புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 June 2020

புனித பர்னபா(St. Barnabas )திருத்தூதர், மறைசாட்சி(Apostle, Martyr) June 11

இன்றைய புனிதர் :
(11-06-2020)

புனித பர்னபா(St. Barnabas )
திருத்தூதர், மறைசாட்சி(Apostle, Martyr)

பிறப்பு 
--
    
இறப்பு 
கி.பி. 61 

இவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்லர். தொடக்கத் திருச்சபையின் தந்தையரும், லூக்கா நற்செய்தியாளரும் இவரது அப்போஸ்தலிக்க ஆர்வம் நிறைந்த பணிகளின் பொருட்டு, அப்போஸ்தலர் என இவரை அழைத்தார்கள். சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் லேவியர் ஒருவர் இருந்தார். திருத்தூதர்கள் இவருக்கு "ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்" என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயர் கொடுத்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார் ( தி.ப. 4: 36-37) 

பின்பு 3 ஆண்டுகள் கழித்து, மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வந்தார். சீடர்கள் அவர் மனந்திரும்பியவர் என ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இவ்வேளையில்தான் "பர்னபா" அவருக்குத் துணை நின்று அவரை திருத்தூதர்களிடம் அழைத்து சென்றார். (தி.ப. 9:27). பின்னர் அந்தியோக்கியா நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால், யெருசலேம் நகரிலிருந்து , இந்த புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்ப தீர்மானித்தார். தூய ஆவியால் நிரம்ப பெற்றவர், ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபா என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்குப்போய் நேரில் கண்டதும் ஒரே இன்பமும், மகிழ்ச்சியும் கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற தார்சீஸ் நகர் சென்று அவரை அழைத்து வந்தார். 

பின்னர் யூதாவிலும், யெருசலேம் முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பர்னபா அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று, அதை சவுல் வழியாக எருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திரா என்ற ஊரில் கால் ஊனமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் குணமாக்கினார். இதைக் கண்ட அவ்வூரினர் இவர்களை தெய்வங்களாக மதித்து, பலியிட முயன்றனர். அப்போது யூதர்கள் அம்மனிதர்களை தூண்டிவிட்டு பர்னபா மற்றும் பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்து , அவர்களை கல்லால் எறிந்தார்கள் (தி.ப. 14: 18-20). 

பின்பு நற்செய்தியாளர் ஜான் மார்க்கை அழைத்து கொண்டு பர்னபாவும் பவுலும் சைப்ரஸ் சென்றார்கள். அங்கு போதித்த பின், பம்பிலியா நோக்கிப் புறப்படும்போது, ஜான் மார்க் அவர்களுடன் சேர்ந்து போகவில்லை. இதனால் பவுல் வருத்தமுற்றார். இதன்பின்னர் அந்தியோக்கியாவில் விருத்தசேதனம் பற்றி கடுமையாக கருத்து மோதல் எழுந்தது. இதை தீர்த்து வைக்க யெருசலேமில் முதல் பொதுச்சங்கம் கூடியது. யூதர்கள் விரித்த வலையில் பர்னபா விழுந்ததை எண்ணி பவுல் மிகவும் வருத்தப்பட்டார். அதன்பிறகு பர்னபாவுக்கும், பவுலுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே திருச்சபை தொடங்கப்பட்ட இடங்களுக்கு சென்று, அவ்விருவரும் பார்வையிட திட்டம் தீட்டியபொழுது, ஜான் மார்க்கையும் அழைத்து செல்வோம் என்று பர்னபா கூறியபோது, இதனை பவுல் ஏற்கவில்லை. இதனால் பவுல் தனியாக விடப்பட்டார். அப்போது பர்னபா ஜான் மார்க்குடன் சைப்ரஸ் சென்றார். கி.பி. 61 ல் பவுல் உரோமையில் சிறையிலடைக்கப்பட்டார். அப்போது ஜான் மார்க்கைத் தம்மிடம் அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டார். அவ்வேளையில்தான் பர்னபா கல்லால் எரிந்து கொல்லப்பட்டார். அவருடைய திருப்பண்டங்கள் சைப்ரஸில், சலாமிசுக்கு அருகில் கிடைத்தன என்றும், அக்கல்லறையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி கிடைத்ததாகவும் நம்பப்படுகின்றது. 

செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் தலைவா! நற்செய்தியை பறைசாற்றி, பலவித துன்பங்களை ஏற்று கல்லால் எரிந்து கொல்லப்பட்ட திருத்தூதர் பர்னபாவை நினைவுகூர்ந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்கள் எங்களின் அன்றாட வாழ்வில் நற்செய்தியை வாசிக்காமல் நிற்பதோடு இறைவார்த்தைகளை எமதாக்கி, உமது நற்செய்தியின்படி வாழ்ந்திட உமதருள் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (11-06-2020)

St. Barnabas

He was one of the seventy apostles selected by Jesus for preaching the Gospel. His birth detail is not available but was born a Jew and his birth name was Joseph. He sold all his properties and placed the proceeds on the feet of the apostles and the apostles gave him the name 'Barnabas', meaning 'Son of consolation' or 'Son of encouragement'. He appears in the Acts of the Apostles and in some of the epistles of Apostle Paul. There is also a belief that both St. Paul and St. Barnabas were students of the Rabbi Gamaliel. Barnabas and Paul under took missionary journeys together. St. Barnabas along with St. Paul attended the First Council of Jerusalem, where the Apostles under the leadership of St. Peter decided that the Gentile converts to Christianity need not undergo circumcision. He was sent by the Apostles to Antioch to supervise the church activities there. He went to Cyprus in the year 45 A.D. with St. Paul and there a Roman Official Sergius Paulus was converted to Christianity by them in the island of Paphos in Salamis. When he was preaching the Gospel in Cyprus, the Jews stoned him to death without tolerating his extraordinary success in his missionary work at a place called Salamis in 61 A.D. But St. Barnabas appeared in a dream to Arthemios, Archbishop of Constantia (Salamis) in the year 478 and gave some indication about his burial place beneath a carob tree. Arthemios found out the grave and when the remains of Barnabas was taken it was found that a manuscript of St. Matthew’s Gospel was on the remains of his breast. The manuscript Gospel of Matthew was presented by the arch-bishop to the Emperor Zeno at Constantinople and got certain privileges from the Eastern Emperor Zeno. St. Barnabas was the founder of the Church of Cyprus.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூன் 11)

✠ புனிதர் பர்னபாஸ் ✠
(St. Barnabas)

அந்தியோக்கியா மற்றும் சைப்பிரஸின் திருத்தூதர், 
மறைப்பணியாளர், இறைவாக்கினர், சீடர் மற்றும் மறைசாட்சி:
(Apostle to Antioch and Cyprus, Missionary, Prophet, Disciple and Martyr)

பிறப்பு: தகவல் இல்லை
சைப்ரஸ்
(Cyprus)

இறப்பு: கி.பி. 61
சலாமிஸ், சைப்ரஸ்
(Salamis, Cyprus)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்க ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheran Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபைகள்
(Oriental Orthodox Church,)

முக்கிய திருத்தலங்கள்: 
புனித பர்னபாஸ் துறவு மடம், ஃபமாகஸ்டா, சைப்ரஸ்
(Monastery of St Barnabas in Famagusta, Cyprus)

நினைவுத் திருவிழா: ஜூன் 11

பாதுகாவல்: 
சைப்பிரஸ் (Cyprus), அந்தியோக்கியா (Antioc), அமைதி ஏற்பட,
ஆலங்கட்டி மழையிலிருந்து காக்கப்பட.

ஜோசஃப் எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் பர்னபாஸ், ஒரு ஆதி கிறிஸ்தவரும் இயேசுவின் சீடர்களுல் ஒருவரும் ஆவார். ஆனால், இவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்லர். தொடக்கத் திருச்சபையின் தந்தையரும், லூக்கா நற்செய்தியாளரும் இவரது அப்போஸ்தலிக்க ஆர்வம் நிறைந்த பணிகளின் பொருட்டு, அப்போஸ்தலர் என இவரை அழைத்தார்கள்.

