புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 June 2020

புனித ஆலிஸ் (1220-1250) June 15

ஜூன் 15 

புனித ஆலிஸ் (1220-1250)
இவர் பெல்ஜியத்தில் உள்ள ஷேர்பெக் என்ற இடத்தில் பிறந்தார்.

தன்னுடைய ஏழாவது வயதிலேயே சிஸ்டர்சியன் துறவிகள் மடத்தில் சேர்ந்த இவர், அங்கேயே தன்னுடைய கல்வியைக் கற்கத் தொடங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், தாழ்ச்சியோடும் இருந்தார.

இவருக்கு 20 ஆவது வயது நடக்கும்பொழுது தொழுநோயால் பாதிக்கப்பட்டார்‌. அதனால் இவர் தனிமைப்படுத்தப்பட்டார். தொழுநோயால் இவர் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த அதே வேளையில், கண்பார்வையையும் இழந்தார். இதனால் இவர் அடைந்த துயருக்கு அளவே இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் நற்கருணை ஆண்டவர்மீது மிகுந்த பற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்தப் பற்று இவருக்கு ஆறுதலையும் அரவணைப்பையும் நம்பிக்கையையும் தந்தது. சில நேரங்களில் நற்கருணை ஆண்டவர் இவருக்குக் காட்சி தந்து இவரைத் திடப்படுத்தினார்.

நாள்கள் செல்ல செல்ல இவருடைய உடலில் வேதனை மிகுதியானது. இதனால் இவர் தன்னுடைய முப்பதாவது வயதில் உடல்நலம் குன்றி இறையடி சேர்ந்தார்.

இவருக்கு 1907 ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவர் பார்வையற்றவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குப் பாதுகாவலராக இருக்கிறார்

சிரகுஸ் நகர்ப் புனித மார்சியன்(முதல் நூற்றாண்டு) June 14

ஜூன் 14

சிரகுஸ் நகர்ப் புனித மார்சியன்
(முதல் நூற்றாண்டு)
இவர் திரு அவையின் முதல் திருத்தந்தையான புனித பேதுருவால் இத்தாலியிலுள்ள சிரகுஸ் என்ற நகருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார். இவர் புனித பேதுருவின் வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்து அந்த நகருக்கு சென்றார்.

அந்நகரில் இவர் நற்செய்தி அறிவிக்கும்போது, யூதர்கள் இவரைப் பிடித்து, ஒரு பெரிய கோபுரத்திலிருந்து தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

இவ்வாறு புனித மார்சியன் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி தன் இன்னுயிரை ஈந்தார்.

புனிதர் வைட்டஸ் ✠(St. Vitus) June 15

† இன்றைய புனிதர் †
(ஜூன் 15)

✠ புனிதர் வைட்டஸ் ✠
(St. Vitus)
மறைசாட்சி, தூய உதவியாளர்:
(Martyr, Holy Helper)

பிறப்பு: கி.பி. 290
சிசிலி
(Sicily)

இறப்பு: கி.பி. 303 (வயது 12–13)
லூக்கானியா, தற்போதைய பசிலிகட்டா, இத்தாலி
(Lucania, modern-day Basilica, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூன் 15

பாதுகாவல்:
நடிகர்கள்; நகைச்சுவையாளர்கள்; ரிஜெக்கா (Rijeka), குரோஷியா (Crotia); செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia); நடனக் கலைஞர்கள்; நாய்கள்; வலிப்பு நோய் (Epilepsy); மஸரா டெல் வல்லோ (Mazzara del Vallo), சிசிலி (Sicily); அதிக தூக்கம் (Over Sleeping); ப்ராக் (Prague), செக் குடியரசு (Czech Republic); நரம்பு சம்பந்தமான ஒருவித தசை வலிப்பு நோய் (Rheumatic Chorea); தூய வைட்டஸ் நடனம் (Saint Vitus Dance); செர்பியா (Serbia); பாம்பு கடி (Snake Bites); புயல்கள் (Storms); வாச்சா (Vacha), ஜெர்மனி (Germany); செவன் (Zeven), லோயர் சாக்சனி (Lower Saxony); ஹெட் கூயி (Het Gooi), நெதர்லாந்து (Netherlands); இ க்ளாம்பஸ் வைட்டஸ் (E Clampus Vitus).

புனிதர் வைட்டஸ், கிறிஸ்தவ பாரம்பரியங்களின்படி, சிசிலி நாட்டின் கிறிஸ்தவ புனிதரும் மறைசாட்சியுமாவார்.

இவர், கி.பி. 303ம் ஆண்டு, தூய ரோம பேரரசை ஒன்றாக ஆண்ட இரண்டு பேரரசர்களான (Roman Emperors) “டயாக்லேஷியன்” மற்றும் “மேக்ஸ்மியன்” (Diocletian and Maximian) ஆகியோரின் ஆட்சியில் நடந்த கிறிஸ்தவ துன்புறுத்தல்களின்போது மரித்தவர் ஆவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மத்திய காலத்திற்குரிய பதினான்கு தூய உதவியாளர்களில் (One of the Fourteen Holy Helpers) ஒருவராக கொள்ளப்படுகிறார்.

