† இன்றைய புனிதர் †
(ஜூலை 26)
✠ அருளாளர் ஜான் இங்க்ராம் ✠
(Blessed John Ingram)
ஆங்கிலேய இயேசுசபை குரு, மறைசாட்சி:
(English Jesuit and Martyr)
பிறப்பு: கி.பி. 1565
ஸ்டோக் எடித், ஹியர்ஃபோர்ட்ஷைர்
(Stoke Edith, Herefordshire)
இறப்பு: ஜூலை 26, 1594
கேட்ஷீட்
(Gateshead)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholicism)
முக்திபேறு பட்டம்: 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
அருளாளர் ஜான் இங்க்ராம், ஒரு ஆங்கிலேய இயேசுசபை குருவும் (English Jesuit), இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் மகாராணியான (Queen of England and Ireland), முதலாம் எலிசபெத்தின் (Elizabeth I) ஆட்சி காலத்தில், கத்தோலிக்க மறையின்மீது தமக்கிருந்த விசுவாசம் காரணமாக, மறைசாட்சியாக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டவருமாவார்.
இவரது தந்தை, “அந்தோணி இங்க்ராம்” (Anthony Ingram of Wolford) ஆவார். இவரது தாயார், “டாரதி” (Dorothy, daughter of Sir John Hungerford) ஆவார். இவர், இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்டில் உள்ள “வொர்செஸ்டர்ஷைர்” (Worcestershire) எனும் மாவட்டத்தில் உள்ள “ஆக்ஸ்ஃபோர்ட்” பல்கலையின் “நியூ கல்லூரியில்” (New College, Oxford) கல்வி பயின்றார். பின்னர், கத்தோலிக்க மறைக்கு மனம் மாறிய இவர், “ரெய்ம்ஸ்” நகரிலுள்ள “ஆங்கிலேய கல்லூரி” (English College, Rheims) எனும் கத்தோலிக்க செமினாரியில் (Catholic seminary) குருத்துவ கல்வி பயின்றார். (இது, தற்போதைய ஃபிரான்சில் உள்ளது). பின்னர், “பொன்ட்-எ-மௌஸ்ஸோன்” (Pont-a-Mousson) எனும் இயேசுசபை கல்லூரியிலும், பின்னர் ரோம் (Rome) நகரிலுள்ள ஆங்கிலேய கல்லூரியிலும் (English College, Rome) கற்றார்.
கி.பி. 1589ம் ஆண்டு, ரோம் (Rome) நகரில் குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், கி.பி. 1592ம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்காட்லாந்து (Scotland) நாட்டுக்குச் சென்றார். அங்கே அவர் பல சக்திவாய்ந்த பிரமுகர்களுடன் நட்பு கொண்டார். அங்கே, ஸ்கோட்டிஷ் ரோமன் கத்தோலிக்க (Scottish Roman Catholic intriguer) அறிஞரான “வால்ட்டர் லிண்ட்சே” (Walter Lindsay of Balgavie) என்பவரது சிற்றாலய குருவாக 18 மாதங்கள் நியமனம் பெற்றிருந்தார்.
கி.பி. 1593ம் ஆண்டு, நவம்பர் மாதம், 25ம் தேதி, “நார்தும்பர்லாந்து” (Northumberland) மாகாணத்திலுள்ள “ட்வீட்” (River Tweed) நதிக்கரையோரமுள்ள “வார்க்” (Wark on Tweed) எனும் கிராமத்தில் வைத்து பிடிபட்ட ஜான் இங்க்ராம், கைது செய்யப்பட்டு முதலில் “பெர்விக்” (Berwick) சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் “டர்ஹம்” (Durham), “யோர்க்” (York) ஆகிய ஊர்களிலுள்ள சிறைச்சாலைகளிலும், இறுதியாக “டவர் ஆஃப் லண்டன்” (Tower of London) எனும் சித்திரவதைக் கூட சிறையிலும் அடைக்கப்பட்டார். அங்கே, அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார். அவர் இருபது இலத்தீன் புராணங்களை (Latin epigrams) எழுதினார். அவை இன்றளவும் உள்ளன.