திருத்தூதர் பணிகள் 4:36ன் படி, இவர் சைப்ரஸில் வாழ்ந்த யூதராவார். திருத்தூதர் பணிகள் 14:14 இவரையும் ஒரு திருத்தூதர் எனக் குறிக்கின்றது. இவரும் பவுலும் திருத்தூது பயணங்கள் மேற்கொண்டு யூத கிறிஸ்தவர்களிடம் புறவினத்தாரான கிறிஸ்தவர்களுக்காகப் பரிந்து பேசினர். இவர்கள் இருவரும் எருசலேம் சங்கத்தில் கலந்து கொண்டனர். பர்னபாஸ் மற்றும் பவுல் “அனத்தோலியா’வின்” (Anatolia) பல்வேறு நகரங்களிலுள்ள தொழுகைக் கூடங்களுக்கு வந்திருந்த கடவுள் பயமுள்ள புறவினத்தார் பலரை மனந்திருப்பினர். 

பர்னபாசைக் குறித்து திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுலின் திருமுகங்களிலும் காணக்கிடைக்கின்றது. திர்தூளியன் (Tertullian) இவரை “எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின்” (Epistle to the Hebrews) ஆசிரியர் எனக்குறிக்கின்றார். ஆயினும் இதற்கு எவ்வித சான்றும் இல்லை.

பர்னபாஸின் மரணத்தின் சூழ்நிலைகள், இடம், தேதி பற்றி வரலாற்று ரீதியாக ஏதும் தெரியாது எனினும், அவர் சுமார் கி. பி. 61ல் மறைசாட்சியாக “சைப்பிரஸில்” “ஸலாமிஸ்” (Salamis in Cyprus) எனும் இடத்தில் கொல்லப்பட்டார் என்பது கிறிஸ்தவ மரபு. “சைப்பிரஸ் மரபுவழி திருச்சபை’யினை” (Cypriot Orthodox Church) நிருவியவர் இவரே என நம்பப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூன் 11 ஆகும்.

கொலோசையர் (நூல்) 4ன் அடிப்படையில் பர்னபாஸ், மாற்குவின் உறவினர் என நம்பப்படுகின்றது. சில மரபுகளின்படி எழுபது சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் அரிஸ்தோபுலுஸ் பர்னபாஸின் சகோதரராக நம்பப்படுகின்றது.

சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் லேவியர் ஒருவர் இருந்தார். திருத்தூதர்கள் இவருக்கு "ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்" என்று பொருள்படும் பர்னபாஸ் என்னும் பெயர் கொடுத்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். (தி.பா. 4: 36-37)

பின்பு 3 ஆண்டுகள் கழித்து, மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வந்தார். சீடர்கள் அவர் மனந்திரும்பியவர் என ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இவ்வேளையில்தான் பர்னபாஸ் அவருக்குத் துணை நின்று அவரை திருத்தூதர்களிடம் அழைத்து சென்றார். (தி.பா. 9:27). 

பின்னர் அந்தியோக்கியா நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால், யெருசலேம் நகரிலிருந்து, இந்த புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்ப தீர்மானித்தார். 
தூய ஆவியால் நிரம்ப பெற்றவர், ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபாஸ் என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்கு போய் நேரில் கண்டதும் மகிழ்ச்சி கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற “டார்சஸ்” (Tarsus) நகர் சென்று அவரை அழைத்து வந்தார்.

பின்னர் யூதாவிலும், யெருசலேம் முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பர்னபாஸ் அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று, அதை பவுல் வழியாக எருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திரா என்ற ஊரில் கால் ஊனமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் குணமாக்கினார். இதைக் கண்ட அவ்வூர் மக்கள், இவர்களை தெய்வங்களாக மதித்து, பலியிட முயன்றனர். அப்போது யூதர்கள் அம்மனிதர்களை தூண்டிவிட்டு பர்னபாஸ் மற்றும் பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அவர்களை கல்லால் எறிந்தார்கள்.
(தி.பா. 14: 18-20).

மறைசாட்சி:
அக்காலத்தில் சிரியா மற்றும் சலாமிஸ் (Syria and Salamis) பிராந்தியங்களில் பர்னபாஸ் நற்செய்தியை பரப்பிக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் தமது அசாதாரண வெற்றியில் மிகவும் உற்சாகமடைந்திருக்கையில் அங்கு வந்த யூதர்கள், அவர்மேல் சட்டென விழுந்து அவரைப் பிடித்து இழுத்து வந்தனர். மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் செய்தபின்னர், கற்களால் எரிந்து அவரைக் கொன்றனர். யூதர்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்திருந்த அவரது உறவினரான “ஜான் மாற்கு” (John Mark) பர்னபாசை தனிப்பட்ட முறையில் அடக்கம் செய்தார்.

