புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 July 2020

தூய ஷார்பெல் மஹ்லூப் July 24

இன்றைய புனிதர் :
(24-07-2020)

தூய ஷார்பெல் மஹ்லூப்
பிறப்பு : 1828 ஷார்பெல், லெபனான் நாட்டில் உள்ள பே-குவா-கப்ரா

இறப்பு : 1898 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்

புனிதர் பட்டம் : 1977 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய  தந்தை இறந்து போனார். 
ஷார்பெல் சிறுவயது முதலே பக்தியில் சிறந்துவிளங்கி வந்தார். இவரிடமிருந்து விளங்கிய பக்தியைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். இவர் வளர்ந்து பெரியவராகிய போது மேபுங் என்னும் இடத்தில் இருந்த துறவற மடத்தில் சேர்ந்து, கல்விகற்று 1859 ஆம் ஆண்டு, குருவாக மாறினார்.
தன்னுடைய குருத்துவ  வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையிலும் ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

தூய மரோன் என்பவரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி முன்பைவிட ஜெபத்திற்கும் தவத்திற்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார். ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வந்தார். இப்படி அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்ததால், அவருடைய உடல்நலம் குன்றியது. இதனால் அவர் படுத்த படுக்கையாகி இறையடி சேர்ந்தார்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (24-07-2020)

Saint Charbel Makhlouf

Son of a mule driver. Raised by an uncle who opposed the boy's youthful piety. The boy's favorite book was Thomas a Kempis's The Imitation of Christ. At age 23 he snuck away to join the Baladite monastery of Saint Maron at Annaya where he took the name Charbel in memory of a 2nd century martyr. Professed his solemn vows in 1853. Ordained in 1859, becoming a heiromonk.

He lived as a model monk, but dreamed of living like the ancient desert fathers. Hermit from 1875 until his death 23 years later, living on the bare minimums of everything. Gained a reputation for holiness, and was much sought for counsel and blessing. He had a great personal devotion to the Blessed Sacrament, and was known to levitate during his prayers. Briefly paralyzed for unknown reasons just before his death.
Several post-mortem miracles attributed him, including periods in 1927 and 1950 when a bloody "sweat" flowed from his corpse. His tomb has become a place of pilgrimage for Lebanese and non-Lebanese, Christian and non-Christian alike.

Born :
8 May 1828 at Beka-Kafra, Lebanon as Joseph Zaroun Makhlouf

Died :
24 December 1898 at Annaya of natural causes

Canonized :
9 October 1977 by Pope Paul VI

---JDH---Jesus the Divine Healer---

புனிதர் ஜான் போஸ்ட் July 24

† இன்றைய புனிதர் †
(ஜூலை 24)

✠ புனிதர் ஜான் போஸ்ட் ✠
(St. John Boste)
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகளுள் ஒருவர்:
(Forty Martyrs of England and Wales)

பிறப்பு: கி.பி. 1544
வெஸ்ட்மோர்லேண்ட்
(Westmorland)

இறப்பு: ஜூலை 24, 1594

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

நினைவுத் திருநாள்: ஜூலை 24

புனிதர் ஜான் போஸ்ட், ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகளுள் ஒருவருமாவார்.

ஜான் போஸ்ட், கி.பி. 1544ம் ஆண்டு, வடமேற்கு இங்கிலாந்தின் (north west England) “வெஸ்ட்மோர்லேண்ட்” (Westmorland) வரலாற்றுப் பிராந்தியத்தின் “டஃப்ஃபொன்” (Dufton) நகரிலே பிறந்தவராவார். நிலச்சுவான்தாரான இவரது தந்தையின் பெயர், “நிக்கோலஸ் போஸ்ட்” (Nicholas Boste) ஆகும். இவரது தாயாரின் பெயர், “ஜேனேட் ஹட்டன்” (Janet Hutton) ஆகும். இவர் “ஆப்பிள் கிராம்மர் பள்ளியிலும்” (Appleby Grammar School) “ஆக்ஸ்போர்டிலுள்ள” (குயின்ஸ் கல்லூரியிலும்” (Queen's College, Oxford) கல்வி கற்று இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வென்ற இவர், அதே கல்லூரியிலேயே கி.பி. 1572ம் ஆண்டு ஒரு அங்கத்தினரானார். இரண்டு வருடங்களின் பின்னே, அரசி எலிசபெத்தின் சாசனத்தின் கீழே, தாம் கற்ற அதே “ஆப்பிள் கிராம்மர் பள்ளியின்” (Appleby Grammar School) தலைமை ஆசிரியராக பதவியேற்றார்.

