புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 June 2020

புனிதர் ஜான் ஃபிஷர் ✠(St. John Fisher) June 22

✨                                                                                                                                                     † இன்றைய புனிதர் †
(ஜூன் 22)

✠ புனிதர் ஜான் ஃபிஷர் ✠
(St. John Fisher)
 
கர்தினால் மற்றும் ரோச்செஸ்டர் மறைமாவட்ட ஆயர்:
(Cardinal and Bishop of Rochester)

பிறப்பு: அக்டோபர் 19, 1469
பெவெர்லி, யோர்க்ஷயர், இங்கிலாந்து அரசு
(Beverley, Yorkshire, Kingdom of England)

இறப்பு: ஜூன் 22, 1535 (வயது 65)
டவர் ஹில், லண்டன், இங்கிலாந்து அரசு
(Tower Hill, London, Kingdom of England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
இங்கிலாந்து திருச்சபை
(Church of English)
ஆங்கிலிக்கன் சமூகத்தின் சில பிற திருச்சபைகள்
(Some of the other Churches in the Anglican Communion)

முக்திபேறு பட்டம்: டிசம்பர் 29, 1886
திருத்தந்தை எட்டாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: மே 19, 1935
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

பாதுகாவல்:
ரோச்செஸ்டர் மறைமாவட்டம் (Diocese of Rochester)

நினைவுத் திருநாள்: ஜூன் 22

புனிதர் ஜான் ஃபிஷர், ஒரு ஆங்கிலேய கத்தோலிக்க ஆயரும் (English Catholic Bishop), கர்தினாலும் (Cardinal), இறையியலாளரும் (Theologian), மறைசாட்சியுமாவார் (Martyr). சிறந்த கல்வியாளருமான இவர், இறுதியில் “கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தின்” (University of Cambridge) வேந்தருமாவார் (Chancellor).

ஆங்கில சீர்திருத்த (English Reformation) காலத்தில், “அரசன் எட்டாவது ஹென்றியை” (King Henry VIII) இங்கிலாந்து திருச்சபையின் பிரதம தலைவராக (Supreme Head of the Church of England) ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தாலும், திருத்தந்தையின் மேலாதிக்கம் (Papal Supremacy) கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகளை (Catholic Church’s Doctrine) ஆதரித்ததாலும், அரசன் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி அவர் தூக்கிலிடப்பட்டார். கத்தோலிக்க திருச்சபையால் அவர் ஒரு மறைசாட்சியாகவும் புனிதராகவும் மதிக்கப்படுகின்றார். இவருடையதும், புனிதர் தாமஸ் மோர் ஆகிய இருவரதும் நினைவுத் திருநாள், ஜூன் மாதம், 22ம் நாள் நினைவுகூறப்படுகின்றது.

இவர், கி.பி. 1469ம் ஆண்டு, வடக்கு இங்கிலாந்தின் (Northern England) யோர்க்ஷையர் (Yorkshire) மாகாணத்தின் வரலாற்று சந்தை நகரான பெவர்லியில் (Beverley) பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார், பெவர்லியின் பெரும் வளமான வணிகரான “ராபர்ட் ஃபிஷர்” (Robert Fisher) ஆவார். இவரது தாயார் பெயர் “அக்னேஸ்” (Agnes) ஆகும். தமது பெற்றோரின் நான்கு குழந்தைகளில் ஒருவரான இவருக்கு எட்டு வயதாகையில் இவரது தந்தை மரித்துப் போனார். இவரது தாயார், “வில்லியம் ஒயிட்” (William White) என்பவரை இரண்டாவதாக மறுமணம் செய்துகொண்டார். அவர்களுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஃபிஷர், தனது வாழ்நாள் முழுவதும் தனது நீண்ட குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாக தெரிகிறது. தமது சொந்த ஊரிலுள்ள தேவாலயத்துடன் இணைக்கப்பட்ட பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். கி.பி. 700ம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான பள்ளியான பெவர்லி இலக்கணப் பள்ளியிலும் (Beverley Grammar School) கல்வி பயின்றார். இவரை கௌரவிக்கும் விதமாக இப்பள்ளியின் இல்லங்களில் ஒன்றுக்கு இன்றளவும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கி.பி. 1484ம் ஆண்டில் இருந்து “கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்” (University of Cambridge) பிஷர் படித்தார். அவர் “வில்லியம் மெல்டன்” (William Melton) எனும் ஆங்கிலேய குருவின் செல்வாக்கின் கீழ் “மைக்கேல்ஹவுஸ்” (Michaelhouse) கல்லூரியிலிருந்து வந்தார். வில்லியம் மெல்டன், மறுமலர்ச்சியிலிருந்து எழும் படிப்புகளில் புதிய சீர்திருத்தத்திற்கு திறந்த மனோபாவமுள்ள ஒரு தத்துவவாதி ஆவார். கி.பி. 1487ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பைப் பெற்ற ஃபிஷர், கி.பி. 1491ம் ஆண்டில், முதுகலை பட்டம் பெற்றார். கி.பி. 1491ம் ஆண்டிலேயே, அனுமதிக்கப்பட்ட வயதுக்குட்பட்டவராக இருந்த போதிலும், குருத்துவ படிப்பில் நுழைய திருத்தந்தையால் அனுமதிக்கப்பட்டார். கி.பி. 1491ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதியன்று, கத்தோலிக்க மதகுருவாக குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதே ஆண்டில் அவரது கல்லூரியின் ஒரு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன், அவர் “நார்த்தல்லர்டன்” (Northallerton) நகரின் “விகார்” (Vicar) ஆகவும் நியமனம் பெற்றார். கி.பி. 1494ம் ஆண்டு, அவர் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நிலைநாட்டும் அதிகாரி (Proctor) பதவிக்காக, தமக்கு வருமானம் தரும் பதவிகளை ராஜினாமா செய்தார். மூன்று வருடங்களுக்குப் பின்னர், பல்கலையின் விவாத மேடைகளின் தலைவராக (Master Debator) நியமிக்கப்பட்டார். அதே நாளில், அவர் கத்தோலிக்க சிற்றாலய குருவாகவும் (Chaplain), அரசன் ஏழாம் ஹென்றியின் (King Henry VII) தாயாரும், “ரிச்மொன்ட்” “டெர்பி” ஆகிய இடங்களின் கோமாட்டியுமான (Countess of Richmond and Derby) “மார்கரெட் பியூஃபோர்ட்” (Margaret Beaufort) என்பவரது ஒப்புரவாளராகவும் (Confessor) நியமனம் பெற்றார். கி.பி. 1501ம் ஆண்டு, தூய இறையியலின் மறைவல்லுநராகவும் (Doctor of Sacred Theology) நியமனம் பெற்றார். பத்து நாட்களின் பின்னர், பல்கலையின் துணை வேந்தராக (Vice-Chancellor of the University) ஃபிஷர் தேர்வு பெற்றார்.

