புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 September 2020

புனித பீட்டர் கிளேவர், St. Peter Claver குரு September 08

இன்றைய புனிதர்
2020-09-08
புனித பீட்டர் கிளேவர், St. Peter Claver குரு
பிறப்பு
26 ஜூன் 1580,
ஸ்பெயின்
இறப்பு
8 செப்டம்பர் 1654
முத்திப்பேறுபட்டம்: 16 ஜூலை 1851 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
புனிதர்பட்டம்: 15 ஜனவரி 1888 திருத்தந்தை 13 ஆம் லியோ
பாதுகாவல்: அடிமைகள் மற்றும் கொலம்பியா நாட்டின் பாதுகாவலர்

கிளேவர் சிறு வயதிலிருந்தே அன்னைமரியாளின் மீது பக்தியை வளர்த்து வந்தார். பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கிய நாளிலிருந்து பல புத்தகங்களைப் படித்தார். தனது இளம் வயது படிப்பை முடித்தபின் 1596 ஆம் ஆண்டு பார்சலோனா என்ற நகரிலிருந்த புகழ் வாய்ந்த கல்லூரியில் படிக்க சென்றார். கல்லூரி படிப்பை முடித்ததும் 1802 ஆம் ஆண்டு குருவாக ஆசைக்கொண்டு இயேசு சபையில் சேர்ந்தார்.

இவர் மயோர்க்கா நகரில் மீண்டும் தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு கல்லூரி படிப்பை முடித்தபின் 1616 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். புதிய குருவான இவர் நீக்ரோ அடிமை மக்களிடம் பணியை தொடர அனுப்பப்பட்டார். அம்மக்களிடையே சிறப்பாக பணியாற்றி , சில நாட்கள் கழித்து, அவர்களில் ஒருவராகவே மாறினார். அப்போது அம்மக்களிடையே அடிமை வாணிகம் பெருகியது. அவற்றை ஒடுக்க இவர் பெரிதும் பாடுபட்டார். அச்சமயத்தில் ஆப்ரிக்கா நாட்டிலிருந்து மக்கள் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களோடு சேர்த்து இறக்குமதியும் செய்யப்பட்டது. கிளேவர் அம்மருந்துகளை பெற்று, நீக்ரோ மக்களுக்கு மருத்துவப் பணியையும் ஆற்றினார். அடிமை மக்களிடையே மிகவும் அன்பாக பணியாற்றினார். தனது மறைப்பணியால் அம்மக்களின் கடுமையான மனதை மாற்றினார். அனைவரையும் இறைவன்பால் ஈர்த்து, இறையுறவில் வளர்த்தெடுத்தார். அடிமைகளின் மேல் கொண்ட அக்கறையாலும், அன்பாலும் இவர் அம்மக்களின் தந்தை என்றழைக்கப்பட்டார்.


செபம்:
விடுதலையின் நாயகனே எம் இறைவா! உறவில்லாமல், அன்பில்லாமல் வாழும் மக்களுக்கு, நீரே தந்தையாகவும், தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வருகின்றீர். நீர் கற்று தந்தவைகளை, புனித கிளேவரின் வாழ்விலிருந்து, நாங்கள் கற்று கொண்டு வாழ அருள்புரியும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

• பிரான்சிஸ்கு ஜோர்டான் Franziskus Jordan SDS,
சபைநிறுவுனர்
பிறப்பு: 16 ஜூன் 1848, குர்ட்வய்ல் Gurtweil, பாடன் வூட்டம்பர்க்Baden-Würtemberg, ஜெர்மனி
சபை நிறுவிய ஆண்டு: 1881
இறப்பு: 8 செப்டம்பர் 1918, ஃப்ரைபூர்க், Freiburg


• பிரைசிங் நகர் கொர்பினியன் Korbinian von Freising
பிறப்பு: 680, சாட்ரஸ் Chartres, பிரான்ஸ்
இறப்பு: 8 செப்டம்பர் 720, ஃப்ரைசிங் Freising, பவேரியா, ஜெர்மனி
பாதுகாவல்: ஃப்ரைசிங்-மியூனிக் மறைமாவட்டம், Munich


