இன்றைய புனிதர் :
(31-07-2020)
தூய லயோலா இஞ்ஞாசியார்
லயோலா இஞ்ஞாசியார் எப்போதும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இஞ்ஞாசியார் ஸ்பெயின் நாட்டில் உள்ள லயோலா என்னும் இடத்தில் 1491 ஆம் ஆண்டு பிறந்தார். இவர்தான் குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. இவருடைய குடும்பம் அரச குடும்பம். எனவே, செல்வச் செழிப்பில், எல்லா விதமான இன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்து வந்தார். இவருடைய கனவெல்லாம் மிகச் சிறந்த போர்வீரனாக மாறவேண்டும் என்பதே ஆகும். 1521 ஆம் ஆண்டில் ஒரு நாள் பிரான்சு நாட்டு இராணுவம் இவர் இருந்த பம்பிலோனா கோட்டையை சுற்றி வளைத்துக்கொண்டது. நீண்ட நேரம் நடைபெற்ற போராட்டத்தில் இவருடைய கால்களில் கடுமையான காயம் ஏற்பட இவர் நிலைகுலைந்து போனார். பின்னர் இவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்துவைக்கப்பட்டார். அப்போது இவர் அங்கே இருந்தவர்களிடம் வாசிப்பதற்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டபோது, அவர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் இவருக்குக் கொடுத்தார்கள். அதை வாசிக்க வாசிக்க இஞ்ஞாசியார் ஒருவிதமான பரவசநிலையை உணர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் வீண் என எண்ணத் தொடங்கி, சாதாரண மனிதர்கள் எல்லாம் புனிதராக மாறியிருக்கும்போது எதற்காக நாம் புனிதராக மாறக்கூடாது என சிந்தித்தார்.
இஞ்ஞாசியார் ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த தருணம் அவருக்கு மரியன்னை குழந்தை இயேசுவோடு காட்சிதந்தார். அந்த நிகழ்வு அவருடைய வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.
பாரிஸ் நகருக்குச் சென்று, அங்கே குருத்துவப் பணிக்காக தன்னையே பக்குவப்படுத்திக்கொண்டார். இலத்தின் போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்டு தன்னை மேலும் மெருகேற்றிகொண்டார். அங்கேதான் அவர் பிரான்சிஸ் சவேரியார், பீட்டர் பேபர் போன்ற ஆறு இளைஞர்களைச் சந்தித்தார். அவர்களைக் கொண்டு ‘இயேசு சபை’ என்னும் புதிய சபை ஒன்றைத் தோற்றுவித்தார். குருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்ட இஞ்ஞாசியார் 1538 ஆம் ஆண்டு குருவாக மாறினார்.
இஞ்ஞாசியார் ஏற்படுத்திய இயேசு சபை, கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளோடு சேர்த்து.
இஞ்ஞாசியார் நோயாளிகளைச் சந்திப்பதுமாக, சிறையில் இருந்தோரை பார்க்கச் செல்வதுமாக, மறைக்கல்வி கற்றுத்தருவதுமாக பற்பல பணிகளைச் செய்தார். தான் செய்த பணிகள் அனைத்தையும் இறைவனின் அதிமாக மகிமைக்காகச் செய்த்தார். இப்படி ஓய்வில்லாமல் இறைப்பணி செய்த இஞ்ஞாசியார் 1554 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்க்கைத் துறந்தார். 1622 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (31-07-2020)
St. Ignatius of Loyola
He was born on October 23, 1491 at the castle in Loyola in the municipality of Azpeitia, now in Spain. His baptismal name was Inigo Lopez de Loyola. He was brought up by the wife of a local blacksmith since his mother died soon after his birth. He became a servant (Page) in the house of the Treasurer of the Kingdom of Castle, who was a relative to him. In 1509 he joined the army of Viceroy of Navarre and participated in many battles without incurring any injuries to him. But one day he was injured seriously in his legs by a cannonball in a battle on May 20, 1521. During the treatment period he read De Vita Christi, a commentary on the life of Jesus and commentary on the Gospels. After reading this book, he started reading other books about Jesus and other saints. He got a mind change after reading Christian books and decided to devote his life to work for the conversion of non-Christians to Christian faith, in the Holy Land. After recovery from the leg injuries, he went to the Benedictine monastery, Santa Maria de Montserrat on March 25, 1523 and hung his military vestments before the image of the Holy Virgin Mary and went away. He then spent the next few months in a cave and practiced rigorous asceticism. He made a pilgrimage to the Holy Land for about 20 days and he studied in the University of Paris. In Paris he gathered six of his friends namely Francis Xavier, Alfonso Salmeron, Diego Laynez, Nicholas Bobadilla (all Spanish), Peter Faber (French) and Simao Rodriques (Portugal) and they took solemn vows of Poverty, Chastity and Obedience, on August 15, 1534 and about their life long work, in the crypt of the church of Our Lady of Martyrs at, Montmartre, Loyola. They founded the Society of Jesus in 1539. He wrote the constitution of the Society of Jesus and was approved by pope Paul-III on September 27, 1540. St. Ignatius and his friends pronounced their vows in the newly found Order (The Society of Jesus) on April 22, 1541 at the church of St. Paul outside the Walls. St. Ignatius became the first Superior General (Father-General) of the Society of Jesus. The Jesuit motto is 'Ad Maiorem Dei glorium' (for the greater glory of God).
St. Ignatius of Loyola died on July 31, 1556 in Rome due to malarial fever. He was beatified on July 27, 1609 by pope Paul-V and canonized by pope Gregory-XV on March 12, 1622.
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment