இன்றைய புனிதர் : (27-06-2020)
அலெக்சாண்டிரியா நகர் புனித சிரில் (St.Cyril of Alexandria )
ஆயர், மறைவல்லுநர்( Bishop & Doctor of the Church)
பிறப்பு : 370
இறப்பு : 444
புனிதர்கள் என்று கூறினால் குறையே இல்லாதவர்கள் என்று பொருளில்லை என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. இவர் கோபக்காரர். பொறுமையில்லாதவர். சற்று விவேகம் அற்றவர். இவர் நொவேஷியன் (Novesien) என்று பெயர் கொண்ட ஆலயங்களை இழுத்து மூடினார். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் மீது பழி சுமத்தினார். யூதர்களின் செல்வங்களை பறித்தார். அவர்களை அலெக்சாண்டிரியா நகரினின்று வெளியேற்றினார். எபேசு நகரில் கூடிய பொது சங்கத்தில் அந்தியோக்கியா நகரின் பிதாப்பிதா, அரசு ஆணைப்படி தலைமை தாங்குமுன்னரே, ஆத்திரப்பட்டு நெஸ்டோரியசை வெளியேற்றினார்.
428 ஆம் ஆண்டில் அந்தியோக்கியாவை சார்ந்த துறவி நெஸ்டோரியஸ் கொன்ஸ்டாண்டினோபிளின் பேராயராக நியமனம் பெற்றார். இவர் கிறிஸ்து இயேசுவிடம் 2 ஆட்கள் உண்டு என்ற தப்பறையை போதித்து வந்தார். சிரில் இவரது தப்பறையை சுட்டிக் காட்டினார். நெஸ்டோரியஸ் திருந்தவில்லை. இருவரும் திருத்தந்தை முதல் செலஸ்டீனிடம்(Celestine I) இந்த விவாதத்தை முன் வைத்தனர். உரோமை ஆயர் குழு இதனை ஆராய்ந்தது. "நெஸ்டோரியஸ் கூறுவது தவறு. இதனை 10 நாட்களுக்குள் அவர் நீக்கி கொள்ளவேண்டும்" என்று பணித்தது. நெஸ்டோரியஸ் அடம் பிடித்தார்.
இதன் விளைவாக தோன்றியதுதான் 341 ல் கூடிய எபேசு பொதுச்சங்கம். இதில் சிரில் தலைமை தாங்க, 200 ஆயர்கள் கலந்துகொண்டனர். சிரில் தான் திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் நியமனம் பெற்றிருந்தார், நெஸ்டோரியஸ் இதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதனால் நெஸ்டோரியஸ்ஸின் தவறு சுட்டிக்காட்டப்பட்டு, அவரும் திருச்சபைக்கு புறம்பாக்கப்பட்டார். இந்த பொதுச்சங்கத்தில் தான் முதன்முறையாக மரியன்னைக்கு Theotokos என்ற சொல் பயன்படுத்தப்பட்டு, "இறைவனின் தாய்" என்பதே மரியன்னைக்கு பொருத்தமான அடைமொழி. நெஸ்டோரியஸ் கூறியதுபோல் "கிறிஸ்துவின் தாய்" என்பது மரியன்னைக்கு பொருந்தாது. தவறான பொருளை கொடுப்பதனால் அது தவறு என்று அறிவிக்கப்பட்டது.
கிறிஸ்து இறைத்தந்தையுடன் ஒரே பொருளாயிருந்து அதே வேளையில் மனிதனோடும் ஒன்றாக கலந்த ஆளாக இருந்தால் மட்டுமே, மனிதனை மீட்க இயலும். காரணம், இறைவனும், மனிதனும் சந்திப்பது. கிறிஸ்துவின் மனிதவதாரத்தில்தான். இது மனுவுறுவெடுத்த கடவுளின் தசையாக இருந்தால் மட்டுமே (மீட்பு பெறவேண்டிய) மனிதன் அவரது மனித இயல்பின் வழியாக கிறிஸ்துவின் தெய்வீகத்தை வந்தடைய முடியும்.