லண்டன் டவரில் அவருக்கு நேர்ந்த கடுமையான சோதனைகளின் பின்னர், அவர் மீண்டும் வடக்கிலுள்ள யோர்க் (York), நியு காஸ்டில் (Newcastle) மற்றும் “டர்ஹம்” (Durham) சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர், புனிதர் “ஜான் போஸ்ட்”(John Boste) போன்றோருடன் சேர்த்து விசாரிக்கப்பட்டார்.
வெளிநாடுகளில் குருத்துவம் பெற்ற கத்தோலிக்க குருக்களுக்கு இங்கிலாந்து நாட்டில் தடை இருந்தது. தடையை மீறி அங்கே இருப்பது, இராஜதுரோகமாக கருதப்பட்டது. இங்கிலாந்தில் அவர் எப்போதுமே ஒரு கத்தோலிக்க குருவாக செயல்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லாதிருந்தும், மேற்படி சட்டப்படி, வடக்கு இங்கிலாந்தின் “டர்ஹாம்” (Durham) நகரிலுள்ள “அஸ்ஸிஸஸ்” (Assizes) எனப்படும் ஒரு விசாரணை நீதிமன்றத்தால் கி.பி. 1594ம் ஆண்டு, ஜூலை மாதம், 23ம் நாளன்று தண்டிக்கப்பட்டார். ஸ்காட்லாந்தில் உள்ள யாரோ ஒருவர், இன்க்ராமின் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக, ஆயிரம் கிரீடங்களை ஆங்கில அரசாங்கத்திற்கு வழங்கியதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் வீணாயின. நியூகேஸ்டல் (Newcastle) அதிகாரிகள் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான பொருப்பிலிருந்ததால், இங்க்ராம் நியூகேஸ்டல் நகரிலுள்ள நியூகேட் சிறைச்சாலைக்கு (Newgate Prison) மாற்றல் செய்யப்பட்டார். தண்டனை நாளான ஜூலை மாதம், 26ம் நாள், வெள்ளிக்கிழமையன்று, “கேட்ஸ்ஹெட் ஹை ஸ்ட்ரீட்” (Gateshead High Street) எனுமிடத்திலுள்ள பாலத்தின் (தற்போதைய தொங்குபாலம் (Swing Bridge) குறுக்கேயுள்ள தூக்கு மரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கி.பி. 1594ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் தேதி, “கேட்ஸ்ஹெட்” (Gateshead) நகரில் ஜான் இங்க்ராம் தூக்கிலிடப்பட்டார்.
† Saint of the Day †
(July 26)
✠ Blessed John Ingram ✠
English Jesuit and Martyr:
Born: 1565 AD
Stoke Edith, Herefordshire
Died: July 26, 1594
Gateshead
Venerated in: Roman Catholic Church
Feast: July 26
The Blessed John Ingram was an English Jesuit and martyr from Stoke Edith, Herefordshire, who was executed in Gateshead on 26 July 1594, during the reign of Elizabeth I.
Life:
Ingram was probably the son of Anthony Ingram of Wolford, Warwickshire, by Dorothy, daughter of Sir John Hungerford.
He began his education in Worcestershire and attended New College, Oxford. He then converted to Catholicism and studied at the English College, Rheims, at the Jesuit College, Pont-a-Mousson, and at the English College, Rome. He was ordained at Rome in 1589; and then, early in 1592, he went to Scotland. There he befriended many powerful people. He acted as chaplain to Walter Lindsay of Balgavie for 18 months.
Captured at Wark in Northumberland having crossed into England over the River Tweed on 25 November 1593, he was first imprisoned at Berwick; then at Durham, York, and in the Tower of London, where he was severely tortured and wrote twenty Latin epigrams, which survive.