கிறிஸ்தவ பாரம்பரயங்களின்படி, புனிதர்கள் “வைட்டஸ்” (Vitus), “மொடஸ்டஸ்” (Modestus) மற்றும் “கிரெசென்ஷியா” (Crescentia) ஆகிய மூவரும் பேரரசன் “டயாக்லேஷியனால்” (Diocletian) துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

புனிதர் ஜெர்மைன் கஸின் ✠(St. Germaine Cousin) June 15

† இன்றைய புனிதர் †
(ஜூன் 15)

✠ புனிதர் ஜெர்மைன் கஸின் ✠
(St. Germaine Cousin)

ஃபிரெஞ்ச் புனிதர்:
(French Saint)
பிறப்பு: கி.பி. 1579
பைப்ரேக், டௌலோஸ், ஃபிரான்ஸ்
(Pibrac, Toulouse, France)

இறப்பு: கி.பி. 1601
பைப்ரேக், டௌலோஸ், ஃபிரான்ஸ்
(Pibrac, Toulouse, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 7, 1864
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

முக்கிய திருத்தலம்:
பைப்ரேக்
(Pibrac)

நினைவுத் திருநாள்: ஜூன் 15

பாதுகாவல்:
கைவிடப்பட்ட மக்கள் (Abandoned People), துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் (Abuse Victims), வறுமைக்கு எதிரானக (Against Poverty), ஊனமுற்றோர் (Disabled People), கிராமப்புற பெண்கள், (Girls from Rural Areas), நோய் (Illness), வறிய நிலை (Impoverishment), பெற்றோரை இழந்தோர் (Loss of Parents), உடல் பயிற்சி சிகிச்சையாளர்கள் (Physical Therapists)

புனிதர் ஜெர்மைன் கஸின், ஒரு ஃபிரெஞ்ச் புனிதர் ஆவார். ஃபிரான்ஸ் நாட்டின் “டௌலோஸ்” (Toulouse) நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள “பைப்ரேக்” (Pibrac) எனும் கிராமத்தில் மிகவும் தாழ்ச்சியுள்ள பெற்றோருக்குப் பிறந்தவர்.

கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (Catholic Encyclopedia) இவரைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறது:

“தமது பிறப்பு முதலே எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தவராக இவர் குறிப்பிடப்படுகிறார். இவர் பிறக்கும்போதே ஒரு கை சிதைந்த நிலையிலும், “ஸ்க்ரோஃபுலா” (Scrofula) எனப்படும் காசநோய் சம்பந்தமான ஒரு நோயுடனும் பிறந்தார். இவர் கைக்குழந்தையாக இருக்கும்போதே தமது தாயை இழந்தார். இவரது தந்தை விரைவிலேயே மறுமணம் செய்துகொண்டார். புதிதாக வந்த மாற்றான்தாய் இவரை கொடுமைப்படுத்தினார். ஜெர்மைனுடைய நோயிலிருந்து பிற குழந்தைகளை பாதுகாப்பதாக பாசாங்கு செய்த மாற்றான்தாய், ஜெர்மைனை வீட்டிலிருந்து விலக்கி வைக்க தந்தையின் சம்மதம் பெற்றார். ஆகவே, ஜெர்மைன் குழந்தை பருவத்திலிருந்தே கால்நடை மேய்க்கும் பணியைச் செய்தார். இரவில் களைத்துப்போய் வீடு திரும்பினால் அவரது படுக்கை குப்பைகளாக இருக்கும் அல்லது ஈரமாக இருக்கும். இதுபோன்ற நடைமுறைகளால் குழந்தைப் பருவத்திலிருந்தே தாழ்ச்சியையும், பொறுமையையும் கற்றுக்கொண்டார். கடவுளின் பிரசன்னத்தின் அதிசய உணர்வுகளும் ஆன்மீக ஈடுபாடுகளும் பிறப்பு முதலே அவருக்கு இறை பரிசாக அளிக்கப்பட்டிருந்தன. இவையனைத்துமே இப்புனிதரது தனிமையான வாழ்க்கையின் ஒளி மற்றும் ஆசீர்வாதங்களின் ஆதாரமாக விளங்கின. வறுமை, நலிந்த மற்றும் தளர்ந்த உடல் நிலை, காலத்தின் கடுமையான பருவ மாற்றங்கள், பாசமும் அனுசரணையும் இல்லாத சொந்த குடும்பத்தினர், ஆகியவற்றுடன் தாமாகவே தேடி பெற்றுக்கொண்ட துன்பங்களும் தாழ்ச்சியுடனும் இன்னும் அதிக வேதனைகளைத் தந்தன. தினசரி உணவாக சாதாரண ரொட்டி மற்றும் தண்ணீர் ஆகியவற்றையே வழக்கமான உணவாக ஏற்றுக்கொண்டார். ஆசீர்வதிக்கப்பட்ட தூய நற்கருணையிலுள்ள இயேசு மீதும் அவரது கன்னித்தாய் மீதும் அவர் கொண்டிருந்த மாறாத அன்பு இவரது புனிதத் தன்மையை இன்னும் அதிகரித்தது. திருப்பலியில் தினமும் ஆர்வமுடன் கலந்துகொள்வார். ஆலய மணியோசை கேட்டதுமே தமது மந்தையை அப்படியே மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு திருப்பலியில் கலந்துகொள்ள ஓடுவார். கிட்டத்தட்ட ஓநாய் போன்ற காட்டு மிருகங்கள் உலவும் வனாந்தரங்களின் அருகில் மேய்ச்சல் நிலம் இருந்தும் என்றுமே அவரது மந்தைக்கு யாதொரு ஆபத்தும் ஏற்பட்டதில்லை.”