கி.பி. 1576ம் ஆண்டு கத்தோலிக்கராக மனம் மாறிய இவர், இங்கிலாந்தை விட்டு வெளியேறி, கி.பி. 1581ம் ஆண்டு, மார்ச் மாதம், ஃபிரான்ஸ் நாட்டின் “கிரேண்ட் எஸ்ட்” (Grand Est) பிராந்தியத்தின் “ரெய்ம்ஸ்” (Reims) நகரில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

கி.பி. 1581ம் ஆண்டு, ஏப்ரல் மாதமே இங்கிலாந்து திரும்பிய போஸ்ட், “டர்ஹாம்” (County Durham) மாகாணத்திலுள்ள “ஹர்ட்ல்பூல்” (Hartlepool) எனும் நகரில் இறங்கினார். அங்கிருந்து “ஈஸ்ட் ஏங்க்லியா” (East Anglia) நகர் சென்றார். லண்டனில் வந்திறங்கிய அவர் வடக்கிற்குத் திரும்புவதற்கு முன்பு “லார்டு மொண்டாகுட்” (Lord Montacute) என்பவரின் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பணியாளராக நியமிக்கப்பட்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் ஒரு மிஷனரி குருவாக பணியாற்றினார். அவருடன் “ஜான் ஸ்பீட்” (John Speed) என்பவர் அடிக்கடி பயணித்தார். (அக்காலத்தில், புனிதர் ஜான் போஸ்ட் மறைந்து வாழவும்,  அவர் தங்க கத்தோலிக்கர்களின் வீடுகளை ஏற்பாடு செய்து தந்தவருமான ஆங்கிலேய கத்தோலிக்க பொதுநிலையினரான “ஜான் ஸ்பீட்” (John Speed), மேற்கண்ட குற்றங்களுக்காக கி.பி. 1594ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் 4ம் நாளன்று, “டர்ஹாம்” (Durham) நகரில் தூக்கிலிடப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை இவரை கி.பி. 1929ம் ஆண்டு அருளாளராக உயர்த்தியது).

இவரது நடவடிக்கைகள், பெரும்பாலும் “லேடி மார்கரெட் நெவில்” (Lady Margaret Neville) என்பவருக்கு சொந்தமான, “டர்ஹாம்” (Durham) நகருக்கு அருகேயுள்ள “பிரன்ஸ்பீத் கோட்டையை” (Brancepeth Castle) மையமாக கொண்டே இருந்தன. ஒரு செயலூக்கமுடைய மிஷனரியான இவரைப் பிடிக்க அதிகாரிகள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். கி.பி. 1584ம் ஆண்டு, ஜனவரி மாதம், அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலை ஆலோசகர்கள் சபை, அவரை கைது செய்ய ஆற்றல்மிக்க நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது. போஸ்ட்டின் சகோதரர் “லாரன்ஸ்” (Laurence) வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டது. “லார்டு ஹன்டிங்க்டன்” (Lord Huntingdon), இவரை வடக்கின் பெரிய கலைமான் என்று அழைத்தார்.

கி.பி. 1584ம் ஆண்டின் தொடக்கத்தில், “நார்தும்பெர்லேண்ட்” (Northumberland) செல்வதற்கு முன்னர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் “கார்லிஸில்” (Carlisle) நகரின் சுற்றுவட்டாரத்தில் தந்தை போஸ்ட் தோன்றினார். பத்து வருடங்கள் தாம் கைது செய்யப்படுவதை தவிர்த்துவந்த தந்தை போஸ்ட், முன்னாள் கத்தோலிக்கர் ஒருவரான “ஃபிரான்ஸ்சிஸ் எக்ல்ஸ்ஃபீல்ட்” (Francis Egglesfield) என்பவரால், கி.பி. 1593ம் ஆண்டு, காட்டிக்கொடுக்கப்பட்டார்.

“நெவில்” (Neville estate) தோட்டத்திலுள்ள “வாட்டர்ஹவுஸில்” (Waterhouse) ஒரு மாபெரும் வெகுஜன திருப்பலியை நிறைவேற்றிவிட்டு வெளியேறும்போது, தம்மை ஆசீர்வதிக்குமாறு தந்தை போஸ்டிடம் “ஃபிரான்ஸ்சிஸ் எக்ல்ஸ்ஃபீல்ட்” (Francis Egglesfield) கேட்டார். போஸ்ட் ஒப்புக் கொண்டபோது, இது அருகிலிருந்து கண்காணித்த படை வீரர்களுக்கு ஒரு அடையாள சமிக்ஞையாக இருந்தது. அவர்கள் வாட்டர்ஹவுஸை ஆக்கிரமித்தபோது, போஸ்ட் நெருப்புக்கு பின்னால் குருக்கள் மறைந்து வாழும் ஒரு துளையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டபின், “ரிச்சர்ட் டாப்கிலிஃப்” (Richard Topcliffe) என்பவரால், “லண்டன் கோபுரம்” (Tower of London) சிறைச்சாலைக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். “டர்ஹாம்” (Durham) நகர் திரும்பிய அவர், அக்கால இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளை விசாரிக்கும் “அஸ்ஸிசெஸ்” (Assizes) என்றழைக்கப்படும் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார். (1972ம் ஆண்டு, இந்த “அஸ்ஸிசெஸ்” (Assizes) நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டு, இவற்றின் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நடுவர் மன்றங்கள் உயர்நீதிமன்றத்துக்கும் (High Court), குற்ற விசாரணைகள் “கிரவுண்” அல்லது உச்சநீதிமன்றத்துக்கும்” (Crown Court) மாற்றப்பட்டன).

கி.பி. 1594ம் ஆண்டு, ஜூலை மாதம், 24ம் தேதி, “டிரைபர்ன்” (Dryburn) தூக்கிலிடப்பட்டார். இது தற்போது, “செயிண்ட் லியோனார்ட்” (St. Leonard's school) பள்ளியின் இடமாகும். போஸ்ட், தாம் ஒரு துரோகி என்பதை மறுத்தார். "என் செயல்பாடுகள், ஆன்மாக்களை கவர்வதற்காகத்தான். தற்காலிக படையெடுப்புகளில் தலையிட அல்ல" என்றார். படிக்கட்டுகளில் ஏறும்போதுகூட, ஜெபமாலை உருட்டியபடியேதான் ஏறினார். அசாதாரணமாக, மிருகத்தனமாக தாக்கப்பட்ட அவர், தூக்கிலிடப்பட்டார். துண்டு துண்டாக வெட்டப்பட்ட அவருடைய உடலின் பாகங்கள், கோட்டை சுவர்களின் தொங்கவிடப்பட்டன. அவருடைய தலை, “ஃபிரேம்வெல்கேட்” (Framwellgate Bridge) பாலத்தின் தூண் ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்தது.

ஜூலை மாதம் 24ம் தேதி, இவர் நினைவுகூறப்படுகின்றார்.
† Saint of the Day †
(July 24)

✠ St. John Boste ✠

Forty Martyrs of England and Wales:

Born: 1544 AD
Westmorland

Died: July 24, 1594

Venerated in: Roman Catholic Church

Beatified: 1929 AD
Pope Pius XI

Canonized: 1970
Pope Paul VI

Feast: July 24

Saint John Boste, 1544 – 1594, is one of the forty English and Welsh Martyrs canonized by Pope Paul VI in 1970. He was a priest that served the faithful in our area at a time when it was illegal to say Mass or practice the Catholic faith. He was captured by the authorities in Waterhouses, now in the Parish of Our Lady Queen of Martyrs, in 1593 and executed in what is now the grounds of St Leonard’s School, Durham in 1594. The feast day of all the English and Welsh martyrs is October 25th, but St John Boste is commemorated on the day of his execution, July 24th.

Early Life:
John Boste was born in Dufton, Westmorland (now Cumbria) and then went on to become a lecturer in logic at Oxford University, before returning to Westmorland to become a Master of the school at Appleby. He became more and more interested in the Catholic faith and in 1580 went to France to train to be a priest. He was ordained in early 1581 and quietly returned to England, landing in Hartlepool in April 1581. He then spent the next twelve years as a priest working in secret throughout England and sometimes in Scotland. After a little time in the South, he focussed on the North, and in particular the North East, with evidence of him being active in Newcastle and in Brancepeth Castle, home of Lady Margaret Neville.

