடுக்காமல் திருச்சபையில் மீண்டும் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறிய ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முறையல்ல என்று அவர் எண்ணினார்.

எனவே, நோவாஷியன் "நானே திருத்தந்தை" என்று கூறி, தம்மைத் தாமே திருத்தந்தை நிலைக்கு உயர்த்திக்கொண்டர். இவ்வாறு நோவாஷியன் என்னும் ரோம குரு, திருத்தந்தை கொர்னேலியஸுக்கு எதிரான எதிர்-திருத்தந்தையாக மாறினார். திருச்சபையில் ஒரு பிளவு ஏற்பட்டது.

கொர்னேலியஸ் திருத்தந்தையாக மாறியதைத் தொடர்ந்து நோவாசியன் தம் நிலையை இன்னும் அதிகக் கடுமைப்படுத்தினார். கிறிஸ்தவர்கள் தம் மதத்தை மறுதலிப்பது போன்ற எந்தவொரு கொடிய பாவத்தைக் கட்டிக்கொண்டால் அவர்களுக்குப் பாவ மன்னிப்பே கிடையாது என்றும், கடவுளின் நீதி இருக்கையின் முன் இறுதித் தீர்ப்பின்போது மட்டுமே அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற முடியும் என்றும் நோவாசியான் கூறலானார். இது "நோவாசியக் கொள்கை" (Novatianism) என்று பெயர்பெறலாயிற்று

கொர்னேலியஸ் படிப்பினைக்கு “சிப்ரியன்” (Cyprian) ஆதரவு:
திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் ரோம தெய்வங்களுக்கு பலிசெலுத்திய கிறிஸ்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று திருத்தந்தை கொர்னேலியஸ் கூறிய கருத்துக்கு அவருடைய நண்பரும் தலைசிறந்த இறையியல் வல்லுநருமான புனித “சிப்ரியன்” (Cyprian) முழு ஆதரவு தெரிவித்தார். அவர் நோவாசியனைச் சபைநீக்கம் செய்தார்.

மேலும், அலெக்சாந்திரிய நகர் ஆயர் புனித “டையோனீசியஸ்” (Dionysius) மற்றும் பெரும்பான்மையான ஆப்பிரிக்க, ஆசிய ஆயர்கள் அப்போதனைக்கு ஆதரவு அளித்தார்கள். ரோமில் ஒருசில குருக்களும் பொதுநிலையினரும் கொர்னேயசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நோவாசியனை ஆதரித்தார்கள்.

ரோம சங்கம் அளித்த தீர்ப்பு:
இதைத் தொடர்ந்து கொர்னேலியஸ் ரோமில் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அதில் 60 ஆயர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கொர்னேலியசை முறைப்படியான திருத்தந்தை என்று உறுதிப்படுத்தியதோடு, எதிர்-திருத்தந்தையாகத் தம்மை அறிவித்துக்கொண்ட நோவாசியனையும் ஆதரவாளர்களையும் சபைநீக்கம் செய்தனர்.

திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் தங்கள் உயிரைக் காப்பதற்காகக் கிறிஸ்தவத்தை மறுதலித்தவர்கள் பொருத்தமான விதத்தில் மனவருத்தம் தெரிவித்தபின் நற்கருணை விருந்தில் பங்கேற்க அனுமதிக்கப்படலாம்; அவர்களுக்கு மறு திருமுழுக்கு வழங்கவேண்டியதில்லை என்று சங்கம் தீர்ப்பளித்தது.

கொர்னேலியஸ் எழுதிய கடிதம்:
ரோமில் நடந்த சங்கத்தின் முடிவுகளை உள்ளடக்கிய ஒரு கடிதத்தை கொர்னேலியஸ் அந்தியோக்கியா நகர் ஆயராகவும் நோவாசியனின் ஆதரவாளருமாக இருந்த ஃபாபியுஸ் (Fabius) என்பவருக்கு அனுப்பினார். நோவாசியனுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியல்ல என்று அக்கடிதத்தில் கொர்னேலியஸ் எழுதினார்.

கொர்னேலியசின் இறப்பு:
மன்னன் டேசியுசுக்குப் பிறகு “கால்லுஸ்” (Trebonianus Gallus) மன்னர் ஆனார். அவரும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். 252ம் ஆண்டு, ஜூன் மாதத்தில் மன்னனின் ஆணைப்படி திருத்தந்தை கொர்னேலியஸ் கைதுசெய்யப்பட்டு, ரோமின் துறைமுகப் பட்டினமாகிய “சென்ட்டும்செல்லே” (Centumcellae) என்னும் இடத்துக்கு நாடுகடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓராண்டு சிறைவாசத்துக்குப் பின் அவர் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். சிறையில் இருக்கும்போது அவருக்கு ஆதராவாக புனித சிப்பிரியன் அவருக்கு உருக்கமானதொரு கடிதம் எழுதினார்.

கொர்னேலியசின் உடல் ரோமுக்குக் கொண்டுபோகப்பட்டு, கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்திலுள்ள நிலத்தடி கல்லறையில் (Catacomb) அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய கல்லறைமீது வைக்கப்பட்ட கல்வெட்டு இலத்தீன் மொழியில் உள்ளது. அதற்கு முன்னர் கிரேக்க மொழி பயன்படுத்தப்பட்டது.

ரோம் திருப்பலி நூலில் (Roman Missal) பெயர் சேர்ப்பு:
புனித கொர்னேலியஸின் பெயர் ரோம திருப்பலி நூலில் (Roman Missal) நற்கருணை மன்றாட்டில் சேர்க்கப்பட்டது. அதுபோலவே அவருடைய நண்பரும் ஆதரவாளருமான புனித சிப்ரியனின் (St. Cyprian) பெயரும் அதில் இடம்பெற்றது.
இந்த இரு புனிதர்களின் நினைவுத் திருநாளும் செப்டம்பர் 16ஆம் நாள் ஆகும்.

St. Cornelius

Feastday: September 16. Cornelius whose feast day is September 16th. A Roman priest, Cornelius was elected Pope to succeed Fabian in an election delayed fourteen months by Decius' persecution of the Christians. The main issue of his pontificate was the treatment to be accorded Christians who had been apostasized during the persecution. He condemned those confessors who were lax in not demanding penance of these Christians and supported St. Cyprian, Bishop of Carthage, against Novatus and his dupe, Felicissimus, whom he had set up as an antibishop to Cyprian, when Novatus came to Rome. On the other hand, he also denounced the Rigorists, headed by Novatian, a Roman priest, who declared that the Church could not pardon the lapsi (the lapsed Christians), and declared himself Pope. However, his declaration was illegitimate, making him an antipope. The two extremes eventually joined forces, and the Novatian movement had quite a vogue in the East. Meanwhile, Cornelius proclaimed that the Church had the authority and the power to forgive repentant lapsi and could readmit them to the sacraments and the Church after they had performed proper penances. A synod of Western bishops in Rome in October 251 upheld Cornelius, condemned the teachings of Novatian, and excommunicated him and his followers. When persecutions of the Christians started up again in 253 under Emperor Gallus, Cornelius was exiled to Centum Cellae (Civita Vecchia), where he died a martyr probably of hardships he was forced to endure.

Pope Cornelius was the bishop of Rome from 6 or 13 March 251 to his martyrdom in June 253. He was pope during and following a period of persecution of the church and a schism occurred over how repentant church members who had practiced pagan sacrifices to protect themselves could be readmitted to the church. Cornelius agreed with Cyprian of Carthage that those who had lapsed could be restored to communion after varying forms of penance. That position was in contrast to the Novationists, who held that those who failed to maintain their confession of faith under persecution would not be received again into communion with the church. That resulted in a schism in the Church of Rome that spread as each side sought to gather support. Cornelius held a synod that confirmed his election and excommunicated Novatian, but the controversy regarding lapsed members continued for years.

The persecutions resumed in 251 under Emperor Trebonianus Gallus. Cornelius was sent into exile and may have died from the rigours of his banishment, but later accounts say that he was beheaded.