புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 June 2020

புனித மரியம் திரேசியா சிரமெல் (1876-1926) June 8

ஜூன் 08

புனித மரியம் திரேசியா சிரமெல் (1876-1926)
இவர் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், புத்தன்சிராவில் 1876 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26 ஆம் நாள் பிறந்தார். 

இவருடைய குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக இருந்தது; ஆனால், இவருடைய தாத்தாவுக்கு 7 பெண் குழந்தைகள் இருந்ததால், அவர்களுக்குத் திருமணம்  செய்துவைக்கும்போது வரதட்சனை கொடுக்குக் கொடுத்தே ஏழையானது.

இவர் சிறு முதலே ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் இவர் தன்னுடைய வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழலாம் என்று முடிவு செய்தார். இதற்கு இவருடைய தாயார் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், அதாவது 1888 ஆம் ஆண்டு இவருடைய தாயார் இறந்துவிடவே, இவர் கார்மேல் சபையில் சேர்ந்தார். அங்கு இவரால் ஒருசில ஆண்டுகள் மட்டுமே இருக்க முடிந்தது. அதன்பிறகு இவர் அச்சபையிலிருந்து வெளியே வந்தார்.

1914 ஆம் ஆண்டு இவர் "திருக்குடும்பம்" என்ற சபையைத் தோற்றுவித்தார். அச்சபையின் தலைவியாக இருந்து இவர் நோயாளர்களைக் கவனித்துக் கொள்வதும், தனித்துவிடப்பட்டவர்களோடு நேரம் செலவழிப்பதும், ஏழைகளுக்கு உதவி செய்வதுமாக இருந்து வந்தார். 

இவருடைய சபையில் ஏராளமான பெண்கள் சேர்ந்தார்கள். அவர்களுடைய உதவியுடன் இவர் மேற்கண்ட பணிகளைச் செய்து வந்தார். இவர் அடிக்கடி காட்சிகள் கண்டார். அக்காட்சிகள் மூலமாக இவருக்குப் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. இவர் ஐந்து காய வரங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1926 ஆம் ஆண்டில் ஒருநாள் இவருடைய காலில் ஒரு பெரிய மரக்கட்டை விழுந்துவிட்டது. அது இவருக்கு மிகுந்த வேதனையைத் தரவே, சகோதரிகள் இவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை இவருக்குப் பலன் கொடுக்கவில்லை. அதனால் இவர் அதே ஆண்டு ஜூன் 8 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

இவர் இறக்கும்போது, "இயேசு, மரி யோசேப்பே! உங்களுடைய கைகளில் என்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் ஒப்படைக்கிறேன்" என்ற வார்த்தைகளைச சொல்லிக் கொண்டே இறந்தார்.

இவருக்கு 2000 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் அருளாளர் பட்டமும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸால் புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

யோர்க் நகர் புனிதர் வில்லியம் ✠(St. William of York June 8

† இன்றைய புனிதர் †
(ஜூன் 8)

✠ யோர்க் நகர் புனிதர் வில்லியம் ✠
(St. William of York)
யோர்க் பேராயர்:
(Archbishop of York)

பிறப்பு: கி.பி. 11ம் நூற்றாண்டின் பிற்பகுதி

இறப்பு: ஜூன் 8, 1154
யோர்க், இங்கிலாந்து
(York, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholc Church)

புனிதர் பட்டம்: கி.பி. 1227
திருத்தந்தை மூன்றாம் ஹானரியஸ்
(Pope Honorius III)

முக்கிய திருத்தலம்:
யோர்க் மின்ஸ்ட்டர்)
(York Minister)

நினைவுத் திருநாள்: ஜூன் 8

புனிதர் வில்லியம், ஓர் ஆங்கிலேய கத்தோலிக்க குருவும், யோர்க் உயர் மறைமாவட்ட பேராயரும் (Archbishop of York) ஆவார். இவர், இரண்டு முறை யோர்க் உயர் மறைமாவட்ட பேராயராக பதவி வகித்ததன் மூலம் பிற பேராயர்களினின்றும் அசாதாரண வேறுபாடு கொண்டிருந்தார்.

