† இன்றைய புனிதர் †
(ஜூலை 21)
✠ புனிதர் விக்டர் ✠
(St. Victor of Marseilles)
மறைசாட்சி:
(Martyr)
பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
இறப்பு: கி.பி. 290
மார்செய்ல்
(Marseille)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருநாள்: ஜூலை 21
பாதுகாவல்:
கேபின் தயாரிப்பாளர்கள் (Cabinetmakers), அரவையாளர்கள் (Millers), சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள்; மின்னலுக்கு எதிராக
புனிதர் விக்டர், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி ஆகிய திருச்சபைகளால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார். இவர் சிலை வழிபாடுகளை மறுத்த காரணத்தால் மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார்.
புனிதர் விக்டர், மார்செய்ல் (Marseille) நகரில், ஒரு ரோம இராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. இவர், சிலை வழிபாடுகளை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இவர் “ஆஸ்டியரிஸ்” (Asterius) மற்றும் “யூட்டிசியஸ்” (Eutychius) எனப்படும் இரண்டு ரோம நிர்வாக அதிகாரிகளின் முன்பு கொண்டுவரப்பட்டார். பின்னர், அவர்கள் அவரை ரோமப் பேரரசன் “மேக்சிமியனிடம்" (Emperor Maximian) அனுப்பினார்கள். பின்னர், தெருக்களில் அலைந்து, அடித்து, இழுத்துச்செல்லப்பட்ட அவர், சிறையிலெறியப்பட்டார். அங்கே சிறையில், அவர் “லோங்கினஸ்” (Longinus), அலெக்ஸாண்டர் (Alexander), மற்றும் “ஃபெலீசியன்” (Felician) ஆகிய மூன்று ரோம வீரர்களை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றினார். பின்னர் அவர்களும் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். ரோமன் கடவுளான “ஜூபிடர்” (Jupiter) சிலைக்கு தூபமிட மறுத்த பிறகு, விக்டர் தனது காலால் அதை உதைத்துத் தள்ளினார். கடும் சினமுற்ற பேரரசன் மேக்சிமியன், அவரை ஒரு மைல் கல்லினடியில் இட்டு கொள்ளுமாறு உத்தரவிட்டான். ஆனால், அந்த மைல் கள் சிதறுண்டு போனது; விக்டருக்கு ஒன்றுமாகவில்லை. அதன் காரணமாக, அவர் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
புனிதர் விக்டரும், அவரால் கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றப்பட்ட ரோம வீரர்களான “லோங்கினஸ்” (Longinus), அலெக்ஸாண்டர் (Alexander), மற்றும் “ஃபெலீசியன்” (Felician) ஆகிய மூவரும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் கொல்லப்பட்டனர். நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர் “ஜான் கேசியன்” (Saint John Cassian) என்பவர், இவர்கள் மூவரும் கொல்லப்பட்ட குகையின் மேலே ஒரு துறவற (Monastery) மடாலயத்தை கட்டி எழுப்பினார். பிற்காலத்தில் இது, பெனடிக்டின் மடாலயமாகவும் (Benedictine abbey), “சிறு பேராலயமாகவும்” (Minor Basilica) ஆனது. இதுவே புனிதர் விக்டரின் மடாலயமாகும் (Abbey of St Victor).
புனிதர் விக்டர் மற்றும் அவருடன் மரித்த மூன்று ரோம படை வீரர்களான “லோங்கினஸ்” (Longinus), அலெக்ஸாண்டர் (Alexander), மற்றும் “ஃபெலீசியன்” (Felician) ஆகியோரின் நினைவுத் திருநாள், ஜூலை மாதம் 21ம் நாளாகும்.
புனிதர் விக்டர், “எஸ்டோனியா” (Estonia) நாட்டின் தலைநகரான “டல்லின்” (Tallinn) நகரின் பாதுகாவல் புனிதராவார்.
