புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 July 2020

புனித வித்பர்கா (-743) July 8

ஜூலை 08

புனித வித்பர்கா (-743)
இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்; இவரது தந்தை இங்கிலாந்து நாட்டின் கிழக்கு ஆங்கிலேயாவை ஆண்டுவந்த அன்னா என்பவராவார்.

இவரது தந்தை எதிரி நாட்டோடு  போர்தொடுக்கச் சொல்லும்போது போரில் எதிரிகளால் கொல்லப்பட்டார். இச்செய்தியை அறிந்த இவர் பெரிதும் வருந்தி அழுதார்.

பின்னர் இவர் எல்லாவற்றையும் துறந்துவிட்டுத் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கினார். 

இவர் தன் சொந்த முயற்சியால் டெரகம் என்ற இடத்தில் ஒரு துறவுமடத்தையும் கோயிலையும் கட்டிக்கொண்டிருக்கிறபொழுது, இவரால் பணியாளர்களுக்குப் போதிய உணவு கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இவர் புனித கன்னி மரியாவிடம் உருக்கமாக வேண்ட, அவர் பணியாளர்களுக்கு அற்புதமான முறையில் உணவு கிடைக்கச் செய்தார்.

இவர் கோயிலைக் கட்டிக்கொண்டிருக்கிற போதே இவரது உயிர், இவருடைய உடலைவிட்டுப் பிரிந்தது. இதற்குப் பிறகு கோயில் கட்டும் பணியை இவருடைய மடத்தில் இருந்த ஏனைய சகோதரிகள் தம் பொறுப்பில் எடுத்து, நிறைவு செய்தார்கள்.

இவர் 743 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

The Story of Saint Wihtburh
Wihtburh (or Withburga) (died 743) was an East Anglia saint, princess and abbess who was possibly a daughter of Anna of East Anglia, located in present-day England. She founded a monastery at Dereham in Norfolk. A traditional story says that the Virgin Mary sent a pair of female deer to provide milk for her workers during the monastery's construction. Withburga's body is supposed to have been uncorrupted when discovered half a century after her death: it was later stolen on the orders of the abbot of Ely. A spring appeared at the site of the saint's empty tomb at Dereham.

No comments:

Post a Comment