புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

14 July 2020

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis)குரு July 14

இன்றைய புனிதர் :
(14-07-2020)

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis)
குரு
பிறப்பு : 1550
ஷீட்டி(Chieti), அப்ருட்சி(Abruzzi)
    
இறப்பு : 1614 
உரோம்

பாதுகாவல்: மருத்துவர்களின் பாதுகாவலர்

இவர் தன்னுடைய குழந்தை பருவத்தில் தாயை இழந்தார். தந்தை இவரைவிட்டு அகன்று போனார். இதனால் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். இளமையிலேயே சூதாட்டத்திற்கு அடிமையானார். 17 வயதில் துருக்கியருடன் போரிட வெனிஸ் நகரிலிருந்த படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு அவரின் காலில் புண் ஏற்பட்டு , ஆறாமல் இருந்தது. இதனால் உரோமையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவமனையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கெடுக்க ஒரு நாள் சென்றார். அப்போது கப்புச்சின் சபை குரு ஆற்றிய மறையுரை இவரை மறுமனிதனாக்கியது. 

அதன்பின் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று விருப்பம் கொண்டு, ஓரளவு புண் குணமடைந்த உடன் கப்புச்சின் துறவற சபை ஒன்றை நாடி தன் விருப்பத்தை தெரிவித்தார். அங்கு அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டாலும் புண் முழுமையாக குணமாகாததால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் சென்று குருத்துவ பயிற்சிகள் அனைத்தையும் பெற்று, தனது 34 ஆம் வயதில் குருவானார். அதன்பிறகு ஒரு சபையை நிறுவினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயாளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைகளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார். 

செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நோயுற்றோர் மீது தனியன்பு கொண்டு கமில்லஸ் பணிபுரிந்தார். அவருடைய பரிந்துரையால் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மை அன்பு செய்து, எங்கள் இறப்பு வேளையில் நம்பிக்கையோடு உம் திருமுன் வந்து சேர அருள்புரியும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

† Saint of the Day †
(July 14)

✠ St. Camillus de Lellis ✠

Priest and Religious Founder:

Born: May 25, 1550
Bucchianico, Chieti, Kingdom of Naples

Died: July 14, 1614 (Aged 64)
Rome, Papal States

Venerated in: Roman Catholic Church

Beatified: 1742 AD
Pope Benedict XIV

Canonized: 1746 AD
Pope Benedict XIV

Major shrine: Church of Santa Maria Maddalena, Rome, Italy

Feast: July 14

Patronage: Sick; Hospitals; Nurses; Physicians

Saint Camillus de Lellis, M.I., was a Roman Catholic priest from Italy who founded a religious order dedicated to the care of the sick.

St. Camillus de Lellis was a gambling soldier who lost everything before he decided to dedicate his life to caring for the sick.

He was born in Italy in 1550 and grew to be a large man—he stood six and a half feet tall. When he turned 17, his father allowed him to accompany him to fight with the Venetians against the Turks.

While in battle, Camillus contracted a disease in his leg that would trouble him all his life. He was admitted to a hospital, both as a patient and to work there as a staff member, but he caused a lot of trouble and disturbances and was released. He returned to the war and lived the life of a soldier.

Among his vices was gambling. He was addicted to games of chance and was always in a state of need because he lost money. By the time he was 24, he had lost everything—his money, his equipment as a soldier, even the clothes off his back--and was living on the streets.

At one point earlier in his life, when he was filled with remorse for some mistake, he made a vow to join the Franciscans. He went to them now and found employment helping them to construct a building. A Franciscan brother had a conversation with him about the course of his life, and he was struck with a firm commitment to change. He was moved to tears and prayed to God for mercy. From that time on, he lived a life of penance.

He tried to join the Franciscans, but they would not accept him because of his diseased leg. He returned to the hospital where he had helped people before and dedicated himself to serving the sick. Over time, he was given responsibility for the whole hospital.

At the time, hospitals were far from being top-of-the-line facilities. There was little that medicine could offer the sick, and not many people wanted to be in contact with people who were ill. Staff was difficult to find, and many times even criminals were hired to perform basic services. Camillus wanted to staff his hospital with people who could devote themselves to serving the sick out of love.