பாவச் செயல்களை சரி செய்யும் முயற்சியாக அவர் முன்னெடுத்த தவ முயற்சிகளும் அடிக்கடி நற்கருணை ஆராதனைகளில் அவர் பங்கெடுத்தமையும் குறிக்கத்தக்கது. மரியன்னையின் மீதுள்ள அவரது பக்தியும் அதிகரித்துக்கொண்டு போனதும் குறிப்பிடத்தக்கது. ஜெபமாலை மட்டுமே அவரது ஒரே புத்தகமாயிருந்தது. இயேசு மீதும் அவரது அதி தூய கன்னித் தாயின் மீதும் அவர் கொண்ட பக்தியும், அன்பும் அளவிட இயலாததும், குறிப்பிடத்தக்கதுமாகும். திருப்பலிக்கான முதல் ஆலய மணியோசை கேட்டதுமே எங்கிருந்தாலும் முழங்கால்படியிட்டு சிலுவை அடையாளமிடுவது அவரது குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ உயர் பண்பாகும்.

ஆழமற்ற நதியோரங்களிலும், அடை மழையின் பின்னும் அல்லது உறைபனி உருகும் காலங்களிலுமாக அல்லது சீரற்ற அனைத்து காலங்களிலும் அவரது பக்திமயமான தவ வாழ்க்கை சீராக இருந்தது. எழைகளின்பால் அவர் கொண்ட அன்பும் அக்கறையும் இன்னும் அதிகரித்தது. தமக்கு கிடைத்த உலர்ந்த ரொட்டியையும் பிறருடன் பகிர்ந்து உண்ணும் அவரது தாராள, உதார குணம் மிகவும் உயர்வானது.

கி.பி. 1601ம் ஆண்டின் கோடை காலத்தின் ஆரம்பத்தில் ஒருநாள் அதிகாலை, திராட்சைக் கொடிகளால் வேயப்பட்ட தட்டி (Pallet of Vine-Twigs) படுக்கையிலிருந்து எழுந்திருக்காததை கவனித்த இவரது தந்தை, இந்த இருபத்திரண்டு வயது புனிதர் விழிக்காமலேயே நித்திய வாழ்வை நோக்கிச் சென்றிருந்ததைக் கண்டார்.

புனித.பெர்னார்டு (Bernhard of Aosta June 15

இன்றைய புனிதர் :
(15-06-2020)

புனித.பெர்னார்டு (Bernhard of Aosta)
பாதுகாவல்: மலை ஏறுபவர்களுக்கும், ஆல்ப்ஸ் மலைவாழ் மக்களுக்கும்
பிறப்பு 
923
அவோஸ்டா(Aostatal)
    
இறப்பு 
15 ஜூன் 1008
நோவரா(Novara)
புனிதர்பட்டம்: 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் ஓர் சாதாரண குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் இறையியலையும், மெய்யியலையும், திருச்சபை சட்டங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரது பெற்றோர் இவரின் கல்லூரி படிப்பை முடித்தபின், பணக்கார பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் பெர்னார்டு இதை வெறுத்தார். இவரின் மனம் எப்போதும் ஆன்மீக வாழ்வையே நோக்கி சென்றது. இதனால் தன்னுடைய மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சேர்ந்து பணியாளராக செயல்பட்டார். இவரின் பணியால் அம்மறைமாவட்ட மக்கள் ஏராளமான பயனை பெற்றனர். இவர் இறக்கும் வரை மறைமாவட்ட குருக்களின் கல்லூரியில் பணியாற்றினார். இவர் 1008 ல் அல்லது 1009 ல் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவர் நோவரா என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, அவர் கல்லறையின் மேல் பேராலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பின்னர் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் இவர் நோயாளிகளை பராமரிப்பதற்கென ஓர் இல்லம் தொடங்கினார். நாளடைவில் இவ்வில்லத்தை புனித அகுஸ்தினார் சபையை சார்ந்தவர்கள் கைப்பற்றினர். இப்போது அந்நாடுகளுக்கு சுற்றுலாவிற்கு வரும் மக்கள் அவ்வில்லத்தில் இலவசமாக தங்கி, தங்களின் சுற்றுலாவை மேற்கொள்கின்றனர்.


