புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 July 2020

புனித.வில்லிபால்டு (St.Willibald)ஆயர் July 7

2020-07-07
புனித.வில்லிபால்டு (St.Willibald)
ஆயர்
பிறப்பு
22 அக்டோபர் 700
தென் இங்கிலாந்து
இறப்பு
7 ஜூலை 787
ஐஷ்டாட்(Eichstatt) , ஜெர்மனி
பாதுகாவல்: ஐஷ்டாட் நகரின் பாதுகாவலர்

வில்லிபால்டு தென் இங்கிலாந்து நாட்டில் ரிச்சர்டு என்பவரின் மகனாக பிறந்தார். 720 ஆம் ஆண்டு தந்தை ரிச்சர்டு, உடன் பிறந்த சகோதரர் உன்னிபால்டும்(Wunibald) உரோம் நகரை நோக்கி திருப்பயணம் மேற்கொண்டனர். அப்போதுதான் இவரின் தந்தை லக்கா(Lucca) என்னுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது வில்லிபால்டு உரோம் நகரிலேயே தங்கினார். இரண்டரை ஆண்டுகள் கழித்து இவர் பாலஸ்தீன மற்றும் கொன்ஸ்டாண்டீனோபிள் நோக்கி பயணம் மேற்கொண்டார். 729 ஆம் ஆண்டு அங்கிருந்து மீண்டும் இத்தாலி நாட்டிற்கு வந்தடைந்தார். அப்போதுதான் இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார்.

739 ஆம் ஆண்டு திருத்தந்தை 3ஆம் கிரகோரி அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் தன்னுடன் குருப்பட்டம் பெற்ற போனிபாஸ் என்பவருடன் சேர்ந்து ஜெர்மனி நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அப்போஸ்தலர் பணியை சிறப்பாக செய்தபின் 741 ல் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயரான பிறகும் கூட தனது மிஷனரி பணியை பவேரியா மறைமாநிலம் முழுவதிலும் சிறப்பாக செய்தார். 741- 787 ஆம் ஆண்டு வரை ஐஷ்டாட் என்ற மறைமாநிலத்தில் ஆயராக பணியாற்றினார். இவர் ஐஷ்டாட் மறைமாநிலத்தின் முதல் ஆயர் என்ற பெருமையை பெற்றார். இவர் 8 ஆம் நூற்றாண்டில் இவரின் பெயரால் ஐஷ்டாட்டில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். இவ்வாலயத்தில்தான் வில்லிபால்டு அவர்களின் கால்கள் வைக்கப்பட்டுள்ளது. உரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

1745 ஆம் ஆண்டு இவரின் 1000 ஆம் வருட ஜூபிலியை முன்னிட்டு, இவரது கல்லறையை பேதுரு பேராலயத்திலிருந்து ஐஷ்டாட்டிற்கு மாற்றப்பட்டது. இவர் வாழும்போதே ஆலயத்தில் பாடப்படும் பாடற்குழுவிற்கென ஓர் அழகிய மேடையை அமைத்தார். அவர் திருப்பலி ஆற்றும் போதெல்லாம், ஐஷ்டாட்டில் வாழும் ஒவ்வொருவரும் புனிதர்களே" என்று தவறாமல் கூறிவருவார்.


செபம்:
திருச்சபையை வழிநடத்துபவரே எம் இறைவா! திருச்சபையின் மீது கொண்ட ஆர்வத்தால், நாடு விட்டு நாடு வந்து உம் பணியை ஆற்றினார் புனித வில்லிபால்டு. இன்றும் அவரை போல உம் பணியை ஆற்றிவரும். ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசீர்வதியும். திறம்பட பணிபுரிய நல்ல உடல் உள்ள நலன்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி எத்தல்பூர்கா Ethelburga
பிறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, எஸ்செக்ஸ் Essex, இங்கிலாந்து
இறப்பு: 645, பாரேமவ்டியர்ஸ் Faremoutiers, பிரான்சு
பாதுகாவல்: கர்ப்பிணிப் பெண்கள்

புனித ஹம்ஸ்பிரே லாரன்ஸ் (1572-1591) July 7

ஜூலை 07

புனித ஹம்ஸ்பிரே லாரன்ஸ் (1572-1591)
இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஹம்ஸ்பியர் என்ற இடத்தில் பிறந்தவர்.

