புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 June 2020

புனித வின்சென்ஸோ ஜெரோசா (1784-1847) June 28

புனித வின்சென்ஸோ ஜெரோசா (1784-1847)
இவர் இத்தாலியில் உள்ள லோவேரே என்ற இடத்தில் பிறந்தவர். 

இவர் தன்னுடைய பதின்வயதில் தனது பெற்றோரை இழந்து அனாதையானார். இதனால் இவருக்கு ஏழைகள்மீது தனிப்பட்ட அன்பு உண்டானது.

1824 ஆம் ஆண்டு இவருக்கு பர்த்தலமேயு கேபிடானியோ என்பவருடைய நட்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து 'அன்பின் பணியாளர்கள்' என்ற சபையைத் தோற்றுவித்தார்கள்.

இச்சபை மூலம் இவர்கள் இருவரும் நோயாளர்களைக் கவனித்தும், ஏழைகளுக்கு உதவிசெய்தும், வறிய நிலையிலிருந்த குழந்தைகளுக்கு கல்வியும் புகட்டி வந்தார்கள்.

1833ஆம் ஆண்டு பர்த்தலமேயு கேபிடானியோ திடீரென இறந்து விடவே, இவரே சபையை முன்னின்று வழி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்குப் பின்பு இவர் நோயாளர்களைக் கவனித்துகொள்வதிலும், ஏழைகளுக்கு உதவிசெய்வதிலும், வறியநிலையிலிருந்த குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

இதனால் இவருடைய உடல்நலம் குன்றி 1847ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1975 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் புனிதர் பட்டம் கொடுத்தார்

அர்ச். பொத்தாமியானாவும் துணைவரும்* *வேதசாட்சிகள் - (கி.பி. 205).* June 28

*ஜூன் மாதம் 28-ம் தேதி* 

*Ss. Potamiana & Co., MM.*                
*அர்ச். பொத்தாமியானாவும் துணைவரும்* 
*வேதசாட்சிகள் - (கி.பி. 205).*     
பொத்தாமியானா என்பவள் சிறுவயதிலே பக்தி விசுவாசமுள்ள தாயால் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு தேவையான கல்வியை ஒரிஜின் என்னும் பெயர்பெற்ற சாஸ்திரியால் கற்பிக்கப்பட்டாள். இப்புண்ணிய மாது  பிறமதத்தைச் சார்ந்த ஒருவனுக்கு அடிமையாக விற்கப்பட்டிருந்தாள். பொத்தாமியானா இளம் வயதும் அழகும் நிறைந்தவளாயிருந்ததால் இவளுடைய எஜமான் இவள் மட்டில் கெட்ட எண்ணம் கொண்டு, இவளை பாவத்திற்கு சம்மதிக்கும்படி முயற்சித்தும், இவள் அதற்கு இணங்காததினால் கோப வெறிகொண்டு இவளை நாட்டதிகாரிக்குக் கையளித்து, இவளைத் தன் ஆசைக்கு இணங்கச் செய்தால் பெரும் பணத்தை அவனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். அவனும் அவ்வாறே பொத்தாமியானாவுக்கு நய பயத்தைக் காட்டி, உன் எஜமான் சொற்படி செய் என்றான். தெய்வ பயமுள்ள அப்புண்ணிய மாது: “நான் எப்பேர்ப்பட்ட கொடிய சாவுக்கும் தயாராயிருக்கிறேன், ஆனால் நீர் கூறும் பெரும் பாவத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்” என்றாள். அதிபதியின் கட்டளைப்படி பாசிலிதெஸ் என்னும் சேவகன் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் வேதசாட்சியைப் போட்டான். சற்று நேரத்திற்குள் பொத்தாமியானா பிரமாணிக்கமாய் ஊழியம் செய்த தன் தேவ பத்தாவிடம் போய்ச் சேர்ந்தாள். தன்னைக் கொப்பரையில் போட்ட சேவகனுக்கு வேதசாட்சி தரிசனமாகி கூறிய புத்திமதியால் அவனும் ஞானஸ்நானம் பெற்று வேதசாட்சி முடி பெற்றான்.             

*யோசனை*
ஒருவர் வீட்டில் வேலை செய்வதால் பாவமுண்டாகுமென்று அறிந்து, அதை விடாமல் பாவத்தில் புரளும் கிறீஸ்தவர்கள், பொத்தாமியானாவுடைய நடத்தையைக் கண்டு வெட்கி தலைகுனிவார்களாக.

லியோன்ஸ் நகர புனிதர் இரேனியஸ் St. Irenaeus of Lyons June 28

† இன்றைய புனிதர் †
(ஜூன் 28)
✠ லியோன்ஸ் நகர புனிதர் இரேனியஸ் ✠
(St. Irenaeus of Lyons)

ஆயர், மறைசாட்சி:
(Bishop and Martyr)

பிறப்பு: கி.பி. 130
ஆசியா மைனரிலுள்ள ஸ்மைர்னா (தற்போதய துருக்கி)
(Smyrna in Asia Minor (modern-day İzmir, Turkey)

இறப்பு: கி.பி. 202 (வயது 72)
லுக்டுனும், கௌல் (தற்போதய லியோன், ஃபிரான்ஸ்)
(Lugdunum in Gaul (modern-day Lyon, France)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு கத்தோலிக்கம்
(Eastern Catholicism)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனிய திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
கிழக்கு அசிரியன் திருச்சபை
(Assyrian Church of the East)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஜூன் 28

லியோன்ஸ் நகர புனிதர் இரேனியஸ், அந்நாளைய ரோமப் பேரரசின் ஒரு பகுதியாய் விளங்கிய “கௌல்” (Gaul) பிரதேசத்திலுள்ள (தற்போது லியோன், ஃபிரான்ஸ்) “லுக்டுனும்” என்னும் மறைமாவட்டத்தின் ஆயரும் (Bishop of Lugdunum), துவக்க கால திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும், கிறிஸ்தவ மறையின் வாத வல்லுனரும் ஆவார். இவரின் எழுத்துகள் ஆரம்ப கால கிறிஸ்தவ இறையியலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர் திருத்தூதர் யோவானின் (St. John the Evangelist) சீடரான புனிதர் “பொலிகார்ப்பு’வின்” (St. Polycarp) சீடராவார்.

தொடக்க காலத்தில் "மறை நூல்" (Scriptures) என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த விவிலிய நூல்களை கடவுள் மனிதரோடு செய்துகொண்ட "உடன்படிக்கையை" (Covenant) குறிக்கும் விதமாக “ஏற்பாடு” (Testament) என்று முதன்முதலில் அழைத்தவர் இவரே.

கி.பி. 185ம் ஆண்டளவில், இவர் ஞானக் கொள்கை (Gnosticism) என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தி “வாலண்டைன்” (Valentinus) என்பவரின் படிப்பினையை தப்பறை என அடையாளம் காட்டினார். அக்கொள்கையினை சாடி இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்த இவர், தமது சமகாலத்தவர்களில் பலரைப் போலல்லாமல், ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.

கி.பி. 161–180ம் ஆண்டுகளினிடையே ரோமப் பேரரசன் (Roman Emperor) “மார்கஸ் ஔரெலியஸ்” (Marcus Aurelius) என்பவனின் ஆட்சி காலத்தில் நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது, இரேனியஸ் “லியோன்” (Church of Lyon) ஆலயத்தின் குருவாக இருந்தார். இக்காலத்தில், நகரத்தின் பல மறைப்பணியாளர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலர் சேர்ந்து இரேனியஸிடம் “எதிர் கிறிஸ்தவம் மற்றும் அதன் கொள்கைகள்” சம்பந்தமான ஒரு கடிதத்தை கொடுத்து, அதனை ரோம் நகர் சென்று, திருத்தந்தை “எலுதேரியஸ்” (Pope Eleutherius) அவர்களிடம் கையளிக்க வேண்டினார்கள். கி.பி. 177ம் ஆண்டு, இப்பணியை நிறைவேற்ற அவர் ரோம் பயணித்தார். இந்த பணியானது, அந்த சந்தர்ப்பத்தில் அவரது தகுதிக்கு உறுதியான சாட்சியமாக விளங்கியது.

இரேனியஸ், ரோம் நகரிலிருந்த காலத்தில் “லியோன்” (Lyon) நகரில் கிறிஸ்தவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இரேனியஸ் “கௌல்” (Gaul) திரும்பினார். “புனிதர் போதினஸ்” (Saint Pothinus) மறை சாட்சியாக கொல்லப்பட, இரேனியஸ் லியோன் நகரின் இரண்டாவது ஆயராக பொறுப்பேற்றார்.

இவர் ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் இவருடைய பணிகள் பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தன என்று சுமார் நூற்றைம்பது ஆண்டுகளின் பிறகு இவரைப் பற்றிய சரித்திரங்களை எழுதிய “யூசேபியஸ்” (Eusebius) கூறுகிறார். கி.பி. 190 அல்லது 191ம் ஆண்டு, நடைமுறையிலுள்ள கொண்டாட்டங்களை விடாமுயற்சியுடன் கொண்டாடும் ஆசியா மைனர் கிறிஸ்தவ சமுதாயங்களை திசை திருப்ப வேண்டாமென்று திருத்தந்தை முதலாம் விக்டர் (Pope Victor I) அவர்களிடம் தமது செல்வாக்கினை செலுத்தியதாக எழுதியிருக்கிறார்.

மரியாளைப் பற்றி விரிவாக எழுதிய முதல் திருச்சபைத் தந்தை இவரே.
"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியாள் கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார். மரியாள் தன் கீழ்ப்படிதலால் மனுக்குலம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்." 
~ புனித இரேனியஸ்

இவரது மரணம் பற்றின தகவல்கள் ஏதுமில்லை. ஆனால், ரோமன் கத்தோலிக்க திருச்சபையும், சில மரபுவழி திருச்சபைகளும் இவரை மறைசாட்சியாக ஏற்கின்றன. கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூன் 28 ஆகும். லூதரனியமும், அதே நாளில் இவரின் விழாவினைச் சிறப்பிக்கின்றது. மரபுவழி திருச்சபைகளில் இவரின் விழா நாள், ஆகஸ்ட் 23 ஆகும்.


இன்றைய புனிதர் :
(28-06-2020)

புனித இரேனியுஸ் (St. Irenaeus)
ஆயர், மறைவல்லுநர், மறைசாட்சி

பிறப்பு 
130
    
இறப்பு 
28 ஜூன் 200

இரேனியுஸ் என்ற சொல்லுக்கு "அமைதி விரும்பி" என்பது பொருள். இவர் தம் பெயருக்கேற்ப அமைதியின் மூலம் பல அருஞ்செயல்களை நிலைநாட்டி திருச்சபைக்கு பேரும் புகழும் தேடித்தந்தார். இவர் 2 ஆம் நூற்றாண்டின் சிறப்பான மறைவல்லுநர். புனித போலிக்கார்ப்பின் சீடர் லயன்ஸ்(Lions) நகர்புறத்துக் கிறிஸ்தவர்களின் ஆயராயிருந்தார். இவர்களின் பொருட்டு ஒருமுறை உரோமை சென்றார். பிறகு ஒரு முறை சிறிய ஆசியாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்காக பரிந்துரைக்கவும் திருத்தந்தையை சந்திக்க சென்றார். 

