புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

02 July 2020

புனிதர் ஒலிவர் ப்லங்கெட் July 2

† இன்றைய புனிதர் †
(ஜூலை 2)

✠ புனிதர் ஒலிவர் ப்லங்கெட் ✠
(St. Oliver Plunkett)
மறைசாட்சி, பேராயர், அனைத்து அயர்லாந்தின் பிரதான கிறிஸ்தவ குரு:
(Martyr, Archbishop and Primate of All Ireland)

பிறப்பு: நவம்பர் 1, 1625
லௌஃப்க்ரூ, மீத், அயர்லாந்து
(Loughcrew, County Meath, Ireland)

இறப்பு: ஜூலை 1, 1681 (வயது 55)
டைபர்ன், லண்டன், இங்கிலாந்து
(Tyburn, London, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 23, 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)

புனிதர் பட்டம்: அக்டோபர் 12, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலம்:
புனித பீட்டர்ஸ் ரோமன் கத்தோலிக்க ஆலயம், டிரோகேடா, அயர்லாந்து
(St. Peter's Roman Catholic Church, Drogheda, Ireland)

பாதுகாவல்:
அயர்லாந்தின் அமைதி மற்றும் நல்லிணக்கம்
(Peace and Reconciliation in Ireland)

நினைவுத் திருநாள்: ஜூலை 2

புனிதர் ஒலிவர் ப்லங்கெட், “அர்மாக்” உயர்மறைமாவட்டத்தின் ரோமன் கத்தோலிக்க பேராயரும் (Roman Catholic Archbishop of Armagh), அனைத்து அயர்லாந்தின் பிரதான கிறிஸ்தவ குருவும் (Primate of All Ireland) ஆவார்.

கி.பி. 1625ம் ஆண்டு, அயர்லாந்து நாட்டின் “லௌக்ரூ”, “மீத்” (Loughcrew, County Meath, Ireland) பிராந்தியத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், தமது பதினாறு வயது வரை “டப்லினி’லுள்ள” (Dublin) “தூய மரியாளின் துறவு மடத்தின் மடாதிபதியான” (Abbot of St Mary's) உறவினரிடம் கல்வி கற்றார். குருத்துவ கல்வியில் நாட்டம் கொண்ட ஒலிவர் ப்லங்கெட், கி.பி. 1647ம் ஆண்டு ரோம் பயணித்தார். இதே வேளையில் அயர்லாந்தில் “ஐரிஷ் கூட்டமைப்பு யுத்தங்கள் அல்லது பதினோரு ஆண்டு கால போர்” (Irish Confederate Wars or Eleven Years' War) தொடங்கியது. இந்த பதினோரு ஆண்டு கால யுத்தங்கள், முக்கியமாக “ஐரிஷ் குடி ரோமன் கத்தோலிக்கர்கள்”, “ஆங்கிலேயர்” மற்றும் “ஐரிஷ் ஆங்கிலிகன்” மற்றும் “புராட்டஸ்டன்ட்” (Native Irish Roman Catholics, English and Irish Anglicans and Protestants) சபையினரிடையே நடந்தது.

ஒலிவர் ப்லங்கெட், ரோம் நகரிலுள்ள ஐரிஷ் கல்லூரியில் (Irish College in Rome) இணைந்தார். கி.பி. 1654ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், ஐரிஷ் ஆயர்களால் ரோம் நகரில் அவர்களது பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் அயர்லாந்தின் “க்ராம்வெல்லியன் வெற்றி” (Cromwellian conquest of Ireland), (கி.பி. 1649-53) அயர்லாந்தில் ரோமன் கத்தோலிக்க மதத்தை தோற்கடித்தது. அதன் பின்னர், ரோமன் கத்தோலிக்க பொது நடைமுறைகள் தடை செய்யப்பட்டன. மற்றும், ரோமன் கத்தோலிக்க மத குருமார்கள் தூக்கிலிடப்பட்டனர். இதன் விளைவாக, ப்லங்கெட் பல ஆண்டுகாலம் அயர்லாந்து திரும்ப இயலாமல் போனது. ரோம் நகரிலேயே தங்கிவிட்ட ப்லங்கெட், கி.பி. 1657ம் ஆண்டு, இறையியல் பேராசிரியரானார். பிரச்சார கல்லூரியில் (College of Propaganda Fide) பணியாற்றினார். கி.பி. 1669ம் ஆண்டு, ஜூலை மாதம், 9ம் தேதி, அக்கல்லூரி அர்ச்சிக்கப்பட்ட அன்று, அவர் “அர்மாக்” பேராயராக (Archbishop of Armagh) நியமிக்கப்பட்டார். அதே வருடம், நவம்பர் மாதம், 30ம் தேதி, “கென்ட்” ஆயர் (Bishop of Ghent) “யூஜின்-ஆல்பர்ட்” (Eugeen-Albert) என்பவரால் அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். இறுதியில், கி.பி. 1670ம் ஆண்டு, மார்ச் மாதம், ஏழாம் தேதியன்று, ப்லங்கெட் ஐரிஷ் மண்ணில் மீண்டும் காலடி வைத்தார்.