John was a very effective missionary and the authorities were very keen for him to be captured. Lots of effort and resources went into this but for over ten years he always managed to evade capture. Lord Huntington, the president of the Council of the North and entrusted by Elizabeth I to capture John, was obsessed with hunting him down, describing him as “The Greatest Stag of the North”.

St John Boste in West Durham:
John Boste would often say Mass at the home of William and Grace Claxton, a house in the Brancepeth estate that became known as the Waterhouse. This was built by the banks of the Deerness in what was then a very densely wooded and isolated valley. Old farms called Low and High Waterhouse still exists, but the site of the original Waterhouse is unknown and was probably on the south side of the river between the modern positions of the villages of Waterhouses and Esh Winning. By 1593 William Claxton had been sent to prison for his Catholic sympathies but Boste still regularly attended to say mass for Grace and the rest of the household. Unknown to Boste and the Claxton’s one of the household, Francis Eglesfield, was actually a secret agent employed by Huntington. Eglesfield pretended to be a faithful Catholic but was passing the information on all activities at the house. By early September word had been passed that Boste was staying at the house, and a group of armed searchers began watching it closely in secret.

On the tenth of September, Eglesfield gave a sign to the searchers and the raid began. Those present, including Lady Neville and Grace Claxton, were arrested, but they could not find Boste. Eglesfield insisted that he was there and so they began to hack into the walls, according to some accounts finding Boste in a priest hole behind the fireplace.

Imprisonment and Torture:
John Boste was taken to Durham, questioned, then sent to York, Windsor, and eventually, the Tower of London, where he was repeatedly questioned about his activities. He never denied going abroad illegally to become a priest, or regularly saying mass adding “that if he said not mass every day it was against his will.” This, however, was not enough for his captors who wanted him to incriminate others and admit to political motives, something he would not do. He was imprisoned for almost a year and regularly tortured by being placed on the rack as well as being hung from the wall by his wrists. This permanently disabled him: “He walked all double, very slowly and with the assistance of a stick. When he sat down as he usually did on his heels, he was all on a heap, as if he had been all in pieces. Yet he would have got up of himself and spoken cheerfully to any that came to him”. It says much for his resilience that he even contemplated escape, but was unsuccessful.

The next morning, Wednesday 24 July, John Boste, along with two others, Ingram and Southwell, both converts to Catholicism, were brought back into court for sentence. The jury found him guilty of treason. The priests were then asked in turn whether they wished to say anything before the sentence was passed on them. Boste replied that he was glad that God had called him to this trial of his priesthood and profession, and was very sorry that the laws of his country did not allow of the Catholic faith. He was then sentenced: “You will be carried to the place from whence you came, and from thence you shall be carried either upon a sled or upon a hurdle to the place of execution, there you will be hanged by the neck, presently you shall be cut down and your members shall be cut from you and cast into the fire even in your own sight, your bowels shall be pulled out of your bodies, and cast likewise into the fire, your heads shall be cut off, your bodies quartered and the parts of your bodies shall be disposed of as officers shall see occasion.”

The sentence was carried out that day. About 4.00 p.m. he was taken in a cart from the prison (most likely the Northgate of the Bailey), down Saddler Street, up through Millburngate to the “trees” outside the city at Dryburn, almost certainly within what is now the grounds of St. Leonard’s Catholic School. A large crowd lined the route, some hostile, many sympathetic. On arrival Boste climbed the hangman’s ladder, saying the Angelus. At the top, with the rope around his neck, he recited Psalm 114. When someone in the crowd shouted that he should seek forgiveness for his offenses against the queen, he replied: “I never offended her … I take it upon my death, I never went about to offend her. I wish to God that my blood may be in satisfaction for her sins.” At this, the Sherriff ordered for the hanging to begin. Having hung for about twenty seconds he was then cut down, and he revived as he was carried to fire to carry out the disemboweling and quartering. Before the executioner disemboweled him he said: “God forgive you. Go on, go on. Lay not this sin to their charge.” When the butchery was finished, the severed limbs of the martyr were displayed on the castle walls and his head impaled on Framwellgate Bridge.

Recent Commemoration:
St John Boste is still remembered as a powerful witness to our faith in our area. In 1994 celebrations were held to commemorate the 400th anniversary of his martyrdom, with events both at Our Lady Queen of Martyrs, Newhouse, the parish that includes the site of his capture, and St Godric’s, Durham (now part of Durham Martyrs parish), the parish that includes the site of his execution. An anniversary window was installed in the church at Newhouse.