ஃபிஷரின் வழிகாட்டுதலின்பேரில், கோமாட்டி மார்கரெட் (Margaret Beaufort), கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் (University of Cambridge) “செயின்ட் ஜான் மற்றும் கிறிஸ்து” கல்லூரிகளை (St John's and Christ's Colleges) நிறுவினார். அத்துடன், “லேடி மார்கரெட் ஆன்மீக பேராசிரியர்” எனும் பதவியை “ஆக்ஸ்ஃபோர்ட்” (University of Oxford) மற்றும் “கேம்ப்ரிட்ஜ்” (University of Cambridge) ஆகிய இரண்டு பல்கலைகழகங்களிலும் உருவாக்கினார். “கேம்ப்ரிட்ஜ்” பல்கலை கழகத்தின் முதல் பேராசிரியராக ஃபிஷர் பதவி வகித்தார். கி.பி. 1505 முதல், 1508ம் ஆண்டு காலத்தில், “குயின்ஸ் கல்லூரியின்” (President of Queen’s College) தலைவராக பதவி வகித்தார். “கேம்ப்ரிட்ஜ்” பல்கலை கழகத்திற்கு நிதி ஆதாரங்களை சேகரிப்பதுவும், பாரம்பரிய இலத்தீன் மற்றும் கிரேக்க ஆசிரியர்கள் மட்டுமல்லாது, எபிரேயம் மொழிகளையும் கற்பிக்கும் ஐரோப்பாவின் முன்னணி கல்வியாளர்களை ஈர்ப்பதுவும் ஃபிஷரின் ராஜதந்திரமாக இருந்தது.

அரசன் ஏழாம் ஹென்றியின் (Henry VII) தனிப்பட்ட வலியுறுத்தல் காரணமாக, கி.பி. 1504ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் தேதி, ரோச்செஸ்டர் மறைமாவட்ட ஆயராக (Bishop of Rochester) நியமிக்கப்பட்டார். அக்காலத்தில், ரோச்செஸ்டர், இங்கிலாந்தின் மிகவும் வறிய மறைமாவட்டமாக இருந்தது. பொதுவாக, இதுவே ஃபிஷரின் திருச்சபை வாழ்க்கையின் முதல் படியாக பார்க்கப்பட்டது. ஆயினும்கூட, 31 ஆண்டுகளாக, ஃபிஷர் தனது மீதமுள்ள வாழ்நாள் முழுவதும், தனது விருப்பப்படி, அங்கேயே தங்கினார். அதே சமயத்தில், பிற ஆங்கில ஆயர்களைப் போன்று, ஃபிஷர் சில மாநில கடமைகளை கொண்டிருந்தார். குறிப்பாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அவர் ஆர்வம் காட்டினார். கி.பி. 1504ம் ஆண்டு, அவர் பல்கலைக்கழக வேந்தராக (Chancellor) தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பத்து வருடங்களாக, வருடாவருடம் தேர்வு செய்யப்பட்ட அவர், பின்னர் வாழ்நாள் வேந்தராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, ஃபிஷர் இளவரசர் ஹென்றியின் (Prince Henry)  (பின்னாள் அரசன் எட்டாம் ஹென்றி (King Henry VIII) ஆசிரியராகவும் இருந்தார். கி.பி. 1509ம் ஆண்டு, அரசன் ஏழாம் ஹென்றி மற்றும் அவரது தாயார் லேடி மார்கரெட் இருவரும் மரித்தனர்.

என்னதான் நாவன்மையும் புகழும் இருப்பினும், அவருடைய முன்னாள் மாணவரும், இந்நாள் புதிய அரசனுமாகிய எட்டாவது ஹென்றியுடன் (King Henry VIII) மோதல் இருந்தது. அரசனின் பாட்டியான லேடி மார்கரெட், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு விட்டுச் சென்ற நிதிகளின்மேல் பிரச்சினைகளும் விவாதங்களும் எழுந்திருந்தன.

கி.பி. 1512ம் ஆண்டு, அப்போதைய “ஐந்தாம் இலாத்தரன் ஆலோசனை சபைக்கான” (Fifth Council of the Lateran) ஆங்கிலேய பிரதிநிதியாக ஃபிஷர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ரோம் நகருக்கு பயணிக்க வேண்டிய அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக கைவிடப்பட்டது.

அரசி கேதரினின் (Queen Catherine of Aragon) பாதுகாப்பு:
அரசன் எட்டாம் ஹென்றி, அரசி கேதரினை விவாகரத்து செய்ய முயற்சித்தபோது, ஃபிஷர் அரசியின் பிரதான ஆதரவாளராக ஆஜரானார். திருத்தந்தை பிரதிநிதியின் நீதிமன்றத்தில் (Legates' court) அரசியின் சார்பில் அவர் ஆஜரானபோது, அங்கு தனது மொழியின் வழிகாட்டுதலால் பார்வையாளர்களை திடுக்கிடவைத்த அவர், புனிதர் திருமுழுக்கு யோவானைப் (St John the Baptist) போலவே, திருமணத்தின் தனித்துவமின்மையின் சார்பாக இறக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். இதைக் கேட்ட அரசன் எட்டாம் ஹென்றி, மிகவும் கோபமாக எழுந்து, இலத்தீன் மொழியினாலான நீண்ட உரையை திருத்தந்தை பிரதிநிதியின் நீதிமன்றத்தில் (Legates' court) சமர்ப்பித்தார். ஃபிஷரின் இதனுடைய நகல் அவரது கையெழுத்துப் பிரதிகளுடன் இன்னமும் உள்ளது. அவர் அரச கோபத்துக்கு எவ்வளவு அஞ்சுகிறார் என்பதனை இது விளக்கும். அகற்றப்பட்ட ரோமிற்கான காரணம், ஃபிஷரின் தனிப்பட்ட முடிவுகளை முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனால், அவர் செய்த காரியத்திற்காக, அரசன் அவரை எப்போதும் மன்னிக்கவில்லை.