After his ordeal at the Tower, he was sent North again and imprisoned at York, Newcastle, and Durham. There he was tried with John Boste and George Swallowell, a converted minister. At Durham Assizes on the 23rd July 1594, he was convicted under a law, which made the mere presence in England of a priest ordained abroad high treason, even though there was no evidence that he had ever acted as a priest while in England. There is evidence that someone in Scotland offered the English Government a thousand crowns to spare Ingram's life, all in vain. As the authorities in Newcastle were responsible for executions on Tyneside, John was transferred to Newgate Prison in Newcastle and on the day of execution, Friday 26 July, he was taken from the prison across the bridge (now where the Swing Bridge is located) to the Scaffold in Gateshead High Street which was directly opposite what was known at the time as the Papist Chapel, the Chapel of St Edmund Bishop and Confessor, now the Anglican church of Holy Trinity.
Death and beatification:
Ingram was executed at Gateshead on 26 July 1594.
Holtby gives an account of Ingram's preparations, the prayers he said, his words to the bystanders, and of the execution itself:
"I take God and his holy angels to the record, that I die only for the holy Catholic faith and religion, and do rejoice and thank God with all my heart that hath made me worthy to testify my faith therein, by the spending of my blood in this manner." He was asked to pray for the Queen and he prayed God that she might long reign to his glory and that it might please him to procure her to live and die a good Catholic Christian prince. With a rope around his neck, he said more prayers, ending with the psalm Miserere mei Deus, after which, making the sign of the Cross upon himself and saying, In manus Tuas, etc., the ladder was turned; and being dead, he was cut down, bowelled, and quartered. The Gateshead executioner was paid two shillings and sixpence, eighteen pence for hanging his quarters on gibbets. His quarters were sent to Newcastle, and his headset upon the bridge.
In the Tower of London, John Ingram had cut with a blunt knife on the walls of his cell these words of an Epigram in Latin, "The expectation of a bloody death is another death, which grins at me, her gray hairs steeped in gore." Another Epigram read: "Rocks are quarried, the entrails of the earth, that Dives may have a living rock for his tomb. No tomb seek me; and yet shall there be a living tomb for my lifeless body ---- the carrion-crow."
In Rome, at the English College, when the news of his martyrdom reached there, the staff and students sang the Te Deum in the college chapel and wrote against his name 'Martyro insignia coronatus'.
He was beatified in 1929 by Pope Pius XI and his anniversary is 24 July.
His martyrdom is commemorated each year by faithful Catholics who gather at St Andrew's Anglican Church in Newcastle, which is situated where John Ingram was held in the Newgate Prison prior to his execution. After a brief service of prayer, they walk along the route taken by the execution party, from Newcastle to Gateshead High Street, crossing the River Tyne over the Swing Bridge, where the medieval bridge stood. The Annual John Ingram Walk concludes with service of prayer at the Anglican church of St Edmund (Holy Trinity Church) which is situated in the High Street. The Catholic priest who leads this Walk usually delivers a homily at St Edmund's. At the time of Protestant Reformation this church was referred to as "the papist chapel", and the authorities chose to execute John Ingram directly in front of this chapel, dedicated to St Edmund of Canterbury, as a warning to any Catholics on Tyneside, of which there were many, should they think of refusing to comply with the requirements of the Queen, her Privy Council, and her Protestant bishops.
The brothers of the St Vincent de Paul Society Conference at Corpus Christi Catholic Church in the Bensham area of Gateshead initiated the annual walk in his honor a few years after the Canonization of the Forty Martyrs of England and Wales by Pope Paul VI, and after speaking to the elderly Father Starr, a Catholic priest who had had a personal devotion to the Gateshead martyr for many years and had made a walk in his honor. Their motive from the start was to promote the Cause for the canonization of Blessed John Ingram.