He gathered several followers and made a fresh start by establishing his own hospital. These men cared for the sick in every way—making their beds, caring for wounds, helping them die a holy death. They began to focus on caring for those suffering from the plague, prisoners, and victims of war. A number of his followers died from diseases that they were treating in others.

In order to serve the spiritual needs of patients, Camillus was ordained a priest. Throughout his life, he suffered from a number of physical problems, himself. His leg never healed, and he developed a hernia. One of his feet developed sores, which caused great pain. For a long time before his death, his digestive tract fell to disorder—he could not retain food. Through all of this, though, he always deferred care, instructing people to care for others instead. In fact, when he could not walk on his own, he would crawl through the hospital to check on other people and offer them whatever he could.

By the time of his death, Camillus had established eight hospitals and 15 communities of brothers and priests. His holiness became known through his gifts of prophecy and healings. He died at the age of 64 and was named the patron saint of the sick and of nurses. His relics rest in the reliquary chapel in the Basilica.

St. Camillus de Lellis, the gambling soldier who became the patron saint of the sick and of nurses, pray for us!

† இன்றைய புனிதர் †
(ஜூலை 14)

✠ புனிதர் கமில்லஸ் டி லெல்லிஸ் ✠
(St. Camillus de Lellis)

குரு/ சபை நிறுவனர்:
(Priest and Religious Founder)

பிறப்பு: மே 25, 1550
புச்சியானிகோ, சீட்டி, நேப்பிள்ஸ் அரசு 
(Bucchianico, Chieti, Kingdom of Naples)

இறப்பு: ஜூலை 14, 1614 (வயது 64)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1742
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

புனிதர் பட்டம்: கி.பி. 1746
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

முக்கிய திருத்தலம்:
புனித மரியா மடலேனா தேவாலயம், இத்தாலி
(Church of Santa Maria Maddalena, Rome, Italy)

பாதுகாவல்: 
நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகள்

நினைவுத் திருநாள்: ஜூலை 14

புனிதர் கமில்லஸ் டி லெல்லிஸ், ஒரு இத்தாலிய குருவும், நோயாளிகளின் சேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சபையின் நிறுவனரும் ஆவார்.

கமில்லஸ், கி.பி. 1550ம் ஆண்டு, மே மாதம், 25ம் நாளன்று, தற்போதைய “அப்ரஸ்ஸோ” (Abruzzo) (அன்றைய “நேப்பில்ஸ்” அரசின் (Kingdom of Naples) கீழிருந்த) பிறந்தார். இவர் பிறக்கும்போது, இவரது தாயார் “கமில்லாவுக்கு” (Camilla Compelli de Laureto) ஏறத்தாழ ஐம்பது வயது. இவரது தந்தை “நெப்போலிட்டன்” மற்றும் ஃபிரெஞ்ச்” அரச இராணுவங்களில் (Neapolitan and French Royal Armies) அதிகாரியாக பணியாற்றினார். கமில்லஸ் தந்தையின் கோப குணங்களைக் கொண்டு வளர்ந்தார். வயதான தாயாரால் இவரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இவருக்கு பன்னிரண்டு வயதாகையில் தாயார் மரித்துப் போனார்.

தாயை இழந்த கமில்லஸ் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். பதினாறு வயதிலேயே “வெனீஷியன்” (Venetian Army) இராணுவத்தில் சேர்ந்தார். துருக்கி (Turks) நாட்டுக்கெதிரான போரிலும் பங்குகொண்டார். பத்து வருடங்களுக்கும் மேல் இராணுவத்தில் பணியாற்றிய பின்னர், அவர் பணி புரிந்த இராணுவ படைப் பிரிவு கலைக்கப்பட்டது. வேறு வழியற்ற கமில்லஸ், “மன்ஃபிரடோனியா” (Manfredonia) எனுமிடத்திலுள்ள கபுச்சின் (Capuchin Friary) துறவற மடத்தில் கூலி வேலை செய்யத் தொடங்கினார். 