ப்லங்கெட், அயர்லாந்து திரும்பிய பின்னர், சில குருமார்கள் மத்தியிலிருந்த போதைப் பழக்கத்தை நீக்கும் பணியை கையாண்டார். அயர்லாந்தை ஆண்ட இங்கிலாந்து அரசர் “இரண்டாம் சார்ளசின்” (Charles II of England) “பிரேடா” (Declaration of Breda) பிரகடனத்தின்படி, கி.பி. 1660ம் ஆண்டு, தண்டனை சட்டங்கள் (Penal Laws) தளர்த்தப்பட்டன. ஆகவே, ப்லங்கெட் கி.பி. 1670ம் ஆண்டு, “ட்ரோகேடா” (Drogheda) நகரில் ஒரு இயேசு சபை கல்லூரியை (Jesuit College) நிறுவினார். ஒரு வருட காலத்தின் பின்னர் அக்கல்லூரியின் மாணவர் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அதில், 40 பேர் எதிர் திருச்சபைகளைச் (Protestant) சேர்ந்த மாணவர்களாவர். இக்கல்லூரியை அயர்லாந்தின் முதல் ஒருங்கிணைந்த கல்லூரியாக ஆக்கினார். திருச்சபைக்கான இவரது ஊழியம் வெற்றிகரமாக இருந்தது. நான்கே வருட காலத்தில், 48,000 கத்தோலிக்கர்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கினார்.

அதன்பின்னர், ஏறக்குறைய கி.பி. 1673ம் ஆண்டு, கத்தோலிக்கர்களுக்கு எதிரான அலை வீசத் தொடங்கி, துன்புருத்தல்களாக மாறியது. பேராயர் ப்லங்கெட் தமது மறைப்பணிகளை இரகசியமாகவும் மாறு வேடத்திலும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது அநேக குருக்கள் நாடு கடத்தப்பட்டனர். பள்ளிகள் மூடப்பட்டன. தேவாலய திருப்பலிகள் இரகசியமாக நடைபெற்றன. கத்தோலிக்க பள்ளிகளும், குரு மாணவர்களின் கல்லூரிகளும் ஒடுக்கப்பட்டன. இவரது பங்கில் நடக்கும் எத்தகைய அரசியல் நிகழ்வுகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் பேராயர் என்ற காரணத்தால் ப்லங்கெட் பொறுப்பாக்கப்பட்டார்.

கி.பி. 1679ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டப்லின் கோட்டையில் (Dublin Castle) சிறை வைக்கப்பட்ட பேராயர் ப்லங்கெட், விசாரணைக்காக லண்டன் மாநகர் கொண்டு செல்லப்பட்டார். 15 நிமிடங்கள் திட்டமிட்டபடி, கலகம் விளைவித்த குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார். கி.பி. 1681ம் ஆண்டு, ஜூலை மாதம், முதல் தேதியன்று, “டைபர்ன்” (Tyburn) கிராமத்தில், அவர் தூக்கிலிடப்பட்டார்.

† Saint of the Day †
(July 2)

✠ St. Oliver Plunkett ✠

Martyr, Archbishop, and Primate of All Ireland:

Born: November 1, 1625
Loughcrew, County Meath, Ireland

Died: July 1, 1681 (Aged 55)
Tyburn, London, England

Venerated in: Catholic Church

Beatified: May 23, 1920
Pope Benedict XV

Canonized: October 12, 1975
Pope Paul VI

Major shrine: St. Peter's Catholic Church, Drogheda, Ireland

Feast: July 2

Patronage: Peace and Reconciliation in Ireland

Saint Oliver Plunkett was the Catholic Archbishop of Armagh and Primate of All Ireland who was the last victim of the Popish Plot. He was beatified in 1920 and canonized in 1975, thus becoming the first new Irish saint for almost seven hundred years.