செபம்:
அன்பான இறைவா! புனித பெர்னார்டு இறைவன் மேல் தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். நாங்களும் எங்களின் சொல், செயல், சிந்தனைகளில் உம்மை பற்றிக்கொண்டு, என்றும் உமக்குரியவர்களாக வாழ வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (15-06-2020)
Saint Bernard of Menthon

St. Bernard of Menthon was Born in 923, probably in the castle Menthon near Annecy, in Savoy; died at Novara, 1008. He was descended from a rich, noble family and received a thorough education. He refused to enter an honorable marriage proposed by his father and decided to devote himself to the service of the Church. Placing himself under the direction of Peter, Archdeacon of Aosta, under whose guidance he rapidly progressed, Bernard was ordained priest and on account of his learning and virtue was made Archdeacon of Aosta (966), having charge of the government of the diocese under the bishop. Seeing the ignorance and idolatry still prevailing among the people of the Alps, he resolved to devote himself to their conversion. For forty two years he continued to preach the Gospel to these people and carried the light of faith even into many cantons of Lombardy, effecting numerous conversions and working many miracles.

For another reason, however, Bernard's name will forever be famous in history. Since the most ancient times there was a path across the Pennine Alps leading from the valley of Aosta to the Swiss canton of Valais, over what is now the pass of the Great St. Bernard. This pass is covered with perpetual snow from seven to eight feet deep, and drifts sometimes accumulate to the height of forty feet. Though the pass was extremely dangerous, especially in the springtime on account of avalanches, yet it was often used by French and German pilgrims on their way to Rome. For the convenience and protection of travelers St. Bernard founded a monastery and hospice at the highest point of the pass, 8,000 feet above sea-level, in the year 962. A few years later he established another hospice on the Little St. Bernard, a mountain of the Graian Alps, 7,076 feet above sea-level. Both were placed in charge of Augustinian monks after pontifical approval had been obtained by him during a visit to Rome.

These hospices are renowned for the generous hospitality extended to all travelers over the Great and Little St. Bernard, so called in honor of the founder of these charitable institutions. At all seasons of the year, but especially during heavy snow-storms, the heroic monks accompanied by their well-trained dogs, go out in search of victims who may have succumbed to the severity of the weather. They offer food, clothing, and shelter to the unfortunate travelers and take care of the dead. They depend on gifts and collections for sustenance. At present, the order consists of about forty members, the majority of whom live at the hospice while some have charge of neighboring parishes.

The last act of St. Bernard's life was the reconciliation of two noblemen whose strife threatened a fatal issue. He was interred in the cloister of St. Lawrence. Venerated as a saint from the twelfth century in many places of Piedmont (Aosta, Novara, Brescia), he was not canonized until 1681, by Innocent XI. His feast is celebrated on the 15th of June.

---JDH---Jesus the Divine Healer---

புனிதர் முதலாம் மெத்தோடியஸ் June 14

† இன்றைய புனிதர் †
( ஜூன் 14 )

✠ புனிதர் முதலாம் மெத்தோடியஸ் ✠
(St. Methodios I of Constantinople)
பிறப்பு: கி.பி. 788
சிராக்கஸ்
(Syracuse)

இறப்பு: ஜூன் 14, 847
கான்ஸ்டன்டினோபிள்
(Constantinople)

நினைவுத் திருநாள்: ஜூன் 14

புனிதர் முதலாம் மெத்தோடியஸ், கி.பி. 843ம் ஆண்டு, மார்ச் மாதம், 4ம் நாள் முதல், கி.பி. 847ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் நாள் வரை “கான்ஸ்டன்டினோபிள் நகரின் கிறிஸ்தவ தலைவராக” (Ecumenical Patriarch of Constantinople) பொறுப்பேற்றிருந்தவர் ஆவார்.

முதலாம் மெத்தோடியஸ் சிசிலி (Sicily) நாட்டின் சிராக்கஸ் ((Syracuse)) நகரில் செல்வந்தர்களான பெற்றோருக்கு பிறந்தார். இளம் வயதிலேயே கல்வி கற்பதற்காக கான்ஸ்டன்டினோபிள் ஆனுப்பப்பட்டார். நன்கு கற்று அரசவையிலே நல்லதொரு பணி நியமனம் பெறுவார் என இவரது பெற்றோர் கனவு கண்டனர். ஆனால், அவர்களது கனவை பொய்யாக்கிய இவர், “பித்தினியா” (Bithynia) நகரிலுள்ள துறவு மடத்தில் சேர்ந்தார். இறுதியில் மடாதிபதியுமானார்.

கி.பி. 813ம் ஆண்டு முதல் கி.பி. 820ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், “ஆர்மேனிய பேரரசன் ஐந்தாம் லியோ” (Emperor Leo V the Armenian) என்பவரது காலத்தில் சமய திருச்சொரூபங்கள் அல்லது படங்களை வணங்கும் அல்லது ஆராதிக்கும் மக்களை (Iconoclast persecution) துன்புறுத்தி கொல்லும்படி இரண்டாம் முறையாக உத்தரவிட்டிருந்தான்.

கி.பி. 815ம் ஆண்டு, பதவியிறக்கப்பட்ட தூதராக மெத்தோடியஸ் ரோம் பயணமானார். கி.பி. 821ம் ஆண்டு, நாடு திரும்பிய இவரை, சிலை வழிபாட்டின் எதிர்ப்பாளரான பேரரசன் இரண்டாம் மைக்கேலால் (Emperor Michael II) சிலை அல்லது சொரூபங்களை ஆராதிப்பவராக அடையாளம் காணப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். கி.பி. 829ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர், முரண்பாடாக, சிலை வழிபாட்டை இன்னும் தீவிரமாக எதிர்க்கும் பேரரசன் “தியோபிலசி’ன்” (Emperor Theophilos) அரசவையில் முக்கிய பதவி நியமனம் பெற்றார்.