கமில்லஸ் இராணுவத்திலிருந்தபோது காலில் அடி பட்டு காயம் ஏற்பட்டிருந்தது. அது ஆறாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார். கமில்லஸிடம் ஆக்ரோஷ குணங்களுடன் சூதாடும் பழக்கமுமிருந்தது. இவரை கண்காணித்து வந்த துறவற மடத்தின் பாதுகாவலர், இவரை திருத்தி இவரிடமுள்ள நற்குணங்களை வெளிக்கொணர தொடர்ந்து முயற்சித்தார். இறுதியில், துறவியின் அறிவுரை அவரது இதயத்தை ஊடுருவியது. அத்துடன், கி.பி. 1575ம் ஆண்டு இவர் கத்தோலிக்கராக மனம் மாறினார். கபுச்சின் (Capuchin) சபையின் புகுமுக துறவியாக (Novitiate) இணைந்தார். எனினும் அவரது காலிலிருந்த புண் அவருக்கு தொடர்ந்து வேதனை அளித்தது. அது இனி குணமாக்க இயலாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். இதன் காரணமாக அவருக்கு கபுச்சின் சபையில் அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் ரோம் (Rome) பயணமான கமில்லஸ், அங்கே, “குணமாக்க இயலாது” என்று கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும், “சேன் கியகோமோ மருத்துவமனையில்” (San Giacomo Hospital) இணைந்தார். (இம்மருத்துவமனை, புனிதர் ஜேம்ஸ் மருத்துவமனை சபையால் (Hospitaller Knights of St. James) நிறுவப்பட்டது. அங்கே, தாமும் ஒரு நோயாளிகளைப் கவனிப்பவராக (Caregiver) மாறிய கமில்லஸ், பின்னாளில் அதே மருத்துவமனையின் கண்காணிப்பாளராக (Superintendent) உயர்ந்தார். இதற்கிடையே துறவு வாழ்வு வாழ்ந்த இவர், செபம் – தவம் ஆகியவற்றையும் தீவிரமாக பின்பற்றினார். மயிரிழைகளாலான மேலாடையையே அணிந்தார். உள்ளூரில் பிரபலமான குருவான அருட்தந்தை (பின்னர் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்டவர்) “ஃபிலிப் நேரி” (Philip Neri) அவர்களை தமது ஒப்புரவாளராகவும் (Confessor), ஆன்மீக வழிகாட்டியாகவும் (Spiritual Director) ஏற்றுக்கொண்டார்.

தமது மருத்துவமனையின் பணியாளர்கள் நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லை என்பதனை கண்ட லெல்லிஸ், நோயாளிகளின் சேவையில் தமது பக்தி விசுவாசத்தை வெளிப்படுத்த வெளியிலிருந்து பயபக்தியுடைய ஆண்கள் குழுக்களை அழைத்து வந்தார். இறுதியில், இந்த காரணத்துக்காக ஒரு மத சபையை தொடங்க எண்ணினார். இதற்கான அங்கீகாரத்தை திருச்சபையிடமிருந்து வேண்டினார். “ஃபிலிப் நேரி” (Philip Neri) இப்பெருமுயற்சியை அங்கீகரித்தார். ஒரு பணக்கார கொடை வள்ளல் லெல்லிஸின் இறையியல் கல்விக்கான செலவுகளை கொடையாக தந்தார்.

கி.பி. 1584ம் ஆண்டின் உயிர்த்த இறைவனின் பெருவிழாவுக்கு பின்னர் வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று, (பெந்தெகொஸ்தே – Pentecost) “புனித அசாஃப், வேல்ஸ்” ஆயர், (Bishop of St Asaph) “லார்டு தாமஸ் கோல்டுவெல்” (Lord Thomas Goldwell) அவர்களால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், கமில்லஸும் அவரது துணைவர்களும் தமது மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்றனர். பின்னர், அங்கிருந்து கிளம்பி, “தூய ஆவியின் மருத்துவமனை” (Hospital of the Holy Ghost) சென்று, அங்குள்ள நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பினை ஏற்றனர்.

அதன்பின்னர், (M.I.) என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Order of Clerks Regular, Ministers of the Infirm) எனும் சமய சபையினை கமில்லஸ் நிறுவினார். இச்சபை பொதுவாக, “கமில்லியன்ஸ்” (Camillians) அழைக்கப்படுகிறது. போர்களில் அவருக்கிருந்த அனுபவம், அவரை ஒரு மருத்துவ சேவை பணியாளர்களின் குழு (Health Care Workers) ஒன்றினை உருவாக்க உதவியது. இக்குழு, போர்முனைகளில் காயம் ஏற்படும் இராணுவ வீரர்களுக்கு சேவை செய்யும். அன்று, இவர்களணியும் நீண்ட அங்கியில் (Cassock) பெரிய சின்னமாக விளங்கிய செஞ்சிலுவை, (Red Cross) இன்று உலகின் பெரியதோர் சங்கத்தின் (Red Cross Society - செஞ்சிலுவைச் சங்கம்) அடையாளமாக உள்ளது. இதுவே உண்மையான, சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட “சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்” (International Red Cross and Red Crescent Movement) ஆகும்.

கி.பி. 1601ம் ஆண்டு, “கனிஸ்ஸா” (Battle of Canizza) போரின்போது ஒரு நாள், “கமில்லியன்ஸ்” (Camillians) தங்கியிருந்த, அவர்களது மருத்துவ பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கூடாரம் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது. ஒரு பொருள் கூட மீதமாகவில்லை. அடி பட்ட போர் வீரர்களுக்கு சேவை செய்வதற்காக சென்றிருந்த ஒரு “கமில்லியன்ஸின்” அங்கியிலிருந்த செஞ்சிலுவை மட்டும் எரியாமல் தப்பியது. இச்சம்பவம், தெய்வீக அங்கீகாரம் வெளிப்படுத்தப்பட்டதாக கொள்ளப்பட்டது.

கி.பி. 1586ம் ஆண்டு, திருத்தந்தை “ஐந்தாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus V) இவர்களது “கமில்லியன்ஸ்” (Camillians) குழுவுக்கு சங்கம் (Congregation) என்ற அங்கீகாரம் அளித்தார். ரோம் நகரிலுள்ள “புனித மரியா மகதலின்” (Church of St. Mary Magdalene) தேவாலயத்தை அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தார். இன்றளவும் அந்த தேவாலயத்தை அவர்கள்தாம் பராமரிக்கின்றனர். 1588ம் ஆண்டு “நேப்பிள்ஸ்” (Naples) நகருக்கும், 1594ம் ஆண்டு “மிலன்” (Milan) நகருக்கும் தங்களது சபையை விரிவுபடுத்தினர். மிலன் நகரின் “கா’ கிராண்டா” (Ca' Granda) மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவை புரிந்தனர். இவர்களின் ஞாபகார்த்தமாக, “கா’ கிராண்டா” (Ca' Granda) மருத்துவமனையின் பிரதான முற்றத்தில் ஒரு நினைவு சின்னம் இன்றும் அவரது இருப்பை நினைவுபடுத்துகிறது.

கி.பி. 1591ம் ஆண்டு, திருத்தந்தை “பதினைந்தாம் கிரகோரி” (Pope Gregory XV) அவர்களது சங்கத்தை “மென்டிகன்ட்” (Mendicant Orders) சபைக்கு நிகரானதாக அந்தஸ்து உயர்த்தினார்.

தமது சபையின் தலைமைப் பொறுப்பினை கி.பி. 1607ம் ஆண்டில் விட்டுக்கொடுத்த கமில்லஸ், தொடர்ந்து சபைக்கு சேவையாற்றினார். இதற்கிடையே, இவர்களது சபை இத்தாலி முழுதும் மட்டுமல்லாது, ஹங்கேரி (Hungary) நாட்டிலும் பரவியிருந்தது. ஒருமுறை இத்தாலியின் மருத்துவமனைகளை ஆய்வு செய்வதற்காக சபையின் புதிய தலைவருடன் சென்றிருந்த கமில்லஸ், பயணத்தின்போது நோய்வாய்ப்பட்டார். கி.பி. 1614ம் ஆண்டு, தமது 64 வயதில் நித்திய வாழ்வில் மரித்தார். இவரது உடல் “மரியா மகதலின்” தேவாலயத்தில் (Church of St. Mary Magdalene) அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment