புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 June 2020

புனித பிரான்ஸ் கராசியோலா ( St. Francis Caracciolo ) June 4

இன்றைய புனிதர் :
(04-06-2020)

புனித பிரான்ஸ் கராசியோலா 
( St. Francis Caracciolo )
பிறப்பு : 13 அக்டோபர் 1563
வில்லா சாந்தா மரியா (Santa Maria), நேப்பிள்ஸ் பேரரசு

இறப்பு : 4 ஜூன் 1608 ( அகவை 44 )
நேயாப்பல் (Neapel)

அருளாளர் பட்டம் : ஜூன் 4, 1769
திருத்தந்தை பதினான்காம் கிளேமன்ட்

புனிதர் பட்டம் : மே 24, 1807
திருத்தந்தை ஏழாம் பயஸ்

நினைவுத் திருநாள் : ஜுன் 4

பாதுகாவல் : 

நேப்பிள்ஸ் (இத்தாலி) ,இத்தாலிய சமையல்காரர்கள்

புனித பிரான்ஸ் கராசியோலா, பிறந்த சில நாட்களிலேயே தோல் நோய்க்கு ஆளானார். இதனால் பலமுறை மக்களால் ஒதுக்கப்பட்டார். இவர் புரிந்த கடுந்தவத்தினாலும், ஜெபத்தினாலும் இவரது நோய் குணமாகியது. நோயாளிகளை பராமரிக்கும் பணியை இவர் சிறுவயதிலேயே மிக ஆர்வத்தோடு செய்துவந்தார்.

அப்போது பணியாற்றும் போது ஒருநாள், தான் ஓர் குருவாக வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் உதிக்கவே 1587ம் தன் ஆசையை நிறைவேற்றி குருவானார். குருவான பிறகும் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை, அமைதியான மரணமடைய தயாரிக்கும் பொறுப்பும், இவருக்கு அளிக்கப்படவே, அப்பணியை இவர் மிகுந்த ஆர்வத்துடனும், புனிதத்துடனும் செய்தார். அதோடு மனநோயாளிகளையும் கவனித்து ஆறுதல் அளித்து வந்தார்.
இவரது பணி மிகவும் வளர்ச்சியடையவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து பெரிய குழுவாக காட்சியளித்தது. எனவே அவர்களைக் கொண்டு ஏழைகளை பராமரிப்பதற்கென ஒரு சபையைத் தொடங்கினார். 1588ம் ஆண்டு அச்சபை துறவற சபையாக, திருத்தந்தை 5ம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus V) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

அச்சபையை தொடர்ந்து, மிகப் பொறுப்போடு கவனிக்க ஜியோவானி அடோர்னோ (Giovanni Adorno) என்பவரை சபைத்தலைவராக தேர்ந்தெடுத்தார். 1593ம் ஆண்டு வரை அவர் பணியாற்றி இறந்துவிடவே, பிரான்ஸ் கராசியோலா சபைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் அவர் அச்சபைக்கு "ஏழைகளின் நண்பர்" என்று பெயரிட்டார்.

மிக விரைவாக அச்சபை ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது. இவர் தனது துறவற குழுமங்களை பார்வையிட அடிக்கடி ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இதனால் மீண்டும் நோய்தாக்கப்பட்டு தன் 44ம் வயதில் இறந்தார்.
செபம் :
குணமளிப்பவரே இறைவா! இவ்வுலகில் நோயினால் துன்பப்படும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும். தங்களின் நோய்களை தாங்கிக் கொள்ள கூடிய உடல் பலத்தையும், மன வலிமையையும் தந்து காத்தருளும். மருத்துவர்க்கு மருத்துவராய் இருந்து, குணமளித்து வழிநடத்தியருளும். 
ஆமென் †

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (04-06-2020)

Saint Francis Caracciolo

Born to the nobility; related to Saint Thomas Aquinas and to the princes of Naples. Enjoyed hunting. Cured of a leprous-like disease at age 22, he took the cure as a miraculous sign for his life. He sold his goods, gave the money to the poor, and went to study theology in Naples, Italy in 1585. Ordained in 1587. Joined the Contraternity of the Bianchi della Giustizia (the White Robes of Justice) whose ministry was with condemned prisoners. With John Augustine Adorno, he founded the Congregation of the Minor Clerks Regular with a ministry to the sick and to prisoners; they received approval from Pope Sixtus V on 1 July 1588, Pope Gregory XIV on 18 February 1591, and Pope Clement VIII on 1 June 1592. Chosen superior of the Congregation at Naples on 9 March 1593; he made sure to daily perform the most menial tasks of the house. Established Congregation houses in Rome, Madrid, Valladolid, and Alcala. Noted for his work for the poor, and as a miracle worker and prophet; he was a popular preacher, and cured by blessing the sick with the sign of the cross. Pope Paul V wished to make him a bishop, but he repeatedly refused, citing the Congregation's vow not to seek any high position in the Church. Near the end of his life he resigned his duties and spent his remaining time as prayerful prior and novice master at Santa Maria Maggiore.

Born :
13 October 1563 at his family's castle at Villa Santa Maria, Abruzzi, Italy as Ascanio Pisquizio

Died :
4 June 1608 at Agnone, Italy of a fever
• relics at Naples, Italy and San Lorenzo in Lucina, Rome, Italy

Beatified :
4 June 1769 by Pope Clement XIV

Canonized :
24 May 1807 by Pope Pius VII

Patronage :
Association of Italian Cooks (chosen in 1996)
• Naples, Italy (chosen in 1838)

---JDH---Jesus the Divine Healer---

இன்றைய புனிதர்
2020-06-04
புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo)
நேயாப்பல் நாட்டின் பாதுகாவலர்

பிறப்பு
13 அக்டோபர் 1563
சாந்தா மரியா (Sanra Maria)
இறப்பு
4 ஜூன் 1608
நேயாப்பல்(Neapel)
புனிதர்பட்டம்: 1807, திருத்தந்தை 7 ஆம் பயஸ்

இவர் பிறந்த சில நாட்களிலேயே தோல் நோய்க்கு ஆளானார். இதனால் பலமுறை மக்களால் ஒதுக்கப்பட்டார். இவர் புரிந்த கடுந்தவத்தினாலும், ஜெபத்தினாலும் இவரது நோய் குணமாக்கப்பட்டது. நோயாளிகளை பராமரிக்கும் பணியை இவர் சிறுவயதிலேயே மிக ஆர்வத்தோடு செய்துவந்தார். அப்போது பணியாற்றும் போது, ஒருநாள் தான் ஓர் குருவாக வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் உதிக்கவே 1587 ஆம் தன் ஆசையை நிறைவேற்றி குருவானார். குருவான பிறகும் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை, அமைதியான மரணமடைய தயாரிக்கும் பொறுப்பும், இவருக்கு அளிக்கப்படவே, அப்பணியை இவர் மிகுந்த ஆர்வத்துடனும், புனிதத்துடனும் செய்தார். அதோடு மன்நோயாளிகளையும் கவனித்து ஆறுதல் அளித்து வந்தார்.

இவரது பணி மிகவும் வளர்ச்சியடையவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து பெரிய குழுவாக காட்சியளித்தது. எனவே அவர்களை கொண்டு ஏழைகளை பராமரிப்பதற்கென ஒரு சபையைத் தொடங்கினார். 1588 ஆம் ஆண்டு அச்சபை துறவற சபையாக, திருத்தந்தை 5ஆம் சிக்டஸ்(Pope Sixtus V) அவர்களால் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அச்சபையை தொடர்ந்து, மிகப் பொறுப்போடு கவனிக்க ஜியோவானி அடோர்னோ(Giovanni Adorno) என்பவரை சபைத்தலைவராக தேர்ந்தெடுத்தார். 1593 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றி இறந்துவிடவே, பிரான்ஸ் டி கராசியோலா சபைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் அவர் அச்சபைக்கு "ஏழைகளின் நண்பர்" என்று பெயரிட்டார். மிக விரைவாக அச்சபை ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது. இவர் தனது துறவற குழுமங்களை பார்வையிட அடிக்கடி ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இதனால் மீண்டும் நோய்தாக்கப்பட்டு தன் 44 ஆம் வயதில் இறந்தார்.


செபம்:
குணமளிப்பவரே இறைவா! இவ்வுலகில் நோயினால் துன்பப்படும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும். தங்களின் நோய்களை தாங்கிக் கொள்ள கூடிய உடல் பலத்தையும், மன வலிமையையும் தந்து காத்தருளும். மருத்துவர்க்கு மருத்துவராய் இருந்து, குணமளித்து வழிநடத்தியருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி, மறைபோதகர் பசிஃபிக்குஸ் Pacificus von Ceredano OFM
பிறப்பு: 1420, செரேடானோ Ceredano, இத்தாலி
இறப்பு: 4 ஜூன் 1482, சார்டீனியன் Sardinien, இத்தாலி


ஆராஸ் நகர் மறைசாட்சி சட்டூர்னினா Saturnina von Arras
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, ஜெர்மனி
இறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, ஆராஸ், பிரான்சு
பாதுகாவல்: வீட்டு விலங்குகள்



No comments:

Post a Comment