புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

20 August 2020

புனித பெர்னார்டு கிலார்வாக்ஸ் Bernhard von Clairvauxதுறவி, மறைவல்லுநர் August 20

இன்றைய புனிதர்
(20-08-2020) 

புனித பெர்னார்டு கிலார்வாக்ஸ் Bernhard von Clairvaux
துறவி, மறைவல்லுநர்
பிறப்பு 
1090
திஜோன்(Dijion), பிரான்சு

இறப்பு 
20, ஆகஸ்டு 1153
கிளார்வாக்ஸ்( Clairvaux), பிரான்சு

புனிதர்பட்டம்: 18 ஜனவரி 1174 திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர்

​மறைவல்லுநராக: 1830, திருத்தந்தை எட்டாம் பயஸ் 

பாதுகாவல்: பேய்பிடித்தோர், குழந்தை நோயாளர்கள்

இவர் ஓர் அரசர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் சிறந்த நன்னெறியில் இவரையும், இவரின் உடன்பிறந்தவர்களையும் வளர்த்தெடுத்தார்கள். சிஸ்டர்சியன்(Sistercien) சபையில் சேர்ந்து கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டார். அரசர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , சாதுவான வாழ்வை வாழ்ந்தவர். கடுமையான ஏழ்மையை தன் துறவற வாழ்வில் கடைபிடித்தார். தன் பெற்றோரின் வளர்ப்பை மறவாமல் செப வாழ்வில் ஈடுபட்டார். பின்னர் தன் உடன்பிறந்த சகோதரர்களும், தந்தையும் இவருடன் வாழ துறவற இல்லம் வந்து சேர்ந்தனர். 

இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்கென்றிருந்த அனைத்தையுமே விற்று, மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தனர். தனிமையான வாழ்வு, கடுமையான செபம், ஒறுத்தல் இவைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்ந்தனர். அப்போது பிரான்சு நாட்டில் பரவிய "ஆல்பிஜென்ஸ்" என்ற கொள்கைகளை தைரியமாக எதிர்த்தனர். பெர்நார்டு எச்சவாலையும் தைரியமாக சந்தித்தார். மிக சிறந்த கிறிஸ்துவ மக்களை உருவாக்கினார். சிலுவைப் போரில் பணிபுரிய நல்ல கிறித்தவர்களை உருவாக்கினார். இவர்கள் விசுவாசத்தில் வளர, தன்னை முழுதும் கரைத்தார். பிறகு கிளேர்வே(Clarwo) என்ற ஆதீனத்துக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவிகள் புண்ணியங்களை பேணி வளர்க்கும்படி, போதனைகளாலும், முன்மாதிரியாலும் சிறிய முறையில் வழி நடத்தினார். திருச்சபையில் பிரிவினைகள் அதிகம் தோன்றியதால் ஐரோப்பா நாடு முழுவதும் பயணம் செய்தார். திருச்சபையின் அமைதி நிலவ பெரிதும் உழைத்தார். அச்சமயத்தில் இறையியலைப்பற்றியும், கடுந்தவம் பற்றியும், ஏழ்மை வாழ்வைப்பற்றியும் பல நூல்களை எழுதினார். இவரின் பயணத்தின்பியோது இவரால் தொடங்கப்பட்ட ஆதீன மடத்தில், இறைவேண்டல் செய்யும் வேளையில் இறந்தார். 

செபம்:
மூவொரு இறைவா! புனித பெர்னார்டை, உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பற்றி எரிய செய்தீர். உம் திருச்சபையில் அறிவொளியை வீசவும், அடுத்தவரின் மீது அன்பு கொள்ளவும் அவரை ஏற்படுத்தினீர். அவரைப்போல நாங்களும் உம்மால் தூண்டப்பட்டு, உமது தூய ஆவியின் வழிநடத்துதலில் வழிநடக்க இறைவா உம்மருளை தாரும்.

---JDH---
St. Bernard of Clairvaux

Bernard was born in the year 1090 in France to father Tescelin, Lord of Fontaines and mother Aleth of Mont bard. Bernard was belonging to a very high noble family. He joined the very austere institute of Cistercian Order, after the death of his mother. He, along with twelve others founded a new Monastery with the name Claire Vallee on June 25, 1115, which was later developed into the Abbey of Clair Vaux. He preached for the second crusade as instructed by Pope Eugene-III and made awareness among the people in France and Germany about the crusade. He was offered Bishop post so many times but refused to accept it. Bernard played a leading role in the development of the cult of the Holy Virgin Mary. He was blessed as an Abbot by the Bishop William of Champeaux. When there was two popes Innocent-II and Anacletus-II were elected at the same time, King Louis of France convened a General Council of French Bishops to settle the matter. St. Bernard was asked to judge between the rival popes. He judged in favor of Pope Innocent-II and that was accepted by everyone.

St. Bernard was canonized by Pope Alexander-III on January 18, 1174. In 1830 Pope Pius-VIII declared St. Bernard as Doctor of the Church.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 20)

✠ க்ளேர்வாக்ஸ் நகர் புனிதர் பெர்னார்ட் ✠
(St. Bernard of Clairvaux)

மடாதிபதி, ஒப்புரவாளர், மறைவல்லுநர்:
(French Abbot, Confessor, Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 1090
ஃபவுன்டைன்-லெஸ்-டிஜோன், ஃபிரான்ஸ்
(Fontaine-lès-Dijon, France)

இறப்பு: ஆகஸ்டு 20, 1153 (வயது 63)
க்ளேர்வாக்ஸ், ஃபிரான்ஸ்
(Clairvaux, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

புனிதர் பட்டம்: ஜனவரி 18, 1174 
திருத்தந்தை 3ம் அலெக்சாண்டர்
(Pope Alexander III)

முக்கிய திருத்தலங்கள்:
ட்ரோய்ஸ் பேராலயம், வில்லே-சௌஸ்-ல-ஃபெர்ட்,
(Troyes Cathedral, Ville-sous-la-Ferté)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 20

பாதுகாவல்: 
சிஸ்டர்சியன் சபையினர் (Cistercians), பர்கண்டி (Burgundy), தேனீ வளர்ப்பவர்கள் (Beekeepers), மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள் (Candle makers), ஜிப்ரால்டர் (Gibraltar), அல்ஜீசிராஸ் (Algeciras), குயின்ஸ் கல்லூரி (Queens' College), கேம்பிரிட்ஜ் (Cambridge), 
ஸ்பீயர் பேராலயம் (Speyer Cathedral), நைட்ஸ் டெம்ப்ளர் (Knights Templar), பினன்கொனம் (Binangonan), ரிஸால் (Rizal)

புனித பெர்னார்ட், ஒரு ஃபிரெஞ்ச் மடாதிபதியும் (French abbot), சிஸ்டெர்சியன் சபையின் (Cistercian order) பிரதான சீர்திருத்தவாதியும், பெனடிக்டின் துறவறத்தின் (Benedictine monasticism) சீர்திருத்தங்களின் முக்கிய தலைவருமாவார்.

பெர்னார்டின் தந்தை, “டெஸ்செலின்” (Tescelin de Fontaine), “ஃபவுன்டைன்-லெஸ்-டிஜோன்” (Fontaine-lès-Dijon) பிரபு ஆவார். இவரது தாயார், “அலேத்” (Alèthe de Montbard) ஆவார். இவர்கள் இருவமே “பர்கண்டியின்” (Burgundy) பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமது ஒன்பது வயதில் கல்வி கற்க ஆரம்பித்த பெர்னார்ட், இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகள், செய்யுள் போன்றவற்றை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கல்வியில் அவர் கொண்ட வெற்றிகள், அவரது ஆசிரியர்களிடம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. திருவிவிலியத்தை கற்கவும், ஆராய்வதற்காகவும், அவர் இலக்கியத்தில் சிறந்து விளங்க விரும்பினார். அவர், அன்னை கன்னி மரியாளிடம் சிறப்பு பக்தி கொண்டிருந்தார். பிற்காலத்தில், விண்ணரசி அன்னையைப் பற்றி பல்வேறு படைப்புகளை எழுதினர்.

தத்துவ அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வீக புரிதலுக்கான பகுத்தறிவு அணுகுமுறைக்கு எதிராக, பெர்னார்ட் ஒரு உடனடி விசுவாசத்தைப் பிரசங்கித்தார், அதனை பரிந்துரை செய்தது அன்னை மரியாள் ஆவார்.

பெர்னார்டுக்கு பத்தொன்பது வயதாகையில் அவரது அன்னை மரித்துப்போனார். தமது இளமைக்காலத்தில் அவர் சோதனைகளிலிருந்து தப்பிவிடவில்லை. இச்சமயத்தில், உலக நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டு, தனிமை மற்றும் செப வாழ்வை தேர்ந்தெடுக்க விரும்பினார். தமது 22 வயதில், ஒரு தேவாலயத்தில் அவர் செபித்துகொண்டிருக்கையில், “சிடாக்ஸ்” (Cîteaux) நகரிலுள்ள “சிஸ்டேர்சியன்” (Cistercian Monks) துறவியர் மடத்தில் இணைய கடவுள் அழைப்பதாக உணர்ந்தார். பெர்னார்டின் நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என்று சுமார் முப்பது பேர் இவருடன் சேர்ந்து துறவு மடத்தில் இணைய பெர்னார்டின் சாட்சியம் தவிர்க்க இயலாத முக்கிய காரணியாய் அமைந்தது.

மூன்று ஆண்டுகளின் பிறகு, (Val d'Absinthe) எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஒடுங்கிய பள்ளத்தாக்கில் துறவு மடமொன்றை நிறுவுவதற்காக அனுப்பப்பட்டார். மரபுப்படி, கி.பி. 1115ம் ஆண்டு, ஜூன் மாதம், 25ம் நாளன்று, துறவு மடத்தை நிறுவினார். அதற்கு “கிளேர் வள்ளி” (Claire Vallée) என்று பெயரிட்டார். பின்னர் அது மருவி, “க்ளேர்வாக்ஸ்” (Clairvaux) என்றானது. அங்கே, உடனடியாக விசுவாசத்தை போதித்து பிரசங்கிக்க தொடங்கினார். அதற்கு பரிந்துரையாளராக அன்னை மரியாள் இருந்தார்.

கி.பி. 1130ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 13ம் நாள், திருத்தந்தை “இரண்டாம் ஹானரியல்” (Pope Honorius II) மரித்ததும், திருச்சபையில் ஒரு கலகம் வெடித்தது. ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் “ஆறாம் லூயிஸ்” (King Louis VI of France) “எடம்ப்ஸ்” (Étampes) எனுமிடத்தில் ஃபிரெஞ்ச் ஆயர்களின் தேசிய மகாசபையைக் கூட்டினார். திருத்தந்தைப் பதவிக்கான போட்டியாளர்களிடையே தீர்ப்பு வழங்க பெர்னார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். “எடம்ப்ஸ்” (Étampes) மகா சபையின் பின்னர், திருத்தந்தை “இரண்டாம் இன்னொசன்டிற்கான” (Pope Innocent II) அரசனின் ஒதுக்கீட்டிற்காக, பெர்னார்ட் இங்கிலாந்தின் அரசன் “முதலாம் ஹென்றியுடன்” (King Henry I of England) பேச்சு நடத்தினார். இங்கிலாந்தின் பெருமளவு ஆயர்கள், எதிர் திருத்தந்தை “இரண்டாம் அனக்லெட்டஸுக்கு” (Antipope Anacletus II) ஆதரவு தெரிவித்ததால், அரசன் நம்பிக்கையற்றிருந்தார். இன்னொசன்டுக்கு ஆதரவு அளிக்குமாறு பெர்னார்ட் அரசனை வற்புறுத்தினார். பெர்னார்டின் நண்பர் “நார்பர்ட்” (Norbert of Xanten) மூலமாக, இன்னொசன்டுக்கு ஆதரவளிக்க ஜெர்மன் முடிவு செய்தது. எனினும், தூய ரோம பேரரசர் “இரண்டாம் லோதைரை” (Lothair II, Holy Roman Emperor) சந்திக்க செல்கையில் பெர்னார்ட் உடன் வரவேண்டுமென இன்னொசன்ட் வலியுறுத்தினார். திருத்தந்தைப் பதவிக்கான மொத்த யுத்தமும் கி.பி. 1138ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் நாளன்று, “இரண்டாம் அனக்லெட்டஸ்” (Antipope Anacletus II) இறந்ததும் முடிவுக்கு வந்தது.

முன்னர் திருச்சபைக்குள்ளே ஏற்பட்ட பிரிவினைகளுக்கு முடிவுகட்ட உதவிய காரணங்களால், பெர்னார்ட் இப்போது மதங்களுக்கு எதிரான கொள்கைகளுக்கெதிராக (Heresy) போரிட அழைக்கப்பட்டார். ஜூன் 1145ல், பெர்னார்ட் தென்-ஃபிரான்ஸ் பிராந்தியங்களுக்கு பயணித்தார். அங்கே அவரது போதனைகளும் பிரசங்கங்களும் மதங்களுக்கு எதிரான கொள்கைகளுக்கெதிராக ஆதரவை அதிகரித்தது. “எடிஸ்ஸா முற்றுகையின்” (Siege of Edessa) கிறிஸ்தவ தோல்விக்குப் பிறகு, இரண்டாம் சிலுவைப்போரைப் (Second Crusade) பிரசங்கிக்க, திருத்தந்தை அவர்கள், பெர்னார்டை நியமித்தார். சிலுவைப்போரின் தோல்விகள் காரணமாக, பெர்னார்டின் வாழ்க்கையின் இறுதி ஆண்டுகள் துன்பங்கள் நிறைந்ததாக இருந்தன. தோல்விக்கான முழு பொறுப்பும் அவர் மீதே சுமத்தப்பட்டன.

40 வருடங்கள் ஒரு துறவியாக வாழ்ந்த பெர்னார்ட், தமது 63 வயதில் மரித்தார். புனிதர்களின் நாட்காட்டியில் (Calendar of Saints) இடம் பிடித்த முதல் “சிஸ்டேர்சியன்” (Cistercian) துறவி இவரேயாவார். திருத்தந்தை “மூன்றாம் அலெக்சாண்டரால்” (Pope Alexander III) புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், திருத்தந்தை “எட்டாம் பயசால்” (Pope Pius VIII) கி.பி. 1830ம் ஆண்டு திருச்சபையின் மறைவல்லுனராக (Doctor of the Church) பிரகடணம் செய்யப்பட்டார்.

புனித ரொனால்ட் (-1158)(ஆகஸ்ட் 20)

புனித ரொனால்ட் (-1158)

(ஆகஸ்ட் 20)

இவர் ஸ்காட்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஓர்க்னே தீவை சார்ந்தவர்.
சிறு வயதிலேயே இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டு,  துடிப்போடு இருந்த இவர், பின்னாளில் இராணுவ வீரராக மாறி, நாட்டிற்காகப் பணிபுரியத் தொடங்கினார்.

"எங்களுடைய பகுதியில் கோயிலே இல்லை" என்று மக்கள் மிகவும் வருந்திக் கொண்டிருந்த வேளையில், இவர் "நான் உங்களுக்கு ஒரு கோயிலைக் கட்டித் தருகிறேன்" என்று வாக்குறுதி தந்து, ஒரு கோயிலைத் கட்டித் தந்தார்.

அவ்வாறு இவர் கட்டித்தந்த கோயில் தான் கிர்க்வால் என்ற இடத்தில் உள்ள புனித மாக்னுஸ் பெருங்கோயில் ஆகும். இவர் தான் சொன்னது போன்றே ஒரு கோயிலைக் கட்டி தந்ததால், மக்கள் இவரை உயர்வாக மதிக்கத் தொடங்கினார்கள்.

இதன் பிறகு இவர் கடவுள்மீது இன்னும் மிகுதியான நம்பிக்கையோடு வாழத் தொடங்கினார். 

ஒருமுறை நாத்திகர்கள் சிலர் இவரைக் கிறிஸ்துவை மறுதலிக்க சொன்னார்கள். அதற்கு இவர், "எனது உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் அவர்கள் வெகுண்டெழுந்து இவரைக் கொலை செய்தார்கள்



August 20
 
Saint of the day:
Saint Ronald
 
Prayer:
 
Saint Ronald's Story
A warrior chieftain in the Orkney Islands, Scotland. According to tradition, he made a vow to build a church, fulfilling the pledge by erecting the cathedral of St. Magnus at Kirkwall. 
 
Rognvald grew up in Norway, where he was known as Kali Kolsson. He also had a sister, Ingirid. Kali was a fine poet and in one of his poem claims to possess nine exceptional skills; having mastered board games, runes, reading and writing, handicrafts such as metal work, carving and carpentry, skiing, archery, rowing, music, and poetry. The sagas support this view of Kali as able and skilled: “Kali Kolsson was of average height, well-proportioned and strong limbed, and had light chestnut hair. He was very popular and a man of more than average ability.”