செபம்:
பாவிகளையே அழைக்கவந்த எம் இறைவா! பெரியவர், சிறியவர், திறமையானவர், திறமையற்றவர் என்று பாராமல் அனைவரையும் சமமாக நீர் அன்பு செய்கின்றீர். தவறும் நேரத்தில் உடனிருந்து வழிநடத்துகின்றீர். உம் வழியை பின்பற்றி வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற நிலையை நாங்கள் அடைய எம்மை வழிநடத்தியருளும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
† இன்றைய புனிதர் †
(ஜூன் 27)
✠ புனிதர் சிரில் ✠
(St. Cyril of Alexandria)
திருச்சபையின் தூண், ஆயர், மறைவல்லுநர்:
(The Pillar of Faith; Bishop and Doctor of the Church)
பிறப்பு: கி.பி. 376
இறப்பு: கி.பி. 444
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutherenism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)
காப்டிக் திருச்சபை
(Coptic Church)
நினைவுத் திருவிழா: ஜூன் 27
பாதுகாவல்: அலெக்சாண்டிரியா (Alexandria)
புனிதர் சிரில், புனிதர் “தியோபிலஸ்” (Theophilus) கி.பி. 412ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 15ம் நாளன்று, மரணமடைந்ததன் பிறகு, அதே வருடம், அக்டோபர் மாதம், 18ம் தேதியன்று, அலெக்சாண்டிரியா நகரத்தின் ஆயரானார். இவரது பதவி காலத்தில், ரோமப் பேரரசில் இந்நகரம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. ரோம பேரரசுக்குள்ளே இந்நகர் அதன் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தை அடைந்த போது அவர் ஆயராக ஆட்சியில் அமர்ந்து இருந்தார். நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளின் கிறிஸ்தவ சர்ச்சைகளில் முன்னணி கதாபாத்திரமாக இருந்தார்.
கிபி 431ம் ஆண்டு கூடிய “எபேசஸ்” பொதுச்சங்கத்தில் (Council of Ephesus) இவர் முக்கிய பங்கு வகித்தார். இச்சங்கம், கிறிஸ்து ஒருவரே இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் கொண்டவர் எனவும் – மரியாள், கடவுளும் மனிதருமான இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் ஆவார் எனவும் அறிக்கையிட்டது. “இயேசுவில் கடவுள் என்றும் மனிதர் என்றும் இருவர் உண்டு” எனப்படும் “நெஸ்டோரியஸ்” (Nestorius) என்னும் “கான்ஸ்டன்டினோபல்” ஆயரின் (Patriarch of Constantinople) கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. இதன் விளைவாக “நெஸ்டோரியஸ்” தனது ஆயர் பதவியை இழந்தார். இச்சங்கத்தில் இவர் ஆற்றிய பணிகளால், கிறிஸ்தவர்களிடையே இவருக்கு திருச்சபையின் தூண் எனவும், திருச்சபைத் தந்தையர்களின் முத்திரை எனவும் பெயர் வழங்கப்படலாயிற்று.
புனிதர் சிரில், திருச்சபைத் தந்தையர்களில் (Church Fathers) ஒருவராகவும், திருச்சபையின் மறைவல்லுநர்களுல் (Doctors of the Church) ஒருவராகவும் கருதப்படுகின்றார்.
இவரின் முன் கோபம், இவரின் எதிரிகள் இவரைச் சாட காரணமாயிருந்தது. ரோமப் பேரரசன் (Roman Emperor) “இரண்டாம் தியோடோசியஸ்” (Theodosius II), இவரை தலைக் கனம் பிடித்தவர் என சாடினான்.
எதிர்-திருத்தந்தை “நோவேஷியனி’ன்” (Novatians) ஆதரவாளர்களையும், யூதர்களையும் அலெக்சாந்திரியா நகரில் இருந்து வெளியேற்றியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு எனவும் கூறுவர். ஆனால் இக்கூற்றுக்கு தகுந்த சான்று இல்லாததால் இதில் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை.
புனிதர்கள் என்று கூறினால் குறையே இல்லாதவர்கள் என்று பொருளில்லை என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. இவர் கோபக்காரர். பொறுமை இல்லாதவர். சற்று விவேகம் அற்றவர். இவர் நொவேஷியன் (Novesien) என்று பெயர் கொண்ட ஆலயங்களை இழுத்து மூடினார். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் மீது பழி சுமத்தினார். யூதர்களின் செல்வங்களை பறித்தார். அவர்களை அலெக்சாண்டிரியா நகரினின்று வெளியேற்றினார்.
Saint of the Day : (27-06-2020)
Saint Cyril of Alexandria
Nephew of Theophilus the Patriarch. Monk. Priest. Bishop and patriarch of Alexandria, Egypt on 18 October 412. Suppressed the Novatians. Worked at the Council of Ephesus. Fought against Nestorius who taught the heresy that there were two persons in Christ. Catechetical writer. Wrote a book opposing Julian the Apostate. Greek Father of the Church. Doctor of the Church.
Born :
376 at Alexandria, Egypt
Died :
444 at Alexandria, Egypt of natural causes
• relics in Alexandria
Patronage :
Alexandria, Egypt
---JDH---Jesus the Divine Healer---