Oliver Plunkett was born on 1 November 1625 in Loughcrew, County Meath, Ireland, to well-to-do parents with Hiberno-Norman ancestors. Until his sixteenth year, the boy's education was entrusted to his cousin Patrick Plunkett, Abbot of St Mary's, Dublin. As an aspirant to the priesthood, he set out for Rome in 1647, under the care of Father Pierfrancesco Scarampi of the Roman Oratory. At this time the Irish Confederate Wars were raging in Ireland; these were essentially conflicts between native Irish Catholics, English and Irish Anglicans, and Protestants. Scampi was the Papal envoy to the Catholic movement known as the Confederation of Ireland. Many of Plunkett's relatives were involved in this organization.

He was admitted to the Irish College in Rome and proved to be an able pupil. He was ordained a priest in 1654 and deputed by the Irish bishops to act as their representative in Rome. Meanwhile, the Cromwellian conquest of Ireland (1649–53) had defeated the Catholic cause in Ireland; in the aftermath, the public practice of Catholicism was banned and Catholic clergy were executed. As a result, it was impossible for Plunkett to return to Ireland for many years. He petitioned to remain in Rome and, in 1657, became a professor of theology. Throughout the period of the Commonwealth and the first years of Charles II's reign, he successfully pleaded the cause of the Irish Catholic Church, and also served as a theological professor at the College of Propaganda Fide. At the Congregation of Propaganda Fide on 9 July 1669, he was appointed Archbishop of Armagh, the Irish primatial see, and was consecrated on 30 November at Ghent by the Bishop of Ghent, Eugeen-Albert, count d'Allamont. He eventually set foot on Irish soil again on 7 March 1670, as the English Restoration of 1660 had begun on a basis of toleration. The pallium was granted him in the Consistory of 28 July 1670.

After arriving back in Ireland, he tackled drunkenness among the clergy, writing: "Let us remove this defect from an Irish priest, and he will be a saint". The Penal Laws had been relaxed in line with the Declaration of Breda in 1660 and he was able to establish a Jesuit College in Drogheda in 1670. A year later 150 students attended the college, no fewer than 40 of whom were Protestant, making this college the first integrated school in Ireland. His ministry was a successful one and he is said to have confirmed 48,000 Catholics over a 4-year period. The government in Dublin, especially under the Lord Lieutenant of Ireland, the Duke of Ormonde (the Protestant son of Catholic parents) extended a generous measure of toleration to the Catholic hierarchy until the mid-1670s.

Popish Plot:
On the enactment of the Test Act in 1673, to which Plunkett would not agree for doctrinal reasons, the college was closed and demolished. Plunkett went into hiding, traveling only in disguise, and refused a government edict to register at a seaport to await passage into exile. For the next few years, he was largely left in peace since the Dublin government, except when put under pressure from the English government in London, preferred to leave the Catholic bishops alone.

In 1678 the so-called Popish Plot, concocted in England by clergyman Titus Oates, led to further anti-Catholic action. Archbishop Peter Talbot of Dublin was arrested, and Plunkett again went into hiding. The Privy Council of England, in Westminster, was told that Plunkett had plotted a French invasion. The moving spirit behind the campaign is said to have been Arthur Capell, the first Earl of Essex, who had been Lord Lieutenant of Ireland in 1672-77 and hoped to resume the office by discrediting the Duke of Ormonde. However Essex was not normally a ruthless or unprincipled man, and his later plea for mercy suggests that he had never intended that Plunkett should actually die.

Trial:
Despite being on the run and with a price on his head, Plunkett refused to leave his flock. At some point before his final incarceration, he took refuge in a church that once stood in the townland of Killartry, in the parish of Clogherhead in County Louth, seven miles outside Drogheda. He was arrested in Dublin in December 1679 and imprisoned in Dublin Castle, where he gave absolution to the dying Talbot. Plunkett was tried at Dundalk for conspiring against the state by allegedly plotting to bring 20,000 French soldiers into the country, and for levying a tax on his clergy to support 70,000 men for rebellion. Though this was unproven, some in government circles were worried about the possibility that a repetition of the Irish rebellion of 1641 was being planned, and in any case, this was a convenient excuse for proceeding against Plunkett. The Duke of Ormonde, aware that Lord Essex was using the crisis to undermine him, did not defend Plunkett in public. In private, however, he made clear his belief in Plunkett's innocence and his contempt for the informers against him: "silly drunken vagabonds... whom no schoolboy would trust to rob an orchard".

