† இன்றைய புனிதர் †
(ஜூலை 9)
✠ புனிதர் வெரோனிகா கிலியானி ✠
(St. Veronica Giuliani)
பெண்கள் துறவு மடாதிபதி மற்றும் கத்தோலிக்க மறைபொருள்:
(Abbess and Catholic mystic)
பிறப்பு: டிசம்பர் 27, 1660
மேர்சடேல்லோ சுல் மேடௌரோ, ஊர்பினோ (இத்தாலி)
(Mercatello sul Metauro, Duchy of Urbino (Italy)
இறப்பு: ஜூலை 9, 1727 (வயது 66)
ஸிட்டா டி கஸ்டெல்லோ, திருத்தந்தையர் மாநிலம், (இத்தாலி)
(Città di Castello, Papal States (Italy)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: ஜூன் 17, 1804
திருத்தந்தை ஏழாம் பயஸ்
(Pope Pius VII)
புனிதர் பட்டம்: மே 26, 1839
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)
முக்கிய திருத்தலம்:
புனிதர் வெரோனிகா கிலியானி துறவு மடம், ஸிட்டா டி கஸ்டெல்லோ
(Monastery of St. Veronica Giuliani, Città di Castello)
நினைவுத் திருநாள்: ஜூலை 9
புனிதர் வெரோனிகா கிலியானி, ஒரு இத்தாலிய “கபுச்சின் எளிய கிளாரா” சபையின் அருட்சகோதரியும் (Italian Capuchin Poor Clares nun), மறைபொருளும், (Mystic) ஆவார்.
“ஊர்சுளா கிலியானி” (Ursula Giuliani) என்ற இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலியின் “மெர்சடேல்லோ” (Mercatello) என்ற இடத்தில், கி.பி. 1660ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 27ம் தேதியன்று, பிறந்தார். இவருடைய தந்தை ஃபிரான்செஸ்கோ” (Francesco) ஆவார். இவரது தாயார் பெயர் “பெனேடேட்டா” (Benedetta Mancini Giuliani) ஆகும். இவரது பெற்றோருக்கு பிறந்த ஏழு பெண் குழந்தைகளில் இவர் கடைசி குழந்தை ஆவார். சகோதரிகள் எழுவரில் மூவர் துறவு வாழ்க்கையை தேர்வு செய்துகொண்டனர்.
இவருக்கு ஏழு வயதான போது இவரது தாயார் மரித்துப் போனார். குழந்தைப் பருவத்தில் இவர் சற்றே முரடாகவும் முன்கோபியாகவும் இருந்தார். ஆனால் பதினாறு வயதில் இவர் கண்ட ஒரு திருக்காட்சி, இவரது குறைபாடுள்ள குணத்தை மாற்றியமைத்தது. மகளுக்கு திருமண வயது வந்ததை உணர்ந்த தந்தை, ஊர்சுளாவுக்கு திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார். ஆனால், இவர் தந்தையிடம் அழுது கெஞ்சி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். மகளின் விருப்பத்தை அறிந்துகொண்ட தந்தை, அவரை தாம் விரும்பிய வாழ்வினை தேர்ந்தெடுக்க அனுமதியளித்தார்.
கி.பி. 1677ம் ஆண்டு, 17 வயதான ஊர்சுளா, இத்தாலியின் “ஊம்ப்ரியா” (Umbria) மாநிலத்திலுள்ள “ஸிட்டா டி கஸ்டெல்லோ” (Città di Castello) என்னுமிடத்திலுள்ள “கபுச்சின் எளிய கிளாரா” (Capuchin Poor Clares) பெண் துறவு மடத்தில் இணைந்தார். இறைவனின் பாடுகளின் நினைவாக “வெரோனிகா” (Veronica) எனும் ஆன்மீக பெயரையும் ஏற்றார். இவர் துறவு மடத்தில் இணைந்த அன்று, ஆயர் இவரது மடாதிபதியிடம் கூறியதாவது, “நான் இந்த புதிய மகளை உங்கள் சிறப்பு கவனிப்பிற்கு விடுகிறேன்; ஏனென்றால், இவர் ஒருநாள் மிகவும் பெரிய புனிதராவார்” என்றார்.
வெரோனிகா தனது ஆன்மீக வழிகாட்டிகளின் (Spiritual Directors) விருப்பத்திற்கு முழுமையாக கீழ்ப்படிந்தார். துறவற வாழ்வின் முதல் ஆண்டில் அவர் சமையலறை, மருத்துவமனை மற்றும் புனிதப் பாத்திரங்கள், அங்கிகள் முதலானவை வைக்கும் இடம் ஆகிய இடங்களில் பணியாற்றினார். அத்துடன் சுமை தூக்குபவராகவும் பணியாற்றினார். இறுதியில், தமது 34 வயதில், புதுமுக பெண் துறவியரின் தலைவரானார்.
அருட்சகோதரி வெரோனிகா, ஐம்பது வருடங்கள் கபுச்சின் பள்ளியில் வாழ்ந்தார். 34 வருடங்கள் புதுமுக பெண் துறவியரின் தலைவராக தாழ்ச்சியுடனும், 11 வருடங்கள் மடாதிபதியாக உறுதியுடனும் கண்டிப்புடனும் வாழ்ந்தார்.
வெரோனிகா தமது வாழ்நாள் முழுதும் கிறிஸ்துவின் பாடுகளின்பால் அளப்பரிய பக்தி கொண்டிருந்தார். அந்த பக்தியானது, இறுதியில் அவரது உடல் அடையாளங்களில் வெளிப்பட்டது. கி.பி. 1694ம் ஆண்டு, கிறிஸ்துவின் முள்முடியின் அடையாளம் அவரது முன் நெற்றியில் தோன்றியது. கி.பி. 1697ம் ஆண்டு, இறைவனின் ஐந்து காய அடையாளங்கள் இவரது உடம்பிலும் தோன்றின.
ஆனால், அவருடைய ஆயரின் கடுமையான சோதனைகள் அவருடைய அனுபவத்தை அவமானப்படுத்தியது. அவர் சாதாரண சமுதாய வாழ்க்கையில் இருந்து நீக்கப்பட்டார் மற்றும் அவருடன் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அந்த நிகழ்வுகள் உண்மையானவை என்று ஆயர் முடிவு செய்தபோதுதான் அவர் மீண்டும் அவரது துறவு மடத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.
கி.பி. 1727ம் ஆண்டு, ஜூலை மாதம், 9ம் தேதியன்று, “ஸிட்டா டி கஸ்டெல்லோ” (Città di Castello) நகரில் வெரோனிகா மரித்தார்.
† Saint of the Day †
(July 9)
✠ St. Veronica Giuliani ✠
Abbess, Catholic mystic, Stigmatic, Victim Soul, Incorruptable:
Born: December 27, 1660
Mercatello sul Metauro, Duchy of Urbino (Present-day Italy)
Died: July 9, 1727 (Aged 66)
Città di Castello, Papal States (Present-day Italy)
Venerated in: Roman Catholic Church
Beatified: June 17, 1804
Pope Pius VII
Canonized: May 26, 1839
Pope Gregory XVI
Major shrine: Monastery of St. Veronica Giuliani, Città di Castello
Feast: July 9
St. Veronica Giuliani is one of the greatest Italian mystics of the 18th century. She is a saint of the statue of St. Teresa of Avila or St. Francis of Assisi. She was a soul chosen by God from her early childhood to reach the highest mystical graces which she described in her diary. Born on December 27, 1660, at Mercatello, she was given the baptismal name, Ursula. At the age of 17, she entered the cloistered Capuchin Convent at Citta di Castello in Umbria and took the name, Veronica. She remained there until her death on July 9, 1727.
Saint Veronica Giuliani was born of devout parents at Mercatello in Italy. As a child she, too, was of a devout disposition, but inclined to be quite irritable, and, as she herself admits, would stamp her feet at the least provocation.
Saint Veronica's mother died when Veronica was only four years old. In her last moments, she assigned each of her five children to one of the five wounds of Christ and bade them take their refuge there whenever they were troubled. Veronica was the youngest. She was assigned to the wound in the side of our Lord, and from that time on her heart became more tempered.
Co-operating with the grace of God, her soul gradually went through a refining process by which she became an object of admiration in later years.
When Saint Veronica came of age, her father believed she should marry, and so he desired her to take part in the social activities of the young people. But she had been made aware of another call, and she pleaded so earnestly with her father that, after much resistance, he finally permitted her to choose her own state in life.
At the age of 17, then, Saint Veronica Giuliani entered the convent of the Capuchin nuns at Citta di Castello in Umbria, where the primitive rule of St Clare was observed. Imbued with sincere humility she considered herself the lowliest member of the community. At the same time, she greatly edified all by her obedience and love of poverty and mortification. Sometimes she was favored with interior conversations and revelations. She resolved that she would reveal all such matters to her superiors and her confessor; she had neglected to do that when she was still in the world, and as a result, she had often been misled by the father of lies.
When Saint Veronica Giuliani had spent 17 years in various offices in her community, she was entrusted with the guidance of the novices. She endeavored to imbue them with the spirit of simplicity and to lay a firm foundation for humility. She directed them to the truths of the Faith and the rules of the order as their safest guides on the way of perfection and warned them against reading idly speculative books as well as against everything unusual.
Meanwhile, extraordinary things were beginning to happen to Saint Veronica Giuliani. On Good Friday she received the stigmata, and later the Crown of Thorns was impressed on her head amid untold sufferings. She also experienced a mystical espousal, as she was given a mystical ring by Our Lord's own hand. One eye-witness said: "This ring encircled her ring finger as ordinary rings do. On it there appeared to be a raised stone as large as a pea and of red color."
After careful examination of the matters, the bishop sent a report to Rome. Then Rome appointed a commission, which was to put her humility to the severest test, in order to determine whether she was an imposter, a person deluded by the devil, or a person favored by God.
Saint Veronica Giuliani was deposed from her office as novice mistress, and deprived of every suffrage in the community. She was even imprisoned in a remote cell. No sisters were permitted to talk to her, and a lay sister who was made her warden was ordered to treat her like a deceiver. Finally, she was even deprived of Holy Communion and was permitted to attend holy Mass only on Sundays and holy days near the door of the church.
At the conclusion of these trials, the bishop reported to Rome that she scrupulously obeyed every one of his ordinances, and showed not the least sign of sadness amid all his harsh treatment, but rather an inexpressible peace and joy of spirit.
The test had proved the admirable manifestations to be the work of God, but Veronica did not on that account deem herself a saint, but rather a great sinner, whom God was leading on the way to conversion by means of His holy wounds.
Having filled the office of novice mistress during a space of 22 years, Veronica was unanimously elected abbess. Only in obedience could she be prevailed upon to accept the responsibility.
Purified more and more by many sufferings, to which she added many austere mortifications, she went to her eternal reward on July 9, 1727, after spending 50 years in the convent.
Saint Veronica Giuliani was one of the rare saints who had received the stigmata. Whenever the wounds were opened, Fr. Salvatori recorded that "they emitted so delicious a fragrance throughout the whole of the convent that this alone was sufficient to inform the nuns whenever the stigmata had been renewed."
The saint's body remained incorrupt for many years until it was destroyed in a flood. Her bones are now kept in a composite figure of the saint, the skull of which is covered with wax. Her heart, though, is still incorrupt and is kept in a separate reliquary.
Because of her heroic virtues and the many miracles that were continually being worked at her tomb, she was canonized by Pope Gregory XVI in 1839.
~ From: The Franciscan Book of Saints, ed. by Marion Habig, OFM
No comments:
Post a Comment