புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 July 2020

*ST. ABUNDIUS OF CARDOBA July 11

🇻🇦
July 1⃣1⃣

_Martyrdom_ 🌟🌹
*ST. ABUNDIUS OF CARDOBA*


In 711 AD, the Muslims conquered Spain & governed it in accordance with Islamic law. Blasphemy and apostasy from Islam were both capital offenses.

At the beginning, Catholics could worship freely, and retained their churches and property on condition of paying a tribute for every parish, cathedral, and monastery; frequently such tribute was increased at the will of the conqueror.

But around the year 850 A.D., in the reign of Abd-er Rahman II, a fierce persecution ensued, during which many Catholics were accused of blasphemy, of entering mosques, and of conspiracy against the Government

48 martyrdoms took place in the city of Cardoba, Spain between the years 851 and 859. Today we commemorate St. Abundius of cardoba, one of those 48 martyrs.

Abundius a parish priest in Córdoba was arrested for blasphemy against Mohammad. When brought before the Caliph, to be judged, St. Abundius preached about the Catholic faith and the Church. The Caliph was furious and condemned him to death. Abundius was beheaded on 11 July 854, and his body was thrown to the dogs.

      🍁🍁🍁🍁🍁🍁🍁

The sacrifices of these Spanish martyrs inspired future Catholic armies to fight until the last Muslim banner was taken down from al-Qal’at al-Hamra, the Red Fortress in Granada, and Islam was finally kicked out of Spain some six hundred years later.





🌟 🌹
Today the Church also commemorates the Martyrdom of *POPE ST. PIUS I*


Pope Pius I was the ninth successor of Saint Peter, and guided the Church during the time of the pagan Roman emperor Antoninus. 

In his decrees he was severe towards blasphemers and with the clergy who showed negligence for the divine Mysteries of the altar.

During his pontificate he had to defend Catholicism from various heretics in Rome, such as the gnostics Valentinian, Cerdon, and Marcion, who tried to spread their errors. 

Pope Pius I obtained the crown of martyrdom by the sword, in the year 150 A.D.

🔵

புனித ஆல்கா (879-963) July 11

ஜூலை 11

புனித ஆல்கா (879-963)

இவர் இரஷ்ய நாட்டைச் சார்ந்தவர்.
இவர்மீது காதல்கொண்ட உக்ரைன் நாட்டை ஆட்சிசெய்து வந்த முதலாம் இகோர் என்ன மன்னர் இவரைத் திருமணம் செய்தார்.
இதன்பிறகு இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் இவர்களுடைய இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் ஆல்காவின் கணவர் எதிரி நாட்டின்மீது படையெடுத்துச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டதால், இவர் உக்ரைன் நாட்டை ஆட்சி செய்யத் தொடங்கினார்.

957 ஆம் ஆண்டு இவர் கான்ஸ்டாண்டிநோப்பிள் என்ற இடத்திற்கு சென்றபோது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார். ‌ இதன் பிறகு இவர் தன்னுடைய நாட்டு மக்களிடத்தில் கிறிஸ்துவின் விழுமியங்களை எந்தளவுக்குக் கொண்டு செல்ல முடியுமோ, அந்த அளவுக்குக் கொண்டு சென்றார்‌. 

ஆண்டுகள் மெல்ல உருண்டோடிய போது, இவர் நாட்டை ஆளுகின்ற பொறுப்பைத் தன்னுடைய மகனித்தில் ஒப்படைத்துவிட்டுத் தன்னுடைய ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார்.

July 11
Saint of the day:
Saint Olga of Kiev
 Isapóstolos: “Equal to the Apostles.”
 
Prayer:
 
Saint Olga of Kiev's Story
St. Olga (879-969) was a brilliant, beautiful, and wealthy noblewoman who married in 903 to Prince Igor I of Kievan, Rus'. She was a devoted wife who greatly mourned the loss of her husband. She fought back and  scalded her husband's murderers to death in 945 and killed hundreds of their followers. Later in life she became a Christian and was baptized at Constantinople in 957. She took the baptismal name of Helena. She then requested Emperor Otto I to send missionaries to Kiev. Although St. Adalbert of Magdeburg was sent and the queen exerted great efforts the mission proved a failure as did her attempts to convert her pagan son, Svyatoslav. Christianity was introduced however by her grandson St. Vladimir. Her Feast day July 11/24.

புனித பெனடிக்ட்(St.Benedict)துறவி July 11

இன்றைய புனிதர் :
(11-07-2020)

புனித பெனடிக்ட்(St.Benedict)
துறவி

பிறப்பு 
480
நார்சியா(Norcia), உம்பிரியா(Umbria)
    
இறப்பு 
21 மார்ச் 547

இவர் ஓர் உயர்குலத்தில் பிறந்தவர். இவர் உரோம் நகரில் கல்வி பயின்றார். அங்கு படித்தபோது இளைஞரிடையே நிலவிய தீமைகள் இவரை அதிரவைத்தது. இதனால் உடனே உரோமையை விட்டு ஓடினார். அப்போதுதான் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்கத் திட்டமிட்டார். ஒரு மலை உச்சிக்கு தனியாக சென்றார். அங்கே எம்மானூஸ் என்ற தவ முனிவரை சந்தித்தார். இம்முனிவர் காட்டிய வழியில் 3 ஆண்டுகள் இவருக்கு சற்று அப்பால் சென்று தாமும் முனிவராக வாழ்ந்து வந்தார். இவர் தவ வாழ்க்கை மேற்கொண்டதை அறிந்த பலரும் அங்கு இவரை சூழ்ந்து கொண்டனர். இதன் விளைவாக தோன்றியதுதான் "புனித பெனடிக்ட் துறவற சபை". 

இவர் தன் சபைத் துறவிகளுக்கு கிறிஸ்துவிடம், மாறாத எவராலும் பிரிக்க முடியாத உறவு கொண்டிருக்கக் கற்றுத் தந்தார். அத்தோடு அனைத்திலும் ஞானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கட்டளையிட்டார். கூட்டு வாழ்வு வழியாக, ஒற்றுமையை உணரவைத்தார். ஜெபமும், உழைப்பும் என்பதை இச்சபையின் குறிக்கோளாகக்கொண்டனர். பெனடிக்ட் தனிமையை நாடினாலும், அடிக்கடி மக்களை சந்தித்து வந்தார். நோயாளிகளை குணமாக்கினார். வறுமையில் வாடியோர்க்கு பொருளுதவி அளித்தார். ஏழைகளுக்கு தவறாமல் உணவு வழங்கினார். பலமுறை, இறந்தோரை உயிர்த்தெழச் செய்தார். தனது இறப்பை 6 நாட்களுக்கு முன்னறிவித்தார். தனக்கென்று கல்லறை குழி ஒன்றைத் தோண்டினார். ஒருநாள் திருப்பலியில் திருவுணவு உண்டபின், சிற்றாலயத்தில் நின்று செபித்துக் கொண்டிருக்கும்போது, தனது கைகளை, இவர் மேலே உயர்த்தி செபிக்கும்போது உயிர் பிரிந்தது. 

புனித பெனடிக்ட்தான் திருவழிபாட்டு முறைக்கு அடித்தளமிட்டார். தினந்தோறும் ஆராதனை என்ற முறையையும் இவர்தான் அறிமுகப்படுத்தினார். 12 ஆம் பத்திநாதர் இவருக்கு "ஐரோப்பாவின் தந்தை" என்று பட்டம் சூட்டினார். 

செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உம்மீது கொண்ட அளவில்லா அன்பினால் புனித பெனடிக்ட் தன் பெயரில் ஓர் சபையை தோற்றுவித்தார். உலகெங்கும் இச்சபையியனர் சென்று உம் நற்செய்தியை பரப்புவதுடன், பல ஏழைகளுக்கு வழிகாட்டி, வாழ்வை அளித்துள்ளனர். நாங்கள் எங்களின் பொருட்களில் ஒரு சிலவற்றையாவது ஏழைகளுக்கு கொடுத்து, பகிர்தலில் வளரவும், வாழவும் உம் வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (11-07-2020)

St. Benedict

He was born around the year 480 A.D. in a distinguished family of a Roman noble, in Umbria, Italy. He was a twin with his sister St. Scholastica. He studied in Rome and wanted to live a secluded life away from the busy city life, to avoid watching marching armies, sufferings of people. He left Rome with his aged nurse and settled down at Enfide, near the church of St. Peter. Later he met a monk Romanus of Subiaco, whose monastery was in the mountains. Romanus gave St. Benedict the habit of a monk. Benedict lived a life of a hermit for three years in a cave in the mountain. He became a very respectable monk and people used to gather around him for spiritual guidance. When the abbot of a nearby monastery died, the monks came to St. Benedict and requested him to take over the abbot of the monastery and Benedict gave consent reluctantly and became the abbot knowing well that the manners of the monks are different from his views. Benedict made many reforms in the monastery and introduced many reforms for the monks. The monks did not agree with the reforms of St. Benedict and tried to kill him by poisoning. Once the monks added poison in the drink given for St. Benedict but when St. Benedict prayed before drinking, the cup shattered. In another occasion the monks gave poisoned bread to him but when St. Benedict prayed before eating the bread, a bird called raven suddenly came in and took away the poisoned bread and miraculously saved the life of St. Benedict. Disgusted about the behavior of the monks, St. Benedict returned to his cave for hermit life and attracted by his sanctity many people came to him again for solace. He founded 12 monasteries in the vicinity of Subiaco and later founded the famous Benedictine Monastery of Monte Cassino, on the hill top between Rome and Naples. He died at the Monte Cassino Monastery due to high fever, on March 21, 547. He wrote the 'Rule of Benedict' with 73 chapters about how to live a Christ-centric spiritual life and about how to run a monastery efficiently. He contributed more to the rise of monasticism and his rules are the fundamental document for many religious communities even today.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூலை 11)

✠ நூர்சியாவின் புனிதர் பெனடிக்ட் ✠
(St. Benedict of Nursia)

மடாதிபதி/ நிறுவனர்:
(Abbot/ Founder)
பிறப்பு: மார்ச் 2, 480
நூர்சியா, ஊம்ப்ரியா, ஊம்ப்ரியா அரசு
(Norcia, Umbria, Kingdom of Odoacer)

இறப்பு: கி.பி. 547 (வயது 67), 
மோன்ட்டே கேசினோ, இத்தாலி அரசு
(Monte Cassino, Kingdom of the Ostrogoths)

ஏற்கும் சபை/ சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church) 
கிழக்கு மரபுவழி திருச்சபைகள்
(Eastern Orthodox Churches)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Churches)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
ஆதி கத்தோலிக்க திருச்சபைகள்
(Old Catholic Churches)

புனிதர் பட்டம்: கி.பி. 1220
திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியஸ்
(Pope Honorius III)

நினைவுத் திருவிழா: ஜூலை 11

பாதுகாவல்: 
நஞ்சினால் பாதிக்கப்பட்டோர், பில்லி சூனியத்திலிருந்து தப்ப, உழவர், பொற் கொல்லர், மரண படுக்கையில் இருப்போர், ஐரோப்பா, காய்ச்சல், துறவற சபையினர், பிள்ளை, தன் தலைவரின் உடமைகளை உடைத்த வேலைக்காரர்கள், பாவ சோதனை

நூர்சியாவின் புனிதர் பெனடிக்ட், ஒரு கிறிஸ்தவப் புனிதரும், கத்தோலிக்க திருச்சபையினால் ஐரோப்பா மற்றும் மாணவர்களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுபவரும் ஆவார். இத்தாலியில், ரோம் நகருக்கு 40 மைல் (64 கிமீ) கிழக்கே, “லாஸியோ” (Lazio) நகருக்கு அருகேயுள்ள “சுபியாகோ” (Subiaco) என்னும் இடத்தில் இவர் 12 மடங்களைத் தோற்றுவித்தார். இதன்பின் இவர் தெற்கு இத்தாலியில் உள்ள “மோன்ட்டே கேசினோவில்” (Monte Cassino) உள்ள மலைப்பகுதியில் தன் வாழ்வின் மீதி நாட்களைக் கழித்தார்.

பெனடிக்டின் முக்கிய சாதனையாகக் கருதப்படுவது, இவர் தனது துறவிகளுக்கான கட்டளைகளைக் கொண்ட சட்ட நூல் ஒன்றைத் தொகுத்ததாகும். இதில் ஜான் சாசியானின் எழுத்துகளின் தாக்கம் பெரிதும் உள்ளது. இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின. இந்த காரணத்தால், பெனடிக்ட் மேற்கு கிறித்தவ துறவறமடங்களின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார்