கத்தோலிக்க திருச்சபையின் மீதான அரசனின் தாக்குதல்:
கி.பி. 1529ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஹென்றி ஆட்சியின் "நீண்ட பாராளுமன்றம்" கத்தோலிக்க திருச்சபையின் தனிச்சட்டங்களின் மீது ஆக்கிரமிக்கத் தொடங்கியது. ஃபிஷர், மேல் சபையின் உறுப்பினராக இருப்பதால், “பிரபுக்கள் சபை” (House of Lords) அத்தகைய நடவடிக்கைகளால் இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முடிவு செய்யப்படலாம் என்று பாராளுமன்றத்தை (Parliament) எச்சரித்தது. பொது உறுப்பினர்கள், ஃபிஷர் பாராளுமன்றத்தை அவமதித்துவிட்டதாக, தமது சபாநாயகர் மூலம் அரசனிடம் முறையிட்டனர். அரசனோ, அவர்களை மறைமுகமாக திரைக்கு பின்னால் தள்ளினார். வாய்ப்புகளை இழந்துவிடவில்லை. ஹென்றி, தமக்கு முன் ஃபிஷரை வரவழைத்து, விளக்கம் கேட்டார். விளக்கம் கொடுக்கப்பட, ஹென்றி, தமக்கு திருப்தி என்று அறிவித்தார். ஆனால், பொது உறுப்பினர்களோ, விளக்கம் போதுமானதாகவும் திருப்தியளிப்பதாகவும் இல்லை என்று அறிவித்தனர். ஆகவே, ஹென்றி ஒரு பெரிய இறையாண்மை கொண்டவராக தோன்றினார்.

கி.பி. 1535ம் ஆண்டு, மே மாதம், புதிதாய் பதவியேற்ற திருத்தந்தை மூன்றாம் பவுல் (Pope Paul III) ஃபிஷரை நான்கு புனிதர்களின் பேராலய கர்தினாலாக (Cardinal Priest of San Vitale) உயர்த்தினார். உண்மையில், ஃபிஷர் மீதான நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக ஹென்றியை ஊக்குவிப்பதற்கான நம்பிக்கையின் வெளிப்படையாக இது இருந்தது. ஆனால் இதன் விளைவு துல்லியமாக தலைகீழாக இருந்தது. கர்தினால் தொப்பியை இங்கிலாந்து கொண்டுவர ஹென்றி தடை விதித்தார். அதற்கு பதிலாக, ஃபிஷரின் தலையை ரோம் நகருக்கு அனுப்புவேன் என்று அறிவித்தார். ஜூன் மாதம், ஃபிஷர் விசாரணைக்காக சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. மற்றும் ஜூன் 17ம் நாளன்று, அவர் கைது செய்யப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் (Westminster Hall) நிறுத்தப்பட்டார். “அரசன் எட்டாவது ஹென்றியை” (King Henry VIII) இங்கிலாந்து திருச்சபையின் பிரதம தலைவராக (Supreme Head of the Church of England) ஏற்றுக்கொள்ள மறுத்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. ரோச்செஸ்டர் ஆயர் (Bishop of Rochester) பதவியிலிருந்து அவர் இறக்கப்பட்டிருந்த காரணத்தால் அவர் ஒரு சாதாரண பிரஜையாகவே நடத்தப்பட்டார். ஃபிஷர் குற்றவாளி என்று தீர்மானித்த நீதிபதிகள், அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். ஃபிஷர் “டிபர்ன்” (Tyburn) எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார்.                              🇻🇦                                     


                                                                                                                                                       June 2️⃣2️⃣                                                                                                                                                                               🌟 *FEAST OF SAINT JOHN FISHER, CARDINAL, MARTYR*

🔴                                                                                                                                                                                                  
🌹Today is the feast day of Saint John Fisher.  Ora pro nobis.🌹

🌹John Fisher was a quiet, scholarly man. He was born in Yorkshire in 1469. John was the eldest son of Robert Fisher, merchant of Beverley, and Agnes his wife. His early education was probably received in the school attached to the collegiate church in his native town, whence in 1484 he removed to Michaelhouse, Cambridge. (5)

John Fisher graduated as a Bachelor in 1488. In 1491 he took his Mastership and became a Fellow of Michael House. In 1501 he became a Doctor of Divinity and Vice Chancellor. In 1504 he was Chancellor of the University. This progress shows his scholarly interests. Even more significant was his choice of the famous humanist, Erasmus, to lecture at the University. He was a friend of Saint Thomas More and of those who aimed at a reform of education especially for the clergy. Indicative also of his character and of his interest is that at the age of forty seven he took up the serious study of Greek and began to study Hebrew. In 1504 he was appointed Bishop of Rochester.

The events which led to his death was the king’s decision to repudiate his wife, Catherine of Aragon, and to claim Headship of the Church of England when the Pope refused to sanction the King’s decision. On 16 April, 1534 he was lodged in the Tower of London together with Thomas More. Both had refused to take the oath of Succession acknowledging the issue of Henry VIII and Anne Boleyn as legitimate heirs to the Throne. “Not that I condemn any other men’s conscience,” he wrote, “their conscience may save them and mine must save me.” Fisher’s trial took place in Westminster Hall on June 17th 1535. He was found guilty of high treason for denying that the King was Supreme Head of the Church of England.

On the morning of June 22nd, 1535, John Fisher was roused from sleep before five o’clock. The Lieutenant of the Tower told him that he was to die that day. “Well”, he said, “if this be your errand you bring me no great news, for I have long looked for this message. And I must humbly thank the King’s Majesty that it pleaseth him to rid me from all this worldly business. And I thank you also for your tidings.” He then asked what time it was and being told that it was about five he said: “Well then let me by your patience sleep an hour or two. For I have slept very little this night. And yet to tell the truth, not for any fear of death, thank God, but by reason of my great infirmity and weakness.”

When he awoke after a brief sleep, John Fisher began his final preparation. He asked that his best clothes, such as they were, should be laid out for him, remarking: “This is our marriage day and it behooveth us to use more cleanliness for the solemnity thereof.” He was very weak and had to be carried in a chair to the Tower Gate for the formality of handing him over to the Sheriff of London. He was escorted by soldiers with arms at the ready. There was a pause at the Tower gate. Fisher opened his New Testament and his eyes fell on the passage of the Gospel according to St John; “This is eternal life to know Thee, the only true God and Him whom Thou hast sent, Jesus Christ. I have glorified Thee on earth. I have finished the work Thou gavest me to do. And now glorify Thou me, Father, with Thyself, with the glory which I had with Thee, before the world was made.” He then said: “There is enough learning in that to last me to the end of my life.” His scholarship had reached its fulfilment.

At the scaffold Fisher declined an offer to help him mount the steps saying: “No, masters, since I came so far ye shall see me shift for myself well enough.” From the scaffold he said that he was about to die for the faith – that hitherto by God’s grace he had not been afraid – but that he asked their prayers lest at the very stroke of death he might not stand steadfast. He invoked a blessing on England, that God would hold His holy hand over it. And he prayed for the King that God would send him good counsel. He recited the Te Deum, forgave his enemies and laid his head of the block. At one blow of the axe it was severed from his body.

His friend Thomas More, who was to follow him to the scaffold within a few days, wrote of him: “I reckon in this realm no one man, in wisdom, learning and long approved virtue together, meet to be matched and compared with him.”

In 1935 he was canonised as a Saint in St Peter’s Basilica in Rome. His Feast Day is kept on June 22nd together with that of his companion martyr, St Thomas More. More was a layman who had been Lord Chancellor of England. Thus the chief law officer of the Crown and the highest dignitary of ecclesiastical rank in England, died in defence of the principle that the Pope is the Supreme Head in earth of the Church of England. (2,3)

Image: John Fisher, artist: Hans Holbein the Younger, circa: between 1497 and 1543  🔵 
🌹✝️

புனிதர் தாமஸ் மோர் June 22

† இன்றைய புனிதர் †
(ஜூன் 22)

✠ புனிதர் தாமஸ் மோர் ✠
(St. Thomas More)
உயராட்சித் தலைவர்/ மறைசாட்சி:
(Lord Chancellor/ Martyr)

பிறப்பு: ஃபெப்ரவரி 7, 1478
லண்டன், இங்கிலாந்து
(London, England)

இறப்பு: ஜூலை 6, 1535 (வயது 57)
லண்டன், இங்கிலாந்து
(London, England)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
இங்கிலாந்து திருச்சபை
(Church of England)
ஆங்கிலிக்கன் சமூகத்தினரின் சில பிற திருச்சபைகள்
(Some other churches of the Anglican Communion)

அருளாளர் பட்டம்: டிசம்பர் 29, 1886
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: மே 19, 1935
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

முக்கிய திருத்தலம்:
புனிதர் பீட்டர் அட் வின்சுளா, லண்டன், இங்கிலாந்து
(Church of St Peter ad Vincula, London, England)

நினைவுத் திருநாள்: ஜூன் 22

பாதுகாவல்:
தத்துப் பிள்ளைகள், நீதிமன்ற எழுத்தர்கள், சிவில் பணியாளர்கள், 
பெரிய குடும்பங்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தத்துப்பெற்றோர், மால்ட்டா பல்கலைகழகம், கடினமான திருமணங்கள், மனைவியை இழந்தோர், “அட்டெனோ டி மணிலா சட்ட பள்ளி” (Ateneo de Manila Law School), “ஆர்லிங்டன் மறைமாவட்டம்” (Diocese of Arlington), 
“பென்சாகோலா-டலாஹேசீ மறைமாவட்டம்” (Diocese of Pensacola-Tallahassee), “கேரளா கத்தோலிக்க இளைஞர் இயக்கம்” (Kerala Catholic Youth Movement), “மால்ட்டா பல்கலைக்கழகம்” (University of Malta), “புனித தாமஸ் கலை மற்றும் கடிதங்களின் ஆசிரியர் பல்கலைக்கழகம்” (University of Santo Tomas Faculty of Arts and Letters)

புனிதர் தாமஸ் மோர், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரும், தத்துவவியலாளரும் (Social Philosopher), எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர், மனிதநேய மறுமலர்ச்சியில் (Renaissance humanist) இவர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர் ஆவார். இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றியின் (Henry VIII) முக்கிய ஆலோசகராக இருந்த இவர், கி.பி. 1529ம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல், கி.பி. 1532ம் ஆண்டு, மே மாதம், 16ம் தேதி வரை, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகப் (Lord High Chancellor of England) பணியாற்றினார். “மார்ட்டின் லூதர்” (Martin Luther) மற்றும் “வில்லியம் டின்டேல்” (William Tyndale) முதலியோரால் கொணரப்பட்ட “கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்தினை” (Protestant Reformation) இவர் வன்மையாக எதிர்த்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் பிரிவினையை இவர் எதிர்த்தார். பின்னர், கத்தோலிக்க திருச்சபையிலிருந்து இங்கிலாந்து அரசர் “எட்டாம் ஹென்றி” (Henry VIII) பிரிந்ததும், அவரை இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக (Supreme Head of the Church of England) ஏற்க மறுத்தார். அரசி “கேத்தரினை” (Catherine of Aragon) விவாக ரத்து செய்ய அரசன் முயற்சித்ததை எதிர்த்தார். அரசர் “ஹென்றி’யை” (Henry) இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக பிரமாணம் செய்விக்க மறுத்த காரணத்தால் தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு, மறைசாட்சியாக மரித்தார்.

திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI), கி.பி. 1935ம் ஆண்டு, இவரை மறைசாட்சி’யாக அருட்பொழிவு செய்வித்தார். திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) 2000ம் ஆண்டு இவரை அரசியல்வாதிகளுக்கும், அரசுத் தலைவர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார். 1980ம் ஆண்டு முதல், இங்கிலாந்து திருச்சபை இவரை சீர்திருத்த மறைசாட்சியாக (Reformation martyr) வணங்குகின்றது. அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடை கற்பனைத் தீவு பற்றி ஒரு நூலினை கி.பி. 1516ம் ஆண்டு “உடோபியா” (Utopia) என்னும் பெயரில் வெளியிட்டார். இவர் எழுதிய “உடோபியா” (Utopia) புத்தகத்திலுள்ள சொத்து உரிமைகள் குறித்த இவரது கம்யூனிச அணுகுமுறைகளுக்காக “சோவியத் யூனியன்” (The Soviet Union) நாடு இவரை கௌரவித்தது.

புனிதர் தாமஸ் மோர், இங்கிலாந்தின் வெற்றிகரமான வழக்கறிஞரும் பின்னாளில் நீதிபதியுமான “சார் ஜான் மோர்” (Sir John More) என்பவரின் மகனாக, கி.பி. 1478ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 7ம் தேதியன்று, பிறந்தார். இவரது தாயாரின் பெயர், “அக்னேஸ்” (Agnes) ஆகும். இவரது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தை ஆவார். லண்டன் மாநகரின் அப்போதைய சிறந்த பள்ளியான “புனிதர் அந்தோனியார்” பள்ளியில் (St Anthony's School) கல்வி பயின்றார்.

கி.பி. 1490ம் ஆண்டு முதல் 1492ம் ஆண்டு வரை “காண்டர்பரி” பேராயரும் (Archbishop of Canterbury), இங்கிலாந்தின் கோமானும் வேந்தருமான (Lord Chancellor of England) “ஜான் மோர்ட்டன்” (John Morton) என்பவரிடம் பணியாற்றினார். கி.பி. 1492ம் ஆண்டு “ஆக்ஸ்ஃபோர்ட்” (University of Oxford) பல்கலைகழகத்தில் சேர்ந்து கற்க ஆரம்பித்தார். இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் புலமை பெற்றார். பின்னர், தமது தந்தையுடன் இணைந்து சட்ட கல்வியில் பயிற்சி பெற ஆரம்பித்தார்.

அவரது இறையியல் நண்பர் “டெசிடேரியஸ் எராஸ்மஸ்” (Desiderius Erasmus of Rotterdam) என்பவரின் கூற்றுப்படி, அவர் ஒரு முறை தனது சட்ட பணித் துறையை கைவிட்டு, துறவறமாக மாற்றிக்கொள்ள விரும்பினார். கி.பி. 1503 மற்றும் 1504ம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனின் சுவர்களுக்கு வெளியே “கார்தூசியன் மடாலயத்திற்கு” (Carthusian Monastery) அருகே வாழ்ந்து, துறவிகளின் ஆன்மீக பயிற்சிகளில் சேர்ந்துகொண்டார். பக்தியிலும் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டிருந்தாலும், கி.பி. 1504ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

கி.பி. 1505ம் ஆண்டு, தம்மை விட ஐந்து வயது இளைய, அமைதியான, மற்றும் நல்ல இயல்புள்ள “ஜேன் கோல்ட்” (Jane Colt) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தாமஸ் தமது இளம் மனைவிக்கு இசை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை வீட்டிலேயே கற்பித்தார். ஆறு வருட திருமண வாழ்க்கையில் “மார்கரெட்” (Margaret), “எலிசபெத்” (Elizabeth), “சிசிலி” (Cicely) மற்றும் “ஜான்” (John) ஆகிய நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த ஜேன், 1511ம் ஆண்டில் மரணமடைந்தார்.

தாமசுக்கு, தமது தாயில்லா குழந்தைகளை கவனித்துக்கொள்ள தகுதியுள்ள ஒரு தாய் தேவைப்பட்டார். ஆகவே, வழக்கத்துக்கு மாறாகவும், நண்பர்களின் அறிவுரைகளுக்கு எதிராகவும், மனைவி இறந்து முப்பது நாட்களுக்குள்ளேயே, தமது பரவலான நண்பர்கள் வட்டத்திலிருந்து தகுதியுள்ள “அலைஸ்” (Alice Harpur Middleton) எனும் பணக்கார விதவைப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து மறுமணம் செய்துகொண்டார். “அலைஸ்” தாமசை விட வயதில் மூத்தவர் என்பதாலும், தாமஸ் பாலியல் சிற்றின்ப தேவைகளுக்காகவும் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதாலும் அவர்களது திருமணம் முழுமையானதாக அமையவில்லை.

தாமஸ் மோர் எப்போதுமே கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவாக இருந்தார். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற எதிர் மற்றும் சீர்திருத்த சபைகளை எதிர்த்தார். புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் (Protestant Reformation) மதங்களுக்கு எதிரானது என்று உணர்ந்தார். அவை, திருச்சபை மற்றும் சமூகத்தின் ஒற்றுமைக்கெதிரான அச்சுறுத்தல் என்றுணர்ந்தார். இறையியல், ஆன்மீக விவாதங்கள் மற்றும் திருச்சபை சட்டங்கள் ஆகியவற்றை விசுவசித்தார். “கத்தோலிக்க திருச்சபையை அழிப்பதற்காக” லூதர் விடுத்த அழைப்பு, போருக்கு விடுத்த அழைப்பாகவே இவருக்கு தோன்றியது.

திருத்தந்தை மற்றும் அரசன் ஆகியோருக்கிடையேயான - திருச்சபைகளின் தலைமைப் பதவிக்கான சண்டை உச்சத்தை அடைந்தபோது, தாமஸ் திருத்தந்தைக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். 

கி.பி. 1530ம் ஆண்டு, அரசன் எட்டாம் ஹென்றி (King Henry VIII) மற்றும் அரசி “கேதரின்” (Catherine of Aragon) உடனான திருமணத்தை ரத்து செய்யுமாறும், அரசனுடனான திருச்சபை சட்ட விவாதங்களை நிறுத்துமாறும் திருத்தந்தை “ஏழாம் கிளெமென்ட்” (Pope Clement VII) அவர்களுக்கு ஆங்கிலேய திருச்சபை தலைவர்கள் சிலரும் உயர்குடியினர் சிலரும் எழுதிய கடிதத்தில் கையெழுத்திட தாமஸ் மறுத்துவிட்டார்.