“வில்லியம் ஃபிட்ஸ்ஹெர்பர்ட்” (William fitzHerbert) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் வில்லியம், இங்கிலாந்தின் யோர்க் (York) மாநிலத்தில் பிறந்தவர். அரசன் முதலாம் ஹென்றியின் (King Henry I) பொக்கிஷதாரராகவும் வேந்தராகவும் பதவி வகித்த “ஹெர்பர்ட்” (Herbert of Winchester) இவரது தந்தையார் ஆவார். இவரது தாயாரின் பெயர் “எம்மா” (Emma) என்றும், “அரசன் ஸ்டீஃபன்” (King Stephen) மற்றும் “வின்செஸ்டர்” ஆயரான (Bishop of Winchester) ஹென்றி (Henry of Blois) ஆகியோரின் சகோதரி என்றும், “பிளாயிஸி’ன்” பிரபுவான (Count of Blois) இரண்டாம் “ஸ்டீஃபனின்” (Stephen II) சட்டவிரோத மகள் என்றும் பெரும்பாலான ஆதாரங்கள் கூறுகின்றன. வில்லியம் கி.பி. 1090ம் வருடத்துக்கு முன்னர் பிறந்திருக்கலாம் என்றும் அவர் பிறந்த சரியான தேதி அல்லது வருடம் பற்றின தகவல்கள் இல்லை என்பர். அரச குடும்பங்களுடன் உறவு மற்றும் சம்பந்தங்கள் உள்ளதால் இவர் பலமுறை தேர்தல்கள் போன்ற அரசியல் சிக்கல்களிலும் பிரச்சினைகளிலும் சிக்கியதுண்டு.

கி.பி. 1141ம் ஆண்டு நடந்த பேராயர் நியமனத்துக்கான தேர்தலில் வில்லியம் வெற்றி பெற்று பேராயர் ஆனார். இதே பதவிக்கான தேர்தல் மூன்று முறை நடந்தது. ஏற்கனவே தேர்தல் நடந்த இரண்டு முறையும் ஏதாவது காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. “யோர்க்ஷைர்” (Yorkshire) பிராந்தியங்களைச் சேர்ந்த “சிஸ்டேர்சியன்” (Cistercian monasteries) துறவற மடாலயங்கள் பேராயர் தேர்தல்களில் இவரை எதிர்த்தன. 

ஒரு பேராயராக, வில்லியம் பல்வேறு திருச்சபை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இதனால் யோர்க் மக்களிடம் பிரபலமானார். இருப்பினும், திருத்தந்தையிடமிருந்து தரப்படும் - பேராயருக்கான அதிகாரங்களைக் குறிக்கும் “பல்லியம்” (Pallium) எனும் மேலங்கி இவருக்கு இன்னும் தரப்படாதது இவருக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்தது. இவரை இன்னும் பிடிவாதமாக எதிர்த்துவரும் “சிஸ்டேர்சியன்” (Cistercian monasteries) துறவியரும் இதற்கு தடையாகவே இருந்தனர். “பல்லியம்” (Pallium) பெரும் முயற்சியாக வில்லியம் ரோம் பயணித்தார்.

கி.பி. 1145ம் ஆண்டு, திருத்தந்தையருக்கான தேர்தல், ஃபிட்ஸ்ஹெர்பெர்ட்டின் காரணத்தால் (FitzHerbert's cause) “சிஸ்டேர்சியன்” (Cistercian) துறவியும் திருத்தந்தையுமான “மூன்றாம் யூஜினுக்கு” (Pope Eugene III) பின்னடைவாக அமைந்தது. புகழ் பெற்ற “சிஸ்டேர்சியன்” மடாதிபதியும் ஆன்மீக தலைவருமான “பெர்னார்ட்” (Bernard of Clairvaux) வில்லியமை பேராயர் பதவியிலிருந்து இறக்குவதில் தமது செல்வாக்கு அனைத்தையும் செலுத்தினார். வில்லியம் மதச்சார்பற்ற சக்திகளால் தூண்டப்படுவதாகவும், சிஸ்டேர்சியன் மடாலயங்களை ஒடுக்குவதாகவும், “புனித பார்பராவின் வில்லியம்” (William of St. Barbara) என்பவரை முறைகேடாக யோர்க் மாநிலத்தின் கல்வி நிறுவனங்களின் தலைவராக நியமித்ததாகவும் தொடர் புகார்களை அனுப்பினார்.

