ஜூன் 26
அருளாளர் தெரசா ஃபேன்டோ (1747-1794)
இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர்.
இவரை இவரது தாயார் சிறுவயதிலிருந்தே இறைநம்பிக்கையில் வளர்த்து வந்தார். இதனால் இவர் தனது இருபத்தைந்தாவது வயதில், புனித வின்சென்ட் தெ பவுலைப் பாதுகாவலராகக் கொண்ட அன்பின் பணியாளர்கள் சபையில் சேர்ந்து பணி செய்ய தொடங்கினார்.
இவர் தன்னுடைய சபை அருள்சகோதரிகளோடு சேர்ந்து, நோயாளர்களைக் கவனித்துக் கொள்வதும், இல்லங்களைச் சந்திப்பதும், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதுமாக இருந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பிரான்ஸ் நாட்டில் புரட்சி வெடித்தது. இப்புரட்சி திருஅவைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. குறிப்பாக, கிறிஸ்தவர்கள் உரோமைக்குப் பணிந்து நடப்பதை விடுத்து பிரான்ஸ் நாட்டின் அதிகாரத்திற்கு பணிந்து நடக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
இதற்கு இவரும் இவருடைய சபை அருள்சகோதரிகள் மூவரும் மறுப்பு தெரிவித்ததால், கலகக்காரர்கள் இவர்களைத் தலை வெட்டிக் கொன்று போட்டார்கள்.
இவருக்கும் இவரோடு இறந்த அருள்சகோதரிகளுக்கும் 1920ஆம் ஆண்டு திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் அருளாளர் பட்டம் கொடுத்தார்
No comments:
Post a Comment