Plunkett did not object to facing an all-Protestant jury, but the trial soon collapsed as the prosecution witnesses were themselves wanted men and afraid to turn up in court. Lord Shaftesbury knew Plunkett would never be convicted in Ireland, irrespective of the jury's composition, and so had Plunkett moved to Newgate Prison in London in order to face trial at Westminster Hall. The first grand jury found no true bill, but he was not released. The second trial has generally been regarded as a serious miscarriage of justice; Plunkett was denied defending counsel (although Hugh Reily acted as his legal advisor) and time to assemble his defense witnesses, and he was also frustrated in his attempts to obtain the criminal records of those who were to give evidence against him. His servant James McKenna, and a relative, John Plunkett, had traveled back to Ireland and failed within the time available to bring back witnesses and evidence for the defense. During the trial, Archbishop Plunkett had disputed the right of the court to try him in England and he also drew attention to the criminal past of the witnesses, but to no avail. Lord Chief Justice Sir Francis Pemberton addressing these complaints said to Plunkett: "Look you, Mr. Plunket, it is in vain for you to talk and make this discourse here now..." and later on again: "Look you, Mr. Plunket, don't misspend your own time; for the more, you trifle in these things, the less time you will have for your defense".

The Scottish clergyman and future Bishop of Salisbury, Gilbert Burnet, an eyewitness to the Plot trials, had no doubt of the innocence of Plunkett, whom he praised as a wise and sober man who wished only to live peacefully and tend to his congregation. Writing in the 19th century, Lord Campbell said of the judge, Pemberton, that the trial was a disgrace to himself and his country. More recently the High Court judge Sir James Comyn called it a grave mistake: while Plunkett, by virtue of his office, was clearly guilty of "promoting the Catholic faith", and may possibly have had some dealings with the French, there was never the slightest evidence that he had conspired against the King's life.

Execution:
Archbishop Plunkett was found guilty of high treason in June 1681 "for promoting the Roman faith", and was condemned to death. In passing judgment, the Chief Justice said: "You have done as much as you could to dishonor God in this case; for the bottom of your treason was your setting up your false religion, than which there is not anything more displeasing to God, or more pernicious to mankind in the world". The jury returned within fifteen minutes with a guilty verdict and Archbishop Plunkett replied: "Thanks be to God".

Numerous pleas for mercy were made but Charles II, although himself a reputed crypto-Catholic, thought it too politically dangerous to spare Plunkett. The French ambassador to England, Paul Barillon, conveyed a plea for mercy from his king, Louis XIV. Charles told him frankly that he knew Plunkett to be innocent, but that the time was not right to take so bold a step as to pardon him. Lord Essex, apparently realizing too late that his intrigues had led to the condemnation of an innocent man, made a similar plea for mercy. The King, normally the most self-controlled of men, turned on Essex in fury, saying: "his blood be on your head - you could have saved him but would not, I would save him and dare not".

Plunkett was hanged, drawn, and quartered at Tyburn on 1 July 1681, aged 55, the last Catholic martyr to die in England. His body was initially buried in two tin boxes, next to five Jesuits who had died previously, in the courtyard of St Giles in the Fields church. The remains were exhumed in 1683 and moved to the Benedictine monastery at Lamspringe, near Hildesheim in Germany. The head was brought to Rome, and from there to Armagh, and eventually to Drogheda where since 29 June 1921 it has rested in Saint Peter's Church. Most of the body was brought to Downside Abbey, England, where the major part is located today, with some parts remaining at Lamspringe.

புனித பெர்னார்டின் ரியலினோ ( St. Bernardin Riyalyno )இயேசு சபை குரு July 2

இன்றைய புனிதர் :
(02-07-2020)

புனித பெர்னார்டின் ரியலினோ 
( St. Bernardin Riyalyno )
இயேசு சபை குரு :
n
பிறப்பு : 1530
கார்ப்பி, இத்தாலி