இவருடைய பெற்றோர் புராட்டஸ்டன்ட் திருஅவையைச் சார்ந்தவர்கள். இவர் இங்கிலாந்து நாட்டில் மறைப்பணி ஆற்றிவந்த இயேசு சபை அருள்பணியாளர்களின் எடுத்துக்காட்டான வாழ்வால் தொடப்பட்டு, கத்தோலிக்கத் திருஅவைக்கு மாறினார்.

இதற்குப் பிறகு இவர் திருவிவிலியத்தை ஆழமாக வாசிப்பதும், தான் வாசித்ததை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுமாக இருந்தார்.

இந்நிலையில், இவர் அப்போது இங்கிலாந்து நாட்டை ஆண்டு வந்த முதலாம் எலிசபெத் என்ற அரசியினுடைய துன்மாதிரியான வாழ்க்கையை நேரடியாகவே சுட்டிக்காட்டினார். இதனால் இவர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் இறக்கும்போது இவருக்கு வயது வெறும் 19 தான். இவருக்குத் திருத்தந்தை பதினோறாம்  பயஸ், 1929ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்.

அருளாளர் மரிய ரொமேரோ மெனெசெஸ் ✠(Blessed María Romero Meneses July 7

† இன்றைய புனிதர் †
(ஜூலை 7)
✠ அருளாளர் மரிய ரொமேரோ மெனெசெஸ் ✠
(Blessed María Romero Meneses)

மறைப் பணியாளர்:
(Religious)

பிறப்பு: ஜனவரி 13, 1902
கிரனடா, நிகரகுவா
(Granada, Nicaragua)

இறப்பு: ஜூலை 7, 1977 (வயது 75)
லஸ் பெனிடஸ், லியோன், நிகரகுவா
(Las Peñitas, León, Nicaragua)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 14, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜூலை 7

அருளாளர் மரிய ரொமேரோ மெனெசெஸ், ஒரு “நிகரகுவா” (Nicaragua) குடியரசின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரியும், “டான் பாஸ்கோவின் சலேசிய சகோதரிகள்” (Salesian Sisters of Don Bosco) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட உறுப்பினரும், “கோஸ்டா ரிகா’வின்” சமூக அப்போஸ்தலருமாவார். (Social Apostle of Costa Rica).

கி.பி. 1902ம் ஆண்டு, “நிகரகுவா” (Nicaragua) குடியரசில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ரொமேரோ’வின் தந்தை பெயர் “ஃபெலிக்ஸ்” (Félix Romero Arana) ஆகும். தாயாரின் பெயர், “அனா” (Ana Meneses Blandon) ஆகும். இவர் தமது பெற்றோரின் எட்டு குழந்தைகளில் ஒருவர் ஆவார். பிறந்து ஒரு வாரத்திலேயே திருமுழுக்கு பெற்றார். 1904ம் ஆண்டு, ஜூலை மாதம், 23ம் தேதி, உறுதிப்பூசுதல் (Confirmation) அருட்சாதனம் பெற்ற இவர், 1909ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, “புதுநன்மை” (First Communion) அருட்சாதனம் பெற்றார்.

