புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

09 September 2020

புனித ஹியாசிந்த் (1185-1257)(செப்டம்பர் 09)

புனித ஹியாசிந்த் (1185-1257)

(செப்டம்பர் 09)
இவர் போலந்து நாட்டைச் சார்ந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்.

தனது பள்ளிக் கல்வியை கிராகோ (Krakowk) என்ற இடத்தில் இருந்த தனது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்த இவர், 1220 ஆம் ஆண்டு உரோமை நகருக்குச் சென்றார். அப்பொழுதுதான் இவர் புனித தோமினிக்கைச் சந்தித்தார். அவர் இவரைத் தனது சபையில் சேர்த்துக்கொண்டு, இவரைத் தன் சொந்த நாட்டிற்கே அனுப்பி வைத்து, நற்செய்தி அறிவிக்கச் செய்தார்.

இதன்பிறகு இவர் போலந்து நாட்டிற்கு வந்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். நற்செய்தி அறிவிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், போலந்து, ஆஸ்திரியா,இரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து, பலரையும் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.

நற்கருணை ஆண்டவரிடமும் புனித கன்னி மரியாவிடமும் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்த இவர், இருவருடைய துணையால் பல ஆபத்துகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டார்.

இப்படி ஆர்வத்தோடு நற்செய்திப் பணி செய்த இவர், மூப்பெய்தியதும், எந்த இடத்தில் தனது பணியைத் தொடங்கினாரோ, அந்த இடத்திற்கே வந்து, தன் இறுதி நாள்களை இறைவேண்டலில் செலவழித்து, தனது ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார். இவருக்கு 1594 ஆம் ஆண்டு திருத்தந்தை எட்டாம் கிளமெண்டால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இவரது விழா ஆகஸ்ட் 17 அன்றும் கொண்டாடப்படுகிறது.

துறவி மரியா எத்திமியா Maria Euthymia. September 9

இன்றைய புனிதர் :
(09-09-2020)

துறவி மரியா எத்திமியா Maria Euthymia
பிறப்பு
8 ஏப்ரல் 1914,
ஹால்வேர்தா, நார்ட்ரைன்
வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி

இறப்பு
9 செப்டம்பர் 1955,
மியூண்டர், நார்ட்ரைன்
வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி

இவர் 1934 ஆம் ஆண்டு இரக்கத்தின்அருள்சகோதரர்கள் Barmherzigen Schwestern என்ற துறவற சபையில் சேர்ந்து 1940 ல் துறவியானார்.இவர் தனது வார்த்தைப்பாடுகளை பெற்ற பின்னர்,இரண்டாம் உலகப் போரில் அடிப்பட்ட மக்களுக்காக
பணியாற்றினார். நோயாளிகளை அன்புடன்பராமரித்தார். போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் மனதில், மகிழ்ச்சியை வளர்க்க பெரிதும் உழைத்தார். இவர் தன்னுடைய அன்பான பேச்சாலும், அரவணைக்கும் இதயத்தாலும், பாதித்த மக்களின் வாழ்வை மாற்றினார். சோக வாழ்விலிருந்து விடுபட்டு, சுமுகமான வாழ்வுக்கு வழிகாட்டினார்.

இவர் மக்களால் "அன்பின் வானதூதர்" என்றழைக்கப்பட்டார். தன்னுடைய அன்பான புன்முறுவலுடன் வாழ்வில் எதுவுமே இல்லை என்று வாழ்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கினார். அனைவருக்கும் தன் முழு அன்பை வழங்கினார். ஏராளமான மக்களின் வாழ்வில் நம்பிக்கையை வளர்த்து நல்வாழ்வை அமைத்துக்கொடுத்தார்

செபம்:

ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் என்று மொழிந்த இறைவா! ஆதரவற்ற மக்களுக்கு தாயாக இருந்து வாழ்வுக்கு வழிகாட்டிய, மரியா எத்திமியாவின் வாழ்வை, நாங்கள் பின்பற்ற உமதருள் தாரும். இன்றும் எங்களை சுற்றி,
துன்பத்தில் வாழும் சகோதர, சகோதரிகளை நாங்கள் அன்போடு பாதுகாத்து, நீர் எமக்குக் காட்டும் அன்பை நாங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ, உம் அருளைத் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (09-09-2020)

Blessed Maria Euthymia Üffing

One of eleven children of August Üffing and Maria Schmidt, Emma grew up in a pious family in a small town. At 18 months, she developed a form of rickets that stunted her growth and left her in poor health the rest of her life. Made her First Communion on 27 April 1924, and was Confirmed on 3 September 1924. Emma worked on her parents' farm as a child, and by her early teens began to feel a call to religious life. She worked as an apprentice in house keeping management at the hospital in Hopsten, Germany, completing her studies in May 1933. Entered the Sister of the Congregation of Compassion (Klemensschwestern) on 23 July 1933, taking the name Euthymia; she made her simple vows on 11 October 1936, and her final profession on 15 September 1940. Assigned to work at Saint Vincent's Hosptial in Dinslaken, Germany in October 1936. Graduated with distinction from the nursing program on 3 September 1939. Worked as nurse through World War II, and in 1943 she was assigned to nurse prisoners of war and foreign workers with infectious diseases. She worked tirelessly for her charges, caring for them, praying for them, and insuring they received the sacraments. After the war she was given supervision of the huge laundry rooms of the Dinslaken hospital, her order's mother-house, and the Saint Raphael Clinic in MÜnster, Germany; what little spare time she had was spent in prayer before the Eucharist.

Born :
8 April 1914 in Halverde, Germany as Emma Uffing

Died :
morning of 9 September 1955 at MÜnster, Germany of cancer

Beatified :
7 October 2001 by Pope St. John Paul II

---JDH---Jesus the Divine Healer---