புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 July 2020

புனிதர் அனடோலியஸ் ✠(St. Anatolius of Alexandria) July 3

† இன்றைய புனிதர் †
(ஜூலை 3)

✠ புனிதர் அனடோலியஸ் ✠
(St. Anatolius of Alexandria)

ஆயர், ஒப்புரவாளர்:
(Bishop and Confessor)
பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலம்
அலெக்சாண்ட்ரியா, டோலேமெய்க் அரசு, எகிப்து
(Alexandria, Ptolemaic Egypt)

இறப்பு: ஜூலை 3, 283
லாவோடிசியா, ரோம சிரியா (தற்போதைய சிரியாவிலுள்ள லடகியா)
(Laodicea, Roman Syria (Now Latakia, Syria)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூலை 3

“லாவோடிசியா’வின் அனடோலியஸ்” (Anatolius of Laodicea) என்றும், “அலெக்சாண்ட்ரியா’வின் அனடோலியஸ்” (Anatolius of Alexandria) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், ரோம சிரியாவின் (Roman Syria) மத்தியதரைக் கடலோரமுள்ள (Mediterranean) துறைமுக நகரான “லாவோடிசியா” (Laodicea) நகரின் ஆயர் ஆவார். அத்துடன், இயல்பியல் (Physical sciences) மற்றும் “அரிஸ்டோடிலியன் தத்துவத்தில்” (Aristotelean philosophy) அக்காலத்தைய முன்னோடி அறிஞர்களில் ஒருவராகவும் இருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Churches) மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் (Eastern Orthodox) இவரை புனிதராக ஏற்கின்றன.

புனிதர் அனடோலியஸ், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், எகிப்து (Egypt) நாட்டின் இரண்டாம் பெரிய நகரான அலெக்சாண்ட்ரியாவில் (Alexandria) பிறந்து வளர்ந்தவர் ஆவார். திருச்சபையின் பெரும் விளக்குகளில் ஒன்றாக மாறுவதற்கு முன்பு, அனடோலியஸ் அலெக்ஸாண்ட்ரியாவில் கணிசமான கௌரவமுள்ள பெரிய மனிதராக வாழ்ந்தார். கணிதம், வடிவவியல் (Geometry), இயற்பியல் (Physics), சொல்லாட்சிக் கலை (Rhetoric), “வாதமுறை ஆராய்ச்சி” (Dialectic) மற்றும் வானியல் (Astronomy) ஆகியவற்றைப் பற்றிய ஒரு பெரும் அறிவைப் பெற்றிருந்தார். கிறிஸ்தவ சரித்திர ஆசிரியரான “யூசேபியஸ்” (Eusebius of Caesarea) என்பவரின்படி, அலெக்ஸாண்டிரியாவிலுள்ள அரிஸ்டாட்டிலின் அடுத்தடுத்த பள்ளியைத் தக்கவைத்துக்கொள்ள அனடோலியஸ் தகுதியுடையவராக கருதப்பட்டார். புறமத பாகன் தத்துவவாதியான “இம்பம்லிகஸ்” (Pagan Philosopher) என்பவர், சிறிது காலம் இவரது சீடர்களிடையே கல்வி கற்றார்.

அவரால் எழுதப்பட்ட பத்து கணிதப் புத்தகங்களின் துண்டுகளும், இயேசுநாதர் உயிர்த்தெழுந்த கொண்டாட்ட நாள் பற்றிய (Paschal celebration) கட்டுரைகளும் இன்றளவும் உள்ளன.

அக்காலத்தில், அலெக்ஸாண்டிரியாவின் ஒரு பகுதியாயிருந்த “புருச்சியம்” (Bruchium) பிராந்தியத்தில் நடந்த கலகத்தை அனடோலியாஸ் எவ்வாறு உடைத்தெறிந்தார் என்பதையும் யூசெபிசியஸ் எழுதியுள்ளார். ஜெனோபியாவின் (Zenobia) படைகளால் நடத்தப்பட்ட அந்த கலகம், ரோமர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு பட்டினியாய் இருந்தது. அந்த நேரத்தில் புரூச்சியத்தில் (Bruchium) வாழ்ந்த துறவி, எல்லா பெண்களையும் குழந்தைகளையும், வயதான மற்றும் நோயாளிகளையும் அங்கிருந்து தப்பிப்பதற்கு ஏற்பாடு செய்தார். அது பாதுகாப்பு மற்றும் கிளர்ச்சியாளர்களை சரணடைய வைத்தது. இது, பாதிக்கப்பட்ட பல மக்களை காப்பாற்றியது, இத்துறவியின் நாட்டுப் பற்றுள்ள நடவடிக்கையாக அமைந்தது.

“லாவோடிசியா” (Laodicea) புறப்பட்ட அவரை, மக்கள் பிடித்து ஆயராக்கினார்கள். அவரது நண்பர் யூசேபியஸ் இறந்துவிட்டாரா அல்லது அவர்கள் இருவரும் சேர்ந்தே சேவை செய்தார்களா என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்தது.

No comments:

Post a Comment