கலையிலும் சங்கீதத்திலும் ஆர்வம் கொண்டு வளர்ந்ததால், இவருடைய பெற்றோர் இவருக்கு வயலின் மற்றும் பியானோ ஆகிய இசைக் கருவிகளை வாசிக்க கற்பித்தனர். பின்னர், “டான் பாஸ்கோவின் சலேசிய சகோதரிகள் பள்ளியில்” இணைந்து கல்வி கற்க ஆரம்பித்தார். எனினும் 1914ம் ஆண்டில் அவர் “வாதம் சம்பந்தமான காய்ச்சலால்” (Rheumatic Fever) நீண்ட காலம் பாதிப்படைந்தார். அக்காய்ச்சல், அவரது மீதமுள்ள வாழ்நாள் முழுதும் இருதய பாதிப்பை விட்டுச் சென்றது. ஆனால், அதிலிருந்து அவர் மீண்டபோது, அது இயற்கையிலேயே அற்புதமானதாக கருதப்பட்டது.

பூரண நம்பிக்கையுள்ள இப்பெண், 1915ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் நாளன்று, “கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியாளின் மகள்கள்” (Daughters of Mary Help of Christian) எனும் “மரியான் சமூகத்தில்” (Marian association) இணைந்தார். 1929ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதி, அவர் தமது இறுதி வார்த்தைப் பாட்டை ஏற்றார்.

1931ம் ஆண்டு, “கோஸ்டா ரிகா” (Costa Rica) தீவின் தலைநகரான “சேன் ஜோஸ்” (San Jose) சென்றார். இது இவரது இரண்டாவது தாய் நாடாக கருதப்படுகிறது. 1933ம் ஆண்டு, கலை மற்றும் சங்கீதம் ஆகியவற்றின் ஆசிரியையானார். அங்குள்ள பள்ளியில் பணக்கார குழந்தைகளுக்கு தட்டச்சு கற்றுக்கொடுத்தார். பெரும் எண்ணிக்கையிலுள்ள அவரது மாணவர்கள் அவரைப்போன்றே அவருடன் இணைந்து ஏழைகளுக்கு சேவை செய்தனர். அவரது கவனம் சமூக அபிவிருத்தியில் இருந்தது. 1945ம் ஆண்டு பொழுதுபோக்கு மையங்களைத் தொடங்கிய இவர், 1953ம் ஆண்டில் உணவு விநியோக மையங்களையும் தொடங்கினார். 1961ம் ஆண்டில் ஏழை சிறுமிகளுக்காக பள்ளி ஒன்றினை நிறுவினார். 1966ம் ஆண்டு, நோயுற்றோருக்காக மருந்தகம் ஒன்றினையும் நிறுவினார். 1973ம் ஆண்டு, ஏழை குடும்பங்களுக்காக ஏழு இல்லங்களை கட்டினார்.

1977ம் ஆண்டு, “லியோன்” (Leon) நகரிலுள்ள “சலேசிய அருட்சகோதரிகளின்” இல்லத்தில் (Salesian Sisters house) ஓய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த மரிய ரொமேரோ மெனெசெஸ் மாரடைப்பால் தாக்குண்டு மரணமடைந்தார்.

† Saint of the Day †
(July 7)

✠ Blessed María Romero Meneses ✠

Religious:

Born: January 13, 1902
Granada, Nicaragua

Died: July 7, 1977 (Age 74)
Las Peñitas, León, Nicaragua

Venerated in: Roman Catholic Church

Beatified: April 14, 2002
Pope John Paul II

Feast: July 7

Blessed María Romero Meneses was Nicaraguan Roman Catholic professed religious and a professed member from the Salesian Sisters of Don Bosco dubbed the "Social Apostle of Costa Rica".

Blessed Maria Romero Meneses was a modern-day social reformer who brought about a “revolution of charity” in Costa Rica.

She was born in Nicaragua in 1902, one of eight children who grew up in an upper-class family. Maria received a very good education at a school staffed by sisters in a religious community founded by St. John Bosco—they were known as the Daughters of Mary, Help of Christians.

When she was 12 years old, Maria fell sick with rheumatic fever and struggled all year to regain her health. She was completely paralyzed for six months but was patient and prayerful in her suffering, which she saw as a gift from God. Doctors reported that her heart was damaged from the sickness, but she appealed to Our Lady, Help of Christians, and received some sort of assurance that she would be healed.

When a friend from the school visited her, she said, “I know that the Blessed Virgin will cure me.” A few days later, she regained her health and returned to school, fully recovered.

A spiritual director helped her sort through and better understand the mystical experiences she was having, and she realized that she was being called to religious life. She joined the Daughters of Mary, Help of Christians—the nuns who staffed her school—and closely followed the spirituality of John Bosco.

In 1931, she was sent to Costa Rica, where she taught at a school for girls from wealthy families. She also went into the poor neighborhoods to teach the faith there, and to help people acquire practical skills for work. Her example moved students at the school, and many girls joined her work to improve the lives of the poor.

Maria began to understand her purpose in life—to encourage social development by helping wealthy people see how they could change the lives of poor people. She gathered resources and established recreational centers and food distribution organizations. In 1961, she opened a school for poor girls; a few years later, she opened a clinic and supported it by recruiting doctors and finding donations for medicine.

She had the vision to build a village for poor people that contained all they needed to flourish. In 1973, the first seven homes were built in a new development outside of the city named Centro San Josè—it grew to include a farm, a market, and a school where people could learn the faith and find job training. It also included a church dedicated to Our Lady, Help of Christians.

Maria knew that she was participating in God’s work, so she had every confidence that her efforts at social development would grow. She died of a heart attack on this date in 1977, and she is buried in the chapel in San Josè. She is the first Central American to be beatified, and her image is used here with permission from Catholic.org.

Bl. Maria Romero Meneses, you brought about a revolution of charity in Costa Rica in the 1970s—pray for us!

புனிதர் பல்லடியஸ் ✠(St. Palladius July 6

† இன்றைய புனிதர் †
(ஜூலை 7)

✠ புனிதர் பல்லடியஸ் ✠
(St. Palladius)
ஆயர்:
(Bishop of Ireland :)

பிறப்பு: கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு

இறப்பு: கி.பி. 457-461

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

புனிதர் பல்லடியஸ், அயர்லாந்து (Ireland) நாட்டின் முதல் கிறிஸ்தவ ஆயர் ஆவார். புனிதர் பேட்ரிக்’கிற்கு (St. Patric) முந்தைய இவர், பின்னர் பல்வேறு ஐரிஷ் மரபுகளில் இணைந்திருந்தார்.

பல்லடியஸ், “கௌல்” (Gaul) மாநிலத்தின் உன்னத குடும்பங்களைச் சேர்ந்தவர் ஆவார். இக்குடும்ப வகையறாவைச் சேர்ந்த பலர், “கௌல் திருச்சபையில்” (Church of Gaul) பல உயர் பதவிகளை வகித்தவர்கள் ஆவர். இவரது தந்தையார் பெயர், “எக்ஸுபெரன்ஷியஸ்” (Exuperantius of Poitiers) ஆகும். இவருடைய தந்தை, “அர்ல்ஸ்” (Arles) நகரில் கி.பி. 424ம் ஆண்டு நடந்த ஒரு இராணுவ கலகத்தில் கொல்லப்பட்டார். கிறிஸ்தவ எழுத்தாளராகிய “ப்ராஸ்பர்”, (Prosper of Aquitaine), பல்லடியஸ் ஒரு திருத்தொண்டர் என்று எழுதுகிறார். மேலும் சில சரித்திரவியலாளர்கள், இவர் புனிதர் “ஜெர்மானுசின்” (St. Germanus) திருத்தொண்டர் என்கின்றனர். ஆயினும் இவர் ரோம் நகரின் திருத்தொண்டர் (Deacon of Rome) என்ற பெரிய பதவியை வகித்திருக்க சாத்தியங்கள் அதிகம் என்கின்றனர்.

இவருக்கு திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தையும் இருந்தது. இவரை தமது நண்பரென்றும் இளம் உறவினரென்றும் ரோம அரசவை கவிஞரான “நமஷியனஸ்” (Namatianjus) விவரிக்கிறார். மனைவியையும் குழந்தையையும் தம்மிடமிருந்து விடுவித்த இவர், குழந்தையை அதே தீவிலிருந்த ஒரு பள்ளியில் ஒப்படைத்தார். கி.பி. 408/ 409ம் ஆண்டு, சிசிலியில் (Sicily) துறவு வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். கி.பி. சற்றேழத்தால 415ம் ஆண்டு இவர் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். கி.பி. 418 முதல் 429ம் ஆண்டு வரையான கால கட்டத்தில் இவர் ரோம் நகரில் “திருத்தொண்டர் பல்லடியஸ்” (Deacon Palladius) என்ற பெயருடன் வாழ்ந்தார். பிரிட்டன் மக்களை (Britain) கத்தோலிக்க விசுவாசத்திற்கு மனம் திருப்பும், வழிகாட்டும் பணிகளைச் செய்வதற்காக “ஔக்செர்” (Bishop of Auxerre) ஆயரான “ஜெர்மானசை” (Germanus) அனுப்புமாறு திருத்தந்தை “முதலாம் செலஸ்டின்” (Pope Celestine I) அவர்களை வலியுறுத்தும் பொறுப்பேற்றார்.

கி.பி. 431ம் ஆண்டு, இவர் அயர்லாந்து நாட்டின் கிறிஸ்தவ விசுவாசிகளின் ஆயராக நியமிக்கப்பட்டார். திருத்தந்தை “முதலாம் செலஸ்டின்” (Pope Celestine I) இவருக்கு அருட்பொழிவு செய்வித்தார். அயர்லாந்தின் “கர்சொன்” (Uí Garrchon) என்ற இடத்தில் இறங்கிய பல்லடியஸ், புனிதர் பேட்ரிக் (St. Patrick) அவர்களுக்கு முன்னதாகவே மறை பரப்பும் பணியை தொடங்கியதாக ஐரிஷ் எழுத்தாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவரை தடை செய்த “லெய்ன்ஸ்டர்” அரசன் (King of Leinster), அவரை வடக்கு பிரிட்டனுக்கு (North Britain) திருப்பி அனுப்பினான். ரோம் நகரிலிருந்து பல்லடியஸுடன் நான்கு துணைவர்கள் உடன் வந்திருந்தனர். அவர்களில் “சில்வெஸ்டர் மற்றும் சோலினஸ்” (Sylvester and Solinus) ஆகிய இருவரும் அயர்லாந்திலேயே தங்கி விட்டனர். அவருடன் பிரிட்டன் வரை வந்த “அகஸ்டினஸ் மற்றும் பெனடிக்டஸ்” (Augustinus and Benedictus) ஆகிய இருவரும் அவரது மரணத்தின் பின்னர் தமது சொந்த நாட்டுக்கே திரும்பினர்.

கி.பி. 431ம் ஆண்டு, அயர்லாந்திலிருந்து கிளம்பிய பல்லடியஸ், வடக்கு பிரிட்டனின் ஸ்காட்லாந்து வந்தடைந்தார். அங்கே அவர் சுமார் 20 வருடங்கள் மறை பரப்பு பணியாற்றியதாக ஸ்காட்லாந்து திருச்சபையின் பாரம்பரியங்கள் கூறுகின்றன.