இவர் ஆற்றிய திறமைமிக்க பெரும்பணி நாஸ்டிக் (Gnostic) என்று சொல்லப்பட்ட தப்பறையை தம் பெயருக்கே உரிய அமைதியான முறையில் எடுத்துரைத்ததாகும். தொடக்கத்தில் உருவமற்ற பொருள் ஒன்று இருந்தது. இதிலிருந்தே தெய்வ தன்மையுடனிருந்த ஒருவரின் குறுக்கீட்டால் இவ்வுலகம் தோன்றியது என்பது இந்த தப்பறையின் சாரமாகும். 177 ஆம் ஆண்டு கொடுங்கோல் மன்னனும் மெய்மறை பகைவனுமான மார்க் அவுரேலியஸ்(Aurelias) ஆட்சியில் பயங்கரமான வேதகலாபனை தோன்றியது. இச்சூழலில்தான், சிறையில் அகப்பட்ட குருக்கள் சிலர், சிறையில் அகப்படாத இவரை உரோமை நகருக்கு அனுப்பினார்கள். பிறகு இருவரும் பாப்பரசரிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறினர். இவர் உரோமையிலிருந்து வருவதற்குள் ஆயரான புனித போட்டினுசும்,(Botinus) அவரோடு குருக்கள் பலரும் வேதத்திற்காக தங்கள் இரத்தத்தை சிந்தி சாட்சி பகர்ந்து, இவ்வுலகை விட்டு பிரிந்தனர். இச்சூழலில் இவர் திரும்பி வரவே ஆயராக நியமிக்கப்பட்டார். 24 ஆண்டுகள் ஆயராக பணியாற்றி பலரை மனந்திருப்பினார். பல மெய்மறை நூல்களை எழுதினார். இதன் வழியாகவும் பலரை இறைவன் பால் ஈர்த்தார். 

செபம்:
வழிகாட்டும் தெய்வமே எம் இறைவா! திருச்சபையையும், கிறிஸ்துவத்தையும் இவ்வுலகில் நிலைநாட்ட புனித இரேனியுஸ் அரும்பாடுபட்டுள்ளார். நீர் அவரோடு இருந்து, அவரை வழிநடத்தியுள்ளீர். இன்றைய எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினரையும் நீர் ஆசீர்வதியும். உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த தேவையான அருள் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (28-06-2020)
St. Irenaeus

St. Irenaeus (meaning 'lover of peace') was born in about the year 130 A.D. in Smyrna in Asia Minor (modern Turkey) and was brought up in a Christian family. He was ordained a priest in 177 by the bishop of Lugdrinum in Gaul and functioned as the priest of the church of Lyons in Gaul (Modern France) when St. Pothinus was the bishop of Lyons. He worked with very difficult during the persecution of Emperor Marcus Aurelius. But St. Irenaeus succeeded St. Pothinus as the second bishop of Lyons. He was the disciple of St. Polycarp of Smyrna. During that period the Christians in the eastern side of the empire celebrated Easter on the 14th (full moon) of the Lunar Month Nissan of the Jewish calendar and they were called 'Quartodemani', a Latin word for the English word 'Fourteenthers'. Pope Victor-I excommunicated such people but St. Irenaeus met the pope and convinced him not to excommunicate such people, as their celebration was not considered divisive by Polycarp and not even by Pope Anicetus. Pope Victor-I withdrew the excommunication. St. Irenaeus also fought against Gnosticism, proposed by some scholarly people (Gnostics) who claimed that they have access to the secret knowledge imparted by Jesus Christ to only a few disciples. Gnostics thought that Christianity at that time was very simple and they wanted to give a little complicated philosophical structure for it, to make Christianity desirable by cultured people. The gnostics also taught that the universe and man were created by Demiurges (one of the 'Eon' or ray of light from the God of Light), who was thrown out of the Kingdom of God for his revolt against God, to use it for his rebellion against God. St. Irenaeus and others like Tertullian, Hippolytus, Origen and Clement fought against this gnostic group and they diminished in strength to very small proportion and then vanished.
---JDH---Jesus the Divine Healer---