புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 August 2020

புனித டைட்ஃபில் (-480)(ஆகஸ்ட் 23)

புனித டைட்ஃபில் (-480)

(ஆகஸ்ட் 23)
இவர் அயர்லாந்து நாட்டை ஆண்டு வந்த பிரைசன் என்பவரின் இளைய மகள். இவர் அரச குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளிடம் மிகுந்த இரக்கமும், நோயாளர்களிடம் கரிசனையும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவர் வளர்ந்து பெரியவரான பின்பு ஒரு மருத்துவமனையையும்,  ஒரு துறவுமடமும் கட்டியெழுப்பி அவற்றின் மூலம் மக்களுக்குச் சமூகப் பணியையும் இறை பணியையும் செய்து வந்தார்.

480 ஆம் ஆண்டு சாஜோன் என்ற இனக்குழுவினர் வேல்ஸ் நாட்டின் மீது படையெடுத்து வந்து, கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டவர்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வேளையில் டைட்ஃபில் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் மிகவும் உறுதியாக இருந்ததால், சாஜோன் இனக்குழுவினர் இவரை, இவருடைய சகோதரரோடு சேர்த்து வெட்டிக் கொன்றனர்.

இவ்வாறு டைட்ஃபில் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி தன் இன்னுயிரைத் துறந்தார்.

✠ லிமாவின் புனிதர் ரோஸ் ✠(St. Rose of Lima) August 23

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 23)

✠ லிமாவின் புனிதர் ரோஸ் ✠
(St. Rose of Lima)
கன்னியர்/ அமெரிக்க நாடுகளின் முதல் புனிதர்:
(Virgin/ First Saint born in the Americas)

பிறப்பு: ஏப்ரல் 20, 1586
லிமா, பெரு காலனியாதிக்கம், ஸ்பேனிஷ் பேரரசு
(Lima, Viceroyalty of Peru, Spanish Empire)

இறப்பு: ஆகஸ்ட் 24, 1617 (வயது 31)
லிமா, பெரு காலனியாதிக்கம், ஸ்பேனிஷ் பேரரசு
(Lima, Viceroyalty of Peru, Spanish Empire)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 15, 1667 அல்லது 1668
திருத்தந்தை ஒன்பதாம் கிளமென்ட்
(Pope Clement IX) 

புனிதர் பட்டம்: ஏப்ரல் 12, 1671
திருத்தந்தை பத்தாம் கிளமென்ட்
(Pope Clement X)

முக்கிய திருத்தலங்கள்: 
புனித டோமினிக் பேராலயம், லிமா, பெரு
(Basílica of Santo Domingo, Lima, Peru)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 23

சித்தரிக்கப்படும் வகை: 
நங்கூரம், ரோசா மலர், குழந்தை இயேசு

பாதுகாவல்: 
தையல்காரர்கள்; தையல் சரிகை; தோட்டக்காரர்கள்; பூ வியாபாரிகள்; இந்தியா; லத்தீன் அமெரிக்கா; தமது பக்திக்காக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட, அல்லது கேவலப்படுத்தப்பட்ட மக்கள்; குடும்ப சண்டைகள் தீர்மானம்; அமெரிக்க பழங்குடி மக்கள்; பெரு; ஃபிலிப்பைன்ஸ்; கலிஃபோர்னியா; சாண்டா ரோசா, லாகுனா; ஆல்கோய்; செபு; மாயைக்கு எதிராக; லிமா; பெருவியன் காவல் படை.

அமெரிக்க நாடுகளின் முதல் புனிதரான லிமாவின் புனிதர் ரோஸ், பெரு நாட்டில் உள்ள லிமா நகரிலுள்ள மூன்றாம் நிலை டோமினிக்கன் சபையின் (Third Order of Saint Dominic) உறுப்பினர் ஆவார். தமது தனிப்பட்ட முயற்சிகள் மூலம் நகரின் தேவைப்பட்டவர்களுக்கு உதவும் குணத்திற்காகவும், பொதுவாக மத காரணங்களுக்காக அனைத்து விதமான பழக்கவழக்கங்களையும் தவிர்த்து, கடுமையான சுய ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ்ந்ததற்காகவும் இவர் பிரபலமானவர் ஆவார். டோமினிக்கன் சபையின் பிரமாணங்கள் எடுத்துக்கொள்ளாத உறுப்பினரான (A lay member of the Dominican Order) இவர், கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக கௌரவிக்கப்படுகிறார்.

