புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 August 2020

புனித பெனில்திஸ் (1805-1862)(ஆகஸ்ட் 13)

புனித பெனில்திஸ் (1805-1862)

(ஆகஸ்ட் 13)

இவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். இவரது குடும்பம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம்.
இவர் தனது தொடக்கக் கல்வியை தெலசால் அருள்சகோதர்கள் நடத்தி வந்த பள்ளிக்கூடத்தில் கற்றார். இவரிடம் விளங்கிய அறிவாற்றலைக் கண்டு வியந்த அங்கிருந்த அருள் சகோதரர்கள் இவரைப் 14 வயதிலேயே மாணவர்களுக்குப் பாடம் எடுக்க இசைவு தந்தனர்.

இருபதாவது வயதில் தெலசால் அருள் சகோதரர்கள் சபையில் சேர்ந்த இவர், தனது நாற்பத்து ஒன்றாம் சாகஸ் என்ற இடத்திலிருந்த ஓர் இல்லத்தின் தலைவரானார்.

சாகஸ் என்ற இடம் ஒரு சாதாரண சிற்றூர். இவ்வூரில் கல்வியில் பின்தங்கிய மாணவ மாணவிகள் பலர் இருந்தார்கள். அவர்களுக்கு இவர் மாலை நேர வகுப்பு எடுத்து அவர்கள் கல்வியில் சிறந்தோங்கச் செய்தார்.

இவர் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த நேரம் போக, மற்ற நேரங்களில் நோயாளர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆறுதலாகப் பேசினார்; மாணவர்களுக்கு மறைக்கல்வியும் எடுத்தார். இதனால் சாகஸ் என்ற அந்தச் சிற்றூர் கல்வியில் மட்டுமல்லாது ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கியது.

இவர் இறக்கும் போது, இவரிடம் கல்வி கற்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருள்பணியாளர்களாக மாறி இருந்தார்கள்.

இவருக்கு 1967 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

புனிதர் ரேட்கண்ட் ✠(St. Radegund) August 13

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 13)

✠ புனிதர் ரேட்கண்ட் ✠
(St. Radegund)
இளவரசி/ அரசி/ நிறுவனர்:
(Princess/ Queen/ Foundress)

பிறப்பு: கி.பி. 520
துரிங்கியன் பழங்குடியினர்
(Thuringian tribes)

இறப்பு: ஆகஸ்ட் 13, 587 (வயது 66–67)
தூய திருச்சிலுவை மடம், போய்ட்டேர்ஸ், அகிட்டைன், ஃபிரேங்க்ஸ் அரசு
(Abbey of the Holy Cross, Poitiers, Aquitaine, Kingdom of the Franks)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 13

பாதுகாவல்:
இயேசு கல்லூரி (Jesus College), கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் (Cambridge)

புனிதர் ரேட்கண்ட், ஒரு துரிங்கியன் இளவரசியும் (Thuringian Princess), ஃபிரேங்கிஷ் அரசியும் (Frankish Queen), போய்ட்டேர்ஸ் (Poitiers) நகரிலுள்ள “திருச்சிலுவை துறவு மடத்தை” (Abbey of the Holy Cross) நிறுவியவருமாவார். ஃபிரான்ஸ் (France) மற்றும் இங்கிலாந்து (England) நாடுகளிலுள்ள பல்வேறு ஆலயங்களின் பாதுகாவலரான இவர், கேம்ப்ரிட்ஜ் (Cambridge) பல்கலையின் இயேசு கல்லூரியின் (Jesus College) பாதுகாவலருமாவார்.

