† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 16)
✠ புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர் ✠
(St. Benedict Joseph Labre)
நித்திய ஆராதனையின் யாசகர்:
(Beggar of Perpetual Adoration)
பிறப்பு: மார்ச் 25, 1748
அமெட்டஸ், அர்ட்டாய்ஸ், ஃபிரான்ஸ் அரசு
(Amettes, Artois, Kingdom of France)
இறப்பு: ஏப்ரல் 16, 1783 (வயது 35)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)
ஏற்கும் சபை:
கத்தோலிக்க திருச்சபை
(புனிதர் ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபை)
(Catholic Church)
(Third Order of St. Francis)
முக்திபேறு பட்டம்: மே 20, 1860
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)
புனிதர் பட்டம்: டிசம்பர் 8, 1881
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)
முக்கிய திருத்தலம்:
சாண்டா மரியா அய் மொண்டி, ரோம், இத்தாலி
(Church of Santa Maria ai Monti
Rome, Italy)
நினைவுத் திருநாள்: ஏப்ரல் 16
பாதுகாவல்:
திருமணமாகாத ஆண்கள், நிராகரித்தல், மன நோய், மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள், பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், நாடோடிகள் (Hobos)
புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர், ஃபிரெஞ்ச் நித்திய ஆராதனையின் யாசகரும், ஃ பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவியும், கத்தோலிக்க புனிதருமாவார்.
வட ஃபிரான்ஸ் (North of France) நாட்டின் “அர்டாய்ஸ்” (Artois) மாகாணத்திலுள்ள “பஸ்-டி-கலாய்ஸ் டிபார்ட்மென்ட்” (Pas-de-Calais department) தலைநகரான “அர்ராஸ்” (Arras) நகரின் அருகேயுள்ள “அமெட்டஸ்” (Amettes) கிராமத்தில், 1748ம் ஆண்டு பிறந்த இவர், தமது பெற்றோரின் பதினைந்து குழந்தைகளுள் மூத்த குழந்தை ஆவார். இவரது தந்தையார், ஒரு வசதியான வியாபாரியாவார். அவரது பெயர், “ஜீன் பேப்டிஸ்ட் லேபர்” (Jean Baptist Labre) ஆகும். இவரது தாயாரின் பெயர், “அன்னி கிரேன்ட்ஷைர்” (Anne Grandsire) ஆகும்.
இவரது கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் சேவையாற்றிய கத்தோலிக்க குருவான இவாது தாய்மாமன், மகிழ்ச்சியுடன் இவரை ஏற்று, இவருக்கு குருத்துவ கல்வியில் வழி காட்டினார். இவர், தமது பதினாறு வயதில், பெனடிக்ட் சட்டங்களின்படி (Rule of St. Benedict) நடத்தப்படும் “சிஸ்டேர்சியன்” (Cistercian order) சபையின் கிளையான “ட்ரேப்பிஸ்ட்” (Trappist) துறவியாக உதவுமாறு தமது தாய்மாமனான குருவை வேண்டினார். ஆனால் அவரது பெற்றோரோ, அவரை இன்னமும் வயதாகும்வரை காத்திருக்கச் சொன்னார்கள்.
பெனடிக்டுக்கு பதினெட்டு வயதாகையில், கொள்ளை தொற்று நோயால் இவர்களது கிராமம் பாதிக்கப்பட்டபோது, மாமனும் மருமகனும் இணைந்து நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் தீவிரமானார்கள். மாமன் பாதிக்கப்பட்ட மக்களின் ஆன்மாக்களையும் உடல்களையும் கவனித்துக் கொண்டிருந்தபோது, பெனடிக்ட் கால்நடைகள் கவனித்துக் கொண்டிருந்தார். இவர், அவைகளின் கொட்டில்களை சுத்திகரித்து அவற்றுக்கு உணவளித்தார். தமது மாமனின் கீழே, ஒரு மாணவனான இவர், ஒரு விவசாய கூலித் தொழிலாளியாக மாறினார். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுள் இறுதியானவராக இவரது மாமன் இருந்தார்.
பெனடிக்ட், (La Trappe Abbey) எனும் துறவு மடத்தில் இணைவதற்காக விண்ணப்பித்தார். ஆனால், இவரது குறைவான வயது காரணத்தாலும், தனிப்பட்ட முறையில் இவருக்கு யாரும் பரிந்துரைக்காத காரணத்தாலும், இவர் நிராகரிக்கப்பட்டார். பின்னர் இவர், “கார்தூசியன்” (Carthusians) மற்றும் “சிஸ்டேர்சியன்” (Cistercians) சபைகளில் இணைவதற்கும் முயற்சித்தார். ஆனால், இவர் ஆன்மீக வாழ்க்கைக்கு பொருத்தமற்றவர் என்ற காரணம் காட்டி, இரண்டு சபைகளுமே இவரை நிராகரித்தன. இவர், சுமார் ஆறு வாரங்களாக, “நுவில்லியில்” (Neuville) உள்ள கார்தூசியர்களில் ஒருவராக இருந்தார். 1769ம் ஆண்டு, நவம்பர் மாதம், அவர் “செப்ட்-ஃபாண்ட்ஸ்” (Sept-Fonts) எனுமிடத்திலுள்ள சிஸ்டெசியியன் மடத்தில் (Cistercian Abbey) அனுமதி பெற்றார். ஆனால், சிறிது காலத்திலேயே அவரது உடல் ஆரோக்கியம் காரணமாக, அவர் வேறு இடங்களில் பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.