“இசபெல் ஃப்ளோர்ஸ் டி ஒலிவா” (Isabel Flores de Oliva) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெய்ன் நாட்டின் “பெரு காலனியாதிக்க” (Viceroyalty of Peru) “லிமா” (Lima) நகரில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை “கேஸ்பர் ஃப்ளோர்ஸ்” (Gaspar Flores) ஸ்பேனிஷ் பேரரசின் இராணுவத்தின் குதிரைப்படை வீரராவார். இவரது தாயார் “மரியா டி ஒலிவா” (María de Oliva y Herrer) ஆவார். இவருக்கு ரோஸ் என்ற பெயர் வந்ததன் காரணம், இவர் சிறு குழந்தையாய் இருந்தபோது, இவரின் முகம் ரோஜா மலர் போல மாறியதை இவர் வீட்டுப் பணியாளர் பார்த்தார் என்பர். ஆகவே இவர் பெயர் ரோஸ் (Rose) என வழங்கலாயிற்று.

தமது இளம் வயதில், டோமினிக்கன் துறவியான புனிதர் “கேதரினுக்கு” (St. Catherine of Siena) சமமாக கடும் தவ முயற்சிகளை இரகசியமாக மேற்கொண்டார். வாரத்தில் மூன்று முறை உண்ணா நோன்பிருக்க தொடங்கினார்.

தம்மை ஆண்கள் கவனிப்பதை உணர்ந்த ரோஸ், மன உளைச்சலுக்கு ஆளானார். தமது அழகை உணர்ந்த இவர், தமது அழகால் பிறருக்கு பாவ சோதனை வராமல் இருக்க முயற்சிகள் மேற்கொண்டார். தமது அழகிய நீண்ட கூந்தலை வெட்டினார். தமது முகத்தில் மிளகு அரைத்து தடவி, முகத்தின் மேன்மையை போக்க முயற்ச்சித்தார்.

தமது பெற்றோரின் கண்டிப்பையும் மீறி, தினமும் அதிக நேரம் நற்கருணை ஆராதனையில் செலவிட்டார். தினமும் நற்கருணை பெற்றார். இது, அக்காலத்தில் மிகவும் அரிதான செயலாகும். ரோஸ், கற்புநிலை உறுதிப்பாடு ஏற்க தீர்மானித்தார். தமது மகள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென விரும்பிய பெற்றோர், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். தமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என, தமக்கு திருமண அறிவுரைகள் கூறிய அனைவரையும் நிராகரித்தார்.

ரோஸ், மூன்றாம் நிலை டோமினிக்கன் சபையில் இணைந்து துறவியாக விரும்பினார். ஆனால், அவருடைய தந்தையின் கடுமையான எதிர்ப்பின் காரணாமாக அவரால் அது இயலாமல் போனது. தமது இருபது வயதில், பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக டொமினிகன் (Third Order of St. Dominic) சபையில் இணைந்து துறவியாவதற்குப் பதிலாக, துறவியரின் சீருடைகளை அணிந்துகொண்டு, நிரந்தர கன்னிமைக்காக சத்திய உறுதிப்பாடு ஏற்றுக்கொண்டார். இரவில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் உறங்க மறுத்த ரோஸ், செப காரியங்களில் அதிக நேரம் செலவிட்டார். புலால் உணவுகளை முற்றிலும் தவிர்த்தார். 11 வருட காலம் இதுபோன்ற கடும் தவமுயற்சிகள் மேற்கொண்ட ரோஸ், பரவச அனுபவங்களும் (Ecstasy) பெற்றார்.

தாம் மரிக்கப்போகும் நாளை முன்னறிவித்த ரோஸ், அதன்படியே கி.பி. 1617ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 24ம் நாளன்று, மரித்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் அம்மறைமாவட்ட பேராயர் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

Saint of the Day : (23-08-2020) 


St. Rose of Lima

St. Rose was born at a place called Lima in Peru on April 20, 1586. Her real name was Isabel but others called her as Rose because she was very beautiful. Hence the name Rose remained with her instead of the real name Isabel. She used to extend help to the sick and hungry persons around her community. She even bring them to her room and care for them. She was growing beautiful flowers and did fine embroidery work, to look after the family and to care the poor, since her family was very poor. Her services to poor people were seen by the friars of the Dominican Order and they were very attracted by her services. Her services became known to the local populace by the Dominican friars. She then took the vow of perpetual virginity when she was 20 years old. Instead of becoming a nun, she joined the Third Order of St. Dominic and remained in her home and continued the services to the poor and hungry people. It is said that she even predicted her actual date of death and died on August 24, 1617.

St. Rose of Lima was beatified by Pope Clement-IX on April 15, 1667 and canonized by Pope Clement-X on April 12, 1671. She is depicted in pictures with a crown of rose flowers.

---JDH---Jesus the Divine Healer---