இவர் மரித்த தேதி நிச்சயமாக யாருக்கும் தெரியவில்லை. வெவ்வேறு சரித்திர ஆசிரியர்கள் வெவ்வேறு தேதிகளையும் காரண காரியங்களையும் கூறுவதால் அதில் ஒரு குழப்பமே நீடிக்கிறது.
† Saint of the Day †
(July 7)

✠ St. Palladius ✠

Bishop of Ireland:

Born: Early 5th century AD

Died: 457-461 AD

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Anglican Communion

Patronage: Leinster, Kincardineshire

Feast: July 7

Palladius was the first bishop of the Christians of Ireland, preceding Saint Patrick; the two were perhaps conflated in many later Irish traditions. He was a deacon and a member of one of the prominent families in Gaul. Pope Celestine I consecrated him a bishop and sent him to Ireland "to the Scotti believing in Christ".

It seems to me, as I read the views of modern scholars on the saints of the early Irish church, that there are winners as well as losers in the revisionist process. One clear winner has been Saint Palladius, whose reputation as the first bishop sent to the Irish has been reclaimed from the 'Armagh propagandists' who did their best to airbrush both the man and his mission out of the historical record in order to promote the idea of Saint Patrick as the national apostle. A summary of the views of one modern scholar on this theme can be read at my other site here. What kept the memory and claims of Palladius alive, however, was the fact that his mission was recorded in an unimpeachable historical source: the works of Prosper of Aquitaine. This 5th-century chronicler and champion of the teachings of Saint Augustine against Pelagianism records for the year AD 431.

'Palladius, having been ordained by Pope Celestine, is sent, as their first bishop, to the Irish who believe in Christ'.

As scholar Michael Richter points out in his book Medieval Ireland- The Enduring Tradition:
        'This is the only reliable date for Irish history in the fifth century. Yet Prosper's statement raises several questions: When had Christianity come to Ireland? How many Christians were there in Ireland in the year 431? Who was Palladius? How long was he active in Ireland? Where did he carry out his work?'

And he attempts some answers, starting with the last question - where did Palladius carry out his work?:
          'In the Middle Irish Life of Patrick (Bethú Phátraic), we are told: 'He (Palladius) founded three churches. Cell Fine in which he left his books, the casket with the relics of Paul and Peter and the board on which he used to write, Tech na Román ("House of the Romans") and Domnach Airte containing Sylvester and Solinus' (presumably two of his followers)... The three churches mentioned are situated in Leinster, the region lying opposite the coast of Wales.'

Modern scholarship seems to be in agreement that the Palladian mission operated in Leinster and Munster and that it is likely that Palladius came to Ireland via Wales. Richter seeks to locate Palladius within a specific historical context - that of the fight against Pelagianism:

         'Palladius was dispatched to the Irish Christians at about the same time as Germanus of Auxerre was sent to the Christians in Britain. Germanus had been dispatched to Britain in AD 429 to combat the heretical teachings of Pelagius. Active from around the year 400, Pelagius was a British monk who had developed a doctrine of human free will. Since this conflicted with the Catholic doctrine of grace, Pelagius has declared a heretic in 418. In his Ecclesiastical History Bede tells us that Germanus had refuted Pelagianism in Britain through the healing power of relics. A similar function could be attributed to the relics Palladius brought to Ireland. If this were the case, it would indicate that Rome assumed a rather highly-developed level of Christianity amongst the Irish.

He now turns to another of his initial questions - who was Palladius?:
          'Two deacons with this name are known from this period, one from Rome, the other from Auxerre, and it was probably the latter who came to Ireland. However, before we consider this and other questions regarding Palladius' activities, we must turn our attention to Patrick.... Patrick does not give us any concrete details concerning the region in which he was active, nor does he mention that he had an episcopal see. Indeed, after his writings, nothing more is heard in Ireland about Patrick throughout the sixth century.

          This gives rise to the following problems: Patrick was a bishop; Palladius is referred to as the first bishop. Palladius came to the Irish who already believed in Christ whereas Patrick was active among the Irish for many years; Palladius apparently spent a long time among the Irish according to the information in the tribute paid to him by Pope Celestine I and described by Prosper in his work Contra Collatorem.'

Richter does not quote the text of this tribute so I have found it in another source:

          'He (Celestine) has been, however, no less energetic in freeing the British provinces from this same disease (the Pelagian heresy); he removed from the hiding-place certain enemies of grace who had occupied the land of their origin; also having ordained a bishop for the Irish, while he labors to keep the Roman island catholic, he has also made the barbarian island Christian.'

The Roman island, is, of course, Britain, the barbarian island which has been Christianized is Ireland.

Richter then attempts to reconcile some of the contradictory statements about Palladius and Patrick which he had raised above. He suggests as a starting point an assumption that Patrick was active in a part of Ireland which had not yet been reached by Christianity. He, therefore, proposes that Patrick's primary mission was carried out in the provinces of Ulster and northern Connacht, whereas, as we have seen, the Palladian mission was based in Leinster and Munster. Richter goes on to say:

          'Nor does the description of Palladius as the first bishop of the Irish pose any real problem: Patrick had no contact with Rome and Prosper apparently knew nothing of Patrick's activities. The later legend tells of Patrick spending many years in Gaul, mainly in the monastery of Lérins. There is, however, no mention of this in the authentic works of Patrick; the Latin in the Confessio and the Epistola is such that a long stay on the part of their author can be ruled out. Gaulish bishops who, according to later sources, worked with Patrick in Ireland are more likely to have worked with Palladius.'

And the reason for the silence regarding Patrick in the 6th century?:

          'The fact that nothing was heard of Patrick in the century following his missionary work can no doubt be explained by the increasingly important role which the monasteries were to play in the Irish Church from the end of the 5th century. Palladius and Patrick were, however, both bishops. Their work developed from this office and both wanted to establish a diocesan Church in Ireland.'

Richter ends by saying that although both Palladius and Patrick were committed to the Roman organizational model of the Church, the fact that Ireland had not been part of the Roman Empire and lacked towns and other aspects of the Roman heritage, made this model quite unsuitable.

By contrast with the way in which Richter and other modern writers approach the mission of Palladius, Canon O'Hanlon espoused the traditional view that his mission was a short-lived failure:

          'Notwithstanding his high commission to evangelize the people, St. Palladius remained not long in Ireland. To St. Patrick, and not to him, had Providence assigned the grand measure of a successful mission'.

In this view, Palladius was unable to face the opposition of the locals:

          '..the prevailing opinion appears to be, that the rude and inhospitable people where he landed did not readily receive his doctrine, and therefore he willed not to remain in a country strange to him. His resolve was formed, to return with the first tide which served, and to seek the Pope who had sent him.'

Of course, it took more than a few hostile pagans to scare off the true apostle to the Irish:

          'Here we have to admire the inscrutable ways of Divine Providence, who so willed it, that the mission of Palladius should prove comparatively barren of results, while within a short time after his leaving Ireland, St. Patrick was destined to arrive, and to preach the Gospel among the natives, with most successful and consoling results'.

If this traditional Patrician triumphalism is hard to swallow, Richter offers a comforting thought:

          'Some scholars are of the opinion that the later legend of Patrick was compiled from accounts relating to the activities of both Patrick and Palladius. In this case, the controversy over the description of Patrick as 'the Apostle of the Irish' would become irrelevant'.

Thus does Saint Palladius emerge as one of the winners in the efforts of modern revisionist scholars, with his reputation restored. What ultimately became of the first bishop to the Irish is unclear. Later accounts say that Palladius, having failed in Ireland, went instead to Scotland and was martyred there. More recent writers tend to be skeptical of the Scottish connection. The Aberdeen Breviary has assigned July 7 as his feast day, although some other sources commemorate a feast of Saint Palladius on January 25.

There is a most interesting blog entry on Saint Palladius and the Dunlavin area of County Wicklow here which concludes:

'Ultimately perhaps, Palladius’ life should not be measured by the success or failure of his mission, but by how much he endured and what he gave for his cause and his God.'