புனித கிறிஸ்டினா (மூன்றாம் நூற்றாண்டு)July 24

ஜூலை 24

புனித கிறிஸ்டினா (மூன்றாம் நூற்றாண்டு)
இவர் தீர் என்ற பகுதியைச் சார்ந்தவர். இவரது தந்தை அப்பகுதியின் ஆளுநராக இருந்தார். 

கிறிஸ்டினாவின் குடும்பம் கிறிஸ்துவை அறியாத பிற இனத்தைச் சார்ந்த குடும்பமாக இருந்தது. பதினொரு வயதில்தான் இவர் கிறிஸ்துவை அறிந்து கொண்டார். 

இச்செய்தியைக் கேள்விப்பட்ட கிறிஸ்டினாவின் தந்தை, இவரை ஓர் அறைக்குள் அடைத்து வைத்து, அறை முழுவதும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகளால் நிரப்பினார். அப்படியாவது இவர் கிறிஸ்துவை மறந்து, சிலைகளை வழிபடத் தொடங்குவார் என்று; ஆனால் இவர் அறையிலிருந்த பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகளை உடைத்து, அவற்றை தனது அறைக்கு வெளியே இருந்த ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்தார்.

இதை அறிந்த இவரது தந்தை இவரைப் பல்வேறு விதமாகச் சித்திரவதை செய்தார். அப்படி இருந்தும் இவர் தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். 

கிறிஸ்டினாவின் தந்தை திடீரென இறந்து போனார். அப்பொழுது இவர் தன்னுடைய பிரச்சனையெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது  என நினைத்துக் கொண்டிக்க, இவரது தந்தைக்குப் பின் ஆளுநர் பதவியேற்றுக்கொண்ட தியோன், ஜூலியன் ஆகியோர் இவரை இன்னும் மிகுதியாகச் சித்திரவதை செய்தாரகள். அவர்களுடைய சித்திரவதை தாங்காமல் இவர் தன்னுடைய ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார்.
July 24
Saint of the day:
Saint Christina the Astonishing

Patron Saint of the mentally ill
 
Prayer:
 
The Story of Saint Christina the Astonishing
 
​Born to a peasant family, orphaned as a child, and raised by two older sisters. At age 21, she experienced a severe seizure of what may have been epilepsy. It was so severe as to be cateleptic, and she was thought to have died. During her funeral Mass, she suddenly recovered, and levitated to the roof of the church. Ordered down by the priest, she landed on the altar and stated that she had been to hell, purgatory, and heaven, and had been returned to earth with a ministry to pray for souls in purgatory.
Her life from that point became a series of strange incidents cataloged by a Thomas de Cantimpré, Dominican professor of theology at Louvain who was a contemporary who recorded his information by interviewing witnesses, and by Cardinal Jacques de Vitny who knew her personally. She exhibited both unusual traits and abilities. For example, she could not stand the odor of other people because she could smell the sin in them, and would climb trees or buildings, hide in ovens or cupboards, or simply levitate to avoid contact. She lived in a way that was considered poverty even in the 13th century, sleeping on rocks, wearing rags, begging, and eating what came to hand. She would roll in fire or handle it without harm, stand in freezing water in the winter for hours, spend long periods in tombs, or allow herself to be dragged under water by a mill wheel, though she never sustained injury. Given to ecstasies during which she led the souls of the recently dead to purgatory, and those in purgatory to paradise.
People who knew her were divided in their opinions: she was a holy woman, touched of God, and that her actions and torments were simulations of the experiences of the souls in purgatory; she was suffering the torments of devils; she was flatly insane. However, the prioress of Saint Catherine’s convent testified that no matter how bizarre or excessive Christina’s reported actions, she was always completely obedient to the orders of the prioresses of the convent. Christina was a friend of Louis, Count of Looz, whose castle she visited, and whose actions she rebuked. Blessed Marie of Oignies thought well of her, and Saint Lutgardis sought her advice.

புனித.கிறிஸ்டோபர் (St.Christopher. July 24

இன்றைய புனிதர்
2020-07-24
புனித.கிறிஸ்டோபர் (St.Christopher)
மறைசாட்சி, வாகன ஓட்டுனர்களுக்கு பாதுகாவலர்
பிறப்பு
2 ஆம் நுற்றாண்டு,கானான்(kanan)
இறப்பு
கி.பி.251.