இறப்பு : 2 ஜூலை 1616
நினைவுத் திருநாள் : ஜூலை 02

புனித பெர்னார்டின் ரியலினோ, லெச்சே ( Letche ) என்ற ஊரில் படித்தார். இதே நகரில் 42 ஆண்டுகள் இயேசு சபைக் குருவாக பணிபுரிந்தார். இரு நகரத்தாரும் "எங்கள் புனிதர்" என்றே இவரை அழைக்கின்றார். 
பொலோஞ்ஞா பல்கலைக்கழகத்தில் படிப்புகளை முடித்தார். வெளியுலகில் பெரிய பதவிகள் காத்திருந்தன. இவர்தன் இளம் வயதில் துலிண்ட்ரா என்ற அழகி ஒருத்தியை விரும்பினார். ஆனால் அவள் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டாள். இவர் ஓர் முன்கோபியாக இருந்தார்.
ஒருநாள் நேம்பினஸ் (Nepinas) வீதி வழியாக இரு துறவிகள் நடந்து செல்வதை இவர் பார்த்தார். புதிதாக தோன்றிய இயேசு சபையை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதை அறிந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் பலிபூசையிலும், சிறப்பாக மறையுரையிலும் பங்குபெற்றார். இவைகளே இவரது தேவ அழைத்தலுக்கு நல்ல வித்தாக திகழ்ந்தன.
அந்நாட்களில் இவரின் மனதில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. தம் அறையில் தனிமையில் செபமாலை ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது மரியன்னை குழந்தை இயேசுவுடன் வந்து காட்சி தந்தார். அவரின் குழப்பம் நீங்கியது. அவருக்குள் பேரமைதி நிலவியது.
பின்னர் இயேசு சபையில் சேர உறுதி பூண்டார். 1541ம் ஆண்டு அச்சபையில் சேர்ந்தார். 52 ஆண்டுகள் அச்சபையில் வாழ்ந்தார். உயர்ந்த படிப்புகள் படித்து பெரிய பட்டங்கள் பெற்றிருந்தும், தாழ்ச்சியின் பொருட்டு துணை சகோதரராகவே இருக்க விரும்பினார். ஆனால் இவரை குருத்துவத்திற்கு சபை தெரிந்து கொண்டது. குருவாக ஆனபின் லெச்சே என்ற இடத்திற்கு வந்தார். இங்கு "எல்லாருக்கும் எல்லாமாக" நடந்து அனைவரின் மதிப்பையும் அடைந்தார். இவர் ஏழைகளை பேணுவதில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் மரணப் படுக்கையில் இருந்ததை கேட்ட மக்கள் கல்லூரிக்கு படையெடுத்து சென்றனர். கல்லூரியின் நுழைவாயிலையே அடைக்க வேண்டியதாயிற்று. நகரின் தலைவரே தந்தையின் இறுதி ஆசி பெற வந்துவிட்டார். இவர் "ஓ மிகுந்த வணக்கத்துக்குரிய ஆண்டவளே" என்று மரியின் பெயரை உச்சரித்தவாறு தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.

செபம் :
தாழ்ச்சியின் மறு உருவே எம் இறைவா! 
உம் சாவிலும் கூட நீர் உம்மையே தாழ்த்தினீர். 
உமக்கு சான்று பகரும் விதமாக புனித பெர்னார்டினும், தம்மையே தாழ்த்தி, உமக்குரியவராக வாழ்ந்தார். 
பல திறமைகள் இருந்தபோதும், ஒன்றுமில்லாமை போல், உம்மோடு ஒன்றித்திருந்தார். அவரை முன்மாதிரியாக கொண்டு நாங்களும் வாழ்ந்திட உம் அருள் தந்து, எம்மை ஆசீர்வதித்து வழிநடத்தும். ஆமென் †

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (02-07-2020)

Saint Bernadine Realino

Born to the Italian nobility. Studied law and medicine at Bologna, Italy, receiving a law degree in 1556. Mayor of Felizzano, Italy. Judge. Chief tax collector in Alessandria, Italy. Mayor of Cassine, Italy. Mayor of Castelleone, Italy. Superintendent of the fiefs of the marquis of Naples, Italy.

Following a retreat, he became a Jesuit in 1564, and was ordained in 1567. Novice master in Naples, and then was sent to found a college in Lecce, a small city in the south of Italy. He quickly became the most loved man in Lecce due to his concern and charity. He made himself appear the receiver rather than the giver, and the poor and galley slaves were his special concern. One of the more interesting miracles attributed to him concerned his small pitcher of wine which was never empty until everyone present had had enough.

On Bernadine's death bed, the city's magistrates formally requested that in the after-life he take the city under his patronage. Unable to speak, he nodded, and died soon after, whispering the names of Jesus and Mary.

Born :
1 December 1530 in Carpi, Modena, Italy

Died :
2 July 1616 in Lecce, Italy of natural causes

Canonized :
22 June 1947 by Pope Pius XII

Patronage : 
Lecce, Italy (proclaimed on 15 December 1947 by Pope Pius XII)

---JDH---Jesus the Divine Healer---