† Saint of the Day †
(July 21)
✠ St. Victor of Marseilles ✠
Martyr:
Born: 3rd century AD
Died: 290 AD
Marseille
Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Feast: July 21
Patronage:
Cabinetmakers, Millers, Torture victims, Sick children; Invoked against lightning
Biographical selection:
Victor, a Catholic officer of the Roman army known for his noble lineage, military valor, and intelligence, served in the garrison of Marseille around the year 290. He developed a strong apostolate with his fellow men of arms and the people of the city, stimulating them all to courageously face the persecution of those times.
His activity was discovered by enemies of the Faith and Victor was denounced to the Emperor. He was brought before two prefects in the city, who, because of his distinction, sent him to the Emperor himself. The tyrant imposed cruel torments on him in an attempt to make him deny the Catholic Faith. All those tortures were futile because Victor remained faithful. After being tortured, he was thrown in a prison, and there he converted the three soldiers who were guarding him. When the Emperor heard this, he ordered that Victor be taken to a pagan temple to burn incense to the false idol, Jupiter. Victor went up to the altar and kicked the statue to the ground.
Indignant, the Emperor ordered that Victor’s foot be chopped off and then his body crushed by a millstone. When the mill broke down, he ordered Victor beheaded. In the cave where his remains were conserved, many miracles took place. His relics were kept for centuries in the Abbey of Saint-Victor in Marseille. The French Revolution tried to destroy them, but they were preserved and today are in the Church of St. Nicolas of Chardonnay in Paris.
Comments:
It would be very interesting if someone would have the time to study how far-reaching the Catholic influence in the Roman army was. The courage of the Roman army was legendary, and under many titles, the Roman legionary was the symbol of courage in the popular imagination. History provides ample support for this idea.
Generally speaking, we know that the Catholic Faith deeply penetrated the Roman army, because many of its members died martyrs. Hence, we see that from the beginning of the Catholic Church, the military life and spirit were allied with the Catholic spirit and sanctity.
Further, we see that the courage required of a legionary acted as a kind of preparation for him to accept the Catholic Religion, the source of all good and everything worthy of praise throughout the world.
Just as the Church adopted Roman Law, elevated it, purified its many defects, and made it the base of Canon Law, in the same way, the Catholic Religion broadly penetrated the Roman Patriciate, whose noble families were prepared by the patriarchal spirit to receive the Catholic Church. Thus, we can justly ask whether this Catholic influence also penetrated the Roman Legions. The martyrdom of St. Victor allows us to raise this possibility.
The scene of his martyrdom could not be more beautiful. He was brought before an idol and ordered to burn incense before it. He forcefully kicked it to the ground. It is an act of magnificent courage, of extraordinary fearlessness. It is a symbol of Catholic courage and aggressiveness.
Should we imitate these attitudes? Yes, in a certain sense. We are not in conditions to imitate the physical aggression, but we can imitate the moral attitude of St. Victor. Often we have to face the idols of the modern world that almost everyone adores. We are also invited to adore them in order to fit into the world. Often we have the opportunity to destroy these idols by giving them a strong kick, so to speak. We should do this rather than bow our heads and tremble before such idols. We should courageously kick these idols to the ground. We have often done exactly this by the grace of Our Lady. We should continue to do so, and now for an additional reason: to follow the example of St. Victor.
The opposite defect of this courage is human respect, the shame to stand up for Catholic principles, the lack of courage to oppose the revolutionary opinions and fashions that are accepted by the general populace as the only true ones, the only ones with the right of citizenship.
We should maintain this norm of action: Whenever we are in the presence of the arrogant impiety of neo-paganism in any of its forms, our Catholic pride must oppose its arrogance. We should do it in a way that our pride triumphs over revolutionary arrogance. We should not be afraid, for instance, to oppose the French Revolution, its myths, and its symbols. We should courageously speak against it, just as St. Victor stood against the false god and kicked the idol to the ground.
Let us ask him to obtain this precious grace for us.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira