#மாமனிதர்கள்
ஜூன் 21
புனித டெரன்ஸ்
இவர் முதல் நூற்றாண்டைச் சார்ந்தவர். இக்கோனியாவின் இரண்டாவது ஆயராக இருந்தவர்.
இவர் தன்னுடைய போதனையால் மட்டுமல்ல, தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வாலும் பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்து சேர்த்தார்.
இவரைப் பற்றிய குறிப்பு புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 16 வது அதிகாரம், இருபத்து இரண்டாவது இறைவார்த்தையில் தெர்த்தியு என்ற பெயரில் இடம்பெறுகிறது.
(இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன்).
இவர் கிறிஸ்துவின்மீது கொண்ட உறுதியான நம்பிக்கைக்காக முட்செடிகள்மீது கொடூரமாக இழுத்து கொல்லப்பட்டார்.
இவ்வாறு இவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்காகத் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.
No comments:
Post a Comment