புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

02 August 2020

புனித பீட்டர் ஜூலியன் ஏமார்ட் (1811-1868)(ஆகஸ்ட் 02)

புனித பீட்டர் ஜூலியன் ஏமார்ட் (1811-1868)
(ஆகஸ்ட் 02)
இவர் தெற்கு பிரான்ஸிலுள்ள  'லா மூர்' என்ற இடத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை ஒரு வணிகர். அதனால் இவர் தனது தந்தை செய்துவந்த தொழிலையே செய்து வந்தார். இவருக்கு 18 வயது நடக்கும் பொழுது, இவர் கடவுளுடைய அழைப்பை உணர்ந்தார். அதனால் இவர் தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இறை பணிக்காகத் தன்னை அர்ப்பணித்தார்.

1834 ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்ட இவர், சிலகாலம் கிரநோபல் என்ற இடத்தில் பங்கு பணியாளராகப் பணியாற்றி வந்தார். பின்னர் இவர் துறவற சபையில் சேர்ந்து, பணியாற்றத் தொடங்கினார். 

நற்கருணையின்மீது மிகுந்த பற்றுகொண்ட இவர், 1856 ஆம் ஆண்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் என இரண்டு துறவற சபைகளை நிறுவினார். இச்சபைகளின் மூலம் இவர் நற்கருனை பக்தியை மக்களிடம் தொடர்ந்து பரப்பி வந்தார்.

கடவுளின் வார்த்தையை வல்லமையோடு மக்களிடத்தில் எடுப்பத்துரைப்பதிலும், அவர்களைக் கடவுளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதிலும் ஈடுபாட்டுடன் பணியாற்றிய இவர் 1868 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவருக்கு 1925 ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 1962 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டன. இவர் நற்கருணையின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார்.


† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 2)

✠ புனிதர் பீட்டர் ஜூலியன் ஈமார்ட் ✠
(St. Peter Julian Eymard)

நற்கருணையின் திருத்தூதர்:
(Apostle of the Eucharist)

பிறப்பு: ஃபெப்ரவரி 4, 1811
லா மூர், க்ரெனோபுல், ஃபிரெஞ்ச் பேரரசு
(La Mure, Grenoble, French Empire)
 
இறப்பு: ஆகஸ்ட் 1, 1868 (வயது 57)
லா மூர், க்ரெனோபுல், ஃபிரெஞ்ச் பேரரசு
(La Mure, Grenoble, French Empire)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூலை 12, 1925
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: டிசம்பர் 9, 1962
திருத்தந்தை 23ம் ஜான்
(Pope John XXIII)

முக்கிய திருத்தலம்:
சேன்டி கிளாடியோ ஈ ஏன்ட்ரியா டேய் போர்கொக்நோனி
(Santi Claudio e Andrea dei Borgognoni)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 2

பாதுகாவல்:
நற்கருணை (Eucharist), நற்கருணைப் பாத்திரம் (Monstrance), நற்கருணை ஆராதனை (Eucharistic Adoration), நற்கருணை மகாசபை (Eucharistic Congress), ஆன்மீக ஆடை (Cope), ரோமன் கத்தோலிக்கம் மற்றும் சில லூதரன் மற்றும் ஆங்கிலிக்க திருச்சபைகளில் நற்கருணை ஆராதனையின்போது குருவால் அணியப்படும் ஆடை (Humeral Veil), ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் சபை (Congregation of the Blessed Sacrament)

புனிதர் பீட்டர் ஜூலியன் ஈமார்ட், ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க குருவும், புனிதரும் ஆவார். இவர், “ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் சபை” (Congregation of the Blessed Sacrament) என்ற ஆண்களுக்கான ஆன்மீக சபையையும், “ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் ஊழியர்கள்” (Servants of the Blessed Sacrament) என்ற பெண்களுக்கான ஆன்மீக சபையையும் நிறுவியவர் ஆவார்.

“நற்கருணையின் திருத்தூதர்” (Apostle of the Eucharist) என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இவரது நினைவுத் திருவிழா ஆகஸ்ட் மாதம், 3ம் தேதி ஆகும்.

