புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 July 2020

புனித ரெய்னில்திஸ் (630- 700) July 16

ஜூலை 16

புனித ரெய்னில்திஸ் (630- 700)

இவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்தவர். இவரது தந்தை பெல்ஜியத்தை ஆண்டுவந்த விட்ஜெர் என்பவராவார். 
சிறுவயது முதலே இவர் தனது பெற்றோர் கற்றுத்தந்த மறைக்கல்வியின் மூலம் இறைவனிடத்தில் மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்து வந்தார். 

சில காலத்திற்கு பிறகு இவரும் இவரது தாயாரும் புனித நாடுகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார்கள். அங்கு இருவரும் இயேசு வாழ்ந்த பகுதிகளையெல்லாம் பார்த்துவிட்டு மனநிறைவோடு சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள்.

இதற்குப் பிறகு ரெய்னில்திஸின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதனால் இவர் முன்பைவிட இறைவனிடத்தில் மிகுந்த நம்பிக்கையும், தன்னுடைய பகுதியில் வாழ்ந்து வந்த ஏழை-எளிய மக்களிடத்தில் அன்பும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நாடோடி இனமான ஹன்ஸ்  இனத்தைச் சார்ந்தவர்கள் பெல்ஜியம் நாட்டின்மீது படையெடுத்து வந்து, இவரையும் இவரோடு இருந்த ஒரு சிலரையும் வாளால் வெட்டிக் கொன்று போட்டார்கள்.

No comments:

Post a Comment