கி.பி. 843ம் ஆண்டில் பேரரசன் மரணமடைந்ததன் பின்னர், செல்வாக்குள்ள மந்திரி “தியோக்டிஸ்டோஸ்” (Theoktistos) ராஜ மாதா “தியோடரா’விடம்” (Theodara), அவரது இரண்டு வயது மகன் “மூன்றாம் மைக்கேலி’ன்” (Michael III) அரச பிரதிநிதியாக செயலாற்றுமாறு சம்மதிக்க வைத்தார். தேவாலயங்களிலிலிருந்து நீக்கப்பட்ட சிலைகளும் சொரூபங்களும் படங்களும் மீண்டும் வைக்கப்பட அனுமதி வழங்கினார். இப்படி செய்வதினால் இறந்துபோன பேரரசனான அவரது கணவருக்கு வந்த அவப்பெயர் நீங்கும் என்றார். கிறிஸ்தவ தலைவராக (Patriarch) பதவியிலிருந்த “ஏழாம் ஜான்” (John VII Grammatikos) என்பவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். மெத்தோடியஸ் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இதன்மூலம் சிலை வழிபாடு அல்லது சொரூப ஆராதனை சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வந்தன. கி.பி. 843ம் ஆண்டு, மார்ச் மாதம், 11ம் நாள் முதல், தேவாலயங்களில் சொரூபங்கள் வைக்கப்பட அனுமதிக்கப்பட்டன.

பாடலாசிரியர் புனிதர் ஜோசஃப் June 14

† இன்றைய புனிதர் †
(ஜூன் 14)

✠ பாடலாசிரியர் புனிதர் ஜோசஃப் ✠
(St. Joseph the Hymnographer)
துறவி/ பாடலாசிரியர்:
(Monk/ Hymnographer)

பிறப்பு: கி.பி. 816
சிசிலி
(Sicily)

இறப்பு: ஏப்ரல் 3, 886
தெஸ்ஸலோனிக்கா
(Thessalonica)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)

நினைவுத் திருநாள்: ஜூன் 14

பாடலாசிரியரான புனிதர் ஜோசஃப், ஒன்பதாம் நூற்றாண்டின் துறவியும், ஆன்மீக கவிஞரும், பாடலாசிரியருமாவார். “இனிமையான குரல் கொண்ட திருச்சபையின் பாடும் பறவை” (The Sweet-Voiced Nightingale of the Church) என்று இவரை அறிந்தோர் கூறுவர்.

கி.பி. ஏறக்குறைய 816ம் ஆண்டு, சிசிலியிலுள்ள (Sicily) பக்தியுள்ள பெற்றோரான “புலோடினஸ்” மற்றும் “அகதா’வுக்கு” (Plotinus and Agatha) மகனாகப் பிறந்தார். சிசிலியின் மீதான அரேபிய படையெடுப்பின் காரணமாக, அவருடைய குடும்பம் சிசிலியை விட்டு புலம்பெயர முடிவெடுத்தனர். 

கி.பி. சுமார் 840ம் ஆண்டில், “தெஸ்ஸலோனிக்கா’வின்” ஆயர் (Bishop of Thessalonica) இவரை ஒரு “குரு-துறவியாக” (Hieromonk) அருட்பொழிவு செய்வித்தார். ஒருமுறை “தெஸ்ஸலோனிக்கா” வந்த புனிதர் கிரகோரி (St. Gregory of Dekapolis), இவரது குணநலன்களால் ஈர்க்கப்பட்டு, இவரை “கான்ஸ்டன்டினோபில்” (Constantinople) நகரிலுள்ள தமது “ஸ்டௌடியோஸ்” எனும் (Stoudios Monastery) துறவியர் மடத்தில் சேர அழைத்தார். கி.பி. 841ம் ஆண்டு, திருத்தந்தை மூன்றாம் லியோ (Pope Leo II) அவர்களின் அழைப்பைத் தொடர்ந்து ஜோசஃப், கிரகோரி அவர்களால் ரோம் அனுப்பப்பட்டார். ஆனால், அரேபிய கடல் கொள்ளைக்காரர்களால் வழியிலேயே மறித்து சிறை பிடிக்கப்பட்ட ஜோசஃப், “கிரேட்” (Crete) எனும் கிரேக்க தீவில் அடிமையாக விற்கப்பட்டார்.

இவர் கிரேட் தீவில் அடிமைத்தளையில் இருக்கையில், புனிதர் நிக்கோலஸ் (St. Nicholas) இவருக்கு காட்சியளித்தார். அவர், ஜோசஃபை பார்த்து, கடவுளின் பெயரில் பாடல் பாடு என்றார். ஜோசஃப் பாடியதும், “எழுந்து என்னைப் பின்தொடர்” என்று கூறிவிட்டு சென்றார். இதன்பின்னர், ஜோசஃபுக்கு விரைவில் விடுதலை கிடைத்தது. அவர் “கான்ஸ்டன்டினோபிள்” திரும்ப ஒரு வருட காலம் ஆனது.

