மே 28
மார்கரெட் போல் (1473-1541)
இவர் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தை ஆண்டுவந்த நான்காம் எட்வர்ட் என்பவருக்கு நெருங்கிய சொந்தம்.
இவர் ரெஜினால்ட் போல் என்பவரை மணந்தார். இறைவன் இவர்களுக்கு ஐந்து குழந்தைகளைக் கொடுத்து ஆசி வழங்கினார். இப்படி இவர்களுடைய இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வேளையில், இவரது கணவர் திடீரென இறந்து போனார். இதனால் இவர் கைம்பெண் ஆனார்.
தன் கணவருடைய இறப்பிற்குப் பிறகு இவர் தன்னுடைய குழந்தைகளை இறை நம்பிக்கையிலும் பிறர் அன்பிலும் சிறந்த விதமாய் வளர்த்து வந்தார். இதற்கு பின்பு இவர் சாலிபரி என்ற இடத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இவ்வேளையில் இங்கிலாந்தை ஆண்டு வந்த எட்டாம் ஹென்றி என்ற மன்னர் தன்னுடைய மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணந்தார். இத்தவற்றை மார்கரெட் போல் சுட்டிக் காட்டியதால், மன்னர் இவரைக் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார்.
பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், மன்னரால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். இவருக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ 1886 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்.
.
No comments:
Post a Comment