• துறவி செராபீனா, Seraphina OSCI
பிறப்பு: 1434, உர்பீனோ Urbino, இத்தாலி
இறப்பு: 8 செப்டம்பர் 1478, பெசாரோPesaro, இத்தாலி


• திருத்தந்தை முதலாம் செர்கியஸ் Pope Sergius I
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, சிசிலி Sizilien, இத்தாலி
இறப்பு: 8 செப்டம்பர் 701, உரோம், இத்தாலி


• குடும்பத் தலைவி மரியா தொரிபியா Maria Toribia
பிறப்பு: 11 அல்லது 12 நூற்றாண்டு, டோரியோன்(?) Torrejon, ஸ்பெயின்
இறப்பு: 8 செப்டம்பர் 1140 / 1175, காராகுயிஸ் Caraquiz, ஸ்பெயின்

✠ புனிதர்கள் அட்ரியான் மற்றும் நடாலியா ✠(Sts. Adrian and Natalia of Nicomedia)செப்டம்பர் 8

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 8)

✠ புனிதர்கள் அட்ரியான் மற்றும் நடாலியா ✠
(Sts. Adrian and Natalia of Nicomedia)
மறைசாட்சியர்:
(Martyrs)

பிறப்பு: ----

இறப்பு: மார்ச் 4, 306
நிகொமேடியா
(Nicomedia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம்:
கான்ஸ்டன்டினோபில் அருகேயுள்ள அர்கிரோபொலிஸ்
(Argyropolis near Constantinople)
ஜெரார்ட்ஸ்பெர்கன், பெல்ஜியம்
(Geraardsbergen, Belgium)
தூய அட்ரியானோ அல் ஃபோரோ, ரோம்
(Church of St Adriano al Foro, Rome)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 8

பாதுகாவல்:
பிளேக் நோய், வலிப்பு நோய், ஆயுத விற்பனையாளர்கள், கறி வெட்டுபவர்கள், காவலர்கள், வீரர்கள்.

புனிதர் அட்ரியான், ரோம பேரரசர் (Roman Emperor) “கலேரியஸ் மேக்ஸிமியனின்” (Galerius Maximian) அரச பாதுகாவலராகப் (Herculian Guard) பணியாற்றியவராவார். இவரும், இவரது மனைவு “நடாலியாவும்” (Natalia) கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறிய காரணத்தால் “நிகொமேடியா” (Nicomedia) நகரில், மறைசாட்சியாக துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

அட்ரியானும், நடாலியாவும், பேரரசன் “மேக்ஸிமியனின்” காலத்தில், கி.பி. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நிகொமேடியா நகரில் வாழ்ந்தவர்கள் ஆவர். இருபத்தெட்டு வயது அட்ரியான், ரோம அரச மாளிகையின் தலைமை காவலனாக இருந்தார்.

ஒருமுறை, ஒரு கிறிஸ்தவ இசைக்குழுவை துன்புறுத்தும் பணியை தலைமை தாங்கியபோது அவர் அவர்களிடம், “நீங்கள் உங்கள் கடவுளிடம் என்ன பரிசினை எதிர்பார்க்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், 1 கொரிந்தியர் 2:9ல் எழுதியிருந்ததைப் போல, “தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படாமலும், செவிக்கு எட்டாமலும், மனித உள்ளமும் அதை அறியாமலும் இருக்கவேண்டும்“ என்று கேட்டார்கள். அவர்களது தைரியத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், அனைவரின் முன்னிலையில் தமது விசுவாசத்தை ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் இதுவரை திருமுழுக்கு பெற்றிருக்கவில்லை.

அட்ரியான் தம்மைத்தாமே சிறையில் அடைத்துக்கொண்டார். தம்மைக் காண வருபவர்களை காண மறுத்தார். நடாலியா மட்டும் ஒரு ஆணின் ஆடை அணிந்து, அவர் பரலோகத்தில் நுழைந்தபோது அவரது ஜெபங்களை கேட்க வந்தார். 

கொலையாளிகள், இறந்துபோனவர்களின் உடல்களை எரித்துவிட விரும்பினர். ஆனால், ஒரு பெரும் காற்று எழுந்து, எரிந்த தீயை அணைத்தது. நடாலியா, அட்ரியானின் கை ஒன்றினை தேடி கண்டெடுத்தார்.

வரலாற்று உண்மைகள்:
“நிகொமேடியா” (Nicomedia) நகரில் இரண்டு அட்ரியான்கள் இருந்ததாகவும், இருவருமே மறைசாட்சிகளாக கொல்லப்பட்டதாகவும், ஒருவர் பேரரசன் “டயக்லேஷியன்” (Diocletian) காலத்தில் இருந்ததாகவும், இன்னொருவர் பேரரசன் “லிஸினியஸ்” (Licinius) காலத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
† Saint of the Day †
(September 8)

✠ St. Adrian and Natalia of Nicomedia ✠

Martyrs:

Born: ----

Died: March 4, 306
Nicomedia

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Major Shrine:
Argyropolis near Constantinople; Geraardsbergen, Belgium; Church of Sant'Adriano al Foro, Rome

Feast: September 8

Patronage :
Plague, Epilepsy, Arms Dealers, Butchers, Guards, Soldiers

Saint Adrian (also known as Hadrian) or Adrian of Nicomedia was a Herculian Guard of the Roman Emperor Galerius Maximian. After becoming a convert to Christianity with his wife Natalia, Adrian was martyred at Nicomedia.

Adrian and Natalia lived in Nicomedia during the time of Emperor Maximian in the early fourth century. The twenty-eight-year-old Adrian was head of the praetorium.

Biographical selection: 
St. Adrian lived in Nicomedia around the year 300 and was martyred at age 28. 

During those times, Catholics were cruelly persecuted under the Roman Emperor Diocletian. Thirty-three Catholics in Nicomedia were denounced, and soldiers were sent to seize them. They were brought in iron chains before the tribunal of the Emperor. 

“Can it be you have not heard what manner of torments awaits them who call themselves Christians?” asked the judge. They replied: “We know of them, but we cannot obey unjust orders. We do not fear the fury of Satan and his ministers, of whom you are one.” 

Three men were ordered to savagely beat the Catholics with whips made of bull nerves. But while they were undergoing this treatment, the holy martyrs told the judge that whatever number of torments he might devise, he would but increase their crowns awaiting them in Heaven, while he would receive his due for his cruelty in Hell. 

They were then brought before Galerius, the prepared successor of Diocletian, who ordered new torments. The soldiers took up stones and struck the martyrs about the mouth. The martyrs berated Galerius, telling him that an angel of God would punish and destroy all of his impious households. Enraged, he ordered that their tongues be cut out. In face of this new torment, they told the ruler: “Even if we are unable to speak, the protests of our hearts will rise to the throne of God proclaiming that we are suffering in innocence.” 

Hearing this, Galerius was filled with hate and ordered that they should all be taken to prison to see if any of them would become fearful and apostatize. With this, he left. One of those present was a high dignitary named Adrian. Seeing the great honour of the Catholics, he rejected paganism and said to a functionary: “Write down my name among these admirable persons, for I too am now a Catholic and shall die for Christ God in their company!” 

One of Adrian’s servants went to warn Natalie, his wife, about what had happened. She ran to the prison and, falling down at the feet of her husband, she said, “Blessed are you, my Adrian, for you have found a treasure. I ask Christ to give you strength, courage, and perseverance in the fight. The goods of this earth are nothing; God desires to give you eternal riches. Therefore, be not weak, but strong and generous like these saints who surround you.” 

When Galerius heard this, he became further enraged, and ordered that Adrian be weighed down with iron chains and cast into prison with the other martyrs. They greeted him with great joy, and even those who could no longer walk because of the tortures dragged themselves to him to offer him the kiss of peace. Then Natalie cleaned and bandaged their wounded and bloody bodies. 

Adrian was beaten and tortured, returned to the prison, and finally, his legs and arms were smitten off with an anvil. 

Comments:
The first point that catches the attention is that these are polemic martyrs. They argued with the judge and threatened him with eternal damnation. They displayed nobility of spirit, telling him that the scourge was but a means for them to gain more pearls in their heavenly crown. Later, they also disputed with Galerius, the man who had been prepared to succeed Emperor Diocletian.

Second, you can imagine the shock these pagans felt upon receiving these challenges from the Christians. Every man by his nature knows that Heaven exists. The pagans said the contrary: No, it doesn’t exist. Even though they denied it, they had considerable internal insecurity. Then a pagan judge came and tortured the Christians, who showed an extraordinary assurance not only that Heaven exists but also that they would enter there by means of the very suffering he was causing them. You can imagine the doubt this generated.

Third, one sees the sudden action of the Holy Ghost in the soul of St. Adrian. Instead of being fearful of suffering the torments the martyrs were undergoing, he felt invited to share the honour of being one of such an extraordinary society. Through them, he saw Heaven, and he was moved to join them and die with them. 

Fourth, there is the marvellous position of Natalie, who was probably a secret Catholic. When she received the news that her husband had also become a Catholic, she rushed to the prison to give him all the support she could. You can imagine the beautiful scene in the prison, their meeting, the joy of the martyrs who saw that their good example had caused a high imperial official to convert. Even with the tortures, all the wounds, and blood, a supernatural joy-filled all of them. They came to greet the new convert, even dragging themselves over the floor, to give him the kiss of peace. No natural joy is comparable to this supernatural happiness. 

Fifth, from this description and the conversion of St. Adrian, a high dignitary of the Empire, you can realize the perplexity and despair of the Roman Emperors, who realized that Catholicism was invading and undermining their whole world. Taking energetic measures and using violence could not destroy Catholicism. On the contrary, it continued to grow. In a certain way, the violence of the persecutions that increased until Constantine was a consequence of this despair. 

Let us ask St. Adrian to give us the same grace he received when he saw Heaven and victory in a situation of persecution, torture, and martyrdom. Today, in many ways we need a similar grace in our fight when the enemies of the Catholic Church persecute true Catholics. We need the grace to see the victory of the Reign of Mary, the restoration of Christendom, in such persecutions.

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) (08-09-2020)

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) (08-09-2020) 

மரியாவின் பிறப்பைக் குறித்து 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட – திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத – தூய யாக்கோபு நற்செய்தியில் இடம்பெறும் நிகழ்வு.

மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர் ஜோக்கினிடம், “உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும்” என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள் ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம் பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியா எனப் பெயரிடுவீர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத் தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக் கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச் சொன்னது போன்றே மரியா அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன்      (நீதி 13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பாவக்கறை சிறுதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல் தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியா கடவுளின் படைப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. கி.பி.330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர் ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த  எபிபெனஸ், கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக அறிகின்றோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில்  மரியாவின் பிறப்பு விழா உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருச்சபை வழக்கமாக புனிதரின் – தூயவரின் – இறந்த நாளை அல்லது அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக் கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆண்டவர் இயேசு, திருமுழுக்கு யோவான், அன்னை மரியா. இதை வைத்துப் பார்க்கும்போது திருச்சபையில் மரியா எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். மரியா பாவத்தால் வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர். எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும் ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Feast : Birth of Mother Mary (08-09-2020)

Birth of Mother Mary

Blessed Mother Mary, mother of Jesus was born to Joachim and Anne. She was born in the late first century B.C. She was an Israelite woman of Nazareth in Galilee. She was the cousin of Elizabeth, the mother of John the Baptist. Mother Mary visited Elizabeth when she conceived John and helped her. Elizabeth praised Mother Mary as the Mother of God. Mother Mary was born without any original sin and she was the first lady to be blessed by the Arch-Angel of God Gabriel, in person. She submitted to the will of God without any hesitation when the virgin conception of Jesus in her, was announced to her by the arch-angel. Jesus was so affectionate to his mother Mary. Hence Jesus entrusted her to the apostle John, when Jesus was on the cross to die for the salvation of mankind. Mother Mary remained in this world after the assumption of Christ to Heaven and guided the apostles and the nascent church. She prayed God along with other apostles on Pentecost day, when the Holy Spirit was showered on all the apostles and Mother Mary. Since she was born without original sin, she was taken to the heaven with body and soul after her death and burial.

---JDH---Jesus the Divine Healer---