ரேட்கண்ட், ஜெர்மன் (German) நாட்டிலுள்ள, துரிங்கியன் (Thuringian) நிலத்தின் மூன்று அரசர்களில் ஒருவரான “பெர்டாச்சார்” (Bertachar) என்பவரது மகளாவார். ரேட்கண்ட்டின் மாமனான “ஹெர்மன்ஃபிரிட்” (Hermanfrid) என்பவர், “பெர்டாச்சாரை” (Bertachar) சண்டையிட்டு கொன்றுவிட்டு, ரெட்கண்ட்டை கைப்பற்றினான். ஃபிரேன்கிஷ் (Frankish King) அரசன் “தியோடெரிக்” (Theuderic) என்பவனுடன் இணைந்த பிறகு, தமது இன்னொரு சகோதரனான “படேரிக்” (Baderic) என்பவனையும் சண்டையிட்டு தோற்கடித்தான். இருப்பினும், அவரது சகோதரர்களை நசுக்கி, துரிங்கியாவின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய “ஹெர்மன்ஃபிரிட்”, அரசன் “தியோடெரிக்குடன்” (Theuderic) தத்துவார்த்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்தான்.

கி.பி. 531ம் ஆண்டு, “தியோடெரிக்”, தமது சகோதரன் “முதலாம் க்லோடேய்ர்” (Clotaire I) என்பவருடன் துரிங்கியா திரும்பினார். இருவரும் இணைந்து ஹெர்மன்ஃபிரிட்’டை தோற்கடித்து, அவரது இராச்சியத்தை வெற்றிகொண்டார்கள். ரேட்கண்ட்டை பொறுப்பேற்றுக்கொண்ட “முதலாம் க்லோடேய்ர்,” அவரை அங்கிருந்து திரும்ப “மெரோவிங்கியன் கௌல்” (Merovingian Gaul) அழைத்துச் சென்றார். ரேட்கண்ட், “முதலாம் க்லோடேய்ரின்” ஆறு மனைவியர் (Wives) அல்லது “திருமணமாகாமல் சேர்ந்து வாழும் பெண்களில்” (Concubines) ஒருவராவார். குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத ரேட்கண்ட்டின் தர்மசிந்தனை குறிப்பிடப்படுவதாகும்.

கி.பி. 550ம் ஆண்டு, துரிங்கியன் அரச குடும்பத்தின் எஞ்சிய கடைசி ஆண் உறுப்பினர், ரேட்கண்ட்டின் சகோதரர் ஆவார். “முதலாம் க்லோடேய்ர்” அவரையும் கொலை செய்தார். தமது இராச்சியத்தை விட்டு ஓடிப்போன ரேட்கண்ட், திருச்சபையின் பாதுகாப்பை கோரினார். “நோயோன்” (Noyon) ஆயரிடம், தம்மை ஒரு திருத்தொண்டராக (Deaconess) நியமிக்க வலியுறுத்தினார். கி.பி. 560ம் ஆண்டு, போய்ட்டேர்ஸ் (Poitiers) நகரில், “செயின்ட் க்ரோய்க்ஸ்” (Monastery of Sainte-Croix) துறவு மடத்தை நிறுவினார். அங்கே, நோயாளிகள்மீது அக்கறை செலுத்தினார். ரேட்கண்ட், பழம், மீன், முட்டை, இறைச்சி ஆகியவனவற்றை தவிர்த்து, அவரையினங்களையும் காய்கறிகளையுமே உண்டார். செபித்தல் மூலம் நோயாளிகளை குணமாக்கும் அற்புத சக்தி கொண்டிருந்தார் என்று பரவலாக நம்பப்பட்டார்.

அவரது துறவு மடம், கிறிஸ்துவின் உண்மையான திருச்சிலுவையின் மிச்சத்திற்கான பெயரிடப்பட்டது. இவர், உண்மையான திருச்சிலுவையின் மிச்சமொன்றினை, “பைசண்டைன் பேரரசர்” (Byzantine Emperor) “இரண்டாம் ஜஸ்டினிடமிருந்து” (Justin II) பெற்றதாக கூறப்படுகிறது. போய்ட்டேர்ஸ் (Poitiers) ஆயரான (Bishop of Poitiers) “மரோவியஸ்” (Maroveus) அதனை துறவு மடத்தில் ஸ்தாபிக்க மறுத்தும், ரேட்கண்ட்டின் வேண்டுகோளின்பேரில், “டூர்ஸ்” ஆயரான “யூஃப்ரோனியஸ்” (Eufronius of Tours) என்பவரை, அரசன் “சிக்பெர்ட்” (Sigebert) அனுப்பி அதனை ஸ்தாபிக்கச் செய்தார். 

ஆறாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ துறவியான “ஜூனியன்” (Junian of Maire), ரேட்கண்டின் நெருங்கிய நண்பராவார். நண்பர்களான இவர்கள் இருவருமே கி.பி. 587ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 13ம் தேதி, ஒரே நாளில் மரித்ததாக கூறப்படுகிறது.

† Saint of the Day †
(August 13)

✠ St. Radegund ✠

Princess/ Queen/ Foundress:

Born: 520 AD
Thuringian tribes

Died: August 13, 587 (Aged 66–67)
Abbey of the Holy Cross, Poitiers, Aquitaine, Kingdom of the Franks

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Major Shrine: Church of St. Radegonde, Poitiers, Vienne, France

Feast: August 13

Patronage: Jesus College, Cambridge

Radegund was a Thuringian princess and Frankish queen, who founded the Abbey of the Holy Cross at Poitiers. She is the patron saint of several churches in France and England and of Jesus College, Cambridge.

The life of Saint Radegund is portrayed by two different writers, both of whom had very different relationships with her. Radegund’s life is seen in different ways but both showing the holy life she leads and her devotion to God. Verantius sought to show her similarities to saints like St. Martin who lived in poverty and sought repentance through violence to their bodies. Baudonivia on the other hand showed Radegund’s life in the monastery, where she used her royal status and clout to encourage others to join the Christian faith.

The author who first wrote a hagiographic of Radegund’s life was Verantius. A poet who developed a friendship with Radegund via letters and poems. He wrote a biography in the year 587. He had a difficult time portraying her as a saint because she was a woman and because she lived her life with piety and dedication to the holy word. He wrote in a way that depicted the female sex as far weaker and less holy than the male sex. Radegund lived in an exceptional holy way, regardless of her sex. “In other words, a woman who dedicated herself to a Christian life of the sort exemplified by Radegund could, like her, transcend the inherent shortcomings of her sex.” This quote portrays the majority of the population's feelings regarding the female race.

Varantius goes on to show how Radegund lived her life in a way of rejecting the flesh and ascetics. Radegund wore hair shirts which were an undergarment worn to discomfort the body in order to seek repentance from God. Along with this type of bodily torture, she also restrained her arms and neck with iron rings which caused her flesh to swell and bleed. By mortifying her flesh she sought to live a life with God. Verantius also wrote a great deal about her union with a man. He wanted to make it clear that she was still a very holy woman even when bound to a man. He says, “People said that the King had yoked himself to a monarch rather than a queen.” This shows that even though she was legally married, her heart was still very much with God. Radegund being a queen also presented an issue for Verantius. He believed Queen Radegund rejected her status and duties as queen in order to live a pious and basic life. When Verantius does mention her queenliness “he notes that she left her clothes and ornaments for the poor or to a church.”

The author of the second hagiography portrays Radegund in a very different light than Verantius. This hagiography was written twenty years after Radegund’s death and was written at the request of the congregation of the monastery that Radegund had founded and lived. The author’s name was Baudonivia. Baudonivia did not feel it necessary for Radegund to overcome her sex, so she does not make a point to show the imperfections of the female sex.

The Radegund that Baudonivia portrays is one that does not cause discomfort to her body and used her royal status to help those in need, contrary to Verantius. “Radegund and her retinue passed near a fane where non-christian Franks worshipped, and she ordered it destroyed.” According to Baudonivia, Radegund continued to use her noble blood even after she retreated to the monastery. Whenever she got wind of a disagreement between kings she wrote letters to them urging them to have peace. Baudonivia believed Radegund knew the good she could do by using her royal status. The miracles that Radegund performs according to Baudonivia are performed on a higher class of people than the hagiography that Verantius portrays. Because of one of her healing miracles a foundation for a basilica of Saint Radegund was formed. This demonstrates the population she was affecting in Baudonivia’s writings.

The audience that each of the hagiographies hoped to adhere to were very different. Verantius was writing for the entire public, specifically men of the church. We know this because of the number of times he refers to the female sex being weaker and how Radegund overcomes the shortcomings of her sex. He wanted to give her the recognition that she deserved for living such a pious and holy life. And at this time in history, men ruled the church and were skeptical of women. Verantius emphasized Radegund as the stereotypical saint by showing her ability to harm her body, her desire to live a minimalist lifestyle, and her rejection of royal status. He also describes her marriage as being less of a secular marriage but a marriage with God. He wanted to portray her as being married but not in a way that would discredit or make her more of a woman.

Baudonivia on the other hand had an audience that was primarily intended for the women of the monastery. In the writings, it is said that the women of the monastery did not necessarily see the Radegund that Verantius portrays, instead, “Their Radegund had shaped not merely the physical but also the spiritual and emotional space in which they lived, through which they moved, and in which they prayed.” Baudonivia portrayed Radegund in the way that the women remembered and rejoiced her. They believed her to be a saint and did not need the affirmation of the church.

I found both analyses’ of Saint Radegund very interesting because they seem to portray two very different women. One that lived a pious and minimal life, the other a life that used the gifts God gave her to create a better and more Christian world. In my opinion, both showed very holy lives, but the intended audiences were clearly different groups. Whether or not one was more accurate is not known but if we look at the authors we can guess that Verantius’ version was either the most accurate of Radegund’s life or at least the way she wanted to be portrayed to the rest of the world. Baudonivia’s version was written nearly two decades after Radegund’s death so we can suppose that she was acquiring information about Radegund’s life from other nuns and friends within the Poitiers community.

The way that Verantius describes her marriage is very interesting because historically very little is known about the marriage and no children were produced causing one to believe that it was a marriage of little passion and love. Verantius describes the lengths that Radegund would go to in order to leave the marital bed and seek comfort in God, through asking to relieve nature and staying throughout the night. Eventually fleeing her husband’s home to go to the monastery. Doing some research on the Frankish kingdoms, all of Radegund’s family fought over land and was killed except for her cousin/husband. What I found even more interesting was that she was one of six wives, which is not a Christian tradition. This could have caused her complete devotion to the Christian church and turn to a life faithful only to God.

Whatever the reason for her pious and devout life, one thing is certain, Radegund was a woman who broke the mold and showed that women could live holy lives just like men. She was a very unique figure in the history of the Christian church because of the way she obtained sainthood. Most women in that time period who had gained sainthood did it through martyrdom, Radegund however, obtained sainthood the way men did, by living a life worthy of God.

புனித போன்தியன் (Pope St. Pontian) 18ம் திருத்தந்தை : (18th Pope) August 13

இன்றைய புனிதர் :
(13-08-2020)

புனித போன்தியன்  (Pope St. Pontian)  

18ம் திருத்தந்தை : (18th Pope)  

இயற்பெயர் : பொன்தியானுஸ்  
பிறப்பு : c 200 சார்தீனியா, (Sardinia) ரோமப் பேரரசு  

இறப்பு : 237 சார்தீனியா, (Sardinia) ரோமப் பேரரசு  

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 13  

திருத்தந்தை போன்தியன் (Pope Pontian) ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் கி.பி. 230 முதல் 235 வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் அர்பன் ஆவார். திருத்தந்தை போன்தியன் கத்தோலிக்க திருச்சபையின் 18ம் திருத்தந்தை ஆவார்.  