வரலாறு:
தனது 20ம் வயதில் உலகை வெறுத்து ரோமுக்கு வெளியே வனவாசியாக வாழ்ந்தவர் இவர். தனிமையில் இறைவனை தியானிப்பதில் செலவிட்டார். அருகில் இருந்த ஆதீனத்தின் தலைவர் இறந்தபோது, அம்மடத்து துறவிகளின் வேண்டுதலின் பேரில் இவர் அவர்களுக்கு தலைவரானார். இவர் இயற்றிய கடின சட்டங்களினால் வெறுப்படைந்த துறவிகள் இவரை நஞ்சூட்டு கொல்ல திட்டமிட்டு நஞ்சு கலந்த கோப்பையினை இவரிடம் கொடுத்தபோது, இவர் அதனை ஆசீர்வதிக்க, அக்கோப்பை உடைந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் அவர் மடத்தை விட்டு வெளியேறி மீண்டும் தனிமை வாழ்வுக்கு திரும்பினார்.

இவர் மோன்ட்டே கேசினோவில் நின்றுகொண்டு இறைவேண்டல் புரியும்போது இறந்தார். பாரம்பரியக் கூற்றின்படி இது நிகழ்ந்தது கி.பி. 547ம் ஆண்டு, மார்ச் மாதம், 21ம் நாளாகும்.

கி.பி. 1964ம் ஆண்டு, இவரை ஐரோப்பாவின் பாதுகாவலராக திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அறிவித்தார். இவரின் நினைவு நாளான மார்ச் 21, பெரும்பாலும் தவக்காலத்தில் வருவதால், இவரின் விழா நாள், இவரின் மீப்பொருட்கள் ஃபிரான்சுக்கு கொன்டுவரப்பட்ட நாளான ஜூலை 11ல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் விருப்ப நினைவாக இடம் பெருகின்றது.

பெனடிக்டின் சட்டங்கள்:
இவை இவரால் இயற்றப்பட்ட எழுபத்தி மூன்று குறுகிய அதிகாரங்களை உடைய சட்ட தொகுப்பு ஆகும். இச்சட்டங்கள் ஒரு மடத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் மற்றும் ஒரு மடத்தில் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து விளக்குகின்றது. மடத்தின் தலைவருக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் எனவும், அவ்வாறு கீழ்படியாதோருக்கான தண்டனை மற்றும் மடத்தின் தலைவருக்கான கடமைகள் முதலியன இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன.

பெனடிக்டின் பதக்கம்:
பெனடிக்டின் பதக்கம் முதன் முதலில் புனித பெனடிக்டின் பாதுகாவலுக்கய் அணியப்பட்டது. இதன் ஒருபக்கத்தில் பெனடிக்டின் உருவமும். மறுபக்கத்தில் சிலுவையும் அதனைச்சுற்றியும் அதன் மீதும் இலத்தீன் எழுத்துகளும் பொறிக்கப்படிருக்கும்.

இப்பதகமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட காலம் சரிவர தெரியவில்லை. ஆயினும் கி.பி. 1880ம் ஆண்டு, இவரின் பிறப்பின் கி.பி. 1400ம் ஆண்டு நினைவுக்காக வெளியிடப்பட்ட போதிலிருந்து இது மக்களிடையே புகழ் பெறத்துவங்கியது. 

கி.பி. 1647ம் ஆண்டு பவேரியாவின் இருந்த ஒரு சூனியக்காரி, இப்பதகத்தை அனிபவர் மீது தனது மந்திரம் வேலை செய்ய மறுப்பதாக கூறியுள்ளார். திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட், கி.பி. 1741ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 23ம் நாள், மற்றும்  கி.பி. 1742ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் நாளன்று, இப்பதக்கதை அருளிக்கமாக அணிய அதிகாரபூர்வ அனுமதியளித்தார்.

பெனடிக்டின் தாக்கம்:
மத்தியக்காலத்தின் துவக்க நூற்றாண்டுகள் பெனடிக்டின் நூற்றாண்டுகள் என அழைக்கப்படுகின்றது. 2008ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், புனித பெனடிக்ட் தனது வாழ்வினால் ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் அழிக்க முடியா தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். 

ரோமப் பேரரசின் அழிவால் இருள் சூழ்ந்திருந்த ஐரோப்பாவை மீட்டவர் இவர் என இவருக்கு புகழாரம் சூட்டினார். மற்ற எந்த ஒரு தனி நபரையும் விட பெனடிக்ட் மேற்கு துறவு மடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் இயற்றிய சட்டங்கள் இன்றளவும் பல்லாயிரக்கணக்கான துறவுமடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.