கி.பி. 1533ம் ஆண்டு, இங்கிலாந்து அரசியாக (Queen of England) “அன்னி போலின்” (Anne Boleyn) முடி சூடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாமஸ் மோர் மறுத்துவிட்டார். தொழில்நுட்ப ரீதியாக, இது ஒரு துரோகச் செயல் அல்ல. இருப்பினும், இது “அன்னி போலினு’க்கு” எதிரான கண்டனம் என பரவலாக பரப்பப்பட்டது. அரசன் ஹென்றி, தாமசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொடங்கினான்.

கி.பி. 1534ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13ம் நாளன்று, தாமஸ் மோர் கைது செய்யப்பட்டு, விசாரணை ஆணைய குழுவினால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பாராளுமன்ற சட்டங்களின்படி, “அன்னி போலின்” (Anne Boleyn) இங்கிலாந்து நாட்டின் அரசி என்பதை ஏற்றுக்கொள்வதாக கூறிய தாமஸ் மோர், அரசன் எட்டாம் ஹென்றியின் சட்டவிரோத விவாகரத்து மற்றும் இரண்டாம் திருமணம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இவருடன், “ரோச்செஸ்டர்” ஆயரான (Bishop of Rochester) “ஜான் ஃபிஷரும்” (John Fisher) அரசி கேதரினுடனான ஹென்றியின் விவாகரத்தை எதிர்த்தார். அரசர் “எட்டாம் ஹென்றியை” (King Henry VIII) இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக (Supreme Head of the Church of England) ஏற்க தீவிரமாக மறுத்தார். நான்கு தினங்களின் பின்னர், தாமஸ் “இங்கிலாந்து டவர்” (Tower of London) சிறையிலடைக்கப்பட்டார்.

இறுதியில், மரண தண்டனை விதிக்கப்பட்டார். கி.பி. 1535ம் ஆண்டு, ஜூலை மாதம், 6ம் நாளன்று, அவருடைய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

_Martyrdom_ 🌟🌹*10,000 Roman Soldiers martyred on Mount Ararat* June 22

🇻🇦
June 2⃣2⃣

_Martyrdom_ 🌟🌹
*10,000 Roman Soldiers martyred on Mount Ararat*
  ⚔   ⚔  ✝  ⚔   ⚔


*The Ten Thousand Martyrs was an entire Roman legion who, had all converted to Christianity, during the reign of the pagan Roman Emperor Diocletian❗*

Ordered to worship pagan idols, they all refused, and were marched up to the top of Mount Ararat, in modern Turkey, led by their commander Saint Acacius and then all were crucified in 303 AD.

🛑
*The number* _(10,000)_ *is not an exaggeration & is evident from Eusebius* _(Church History VIII.6),_ *Lactantius* _(De morte prosecut, xv)._

The veneration of the Ten Thousand Martyrs is found in Denmark, Sweden, Poland, France, Spain, and Portugal. Relics are claimed by the church of St. Vitus in Prague, by Vienne, Scutari in Sicily, Cuenca in Spain, Lisbon and Coimbra in Portugal.


    🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯
_In 1511 A.D., Francesco Ottobon, a prior of the Venetian monastery of St Antonio di Castello, had a vision in which he saw himself at prayer in the monastery church. Suddenly, there was a great noise outside. The church doors opened. A multitude of men, carrying crosses, began to walk up the aisle in procession. At the main altar they knelt, and were blessed by a figure whom Ottobon identified as St Peter. They passed through, "two by two, resounding sweetly in hymns and songs"._ *Otto-bon recognised the stream of pilgrims in his vjsion as the 10,000 martyrs of Mount Ararat*❗




🔵

புனித ஆல்பன் (மூன்றாம் நூற்றாண்டு) June 22

ஜூன் 22 

புனித ஆல்பன் (மூன்றாம் நூற்றாண்டு)
இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேத கலாபனை நடைபெற்றது.  அப்பொழுது இவர் ஓர் அருள்பணியாளருக்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்.

தான் அடைக்கலம் கொடுத்த அருள்பணியாளரின் எடுத்துக்காட்டான வாழ்வால் தூண்டப்பட்ட இவர் கிறிஸ்தவராக மனம் மாறினார்.

இந்நிலையில் இவர் ஓர் அருள்பணியாளருக்கு அடைக்கலம் கொடுத்த செய்தி, எப்படியோ அங்கிருந்த ஆளுநருக்குத் தெரியவரவே, ஆளுநர் படைவீரர்களை அனுப்பி, இவருடைய வீட்டில் இருந்த அருள்பணியாளரைக் கைது செய்துவரச் சொன்னார்.

இவரோ அருள்பணியாளரைத் தப்பிக்க வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த உடையை வாங்கி அணிந்து கொண்டார். அருள்பணியாளரைக் கைதுசெய்ய வந்த படைவீரர், அவர் தப்பித்துபோன செய்தியை அறிந்து, அருள்பணியாளரின் உடையில் இருந்த இவரைக் கைதுசெய்து ஆளுநருக்கு முன்பாக நிறுத்தினார்.

ஆளுநர் இவரைக் கிறிஸ்துவை மறுதலித்து விட்டுத் தன்னுடைய தெய்வத்திற்குப் பலிசெலுத்தச்  சொன்னபோது, இவர் கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை; யாருக்கும் பலிசெலுத்துவதும் இல்லை என்று சொல்லி, தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.

இதனால் சீற்றங்கொண்ட ஆளுநர், இவரைத் தன்னுடைய படைவீரர்களிடம் தற்போதைய ஆல்பன்ஸ் என்ற இடத்தில், தலைவெட்டி கொல்லச் சொன்னார். படைவீரர்களும் ஆளுநருடைய உத்தரவின்படி, இவரைத் தலைவெட்டி கொல்லச் சென்றபோது, அதிலிருந்த படைவீரர் ஒருவர் இவருடைய வாழ்வால் தொடப்பட்டு, மனம்மாறிக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.

இதற்குப்பின் வேறு ஒரு படைவீரர்தான் இவரைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டார். 

இவர் புதிதாக மனம் மாறியவர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும், அநியாயமாகச் சித்திரவதை செய்யப்படுபவர்களுக்கும் பாதுகாவலராக இருக்கிறார்.

புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus)ஆயர் June 22

இன்றைய புனிதர் :
(22-06-2020)

புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus)
ஆயர்
பிறப்பு 
355
போர்தோ(Portho), பிரான்ஸ்
    
இறப்பு 
22 ஜூன் 431

இவர் பிரான்ஸ் நாட்டில் ஓர் உயர்குடியில் தோன்றியவர். இவர் தமது 25 ஆம் வயதிலேயே திறமைமிக்க பேச்சாளராகவும், கவிஞராகவும் விளங்கினார். அரச அவைக்கு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வலண்டீனியன் என்ற அரசன் இவரை கம்பாஞ்ஞா(Companiya) மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்தார். இவர் மெய்மறையில் சேர்வதற்கு முன்னரே, திரேசியா என்ற ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

இவர் 385 ஆம் ஆண்டு திருமுழுக்கு பெற்றார். அந்த ஆண்டில் அவரது ஒரே மகன் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டான். இதனால் நோலா பவுலீனுசும், அவரது மனைவி திரேசாவும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர். அங்கே பார்சலோனா நாட்டு மக்கள் அவருடைய பக்தியை அறிந்து, குருத்துவத்தை தேர்ந்து கொள்ள தூண்டினர். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இருவரும் தங்களது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு, ஏழைகளுக்கு பகிர்ந்துகொடுத்தனர். 

பின்னர் பவுலீனூஸ் குருத்துவத்தை தெரிந்து கொண்டார். இதனால் அவரின் மனைவி மிலான் நாட்டிற்கு சென்று, அங்கு ஆயர் அம்புரோசை சந்தித்து, அவரின் அறிவுரைப்படி திரேசியாவும் ஓர் துறவற மடத்திற்கு சென்றார். துறவறத்தில் 20 ஆண்டுகள் திருப்பணியை திறம்பட செய்தார். பவுலீனுஸ் பேய்களை ஓட்டும் வல்லமை பெற்றிருந்தார். இவரை போல ஒரு புனிதத்துவ வாழ்வை எவராலும் வாழ முடியாது என்று புனித அகஸ்டின், புனித ஜெரோம், புனித அம்புரோஸ் ஆகியோர் தங்களின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். புனித மார்ட்டின் இவரை, இயேசுவின் நல்லாயன் இவரே என்று குறிப்பிட்டுள்ளார். 


செபம்:
அதிசயமானவரே எம் இறைவா! நீர் புனித பவுலீனுசை திருமண வாழ்வில் ஈடுபடுத்தியபின், உம் குருத்துவ வாழ்விற்கு தேர்ந்தெடுத்துள்ளீர். உமது புனிதத்துவ வாழ்வை அவரின் வழியாக இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியுள்ளீர். இதோ இன்றைய நாளில் திருமணம் செய்த ஒவ்வொருவரையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். குடும்ப வாழ்வில் ஒருவரையொருவர் புரிந்து, சந்தோசத்துடனும், சமாதானத்துடனும் வாழ, நீர் அருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (22-06-2020)

Saint Paulinus of Nola

Friend of Saint Augustine of Hippo and Saint Nicetas of Remesiana, and mentioned for his holiness by at least six of his contemporary saints.

Distinguished lawyer. Held several public offices in the Empire, then retired from public ministry with his wife, Therasia, first to Bordeaux, France where they were baptized, and then to Therasia's estate in Spain. After the death of their only son at the age of only a few weeks, the couple decided to spend the rest of their lives devoted to God. They gave away most of their estates and dedicated themselves to increasing their holiness.

Paulinus was ordained, then he and Therasia moved to Nola, Italy, gave away the rest of their property, and dedicated themselves to helping the poor. Paulinus was chosen bishop of Nola by popular demand, and he governed the diocese for more than 21 years while living in his own home as a monk and continuing to aid the poor. His writings contain one of the earliest examples of a Christian wedding song.
Born :
c.354 at Burdigala, Gaul (modern Bordeaux, France)

Died :
22 June 431 of natural causes

---JDH---Jesus the Divine Healer---



† இன்றைய புனிதர் †
(ஜூன் 22)

✠ புனிதர் பௌலினஸ் ✠
(St. Paulinus of Nola)

நோலா மறைமாவட்ட ஆயர்/ ஒப்புரவாளர்:
(Bishop of Nola and Confessor)

பிறப்பு: கி.பி. 354
போர்டியூக்ஸ், கல்லியா லூக்டெனேன்சிஸ், மேற்கு ரோம பேரரசு
(Bordeaux, Gallia Lugdunensis, Western Roman Empire) 

இறப்பு: ஜூன் 22, 431
நோலா, கம்பானியா, இத்தாலி, மேற்கு ரோம பேரரசு
(Nola in Campania, the Praetorian prefecture of Italy, Western Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூன் 22

“போன்டியஸ் மெரோபியஸ் ஏன்ஸியஸ் பௌலினஸ்” (Pontius Meropius Anicius Paulinus) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் பௌலினஸ், ஒரு ரோம மொழி கவிஞரும், எழுத்தாளரும், ‘செனட்சபை” (Senator) உறுப்பினரும், துணைத் தூதரக பதவிகளைப் பெற்றவரும், “காம்பானிய” (Governor of Campania) ஆளுநருமாவார். ஆனால், “பேரரசர் கிரேஷியனி’ன்” (Emperor Gratian) படுகொலைக்குப் பின்னர், தமது ஸ்பேனிஷ் மனைவி “தெரேஷியா’வின்” (Therasia) செல்வாக்கினால் இவர் தமது எதிர்கால தொழில்-வாழ்க்கை முறையை கைவிட்டார். கிறிஸ்தவராக மனம் மாறி திருமுழுக்கு பெற்றார். தமது மனைவி “தெரேஷியா’வின்” (Therasia) மரணத்தின் பிறகு நோலா (Nola) மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கபட்டார்.

தமது முன்னோடியான “புனிதர் ஃபெலிக்சை” (St. Felix) கௌரவிக்கும் வகையிலும், பேரரசு முழுதுமிருந்த கிறிஸ்தவ தலைவர்களை கௌரவுக்கும் வகையிலும் கவிதைகள் எழுதத் தொடங்கினார். பாரம்பரியப்படி, கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகளின்போது, மணியடிக்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். இவர், திருத்தந்தை “முதலாம் போனிஃபேஸ்” (Pope Boniface I) அவர்களின் தேர்தலிலிருந்த சர்ச்சைகளை நீக்குவதற்கு உதவினார்.

தமது சொத்து சுகங்களை துறப்பதை பகிரங்கமாக அறிவித்தது, தமது சந்நியாச மற்றும் பண்பாட்டு வாழ்க்கைக்கு ஆதரவாக அமைந்ததுடன், புனிதர்கள் “அகஸ்தின்” (Augustine), “ஜெரோம்” (Jerome), “மார்ட்டின்” (Martin) மற்றும் “அம்புரோஸ்” (Ambrose) உள்ளிட்ட இவரது சமகால கிறிஸ்தவ துறவியரிடையே ஒரு முன்மாதிரியாகவும் அமைந்தது.

“போன்டியஸ்”, தென்மேற்கு ஃபிரான்ஸ் நாட்டின் “போர்டியூக்ஸ்” (Bordeaux) எனுமிடத்தில் கி.பி. 352ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். குறிப்பிடத்தக்க செனட்டரிய குடும்பமொன்றைச் சேர்ந்த இவருடைய குடும்பத்தினருக்கு ஃபிரான்ஸின் “அக்குய்டைன்” (Aquitaine Province), வடக்கு ஸ்பெயின் (Northern Spain) மற்றும் தெற்கு இத்தாலி (Southern Italy) ஆகிய பிராந்தியங்களில் சொத்துக்களும் தோட்டங்களும் இருந்தன. “போர்டியூக்ஸ்” (Bordeaux) நகரில் கல்வி கற்ற இவரது ஆசிரியர், கவிஞர் “ஒசொனியஸ்” (Poet Ausonius) ஆனார். அவரே இவரது நண்பருமானார். தமது சிறு வயதில், நேப்பில்ஸ் (Naples) அருகே, “நோலா” (Nola) நகரிலுள்ள “புனிதர் ஃபெலிக்ஸ்” (St Felix) திருத்தலத்திற்கு அடிக்கடி சென்று வருவார். 

இவரது வாழ்க்கை, ஒரு சாதாரண இளைஞனாக நெடுநாள் நீடிக்கவில்லை. கி.பி. 375ம் ஆண்டு, பேரரசர் “வலென்டீனியனி’ன்” (Valentinian) பின்னர் பதவிக்கு வந்த அவரது சொந்த மகன் “பேரரசர் க்ரேஷியன்” (Emperor Gratian), “போன்டியசை” ரோம தூதரக அதிகாரியாக நியமித்தார். அத்துடன், இத்தாலியின் தென் பிராந்தியமான “கம்பானியாவின்” (Campania) ஆளுநராகவும் நியமித்தார்.

கி.பி. 383ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் “லியோன்” (Lyon) எனுமிடத்தில் “பேரரசர் க்ரேஷியன்” வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டார். அதே நேரத்தில், பௌலினஸ் “அம்புரோஸின்” (Ambrose) பள்ளிக்குச் செல்லுவதற்காக “மிலன்” (Milan) சென்றிருந்தார். 384ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய பௌலினஸ், “பார்சிலோனாவைச்” (Barcelona) சேர்ந்த பிரபுத்துவ கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஸ்பேனிஷ் பெண்ணான “தெரேஷியாவை” (Therasia) திருமணம் செய்துகொண்டார். அவரது சகோதரரை கொலை செய்துவிடுவதாகவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்துவிடுவதாகவும் இவர் பயமுறுத்தப்பட்டார்.

“போர்டியூக்ஸ்” ஆயர் “டெல்ஃபினஸ்” (Bishop Delphinus of Bordeaux) என்பவரிடம் திருமுழுக்கு பெற்ற பௌலினஸ், கி.பி. 390ம் ஆண்டு தமது மனைவி தெரேஷியாவுடன் ஸ்பெயின் பயணித்தார். அங்கே, பிறந்து எட்டு நாட்களே ஆன தங்களது ஒரே குழந்தையை தொலைத்தனர். மனம் வெறுத்துப்போன அவர்கள், இவ்வுலக வாழ்வினை வெறுத்து ஒதுங்கிய மத வாழ்க்கை வாழ முடிவு செய்தனர்.

கி.பி. 393 அல்லது 394ம் ஆண்டில் கிறிஸ்து பிறப்பு திருநாளன்று, பௌலினஸின் சில எதிர்ப்பிற்குப் பிறகு, அவர் உள்ளூர் கிறிஸ்தவ சபைகள் (Presbyter) உறுப்பினராக “பார்சிலோனாவின்” ஆயர் (Bishop of Barcelona) “லம்பியஸ்” (Lampius) என்பவரால் அருட்பொழிவு செய்யப்பட்டார்.

பௌலினஸ், பார்சிலோனாவிலேயே தங்குவதற்கு மறுத்துவிட்டார். அவரும் அவரது மனைவியும் ஸ்பெயின் நாட்டிலிருந்து கிளம்பி “கம்போனியாவிலுள்ள” (Campania) “நோலா” (Nola) சென்றனர். அவர் தமது மரணம் வரை அங்கேயே தங்கியிருந்தார்.

தமது மன மாற்றத்தின் மதிப்பினை புனிதர் ஃபெலிக்ஸ் அவர்களுக்கே தந்த பௌலினஸ், வருடா வருடம் அவரை கௌரவிக்கும் வகையில் கவிதை எழுதினர். அவரும் அவரது மனைவியும் இணைந்து புனிதர் ஃபெலிக்சை நினைவுகூறும் ஒரு தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.

கி.பி. 408 மற்றும் 410 ஆகிய ஆண்டுகளுக்கிடையே தெரசியா மரணமடைந்தார். அதன் குறுகிய காலத்தின் பின்னர், ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட பௌலினஸ், 410ம் ஆண்டு “நோலா” (Nola) மறைமாவட்டத்தை தேர்வு செய்தார். அங்கே அவர் இருபது ஆண்டுகள் சேவையாற்றினார். கி.பி. 431ம் ஆண்டு, ஜூன் மாதம், 22ம் நாளன்று, “நோலா” (Nola) நகரில் பௌலினஸ் மரணமடைந்தார்.