ஜூன் 27
புனித லடிஸ்லாஸ் (1040 -1095)
இவர் ஹங்கேரி நாட்டைச் சார்ந்தவர். இவருடைய தந்தை ஹங்கேரி நாட்டு மன்னரான பெலா என்பவர். இவர் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, அதாவது 1077 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்.
இவரது நாட்டில் பல மதங்களைச் சார்ந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தை பின்பற்றுவதற்கு இவர் முழுச் சுதந்திரமும் அளித்தார்.
இவர் கத்தோலிக்கத் திருஅவைக்கு முழு ஆதரவு அளித்து வந்தார். குறிப்பாக இவர் திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு எப்போதும் துணையாய் இருந்தார். மேலும் இவர் மறைப்பணியாளர்கள் நற்செய்தி அறிவிக்கப் பெரிதும் ஒத்துழைப்புத் தந்தார் பல கோயில்களைக் கட்டியெழுப்பினார்.
முதல் சிலுவைப்போருக்கு இவர்தான் தலைமை தாங்கவேண்டியதாக இருந்தது. அதற்குள் இவர் நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தார்.
இவர் ஹங்கேரி நாட்டைக் கட்டியெழுப்பிய சிற்பிகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கட்டடக் கலைஞர்களுக்குப் பாதுகாவலராக இருக்கிறார்.
No comments:
Post a Comment