தொடக்க காலம்:
பீட்டர் ஜூலியன் ஃபிரான்ஸ் நாட்டின் “லா மூர்” (La Mure) என்ற பகுதியில் 1811ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 4ம் நாள், பிறந்தார். இவர் சிறு வயது முதலே, இறைவனின் அதி தூய அன்னை மரியாளின் மீது பக்தி கொண்டிருந்தார். இவர் புதுநன்மை வாங்குவதற்கு முன்னமேயே, 1823ம் ஆண்டு, மார்ச் மாதம், 16ம் நாளன்று, “நோட்ரே-டேம் டு லாஸ்” (Notre-Dame du Laus) எனுமிடத்திலுள்ள அன்னை மரியாள் முதன்முதலாய் காட்சி தந்த புனித ஸ்தலமான “லாஸ் அன்னை அல்லது “பாவிகளின் அடைக்கலம்” (Our Lady of Laus or Refuge of Sinners) திருத்தலத்திற்கு நடைபயணமாகவே சென்றார். அதன் பின்னரே, “அன்னை லா சலேத்” (Notre-Dame de La Salette) திருத்தலத்தில் காட்சியளித்த சரிதம் பற்றி அறிந்தார். ஆன்ம புளகாங்கிதமடைந்த ஈமார்ட், ஃபிரான்ஸ் நாடு முழுதுமுள்ள அன்னை மரியாளின் பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

கி.பி. 1828ம் ஆண்டு, இவரது தாயார் மரித்ததும், இவர் “மாசற்ற மரியாளின் துறவற சபையின்” (Oblates of Mary Immaculate) புகுமுக துறவற நிலையில் இணைந்தார். ஆனால், உடல் நலம் ஒத்துழைக்காததால் சபையில் இருந்து விலகினார். ஜூலியன் நலிவுற்ற உடல்நலம் கொண்டவராயிருந்தார். குறிப்பாக, சுவாசப்பைகளின்  பலவீனமானமும், கடுமையான ஒற்றைத்தலைவலியும் அவருக்கு இருந்தது.

பின்னர், அவரது தந்தை மரித்ததன் பின்னர், 1831ம் ஆண்டு, “க்ரெனோபுல்” மறைமாவட்டத்திலுள்ள (Diocese of Grenoble) குருத்துவ கல்லூரியில் பயிற்சி பெற்று 1834ம் ஆண்டு, ஜூலை மாதம், 20ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். “ச்சாட்” (Chatte) எனும் நகரின் உதவி பங்குத் தந்தையாக மூன்று வருடங்கள் பணியாற்றினார். பின்னர், “மவுன்ட் செயின்ட் ஈனார்ட்” (Mount Saint-Eynard) பங்கின் பங்குத் தந்தையாக பணியாற்றினார். சில ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 1837ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 20ம் தேதியன்று, “லியோன்” (Lyon) எனுமிடத்திலுள்ள “மரியாளின் துறவற சபையில்” (Marists (the Society of Mary) இணைந்தார். புனித மரியாளின் பக்தியையும், திவ்விய நற்கருணை நாதரின் பக்தியையும் பரப்பினார்.

சபை நிறுவனர்:
1857ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதியன்று, பீட்டர் ஜூலியன், “ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் சபை” (Congregation of the Blessed Sacrament) என்ற ஆண்களுக்கான ஆன்மீக சபையைத் தொடங்கினார். இந்த சபையைச் சார்ந்த துறவிகள், முதல்முறை நற்கருணை பெறத் தயார் செய்யும் சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்பிப்பதில் ஆர்வமாக உழைத்தார்கள்.

மேலும் 1858ம் ஆண்டு, அருட்சகோதரி “மார்கரெட் குய்லோட்” (Marguerite Guillot) என்பவருடன் இணைந்து “ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் ஊழியர்கள்” (Servants of the Blessed Sacrament) என்ற பெண்களுக்கான ஆன்மீக சபையையை நிறுவினார்.

ஜூலியன் அடிக்கடி திவ்விய நற்கருணை உட்கொள்ளும் வழக்கத்தை கிறிஸ்தவர்கள் நடுவில் ஏற்படுத்த உழைத்தார்; திவ்விய நற்கருணை நாதரை அன்பு செய்ய மக்களுக்கு அறிவுரை வழங்கினார். வாரம் ஒருமுறையாவது நற்கருணை ஆராதனை செய்யும் பக்தி முயற்சியையும் இவர் மக்களிடையே பரப்பினார்.

அற்புதமான முறையில் திவ்விய நற்கருணையில் எழுந்தருளி இருக்கும் இயேசு கிறிஸ்துவுக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த பீட்டர் ஜூலியன் ஈமார்ட், கி.பி. 1868ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 1ம் தேதியன்று, தமது ஐம்பத்தி ஏழு வயதில், பக்கவாதம் நோயின் சிக்கல்களின் காரணமாக, “லா மியூர்” (La Mure) நகரில் மரணம் அடைந்தார்.

இவர், 1908ம் ஆண்டு, வணக்கத்திற்குரியவராகவும், 1925ம் ஆண்டு அருளாளராகவும் உயர்த்தப்பட்டார். 1962ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 9ம் நாள், திருத்தந்தை “23ம் ஜான்” (Pope John XXIII) இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

† Saint of the Day †
(August 2)

✠ St. Peter Julian Eymard ✠

Apostle of the Eucharist:

Born: February 4, 1811
La Mure, Grenoble, French Empire

Died: August 1, 1868 (Aged 57)
La Mure, Grenoble, French Empire

Venerated in: Roman Catholic Church

Beatified: July 12, 1925
Pope Pius XI

Canonized: December 9, 1962
Pope John XXIII

Major shrine:
Santi Claudio e Andrea dei Borgognoni

Feast: August 2

"The Eucharist was the pearl that shone in his eyes"

Saint Peter Julian Eymard, SSS, was a French Catholic priest and founder of two religious institutes: the Congregation of the Blessed Sacrament for men and the Servants of the Blessed Sacrament for women.

The great artist Auguste Rodin, who sculpted “The Thinker” and other world-famous pieces, met today’s saint in 1862 and joined his Congregation as a lay brother. Rodin was despondent over the death of his sister and wanted to abandon art and dedicate his life to God. Saint Peter Julian Eymard burned like a bonfire for God, but this was one vocation his flames would not consume. Father Eymard could see Rodin’s prodigious talent in an evocative bust Rodin sculpted of the future saint while he was a religious brother. Eymard told Rodin to return to the world to pursue his artistic calling. So while Father Eymard was as apostolic and demanding as any saint, he was also just as wise as any saint. Not every man who felt a vocation truly had one. It was for the superior to discern the validity of the calling. Father Eymard knew this well from personal experience. He had lived at least three priesthoods inside of his one priesthood: as a diocesan priest in a parish, as a religious priest in the Marist Order, and as the founder of the Congregation of the Most Blessed Sacrament.

There was never a time when Peter Julian Eymard did not love Christ in the Blessed Sacrament. At the age of five, he disappeared from home one day. His siblings went in search and found him standing right next to the tabernacle in their local church. When they asked him what he was doing there, little Peter responded, “I am here listening to Jesus.” His father did not want Peter to be a priest but a blacksmith. He relented a bit over time and then died prematurely, removing all opposition. Peter was ordained a diocesan priest in 1834 and served in a parish. But he felt a slightly different call within his call and began to seek admission to the Society of Mary, or Marists. His diocesan bishop was reluctant to let Father Peter go. The bishop relented in 1839, writing to the Marist superior that “I have given sufficient proof of my high esteem for the Society of Mary in giving it such a priest.”

Father Peter’s personal energy,  apostolic zeal, and prayerfulness led to his being named a Marist Provincial. He traveled throughout France and became acquainted with nocturnal and perpetual adoration societies. He became expert at preaching about the Eucharist and at directing lay Eucharistic societies. During a Corpus Christi procession in 1845, he had a mystical experience while carrying the Blessed Sacrament. His attraction to the Eucharist became so personal and so intense that he resolved “to preach nothing but Jesus Christ, and Jesus Christ Eucharistic” from then on. Discussions with his superiors about orienting the Marist’s more toward a Eucharistic identity were frustrated. It was not their primary charism. On January 21, 1851, at the Shrine of Our Lady of Fourviere overlooking Lyon, Father Eymard received the inspiration to found a new Order dedicated exclusively to the Blessed Sacrament. This third call within his one priestly call would consume the rest of his life. 

In 1857 the Society of the Blessed Sacrament was formally established in Paris. One year later, the Servants of the Blessed Sacrament for nuns would be founded. Father Peter and his few companions did not limit their Eucharistic dedication to piety and prayer. They prepared children to receive First Holy Communion, reached out to lapsed Catholics, and promoted frequent reception of Holy Communion for all Catholics.  The normal struggles of every young Congregation bedeviled Father Eymard: extreme poverty, atrocious lodgings, lack of vocations, and problems of growth. 

Rodin’s bust captures the essence of Father Eymard better than any photo. Eymard’s mass of hair is out of control, communicating his passionate eccentricity. His gaze is penetrating. He knows the mysteries of God and other secrets of the soul. His thin face, straight nose, and protruding cheekbones say he is a mortified ascetic. And buried in his vest, just over his heart, is a scroll. Only a few words can be read. It is a fragment of Emyard’s prayer: “O Sacrament Most Holy, O Sacrament Divine, all praise and all thanksgiving be every moment thine.” His love of the Eucharist pulsated in sync with his heart, every moment of every day of his fifty-seven years. Our saint is buried in his Congregation’s chapel in Paris. He was canonized in 1962 and in 1995 his Optional Memorial was finally included in the Church’s universal sanctoral calendar.

Saint Peter Julian Eymard, your ardent love of the Blessed Sacrament consumed your thoughts, words, preaching, and life. May such a healthy devotion mark all of our lives. May we satisfy Christ’s thirst for our presence by not making Him wait too long between our visits.

புனித ஓசேபியஸ் (Eusebius von Vercelli)ஆயர், மறைசாட்சி August 2

இன்றைய புனிதர் :
(02-08-2020)

புனித ஓசேபியஸ் (Eusebius von Vercelli)
ஆயர், மறைசாட்சி
பிறப்பு 
283
சார்டினியன் (Sardinien), இத்தாலி
    
இறப்பு 
1 ஆகஸ்டு 371
வெர்செல்லி, இத்தாலி
ஆரியனிஸ கொள்கையாளர்களால் (Arianism) கல்லால் எரிந்து கொல்லப்பட்டார்.

இவர் சில இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்த பின்னர் மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் உரோம் நகரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 345 ஆம் ஆண்டு வெர்செல்லி என்ற மறைமாவட்டத்திற்கு முதல் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய எளிமையான மறையுரையின் வழியாக திருச்சபையை அம்மண்ணில் பரவச் செய்தார். தம் மறைமாவட்டத்தில் ஆதின வாழ்க்கையை உருவாக்கினார். திருச்சபைக்காக மன்னர் கொன்ஸ்தான்சியுஸால்(Konsthansiysal) நாடுகடத்தப்பட்டார். அப்போது அவர் பல துன்பங்களை அனுபவித்தார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் நாட்டிற்கு திரும்பினார். ஆரியுசின் ஆதரவாளர்களுக்கு எதிராக நம்பிக்கையை திரும்பவும் நிலைநாட்டும்படியாக உழைத்தார். 

இவர் ஆரிய பதிதர்களின் அநீதிகளை சுட்டிக்காட்டினார். இதனால் மீண்டும் பாலஸ்தீன நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கு தான் அனுபவித்த துன்பங்களை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டார். மக்களும் மன்னனும் மனந்திரும்ப தன் துன்பங்களை பொறுமையோடு ஏற்று, வாழ்வை தியாகம் செய்தார். 

செபம்:
அன்பான ஆண்டவரே! உம்மை பறைசாற்றுவதில் ஆயராம் புனித யுசேபியு காட்டிய மன உறுதியை நாங்கள் கண்டுபாவிக்க செய்தருளும். அவர் போதித்த நம்பிக்கையை கடைபிடித்து, உம்மில் பங்கு கொண்டு வாழ எங்களுக்கு அருள்வீராக.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (02-08-2020)

St. Eusebius of Vercelli

He was born on March 2, 283 in Sardinia. His father was a Christian martyr. St. Eusebius was later elected Bishop of Vercelli. When the Emperor Constantine declared Christianity as official religion of Roman Empire, the troubles of Arian sect of Christians started. Pope Liberius instructed Eusebius in A.D. 355 to go and request Emperor Constantius-II at Milan to convoke a council to sort out and end the difference between Athanasius of Alexandria and the Arian Christians. The Emperor convened the synod as requested and Eusebius also attended the synod partly. But Eusebius refused to condemn Athanasius as directed by the Emperor. Hence the Emperor exiled Eusebius to various places along with St. Dionysius and Lucifer. Eusebius was able to return to his diocese from exile, only in A.D. 362 in the reign of Emperor Julian. He fought strongly against Arianism, a Christian sect that preached that Jesus is not God. While in exile in Scythopolis in Palestine, he was dragged half-naked by the Arian Christians, through the street to a tiny cell and kept him without food or water for four days. He worked hard to counteract the damage Arian Christians caused to Christianity. He died on August 1, 371, at Vercelli, Piedmont.

---JDH---Jesus the Divine Healer---