கி.பி. 855ம் ஆண்டு, ஒரு துறவு மடத்தினை நிறுவி, மரித்துப்போன தமது வழிகாட்டியான புனிதர் கிரகோரியின் (Gregory of Dekapolis) பெயரில் அர்ப்பணித்தார். இறைவன் புகழ்பாடும் பண்பாடித் திரிந்த ஜோசஃப், தமது எழுபது வயதில் மரித்தார்.

புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி June 14

† இன்றைய புனிதர் †
(ஜூன் 14)

✠ புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி ✠
(St. Albert Chmielowski)
மறைப்பணியாளர், நிறுவனர்:
(Religious and Founder)

பிறப்பு: ஆகஸ்ட் 20, 1845
இகொலோமியா, மலோபோல்ஸ்கி, போலந்து
(Igołomia, Małopolskie, Congress Poland)

இறப்பு: டிசம்பர் 25, 1916 (வயது 71)
க்ரகோவ், போலந்து அரசு
(Kraków, Kingdom of Poland)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 22, 1983, 
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: நவம்பர் 12, 1989
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜூன் 17

பாதுகாவல்:
ஏழைகளின் ஊழியர்கள் (Servants of the Poor)
ஏழைகளின் ஊழிய சகோதரிகள் (Sisters Servants of the Poor)
பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை சபை (Franciscan tertiaries)
வீரர்கள், தொண்டர்கள், சாகுபடி, பயணிகள், புலாவி (Puławy),
சோஸ்னோவிக் மறைமாவட்டம் (Diocese of Sosnowiec), ஓவியர்கள்

புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி, ஒரு “ஒப்புக்கொள்ளப்பட்ட போலிஷ் மறைப்பணியாளர்” (Polish Professed Religious) ஆவார். இவர், “ஏழைகளின் ஊழியர்கள்” (Servants of the Poor) மற்றும் “ஏழைகளின் ஊழிய சகோதரிகள்” (Sisters Servants of the Poor) ஆகிய சபைகளை நிறுவியவருமாவார். ஜனவரி கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த இவருக்கு காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, இவர் தமது கால் ஒன்றினை இழக்க நேர்ந்தது. இதன் காரணமாக, தமது வாழ்நாள் முழுதும் ஒரு மரத்தினாலான ஒரு பொய்க் காலை பொருத்தியவாறே வாழ்ந்தார்.

பிரபலமான ஓவியராக மாறிய அவர், தமது ஓவியங்களை ஏழைகளின் நிலை வாழ்க்கைக்கு ஆதரவாக அர்ப்பணிப்பதற்காக அனைத்தையும் கொடுக்க முடிவு செய்வதற்கு முன்னர், தமது ஓவியங்களின் பெரும்பகுதியை கருப்பொருள்களாக ஆன்மீகத்தைப் பயன்படுத்தினார். தொடக்கத்தில் “இயேசுசபையில்” (Jesuits) இணைந்த அவர், பின்னர் அதனின்றும் வெளியேறி, “தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில்” (Third Order of Saint Francis) இணைந்தார்.

“ஆதாம் ஹிலரி பெர்னார்ட் சிமியேலோவ்ஸ்கி” (Adam Hilary Bernard Chmielowski) எனும் இயற்பெயர் கொண்ட இவர், “க்ரகோவ்” (Outskirts of Krakow) நகரின் புறநகரான “இகொலோமியா” (Iglomia) எனும் கிராமத்தில், கி.பி. 1845ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 20ம் நாளன்று, வசதிவைப்புள்ள உயர்குல தம்பதியரான “அடெல்பர்ட்” (Adelbert Chmielowski) மற்றும் “ஜோசஃபின்” (Josephine Borzyslawska) ஆகியோருக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்த மகனாகப் பிறந்தார். ஆகஸ்ட் மாதம் 26ம் நாளன்று, இவருக்கு திருமுழுக்கு அளிக்கப்படவிருந்தது. ஆனால், அன்றைய காலக்கட்டத்தின் குழப்பமான கொந்தளிப்பு நிலை காரணமாக, திருமுழுக்கு சடங்கிற்காக எந்தவொரு குருவும் கிடைக்கவில்லை. ஆகவே, அவருக்கு முறையான திருமுழுக்கு, 1847ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் நாளன்று நடைபெற்றது.

தனது குழந்தை பருவத்தில் அவரும் அவரது உடன்பிறப்புகளும் பெற்றோரை இழந்தனர். இதன் காரணமாக, இவர்களது அத்தையான “பெட்ரோநெலா” (Petronela) இவர்களை கவனித்து வளர்த்தார். பிற்காலத்தில், தனது பெற்றோரின் தோட்டத்தை நிர்வகிப்பதற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் காரணத்திற்காக, “புலாவி” (Puławy) நகரிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விவசாயம் கற்றார். போலிஷ் தேசியவாத கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டபின், அவர் ஒரு காலை இழந்த போதிலும், அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். கி.பி. 1863ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதல் தேதியன்று, ஒரு ரஷ்ய கையெறிகுண்டு வெடித்ததில், அவரது குதிரைக் கொல்லப்பட்டதுடன், அவரது கால் துண்டாடப்படுமளவிற்கு சேதமடைந்தது. அவருக்கு ஒரு மரக்கால் பொருத்தப்பட்டது. தமது வாழ்க்கையை கடவுளுக்கும், போலிஷ் விடுதலைப் போருக்கும் அர்ப்பணித்தார். காயமடைந்த ஆதாம், ஒரு காட்டுப்பாதாளியின் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மயக்க மருந்து இல்லாமலேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது. அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட தாங்கொண்ணா வலி வேதனைகளை அவர் கடவுளுக்கே ஒப்படைத்தார்.

கிளர்ச்சியாளர்களின் மீதான ஜார்ஜிய அதிகாரிகளின் (Czarist authorities) கடுமையான பதிலடி, ஆதாமை போலந்து (Poland) நாட்டை விட்டு வெளியேற வைத்தது. பெல்ஜியம் (Belgium) நாட்டிலுள்ள “கெண்ட்” (Ghent) என்ற நகரில் குடியேறிய அவர், அங்கே பொறியியல் கற்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில், தம்மில் ஓவியத்திலும் திறமை இருந்தது என்பதை அவர் கண்டுபிடித்தார். அதிலும் வளர்ச்சியடைய தொடங்கினார். ஓவியப் பயிற்சி மற்றும் பணிகளுக்காக “பாரிஸ்” (Paris) மற்றும் “மூனிச்” (Munich) நகரங்களுக்கு பயணித்த அவர், நிறைய நண்பர்களை சம்பாதித்தார்.

கி.பி. 1874ம் ஆண்டு, அவரால் தனது தாயகத்திற்குத் திரும்ப முடிந்தது. அங்கே அவர் புகழ்பெற்ற கலைஞராக “க்ராகோவில்” பணியாற்றினார். மற்றும், கி.பி. 1870ம் ஆண்டு முதல் 1885ம் ஆண்டு வரை ஒரு ஓவியராக பணியாற்றினார். அவர் 61 ஓவியங்களை மொத்தமாக தயாரித்தார். ஆனால் அவரது படைப்புகள் அவருக்கு வாங்கித் தந்த புகழ் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், மனச்சோர்வுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வலுவான அரசியல் நம்பிக்கைகள் மனிதனின் நிலைப்பாட்டிற்கும், மென்மையான, கருணையுள்ள ஆவியுடனான அவரது ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தியது. மேலும், இது ஏழைகளின் துன்பங்களை அவருக்கு உணர்த்தியது. தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்த அவர், க்ரகோவ் (Kraków) நகரிலுள்ள வீடற்றோருக்கான முகாம்களில் பணியாற்றினார்.

கி.பி. 1880ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 24ம் தேதி, அவர் “ஸ்டாரா வைஸ்” (Stara Wies) கிராமத்திலுள்ள இயேசுசபையின் (Jesits) புகுமுக (Novitate) பயிற்சியில் இணைந்தார். பின்னர், ஒரு தியானத்தின்போது, ஒரு பயங்கரமான சோதனையை எதிர்கொண்டார். தமது முடிவுக்காக ஏக்கம் கொண்ட அவர், விரைவிலேயே நோய்வாய்ப்பட்டார். அவரது சகோதரர் ஸ்டானிஸ்லாவ் அவரை மீட்டெடுக்க வந்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் இயேசுசபைக்கு திரும்புவதில்லை என முடிவு செய்தார். விரைவிலேயே அவர் அசிசியின் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையின் சட்டதிட்டங்களை கேள்வியுற்றார். அதன்பால் கவரப்பட்ட அவர், அந்த சபையில் சேர ஆர்வமானார்.

கி.பி. 1887ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 25ம் தேதியன்று, அசிசியின் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் இணைந்தார். துறவு ஆடைகளைப் பெற்றுக்கொண்ட அவர், “ஆல்பர்ட்” (Albert) எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராக ஏற்றுக்கொண்டார். கி.பி. 1888ம் ஆண்டு, தமது சத்தியப் பிரமாணங்களை ஏற்றுக்கொண்ட இவர், ஆகஸ்ட் மாதம், 25ம் நாளன்று, “ஏழைகளின் ஊழியர்கள்” (Servants of the Poor) எனும் சபையை நிறுவினார். பின்னர், கி.பி. 1891ம் ஆண்டு, ஜனவரி மாதம், 15ம் நாளன்று, “அருளாளர் மரியா ஜப்லோன்ஸ்கா” (Blessed Maria Jabłońska) என்பவருடன் இணைந்து, ஏற்கனவே உள்ள சபைக்கு இணையான, பெண்களுக்கான “அல்பர்ட்டைன் சகோதரியர்” (Albertine Sisters) எனும் சபையை நிறுவினார். இச்சபையினர், வீடற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து தந்தனர்.

அவர் கார்மேல் கான்வென்ட்டில் (Carmelite Convent) சிறிது காலம் செலவிட்டார். விரைவிலேயே தமக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான “புனிதர் சிலுவையின் ஜானின்” (Saint John of the Cross) பிரசுரங்களை நன்கு அறிந்திருந்தார். விரைவிலேயே அவர் கார்மேல் காண்வென்ட்டின் தலைவரான “புனிதர் ரபேல் காலினோஸ்கி” (Saint Raphael Kalinowski) அறிமுகமானார். அவர், ஆல்பர்ட்டை கார்மேல் சபையில் சேருமாறு வலியுறுத்தினார். ஆயினும், இவர் ஃபிரான்சிஸ்கன் சபையிலேயே நிலைத்து இருந்தார்.