வரலாறு : இவருக்கு முந்தைய திருத்தந்தையர்களை விடவும் இவரைப் பற்றி சிறிது அதிக தகவல்கள் கிடைத்துள்ளன. "லிபேரிய பட்டியல்" (Liberian Catalogue) என்னும் ஏட்டை நான்காம் நூற்றாண்டில் தொகுத்த ஆசிரியருக்கு அந்தக் கூடுதல் தகவல்கள் புதிதாக அப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக் குறிப்பேட்டிலிருந்து கிடைத்தன.  'ரோம் நகர் இப்போலித்து' (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் போன்தியனுக்கு முந்திய திருத்தந்தையர்கள் ஆட்சிக்காலத்தில் எதிர் - திருத்தந்தையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரும், போன்தியனும் வேறு திருச்சபைத் தலைவர்களும் திருச்சபைக்கு எதிராக இருந்த 'மாக்சிமினஸ் த்ராக்ஸ்' (Maximinus Thrax) என்ற ரோமப் பேரரசனால் சார்தீனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.  எனவே, போன்தியன் 235 செப்டம்பர் 25 (அல்லது 28ம் நாள்) திருத்தந்தைப் பதவியைத் துறந்தார். இப்போலித்து என்ற எதிர் திருத்தந்தையால் திருச்சபையில் ஏற்பட்ட பிளவும் ஏறக்குறைய அதே சமயத்தில் முடிவுக்கு வந்தது. இப்போலித்து திருச்சபையோடு சமாதானம் செய்துகொண்டார்.

 போன்தியன் எவ்வளவு காலம் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, போன்தியன் சார்தீனியாவில் உலோகச் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ததாலும், கொடூரமாக நடத்தப்பட்டதாலும் இறந்தார். அவர் 'தாவொலாரா' என்னும் தீவில் இறந்ததாக ஒரு மரபு உள்ளது.  

உடல் அடக்கம் :

போன்தியனின் திருவிழா நவம்பர் 19ஆக இருந்தது. பின்னர் போன்தியனுக்கும் இப்போலித்துவுக்கும் ஒரே நாளில், ஆகஸ்ட் 13ம் நாள் விழாக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அந்த நாளில்தான் அவருடைய உடலின் மீபொருள்கள் கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் வைக்கப்பட்டன.  போன்தியனின் மீபொருள்களைத் திருத்தந்தை ஃபேபியன் (ஆட்சி: 236-250) என்பவர் ரோம் நகருக்குக் கொண்டு வந்து, கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்தார். அவரது கல்லறையில் வைக்கப்பட்ட கல்வெட்டு 1909ல் கண்டெடுக்கப்பட்டது. அதில் "PONTIANOS, EPISK" என்னும் சொற்கள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, "MARTUR" என்னும் சொல் வேறு ஒருவரால் சேர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதற்கு, "ஆயரும் மறைச்சாட்சியுமான போன்தியன்" என்பது பொருள்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (13-08-2020)

Sts. Pontian and Hippolytus

Tradition says that Hippolytus was born in the year A.D. 170. He was converted to Christianity by St. Lawrence. He was considered as a most important Christian theologian of third century. He used to frequently quarrel with bishops of Rome and has headed a rival group. For this reason he was called as antipope. He opposed the Roman bishops who have dealt with pagan converts to Christianity very leniently, when they joined the Christian community. During the reign of Emperor Maximinus of Thrax, Hippolytus and Pope Pontian were exiled to Sardinia in the year A.D. 235 for heading a rival group in Christianity. Pope Pontian reigned as pope from July 21, 230 to September 28, 235. When Pontian was exiled along with Hippolytus to Sardinia, Pontian abdicated from the papacy to enable the Church to elect a new Pontiff. Probably he was the first pope to abdicate papacy. Both were then killed in the infamous mines of Sardinia and died as Christian martyrs. Hippolytus has reconciled to the Church before his martyrdom. His body was brought to Rome and interned there on August 13, 236.

St. Hippolytus is venerated as a patron of prison guards, prison officers and prison workers.

---JDH---Jesus the Divine Healer---