† Saint of the Day †
(June 11)

✠ St. Barnabas ✠

Apostle to Antioch and Cyprus, Missionary, Prophet, Disciple, and Martyr:

Born: Unknown
Cyprus

Died: Reputedly 61 AD
Salamis, Cyprus

Venerated in:
Catholic Church
Eastern Orthodox Churches
Oriental Orthodox Churches
Anglican Communion
Lutheran Church

Canonized: Pre-Congregation

Major Shrines:
Monastery of St Barnabas in Famagusta, Cyprus

Feast: June 11

Patronage:
Cyprus, Antioch, Against hailstorms, Invoked as the peacemaker

Barnabas (originally Joseph), styled an Apostle in Holy Scripture, and, like St. Paul, ranked by the Church with the Twelve, though not one of them; b. of Jewish parents in the Island of Cyprus about the beginning of the Christian Era. A Levite, he naturally spent much time in Jerusalem, probably even before the Crucifixion of Our Lord, and appears also to have settled there (where his relatives, the family of Mark the Evangelist, likewise had their homes — Acts 12:12) and to have owned land in its vicinity (4:36-37).

A rather late tradition recorded by Clement of Alexandria and Eusebius says that he was one of the Seventy Disciples; but Acts (4:36-37) favors the opinion that he was converted to Christianity shortly after Pentecost (about A.D. 29 or 30) and immediately sold his property and devoted the proceeds to the Church. The Apostles, probably because of his success as a preacher, for he is later placed first among the prophets and doctors of Antioch, surnamed him Barnabas, a name then interpreted as meaning "son of exhortation" or "consolation". Though nothing is recorded of Barnabas for some years, he evidently acquired during this period a high position in the Church.

When Saul the persecutor, later Paul the Apostle, made his first visit (dated variously from A.D. 33 to 38) to Jerusalem after his conversion, the Church there, remembering his former fierce spirit, was slow to believe in the reality of his conversion. Barnabas stood sponsor for him and had him received by the Apostles, as the Acts relate (9:27), though he saw only Peter and James, the brother of the Lord, according to Paul himself (Galatians 1:18-19). Saul went to his house at Tarsus to live in obscurity for some years, while Barnabas appears to have remained at Jerusalem.

The event that brought them together again and opened to both the door to their lifework was an indirect result of Saul's own persecution. In the dispersion that followed Stephen's death, some Disciples from Cyprus and Cyrene, obscure men, inaugurated the real mission of the Christian Church by preaching to the Gentiles. They met with great success among the Greeks at Antioch in Syria, reports of which coming o the ears of the Apostles, Barnabas was sent thither by them to investigate the work of his countrymen. He saw in the conversions effected the fruit of God's grace and, though a Jew, heartily welcomed these first Gentile converts.

His mind was opened at once to the possibility of this immense field. It is proof of how deeply impressed Barnabas had been by Paul that he thought of him immediately for this work, set out without delay for distant Tarsus, and persuaded Paul to go to Antioch and begin the work of preaching. This incident, shedding light on the character of each, shows it was no mere accident that led them to the Gentile field. Together they labored at Antioch for a whole year and "taught a great multitude". Then, on the coming of famine, by which Jerusalem was much afflicted, the offerings of the Disciples at Antioch were carried (about A.D. 45) to the mother-church by Barnabas and Saul (Acts 11). Their mission ended, they returned to Antioch, bringing with them the cousin, or nephew of Barnabas (Colossians 4:10), John Mark, the future Evangelist (Acts 12:25).

The time was now ripe, it was believed, for more systematic labors, and the Church of Antioch felt inspired by the Holy Ghost to send out missionaries to the Gentile world and to designate for the work, Barnabas and Paul. They accordingly departed, after the imposition of hands, with John Mark as a helper. Cyprus, the native land of Barnabas, was first evangelized, and then they crossed over to Asia Minor. Here, at Perge in Pamphylia, the first stopping place, John Mark left them, for what reason his friend St. Luke does not state, though Paul looked on the act as desertion. The two Apostles, however, pushing into the interior of a rather wild country, preached at Antioch of Pisidia, Iconium, Lystra, at Derbe, and other cities.

At every step, they met with opposition and even violent persecution from the Jews, who also incited the Gentiles against them. The most striking incident of the journey was at Lystra, where the superstitious populace took Paul, who had just cured a lame man, for Hermes (Mercury) "because he was the chief speaker", and Barnabas for Jupiter, and were about to sacrifice a bull to them when prevented by the Apostles. Mob-like, they were soon persuaded by the Jews to turn and attack the Apostles and wounded St. Paul almost fatally. Despite opposition and persecution, Paul and Barnabas made many converts on this journey and returned by the same route to Perge, organizing churches, ordaining presbyters and placing them over the faithful, so that they felt, on-again reaching Antioch in Syria, that God had "opened a door of faith to the Gentiles" (Acts 13:13-14:27).

Barnabas and Paul had been "for no small time" at Antioch when they were threatened with the undoing of their work and the stopping of its further progress. Preachers came from Jerusalem with the gospel that circumcision was necessary for salvation, even for the Gentiles. The Apostles of the Gentiles, perceiving at once that this doctrine would be fatal to their work, went up to Jerusalem to combat it; the older Apostles received them kindly and at what is called the Council of Jerusalem (dated variously from A.D. 47 to 51) granted a decision in their favor as well as a hearty commendation of their work (Acts 14:27-15:30). On their return to Antioch, they resumed their preaching for a short time.

St. Peter came down and associated freely there with the Gentiles, eating with them. This displeased some disciples of James; in their opinion, Peter's act was unlawful, as against the Mosaic law. Upon their remonstrances, Peter yielded apparently through fear of displeasing them and refused to eat any longer with the Gentiles. Barnabas followed his example. Paul considered that they "walked not uprightly according to the truth of the gospel" and upbraided them before the whole church (Galatians 2:11-15). Paul seems to have carried his point.

Shortly afterward, he and Barnabas decided to revisit their missions. Barnabas wished to take John Mark along once more, but on account of the previous defection, Paul objected. A sharp contention ensuing, the Apostles agreed to separate. Paul was probably somewhat influenced by the attitude recently taken by Barnabas, which might prove a prejudice to their work. Barnabas sailed with John Mark to Cyprus, while Paul took Silas a revisited the churches of Asia Minor. It is believed by some that the church of Antioch, by its God-speed to Paul, showed its approval of his attitude; this inference, however, is not certain (Acts 15:35-41).
Little is known of the subsequent career of Barnabas. He was still living and laboring as an Apostle in 56 or 57, when Paul wrote I Cor. (ix, 5, 6). from which we learn that he, too, like Paul, earned his own living, though on an equality with other Apostles. The reference indicates also that the friendship between the two was unimpaired. When Paul was a prisoner in Rome (61-63), John Mark was attached to him as a disciple, which is regarded as an indication that Barnabas was no longer living (Colossians 4:10). This seems probable.

Various traditions represent him as the first Bishop of Milan, as preaching at Alexandria and at Rome, whose fourth (?) bishop, St. Clement, he is said to have converted, and as having suffered martyrdom in Cyprus. The traditions are all late and untrustworthy.

With the exception of St. Paul and certain of the Twelve, Barnabas appears to have been the most esteemed man of the first Christian generation. St. Luke, breaking his habit of reserve, speaks of him with affection, "for he was a good man, full of the Holy Ghost and of Faith". His title to glory comes not only from his kindliness of heart, his personal sanctity, and his missionary labors, but also from his readiness to lay aside his Jewish prejudices, in this anticipating certain of the Twelve; from his large-hearted welcome of the Gentiles, and from his early perception of Paul's worth, to which the Christian Church is indebted, in large part at least, for its great Apostle. His tenderness towards John Mark seems to have had its reward in the valuable services later rendered by him to the Church.

The feast of St. Barnabas is celebrated on 11 June. He is credited by Tertullian (probably falsely) with the authorship of the Epistle to the Hebrews, and the so-called Epistle of Barnabas is ascribed to him by many Fathers.