இவருக்கு ரெப்ரோபூஸ் (Reprobus) என்ற பெயரும் உண்டு. பல மக்களை மனமாற்றியதால், இவரை டேசியூஸ் அரசன் (Decius) கொல்ல ஆணையிட்டான். இவர் வழித்துணை பாதுகாவலராக போற்றப்படுகின்றார். அதற்கு ஒரு வரலாறு உண்டு.

ஒருநாள் இவர் ஆற்றைக் கடக்கும்போது, ஒரு சிறு பிள்ளை வந்து என்னையும் தூக்கி, கரையை கடக்க உதவுங்கள் என்றது. இவரும் அக்குழந்தையே தோளில் சுமந்துகொண்டு ஆற்றில் இறங்கினார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் குழந்தை கனக்க ஆரம்பித்தது. அவரால் வலியை பொறுக்கமுடியவில்லை. இருந்தும் கீழே விட்டுவிடாமல் கரையை கடந்தார். இறக்கியவுடன் அக்குழந்தை "நான் தான் கிறிஸ்து" என்று சொல்லி மறைந்தது.

நீண்ட பயணம் செய்பவர், இவரிடம் ஜெபித்த போது பல நன்மைகளை பெற்றுள்ளனர். வயலில் வேலை செய்பவர்களூம் தண்ணீர் வேண்டி ஜெபித்த போது மழையை பெற்றுள்ளனர். ஐரோப்பாவில் இவரின் பக்தி அதிகமாக பரவியுள்ளது.


செபம்:
என்றும் வாழ்பவரே எம் இறைவா! இவ்வுலகில் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றது. புனித கிறிஸ்டோபரின் வழியாக நீரே பாதுகாப்பான பயணத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பெல்ஜிய நாட்டு திருக்காட்சியாளர் கிறிஸ்டினா Christina von Belgien
பிறப்பு: 1150, புரூஸ்தெம் Brusthem, பெல்ஜியம்
இறப்பு: 24 ஜூலை 1224, பெல்ஜியம்
பாதுகாவல்: பயத்திலிருந்து, நன்மரணம், பூச்சிக்கடி மற்றும் தொற்று நோயிலிருந்து


பொல்சேனா நகர் மறைசாட்சி கிறிஸ்டினா Christina von Bolsena
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, பொல்சேனா, இத்தாலி
இறப்பு: 304, இத்தாலி
பாதுகாவல்: பொல்சேனா நகர், பலேர்மோ நகர், வெனிஸ், கடல்வாழ் மக்கள்


சவோயன் நகர் துறவி லூயிசே Louise von Savoyen
பிறப்பு: 28 டிசம்பர் 1462 சவோயன்
இறப்பு: 24 ஜூலை 1503, ஓர்பே Orbe, சுவிஸ்
பாதுகாவல்: குழந்தைகள்


துறவி சிக்லிண்டே Siglinde OSB
பிறப்பு: 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டு, அக்குடானியன் Aquitanien, பிரான்சு
இறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, ட்ரோட்லார் Troclar, பிரான்சு
பாதுகாவல்: விதவைகள்

Saint Kinga July 24

July 24
 
Saint of the day:
Saint Kinga 
Patron Saint of Poland, & Lithuania, Salt Miners
 
Prayer:
 
The Story of Saint Kinga of Poland
She was born in Esztergom, Kingdom of Hungary, the daughter of King Béla IV of Hungary and Maria Laskarina. She was a niece of Elizabeth of Hungary and great-niece of Saint Hedwig. Kinga's sisters were Saint Margaret of Hungary and blessed Jolenta of Poland. She reluctantly married Bolesław V ("the Chaste") and became princess when her husband ascended the throne as High Duke of Poland. Despite the marriage, the devout couple took up a vow of chastity. The marriage was largely arranged by and the vow of chastity patterned after that of Bolesław's sister, blessed Salomea of Poland.
During her reign Kinga got involved in charitable works such as visiting the poor and helping the lepers. When her husband died in 1279, she sold all her material possessions and gave the money to the poor. She soon did not want any part in governing the kingdom which was left to her and decided to become a Poor Clares nun in the monastery at Sandec (Stary Sącz). She would spend the rest of her life in contemplative prayer and did not allow anyone to refer to her past role as Grand Duchess of Poland. She died on 24 July 1292, aged 68.