கி.பி. 1145–46ம் ஆண்டு குளிர்காலத்தில் வழக்கை மறு பரிசீலனை செய்த மூன்றாம் யூஜின் (Pope Eugene III), வில்லியம் முறையற்று பேராயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் பேராயர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

யோர்க் உயர்மறை மாவட்டத்திற்கு மற்றுமொரு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், “சிஸ்டேர்சியன்” மடாதிபதியான “ஹென்றி முர்டேக்” (Henry Murdac) மற்றும் அரசனின் வேட்பாளரான “ஹிலரி” (Hilary of Chichester) ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் “ஹென்றி முர்டேக்” வெற்றி பெற்றதாக திருத்தந்தை அறிவித்தார்.

வில்லியம் பதவி நீக்கம் செய்யப்பட்டதையும் “ஹென்றி முர்டேக்” வெற்றி பெற்றதையும் அரசர் ஸ்டீஃபன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அத்துடன் “ஹென்றி முர்டேக்” யோர்க் மாநிலத்தில் தங்குவதை தடுத்தார்.

சில வருட காலத்திலேயே “ஹென்றி முர்டேக்” மற்றும் திருத்தந்தை யூஜின் ஆகியோர் மரித்துப்போயினர். வில்லியம் தமது பதவியினிமித்தம் புதிய திருத்தந்தை “நான்காம் அனஸ்டாசியஸ்” (Pope Anastasius IV) அவர்களை சந்திக்க ரோம் பயணித்தார். வில்லியமின் மறு பதவி நியமனத்திற்கு இசைந்த திருத்தந்தை, கி.பி. 1153ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 20ம் நாளன்று, அதனை உறுதி செய்தார். 

வெற்றிக்களிப்புடன் யோர்க் மாநிலம் திரும்பிய வில்லியம், தமது ஆதரவாளர்களுடன் வெற்றி ஊர்வலம் போகையில், “யோர்க்” நகரிலுள்ள “ஔஸ்” பாலம் (Ouse Bridge in York) இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, இதில் ஒருவர்கூட மரிக்கவில்லை.

வெற்றியுடன் நாடு திரும்பிய பேராயர் வில்லியம் சில மாத காலத்திலேயே கி.பி. 1154ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் நாளன்று, மரணமடைந்தார். அவர் உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. யோர்க் மாநிலத்தின் தலைமை திருத்தொண்டரான “ஒஸ்பெர்ட்” (Osbert de Bayeux) என்பவர் பேராயருக்கு உணவில் விஷம் கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். விசாரணைக்காக அரண்மனைக்கு அழைக்கப்பட்ட அவர் ஆஜராவதற்கு முன்னரே மன்னர் ஸ்டீஃபன் மரணமடைந்ததால் விசாரணை தள்ளிப்போனது. அதன்பின்னர் விசாரணை நடக்காமலே போனது. “யோர்க் மின்ஸ்டரில்” (York Minster) வில்லியம் அடக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அங்கே எண்ணற்ற அதிசயங்கள் நடக்கத் தொடங்கின. ஒருமுறை, தீ விபத்தின்போது அவரது கல்லறையை திறந்து பார்த்த போது, அவரது உடல் அழியாமலும் தீயில் கருகாமலும் காணப்பட்டது. அத்துடன், ஒருவகை நறுமணம் வருவதாகவும் கூறப்பட்டது.

அவரது மரணம் நிகழ்ந்த ஜூன் 8ம் தேதி அவருடைய நினைவுத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

​புனித.மேடர்டாஸ் (St. Medardaus)ஆயர் June 8

இன்றைய புனிதர் :
(08-06-2020)

​புனித.மேடர்டாஸ் (St. Medardaus)
ஆயர்

பிறப்பு 
456
வாலெண்சியென்னா(Valencienne), ஆப்பிரிக்கா
   
இறப்பு 
545
பிரான்சு

இவர் தன் இளம் வயதில், ஒரு நாள் புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய மழை வந்தது. அப்போது ஒரு பெரிய பருந்து வந்து இளைஞனை அப்படியே தூக்கிக்கொண்டு பிறந்தது. இளைஞன் மழையில் நனையாமல் இருக்க தன் சிறகுகளை அடர்ந்து விரித்து, தன் சிறகுகளின் நிழலில் வைத்து காத்தது. இதனால் மழை இல்லாமல் இயற்கை வளம் கருகும்போது இவரின் பெயரை கூறி ஜெபித்தால் மழை வரும் என்ற நம்பிக்கை பரவியது. அதேபோல் மக்கள் இவரின் பெயரால் ஜெபிக்கும்போது, பலமுறை மழையைபெற்று கொண்டனர். இதனால் ஜூன் 8 ஆம் நாள் மழைக்கான நாள் என்று குறிப்பிட்டுள்ளனர். இறைவனின் அருளால் நிரப்பப்பட்டு இவர் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். இவர் சிரித்தாலே, இவரின் வாயில் உள்ள மொத்தப் பற்களையும் பார்க்கலாம். அவ்வாறு அவர் வாய்விட்டு சிரிப்பார். 

505 ஆம் ஆண்டு இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 530 ஆம் ஆண்டு பாரிசிலிருந்த நையன் (Noyon) என்ற மறைமாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ரைம்ஸ் (Reims) பேராயர் ரெமிஜியுஸ் என்பவரால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயர் மேடர்டாஸ் – ன்(Medardaus) பணி அம்மறைமாநிலத்தில் ஆல் போல் தழைத்து வளர்ந்தது. அப்போது அவர் தூரின் நாட்டு அரசின் ராடேகுண்டீஸ் என்பவரால் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது உடல் "புனித மடோனா" என்ற துறவற மடத்திற்கு சொந்தமான கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்று இக்கல்லறையின் மேல் ஒரு சிறிய கெபி கட்டப்பட்டுள்ளது. 

செபம்:
அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து வரும் எம் இறைவா! உமது பெயரால் நம்பிக்கையோடு செபிக்கிறவர்களுக்கு எல்லாவிதங்களிலும் உதவி செய்து வருகின்றீர். ஆம் இறைவா! உம்மால் படைக்கப்பட்ட இயற்கை வாடும்போது, உமது வல்லமையில், அவைகள் மீண்டும் புத்துயிர் பெற உதவும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (08-06-2020)

St. Medardus

Bishop of Noyon, b. at Salency (Oise) about 456; d. in his episcopal city 8 June, about 545. His father, Nectardus, was of Frankish origin, while his mother, named Protagia, was Gallo-Roman. It is believed that St. Gildardus, Bishop of Rouen, was his brother. His youth was entirely consecrated to the practise of Christian virtues and to the study of sacred and profane letters. He often accompanied his father on business to Vermand and to Tournai, and frequented the schools, carefully avoiding all worldly dissipation. His exemplary piety and his knowledge, considerable for that time, decided the Bishop of Vermand (d. 530) to confer on him Holy Orders, and caused him to be chosen as his successor. Forced, in spite of his objections, to accept this heavy charge, he devoted himself zealously to his new duties, and to accomplish them in greater security, since Vermand and the northern part of France in general were then generally troubled by wars and exposed to the incursions of the barbarians, he removed his episcopal see in 531 from Vermand, a little city without defence, to Noyon, the strongest place in that region. The year following, St. Eleutherius, Bishop of Tournai, having died, St. Medardus was invited to assume the direction of that diocese also. He refused at first, but being urged by Clotaire himself he at last accepted. This union of the two dioceses lasted until 1146, when they were again separated. Clotaire, who had paid him a last visit at Noyon, had his body transferred to the royal manor of Crouy at the gates of the city of Soissons. Over the tomb of St. Medardus was erected the celebrated Benedictine abbey which bears his name. St. Medardus was one of the most honoured bishops of his time, his memory has always been popularly venerated in the north of France, and he soon became the hero of numerous legends. The Church celebrates his feast on 8 June.
---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூன் 8)

✠ புனிதர் மேடர்டஸ் ✠
(St. Medardus)

ஆயர் மற்றும் ஒப்புரவாளர்:
(Bishop and Confessor)

பிறப்பு: கி.பி. 456
சாலேன்சி, ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ்
(Salency, Oise, Picardy, France)

இறப்பு: ஜூன் 8, 525
நோயொன், ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ்
(Noyon, Oise, Picardy, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்கிய திருத்தலங்கள்:
“புனிதர் மேடர்டஸ் துறவு மடம், சோய்ஸ்சொன்ஸ், ஃபிரான்ஸ்
(Abbey of Saint-Médard, Soissons, France)

நினைவுத் திருநாள்: ஜூன் 8

பாதுகாவல்:
பருவநிலை, பல் வலிக்கெதிராக, திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள்.

“புனிதர் மேடர்டஸ்” அல்லது “புனிதர் மேடர்ட்” (Saint Medardus or St Medard) என அறியப்படும் இப்புனிதர், வெர்மண்டோய்ஸ்” மறைமாவட்ட ஆயர் (Bishop of Vermandois) ஆவார். இவர், தமது மறைமாவட்ட ஆயரகத்தை “நோவோன்” (Noyon) நகருக்கு மாற்றினார்.

ஃபிரான்ஸ் நாட்டின் "பிகார்டியில்" (Picardy in France) பிறந்த இவரது தந்தையார் “ஃபிராங்கிஷ்” (Frankish) இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெயர் “நேக்டாரிடஸ்” (Nectaridus) ஆகும். “கல்லோ-ரோமன்” (Gallo-Roman) இனத்தைச் சேர்ந்த இவரது தாயாரின் பெயர் “புரோடோகியா” (Protagia) ஆகும்.

“ரோவென்” மறைமாவட்ட ஆயராக (Bishop of Rouen) இருந்த புனிதர் “கில்டர்ட்” (Saint Gildard) இவரது சகோதரர் ஆவார். இதில் அதிசயிக்கத்தக்க விடயம் என்னவென்றால், இச்சகோதரர்கள் இருவரும் பிறந்தது, ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டது, இவ்வுலக வாழ்வை விட்டு நித்திய வாழ்வுக்கு சென்றது யாவும் ஒன்றாகவேயாகும்.

சிறு வயதில், “வெர்மான்ட்” மற்றும் “டௌர்ணாய்” (Vermand and Tournai) ஆகிய இடங்களில் கல்வி கற்ற இவர், சீரழிவிற்கு வழி வகுக்கும் இவ்வுலக ஆர்வங்களை கவனமுடன் தவிர்த்து வந்தார்.

தமது சிறு வயதில், ஒரு நாள் புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய கன மழை வந்தது. அப்போது ஒரு பருந்து இவர் மழையில் நனையாமல் இருக்க தனது சிறகுகளை அகல விரித்தபடி இவர் போகும் பாதையில் பறந்து வந்து இவரை மழையிலிருந்து காத்தது என கூறுவார். இதனாலேயே இவர் பருவநிலைகளின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.

இவருக்கு 33 வயதாகையில் “வெர்மான்ட்” (Vermand) மறைமாவட்ட ஆயர் “அலோமேர்” (Bishop Alomer) மரண படுக்கையிலிருந்தார். அறிவிலும் பக்தியிலும் முன்மாதிரியான மேடர்டஸ் ஆயர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் என தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் சம்மதம் தெரிவிக்காத இவர், பிறகு தம்மேல் ஆயருக்குள்ள நம்பிக்கையை காக்கும் விதமாக சம்மதித்தார்.

ஆயராக இவரது பணிகள் பற்றின தகவல்களும் ஆதாரங்களும் அதிகம் இல்லை. இரண்டு வருடங்களின் பின்னர், “டௌர்ணாய்” மறைமாவட்ட ஆயரான (Bishop of Tournai) “புனிதர் எலூதெரியஸ்” (Saint Eleutherius) அவர்களின் மரண வேளையில் ஆயர் பொறுப்பினை ஏற்பதற்காக மேடர்டஸ் அங்கே வரவழைக்கப்பட்டார். வேறு வழியின்றி “டௌர்ணாய்” மறைமாவட்ட ஆயர் பதவியையும் ஏற்றுக்கொண்ட மேடர்டஸ், இரண்டு மறைமாவட்டங்களுக்கு ஆயராக பணியாற்றினார். கி.பி. 1146ம் ஆண்டு வரை ஒன்றாகவே இருந்த “நோயொன்” மற்றும் “டௌர்ணாய்” (Noyon and Tournai) ஆகிய இரு மறைமாவட்டங்களும் அதன்பின்னர் பிரிந்தன.

“நோயொன்” நகரில் 525ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் நாளன்று, மரித்த ஆயர் மேடர்டஸ், அவரது காலத்தில் மிகவும் போற்றப்பட்ட ஆயர் ஆவார். முதலில் ஃபிரான்ஸ் நாட்டிலும், அதன் பின்னர் “கொலோனிலும்” (Cologne), மேற்கு ஜெர்மனியிலும் (western Germany) இவரது புகழ் பரவியிருந்தது. பிள்ளைப்பேறு வேண்டியும், மழை வேண்டியும், சிறை வாசம் மற்றும் மோசமான வானிலைக்கெதிராகவும் இவர் அழைக்கப்பட்டார். திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள் ஆகியோரின் பாதுகாவலராகவும் இவர் அழைக்கப்படுகிறார்.