வயிற்று புற்று நோயால் (Stomach Cancer) பாதிக்கப்பட்டிருந்த ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி, கி.பி. 1916ம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு தினத்தன்று மரித்தார். அவரது நிலை மோசமடைந்த காரணத்தால், அவர் டிசம்பர் 23ம் தேதியன்றே, “நோயில் பூசுதல்” (Anointing of the Sick) அருட்சாதனத்தைப் பெற்றார்.

Holy Body and Blood of Christ June 14

Feast : (14-06-2020)

Holy Body and Blood of Christ
This feast is celebrating the religious belief in the Body and Blood of Christ and real presence of Jesus in the Eucharist. This feast is celebrated on the next Sunday after Trinity Sunday to commemorate the institution of the Eucharist. An Augustinian nun Juliana of Liege had a great veneration for the Blessed Sacrament and she wished very much for the institution of a special feast for honoring the Blessed Sacrament. Once she saw a vision of the Church under full moon having a black spot. She thought that the black dark spot signifies the lack of a feast of the Eucharist. Bishop Robert de Thorete, Bishop of Liege was convinced about the vision of Juliana and ordered a feast to be celebrated in his diocese from the year 1247 and celebrated by the Cannons of St. Martins at Liege. Pope Urban-IV published a Papal Bull 'Transiturus' on September 8, 1264 directing to celebrate this feast on the Thursday, next after Trinity Sunday. But in countries where this feast is not a Holy Day of obligation including United States, it is celebrated on the next Sunday after Trinity Sunday. The new Liturgy for this feast was composed by St. Aquinas and he also written a hymn to sing on Corpus Christi Day-Pange Lingua Gloriosi Corporis Mysterium and this hymn is being sung on the Holy (Maundy) Thursday during the procession of the Blessed Sacrament.

This is to express the doctrine of Transubstantiation, in which it is believed that the bread and wine are changed into the Body and Blood of Jesus Christ. This feast is to show the Church's gratitude to the Christ, who instituted the Holy Eucharist and gave it to the Church, which is the greatest treasure of the Church. Maundy Thursday in which the Holy Eucharist was instituted is not a joyous day due to the Lord's Passion. To celebrate the joyous aspect of Maundy Thursday when the Holy Eucharist was instituted, this feast is celebrated. Eucharist is the sacrament of Life, sacrament of Love, sacrament of Unity and sacrament of Faith. Christ said when instituting the Holy Eucharist 'This is My Body given up for you, this is My Blood shed for you'. These are the words of sacrifice for others and love for others.

---JDH---Jesus the Divine Healer---

புனித.ஹாட்விக்ஆயர் June 14

இன்றைய புனிதர் :
(14-06-2020)

புனித.ஹாட்விக்
ஆயர்

பிறப்பு 
955
     
14 ஜூன் 1023

இவர் ஜெர்மனி நாட்டிலுள்ள சால்ஸ்பூர்க் என்ற மறைமாநிலத்திற்கு ஆர்ச் பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசர் 3ஆம் ஓட்டோ (Otto III) அவர்களுடன் நெருங்கிய நண்பராக இருந்தார். இதனால் தனது மறைமாநிலத்திற்கு தேவையான அனைத்து பொருளுதவிகளையும் அரசரிடமிருந்து பெற்று, தன் மறைமாநில மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார். 993 ஆம் ஆண்டில் சால்ஸ்பூர்க்கில், மறைமாநில பேராலயத்தை எழுப்பினார். பல பள்ளிகளையும், மறைமாநிலத்திற்கென்று சில நிறுவனங்களையும் கட்டினார். புனித பெனடிக்ட் சபைக்கென்று துறவற இல்லத்தையும் கட்டினார். இவர் காலரா போன்ற தொற்று நோய் உள்ள மக்களிடத்தில் பணியாற்றினார். அம்மக்களின் ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் எளிமையான பணியாலும், வாழ்வாலும் பல நோயாளிகளின் மனிதர் என்னும் ஒளியேற்றி வாழ்வளித்தார். தொற்றுநோய் உள்ள மக்களிடையே பணியாற்றும் போது, அந்நோயால் தாக்கப்பட்டு இருந்தார். அவரால் கட்டப்பட்ட சால்ஸ்பூர்க் பேராலயத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1598இப்பேராலயமானது தீப்பிடித்து எரிந்ததால் அவரின் உடலை கண்டெடுக்க முடியாமல் போனது.

செபம்:
ஏழைகளின் தோழனே இறைவா! புனித ஹாட்விக் ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு வழிகாட்டினார். ஏழைகளின் தோழனாய் இருந்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்தார். தான் செய்த பணியின் வழியாக, தன் வாழ்வையே தியாகம் செய்து உயிர்நீத்தார். நாங்கள் எங்களால் இயன்றவரை, ஏழைகளோடு இருக்க, அவர்களுக்கு உதவிசெய்த எமக்கு வழிகாட்டி, உதவிசெய்தருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.