கத்தோலிக்க பாரம்பரியப்படி, கடவுளால் தமக்கு அளிக்கப்பட்டது என்று இவர் நினைத்த தமது விருப்பங்களை தாம் அனுபவிப்பதாக எண்ணினார். புனிதர் அலெக்சியஸ் (Saint Alexius of Rome) அவர்களை உதாரணமாகக் கொண்டு ஈர்க்கப்பட்டார். தூய ஃபிரான்சிஸ்கன் துறவி “புனிதர் ரோச்” (Saint Roch) அவர்களின் திருயாத்திரைகளை உதாரணமாக ஏற்றார். தனது நாட்டையும் பெற்றோர்களையும் விட்டு விலக முடிவு செய்தார். மற்றும் உலகில் ஒரு புதிய வகையான வாழ்க்கை வாழ, மிகவும் வேதனைமிகுந்த, மிகுந்த தண்டனைக்குரிய வாழ்க்கையை விரும்பினார். உலகின் கிறிஸ்தவ பக்தியின் புகழ்பெற்ற இடங்களில் ஒரு யாத்திரிகனானார்.
புனித பிரான்சிஸின் மூன்றாம் நிலை (Third Order of Saint Francis) சபையில் இணைந்த பெனடிக்ட், எளிய வாழ்க்கையையும் புனிதர் யாத்திரைகளையும் விரும்பி ஏற்றார். முதலில் ரோம் நகருக்கு நடைபயணம் சென்றார். வழியில் யாசகம் பெற்று, அவற்றைக் கொண்டே உண்டார். பின்னர் அவர் ஐரோப்பாவின் பெரும்பாலான பிரதான திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்றார். அர்ஜென்டினா (Argentina) நாட்டின் “லொரெட்டோ” (Loreto) எனுமிடத்திலுள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தாலி (Italy) நாட்டிலுள்ள அசிசி (Assisi), நேப்பில்ஸ் (Naples) மற்றும் “பாரி” (Bari) ஆகிய திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்றார். சுவிட்சர்லாந்து (Switzerland) நாட்டின் “ஈய்ன்சியேடேல்ன்” (Einsiedeln) திருத்தலத்திற்கு சென்றார். ஃபிரான்ஸ் (France) நாட்டிலுள்ள “பரே-லி-மோனியல்” (Paray-le-Monial) திருத்தலத்திற்கும் ஸ்பெயின் (Spain) நாட்டிலுள்ள “சேன்டியாகோ டி கம்போஸ்டேலா” (Santiago de Compostela) திருத்தலத்திற்கும் சென்றார். இந்த பயணங்களின்போது அவர் எப்போதும் நடைபயனமாகவே சென்றார். சேறு மற்றும் கந்தலான அவரது ஆடைகளுடன் திறந்த வெளியில் அல்லது கிடைத்த அறையின் மூளைகளிலேயே உறங்கினார். யாசித்து கிடைத்த சில உணவு வகைகளையே உண்டார். அதனையும் பிறருடன் பகிர்ந்துகொண்டார். அவர் அரிதாக பேசினார், அடிக்கடி ஜெபம் செய்தார், அவர் பெற்ற ஏச்சுபேச்சுகளையும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறாக, பெனடிக்ட் ஒரு யாசகராகவே இறுதிவரை வாழ்ந்தார். குறிப்பாக, கடவுளின் முட்கிரீடத்தைப் பற்றி சிந்திக்கும்போது அடிக்கடி அவர் மயக்கமடைவார் என கூறப்படுகிறது. இவர், தாம் சந்தித்த பிற வீடற்ற மக்களை குணப்படுத்தியதாகவும், தமக்கு கிடைத்த ரொட்டித் துண்டுகளை பல்கிப் பெருக வைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் (அவருடைய முப்பதுகளில்), அவர் ரோமில் வசித்து வந்தார். கொலோசெய்யின் (Colosseum) இடிபாடுகளில் வாழ்ந்த ஒரு காலப்பகுதிக்காக, லொரெட்டோவின் அன்னை (Shrine of Our Lady of Loreto) திருத்தலத்திற்கு ஒரு வருடாந்திர புனித யாத்ரீகத்தை மட்டுமே செய்ய முடிந்தது.
அவர் நகரத்தில் அனைவருக்கும் அறிமுகமான ஒரு நபராக இருந்தார். மற்றும் நற்கருணை ஆராதனைக்கான அவரது அர்ப்பணிப்புக்காக "நாற்பது மணி நேரத்தின் துறவி" (Saint of the Forty Hours) என அறியப்படுகிறார்.
அவர் இறப்பதற்கு ஒருநாள் முன், “சாண்டா மரியா ஆய் மோன்டி” தேவாலயத்தில் (Church of Santa Maria ai Monti) சரிந்து விழுந்தார். அவரது எதிர்ப்பையும் மீறி, அவர் ஆலயத்தின் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கு தூக்கி செல்லப்பட்டார். 1783ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 16ம் தேதியன்று, புனித வாரத்தின்போது (Holy Week) ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக அவர் மரித்தார். அவர், “சாண்டா மரியா ஆய் மோன்டி” (Church of Santa Maria ai Monti) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
இவரது சரித்திரத்தை எழுதிய இவரது ஒப்புரவாளரான “மார்கோனி” (Marconi), இவர் மறித்து மூன்றே மாத காலத்துக்குள், இவரது பரிந்துரை காரணமாக 136 பேர் நோயினின்றும் அற்புதமாக குணமானதாக எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment